Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Deivam Nindru Kollum
Ebook151 pages1 hour

Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தெய்வம் நின்றுகொல்லும் என்பது எந்த காலத்திற்கும் பொருந்தும். இது குற்றவாளிகளுக்கு மட்டும் இன்றி சராசரி மனிதனுக்கும் பொருந்தும்.

இதை நாம் ஒவ்வொரு நாளும் உணர்கிறோம். நாம் சிறு வயதில் செய்த சிறு சிறு தவறுகளை கூட நம்மால் இன்று உணரமுடிகிறது என்றால் அது தெய்வம் நின்று கொல்வதாகவே உணர்கிறோம். அந்த வலியை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும். தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கான பல உதாரணமான உண்மை சம்பவங்களை இக்கதைகளில் நாம் காணலாம்.

Languageதமிழ்
Release dateJun 6, 2022
ISBN6580101807312
Deivam Nindru Kollum

Read more from Sivasankari

Related to Deivam Nindru Kollum

Related ebooks

Reviews for Deivam Nindru Kollum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Deivam Nindru Kollum - Sivasankari

    https://www.pustaka.co.in

    தெய்வம் நின்று கொல்லும்

    Deivam Nindru Kollum

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    https://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    தெய்வம் நின்று கொல்லும்

    எனக்கு பயமாக இருக்கு

    இடம் மாறும் கோபம்

    இராட்சசர்கள்

    போதி மரம்

    இவர்களுக்கு எப்படிப் புரிய வைப்பது?

    நினைப்பு

    குடியேறிகள்

    நம்பிக்கை

    மாற்றம்

    தெய்வம் நின்று கொல்லும்

    அப்புறம்? பாஸ்கரன் நாயரின் கண்கள் விரிந்துபோய் வாயிலிருந்து கேள்வி வெளிவந்தது.

    குனிந்து கையில் இருந்த சிகரெட் சாம்பலை டிரெயில் தட்டினான் பரமகுரு. ஒரு மணி நேரத்துக்கும் மேலாய் குடித்ததனால் சற்றே சிவந்து பளபளத்த முகத்தில் ‘நான்’... ‘நான்’... என்ற பெருமை உணர்வு அகங்காரத்தோடு பரவிகிடக்க அப்புறம் என்ன... அடுத்த ரெண்டு நாளும் கனவு நாட்கள்தான்!!! அவ ஒரு பிடிவாத காரியாம்... கோடீஸ்வரனுக்கு கூட லேசிலே மசிய மாட்டாளாம்!!! அப்படிப்பட்டவ என் பின்னால் நாய்க்குட்டி போல - எஸ், ஷி ஃபாலோட் மி லைக் எ பப்பி - சுத்தினபோ எல்லாம் நண்பர்களும் ஆச்சர்யப்பட்டுதான் போனாங்க... அதெல்லாம் எக்ஸைடிங் டேஸ் பாஸ்கரன்...

    சொல்லிக்கொண்டே போன மேஜர் நிறுத்திவிட்டு எதிரே இருக்கும் நபர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய கிளர்ச்சியை பெருமையுடன் கவனித்தான்.

    சிலிர்த்துப் போய் நாயரும் ,கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தீ கணப்புக்கு அருகில் கையில் இருந்த ட்ரிங்க்ஸை குடிக்க மறந்த சேட்டும், ரவி, டேனியலும் அமர்ந்திருந்ததைக் கண்டதும் மேஜரின் குஷி கரைபுரண்டு ஓடியது.

    இதுக்கே இப்படி மலைக்கிறீங்களே, ஜம்முல நடந்ததைச் சொன்னா நம்பகூட மாட்டீங்க...

    பெரிதாய் அட்டகாசமாய் சிரித்துவிட்டு தன் ஜம்மு அனுபவத்தை விவரித்தான் மேஜர்.

    இப்படி மேஜர் பரமகுரு சுவாரஸ்யமாய் தன் அனுபவங்களைச் சொல்வதும், ‘எப்பேர்ப்பட்ட அதிர்ஷ்டக்காரன் இவன்!!!! எப்படி அணு அணுவாய் வாழ்கையை ரசித்து இருக்கிறான்!!!!’ என்ற பொறாமையுடன் சுற்றி இருப்போர் கேட்பதும் இன்று நேற்று நடப்பது அல்ல; கிட்டத்தட்ட 4 வருஷ காலமாய், மேஜர் ராணுவத்தில் இருந்து விலகி சொந்த ஊரான ஏற்காட்டுக்கு வந்ததிலிருந்து நடக்கும் விஷயம்தான்.

    ஏற்காடு ஏரியில் இருந்து ஊரை நோக்கிச் செல்லும் பாதையில் சேவராயன் ஹோட்டலை தாண்டி நேரே போனால் அடர்ந்த மரங்களோடு உயர உயர வளர்ந்திருக்கும் தேக்கு யூகலிப்டஸ் மரங்கள் நடுவில் அழகாய் ரத்தின கம்பளமாய் விரிந்திருக்கும் புல் வெளியின் மத்தியில் கண்ணைக்கவரும் மலர் பாத்திகள் சூழ அமைந்திருக்கும் பங்களாதான் மேஜர்ருடையது...

    பெரியதொரு காபி எஸ்டேட்டுக்கு பரமகுருவின் தந்தை சம்பந்தம் உரிமையாளர்.ஒரே பையன்; படித்துவிட்டு தனக்குப் பிறகு எஸ்டேட்டை பார்த்துக்கொள்வான் என்று எண்ணியவரது ஆசையில் மண்ணை போட்டுவிட்டு சின்னவயசு முதற்கொண்டே தனக்குள் ஊறிக்கிடந்த வெறியை மதித்து ராணுவத்தில் சேர்ந்துவிட்டான் பரமகுரு.

    நமக்கு எதுக்குடா ராணுவத்து வேல? சொல்ற பேச்ச கேளு தம்பி... குந்தி சாப்பிட்டா கூட மூன்று தலைமுறைக்கு பணம் இருக்கு... எதுக்குடா இந்த உத்தியோகம்? பெத்த வயித்துலே நெருப்பைக் கட்டிக்கிட்டு இருக்கேன்டா ராசா என்று தாய் கதறி உருகி எழுதின கடிதங்களுக்கும் கெஞ்சல்களுக்கும் எந்த பலனும் இல்லை. சரி, இவன் போக்கில் விட்டுதான் நம் பக்கம் இழுக்க வேண்டும் என்று தீர்மானித்த பெற்றோர் கொஞ்ச காலம் சும்மா இருந்துவிட்டு ஒரு விடுமுறைக்கு பரமகுரு வந்தபோது தங்கள் திட்டத்தை செயலாற்றினர்.

    குரு, உங்க அப்பாவுக்கு இதயநோய் இருக்கு; இது ஒனக்கும் தெரிஞ்சதுதான், காலாகாலத்துல உனக்கு ஒரு கல்யாணம் காட்சி நடக்க அவரு ஆசைப்படுறாரு...இதுல யாவது எங்க பேச்ச கேப்பியா தம்பி? என்று மடக்கிய போது என்ன நினைத்தானோ பரமகுரு உங்க இஷ்டம்மா என்று சொல்லிவிட்டான்.

    சொன்ன பேச்சைக் கேட்டு சமர்த்தாக நடக்கக்கூடிய பெண்ணும் மிக அழகானவளுமான சௌந்தரத்தை பரமகுருவிற்கு முடித்து வைத்தபோது 'பையன் வலையில் மாட்டிக் கொண்டு விட்டான் ;இனி ராணுவ உத்தியோகத்துக்கு அற்ப ஆயுசு தான்' என்று சம்மந்தம் போட்ட கணக்கு தப்பு கணக்கு ஆகிவிட்டது.

    சௌந்தரம் கண் சிமிட்டாமல் பார்க்கத் தூண்டும் அழகுதான், ஆனால் ஏற்காடு குளிரிலும் மஞ்சள் பூசி குளித்துவிட்டு பளிச்சென்று குங்குமமும் பட்டுப்புடவையுமாய் காப்பி கொண்டுவந்தது எல்லாருக்கும் லட்சுமி கரமாய் தோன்றினாலும் பரமகுருவுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. சரி, இங்குதான் திருத்த முடியவில்லை, ஊருக்குப்போய் இவளை இஷ்டப்படி மாற்றிவிடலாம் என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

    இரண்டு மாசம் லீவு முடிந்து டேராடூனுக்குப் போனார்கள். குடித்தனம் போட்டார்கள். சௌந்தரத்துடன் வாழ்ந்த அந்த ஆறு மாச வாழ்வில் மனைவியை தன் விருப்பத்திற்கு மாற்ற எவ்வளவோ முயர்ச்சித்தும் தோல்வி கண்டதுதான் மிச்சம்.

    வீடு தேடி வரும் யாரிடமும் ஒரு வார்த்தை மரியாதைக்கு கூட பேசமாட்டாள் சௌந்தரம். சக நண்பர்கள் இல்லத்தில் நடக்கும் விருந்துகளுக்கு எத்தனை கெஞ்சினாலும் வரமாட்டாள். அதிகம் வற்புறுத்தினால் பொம்பளைங்கள ஆம்பளைங்க தொட்டுத் தொட்டு பேசுறாங்க... குடி, சிரிப்பு எதுவும் எனக்குப் பிடிக்கலைங்க என்பாள் மெதுவாக...

    பார்த்தான் பரமகுரு. இவளுடன் மன்றாடுவதை விட பேசாமல் ஊருக்கு அனுப்பி விடலாம் என்று தீர்மானித்தான். இந்த ஊர் இவளுக்கு ஒத்துக்கொள்ளலை... இவ முன்னால் வரட்டும், நான் பின்னால மாற்றல் வாங்கிட்டு வரேன் என்று தந்தையிடம் சொல்லி ஊரில் சௌந்தரத்தை விட்டுவிட்டு டேராடூனுக்கே திரும்பி வந்துவிட்டான்.

    என்னப்பா; மாற்றல் என்ன ஆச்சு? என்று லெட்டரிலும் நேரில் போகும்போதும் தகப்பனார் கேட்டால், என்ன பார்டர்ல போஸ்ட் பண்ணி இருக்காங்க .கொஞ்ச நாள் ஆவட்டும் என்பான். இல்லையானால் ட்ரெயினிங் இருக்குது; ஆறு மாசத்துக்கு அப்புறம்தான் எதுவுமே பேச முடியும் என்று சொல்லி வாயை அடைத்து விடுவான்.

    ஆனால் வருஷத்துக்கு ஒரு முறை பத்து நாள் விடுப்பில் வந்து அப்பா அம்மாவுக்கு நல்ல பிள்ளையாகவும், மனைவிக்கு நல்ல புருஷனாகவும் இருந்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டு போய்விடுவான்.

    இப்படியே சில வருஷங்கள் போன பிறகு ஒரு தடவை லீவுக்கு பரமகுரு வந்தபோது சௌந்தரம் கர்ப்பமானாள்.

    பெண் பிறந்த வேளை பரமகுருவுக்கு மேஜர் ப்ரமோஷன் கிடைத்தது. ஊருக்கு வந்து சிவந்த தண்டாய் கண்ணை பறிக்ககிடந்த பத்துநாள் மகளை கையில் எடுத்து உச்சி முகர்ந்தபோது இது நாள்வரை பற்றி இழுக்காத ஒரு பாசம் அன்று தன்னை சூழ்வதை உணர்ந்தான் பரமகுரு. குழந்தைக்கு பெற்றோர் வைத்த பெயர் லட்சுமி. இவனுக்கு மாத்திரம் அவள் அழகான பொம்மை மாதிரி தோன்ற செல்லமாய் டாலி என்று அழைத்தான்.

    குழந்தையோடு இருக்க ஆசைகொண்டு மனைவியையும் மகளையும் உடன் அழைத்து போகலாமா என்று முதலில் நினைத்தவன் சௌந்திரம் துளியும் மாறாமல் அதே கட்டுப்பெட்டி தனத்துடன் இருப்பதை பார்த்து தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டான். பூனா,டேராடூன் ,லடாக் என்று மாற்றலில் போகும் இடங்களில் தேவைப்படும் பெண்ணே அவனது கம்பீரமான தோற்றம் புத்திசாலித்தனமான பேச்சால் நெருங்கி வந்ததால் குடும்பத்தின் அவசியம் அவனுக்கு தேவை இல்லாமல் இருந்தது.

    டாலிக்கு ஆறு வயசாகையில் பாத்ரூமில் வழுக்கி விழுந்த சௌந்தரத்தின் தலையில் அடிபட்டு செரிப்ரல் ஹெமரேஜ் ஆகி நிலமை மோசம் ஆயிற்று. சேலம் ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கைவிரித்த சேதி கேட்டு பறந்து வந்தான் பரமகுரு.

    "அதுநாள் வரை அவனை நிமிர்ந்து பார்த்து பேசி அறியாத சௌந்தரம் அன்று மட்டும், அடங்கப் போகும் அந்த நிமிஷத்தில் மாத்திரம், குரு தனித்து நின்றபோது அவன் கையை தன் மார்போடு கோர்த்து நெஞ்சில் வைத்துக்கொண்டு தினை விதைத்தால் நெல் விளையாதுங்க... நாம பண்ற பாவ புண்ணியங்க நம்ம குழந்தை தலைலதான் விடியும். நாம செய்யறது தெய்வத்தின் சன்னதியில நியாயமானதா தர்மமானதா இருக்கணும்... தெய்வம் நின்னு கொல்லுங்க...

    Enjoying the preview?
    Page 1 of 1