Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ovvoru Naalum Urchagam
Ovvoru Naalum Urchagam
Ovvoru Naalum Urchagam
Ebook211 pages1 hour

Ovvoru Naalum Urchagam

Rating: 4.5 out of 5 stars

4.5/5

()

Read preview

About this ebook

Mr. Muruga Barathi started speaking at the age of 9 and running like a river who has spoken in more than 1000 stages. He is a Certified Trainer by Junior Chamber International along with Post Graduate in Management from PRIST University. He has completed 7 Post Graduate degrees and continuing to study which is an evidence for his everlasting thirst for learning.

Muruga Barathi was a Master Trainer for Entrepreneurship Development Trainers of Government of Tamilnadu. He had nurtured a lot of professional HR trainers all over Tamilnadu. He is the only one to have 12 + years of full time experience in Professional Training under 35 years of age. He has designed and conducted more than 1000 successful In-house, Open-house workshops and Outbound training where he has excelled through his competence.

Mr. Murugabarathi has got certifications in NLP, CBT, Psychometrics and Counseling. He is specialized in conducting the topics - Attitude and Work ethics. With his direct involvement with various Social Organizations, he glitters in the areas like Responsibility, Communication and Teamwork. He has got many awards including ‚Best HR Trainer‛. He has appeared as a Guest in various TV Channels including Raj Tv, Imayam Tv, Podhigai Tv, Kalaignar Tv and the online channel Mukil Tv.

He also wrote 4 books in Tamil. He is aware of many complex Industrial, HR and Management concepts. But he presents them in his own style that is unique and simple. Muruga Barathi’s delivery is very interactive with videos, case study, simulation exercise, role plays, activity oriented and learning’s with fun. His sense of humor and description of anecdotes are admired by everyone including the fellow trainers. He follows the ‘4I’ formula i.e., Interesting, Informative, Interactive and Inspiring in all of his trainings.

He has conducted Work Ethics programs to Lotus Footwear (NIKE), POTHYS and JeevaRekha Textiles and others. He did Sales Trainings to IIFL, Blue Chip, Birla Sun Life, Star Health, ICE Net, Arun Brush and others. He conducted Management Development Programs to Anandam Silks, Thanga Mayil Jewellery, Venus Electronics, Sathya Agencies, Jayavilas Mills and others. He conducted programs to Officers of Indian Bank, Commercial Tax, Apollo Hospitals, etc. He also conducted various programs to Instakart (Flipkart), Althaf Shoes, Apex consortium and many more companies. He gave Guest lectures in various institutions including Loyola College, Alagappa Institute of Management, National College, Annai Matric. School, Vasavi Vidyalaya, Jaycees School, Yadhava College, Thassim Beevi College and Arasu Engineering College.

Languageதமிழ்
Release dateMay 18, 2017
ISBN6580116501998
Ovvoru Naalum Urchagam

Read more from Kavi. Muruga Barathi

Related to Ovvoru Naalum Urchagam

Related ebooks

Reviews for Ovvoru Naalum Urchagam

Rating: 4.5 out of 5 stars
4.5/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ovvoru Naalum Urchagam - Kavi. Muruga Barathi

    http://www.pustaka.co.in

    ஒவ்வொரு நாளும் உற்சாகம்

    Ovvoru Naalum Urchagam

    Author:

    கவி. முருகபாரதி

    Kavi. Muruga Barathi

    For more books
    http://www.pustaka.co.in/home/author/kavi-muruga-barathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    ஒவ்வொரு நாளும் உற்சாகம்

    கவி. முருகபாரதி
    நூலாசிரியர் பற்றிய சிறு குறிப்பு

    சொல்லரசு கவி. முருகபாரதி

    * 1981-ல் புதுக்கோட்டையில், ஆசிரியத் தம்பதிகளாக திரு. கண்ணன் - திருமதி. விஜயலெஷ்மி ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். உடன்பிறந்தோர் இருவர். சமுதாயப் பணிகளுக்காக, இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.

    * B.Com., M.Com., M.Phil., M.B.A., M.A. (Tamil), M.A. (English), M.A. (Political Science & Public Administration), PGDCA என பல பட்டங்களை முடித்துள்ள இவர், தற்போது M.Sc. Counseling & Psychotherapy) படித்துக் கொண்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான பல்வேறு விதமான நூல்களையும் படித்திருக்கிறார். வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருக்க விரும்புகிறார்.

    * பேச்சாளர் மற்றும் மனித வளப் பயிற்றுநர் (Motivational Speaker & HR Trainer). 26 ஆண்டுகளுக்கு மேலாக மேடைகளில் பேசி வருகிறார். கடந்த 12 ஆண்டுகளாகப் பல்வேறு கல்வி மற்றும் வணிக நிறுவனங்களிலும் பயிற்சிகள் அளித்து வருகிறார். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும், சுமார் 750-க்கும் அதிகமான பயிற்சி நிகழ்வுகளை (Training Programs) நடத்தியுள்ளார். (விவரங்களுக்குக் காண்க: www.yosindia.com/events.html)

    [Work Ethics' programs to Lotus Footwear (NIKE), POTHYS and Jeeva Rekha Textiles and others. Sales Trainings' to IIFL, Blue Chip, Birla Sun Life, Star Health, ICE Net and others. Management Development Programs' to ThangaMayil Jewellery, Venus Electronics, Sathya Agencies, Jayavilas Mills and others. Various programs to Officers of Indian Bank, Commercial Tax, Apollo Hospitals, etc. Attitude development programs to Instakart (Flipkart), Althaf Shoes, Apex consortium and many more companies. He gave Guest lectures' in Various colleges including Loyola College, Chennai, Alagappa Institute of Management, Karaikudi, National College, Trichy, Arasu Engineering College, Kumbakonam, Yadhava College, Madurai, and Thaseem Beevi College, Ramnad.]

    * கவிஞர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர். தேர்விலும் வெல்வோம், நாளும் கவிதை, விந்தை மனிதர்கள் - ஆகிய மூன்று நூல்களை எழுதியுள்ளார். அவற்றை, மணிவாசகர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வளம்பெற யோசி என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரின் கட்டுரைகள், இமைகள், நமது நம்பிக்கை, வெற்றிப்பாதை போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன.

    * கலைஞர் தொலைக்காட்சி-யில் இவரது நேர்காணல் ஒளிபரப்பாகியுள்ளது. பொதிகை, ராஜ், இமயம், விஜய் உள்ளிட்ட தொலைக்காட்சிகளின் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

    * சிறந்த மனித வளப் பயிற்றுநர், சிறந்த இளைஞர், சிறந்த குருதிக் கொடையாளர் - உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார். பல சமுதாய மற்றும் இலக்கிய அமைப்புகளிலும் பொறுப்பு வகித்து வருகிறார். தன் குடும்பத்தினரின் ஒத்துழைப்புடன் கவிராசன் அறக்கட்டளை-யை நடத்தி வருகிறார்.

    E-mail : murugabarathi2009G)gmail.com

    Facebook : Muruga Barathi Kannan

    YouTube : murugabarathi

    Website : www.yosindia.com/www.murugabarathi.com

    நூலாசிரியரின் முன்னுரை

    நேற்றைய, இன்றைய, நாளைய உறவுகளே...!

    வணக்கம்..! நான் என் 9 வயதில் தொடங்கி, கடந்த 26 ஆண்டுகளாகத் தொடர்ந்து மேடைகளில் பேசி வருகிறேன். தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், சமூக - இலக்கிய அமைப்புகள் என்று ஆயிரத்திற்கும் அதிகமான மேடைகளில் பேசிவிட்டேன். ஆனால், நானும் மைக்கை விடவில்லை. அதுவும் என்னை விடுவதாயில்லை. ஒரே நல்ல விஷயம். நான் மேடை / மைக்

    / பணம் கிடைக்கிறதே என்று எதையும் பேசுவதில்லை.

    என் பேச்சைக் கேட்பவர்களின் வாழ்வில் ஒரு சதவீதமாவது மகிழ்ச்சியும், முன்னேற்றமும் அதிகரிக்க வேண்டும் என்ற வேட்கையுடன், நோக்கத்துடன்தான், நான் ஒவ்வொரு முறையும் பேசுகிறேன்.

    தமிழகத்தில் பல தொலைக்காட்சிகளில் பேசியிருந்தாலும், உலகத் தமிழர்களுக்கு அறிமுகமாக, இணையத் தொலைக்காட்சியில் (Online TV Channel) பேச வேண்டும் என்று நினைத்திருந்தேன். மதுரையிலிருக்கும் முகில் டிவி-யில் அந்த நல்வாய்ப்புக் கிடைத்தது. தினந்தோறும் சில நிமிடங்கள் எனத் தொடங்கிய அந்த நிகழ்ச்சி, வெற்றிகரமாக 100 பகுதிகள் ஒளிபரப்பானது. அதையே, பின்னர் DVD மற்றும் Audio CD-க்களாக வெளியிட்டோம்.

    தற்போது அந்த நிகழ்ச்சியின் முதல் 50 பகுதிகளைத் தொகுத்து, நிகழ்ச்சியின் பெயரிலேயே (ஒவ்வொரு நாளும் உற்சாகம்) நூலாக்கி, உங்கள் கரங்களில் தவழவிடுகின்றோம். முழுமையாக வாசித்து மகிழுங்கள். உங்களுக்கு ஏற்புடைய கருத்துகளை செயல்களாக்கிப் பாருங்கள். வார்த்தைக்கும், வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் வாழ்பவன் - நான். எந்த நிலையிலும் உற்சாகமாகவே வாழும் நான் சொல்லியிருக்கும் கருத்துகள், நிச்சயம் உங்களையும் உற்சாகமாக வாழ வைக்கும்.

    என்னை மேடையேறச் செய்த என் தாய்க்கும், என் பேச்சுகளுக்கான கருத்துகளை அள்ளித் தரும் என் தந்தைக்கும் என் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன். என் எல்லா செயல்களுக்கும் ஆதாரமும், ஆதரவும் இவர்கள் மட்டுமே.

    பள்ளி, கல்லூரிகளில் பாடம் எடுத்தவர்கள் மட்டுமல்ல; வாழ்க்கைத் திறன் பயிற்சிகளை அளித்தவர்கள் மட்டுமல்ல; நான் யாரிடமிருந்தெல்லாம் கற்றுக் கொண்டிருக்கிறேனோ, அவர்கள் அனைவருமே என் ஆசிரியர்கள்தாம். அப்படி, என் வளர்ச்சிக்கு உதவியிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

    இதுவரை எனக்கு வாய்ப்புகளை வழங்கிய அனைத்து Consultant-களுக்கும், நிறுவனங்களுக்கும், நண்பர்களுக்கும் என் நன்றி மலர்களைச் சமர்ப்பிக்கிறேன்.

    இந்த நூல் உருவாகக் காரணமான, நல்லதொரு வாய்ப்பை வழங்கிய, மதுரை முகில் டிவி-யின் நிர்வாக இயக்குநர், திரு. ஜே.கே. முத்து அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரிடம் என்னை அறிமுகப்படுத்திய, மதுரை வாழ் நண்பர் திரு. சோழவந்தான் சீனிவாசன் அவர்களுக்கும், இப்படியொரு நிகழ்ச்சி செய்யச் சொல்லி என்னைத் தூண்டிய, கனடா வாழ் நண்பர் திரு. குகன் பொன்னம்பலம் அவர்களுக்கும் என் நன்றிகள் பல.

    முகில் டி.வி-யின் அனைத்துப் பணியாளர்களுக்கும் குறிப்பாக திரு. செல்வா, திரு. ராகேஷ் மற்றும் செல்வி. ப்ரீத்தி ஆகியோருக்கும் என் நன்றிகள்.

    YouTube -ல் இருந்து வீடியோக்களை எடுத்து, கேட்டு சிறப்பாகத் தட்டச்சு செய்து கொடுத்த சென்னை விக்னேஷ் கம்ப்யூட்டர்ஸின் திரு. முரளிதர் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரைக் கண்டறிந்து, பேசி, நல்ல முறையில் பணி முடியும் வரை, பொறுப்பேற்றுச் செய்த, இனிய நண்பர் திரு. சிவக்குமார் அவர்களுக்கு நன்றிகள் ஆயிரம் - இல்லை, இல்லை - இரண்டாயிரம்.

    படங்கள் வைப்பது உள்ளிட்ட லே-அவுட் பணிகளைச்

    செய்து தந்த, புதுக்கோட்டை ஜெயம் பிரிண்டர்ஸ்

    திரு. செல்வராஜ் அவர்களுக்கும், அட்டைப்பட டிசைனிங் செய்து தந்த, கோயம்புத்தூர் ஆஷ் மீடியா திரு. சங்கர் அவர்களுக்கும் எப்போதும் என் நன்றிகள் உண்டு. இந்தப் புத்தகத்தை அச்சிடும் சென்னை ரியல் இம்பாக்ட் பிரஸ் நிறுவனத்தாருக்கும் என் நன்றிகள்.

    இவை எல்லாவற்றுக்கும் மேலாக, தன்னுடைய கடுமையான பணிச் சுமைகளுக்கு இடையிலும், நான் கேட்டதற்காக ஒத்துக்கொண்டு, பெருந்தன்மையுடன் அணிந்துரை வழங்கியிருக்கும், முன்னணி எழுத்தாளர் - தமிழில் சுய முன்னேற்ற நூல்களின் முன்னோடிகளுள் ஒருவர், என்னைப்

    போன்ற பயிற்சியாளர்களுக்கெல்லாம் ஏராளமான கதைகளையும், தகவல்களையும் தரும் கருத்துச் சுரங்கம் - பெங்களூர் வாழ் திரு. என். சொக்கன் அவர்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

    இந்நூலை விலை கொடுத்து வாங்கி, வாசித்துக் கொண்டிருக்கும் தங்களுக்கு என் உளங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாருங்கள்… வாசிப்போம்..! வளம்பெற யோசிப்போம்..! வாழ்க்கையை நேசிப்போம்..!

    அன்புடன்,

    கவி. முருகபாரதி

    26.11.2016

    அணிந்துரை

    என். சொக்கன்

    எழுத்தாளர்

    பெங்களூரு

    எங்கள் அலுவலகத்தில் ஒரு நிகழ்ச்சி. பேச்சாளர், இயல்பாக ஒரு கேள்வி கேட்டார், இங்கே யாருக்கெல்லாம் சதுரங்கம் விளையாடத் தெரியும்?

    பலர் கை தூக்கினார்கள். அவர் புன்னகையோடு, சதுரங்கம் கொஞ்சம் கடினமான விளையாட்டுதான், இல்லையா? என்றார். பெரும்பாலானோர் தலையசைத்தார்கள்.

    ஆனால், ஒருவர் மட்டும் எழுந்து நின்று, இல்லை என்றார், சதுரங்கம் எளிய விளையாட்டுத்தான்.

    அப்படியா சொல்கிறீர்கள்? வியப்போடு கேட்டார் பேச்சாளர்.

    ஆமாம் என்றார். அவர் சதுரங்கம் விளையாடுவது எளிது, அதில் வெல்வதுதான் கடினம்.

    எத்துணை அழகான, அருமையான பதில்! எளிமை, கடினம் என்பதெல்லாம் நாம் எதிர்பார்க்கும் பலனில் இருந்தல்லவா வருகின்றன. சதுரங்க விதிமுறைகளைக் கற்றுக்கொண்டுவிட்டால், அதை விளையாடுவதில் எந்தக் கடினமும் இல்லை. வென்றாக வேண்டும் என்கிற அழுத்தம் சேரும்போதுதான் அது சிரமமாகிவிடுகிறது.

    சுயமுன்னேற்றக் கட்டுரைகளை எழுதுவதும் அப்படித்தான். எழுதுவது எளிது. அது வாசிப்பவருக்குப் பயன்படும்படி செய்வதுதான் கடினம்.

    நாம் பார்க்கிற எல்லாவற்றிலிருந்தும், சுயமுன்னேற்றக் கட்டுரைகளை உருவாக்கலாம். ஒருவர் வெல்கிறார் என்றால் அதுவொரு பாடம். அவர் தோற்கிறார் என்றால், அதுவும் ஒரு பாடம். ஒருவர் வென்று, தோற்று, மறுபடி வெல்கிறார் என்றால் அது 'வாழ்க்கை நிலையற்றது’ என்கிற பாடமாகிவிடும்.

    அதே சமயம், இவையெல்லாம் எல்லாரும் உடனே உணர்ந்து கொள்ளக்கூடிய பாடங்கள். இவற்றை வெளியிலிருந்து ஒருவர் வந்து சொல்ல வேண்டியதில்லை.

    அங்கேதான், சுயமுன்னேற்றக் கட்டுரை எழுதுவோரின் தனித்தன்மை பளிச்சிட வேண்டும். எல்லாருக்கும் தெரிந்த உண்மைகளைக் கதையோடு கலந்து சொன்னால் சுவையிருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் ஏமாற்றமளித்துவிடும். ஆகவே, தொடர்ந்து சிந்தித்தபடியிருக்க வேண்டும். ஒரளவு புரியக்கூடிய, அதே சமயம், இன்னொருவர் வந்து விளக்கவேண்டிய தேவையுள்ள விஷயங்களைச் சுவையாகச் சொல்ல வேண்டும்.

    இத்தனை பெரிய சவாலைத் தினமும் செய்ய வேண்டுமென்றால், எவ்வளவு கடினம் என்று யோசித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவையான விஷயத்தைத் தேர்ந்தெடுத்து, அதிலுள்ள உண்மைகளைச் சுருக்கமாக விவரித்துக் கேட்போர் மனத்தில் பதியும்படி செய்வது, நிஜமாகவே பெரிய விஷயம்தான்.

    இந்த சவாலை, முருகபாரதி அருமையாகக் கையாண்டு இந்நூலை உருவாக்கியுள்ளார். இணையத்தில் அவர் வழங்கிய தினசரி உரைகள், இப்போது நூல் வடிவில் வெளியாகின்றன. அனைத்தும் சிறு கட்டுரைகள்தாம். எளிய நடை. வாசிக்கும்போதே, நம் காதுக்குள் அவருடைய குரல் கேட்கிறது. சின்னச்சின்ன பத்திகளில், பெரிய விஷயங்களை, ரசனையோடு சொல்லும் கலை மகிழ்வளிக்கிறது.

    குறிப்பாக, அவரது வகைபாட்டுக் கட்டுரைகளை நான் மிகவும் ரசித்தேன். அவர் கவிஞர் என்பது, இந்த வகைபாடுகளுக்கு அவர் தேர்ந்தெடுக்கும் அழகிய பெயர்களிலிருந்து தெரிகிறது. இன்னும் சில விஷயங்களை, இப்படி வகைப்படுத்தி விளக்கமாட்டாரா என்று ஏக்கமாயிருக்கிறது.

    முருகபாரதிக்கு வாழ்த்துகள்! அவரது அனைத்து உரைகளும் நூலாக வெளிவர வேண்டும், மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று, எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    பொருளடக்கம்

    1. குழந்தைகளாய்க் குதூகலிப்போம்..!

    2. லட்சியக் குடிமகனை உருவாக்குவோம்..!

    3. நன்றி அறிவிப்பாளராய் இருப்போம்..!

    4. வளர்ச்சியை வாடிக்கையாக்குவோம்..!

    5. பயணத்தை அனுபவிப்போம்..!

    6. வரிசை பெற வாழ்வோம்..!

    7. பொருத்தமாய்ப் புகழ்வோம்..!

    8. நாட்களைக் கொண்டாடுவோம்..!

    9. காட்சிகளின் கதையறிவோம்..!

    10. உலகையே உறவாக்குவோம்..!

    11. இன்பமே நாடுவோம்..!

    12. இருக்கும்

    Enjoying the preview?
    Page 1 of 1