Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Nambikkai Vetri Perum
Nambikkai Vetri Perum
Nambikkai Vetri Perum
Ebook169 pages1 hour

Nambikkai Vetri Perum

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுய முன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமும் அக்கறையும் உண்டு. காரணம் இன்றைய சமுதாய சூழ்நிலையில் சுய முன்னேற்றக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு எடுத்துச் சொல்ல வேண்டியது என் போன்ற எழுத்தாளர்களது கடமை என்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு என்னதான் கல்வியும் செல்வமும் குறைவில்லாமல் இருந்தாலும் சுய முன்னேற்றக் கருத்துக்கள் மனதில் பதிந்தால்தான், அதன்படி அவன் நடக்க முற்பட்டால்தான் இந்த சமுதாயத்தில் மற்றவர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ முடிகிறது.

இந்தக் கட்டுரை நூலில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் பிரபல பத்திரிகைகளில் நான் எழுதி வெளிவந்து பல வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. நடைமுறையில் கடைப்பிடித்துப் பலன் அடைந்தவர்கள் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் என்னுடன் தொடர்பு கொள்ளும் போது நான் அடையும் பூரிப்பிற்கு வார்த்தைகள் இல்லை.

எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி. இந்த நூல் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.

கீதா தெய்வசிகாமணி.

Languageதமிழ்
Release dateSep 6, 2020
ISBN6580134805849
Nambikkai Vetri Perum

Read more from Geetha Deivasigamani

Related to Nambikkai Vetri Perum

Related ebooks

Reviews for Nambikkai Vetri Perum

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Nambikkai Vetri Perum - Geetha Deivasigamani

    http://www.pustaka.co.in

    நம்பிக்கை வெற்றி பெறும்

    Nambikkai Vetri Perum

    Author:

    கீதா தெய்வசிகாமணி

    Geetha Deivasigamani

    For more books

    http://www.pustaka.co.in/home/author/geetha-deivasigamani

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    சமர்ப்பணம்

    நம்பிக்கை வெற்றி பெறும்

    எனும் இந்த சுய முன்னேற்ற நூலினை

    என் தந்தையாரும், பொறியியல் வல்லுநருமான

    தெய்வத்திரு எம். பாலகிருஷ்ணன் அவர்களின்

    திருப்பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி.

    முன்னுரை

    சுய முன்னேற்றக் கட்டுரைகள் எழுதுவதில் எனக்கு எப்போதுமே ஆர்வமும் அக்கறையும் உண்டு. காரணம் இன்றைய சமுதாய சூழ்நிலையில் சுய முன்னேற்றக் கருத்துக்களை நம்மால் இயன்ற அளவு எடுத்துச் சொல்ல வேண்டியது என் போன்ற எழுத்தாளர்களது கடமை என்று நினைக்கிறேன். ஒரு மனிதனுக்கு என்னதான் கல்வியும் செல்வமும் குறைவில்லாமல் இருந்தாலும் சுய முன்னேற்றக் கருத்துக்கள் மனதில் பதிந்தால்தான், அதன்படி அவன் நடக்க முற்பட்டால்தான் இந்த சமுதாயத்தில் மற்றவர் மதிக்கத்தக்க வாழ்க்கை வாழ முடிகிறது.

    இந்தக் கட்டுரை நூலில் வெளிவந்த கட்டுரைகள் அனைத்தும் பிரபல பத்திரிகைகளில் நான் எழுதி வெளிவந்து பல வாசகர்களின் பாராட்டுக்களைப் பெற்றவை. நடைமுறையில் கடைப்பிடித்துப் பலன் அடைந்தவர்கள் தொலைபேசி மூலமும் கடிதம் மூலமும் என்னுடன் தொடர்பு கொள்ளும் போது நான் அடையும் பூரிப்பிற்கு வார்த்தைகள் இல்லை.

    எழுத்தார்வத்தை என் இரத்தத்தில் ஊட்டிய என் தாயார் நாவலாசிரியை லீலா கிருஷ்ணன் அவர்களுக்கும் என் எழுத்துலகப் பணியில் என்றும் துணைக்கரம் கொடுத்து வரும் என் கணவர் வழக்கறிஞர் திரு. என். தெய்வசிகாமணி அவர்களுக்கும் என் இதயப்பூர்வமான நன்றி.

    எனது நூல்களைப் படித்து அன்புடனும் ஆர்வத்துடனும் கடிதங்கள் எழுதி மேலும் மேலும் எழுதத் தூண்டிக் கொண்டிருக்கின்ற வாசகர்களுக்கு என்றென்றும் நன்றி. இந்த நூல் பற்றிய வாசகர்களின் கருத்துக்களை அன்புடன் வரவேற்கிறேன்.

    கீதா தெய்வசிகாமணி

    2, 8ஆவது ட்ரஸ்ட் குறுக்கு தெரு

    மந்தைவெளிப்பாக்கம் சென்னை-28

    ஃபோன்: 24933888, 24611907.

    பொருளடக்கம்

    1. நம்பிக்கை வெற்றி பெறும்

    2. காக்க, காக்க மௌனம் காக்க!

    3. முன்னுதாரணமே நீங்கள்தான்

    4. சாதனைப்படிகளில் சுலபமாய் ஏறுங்கள்

    5. வசந்தங்களை வரவழைக்க

    6. டீன் ஏஜ் குழந்தைகளும் தோழமை உணர்வும்

    7. சாதிக்க ஏற்ற பருவம் இது

    8. ஆறுவது சினம்

    9. கட்டாயப்படுத்தாதீங்க ப்ளீஸ்...

    10. வீட்டுக்குள்ளேயே போட்டி போடலாம்

    11. கைவிடப்பட வேண்டிய கத்தரிக்கோல் கலை

    12. கைனசிக் கலை

    13. பகலில் குட்டித் தூக்கம் போடலாமா?

    14. அதெப்படி, இளமையாவே இருக்காங்க!

    15. விடுமுறை விட்டதும் என்ன செய்யலாம்?

    16. வீட்டை இப்படியும் அலங்கரிக்கலாம்

    17. மூன்று வயது மூன்று வார்த்தைகள்!

    18. சிந்திக்க சில மணித்துளிகள்

    19. உலகம் எங்கே போகிறது?

    20. வேண்டாமே சுய பச்சாதாபம்

    21. நன்கு படியுங்கள்

    22. எனக்கே எனக்கா

    23. எல்லைக் கோட்டைத் தாண்டாதீர்கள்

    24. இது தேவையா?

    25. மூட்அவுட்டிற்கு டாட்டா சொல்லுங்கள்

    26. மந்திரித்த எலுமிச்சம் பழம்

    27. உங்களுக்கு இப்போது ‘மெனோபாஸ்’ பருவமா?

    28. மருந்து சாப்பிடப் போகிறீர்களா?

    29. நோய்களை குணமாக்கும் நிறங்கள்

    30. ஆழ்நிலை தியானம்

    31. தனக்குத்தானே சிகிச்சை அளிக்கும் ரேய்க்கி மருத்துவ முறை

    32. பெண்களுக்கு யோகா

    பாராட்டுக் கடிதங்கள்

    28, வெங்கடேசபுரம் எக்ஸ்டன்சன்,

    அயனாவரம்,

    சென்னை - 600 023.

    ஆசிரியை அவர்களுக்கு,

    அன்பு வணக்கம், தங்களது கட்டுரைத் தொகுப்பான உற்சாகம் உங்கள் கையில் என்ற நூல் கிடைக்கப்பெற்று படித்து மகிழ்ந்தோம்.

    முதல் கட்டுரை உறவுப் பாலம் உங்கள் கையில் மிகவும் முத்து முத்தாக இருக்கிறது. உறவில் விரிசல் ஏற்படுவதை மிக்க அருமையாக தெளிவுபடுத்தி உள்ளீர்கள், முக்கியமாக முதியவர்கள் படித்து பின்பற்ற வேண்டியது.

    அன்றாடம் வரும் பிரச்சினைகளுக்கு மிக எளிமையான வழிமுறைகளை விளக்கியுள்ளது மிக அருமை. வயது முதிர்ந்த கணவனை இதமாகப் பேச அவரது மனதை அன்பான வார்த்தைகளால் எப்படி கவருவது என்பது மிகவும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

    இதுவரையில் எங்கும் வெளிவராத பல புதிய செய்திகளான உங்கள் டைரியின் நாளைய பக்கம், இளமையை இழுத்து பிடிப்பது, மிரட்டும் மே மாதச் செலவு, பயணக் குறிப்புகள் ஆகியவை ஆகும். அவற்றை எளிதில் பின்பற்ற சில வழிமுறைகளையும், ஆலோசனைகளையும் தந்து இருப்பது மிகவும் மெச்சத்தக்கன.

    அடுத்து வரும் வெளியீடுகளில் காலம் அறிதல், அளவறிந்து வாழ்வது போன்ற பிரச்சினைகளுக்கு தக்க ஆலோசனைகள் தரவேண்டும் என்று விரும்புகிறோம்.

    வணக்கம்!!

    இப்படிக்கு,

    டி.எஸ். பாலதுரை

    ***

    மதிப்புமிகு எழுத்தாளர்,

    திருமதி கீதா தெய்வசிகாமணி அவர்களுக்கு,

    வணக்கங்கள். தங்கள் புத்தகம் மணப் பெண்ணே உனக்காக சிறந்த பல செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

    பல மணப்பெண்களுக்கு உதவக்கூடியது.

    தாங்கள் அடுத்த பதிப்பில் சிறந்த தமிழ்ப் பெயர்களை (தமிழர்களின் இல்லங்களில் தவழ தங்களால் ஆன முயற்சியாக வெளியிடுவீர்கள் என நம்புகின்றேன். வேண்டுகோளை தங்களிடம் வைக்கிறேன்.

    சு. கலைச் செல்வன்

    தமிழக அரசின் குறள் பீடப் பாராட்டிதழ் பரிசு பெற்றவர்

    ***

    பெருமதிப்பிற்குரிய கீதா தெய்வசிகாமணி அவர்களுக்கு,

    தாங்கள் எழுதிய, உங்கள் உயர்வு உங்கள் கையில், உற்சாகம் உங்கள் கையில் & பிரச்சினைகள் தீர்வுகள் என்ற புத்தகங்களை படித்தோம். மிக மிக பயனுள்ள கட்டுரைகள். இதைப் படித்து வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மனம், வாழ்க்கை அனைத்தும் வளப்படும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக திருமணத்திற்கு காத்திருக்கும் பெண்கள். கணவரை தேர்ந்தெடுக்க தாங்கள் கொடுத்த டிப்ஸ் அருமை. அதைவிட அருமை ஒரு பர்சனல் அஸிஸ்டென்ட் தன் அலுவலகத்தில் நடந்து கொள்ள உதவும் டிப்ஸ். சகலகலாவல்லி சரஸ்வதி அருள் பெற்று சகல கலாவல்லியாய் விளங்கும் தங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    தங்களது அன்பான,

    K. ஜோதிராமலிங்கம்,

    ஈரோடு.

    ***

    பேராசிரியர் இராம. இருசு.

    தாயகம்

    25 தாமுநகர்

    கோவை - 641045

    அன்பும் ஆக்க உணர்வும் மிக்க திருமதி கீதாதெய்வசிகாமணி அவர்களுக்கு,

    தங்கள் நூல்களை அவ்வப்போது படித்து வருகிறேன். மிக்க சிறப்பாக உள்ளது. எல்லாம் வல்ல செந்திலாண்டவன் திருவருளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களும் அமைவதாக என அவன் அருளால் அவன் தாள் வணங்கி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    வாழ்க வளமுடன்.

    அன்புடன்

    இராம. இருசு.

    1

    நம்பிக்கை வெற்றி பெறும்

    ஏதாவது ஒரு துறையில் சாதிக்க விரும்புகிறீர்களா? பெரிது பெரிதாக சாதிக்க வேண்டும் என்று உங்கள் ஆழ்மனதில் ஒரு எண்ணம் வேரூன்றிக் கிடக்கிறதா? உங்களுக்கு இதோ ஒரு வார்த்தை. சின்னச் சின்னப் பிரச்சனைகளில் நீங்கள் சிறைப்பட்டுப் போகாதீர்கள். சின்னச் சின்ன வார்த்தைகளில் நீங்கள் கல்லடிபட்டுப் போகாதீர்கள். சின்னச் சின்னப் பார்வைகளால் நீங்கள் காயப்பட்டுப் போகாதீர்கள்.

    உலகில் பெரிதாக சாதித்தவர்கள் பட்டியலைப் புரட்டிப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கை வரலாறுகளை வாசித்துப் பாருங்கள். அவர்கள் சின்னப் பிரச்சனைகள் மட்டுமல்ல, பெரிய பெரிய பிரச்சனைகள் கூட தங்களைத் தாக்காமல், பாதிக்காமல் வாழ்ந்து காட்டியவர்கள். தீராத வறுமை, தாங்க முடியாத நோய், தவிர்க்க இயலாத ஊனம், தள்ளாத வயது முதிர்ச்சி போன்ற பெரிய பிரச்சனைகளுக்கு நடுவேயும் சாதித்துக் காட்டியுள்ளார் எண்ணற்ற சாதனையாளர்கள்.

    ‘கொடிது கொடிது வறுமை கொடிது’ என்கிறார் ஔவை. ஆகாய விமானம் கண்டுபிடித்த ரைட் சகோதரர்களிலிருந்து பாடல்கள் மூலம் அழியாப் புகழ்பெற்ற பாரதி வரை வறுமையில் வாடியவர்கள் தான், தினமும் ஒரு ரூபாய் சம்பளத்தில் கூலியாளாக இருந்து உயர்ந்தவர் தான் உலகிலேயே பெரும் பணக்காரரான ராக்பெல்லர். விறகு வெட்டி பிழைப்பு நடத்தி அந்தப் பணத்தைக் கொண்டு சட்டம் படித்து முன்னுக்கு வந்தவர்தான் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரஹாம் லிங்கன். வறுமையைப் பெரிதாக எண்ணி புழுங்கிப் போயிருந்தால் அவர்கள் சாதித்து புகழ் உடல் எய்தி இருக்க முடியுமா?

    தாங்க முடியாத நோயுடன் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். நான்கு தடவை அமெரிக்க ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற ரூஸ்வெல்ட் வலது கால் முழுவதுமே செயலற்றுப் போனவர். சக்கர நாற்காலியுடனேயே உலக நாடுகளைச் சுற்றி வந்து 12 ஆண்டுகள் ஜனாதிபதியாகப் பணியாற்றியவர்.

    தவிர்க்க இயலாத ஊனத்துடன் கூட சாதனை புரிந்து காட்டி இருக்கிறார்கள் சாதனையாளர்கள். ‘ஒன்பதாவது சிம்பனி’ என்ற இசையை அமைத்து உலகப் புகழ் பெற்றவர் காது

    Enjoying the preview?
    Page 1 of 1