Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Velu Natchiyar
Velu Natchiyar
Velu Natchiyar
Ebook339 pages4 hours

Velu Natchiyar

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், பன்மொழிப் புலமை கொண்டவர்: ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர்: நிர்வாகத் திறமையிலும் தேர்ச்சி பெற்றவர்.

இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிக் களப்பலியானவர் இந்தியாவிலேயே முதல் மன்னர் வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்தான். அது போன்று ஆயுதம் ஏந்திப் போராடிக் களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக்காட்டியவர் இந்தியாவிலேயே முதல் பெண்மணி வேலு நாச்சியார்தான்!

என்ன காரணத்தினாலோ, இன்றுவரை தமிழர்களால் போதுமான அளவுக்கு வேலு நாச்சியார் கண்டு கொள்ளப்படவில்லை. இது தமிழர்களின் வரலாற்று அறிவில் ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாகும். வேலு நாச்சியார் பற்றிய எனது தேடலின் போதுதான் அந்த வீரத் தாயின் ஆளுமை எனக்குப் புரிந்தது.

வேலு நாச்சியாரைப் பற்றி ஆங்காங்கே துண்டுதுண்டான செய்திகள் இருக்கின்றதே தவிர, அவரைப் பற்றி ஒரு முழுமையான நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியதாகும். வெளிவந்த ஒரு சில நூல்களும், எழுதியவர்களின் உள்மன உணர்வுகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறதே தவிர, வேலு நாச்சியாருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

இந்தப் பின்னணிதான் என்னை வேலு நாச்சியார் பக்கம் கவனம் திரும்பச் செய்தது!

Languageதமிழ்
Release dateJun 1, 2021
ISBN6580144406944
Velu Natchiyar

Read more from K. Jeevabharathy

Related to Velu Natchiyar

Related ebooks

Related categories

Reviews for Velu Natchiyar

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Velu Natchiyar - K. Jeevabharathy

    https://www.pustaka.co.in

    வேலு நாச்சியார்

    Velu Natchiyar

    Author:

    கே. ஜீவபாரதி

    K. Jeevabharathy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/ k-jeevabharathy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    உள்ளே புகுமுன்…

    ஜான்ஸி ராணி ஆங்கிலேயரை எதிர்த்துக் களம் புகுந்து வீர மரணத்தைத் தழுவினார். இவரது பெயரும் புகழும் இந்தியா முழுவதும் பரவியது. தமிழர்களும் தங்களின் சுதந்திரப் பற்றை வெளிப்படுத்தம் வகையில், ஜான்ஸி ராணியின் பெயரை பொது இடங்களுக்கும், தங்கள் குழந்தைகளுக்கும் இட்டு மகிழ்ந்தனர். இதற்குச் சான்றாக மதுரையில் ஒரு பூங்காவிற்கு ஜான்ஸி ராணி பூங்கா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. அதுபோன்று இன்றும் பல குழந்தைகளுக்கு ஜான்ஸி ராணி என்று பெயர் சூட்டப்பட்டு வருகிறது.

    ஆனால், ஜான்ஸி ராணிக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் வாழ்ந்து, வெள்ளையர் எதிர்ப்பில் தமது கணவரான சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்துவடுகநாதரைப் பலிகொடுத்து, எட்டாண்டுகள் தவவாழ்க்கை மேற்கொண்டு, அதன்பின் ஹைதர் அலியின் உதவியுடன் களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக்காட்டிய வேலு நாச்சியாரை தமிழர்கள் கவனம் கொள்ளாமல் இருப்பது வேதனைக்குரியதாகும்.

    இராமநாதபுரம் மன்னருக்கு மகளாகப் பிறந்த வேலு நாச்சியார், பன்மொழிப் புலமை கொண்டவர்: ஆயுதம் ஏந்திப் போராடுவதில் வல்லமை மிக்கவர்: நிர்வாகத் திறமையிலும் தேர்ச்சி பெற்றவர். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் வெள்ளையரை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடிக் களப்பலியானவர் இந்தியாவிலேயே முதல் மன்னர் வேலு நாச்சியாரின் கணவர் முத்துவடுகநாதர்தான். அது போன்று ஆயுதம் ஏந்திப் போராடிக் களத்தில் வெள்ளையரைத் தோற்கடித்து, இழந்த நாட்டை மீட்டுக்காட்டியவர் இந்தியாவிலேயே முதல் பெண்மணி வேலு நாச்சியார்தான்!

    என்ன காரணத்தினாலோ, இன்றுவரை தமிழர்களால் போதுமான அளவுக்கு வேலு நாச்சியார் கண்டு கொள்ளப்படவில்லை. இது தமிழர்களின் வரலாற்று அறிவில் ஏற்பட்ட மிகப்பெரிய கரும்புள்ளியாகும். வேலு நாச்சியார் பற்றிய எனது தேடலின் போதுதான் அந்த வீரத் தாயின் ஆளுமை எனக்குப் புரிந்தது.

    வேலு நாச்சியாரைப் பற்றி ஆங்காங்கே துண்டுதுண்டான செய்திகள் இருக்கின்றதே தவிர, அவரைப் பற்றி ஒரு முழுமையான நூல் இதுவரை தமிழில் வெளிவரவில்லை என்பது வேதனைக்குரியதாகும். வெளிவந்த ஒரு சில நூல்களும், எழுதியவர்களின் உள்மன உணர்வுகளுக்கு ஏற்றபடி அமைந்திருக்கிறதே தவிர, வேலு நாச்சியாருக்குப் பெருமை சேர்ப்பதாக இல்லை.

    இந்தப் பின்னணிதான் என்னை வேலு நாச்சியார் பக்கம் கவனம் திரும்பச் செய்தது!

    இந்திய வரலாற்றின் பக்கம் எனது கவனம் பதிவதற்குக் காரணமான தோழர் த. ஸ்டாலின் குணசேகரன்,

    வேலு நாச்சியார் பற்றிய சான்றாதாரங்களையும், ஆவணங்களையும் எனக்குக் கொடுத்து உதவியதுடன், வேலு நாச்சியார் பற்றி நான் எழுத வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்தி, வேலு நாச்சியார் பற்றி எனது உள்ளத்தில் வித்திட்ட சிவகங்கை மாவட்ட கலை, இலக்கிய வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவரும், "பசும்பொன் மாத இதழின் ஆசிரியரும், எனது அத்தானுமாகிய திரு வே. திருவரங்கராகன்,"

    சிவகங்கைச் சீமை முழுவதும் என்னை அழைத்துச் சென்று, வேலு நாச்சியார் கால்பதித்த இடங்களில் எல்லாம் என் கன்பதிக்கக் காரணமானவரும், அரிய புகைப்படங்களை எடுப்பதற்குத் துணை நின்றவருமான திரு. வே. திருவரங்கராசனின் புதல்வரும் எனது மருமகனுமாகிய, வழக்குரைஞர் குமரகுரு. புகைப்படக் கலைஞர் முருகானந்தம்,

    வேலு நாச்சியாரை நான் பதிவு செய்தாக வேண்டும் என்று என்னிடம் அடிக்கடி வலியுறுத்திய கவியரசு கண்ணதாசனின் உதவியாளர் திரு. இராம. கண்ணப்பன்,

    இந்த வரலாற்று நாயகியின் வரலாறு நந்தனில் வரவேண்டுமென்று விரும்பி, அதற்கு அந்தப் பத்திரிகையில் எனக்குக் களம் அமைத்துக் கொடுத்ததுடன், தொடர் சிறப்பாக வரவேண்டுமென்பதற்காக அரிய கருத்துகளையெல்லாம் எனக்கு வழங்கிய நந்தன் ஆசிரியர் அய்யா நா. அருணாசலனார்,

    என்னுடைய ஒவ்வொரு வெற்றிகளுக்கும் துணைநின்று தோள் கொடுத்து வருபவரும், வேலு நாச்சியார் பற்றிய தொடர் நந்தனில் சிறப்பாக வெளிவரத் துணை நின்றவரும், தொடர் சிறக்க ஒத்துழைத்தவரும், இந்த நூலுக்கு மிகச் சிறந்த அணிந்துரை வழங்கியவருமான தோழர் இளவேனில்,

    இந்தத் தொடரை நான் எழுதுவதற்கு முன், தமிழில் வெளிவந்த மிகச் சிறந்த புதினங்களை எல்லாம் எனக்குக் கொடுத்துதவி, தொடர் சிறக்க ஒத்துழைத்த பாவலர் பல்லவன்,

    ஒவ்வொரு இதழையும் படித்து விட்டு, கருத்துகளைக் கூறி, என்னை உற்சாகப்படுத்திய தம்பி கே. இளந்தீபன்,

    இந்தத் தொடர் வெளிவந்தபோது நந்தன் பத்திரிகைக்கு வாழ்த்துக் கடிதம் எழுதிய வாசகர்கள், என்னை நேரில் பாராட்டிய நல் உள்ளங்கள்,

    எனது நூல்களுக்கு தனித்துவம் கொடுத்து முகப்போவியம் வரைந்து கொடுக்கும் ஓவியர் நாதன்,

    எனது நூல்களைத் தனிக்கவனம் எடுத்து ஒளி அச்சுச் செய்யும், விக்னேஷ்வர் கிராபிக்ஸ் உரிமையாளர் முரளி,

    இந்த நூலில் உள்ள வரலாற்றுப் பிண்ணனி கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை எடுத்துக் கொடுத்த எனது மருமகன் எம்.எஸ். பிரகாஷ்,

    எனது நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் குமரன் பதிப்பக உரிமையாளர், திரு. எஸ். வைரவன்,

    இத்தனை உள்ளங்களும் எனக்குத் துணைபுரிந்ததனால்தான் வரலாற்றுப் புதினத்திலும் எனது காலடிச் சுவடுகளைப் பதிக்க முடிந்தது.

    அதனால், மேலே குறிப்பிட்ட அனைவருக்கும் என் நன்றி என்றும் உண்டு.

    இறுதியாக ஒன்று...

    வராற்றுப் புதினங்கள் எழுதுகின்றவர்கள், கதையை நகர்த்துவ தற்காகச் சில கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்குவது உண்டு. இல்லையெனில் கதையை நகர்த்துவதிலும், கதையை வாசகர் நெஞ்சில் பதிய வைப்பதிலும் தொய்வு ஏற்படும். இந்தக் கோட்பாடு எனது இந்தப் புதினத்திலும் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மை வரலாற்றிலிருந்து நான் தடம் மாறவில்லை என்பது மெய்.

    வேலு நாச்சியாரின் வீர விளையாட்டோடு தொடங்கும் இந்த நூல், அவர் இழந்த நாட்டை மீட்டு, மகாராணியாக முடிசூட்டிக் கொண்டதோடு முடிகிறது.

    அடுத்த பகுதி விரைவில்...

    என்றும் அன்புடன்,

    கே. ஜீவபாரதி

    காணிக்கை

    என் எழுத்தின் மீது பற்றும்

    என்மீது பாசமும் கொண்ட

    டாக்டர் பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டி

    அவர்களின் அன்புக்கு இந்த நூல்

    விரிந்த வானில் சிம்புட் பறவைகளாய்...

    ராஜா ராணி கதைகள் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை; கிளர்ச்சியூட்டியதில்லை; உளப்பதிவை ஏற்படுத்தியதில்லை. சிறுமைப்பட்டவர்களும், அடிமைப்பட்டவர்களும், தண்டிக்கப்பட்டவர்களும், ரத்தம் சிந்தியவர்களும், கொடுமைகளால் குத்திக் கிழிக்கப்பட்டவர்களுமான எளிய மக்களின் எழுச்சியும், போராட்டங்களுமே என்னுள் அலைகளையும் ஆர்வக் கிளர்ச்சிகளையும் மூண்டெழச் செய்திருக்கின்றன.

    எந்த நாடு சுதந்திரமாக இருக்கிறதோ அது எனது தாய்நாடு என்றான் ஜெபர்சன். இந்தச் சொற்றொடர் ஜெபர்சனின் சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துவதாக இருக்கலாம். ஆனால், இதை நான் ஒரு கொள்ளைக்காரனின் வெட்கங்கெட்ட சுய விமர்சனமாகவே கருதினேன். அழகான பெண்கள் எல்லோரும் எனக்கான பெண்கள் என்று ஒரு காமுகன் கூறுவதுபோலத்தான் இதுவும். ஏனென்றால், எந்த ஒரு நாட்டின் சுதந்திரத்தையும் ஜெபர்சன் கூட்டத்தார் விட்டுவைத்ததே இல்லை.

    ஜெபர்சனுக்கு மாறாக, எந்த நாடு அடிமைப்பட்டிருக்கிறதோ அது எனது தாய் நாடு என்றான் வால்ட் விட்மன். இது வெறும் கவிதாலங்காரச் சொற்றொடர் அல்ல என்று அவன் மெய்ப்பித்தான். பிரான்சிலே சிறைகளை உடைத்துக் கொண்டு வீதிக்கு வந்த மக்கள், அடிமைகளாய் ஊர்ந்து இழிவு சுமந்த மக்கள், புரட்சியின் மைந்தர்களாய் எழுந்தபோது, அந்த அமெரிக்கக்கவிஞன் ஆ... எனது தாயகம் விடுதலைப் போருக்கு விம்மி எழுகிறது. இதோ பாரீசுக்குச் செல்கிறேன் என்று பாரீசுக்கு விரைந்தான். ஆம்; அவன் அடிமைகளின் தோழன். அவனை நான் நேசித்தேன்

    எனது இளம் பிராயத்தில், அரசகுலத்தையும் ஆதிக்க சக்திகளையும், மத குருமார்களையும், மனித உணர்வுகளை மிதித்துச் செல்லும் மடையர்களையும் ஒருவர் கூடத் தப்பிவிடாமல் கில்லெட்டினுக்கு அனுப்புவதில் தீவிரமாயிருந்தாளே மேடம் டிபார்ஜ் (சார்லஸ் டிக்கன்சின் இருநகரக் கதையில் வரும் கதாபாத்திரம்) அவளை அருகில் சென்று தொட்டுப்பார்க்க ஆசைப்பட்டதுண்டு. கொடுமைப்பட்ட மக்களின் கிளர்ச்சித் தீ அவள்.

    சிம்மாசனங்களிலும், சிறப்புரிமை பெற்றவர்களிலும் எனது மாவீரர்கள் இருக்கவில்லை. அவர்கள் சிறைகளிலும், வியர்வைக்குலத்திலும், தீண்டத்தகாதோரிலும் இருந்தார்கள்.

    ராஜா ராணி கதை எழுதுகிறவர்களிடம் நேர்மை உணர்ச்சி இருப்பதில்லை என்பது எனது நெடுநாள் அபிப்பிராயம்.

    ராஜா ராணி கதை எழுதப் போய் காண்டேகர்கூட வழுக்கி விழுந்துவிட்டார் என்று என்னுள் கோபம் கண்டதுண்டு. ஆதரவற்றவர்களுக்காகவும், அபலைகளுக்காகவும் குரல் எழுப்பிய மேதை காண்டேகர், புராணத்தைப் புரட்டி, யயாதி கதையை எழுத நேர்ந்த போது நீங்களுமா காண்டேகர்! என்று நம்மைத் திகைக்க வைத்துவிட்டாரே!

    யயாதி என்பவன் ஒரு காமுகன். அவன் நல்ல கணவன் இல்லை; நல்ல காதலன் இல்லை; எல்லாம் அவனுக்குக் கேளிக்கைகள், தள்ளாத வயதிலும் தனது மகனின் இளமையைப் பெற்று இன்பம் பெறத் துடித்தவன். கட்டி அணைத்து, முத்தமிட்டு, மோகத்தீயில் எரிந்து சுகித்து எல்லாம் முடிந்தபின் தன்னை இன்பத்தில் ஆழ்த்தியவள் என்ன ஆனாள் என்று எண்ணிப் பார்க்கவும் முடியாத அயோக்கியன். இவனால் கசக்கி எறியப்பட்ட அந்தப் பணிப்பெண் - சின்னஞ்சிறு அலகா - நஞ்சூட்டிக் கொல்லப்பட்டாளே! கொடியவன் யயாதி; தண்டனையோ ஒரு குற்றமும் அறியாத அலகாவுக்கு. யயாதியின் இதயம் நொறுங்கவில்லை. மனித உணர்வு துடிக்கவில்லை. இவனோ வேறொரு மடிதேடி...

    காண்டேகர் என்ன செய்தார்? அலகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக யயாதி மீது குற்றம் சாற்றவில்லை. ஓர் இலக்கிய வாதியின் சத்திய ஆவேசம் பொங்கி எழவில்லை. மாறாக, யயாதிமீது அனுதாபம் வரும்படி செய்துவிட்டாரே? காண்டேகர் எங்கே?

    சீதையின் கற்பிலே சந்தேகம் கொண்டு நெருப்பிலே குளித்துவரச் சொன்னான் இராமன் என்று தெரிந்ததும், அவனா சொன்னான்...? என்று வெறுப்பை எல்லாம் கொட்டித் தீர்த்தானே புதுமைப்பித்தன், அந்த நேர்மைத் திறம் எத்தனை எழுத்தாளர்களிடம் இருக்க முடியும்? மகுடங்களுக்கு முன்னாலும் மத உணர்வுக்கு முன்னாலும் மனச்சாட்சி மௌனமாகி விடுகிறதே!...

    இதனால் தான், ராஜா ராணி கதைகள் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை.

    வரலாறு என்றால் மாவீரர்களின் வெற்றி உலாக்கள். மன்னனும் மதகுருவும் படைத்தலைவனும் தான் வரலாற்றை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்களால்தான் இந்த உலகம். அவர்களுக்காகத்தான் இந்த உலகம் என்கிற கருத்தே வெகு காலமாய்ப் பரப்பப்பட்டு வருகிறது.

    இதன் பக்கவிளைவாய், வெற்றி பெறு; எந்த விலை கொடுத்தும்; எந்த நிலை எடுத்தும். வெற்றிதான் முக்கியம். இந்தப் போட்டியில் நீதான் வெல்ல வேண்டும். வெற்றிக்காக எதையும் செய். யாரையும் தீர்த்துக்கட்டு. வென்றால் உலகம் உனக்கு. நீதான் உலகம். நீயே இல்லை என்கிறபோது உலகம் எதற்கு?... என்கிற மனோபாவம் வளர்க்கப்படுகிறது. இதனால் கொலைகள், கொள்ளைகள், பாசிசம், பயங்கரவாதம், ஏகாதிபத்தியம் எல்லாம் நியாயமாகி விடுகின்றன. ஆயுதங்களின் ஆரவாரத்தில் நிராதவராய்த் தலை கவிழ்ந்து சோகத்தில் சிதைந்துவிட்ட மானுடத்தின் மெல்லிய முனகல் கேட்பாரற்றுக் கரைந்து விடுகிறது.

    சீனத்தின் நெடுஞ்சுவரைப் பாருங்கள். உலக அதிசயங்களில் ஒன்று என்கிற பெருமையின் மறுபக்கத்தில் கண்ணீரும் ரத்தமும் பிசுபிசுக்கிறதே... அதைக் கவனிப்பார் யார்?

    ஷின் ஷி ஹூவாங்தி என்பவன் சீனத்தின் மன்னனாய் முடிசூட்டிக் கொண்டபோது, வாழ்த்த வந்தவர்களெல்லோரும், புகழார்ந்த சீன மன்னர்களின் வரிசையில் ஒரு மாமணியாய்ச் சுடர்வதாய் அவனைப் பாராட்டினார்கள். இந்தப் பாராட்டு மழையால் ஹுவாங்தியின் முகம் மலரவில்லை. கருத்தச் சிறுத்தது. சீன வரலாற்றில் எனக்கு முன்னால் மாவீரர்களா? அவர்களுக்கு இன்னும் மரியாதையா? அவர்கள் எனக்குச் சமதயா? சீனத்தின் வரலாறும் வாழ்வும் ஷின் ஷி ஹுவாங்தி என்கிற என்னிலிருந்துதான் தொடங்க வேண்டும்; பழைய கறைகளையெல்லாம் துடைத்தழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான்.

    பழைய இலக்கியங்கள், பழைய மன்னர்கள், அறிஞர்களின் வரலாறு, தத்துவங்கள் எல்லாவற்றையும் தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஆணையிட்டான். அவன் விதித்த ஆணையின் படி பழைய இலக்கியங்கள், வரலாறுகள், தத்துவங்கள் என்று அனைத்துச் சுவடிகளும் நெருப்பில் வீசப்பட்டன. அந்த நெருப்பு இரண்டு மாதகாலம்வரை அணையாமல் எரிந்தது. மன்னனின் இந்த ஆணைக்கு அடிபணிய மறுத்த கவிஞர்கள், சிந்தனையாளர்கள், ரசிகர்கள் அனைவரும் அடிமைகளாய்க் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கைதிகளின் எண்ணிக்கை இருபது இலட்சத்தைத் தாண்டியது. அப்படிக் கைது செய்யப்பட்ட அடிமைகள் கட்டியதுதான் சீனத்தின் நெடுஞ்சுவர்.

    ஷின் ஷி ஹுவாங்தியின், வரலாறு என்பதே நான்தான் என்கிற வன்மம் இலட்சக்கணக்கான மக்களின் கண்ணீராலும் இரத்தத்தாலும் ஒரு மலைப்பூட்டும் கோட்டையாய் எழுந்ததென்றால்...

    சாணக்கியனின் வரலாறு படைக்கும் அற்பத்தனம் இந்தியாவில் ஒரு மதவெறிக் கூட்டத்தையே வளர்த்துவிட்டது. சாணக்கியனைத் தமிழ் மக்கள் குடிலன் என்றே அழைத்தார்கள். குடிலன் என்றால் குடிகெடுப்பவன், கெடுமதி கொண்ட அயோக்கியன் என்று பொருள். இந்தக் குடிலன் வடமொழி உச்சரிப்பில் கௌடில்யன் என்று ஆனான். புத்தம், பௌத்தம் என்று உச்சரிக்கப்படுவதுபோல்.

    தமிழ்நாட்டிலிருந்து விரட்டப்பட்ட இந்தக் குடிகேடன் வடக்கே ஓடினான். சந்திரகுப்தன் என்னும் கீழ்ச்சாதி வீரனின் ஆற்றலைப் பயன்படுத்தி ஓர் ஆரிய சாம்ராஜ்யம் உருவாக்க நினைத்தான். அப்போது கிரேக்கத்திலிருந்து அலெக்சாந்தர் படையெடுத்து வந்து வடக்கே பல அரசர்களை வென்று அடக்கிக் கொண்டிருந்தான். தனது வெற்றியின் அடையாளமாகப் பல இடங்களின் வெற்றித் தூண்களையும், சீயஸ் என்னும் தனது கடவுளுக்கு ஆலயமும் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு, வேறிடங்களுக்குப் போரிடச் சென்று கொண்டிருந்தான்.

    அலெக்சாந்தர் அப்பாலே சென்றதும் அவனது வெற்றித் தூண்களைத் தகர்த்துவிட்டு, சீயஸ்சின் ஆலயங்களின்மீது ஆரிய சின்னங்களான ஸ்வஸ்திக் அடையாளங்களைப் பதிப்பிக்க வேண்டும் என்றான் குடிலன்.

    ஒருவரின் வழிபாட்டுத் தலத்தில் இன்னொருவரின் மத சின்னங்களை வைப்பது அறமல்லவே என்று சந்திரகுப்தன் கேட்டபோது, தர்ம் நியாயம் பார்ப்பவன் வெற்றிபெற முடியாது என்று பதிலளித்தான். அவனது விருப்பப்படி ஆரியச் சின்னங்கள் அலெக்சாந்தரின் வெற்றித் தலங்களில் பதிப்பிக்கப்பட்டன. அந்த ஆரியக் குடிலத் தனம்தான் இன்று சங்கப் பரிவாரங்களின் இந்துத்துவக் கொள்கையாய் உருவெடுத்திருக்கிறது. பாபர் மசூதியை இடித்துத் தகர்த்துவிட்டு அங்கே ராமனுக்கு வழிபாடு நடத்தி, பாசிசத்தை விதைத்திருக்கிறது. இந்த ஆரியப் பாசிசம் அலெக்சாந்தரையும், பாபரையும் மட்டும் வரலாற்றிலிருந்து அப்புறப்படுத்த நினைக்கவில்லை. இந்திய வரலாற்றையே ஆரிய வரலாறக மாற்றத் துடிக்கிறது. திராவிடர்களின் அடிச்சுவட்டையே அழித்துவிட நினைக்கிறது. இந்தியாவின் புகழ்வாய்ந்த தத்துவங்களையும் அறிஞர்களையும் கொன்று குவித்த அதன் கோரப்பசி இன்னும் அடங்கவில்லை. மொகஞ்சதாரோ, அரப்பா அகழ்வாராய்ச்சிகளில் கண்டறியப்பட்ட திராவிட இனத்தின் இலச்சினைகள் கூடத் திருத்தப்படுகின்றன. உத்தரப்பிரதேசம் போன்ற பிற்போக்கான மாநிலங்களில் பள்ளிப் பாட நூல்களிலேயே வரலாறுகள் திருத்தப்படுகின்றன.

    இங்கே சங்க இலக்கியங்களிலும், காப்பியங்களிலுங்கூட எத்தனை எத்தனை வரலாற்றுப் புரட்டுகள்!

    இதனால், ராஜா ராணி கதைகள் எப்போதும் என்னைக் கவர்ந்ததில்லை.

    அயோக்கியர்களின் வரலாற்றைப் பொய்யர்கள் புகழ்ந்தேற்றுகிறார்கள் என்பதற்கு மேலாக சரித்திரக் கதைகளில் எனக்கு ஆர்வம் எழுவதில்லை.

    வரலாறு விஞ்ஞான வெளிச்சத்தில் பார்க்கப்பட வேண்டும். பார்க்கப்பட்ட அந்த வரலாற்றின் படிப்பினைகள் எதிர் காலத்திற்கு நம்மை வழி நடத்திச் செல்ல வேண்டும்.

    ஏடறிந்த வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும். அறியப்பட்ட எல்லாக் காலங்களிலும் ஆளும் வர்க்கமும் ஆளப்படும் வர்க்கமும், சுரண்டும் வர்க்கமும் சுரண்டப்படும் வர்க்கமும் இருந்தே வந்திருக்கின்றன. மனித குலத்தின் பெருவாரியான பகுதிக்குக் கடுமையான உழைப்பும், அடுத்த நாளும் உழைப்பதற்குப் போதுமான கருணையும் மட்டுமே தரப்பட்டிருக்கின்றன. சுகவாசிகள் தங்களது ஆதிக்கத்தை நிரந்தரப்படுத்துவதற்கு நடத்தும் போராட்டங்களும், புதிதாய் எழும் வர்க்கங்கள் இந்த ஆதிக்கத்தை வென்றெடுக்கப் போராடுவதும்தான் வரலாறு நெடுகிலும் காணப்படும் காட்சிகள் என்று காரல் மார்க்ஸ் தெளிவுபடுத்தினார்.

    இந்த உண்மையின் ஆழத்திலிருந்து எழும் கேள்வி, இலக்கிய வாதியே, வரலாற்றாசிரியனே நீ எந்த வர்க்கத்தின் பக்கம்? என்பதுதான். இந்தக் கேள்விக்குத் தங்கள் படைப்புக்களின் மூலம் எத்தனைபேர் நேர்மையான பதிலளிக்கிறார்கள்?

    எழுதுகிறவர்களில் அனேகர் மகுடங்களுக்கு முன் மயங்குகிறவர்களாக இருக்கிறார்கள். மகுடபதிகளின் சலிப்பூட்டும் வாழ்க்கைக்கு சுவாரஸ்யமூட்டும் பாட்டும் கூத்தும் தேவைப்படுவது மாதிரியே, அரசர்களைப் பற்றி எழுதும் எழுத்தாளர்களும், அந்தக் காலத்துக்குக் கொண்டு போவதாக நினைத்துக் கொண்டு வாசகனுக்குத் திகைப்பூட்டும் திருப்பங்களாலும் பாலியல் கவர்ச்சியைத் தூண்டும் வர்ணனைகளாலும் வரலாற்றையும் வாசகனையும் மழுங்கடிக்கிறார்கள்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்து போன டயனோசர்களின் எலும்புக் கூடுகளைத் தேடி எடுத்து மறுபடியும் அந்தப் பெருவிலங்குகளுக்கு உயிரூட்ட முயற்சிப்பதும் ராஜா ராணி கதைகளை எழுதுவதும் குழந்தைத் தனமான பரவசக் கற்பனை என்பதற்கு மேலாக அதிலே என்ன இருக்கிறது?

    ஆனால் இறந்து போன அன்னையை, பிரியமான குழந்தையைக் கனவிலே கண்டு விழித்துக் கொள்ளும்போது, நெஞ்சு குழைந்து, கனன்று, மலர்ந்து, மனந்து, உருகி உயிரைப் பற்றி இழுக்கிறதே...

    கதையிலே வரும் டயனோசரும், ராஜாவும், கனவிலே வரும் தாயும் குழந்தையும் நம்மிடமிருந்து மறைந்தவர்கள் தான். ஆனால் டயனோசருக்கும், ராஜாவுக்கும் இன்றைய மனிதனுக்குச் சம்பந்தமில்லை. ஆனால் தாயும் குழந்தையும் இல்லை என்பதால் அவர்கள் நமக்கு யாரோ என்று ஆகிவிடமாட்டார்கள்.

    இறந்து போன தாயின் மடியிலே படுத்துக் கொண்டு கதைகேட்ட சுகத்தை,

    இறந்து போன குழந்தை கழுத்தைக் கட்டிக் கொண்டு மழலையால் நனைந்த இன்பத்தை, கனவு உங்கள் கண் முன்னே நிகழ்த்திக் காட்டுகிறது. அது கனவென்று நம்ப முடிவதில்லை. ஐயோ அந்தப் பேறு மறுபடியும் வாராதா என்று ஏங்க வைக்கிறது. ஏனென்றால் கனவிலே அந்த மனிதனின் வாழ்க்கை இருந்தது.

    ஓர் இலக்கியவாதியின் படைப்பும் அவ்வாறான ரசவாதத்தை நிகழ்த்த முடியும். கால இடைவெளிகளைக் கடந்து அது உங்களை அங்கே அழைத்துச் செல்ல முடியும், இறந்த காலத்துக்கும் எழுத்துக்கும் இரத்த ஓட்டம் இருக்குமானால்.

    ஓர் ஆட்டைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானியின் உணர்வுக்கும், இலக்கிய வாதியின் உணர்வுக்கும் வித்தியாசம் உண்டு.

    ஆட்டின் தோலை, இதயத்தை

    Enjoying the preview?
    Page 1 of 1