Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pralayam
Pralayam
Pralayam
Ebook112 pages59 minutes

Pralayam

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

பிரளயம், சென்னையில் ஒருமுறை வந்த வெள்ளத்தின் போது நிகழ்ந்த அலங்கோலங்களை, மனிதனின் சிறுமைகளை, 'கொடைவள்ளல்'களின் மான வெட்கமற்ற தற் பெருமைச் சவடால்தனங்களைக் கண்டபோது என் மனத்தில் ஏற்பட்ட கைப்பு உணர்ச்சியில் எழுந்ததுதான் என்றாலும், நான் எழுதவிருந்த பெரிய நாவலின் ஓர் பாகமே இக்குறுநாவல்.

Languageதமிழ்
Release dateAug 28, 2021
ISBN6580103907150
Pralayam

Read more from Jayakanthan

Related to Pralayam

Related ebooks

Reviews for Pralayam

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Good one as usual from Jayakanthan, where the narration brings you to the moment.

Book preview

Pralayam - Jayakanthan

https://www.pustaka.co.in

பிரளயம்

Pralayam

Author:

த. ஜெயகாந்தன்

Jayakanthan

For more books

https://www.pustaka.co.in/home/author/jayakanthan-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

அத்தியாயம் 11

அத்தியாயம் 12

முன்னுரை

இக் குறுநாவல்கள் இரண்டும் இவ்வாண்டின் தொடக்கத்திலும், இடையிலும் ஆனந்த விகடன் பத்திரிகையில் வெளியானவை.

இவற்றைப் பாராட்டிக் கடிதங்கள் எழுதியிருந்த வாசகர்களுக்கும், ஆனந்தவிகடனுக்கும் எனது நன்றி உரியது.

இவ்விரண்டு நாவலுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே பெரிய நாவல்களாய் எழுதப்பட வேண்டு மென்ற ஆவலில் பல வருடங்கள் மனக் கிடங்கில் ஊறிக்கிடந்தவை. பெரிதாக எழுதவேண்டுமென்ற ஆவலைத் தூண்டிய குற்றத்திற்காக இவ்விரண்டும் எழுதப்படாமலேயே போய்விடுமோ என்ற அச்சத்தாலும் எழுதியே தீரவேண்டும் என்ற மன அரிப்பாலும், வேறு எதுவுமே எழுத முடியாத ஓர் அவசரத்தாலும் என்னை மீறி இதயத்தைப் பீறிக்கொண்டு வெளியே விழுந்த சிருஷ்டிகள் இவை.

விழுதுகள் மனக்கருவில் உருக்கொண்டது 1958ல்; பிரளயம் 1959-ல் பிரளயத்தை நாவலாக எழுத நான் ஆரம்பித்து 200 பக்கங்கள் வரை எழுதியும் நாவல் என்ற மகத்தான லட்சியம் இன்னும் எனக்குக் கைகூடி வரவில்லை என்று நானே உணர்ந்ததால் அது குறுநாவலாகப் பிறக்க விதிக்கப்பட்டுவிட்டது.

தமிழிலக்கியத்தைப் பொறுத்தவரை அப்படி ஒரு 'மாறிய - பரிணாம கதி' லயித்துவிட்டதன் காரணத்தை ஆராய்ச்சியாளர்கள் தான் ஆய்ந்து கூற வேண்டும். நாவல் எனும் இலக்கிய உருவம் கனிந்து முதிர்ந்த நிலையில்தான் பிறநாடுகளில் சிறுகதைகளின் உருவங்கள் பிறக்கலாயின. முதிர்ந்து கனிந்த பிறநாட்டு இலக்கியப் பரிச்சயம் காரணமாக - இங்கேயும் ஆரம்பத்தில் நாவல் முயற்சிகள் செய்யப்பட்டனவெனினும் - சிறுகதைகளே முதலில் செழுமை யுருக்கொண்டு சிறந்தன. சிறுகதையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த அளவுக்கு நாவல் துறை தமிழிலக்கியச் சாதனையுலகில் பெருமை தரவில்லை என்பதை ஒப்புக்கொள்ளாத அளவுக்கு நமது தமிழ் வெறி கண்களை மறைக்கவில்லை என்றே நான் கருதுகிறேன்.

நாவல்கள் என்பன இன்றைய தமிழ் மாத-வாரப் பத்திரிகைகளில் பக்கம் நிரப்பிப் படம் போட்டுக் கொண்டு வரும் தொடர்கதைகள் அல்ல என்பதை எனது புத்தகங்களை விரும்பிப் படிக்கும் வாசகத் தரம் புரிந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கிறேன்.

உலகில் மிகச் சிறந்த நாவல்கள் பல பத்திரிகைகளில் தொடர்ச்சியாகப் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன என்கிற விஷயம் எனக்குத் தெரியும். ஆனால் அத்தியாயத்துக்கு அத்தியாயம் 'இனி என்ன? இனி என்ன?' என்று எழுதிய அல்லது படித்த பகுதிகளை மறக்கச் செய்து - எழுதப் போகிற அல்லது படிக்கப்போகிற - ஏதோ ஒன்றை நாடி நாடி ஏங்கச் செய்து, இறுதியில் 'இனி ஒன்றுமில்லை' என்று முடியும் பத்திரிகை ஜாலங்கள் அல்ல அவை.

எனவே 'தொடர்கதை' என்ற ஒரு விளையாட்டு விவகாரத்தை, கண்ணாம்பூச்சிக் கதை இலக்கியத்தை வளர்த்துக் கொண்டதற்கு நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாமே ஒழிய நாவல் இலக்கியம் நாம் பெருமைப்படும் அளவுக்கு வளரவில்லை என்ற மனப் பொருமலின் காரணமாகவே நான் இரண்டு திட்டங்கள் போட்டேன். எனினும் பழக்கமற்ற காரணத்தாலும், அவசரத்தாலும் அவற்றைக் குறுநாவல்களாக்கி விட்டேன்.

இருப்பினும் இவை இரண்டும் எனக்குப் பிடித்தே இருக்கின்றன.

'விழுதுகள்' கதையைப் படித்துவிட்டு என் நண்பரொருவர் 'என்ன நினைத்து நீங்கள் இதை எழுதினீர்கள்' என்று என்னைக் கேட்டார்.

ஓங்கூர் சாமி எனது கற்பனை அல்ல. அப்படி ஒரு கற்பனை செய்ய எனக்குத் தெரியாது. எனக்குக் கடவுள் நம்பிக்கையோ சாமியார் பித்தோ கிடையாதுதான். எனினும் நான் என்னை நம்புகிறவன்; வாழ்க்கையை நம்புகிறவன். அதில் நான் கூறியுள்ள ஓங்கூர்சாமிகளின் தன்மைகள் யாவும் விசாரித்து அறிந்ததும் உடனிருந்து அனுபவித்தவையுமாகும். அந்த மடத்தில் அவர்களில் ஒருவனாய் வீற்றிருந்து சிரித்துச் சிரித்துப் பொழுதைக் கழிப்பதில் காவியம் படிப்பது போன்ற சுகானுபவத்தை நான் கண்டிருக்கிறேன்.

புலன்கள் தறிக்கெட்டுப் போவதில் ஆரம்ப சுகமும் இறுதியில் சோகமும் இருப்பது எவ்வளவு உண்மையோ, எவ்வளவு சாத்தியமோ - அந்த அளவுக்கும் அதைவிடவும் உண்மையானதே- சத்தியமானதே புலன்களை அடக்குவதில் ஆரம்பச் சிரமமும் இறுதியில் எல்லையற்ற சுகானந்தமும் விளைவது.

'மாத்தா னவற்றையும் மாயாபுரியின் மயக்கத்தையும்

நீத்தார் தமக்கொரு நிட்டையில்லை - நித்தம்

வேர்த்தால் குளித்துப் பசித்தால் புசித்துப்

பார்த்தால் உலகத் தவர்போலிருப்பர் பற்றற்றவரே!...

என்னும் பாடல் வேடதாரிச் சாமியார்களை மறுக்கிறதேயல்லாமல், மனித வாழ்க்கைக்குப் பயன்படும் மகத்தான துறவிகள் நம்மோடு இருக்கிறார்கள் என்ற விஷயத்திற்கு அழுத்தமே தருகிறது.

ஓங்கூர் சாமி ஞானபோதகர் அல்ல. வேஷமோ நடிப்போ அற்று ஊருக்கு மத்தியில் வாழ்ந்தவர். அந்தத் தன்மை, அவரது மழலை, அவரிடம் குடி கொண்டிருந்த குழந்தைமை முதலிய பண்புகள் என் மனத்தைப் பெரிதும் கொள்ளை கொண்டன.

அந்தக் கதையில் வரும் அனைவருமே - ஓரிரு பாத்திரங்களைத் தவிர - நான் சந்தித்த, இப்போது உயிரோடிருக்கிற சில மனிதர்களின் உருவகங்களே....

இதுதான் நமது தமிழ்நாட்டின் உள்பக்கக் கிராமங்களில் குடிகொண்டுள்ள வாழ்க்கை. வாழ்க்கையை நான் வெறியுடன் காதலிக்கிறேன். வாழ்க்கையின் நம்பிக்கைகள் பல உயரியன... அவற்றில் பாரதத்தின் தனித்தன்மை ஊடாடி நிற்கிறது. அவை எனக்கு உடன்பாடாய் இல்லாமலிருக்கலாம். அவை இருக்கின்றன என்பதை நான் மறுப்பது சிறுபிள்ளைத்தனமானது; போலித்தனமான பகுத்தறிவு வாதம்; விருப்பு வெறுப்புக்கு உட்பட்ட பாமரத்தனத்தின் வீம்பாக அது முடியும். துறவின் அழகையும், அவற்றில் நான் கண்டு பிரமிக்கும் சில சிறப்புக்களையும் நான் மதிக்க வேண்டும். அவர்களிடமும் கூட 'கடந்த ஞானியரும் கடப்பரோ மக்கள் மேல் காதல்' - என்ற விதமாய் மனிதாபிமானம் குடிகொண்டிருப்பது எவ்வளவு புகழ் பாடத்தக்க விஷயம்!

வாழ்க்கையின் பெருமையை வாழ்க்கையைத் துறந்தவர்களின் மூலமே உணர்வதும் உணர்த்துவதும் மிகவும் அர்த்தமுள்ள விஷயம்தான் அல்லவா!

பிரளயம், சென்னையில் ஒருமுறை வந்த

Enjoying the preview?
Page 1 of 1