Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Paathai Thantha Payanigal
Paathai Thantha Payanigal
Paathai Thantha Payanigal
Ebook259 pages2 hours

Paathai Thantha Payanigal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணம் என்பது எத்தனை ஆனந்தமானது என்பதை அடைபட்டவர்களைக் கேட்டால் மகிழ்வுடன் பகிர்வார்கள். ஏதேனும் பணி நிமித்தம் அல்லது நிர்ப்பந்தம் காரணமாகப் பயனிப்பவர்களைத் தவிர ஏனைய மன களிப்புக்காக பயணிப்பவர்கள் எல்லோருமே பயணத்தின் பேரின்பத்தை விரும்புவார்கள். ஆனால் ஆரம்பக் கால பயணம் என்பது துயர் மிகுந்தது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயற்கையை எதிர்த்துப் போராடியபடிதான் பயணிக்க வேண்டியிருந்தது பயணிகள் இல்லையேல் இன்றைக்கு இந்த உலகம் இத்தனை வசதிகளை, இயற்கையின் கொடைகளை பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

பயணிகள்தான் புதிய புதிய தாவரங்களை, உணவு வகைகளை, மருத்துவப் பொருட்களை அறிவியல் கருவிகளை தங்களை அறியாமல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்கள். உலகின் பல பாகங்களை பிற தேசத்து மக்களுக்கு அறிமுகம் செய்தவர்கள் அவர்களிட்ட பாதையில்தான் உலகம் எளிதாக நடக்கிறது எனவே அந்தப் பயணிகள் பற்றிய செய்திகளின் நூல் வடிவம்தான் இந்த பாதை தந்த பயணிகள்.

Languageதமிழ்
Release dateNov 12, 2022
ISBN6580159009226
Paathai Thantha Payanigal

Read more from Neyveli Bharathikumar

Related to Paathai Thantha Payanigal

Related ebooks

Reviews for Paathai Thantha Payanigal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Paathai Thantha Payanigal - Neyveli Bharathikumar

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    பாதை தந்த பயணிகள்

    Paathai Thantha Payanigal

    Author:

    நெய்வேலி பாரதிக்குமார்

    Neyveli Bharathikumar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/neyveli-bharathikumar

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    1. விழித்திருக்கும் சாலை...

    2. மெய்கள் பாதி பொய்கள் பாதி கலந்து செய்த கலவை ஹீரோடோட்டஸ்

    3. கற்றலின் காதலன் எரட்டோஸ்தனிஸ்

    4. அமெரிக்காவை கண்டறிந்த முதல் பயணி லீஃப் எரிக்சன்

    5. கதைகளின் அரசன் மார்கோபோலோ

    6. கனவின் சிறகில் பயணித்த இபின் பதூதா

    7. அறங்களை மீறிய கொலம்பஸின் கொலைக் கரங்கள்

    8. வன்முறை வாசலைத் திறந்து வைத்த வாஸ்கோடகாமா

    9. பிரேசிலின் பிதாமகன் பெட்ரோ ஆல்வெராஸ் கேப்ரால்

    10. உலகை முதலில் வலம் வந்த மாற்றுத் திறனாளி மெகல்லன்

    11. அதிசய நதியின் ஆபத்துக்களை வென்ற ஒரேல்லன்னா

    12. புகழ்ச்சிக்கு இகழ்ச்சிக்கும் இடையே பயணித்த சர் வால்ட்டர் ராலே

    13 மனித குல நண்பன் மீகாமன் ஜேம்ஸ் குக்

    14. இரும்பு மலர் ஜேன் பேரட்

    15. அறிவியல் பயணி அலெக்சாண்டர் வான் ஹம்போல்ட்

    16. பயணிகளில் அதிசயப் பெயர் ராபர்ட் பிரவுன்

    17. ரோஜா நகரின் ராஜா ஜோஹான் லுட்விக் புர்ஹார்ட்

    18. சமத்துவப் பயணிகள் லூயிஸ் மற்றும் கிளார்க்

    19. தொலைந்த நகரை கொணர்ந்த பிங்காம்

    20. நெஞ்சுரம் மிக்க நெல்லி பிளை

    21. அகவிழியால் உலகை தரிசித்த ஜேம்ஸ் ஹால்மன்

    22. அடிமைகளின் காவலன் டேவிட் லிவிங்ஸ்டன்

    23. உலகை குலுக்கிய பயணங்கள்...

    24. கால்களே துணை கண்களே வழி...

    25. பனியில் வாழ்ந்து... பனியில் உறைந்த பயணி

    26. இலக்கியப் பயணிகள்

    முன்னுரை

    உலகை வகுத்தவர்களின் கதைகள்

    பயணம் என்பது எத்தனை ஆனந்தமானது என்பதை அடைபட்டவர்களைக் கேட்டால் மகிழ்வுடன் பகிர்வார்கள்... ஏதேனும் பணி நிமித்தம் அல்லது நிர்ப்பந்தம் காரணமாகப் பயனிப்பவர்களைத் தவிர ஏனைய மன களிப்புக்காக பயணிப்பவர்கள் எல்லோருமே பயணத்தின் பேரின்பத்தை விரும்புவார்கள். ஆனால் ஆரம்பக் கால பயணம் என்பது துயர் மிகுந்தது எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் இயற்கையை எதிர்த்துப் போராடியபடிதான் பயணிக்க வேண்டியிருந்தது பயணிகள் இல்லையேல் இன்றைக்கு இந்த உலகம் இத்தனை வசதிகளை, இயற்கையின் கொடைகளை பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

    பயணிகள்தான் புதிய புதிய தாவரங்களை, உணவு வகைகளை, மருத்துவப் பொருட்களை அறிவியல் கருவிகளை தங்களை அறியாமல் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு அறிமுகம் செய்தவர்கள். உலகின் பல பாகங்களை பிற தேசத்து மக்களுக்கு அறிமுகம் செய்தவர்கள் அவர்களிட்ட பாதையில்தான் உலகம் எளிதாக நடக்கிறது எனவே அந்தப் பயணிகள் பற்றி செய்திகளைத் திரட்டி தொடர் கட்டுரைகளை தினத்தந்தி நாளிதழில் சனிக்கிழமை தோறும் முத்துச்சரம் பகுதியில் 27 வாரங்கள் எழுதி வந்தேன் பரவலானப் பாராட்டைப் பெற்ற இத்தொடரின் நூல் வடிவம்தான் இந்த பாதை தந்த பயணிகள் புத்தகம்

    தொடர் வெளிவர பெரிதும் காரணமாக் இருந்த தினத்தந்தி நிறுவன ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ஆரிஃப் அவர்களுக்கும் அவரை அறிமுகம் செய்த நெய்வேலி செல்வன் அவர்களுக்கும் தினத்தந்தி நிர்வாகத்திற்கும் இந்த நூலை வெளியிடும் புஷ்தகா நிறுவனம் திரு ராஜேஷ், மற்றும் சனா, சசிகலா ஆகியோருக்கும் அவர்களை அறிமுகம் செய்த கவிஞர் சுமதி சங்கர் ஆகியோருக்கும் புத்தகத்தை வடிவமைப்பு செய்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    என் துணைவியார் ஆதிலட்சுமி, பிள்ளைகள் பிருத்வி மதுமிதா மாப்பிள்ளை அஸ்வின் பிரகாஷ் ஆகியோருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    நான் பணியாற்றும் என்.எல்.சி நிறுவனம், மற்றும் எனக்கு தமிழூட்டிய தமிழாசிரியர்களுக்கும் என் சுவாசமாக விளங்கும் தமிழுக்கும் என் வணக்கங்கள்

    வாசிக்கும் உங்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி

    E9, பெருமாள் கோயில் தெரு,

    வட்டம் -27

    நெய்வேலி – 607803

    9442470573

    8825753498

    sbharathikumar@gmail.com

    www.bharathikumar.blogspot.com

    மிக்க அன்புடன்

    நெய்வேலி பாரதிக்குமார்

    அக்டோபர் 19, 2022

    நூல் சமர்ப்பணம்

    தினத்தந்தி நாளிதழின் திரு ஆரிஃப் அவர்களுக்கு.

    1. விழித்திருக்கும் சாலை...

    நிலவும் இரவும் மட்டும் துணையிருக்க, தனித்து நீளும் ஆளரவமற்ற சாலையில் நீங்கள் மட்டும் ஏகாந்தமாய் நடந்து செல்லும் அனுபவம் வாய்க்கப்பெற்றால் உங்களை ஆட்கொள்ளும் உணர்வு என்னவாக இருக்கும்? இனம் புரியாத அச்சமும், உள்ளுக்குள் அடக்க முடியாத உதறலும்தானே உங்களை ஆக்கிரமிக்கும்...? உண்மையில் உங்கள் காலடியில் கிடக்கும் எந்த ஒரு சாலையையும் எத்தனையோ மனிதர்கள் இரவும், பகலும் உழைத்துப் போட்டிருப்பார்கள். அவர்களுக்கும் முன் அது ஒற்றையடி பாதையாக மாறுவதற்கு கரடு முரடான கற்களையும், முட்களையும் களைந்து எத்தனையோ பேர் நடந்து, நடந்து உதிரத்தை தந்திருப்பார்கள்.

    சாலைகள் என்பவை பாதங்களின் கொடை...

    பலரது வாழ்வு திறந்தவெளி சிறைச்சாலை போலத்தான்... அவர்களது மொத்தவாழ்வில் அவர்கள் சந்திக்கும் மனிதர்களும், நிலமும் இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகையின், மொத்த நிலபரப்பில் புள்ளிக்குப் பிறகு வைக்கப்பட்ட கணக்கற்ற பூஜ்யங்களின் சதவிகிதம்தான்...

    தனிமையில்தான் எல்லா மகிழ்ச்சியும், எல்லா ஞானமும் கிடைக்கப் பெறும் என்று பெரும்பாலான மனிதர்கள் தனிமையைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். உண்மையில் தனிமை என்பது எப்பொழுதும் மனிதனுக்கு வாய்க்கவே வாய்ப்பில்லை. ஏதோ ஒரு பறவையின் கூக்குரல்... ஒரு ‘சில்’ வண்டின் மெல்லிய இசை... பெயர் சூட்டப்படாத ஏதோ ஒரு நறுமணம்... இப்படி ஏதோ ஒன்று உங்களைச் சுற்றியபடிதான் இருக்கும். இயற்கையிடமிருந்து ஒருபோதும் நம்மால் தப்பவே முடியாது.

    இன்னொரு பக்கம் மனிதக் கூட்டத்தைத் தேடி ஆதி மனிதன் துவங்கி இன்று வரை தணியாத வேட்கையுடன் அலைந்து திரிபவர்களும் இருந்து கொண்டே இருக்கிறார்கள். பயணங்களின் வழியே ஒரு புதிய இடத்தை, ஒரு புதிய மனிதக் கூட்டத்தை தேடும் ஆவல் இன்றைக்கு வேற்றுக் கிரகவாசிகளைத் தேடுவது வரை நீண்டு கொண்டேதான் இருக்கிறது.

    பயணிகள் இல்லையேல் நம் கண் முன் விரிந்து கிடக்கும் இந்தப் பரந்த உலகம் சாத்தியப்பட்டிருக்காது. பயணிகள் இல்லையேல் நாம் இன்று பயன்படுத்திக் கொண்டிருக்கும் பெரும்பான்மையான பொருட்களை, வசதிகளை அறியாமலே போயிருப்போம்.

    நீங்கள் கடந்து செல்லும் ஒவ்வொரு சாலையும் யாரோ ஒரு பயண வேட்கைக்காரனின் பாதங்களில் இருந்துதான் பிறந்திருக்கும். சாலைகள் என்பவை உறங்கிக் கொண்டிருப்பவை அல்ல. உண்மையில் அவை விழித்துக் கொண்டுதான் இருக்கின்றன. உற்றுக் கவனித்தால் சாலைகளின் மூச்சொலியில் ஏதோ ஒரு பயணியின் குரல் கேட்கும். அவர்களது பயணங்களில் பல சமயம் நிலவும் சூரியனும் கூடத் துணையாக இருந்திருக்காது. சுட்டெரிக்கும் வெயிலையும், இருள்வெளி அச்சங்களையும் மென்று விழுங்கியபடி அவர்கள் சென்ற பாதைகள்தான் இன்று சாலைகளாகி இருக்கின்றன.

    சாலைகளைத் தந்த பாதங்களைத் தொடர்கிறது இந்தத் தொடர்:

    கால வரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ள இந்தப் பயணிகளின் அனுபவங்கள் விசித்திரங்களும், விபரீதங்களும் நிறைந்தவை. உலகம் முழுக்க ஒவ்வொரு திசையையும் அவற்றின் எல்லை வரை தேடி அடைந்த பயணிகளின் பட்டியல் மிக நீளமானது. அத்தனை பேரையும் பற்றிப் பேசி முடிக்க இந்த யுகம் போதாது... அந்தப் பட்டியலில் இதுவரை அதிகம் அறியாத பயணிகளை அறிமுகப்படுத்த இந்தக் கட்டுரைத் தொடர் முயலும். அறிந்த சிலரின் அறியாத பக்கங்களைப் புரட்டவும் முயலும்.

    எனவே இந்த நூலில் அதிகம் பேசப்பட்ட சில பயணிகளை விட்டு விட்டு, புதிய சில பயணிகளைப் பற்றி உங்களோடு சேர்ந்து கண்டடைய முயற்சிக்கிறேன்... பிரமிப்பூட்டும் அவர்களது பயணங்களையும், அவர்கள் எதிர்கொண்ட சவால்களையும் பற்றிப் பேச விழைகிறேன்...

    பொதுவாக, உலகப் பயணங்களை ஒரு சில வகைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆரம்பகாலப் பயணங்கள் நாடு பிடிக்கும் ஆவலில் துவங்கியவை... அரசுகளின் பொருளாதார மற்றும் ஆள் பலத்தின் ஆதரவில் நடந்ததால் அரசர்களின் நோக்கம் போல் திட்டமிடப்பட்டன. அடுத்து, வர்த்தக காரணங்களுக்கு எனப் பயணித்தவர்கள் சிலர். தங்கள் தேசத்தில் இல்லாத ஆனால் தேவைப்படும் பொருட்களுக்காக பயணித்தவர்கள் உண்டு. அறிவியல், சுற்றுச்சூழல் காரணங்களுக்காகப் பயணித்தவர்கள் சொற்பம்... எந்த நோக்கமும் இல்லாமல் ஊர்சுற்றும் இன்பத்துக்காகப் பயணித்தவர்கள் பலர். இன்றும் கூட இலக்கற்ற பயணங்களே அதிகம். எப்படி இருந்தாலும் பயணங்களே மனித வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன.

    பயணிகளின் வழியே கண்டறியப்பட்ட நாடுகளை புதிய உலகு என அழைப்பார்கள். குறிப்பாக அமெரிக்க கண்டம்... பழைய உலகு என்பது ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களைச் சேர்ந்த நாடுகள். பொதுவாக பயணிகள் கி.மு. நான்காம் நூற்றாண்டிலிருந்து பயணப்பட்டதை வரலாறு குறித்து வைத்திருந்தாலும், கி.பி. 15 ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைத்தான் ‘கண்டுபிடிப்புகளின் காலம்’ என்கிறார்கள். போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் தேசத்திலிருந்துதான் அதிக பயணிகள் உலகை வலம் வந்தார்கள். அதிலும் போர்ச்சுக்கல்லை கடலோடிகளின் தேசம் என்றே கூறலாம்.

    அதிசயமான தாவரங்கள், விலங்குகள், உணவுப் பொருட்கள், உடைகள், ஆபரணங்கள், மருத்துவ முறைகள், அடிமைகள் என்ற பெயரில் மனிதக் குழுக்கள், கூடவே தொற்று நோய்கள் என எல்லாவற்றையும் பழைய உலகிலிருந்து புதிய உலகிற்கும் இங்கிருந்து அங்குமாக கடத்தியதின் காரணமாக மனித நாகரீகம் மெல்ல மெல்ல ஒரு பொதுமைத் தளத்திற்கு நகர்ந்தது. எனவே பயணிகள்தான் முதல் சமூக உலகமயமாக்கலின் வேர்கள். அவர்கள் வாழ்ந்த கால வரிசைப்படி அவர்களது பயண வரலாறு, சுவாரசியமான பல தகவல்கள், அறிந்திராத விசித்திரச் செய்திகள் ஆகியவற்றை இந்த நூல் உங்களுக்கு அளிக்கும்

    பயணக்குறிப்புகள்

    உள்ளூரில் இருக்கும் ஒரு புதிய பகுதிக்கு செல்வதற்கு கூட இன்று இணைய வரைபட வழிகாட்டி கருவியை பயன்படுத்துகிறோம். கையில் வரைபடங்களே இல்லாமல், தொலைதொடர்புக் கருவிகள் இல்லாமல், திசைகாட்டும் கருவிகள் இல்லாமல்தானே அன்றைய பயணிகள் பயணித்திருப்பார்கள். முதல் உலக வரைபடத்தை யார் வரைந்திருப்பார்கள்.? இமாலய முயற்சி இல்லையா அது? வரலாற்றில் உத்தேசமான உலக வரைபடத்தை உருவாக்க முயன்றவர் இன்றைய துருக்கியில் கி.மு. 61௦-ல் பிறந்த அனாக்சிமண்டேர் என்பவர்தான். அப்பொழுது பல தேசங்கள் உலகின் பார்வைக்கு வரவில்லை. மேலும் அவர் ஒரு பயணியும் அல்ல. புவியியல், தத்துவ அறிஞர். எனவே தனது அறிதலுக்கு உட்பட்ட பகுதிகளை தோராயமாக இணைக்க முயன்றார் என்று சொல்லலாம். அவருக்குப்பின் ஹெகடேஷியஸ் என்பவர் (கி.மு.55௦) கடலோர எல்லைகளை வரையறுத்து ஒரு வரைபடத்தை உருவாக்கினார். இதுவுமே கார்ட்டோகிராபி என்று சொல்லப்படும் வரைபடவியலின் விதிகளுக்கு உட்பட்டது அல்ல. வரைபட வரலாறு சுவாரசியமானதுதான் தொடர்ந்து அதையும் பாப்போம்.

    பயண இலக்கியம்

    பயணம் செல்லத் தேவையான குறிப்புகள், புவியியல் தொடர்பான புத்தகங்கள் துவக்கக் காலத்தில் எழுதப் பட்டாலும் பயண இலக்கியம் என்பது சம்மந்தப்பட்ட பயணியின் சுயானுபவங்களை சுவைபட, சமநிலையில், பொய்கள் கலப்பின்றி வரலாற்றுப் பார்வையில் எழுதுவதுதான். அவ்வகையில் கிரேக்கப் பயணி, புவியியல் அறிஞர் பாசனியஸ் எழுதிய பயண அனுபவ வரலாறுதான் முதல் பயண இலக்கிய நூல் எனலாம். கி.மு. 11௦-ல் பிறந்த அவர் எழுதிய ‘டிஸ்கிரிப்ஷன் ஆஃப் கிரீஸ்’ என்னும் நூல் பத்து தொகுதிகள் கொண்டது. கிரேக்கத்தின் பெரும் பகுதிகளில் தான் பயணித்த அனுபவங்களை நுட்பமாக பதிவு செய்துள்ளார்...

    2. மெய்கள் பாதி பொய்கள் பாதி கலந்து செய்த கலவை ஹீரோடோட்டஸ்

    வரலாறு என்ற ஒன்றை பதிவு செய்யாத எந்த இனமும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள இயலாது. வரலாற்றின் வரலாற்றை அறிவதும் அவசியமானதுதானே... முதல் வரலாற்று நூல் எதுவாக இருக்க முடியும்? ஆங்கிலத்தில் ஏன் ‘ஹிஸ்டரி’ என அழைக்கப்படுகிறது? பெரும்பாலும் ஆண்களின் சரித்திரத்தையே, வீர தீர பராக்கிரமத்தையே சொல்வதால் ‘ஹிஸ்’ ‘ஸ்டோரிஸ்’ என்ற இரண்டு சொல்லின் இணைப்பே ‘ஹிஸ்டரி’ என்றானது என்ற சுவாரசியமான கதை ஒன்றுண்டு. ஆனால் அது உண்மை அல்ல... ‘ஹிஸ்டோரிஸ்’ என்னும் வரலாற்று பதிவு நூலில் இருந்து பிறந்ததுதான் அந்த சொல். கிரேக்க மொழியில் விசாரணை அல்லது ஆய்வு என்று பொருள்படும் அந்த சொல்லை தன் நூலுக்கு தலைப்பாக வைத்தவர் ஹிரோடட்டஸ். அவரே ‘வரலாற்றின் தந்தை’ (Father of History) என அழைக்கப்படுகிறார். அவர்தான் முதன்முதலாக கிரேக்க மக்கள் வரலாற்றை ஒழுங்கமைவுடன் கால வரிசைப்படி பதிவு செய்தவர்.

    ஹிஸ்டோரிஸ் நூலில் (பின்னாளில் 9 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு) பெர்சிய அரசின் நான்கு பேரரசர்களின் காலத்தை வரலாற்றுப் பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவை ஏன் .ஒன்பது தொகுதிகளாக பிரிக்கப்பட்டது என்றால் கிரேக்கத் தொன்மகதைகள் படி சோயுஸ் கடவுளுக்கும் அவரது மனைவி டைட்டனுக்கும் பிறந்தவர்கள் ஒன்பது மகள்கள். அவர்கள் ஓவியம், இசை, கவிதை என ஒவ்வொரு கலைக்கும் உரியவர்கள். எனவே அதனை குறிக்கும் வகையில் ஒன்பது தொகுதிகளாக பிரிக்கப்பட்டன.

    1. சைரஸ் கி.மு. 557 முதல் கி.மு.530 வரை

    2. கேம்பைசஸ் கி.மு.530 முதல் கி.மு.522 வரை

    3. டாரியஸ் கி.மு.521 முதல் கி.மு.486 வரை

    4. செல்செஸ் கி.மு.486 முதல் கி.மு. 479 வரை

    ஆகிய பெர்சிய மன்னர்களின் ஆட்சிக்காலத்தை ஒட்டி கிரேக்க வரலாற்றையும், அதே சமயம் ஹிரோடோடஸ். பயணித்த எகிப்து, சிரியா, புராதான நகரமான பாபிலோன், பாலஸ்தீனம் ஆகியவற்றின் நில மற்றும் சமூக வரலாறு பற்றி அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

    அறிதலில் துவங்கிய பயணம்

    கி.மு.484 ஆம் ஆண்டில் கேரியாவுக்கு அருகில் ஹாலிகார்னஸ் என்னும் இடத்தில்(இன்றைய போட்ரம், துருக்கி) செல்வந்தர்களில் ஒருவரான லிக்சஸ்-இன் மகனாக பிறந்தவர் ஹிரோடோடஸ். தாயார் பெயர் திரையோடஸ். வாய் வழியே பரப்பப்பட்ட செய்திகளை வெறும் நம்பிக்கையின் பேரில் பின் தொடராமல் அதற்கான ஆதாரங்கள், இடங்கள் ஆகியவற்றைத் தேடிப் பயணித்தவர் ஹிரோடோடஸ்...

    அவரது நூலின் வழியே பெர்சிய மன்னர்களின் ஆட்சி காலம், பெர்சியாவிற்கும் கிரேக்கர்களுக்கும் இடையே நடந்த போர்கள், மத்திய ஆசியாவில் வாழ்ந்த இனமான சிதெயன்கள் பற்றியக் குறிப்புகள், நைல்நதி பற்றிய செய்திகள், புதிய விலங்கினங்கள் ஆகியவற்றை பற்றி அறிய முடிந்தது.

    பாபிலோனில் இருந்த தொங்கும் தோட்டம் பற்றி அவர்தான் மிக விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். பின்னாளில் அது அழிவுற்றதால் அவரது குறிப்புகள் மூலம்தான் அதனை உலக அதிசயங்களில் ஒன்றாக ஆண்டிபாட்டர் பட்டியலிட்டதன் காரணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

    இன்று பல நாடுகளில் பிரிந்து அடையாளம் இன்றி வாழும் சிதெயன்கள் என்னும் இனத்தினர் ஒரு நாடோடி கூட்டம் போல பிரிந்து மத்திய ஆசியாவில் வாழ்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்குள் ஒரு அரசனை தேர்வு செய்து வாழவேண்டிய அவசியமின்றி குழுக்களாக வாழ்வின் தேவைகளுக்காக இடம் பெயர்ந்து வசித்து வந்தனர். பெர்சியர்கள் அவர்களை துரத்த முற்பட்ட போது யாரும் எதிர்பாராத வகையில் அவர்கள் வீரமாக போரிட்டு தங்களது இடத்தை தங்கள் வசம் தக்க வைத்துக் கொண்டனர். இந்த நிகழ்வுதான் முதலில் ஹிரோடோடஸ்.-ஐ அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் பயணப்பட வைத்தது. பின்னர் பயணம் தந்த பேரானந்தம் தொடர்ந்து அவரை கருங்கடல் கரையோர பகுதிகளுக்கும், சிரியாவின் கடல் பகுதிகளுக்கும் செல்ல வைத்தது.

    எகிப்தின் முற்கால வரலாற்றை ஹிரோடோடஸ்.தான் விரிவாக பதிவு செய்தார். பிரமிடுகள் பற்றியும் அங்குள்ள

    Enjoying the preview?
    Page 1 of 1