Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Athisayangal! Ulaga Athisayangal!
Athisayangal! Ulaga Athisayangal!
Athisayangal! Ulaga Athisayangal!
Ebook158 pages1 hour

Athisayangal! Ulaga Athisayangal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

உலகில் இயற்கையாகவே அமைந்த பல பகுதிகள் வியப்பிற்குரியதாய் இருக்கின்றன. மனிதன் கலைத் திறனுடன் அமைத்த பல சின்னங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து வியப்பிற்குரியதாக இருந்து வருகின்றன. நீருக்கடியிலும் பல வியப்பிற்குரிய அமைப்புகள் இருக்கின்றன. மனிதன் தனது தொழிற் திறனுடன் இயற்கையை மாற்றி அமைத்த சில கட்டுமானங்களும் வியப்பிற்குடையதாய் அமைந்திருக்கின்றன. நாம் ஏதாவது ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டு வியப்படைந்தால் அது நமக்கு அதிசயம்தான். இந்த அதிசயங்களெல்லாம் ஏழு என்கிற எண்ணிக்கையில்தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கால மாறுபாட்டில் பண்டைய ஏழு அதிசயங்கள், இடைக்கால ஏழு அதிசயங்கள், புதிய உலக அதிசயங்கள் என மாறுதல்களை அடைந்த போதிலும் ஏழு என்கிற எண்ணிக்கை மட்டும் தொடர்கிறது. இவைகளைப் போன்றே இயற்கை உலக அதிசயங்கள், நீருக்கடியிலான உலக அதிசயங்கள், தொழிற்திறன் உலக அதிசயங்கள் என்று அனைத்து அதிசயங்களும் ஏழு என்கிற எண்ணிக்கையிலேயே பட்டியலிடப்படுகின்றன.

தமிழில் ஏழுக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. ஏழு அகத்திணைகள், ஏழு இசைகள், ஏழு உலோகங்கள், ஏழு அளவைகள், ஏழு கடல்கள், ஏழு வள்ளல்கள் பெண்ணின் ஏழு பருவங்கள், ஏழு பிறப்புகள்.... என்று ஏழுக்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ தகவல்களோடு ஏழு அதிசயங்களும் சேர்ந்து விடுகிறது. இந்நூலில் ஏழு அதிசயங்களுடன் உலகில் பார்க்க வேண்டிய பிற அதிசயங்களையும் சேர்த்துத் தங்கள் பார்வைக்கு நூலாக்கி வழங்கியிருக்கிறேன்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580150507846
Athisayangal! Ulaga Athisayangal!

Read more from Theni M. Subramani

Related to Athisayangal! Ulaga Athisayangal!

Related ebooks

Related categories

Reviews for Athisayangal! Ulaga Athisayangal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Athisayangal! Ulaga Athisayangal! - Theni M. Subramani

    https://www.pustaka.co.in

    அதிசயங்கள்! உலக அதிசயங்கள்!

    Athisayangal! Ulaga Athisayangal!

    Author:

    தேனி. மு. சுப்பிரமணி

    Theni M. Subramani

    For more books

    https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பண்டைய உலக அதிசயங்கள்

    இடைக்கால உலக அதிசயங்கள்

    புதிய உலக அதிசயங்கள்

    உலக அதிசயங்களில் சிறப்பு நிலை

    புதிய ஏழு உலக அதிசயங்கள்

    இரண்டாம் நிலை உலக அதிசயங்கள்

    உலக ஏழு அதிசயங்கள் – கருத்து வேறுபாடுகள்

    ஏழு இயற்கை உலக அதிசயங்கள்

    புதிய ஏழு இயற்கை உலக அதிசயங்கள்

    இரண்டாம் நிலை இயற்கை உலக அதிசயங்கள்

    மூன்றாம் நிலை இயற்கை உலக அதிசயங்கள்

    நீருக்கடியிலான உலக அதிசயங்கள்

    தொழில் கட்டுமான உலக அதிசயங்கள்

    பிற உலக அதிசயங்கள்

    Dr

    முனைவர் ந. அருள்

    இயக்குநர்,

    மொழிபெயர்ப்புத்துறை,

    தலைமைச் செயலகம்,

    புனித ஜார்ஜ் கோட்டை,

    சென்னை.

    பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் என்று தொடங்கிய கவிப்பேரரசரின் தொடர் எவர் மனத்தையும் ஈர்ப்பதாகும். பூவுக்குள் ஒளிந்திராமல் புவிமேல் படர்ந்திருக்கும் விந்தைக் கோபுரங்களும் விரிந்து பரந்த மாடங்களும் உலகின் வியக்கத்தக்க எழிலமைப்புக்களாகப் போற்றப்படுகின்றன. பல்வேறு கலைக்களஞ்சியங்களிலும், வலைத்தளங்களிலும் இடம் பெற்றுள்ள செய்திகளையெல்லாம் இனித்த தமிழில் எழுதிக் காட்டும் புலமையும் தகுதியும் நண்பர் தேனி. மு. சுப்பிரமணிக்குக் கைவந்த கலையாகும்.

    செயற்கரிய செய்வர் பெரியர் என்பது திருக்குறள். மாந்தரினம், தான் பழகியறிந்த கட்டிடக் கலையோடு கற்பனை வளத்தைச் சேர்த்து, கவினார்ந்த வடிவங்களையும், கூடங்களையும் வெவ்வேறு நாடுகளில் உருவாக்கி உள்ளது. இன்றும் கூடத் தஞ்சைப் பெரிய கோயில் நம் சிந்தையைக் கவரும் சீரிய படைப்பாக நிற்கிறது. கல்லெல்லாம் கதை சொல்லும் காட்சிகளை இன்றும் நம் தமிழகத்தின் பெருமிதமாகப் பாராட்டுகிறோம். நான் என் துணைவியாரோடு பிரான்சு, செருமனி, இலண்டன், கிரேக்கம் முதலிய ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று வந்து, இந்தியத் தலைநகரத்திலும் சில அதிசயங்களை நேரில் கண்டு நெஞ்சைப் பறிகொடுத்தோம்.

    காண்பதையும், கருதுவதையும் கற்பனைத் திரையில் ஆய்ந்து, எழுத்து வடிவத்தில் தேன் போலப் புனையும் திறம் தேனியாருக்கு அழகுற அமைந்திருக்கிறது. முதல்நிலை, இடைநிலை, புதுநிலை என்ற வகையில் முப்பதுக்கு மேற்பட்ட அதிசய அமைப்புக்களை ஓவியம் போல நம் கண்முன் நிறுத்துவதைப் பாராட்டுகிறேன். நாளை உருவாகும் அதிசயப் பட்டியலில் வேலூர்ப் பொற்கோயில், நாசாக் கட்டிடம், திசினி உலகம், தென்னாப்பிரிக்காவில் கட்டப் பெற்றிருக்கும் நிலைவெள்ளித் தகட்டால் வேயப்பெற்ற கண்ணன் கோயில், துபாயில் உருவாகிய அங்காடி அடுக்கு முதலியன இடம் பெறலாம்.

    அறிவியற் புதுமைகளையும் ஆய்வுக்குரிய பொருண்மைகளையும் கொண்ட நூல்களைத்தான் தமிழுலகம் ஆர்வத்தோடு எதிர் நோக்குகிறது. நமக்குத் தெரியாதவைகளைத் தெரியவைப்பதுதான் நூலாசிரியர்களின் கடமையாகும். ஆசிரியர் என்ற சொல்லையே நூல் எழுதுவோருக்கும் அளிப்பதன் நோக்கம் இதுவேயாகும்.

    கணிப்பொறி வல்லமையோடு கருத்துவளம் செறிந்த தகவல்களைத் தொகுத்து எழுதித் தமிழ் வளம் பெருக்கும் நண்பர் தேனி மு. சுப்பிரமணி அவர்கள் எழுத்துப்பணியில் தொடர்ந்து புகழ்பெற்றுப் பொலிவாராக!

    - முனைவர். ந. அருள்.

    என்னுரை

    உலகில் இயற்கையாகவே அமைந்த பல பகுதிகள் வியப்பிற்குரியதாய் இருக்கின்றன. மனிதன் கலைத் திறனுடன் அமைத்த பல சின்னங்கள் பல நூற்றாண்டுகளைக் கடந்தும், தொடர்ந்து வியப்பிற்குரியதாக இருந்து வருகின்றன. நீருக்கடியிலும் பல வியப்பிற்குரிய அமைப்புகள் இருக்கின்றன. மனிதன் தனது தொழிற் திறனுடன் இயற்கையை மாற்றி அமைத்த சில கட்டுமானங்களும் வியப்பிற்குடையதாய் அமைந்திருக்கின்றன. நாம் ஏதாவது ஒன்றைப் பார்த்து அல்லது கேட்டு வியப்படைந்தால் அது நமக்கு அதிசயம்தான். இந்த அதிசயங்களெல்லாம் ஏழு என்கிற எண்ணிக்கையில்தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. கால மாறுபாட்டில் பண்டைய ஏழு அதிசயங்கள், இடைக்கால ஏழு அதிசயங்கள், புதிய உலக அதிசயங்கள் என மாறுதல்களை அடைந்த போதிலும் ஏழு என்கிற எண்ணிக்கை மட்டும் தொடர்கிறது. இவைகளைப் போன்றே இயற்கை உலக அதிசயங்கள், நீருக்கடியிலான உலக அதிசயங்கள், தொழிற்திறன் உலக அதிசயங்கள் என்று அனைத்து அதிசயங்களும் ஏழு என்கிற எண்ணிக்கையிலேயே பட்டியலிடப்படுகின்றன.

    தமிழில் ஏழுக்கு எப்போதும் ஒரு மதிப்பு உண்டு. ஏழு அகத்திணைகள், ஏழு இசைகள், ஏழு உலோகங்கள், ஏழு அளவைகள், ஏழு கடல்கள், ஏழு வள்ளல்கள் பெண்ணின் ஏழு பருவங்கள், ஏழு பிறப்புகள்.... என்று ஏழுக்குப் பெருமை சேர்க்கும் எத்தனையோ தகவல்களோடு ஏழு அதிசயங்களும் சேர்ந்து விடுகிறது. இந்நூலில் ஏழு அதிசயங்களுடன் உலகில் பார்க்க வேண்டிய பிற அதிசயங்களையும் சேர்த்துத் தங்கள் பார்வைக்கு நூலாக்கி வழங்கியிருக்கிறேன்.

    இந்நூலுக்கு அணிந்துரை எழுதித் தந்து, என்னை ஊக்கப்படுத்திய தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குனர், சகோதரர் முனைவர் ந. அருள் அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    என்னைத் தொடர்ந்து எழுத ஊக்கப்படுத்தி வரும் தூத்துக்குடி எஸ். ஏ. சுகுமாரன், தேனியிலிருக்கும் நண்பர்கள் வி.பி. மணிகண்டன், எஸ். செந்தில்குமார், கவிஞர் வி. எஸ். வெற்றிவேல், எஸ். மாரியப்பன், ஆர். எம். தாமோதரன் மற்றும் மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன் உள்ளிட்ட நண்பர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூல் வெளிவருவதற்கும், என் அனைத்து வளர்ச்சியிலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ். முத்துசாமி பிள்ளை – கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவி உ. தாமரைச்செல்விக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை மின்னூலாகப் பதிப்பித்திருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    - தேனி. மு. சுப்பிரமணி

    19/1, சுகதேவ் தெரு,

    பழனிசெட்டிபட்டி,

    தேனி – 625 531

    அலைபேசி: 9940785925, 9042247133.

    www.muthukamalam.com

    www.thenitamilsangam.org

    உலகில் அரேபிய நாகரீகங்கள் மற்றும் அவர்களின் பெருமைகள் குறித்து உலகம் அறிந்திருந்த போதிலும், அலெக்சாண்டரின் பெர்சியப் படையெடுப்பிற்குப் பின்னர்தான் அரேபியர்களின் பல்வேறு திறன்கள் வெளியுலகிற்குத் தெரிய வந்தன. கி.மு. 323 ஆம் ஆண்டு, அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்பு கிரேக்கத்தில் தோன்றிய நாகரீகம் ஹெல்லினிஸ்டிக் நாகரீகம் (Hellinistic Civilisation) என்று அழைக்கப்படுகிறது. கி.மு. 323 முதல் கி.மு. 146 வரையிலான இந்நாகரீகத்தில் நாடோடிகளாக இருந்த மக்களுக்கு அலெக்சாண்டரின் பெர்சியப் படைப்பின் மூலம் அரேபிய நாகரீகம் தெரிய வந்தது. இதனை நேரில் சென்று பார்க்க ஆவல் கொண்ட அவர்கள், மத்திய தரைக்கடலைச் சுற்றிலும் அமைந்திருந்த நகரங்களுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டனர்.

    அவர்கள் தங்கள் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினர். அபோது அவர்கள் தாங்கள் கண்டு மகிழ்ந்த இடங்கள் குறித்த குறிப்புகளைத் தங்களிடமிருந்த குறிப்பேடுகளில் குறித்து வைத்துக் கொண்டனர். இவற்றில் சில முக்கியமான இடங்களை பார்க்க வேண்டிய இடங்கள் என்கிற தலைப்பில் பட்டியலிட்டனர். இந்தப் பட்டியல் சுற்றுலாச் சென்ற பயணிகளுக்கிடையில் வேறுபாடுகளுடையதாக இருந்தன. இதுதான் உலக அதிசயங்கள் தோன்றுவதற்கான முதன்மைச் சிந்தனையாகும்.

    பண்டைய உலக அதிசயங்கள்

    கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் புகழ்பெற்று விளங்கிய ஆண்டிபாட்டர் (Andipater) என்கிற கவிஞருக்கு இந்தப் பட்டியல்களில் சில கிடைத்தன. இந்தப் பட்டியல்களில் கண்ட இடங்களைப் பார்வையிட வேண்டுமென்கிற ஆர்வம் அவருக்கு அதிகமானது. அந்தப் பட்டியலில் கண்ட இடங்களுக்குச் சுற்றுப் பயணம் சென்றார். அவர் பார்வையிட்ட இடங்களில், அவரை மிகவும் கவர்ந்த ஏழு இடங்களை ஏழு அதிசயங்கள் எனும் தலைப்பில் கவிதையாக எழுதி, அதன் கட்டுமானங்கள் குறித்து வியப்புடன் குறிப்பிட்டு வைத்தார். நாளடைவில் அவர் ஏழு அதிசயங்கள் எனக் குறிப்பிட்டதற்கு இடையில் உலகம் என்ற சொல்லும் சேர்ந்து விட்டது. ஏழு உலக அதிசயங்கள் என்றும் ஆகிவிட்டது. இதுதான் உலக அதிசயங்களின் முதல் பட்டியல் என்றும் கருதப்படுகிறது.

    இதற்கு முன்னர் துருக்கியைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் கிரோடோதசு (Herodotus), லிபியாவைச் சேர்ந்த கவிஞர் கல்லிமாக்சசு (Callimachus) என்பவர்கள் இதுபோன்ற அதிசயங்கள் பட்டியலைக் குறித்து வைத்திருந்தனர் என்கிற தகவல்களும் சொல்லப்படுகின்றன. ஆனால் இவற்றிற்கு எந்தவிதமான உறுதியான ஆதாரங்களும் இல்லை. இவர்கள் பட்டியலிட்ட இடங்கள் குறித்த தகவல்களும் இல்லை. எனவே கிரேக்கக் கவிஞர் ஆண்டிபாட்டர் கவிதையில் குறிப்பிட்ட ஏழு அதிசயங்கள், பண்டைய உலக அதிசயங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பண்டைய ஏழு உலக அதிசயங்களின் பட்டியல் காலவரிசையில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

    1. கிசாவின் பெரிய பிரமிடு (கி.மு. 2680)

    2. பாபிலோனின் தொங்கும் தோட்டம் (கி.மு. 600)

    3. ஒலிம்பியாவின் சேயுசு சிலை (கி.மு. 433)

    4. ஆர்ட்டெமிஸ் கோயில் (கி.மு. 350)

    5. மௌசோல்லொசின் கல்லறை

    Enjoying the preview?
    Page 1 of 1