Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Tamil Wikipedia
Tamil Wikipedia
Tamil Wikipedia
Ebook202 pages1 hour

Tamil Wikipedia

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகத்துடன் தொடங்கி அதன் முக்கியமான அம்சங்களை 20 பகுதிகளில் இந்த நூல் விளக்குகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் அமைப்பு, அதன் பயனர்கள், கொள்கைகள், கட்டுரைகளை உருவாக்குதல், தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளிலுள்ள பல்வேறு கூறுகள், பல்வேறு வகையான சிறப்புப்பக்கங்கள் போன்றவை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இந்நூலில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிய விரும்பும் ஒருவருக்குத் தேவையான பல தகவல்கள் உள்ள இப்புத்தக்கத்தை வாசிக்கலாமா...

Languageதமிழ்
Release dateJan 22, 2021
ISBN6580150507995
Tamil Wikipedia

Read more from Theni M. Subramani

Related to Tamil Wikipedia

Related ebooks

Reviews for Tamil Wikipedia

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Tamil Wikipedia - Theni M. Subramani

    https://www.pustaka.co.in

    தமிழ் விக்கிப்பீடியா

    Tamil Wikipedia

    Author:

    தேனி மு. சுப்பிரமணி

    Theni M. Subramani
    For more books

    https://www.pustaka.co.in/home/author/theni-m-subramani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    அணிந்துரை

    கலைக்களஞ்சியம் என்பது உலகிலுள்ள அறிவுத்திரளை ஓரிடத்தில் தொகுத்துத் தரும் ஒரு முயற்சி. ஒரு மொழி பல துறைகளையும் தழுவி வளர்ச்சி பெறுவதற்கு இத்தகைய கலைக்களஞ்சியங்கள் பெரும் பங்களிப்புச் செய்யக் கூடியவை. வளர்ச்சியடைந்த நாடுகளின் மொழிகளில் கலைக்களஞ்சியங்களைப் பல தொகுதிகளாக வெளியிடுவதுடன் அடிக்கடி பழையவற்றை இற்றைப்படுத்தியும் புதியவற்றைச் சேர்த்தும் விரிவாக்கிப் பதிப்பித்து வருகின்றனர். தமிழிலும் சிலர் இவ்வாறான முயற்சிகளை எடுத்தனர் ஆயினும் தொடர்ச்சியாக விரிவாக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியத்தை பதிப்பித்து வெளியிடுவதென்பது தற்போதைய நிலையில் இயலாததொன்றாகவே உள்ளது. இத்தகைய முயற்சிகளுக்குப் பெருமளவு நிதி தேவைப்படுவது, வணிக அடிப்படையில் இவற்றை வெளியிடக்கூடிய சாத்தியம் இல்லாமை போன்றவற்றை இதற்கான காரணமாகக் கூற முடியும்.

    இத்தகைய இடர்ப்பாடுகளைக் கடந்து சிறப்பான இணையக் கலைக்களஞ்சியம் ஒன்றத் தமிழிலும் உருவாக்கக்கூடிய வாய்ப்பை விக்கிப்பீடியாத் திட்டம் வழங்கியுள்ளது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா தொய்வின்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஏறத்தாழ இருபதினாயிரம் கட்டுரைகளைக் கொண்டுள்ள தமிழ் விக்கிப்பீடியா போதிய அளவு வேகமாக வளரவில்லை என்றே சொல்லவேண்டும். எவரும் இணைந்து பணியாற்றக்கூடிய இத்திட்டத்தில் பெருமளவு பங்களிப்பாளர்கள் சேரும்போதே தேவையான வளர்ச்சியைப் பெறமுடியும். ஆனால் ஆறு கோடிக்கு மேற்பட்ட மக்கள்தொகையுடன் உலகின் 18 ஆவது பெரிய மொழியாக இருந்தும், கட்டுரை எண்ணிக்கையில் தமிழ் விக்கிப்பீடியா, உலகின் பிற மொழிகளுடன் ஒப்பிடும்போது 69 ஆவது நிலையிலேயே உள்ளது. பங்களிப்பவர்களின் எண்ணிக்கை போதாமையே இதற்கான காரணம் எனலாம். மக்களிடையே தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் போதிய அறிமுகம் இல்லாதிருப்பதும், அறிந்தவர்கள் மத்தியிலும் இதன் அடிப்படைகள் தொடர்பான புரிதல் இல்லாமையும், இதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பலரும் உணர்ந்து கொள்ளாமையுமே பங்களிப்பவர்கள் குறைவாக இருப்பதற்கான முக்கியக் காரணங்கள்.

    இக்குறைகளைப் போக்கித் தமிழ் மக்களிடையே தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தும் நோக்குடன் தேனி எம். சுப்பிரமணி இந்த நூலை எழுதியுள்ளார். இதழியல், மக்கள்தொடர்புத்துறை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் உயர்ந்த கல்வித்தகைமைகளைக் கொண்டுள்ள சுப்பிரமணி அவர்கள் இந்நூலை எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர். பல தமிழ் வெளியீடுகளில் ஏராளமான கட்டுரைகளையும் பிற ஆக்கங்களையும் எழுதியவர். இணையச் சிற்றிதழ்கள் தொடர்பான நூலொன்றையும் இவர் எழுதியுள்ளார். தவிரவும் கடந்த ஓராண்டுக் காலமாகத் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு நேரடியான பங்களிப்புச் செய்த பட்டறிவும் அவருக்கு உண்டு. தமிழ் விக்கிப்பீடியாவிலும், ஆங்கில விக்கிப்பீடியாவிலும் உள்ள அவற்றின் கொள்கைகள், நடைமுறைகள் என்பன தொடர்பான தகவல்கள் அனைத்தையும் வாசித்து அறிந்துகொண்டு எளிமையான முறையில் எவரும் புரிந்து கொள்ளத்தக்கதாக இந்நூலை அவர் ஆக்கியுள்ளார்.

    தமிழ் விக்கிப்பீடியாவின் அறிமுகத்துடன் தொடங்கி அதன் முக்கியமான அம்சங்களை 20 பகுதிகளில் இந்த நூல் விளக்குகிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் அமைப்பு, அதன் பயனர்கள், கொள்கைகள், கட்டுரைகளை உருவாக்குதல், தமிழ் விக்கிப்பீடியாக் கட்டுரைகளிலுள்ள பல்வேறு கூறுகள், பல்வேறு வகையான சிறப்புப்பக்கங்கள் போன்றவை தொடர்பான தகவல்களை உள்ளடக்கிய இந் நூலில் தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிய விரும்பும் ஒருவருக்குத் தேவையான பல தகவல்களைச் சுப்பிரமணி வழங்கியுள்ளார். முக்கியமாக விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள் என்று சொல்லப்படுகின்ற அம்சங்களையும் அவை தொடர்பான அம்சங்களையும் தனித்தனியாகவும் சுருக்கமாகவும் விளக்கியிருப்பது புதியவர்கள் விக்கிப்பீடியாவின் அடிப்படைகளைப் புரிந்துகொள்ள உதவும் என நம்பலாம். கட்டுரைகளில் காணும் சொற்களுக்கு இணைப்புக்கொடுத்தல், படிமங்களை இணைத்தல், அட்டவளைகளைச் சேர்த்தல் போன்ற, புதிதாகக் கட்டுரை எழுதுபவர்களுக்குத் தேவையான அடிப்படையான விபரங்களும் இந் நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

    தமிழ் விக்கிப்பீடியா பற்றி வெளிவரும் முதல் நூலான இது மக்களிடையே அதன் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இணையத்துக்கு வெளியே தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான கலந்துரையாடல்களை ஏற்படுத்தவும் வழி செய்யும். மக்களுக்குத் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் புதிய பல பயனர்களை அறிமுகப் படுத்துவதிலும் இந்த நூல் பெரும் பங்காற்றும் என எதிர்பார்க்கலாம்.

    11 நவம்பர் 2009.

    இ. மயூரநாதன், B.Sc. (BE); M.Sc. (Architecture); RIBA

    கட்டிடக்கலைஞர்,

    அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்.

    என்னுரை

    மனிதன் வாழ்க்கையில் தேடல்கள் இல்லாமல் எதுவுமில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஒரு தேடல் இருந்து கொண்டிருக்கிறது. சிலர் அறிவைத் தேடிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அன்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் பணத்தைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அறியாமையால் அழிவைத் தேடிப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இப்படி மனிதனின் தேடல்கள் எத்தனையோ இருக்கின்றன. ஒவ்வொரு தேடலுக்கும் அவனுடைய முயற்சி சரியான வழியில் இருந்தால், அது வெற்றியைத் தருகிறது. இல்லையென்றால், தேடல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

    மனிதனின் வாழ்க்கையின் தேடல்கள் இப்படியிருக்க, இன்று இணையத்தில் வார்த்தைகளின் (சொற்களின்) தேடல்கள் தொடங்கியிருக்கின்றன. இணையத்தில் ஏதாவது ஒரு சொல்லைக் கொடுத்து, அந்தச் சொல் எங்கெல்லாம் இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக இணையத்தில் தேடு பொறிகள் (Search Engines) வந்துவிட்டன. இவை இணையத்தில் இடம் பெற்றிருக்கும் அந்தச் சொற்களைத் தேடி, அது இடம் பெற்றிருக்கும் இணைய முகவரியுடன் திரைக்குக் கொண்டு வந்து காண்பிக்கின்றன. இணையத்தில் தேடல்கள் எளிமையாக இருக்கின்றன.

    இணையத்தில் தேடப்பட்ட சொற்கள் இடம் பெற்றிருக்கும் பக்கங்களை எல்லாம் தேடுபொறிகள் தேடிக் கொடுத்தாலும், அந்தச் சொற்கள் குறித்த முழுமையான விளக்கங்கள் தேவையாயிருக்கின்றன. அந்தச் சொற்கள் கலைக்களஞ்சியங்களாக (Encyclopedia) இணையத்தில் தொகுக்கப்பட்டால், பல சொற்கள் குறித்த முழு விளக்கத்தைத் தேடுபவர்கள் அறிந்து கொள்ள முடியும் என்கிற வழியில், இணையத்தில் சில இணையக் கலைக்களஞ்சியங்கள் (Internet Encyclopedia) தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சியில் விக்கிப்பீடியா (Wikipedia) முன்னிலையில் இருக்கிறது.

    267 மொழிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியில் ஒன்று. இது, தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia) எனும் பெயரில் ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் எந்தப் பயனுமின்றி, தன்னார்வத்துடன் பல தமிழ் ஆர்வலர்கள் பங்களித்து வருகின்றனர். தமிழ் விக்கிப்பீடியா குறித்து, மேலும் பலர் அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள் பலர் இணைந்து பயிலரங்குகளும், கருத்தரங்குகளும் நடத்தி வருகின்றனர். இவ்வழியில் தமிழ் விக்கிப்பீடியா குறித்து, தமிழர்கள் பலர் அறிந்து கொண்டு, அதில் பங்களிக்க வேண்டுமென்பதற்காக ஒரு நூலை வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்று நண்பர்கள் சொன்னதன் அடிப்படையில் இந்த நூல் என்னால் எழுதப்பட்டுள்ளது.

    விக்கிப்பீடியாவில் தமிழ் மொழிக்கான விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தையும் மற்றும் சில முக்கியப் பக்கங்களையும் உருவாக்கிய, ஐக்கிய அரபுக் கூட்டமைப்பு நாடான அபுதாபியில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இலங்கைத் தமிழரான இ. மயூரநாதன் அவர்கள் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கியது இந்நூலின் சிறப்பம்சமாகக் கருதுகிறேன். அணிந்துரை வழங்கிய இ. மயூரநாதன அவர்களுக்கு என் முதல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    தமிழ் விக்கிப்பீடியாவில் இந்த நூல் வெளியிட விரும்புகிறேன் என்ற செய்தியை வெளியிட்டவுடன் வாழ்த்துகள் தெரிவித்த தமிழ் விக்கிப்பீடியா பயனர் நிர்வாகிகள் கனடாவில் இருக்கும் வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் கணினியியல் துறைப் பேராசிரியராக இருக்கும் செல்வா என்கிற முனைவர் சி. ஆர். செல்வக்குமார் அவர்களுக்கும், ஆஸ்திரேலியாவிலிருக்கும் கனக்ஸ் என்கிற கனகசுந்தரம் அவர்களுக்கும், சிவக்குமார் அவர்களுக்கும் மற்றும் உற்சாகமூட்டிய இணைய வழி நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    என் எழுத்துக்கள் அச்சிலும், இணையத்திலும் வெளியாகும் போது, எனக்குப் பாராட்டுகள் தெரிவித்து, என்னைத் தொடர்ந்து எழுத ஊக்கமளித்து வரும் என் இனிய நண்பர்கள் தூத்துக்குடி எஸ்.ஏ.சுகுமாரன், தேனி வி.பி.மணிகண்டன், எஸ்.செந்தில்குமார், கவிஞர் வி.எஸ்.வெற்றிவேல், எஸ்.மாரியப்பன், பொன்.கணேஷ், மதுரை வழக்கறிஞர் எஸ். இளங்கோவன், மற்றும் கல்லூரி விரிவுரையாளர் திருச்சி, முனைவர் துரை. மணிகண்டன் ஆகியோருக்கும் என் நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    இந்நூல் வெளிவருவதற்கும், என் அனைத்து வளர்ச்சியிலும் எனக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வரும் என் பெற்றோர் எஸ்.முத்துசாமி பிள்ளை – கமலம் ஆகியோருடன் என் வாழ்க்கைத் துணைவியார் தாமரைச்செல்விக்கும் என் இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்நூலை மின்னூலாகப் பதிப்பித்திருக்கும் புஸ்தகா நிறுவனத்திற்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    -தேனி. மு. சுப்பிரமணி

    19/1, சுகதேவ் தெரு,

    பழனிசெட்டிபட்டி,

    தேனி – 625 531

    அலைபேசி: 9940785925, 9042247133.

    www.muthukamalam.com

    உள்ளுறை

    1.தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

    2. தமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்

    3. தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்.

    4. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்

    5. தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்

    6.தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக் கட்டுரைகள்

    7. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்

    8. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்

    9. தமிழ் விக்கிபீடியா கட்டுரை வார்ப்புருக்கள்

    10. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்

    11. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்

    12. தமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்

    13. தமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்

    14. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்

    15. தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்

    16. தமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்

    17. தமிழ் விக்கிப்பீடியா முக்கியப் பயனர்கள்

    18. தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை மற்றும்

    19. விக்கி மீடியா பிற திட்டங்கள்

    20. தமிழ் விக்கிப்பீடியா அழைப்பு

    1.தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்

    உலகில் மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் எத்தனையோ இருக்கின்றன. இந்த உலகில் கடந்த காலத்தில் இருந்தவை, நிகழ்காலத்தில் அவற்றில் ஏற்பட்ட மாற்றங்கள், புதிதாய்த் தோன்றிய தோற்றங்கள் என எண்ணிலடங்காத பொருள்கள், உயிர்கள் எத்தனையோ

    Enjoying the preview?
    Page 1 of 1