Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Megam Maraitha Thiyaga Suriyangal
Megam Maraitha Thiyaga Suriyangal
Megam Maraitha Thiyaga Suriyangal
Ebook126 pages45 minutes

Megam Maraitha Thiyaga Suriyangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இந்நூலில், தமிழ் இனத்தில், தமிழர் நிலத்தில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட மாபெரும் வரலாறுகளையெல்லாம் தோண்டி எடுத்து துளைக்கி பெரு வெளிச்சமிட்டு இவ்வுலகத்திற்கு கம்பீரமாக பிரகடனப்படுத்தும் ஒரு பெரும் முயற்சியினை அயற்சியின்றி மேற்கொண்டிருக்கிறார் பேராசிரியர் ஐயா வா. பாலகிருஷ்ணன் அவர்கள். இப்பேராசிரியரின் எழுத்துப் பணி வெற்றி பெறட்டும்.

திரைப்பட இயக்குனர்

வ.கௌதமன்

திருவேற்காடு

சென்னை - 79

05.08.2023

Languageதமிழ்
Release dateAug 19, 2023
ISBN6580168410074
Megam Maraitha Thiyaga Suriyangal

Related to Megam Maraitha Thiyaga Suriyangal

Related ebooks

Reviews for Megam Maraitha Thiyaga Suriyangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Megam Maraitha Thiyaga Suriyangal - V. Balakrishnan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மேகம் மறைத்த தியாக சூரியன்கள்

    (விடுதலைப் போராட்டத் தியாகிகளின் வரலாறு)

    Megam Maraitha Thiyaga Suriyangal

    Author:

    வா. பாலகிருஷ்ணன்

    V. Balakrishnan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/v-balakrishnan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    ஒப்பற்றத் தியாகி கடலூர் மு. அஞ்சலை அம்மாள்

    விடுதலை வீரர் கடப்பேரி ஜமதக்னி

    தியாகி சேலம் - அ. சுப்பிரமணியம்

    விடுதலை வேள்வியில் சர்தார் பு.ம. ஆதிகேசவலு நாயக்கர்

    தியாகி பரங்கிப்பேட்டை பரமானந்த ராயர்

    இந்த படைப்பு Pachyderm Tales உடன் இணைந்து தயாரிக்கப்படுகிறது.

    E:\Priya\Book Generation\thalaiyali\1-min.jpg

    காணிக்கை

    ‘பெரிதினும் பெரிது கேள்’

    என்னும் பாரதியாரின் வாக்கை

    எனக்குச் சொல்லி வளர்த்த

    எனது பெற்றோர்

    தெய்வத்திரு வெ. வாசுதேவபடையாட்சி அவர்களுக்கும்,

    தெய்வத்திரு திருமதி. விருத்தாம்பாள்

    அவர்களுக்கும்

    இந்நூல் காணிக்கை.

    என்னுரை

    இந்திய விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் சார்பில் ஆண்களும் பெண்களும், இருப்பவரும் இல்லாதவரும் என அவரவர்களின் நிலைக்கு ஏற்ப பங்களிப்புச் செய்துள்ளனர். அத்தகைய பங்களிப்பில பலபேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். பலபேர் தங்கள் சொத்துக்களைத் தியாகம் செய்துள்ளனர். பலபேர் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்துள்ளனர்.

    அத்தகையோர்களைப் பற்றிய வரலாறுகள் தமிழ்ச் சூழலில் ம.பொ. சிவஞானத்தின் ‘விடுதலைப் போல் தமிழகம்’ - 1, 2 தொகுதிகள், டி. ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ முதலான நூல்களால் வெளிக்கொணரப்பட்டுள்ளன. அதேபோல ‘விடுதலைப் போராட்ட வரலாறு’ என்ற நோக்கில் இதுவரை பலரால் பல்வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன. இந்நூல்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல விடுதலைப் போராளிகளின், தியாகிகளின் வாழ்க்கை வரலாறுகள் குறிப்பிடப்படாமல் விடுபட்டுள்ளன.

    குறிப்பாக, கடலூர் அஞ்சலை அம்மாள், சேலம் சுப்பிரமணியம், ஜமதக்னி, பரங்கிப்பேட்டை பரமானந்த ராயர், சென்னை சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோரின் விடுதலைப் போராட்ட பங்களிப்புகள், தியாகங்கள் ‘மேகம் மறைத்த சூரியன் போல’ வரலாற்றில் முழுமையாகப் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளன. இவர்களின் விடுதலைப் பங்களிப்பில் குறிப்பிடத் தகுந்த சில போராட்டங்கள் வரலாற்றில் சொல்லப்படாமலே உள்ளன.

    குறிப்பாக, அஞ்சலை அம்மாள், துர்காபாய் தேஷ்முக், ஜமதக்னி, சேலம் சுப்பிரமணியம், பரங்கிப்பேட்டை பரமானந்த ராயர், சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோரும், சுதந்திரப் போராட்ட வீரரும் ஆந்திர மாகாணத்தின் முதல் முதல்வருமாகிய த. பிரகாசம் அவர்களும் இணைந்து சென்னையில் முன்னெடுத்த உப்புச் சத்தியாக்கிரகம் வரலாற்றில் பதிவு செய்யப் பெறவில்லை. இதுதான் விடுதலைப் போராட்டத்திற்காக நடத்தப்பெற்ற முதல் உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம். இது ராஜாஜியின் தலைமையில் வழிநடத்தப்பட்ட வேதாரண்ய உப்புச் சத்யாக்கிரகத்திற்கு முற்பட்டது. இந்த உப்புச் சத்தியாக்கிரகப் போராட்ட வரலாறு இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பதிவு செய்யப்படாமலே போயிற்று.

    இப்போராட்டத்தை முன்னெடுத்த ஐவர் பற்றிய வரலாறுகள், இவர்களின் விடுதலைப் போராட்டப் பங்கு, தியாகம் இன்னும் முழுமை பெறாமலே உள்ளன. இது துரதிர்ஷ்டவசமானது. இத்தகையோரின் விடுதலைப் போராட்டப் பங்களிப்பை ஈ.வே. ராமசாமி (பெரியார்) நடத்திய ‘குடியரசு’, திரு.வி.கவின் ‘தேசபக்தன்’, ‘நவசக்தி’, சுப்பிரமணியனின் ‘சுதந்திரச் சங்கு’, பாரதியாரின் ‘சுதேசமித்திரன்’, ‘தி மெட்ராஸ் மெயில்’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’, ‘தினமணி’ ஆகியவற்றில் இருந்து தரவுகளை எடுத்துத் தொகுத்து ‘மேகம் மறைத்த தியாகச் சூரியன்கள்’ என்னும் நூலாகச் செய்துள்ளேன்.

    இளம் தலைமுறையினருக்குச் சுதந்திரப் போராட்ட வரலாற்றிலிருந்து விடுபட்டுப் போனவர்களின் தியாகங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதே இந்த நூலின் நோக்கம். கள், களவு, கொலை, பொய், காமம் ஆகிய பஞ்சமா பாதகங்கள் பெருகியுள்ள இக்காலச் சூழலில் இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாக விடுதலைப் போராட்டத் தியாகிகள் குறித்த வரலாற்று நூல்கள் வெளிவர வேண்டும் என்ற உள்ளக் கிடக்கையில் எழுதப்பட்டது இந்நூல். அது மட்டுமின்றி, சாதிய மனநிலை இல்லாமல் சுதந்திரத்திற்காகப் போராடிய விடுதலைப் போராட்ட வீரர்கள் இன்று சாதியவாதிகளால் குறிப்பிட்ட சாதிக்கு உரியவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர். அடையாளப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் விடுதலைப் போராட்ட வீரர்கள் சாதி, மதம் அற்றவர்கள். அவர்கள் தனிப் பிரிவினர். அவர்கள் தன்னலமற்றவர்கள். அவர்கள் அனைவராலும் கொண்டாடப்பட வேண்டியவர்கள்.

    அன்றைய சுதந்திரப் போராட்டக் காலகட்டத்தில் அவர்களின் ஒரே இலக்கு காந்திய வழியில் பயணித்து தாய்நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தருவது என்பது மட்டுமே. இன்னல்கள் நிறைந்த இவர்களின் கடினப் போராட்டத்தால்தான், தியாகத்தால்தான் நாம் இன்று சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கிறோம். சுதந்திர வேட்கை, சமூகப் பங்களிப்பு, நாட்டுப்பற்று, தன்னைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுதல், சுற்றுப்புறத் தூய்மையைப் பேணுதல், தன் நோக்கில் உறுதியாக இருத்தல், பாரத தேசத்தை மதித்திடுதல் என தேச நலனுக்குத் தன்னையே மாய்த்துக் கொண்ட லட்சோப லட்சம் சுதந்திரப் போராட்டத் தியாகிகள் உள்ளனர். அவர்களை ஆவணப்படுத்த வேண்டிய தேவையும் இங்கு உள்ளது. இத்தகைய நூல்கள் மேன்மேலும் வரவேண்டும் என்பதே என் அவா.

    இத்தகைய மறைக்கப்பட்ட, இருட்டடிப்புச் செய்யப்பெற்ற லட்சோப லட்சம் பேரில் மேலே குறிப்பிட்ட ஐவரின் விடுதலைப் போராட்டங்களை வெளிக்கொணரும் வகையில் ‘மேகம் மறைத்த தியாகச் சூரியன்கள்’ என்னும் நூலை எழுதியுள்ளேன்.

    இந்நூலை எழுதுவதற்கு என் வாழ்வில் பல்வேறு வகையிலும் என்னுடன் உறுதுணையாக இருக்கும் என் இணையர்

    திருமதி பா. ரேணுகா தேவி, என் அன்பிற்குரிய மூத்த மகள் திருமதி பா. சாந்தி B.E., மதிப்பிற்குரிய மூத்த மருமகன்

    திரு. மா. அருள் B.E., அமெரிக்காவில் வசிக்கும் என் பாசத்திற்குரிய இளைய மகள் திருமதி. ஜெயந்தி M.E., மரியாதைக்குரிய மருமகன் திரு. ரா. இளங்கோ சுப்பிரமணியம் MS ஆகியோர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் உரியன. மேலும் ‘பேக்கிடெர்ம் டேல்ஸ்’ நிறுவனர் முனைவர் லட்சுமி ப்ரியா அவர்களுக்கும், துணை நிறுவனர் உமா அவர்களுக்கும் நூல் தயாரிப்புக்குத் தேவையான உதவிகள் செய்துதவிய பாலகணேஷ் அவர்களுக்கும் நன்றிகூறக் கடமைப்பட்டுள்ளேன்.

    இந்நூலாக்கத்திற்குத் தேவையான குறிப்புகளைத் தந்துதவிய சென்னை கன்னிமாரா பொது நூலகத்தின் குறிப்புதவி நூலகர் திரு. க. சிங்காரவேலு அவர்களுக்கும், சென்னை தரமணி ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திற்கும், எழுத்தாளர் ஆறு. அண்ணல் அவர்களுக்கும், திருமதி. வேளச்சேரி.

    Enjoying the preview?
    Page 1 of 1