Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sevviyal Aringar Oriza Balu
Sevviyal Aringar Oriza Balu
Sevviyal Aringar Oriza Balu
Ebook121 pages41 minutes

Sevviyal Aringar Oriza Balu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வாழ்நாள் எல்லாம் சமூக நலன் கருதி வாழ்ந்தவர்கள் வரலாறு ஆகவேண்டும். அதனை இளைய தலைமுறை படித்துணர்ந்து தேடுதல்களைத் தொடர வேண்டும். செவ்வியல் அறிஞர் ஒரிசா பாலு நூல் பாலசுப்ரமணி என்ற மனிதனின் வாழ்க்கை வரலாறை குறிப்பது மட்டுமல்ல இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்றைத் தேடிய நிலையில் கடல்வழியே தமிழர் தொன்மையைத்தேடி கால்நூற்றாண்டு காலம் தேடியலைந்த மனிதரின் பயணத்தின் சிறுதுளிகள் தான் இந்த நூல்.

Languageதமிழ்
Release dateFeb 17, 2024
ISBN6580173210657
Sevviyal Aringar Oriza Balu

Related to Sevviyal Aringar Oriza Balu

Related ebooks

Reviews for Sevviyal Aringar Oriza Balu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sevviyal Aringar Oriza Balu - Mullanchery M. Velaian

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    செவ்வியல் அறிஞர் ஒரிசா பாலு

    Sevviyal Aringar Oriza Balu

    Author:

    முள்ளஞ்சேரி மு. வேலையன்

    Mullanchery M. Velaian

    For more books

    https://www.pustaka.co.in/home/author/mullanchery-m-velaian

    பொருளடக்கம்

    (அணிந்துரை)

    ஆய்வாளனை நோக்கி ஓர் ஆய்வு

    வாழ்த்துரை

    வாழ்த்துரை

    செவ்வியல்

    நினைவேந்தல்

    சென்னை எம்.ஐ.டி-யில்

    நூல் எழுத வேண்டும்

    சங்க இலக்கியங்கள்

    காந்தாரி மிளகிலிருந்து மருந்து

    கடற்பயணமும் தமிழ் ஆய்வும்

    தமிழரின் நாகரிகம்

    நிறை தமிழ்

    தமிழிலிருந்து எடுக்கப்பட்ட சொற்கள்

    கடல் கலாசார ஆராய்ச்சி மையம்

    சான் அக்டாமியில்

    மரிக்கானா

    குமரிக்கண்டம் கடலில் மூழ்கியது

    ஆஸ்திரேலியாவில் பழங்குடியினம்

    ஆராய்ச்சியில் பெண்கள்

    உரையும் ஆய்வும்

    அமெரிக்க பழங்குடியினரும், தமிழர்களும்

    காரண காரியம் அறிந்து செயல்படுவதில் வல்லவர்

    அறிஞர்கள் அரங்கம்

    வரலாறு பேசும்

    மக்களின் மனதில் நிறைந்தவர்

    மானிடவியலாளர்

    தமிழர் அடையாளம் அறிந்தவர்

    நினைவுகளில் நிலைத்து நிற்பவர்

    ஆய்வுக்கு சங்க இலக்கியங்களை அடிநாதமாய் கொண்டவர்

    ஐயையுடன் என் பயணம்

    செவ்வியல் அறிஞர் ஒரிசா பாலு என்ற இந்நூல் பாலசுப்ரமணி என்ற மனிதனின் வாழ்க்கை வரலாறை குறிப்பது மட்டுமல்ல, இலக்கியங்களிலும், கல்வெட்டுகளிலும் வரலாற்றைத் தேடிய நிலையில் கடல் வழியே தமிழர் தொன்மையைத் கால் நூற்றாண்டு காலம் தேடியலைந்த மனிதரின் பயணத்தின் சிறுதுளிகளும் கூடத் தான்.

    தேடல்களால் உலகம் கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலான தேடல் பயணங்கள் கடல் வழியாகவே நடந்து வந்திருக்கிறது.

    கடல் கொண்ட தென்னாடு உலக நாகரீகத்தின் தொடக்கம். அங்கிருந்து தேடுவதே சிறப்பு என இலக்கியங்கள் படித்தும், உலக வரலாறுகள் படித்தும், உலகெலாம் பயணித்தும் முடிவில் கடல்வழியே தேட வேண்டும் என்று குமரிக் கண்டம் நோக்கி பயணித்த ஒரிசா பாலுவின் பயணம் முற்றுப்பெறாமல் மரணத்தால் இடைநின்று போனது.

    ஆங்காங்கே அவர் விதைத்தவைகளை பாதுகாத்து வளர்க்கும் முயற்சியில் இளைய தலைமுறைகள் உருவாக வேண்டும் என்னும் நோக்கில் தான் இந்நூல் வெளியிடப்படுகிறது.

    நோயுற்ற காலத்தில் நம்மையும் நோக்கியிருக்கிறார்கள் என ஆற்றுப்படுத்திவிடலாம் என்று எடுத்த முயற்சியை அவருடைய மரணம் தோற்கடித்துவிட்டது. ஒரிசா பாலு அவர்களை சந்தித்து பயணப்பட்ட காலம் ஓரிரு ஆண்டுகள் மட்டும் தான். ஆனால் மனதில் பதிந்த மனிதராக மாறியதால் அவருக்காக நூல் எழுதும் முயற்சியில் ஈடுபட்டேன். தென்கோடியில் ஒரு மூலையில் எனக்குள் பதிந்திருக்கிறார் என்றால், உலகில் பல்வேறு திசைகளில் பயணப்பட்டுவந்த அவரை மனதில் பதித்தோர் பல நூறு பேர்களேனும் இருப்பார்கள். அவர்களெல்லாம் அவர்கள் நினைவுகளை பகிர்ந்தார்கள் என்றால் அவர் தேடியதை அடைவதற்கு எளிதாக அமையும். அத்தகு உண்மைகளை இந்த நூலோடு பகிர்ந்து கொண்டவர்கள் நாகர்கோவில் துர்கா திரவியம், சென்னை சுஜாதா சரவணன், திண்டுக்கல் வசந்த் வெள்ளைத்துரை, ஹாங்காங் முனைவர் மெய். சித்ரா, பைங்குளம் பேராசிரியர் செ. சஜிவ், முனைவர் ஏ. ஹெலன் சோனியா, தகைசால் பேராசிரியர் வீ. ரேணுகாதேவி ஆகியோருக்கு வாழ்த்துதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலுக்கான அணிந்துரை வழங்கிய ஒரிசா பாலு அவர்களின் துணைவியார் ராஜிபாலு, கவிஞர் குமரித்தோழன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்த்துரை வழங்கிய அறிவியல் அறிஞர் நெல்லை சு. முத்து அவர்களுக்கும், முனைவர் வெ.பொன்ராஜ் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நூலாக்கத்திற்கு உதவிவரும் எனது மகன் வி.வி. விக்ரம் நன்றிக்குரியவர். இந்த நூலுக்குப் பின்னர் திசையெங்கும் ஒரிசா பாலு பற்றிய நூல்கள் பல வெளிவர வேண்டும். அதன் மூலம் தமிழர் வரலாறும், கலச்சாரமும் இவ்வுலகிற்கு தெளிவுற வேண்டும் என்று ஆசிக்கின்றேன். வரலாறு தெரிந்து தெளிவுறும் தலைமுறை வளமுடன் வாழும். நீங்கள் வளமுடன் வாழ, இந்நூலும் சிறுதுளியேனும் உதவும் என்று நம்புகிறேன்.

    பாலுவின் கனவுகள் மெய்ப்பட இந்நூல்

    (அணிந்துரை)

    ராஜிபாலு

    (இராஜேஸ்வரி)

    எனது துணைவர் ஒரிசா பாலு அவர்கள் குறித்து செவ்வியல் அறிஞர் ஒரிசா பாலு என்ற தலைப்பிலான பல்வேறு தகவல்கள் அடங்கிய ஆவணக் களஞ்சியமான நூலை திரு. முள்ளஞ்சேரி மு. வேலையன் அவர்கள் எழுதியுள்ளார். பாலுவுடனான முதல் சந்திப்பு, மறைவு, நினைவேந்தல் தொடங்கி ஒவ்வொரு தலைப்பிலும் தமிழர்கள் நலன் சார்ந்த பாலு அவர்களின் பணிகளை நயமுற எடுத்து எழுதியுள்ளார்.

    அல்லும் பகலும் அயராது தமிழ்மொழி, தமிழர் தொன்மை, தமிழர் வரலாறு என்பதே அவரது சிந்தனையாக இருந்தது. பாலுவின் குமரிக்கண்ட ஆய்வு, கடல் ஆமைகளின் வழித்தடங்கள் மூலம் தமிழர்களின் உலகளாவிய தொடர்பு, சென்ற நாடுகளிலெல்லாம் செந்தமிழின் தடத்தை அழுத்தமாக ஆழமாக தமிழர்கள் பதிந்த வரலாறு என பாலுவின் ஓய்வில்லா உன்னத உழைப்பை இந்நூலில் ஒப்பற்ற முறையில் விளக்கமாக தந்துள்ளார் திரு. வேலையன்.

    வாழ்நாள் முழுவதும் பல்துறை சார்ந்த தன் அறிவை தனக்குள் மட்டுமே பதுக்கி வைக்காமல் தன்னைச் சந்திக்க வரும் அனைவரிடமும் வாய் ஓயாது உரைப்பதில் மகிழ்பவர் பாலு. எப்போதும் தமிழர் உயர்வையே தன் சிந்தனைப் பெட்டகத்தில் நிரப்பி இருந்தவர். தான் தன் குடும்பம் என்ற வட்டத்தில் தன்னை குறுக்கிக் கொள்ளாமல் உலகத் தமிழர்களின் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். அனைத்துத் தரப்பு மக்களாலும் ஆரத்தழுவிக்கொள்ளப்பட்ட அற்புத சிந்தனையாளர். எவ்விதப் பாகுபாடுமின்றி உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட்டவர். எளிமையானவர். அன்பானவர். குழந்தைகள்பால் பேரன்பு கொண்டவர். அவர்களைத் திறன்மிக்கவர்களாய் வளர்த்தெடுக்க ஊக்கம் தந்தவர். விரல்நுனியில் தமிழர் வரலாற்றை நிரல்பட மொழிந்தவர். அத்தகைய அறிவார்ந்தவரை என் துணைவராகப் பெற்றது என் பேறு அவரது பன்முகத் திறன், ஆய்வு நுணுக்கம், பண்பு நலன், பயணக் கருத்துகள் என அனைத்தையும் இந்நூலின் பக்கங்களிலெல்லாம் பயனுற்ற நூலாசிரியர் எழுதியுள்ளார். பாலு அவர்களின் அயராத உழைப்பிற்கு சான்றாய்த் திகழ்கிறது இந்நூல்.

    இதனை தக்க சமயத்தில் வெளிக்கொணரும் திரு. மு. வேலையன்

    அவர்களை மனதாரப் பாராட்டுகிறேன். பாலுவின் கனவுகள் மெய்ப்பட இந்நூல் துணைநிற்கும் என்பதில் ஐயமில்லை. உலகத் தமிழர்கள் ஒவ்வொருவரின் கைகளிலும் இந்நூல் அணிசெய்யும் என்பதில் நம்பிக்கையுண்டு.

    வாழ்த்துகள்...

    இங்ஙனம்

    தமிழன்புடன்

    (இராஜேஸ்வரி)

    ராஜிபாலு.

    ஆய்வாளனை நோக்கி ஓர் ஆய்வு

    கவிஞர். குமரித்தோழன்

    ஹைதராபாத் சலார் ஜங் அருங்காட்சியகம் மனதை ஒருங்கிணைத்த ஒற்றை சேகரிப்பாளனால்

    Enjoying the preview?
    Page 1 of 1