Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Marupadiyum Ninaithu Paarkirean
Marupadiyum Ninaithu Paarkirean
Marupadiyum Ninaithu Paarkirean
Ebook116 pages40 minutes

Marupadiyum Ninaithu Paarkirean

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உண்மைகளை உணர்வது, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று சொல்லாமல், உணர்ந்தபடியே ஊருக்கு நல்லது சொல்வதே நோக்கம் என்று உண்மைகளை உரத்துச் சிந்திப்பது என்கிற காரியம் எப்போதும் ஒரே மாதிரியானதாக அமைய முடியாது. ஒருகாலத்தில் ஒரு மாதிரியாக உணர்ந்ததை இன்னொரு காலத்தில் வேறொரு மாதிரியாக அனுபவிக்கிற போது வெளிப்படும் உணர்வுகளின் முரண்பாடு உணர்பவரின் முரண்பாடா என்ன? வாழ்க்கை, சமூக மாற்றம் விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் இந்த முரண்பாடுகளைத்தான் வெளிப்படுத்துகிறது. சிந்திப்பவர்களும் படைப்பாளிகளும் இந்த முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல் இருக்க முடியாது.

Languageதமிழ்
Release dateOct 9, 2021
ISBN6580103906907
Marupadiyum Ninaithu Paarkirean

Read more from Jayakanthan

Related to Marupadiyum Ninaithu Paarkirean

Related ebooks

Reviews for Marupadiyum Ninaithu Paarkirean

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Marupadiyum Ninaithu Paarkirean - Jayakanthan

    https://www.pustaka.co.in

    மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன்

    Marupadiyum Ninaithu Paarkirean

    Author:

    த. ஜெயகாந்தன்

    Jayakanthan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. சபையும் ஸஹ்ருதயர்களும்

    2. சோவியத் யூனியன் ஒரு மாயையா?

    3. நம்புகிறவர்களை நம்புகிறேன்!

    4. பெரியாரிடம் பெற்ற உபதேசம்

    5. வாழ்த்துவோம் அது நல்ல மரபு

    6. முதலாளித்துவம் ஒழிக என்பது பிற்போக்கு கோஷமே!

    7. நடைமுறைக்கு முரணான கருத்துகள்!

    8. ஒரு ஸஹ்ருதயரின் விளக்கம்

    9. மார்க்ஸிய லாஜிக் என்பது என்ன?

    10. இயக்கங்களும் இலக்கியமும்...

    11. ‘நாய்னா’ என்றொரு...

    12. பவளவிழா நிறைவுக்குப் பல்லாண்டு!

    13. ஒரு சுயதரிசனம்

    14. போய் வா, அறந்தை!

    15. அன்புள்ள ஸஹானா...!

    16. ‘இன்னும் நூறாண்டு இரும்!’

    17. மூன்றாவது அணி!

    18. எனக்கு ஒரு கனவு!

    19. முன்னோடி பத்திரிகையாளர் சாவி

    20. புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும்

    21. படியுங்கள்

    22. உரிய நேரத்தில் உரிய முடிவு

    23. நல்லாட்சிக்கு யார் உத்தரவாதம் தருவது?

    24. எங்கிருந்தோ வந்தான்...

    25. ‘ஆரை அடா சொன்னாய் அது?’

    26. கட்சிகள், சின்னங்கள், தனிநபர்கள்...

    27. அறிவு ஜீவிகளுக்கு...

    28. ‘பரிட்சை வேண்டாம்!’

    29. ஒரு முழுமையான பார்வைக்கு...

    30. முதல் கதையும் முடியாத கதையும்...

    முன்னுரை

    ‘மறுபடியும் நினைத்துப் பார்க்கிறேன்’ என்ற தலைப்பில் குமுதம் வார இதழில் நவம்பர் 2000-லிருந்து மே, 2001 வரை 30 வாரங்கள் வாரந்தோறும் எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு இச்சிறு நூல்.

    குமுதம் இதழில் 1972-ல் 83 வாரங்களும், 1986-ல் இருபத்தைந்து வாரங்களும், இப்போது முப்பது வாரங்களும் நான் தொடர்ந்து எழுதியதை ஒரு விசேஷ அனுபவமாகவே நான் கருதுகிறேன்.

    ஆரம்பத்தில் எழுதிய கட்டுரைகளில் சிறிதும் அரசியல் கலப்பே இல்லாமல் எனது தனிப்பட்ட வாழ்வின் அனுபவங்களை எழுதினேன். இரண்டாவது முறை சிறுகதைகள் மாதிரியான சமூக சம்பவங்களை விவரித்திருந்தேன். இப்போது எழுதியவற்றைப் படித்துப் பார்க்கையில் இவையாவும் நேரடியாகவே அரசியல், கட்சிகள் பற்றிய கருத்துகள், சமூகக் கருத்துகள் பற்றிய விமர்சனங்களாக அமைந்திருப்பதைக் காண்கிறேன்.

    எனது கருத்துக்கள் எல்லாமே இறுதியானவை அல்ல. அவை மறுபரிசீலனைக்கும், மற்றவர்களின் விமர்சனங்களுக்கும், மாறுபாடுகளுக்கும் உரியவைதான். ஆயினும் நான் அவற்றை உணர்ந்தது உணர்ந்தது மாதிரியாகவே உண்மையாக வெளிப்படுத்தும் போது அதில் ஏற்படும் ஓர் உறுதிப்பாடு கடுமை போல் தொனிக்கலாம். அந்தக் கடுமை வெறுப்பின் வெளிப்பாடு அல்ல.

    எனது கருத்துகளைப் பிறர் ஏற்பதும் மறுப்பதும் அல்ல பிரச்சினை; அவை பரிசீலிக்கப்படுவதும் செப்பப் பெறுவதும்தான் முக்கியம்.

    உண்மைகளை உணர்வது, உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று சொல்லாமல், உணர்ந்தபடியே ஊருக்கு நல்லது சொல்வதே நோக்கம் என்று உண்மைகளை உரத்துச் சிந்திப்பது என்கிற காரியம் எப்போதும் ஒரே மாதிரியானதாக அமைய முடியாது.

    ஒருகாலத்தில் ஒரு மாதிரியாக உணர்ந்ததை இன்னொரு காலத்தில் வேறொரு மாதிரியாக அனுபவிக்கிற போது வெளிப்படும் உணர்வுகளின் முரண்பாடு உணர்பவரின் முரண்பாடா என்ன?

    வாழ்க்கை, சமூக மாற்றம் விஞ்ஞான வளர்ச்சி எல்லாம் இந்த முரண்பாடுகளைத்தான் வெளிப்படுத்துகிறது. சிந்திப்பவர்களும் படைப்பாளிகளும் இந்த முரண்பாடுகளைப் பிரதிபலிக்காமல் இருக்க முடியாது.

    எனவேதான் இவற்றைப் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வரும் போது இதற்கு இயல்பான எதிரொலிகளைப் பிரசுரிக்க வேண்டாம் என்று நான் கேட்டுக் கொண்டேன். என் வேண்டுகோள்படி குமுதம் இந்தக் கருத்துகளின் பேரில் ஏதும் விவாதங்களைத் தொடரவில்லை என்பது மகிழ்ச்சி தருகிறது.

    எனினும் இந்தக் கட்டுரைகள் வெளிவந்தபோது பல நண்பர்கள் எனக்குக் கடிதம் எழுதித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும், குமுதம் பத்திரிகைக்கும், எனது நன்றி உரியது.

    த. ஜெயகாந்தன்.

    சென்னை – 78

    21.06.2001

    1. சபையும் ஸஹ்ருதயர்களும்

    ஸஹ்ருதய - இது ஒரு ஸம்ஸ்கிருதச் சொல். ஸகோதர என்பதற்கு சக - உதரர்கள் என்று பொருள்கொள்வது போல இதற்கு சக - இருதயர்கள் என்று பொருள்கொள்ள வேண்டும். வடமொழி அறிந்தோர் மேலும் பல விரிந்த பொருளும்கொள்ளுவர்.

    எனக்கு ஸம்ஸ்கிருதம் ரொம்பவும் பிடிக்கும். ஏன், எனக்கு எல்லா பாஷைகளுமே பிடிக்கும். எல்லா பாஷைகளும் எனக்குத் தெரியாது என்பது எப்போதும் எனக்கு ஒரு குறைதான். அதுவும் ஸம்ஸ்கிருதம் கற்காதது எனக்குப் பெருங்குறை. அந்தக் குறையை நிவர்த்தி செய்துகொள்ள நான் விரும்பியபோது அதைக் கற்பிக்கப் பல பண்டித ஸஹ்ருதயர்கள் முன்வந்தும் என் முயற்சி கைகூடாமல் போனது வருந்தத்தக்க விஷயமே.

    வடமொழியில் பயிற்சியும் தேர்ச்சியும் இல்லாத எனக்கு அதன் மீதுள்ள மோகத்தால் அதனோடு நிறையவே பரிச்சயம் நேர்ந்தது உண்மை.

    பாரத தேசத்தைச் சேர்ந்த எல்லா மொழிக் குடும்பத்துக்கும் ஸம்ஸ்கிருதத்துக்கும் இந்தப் பரிச்சயமும், பல மொழிகளுக்குப் பிரிக்கவொண்ணாப் பந்தமும் உள்ளது கண்டு வியந்திருக்கிறேன்.

    சம்ஸ்கிருதத்தின் மீது எனக்குள்ள மோகம் குறித்துப் பல தமிழ் நண்பர்களுக்கு என் மீது ஒரு விமர்சனம்கூட உண்டு. அந்த விமர்சனம் நான் எதிர்பார்த்ததும் நமக்கு இயல்பானதுமான ஒன்றுதான் என்று நான் அறிந்திருப்பதால் எனது சுதந்திரமான ஒரு போக்காக இன்றளவும் இயன்ற அளவு வடமொழி கலந்து எழுதுவதையும் பேசுவதையும் எனது பாணியாக நான் கைக் கொண்டுள்ளேன்.

    ஒரு காலத்தில் நண்பர்களையோ, புதியவர்களையோ பார்க்கும் போதும், அல்லது

    Enjoying the preview?
    Page 1 of 1