Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Munneru!
Munneru!
Munneru!
Ebook145 pages51 minutes

Munneru!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வேலை வாய்ப்பை எப்படிப் பெறுவது? பெற்ற வேலையில் படிப்படியாக உயர்வு பெற்று முன்னேறுவது எப்படி? தொழில் துறையைத் தேர்ந்தெடுக்கும் விதம், தேர்ந்தெடுத்த தொழிலை லாபகரமாக முன்னேற்றுவதற்கு நாம் கையாள வேண்டிய வழிமுறைகள், தொழிலாளர்களுடன் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய சுமூகமான சூழல் - கண்டிப்பு, நிறுவனத்தை நிர்வகிக்கும் முறைமை, வெற்றிப் படிகளில் நாம் நடை போட்டு வாழ்க்கையில் பல வெற்றிக் கொடிகளை நாட்டும் விதம் - போன்ற பல மனித முன்னேற்ற முயற்சிகளுக்கான வழிகளை இந்நூல் தருகிறார்.

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580125407448
Munneru!

Read more from Vaasanthi

Related to Munneru!

Related ebooks

Reviews for Munneru!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Munneru! - Vaasanthi

    https://www.pustaka.co.in

    முன்னேறு!

    Munneru!

    Author:

    வாஸந்தி

    Vaasanthi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/vaasanthi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஆகே சலோ! முன்னேறு!

    2. திறமையின் எல்லை

    3. தோல்வி என்பது...

    4. முன்னேறு

    5. வெற்றிக்கு ஒரு ஃபார்முலா...!

    6. வெற்றி நிலைத்திருக்க

    7. தோல்வி ஏற்பட்டால்...

    8. பர்சனாலிட்டி டெவலப்மென்ட்

    9. வெற்றியின் பாதைகள்

    10. வெற்றி - புதிய எண்ணம், புதிய பாதை, புத்திசாலித்தனம்

    11. கோபத்தின் விளைவுகள்

    12. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள்

    13. தடைகளை தாண்டி...

    14. வியாபார வெற்றிக்கு...

    15. தொடர்பு கொள்ளும் கலை

    16. விட்டுக்கொடுப்பது எப்போது?

    1. ஆகே சலோ! முன்னேறு!

    சமீபத்தில் நான் மத்திய அரசாங்க அலுவலகம் ஒன்றிற்குச் செல்ல வேண்டியிருந்தது. எதற்கோ விண்ணப்பம் கொடுக்கவேண்டும். ஆபீஸர் எனக்குத் தெரிந்தவர் ஆதலால், ‘என்னுடைய டைப்பிஸ்டே டைப் அடித்துவிடுவாள். நீங்கள் டிக்டேட் செய்துவிடுங்கள்’ என்றார்.

    டைப்பிஸ்ட் ஒரு இளம் பஞ்சாபி பெண். அமர்க்களமாக டிரஸ் செய்துகொண்டிருந்தாள். டைப்ரைட்டர் அதற்கு மேலே. புத்தம் புதிய பளபளக்கும் எலெக்ட்ரானிக் டைப்ரைட்டர். நான் உற்சாகமாக அவளருகில் அமர்ந்து எனது நான்குவரி விண்ணப்பக் கடிதத்தை டிக்டேட் செய்ய ஆரம்பித்தேன்.

    டைப் அடிக்கப்படும் வார்த்தைகளைக் கவனித்தபோது தூக்கிவாரிப்போட்டது. சின்னச் சின்ன எளிய வார்த்தைகள் எல்லாம்கூட பிழையுடன் அடிக்கப்பட்டிருந்தன. ஸ்பெல்லிங் கோளாறு. அதோடு இலக்கணப்பிழை. இரண்டாம் வகுப்பில் ஆங்கிலம் படிக்கும் சிறுமிக்குக்கூட வாக்கியம் ஆரம்பிக்கும்போது Capital அட்சரத்தில் ஆரம்பிக்கவேண்டும் என்று தெரியும். இந்த டைப்பிஸ்ட் குஷியாக புலவியின் சலுகை (Poets licence) என்று நினைத்தாற்போல் சின்ன அட்சரங்களுடன் வாக்கியங்களை ஆரம்பித்தாள். நான் என் திகைப்பை அடக்கிக்கொண்டு பிழைகளைச் சுட்டிக்காட்டியபோது அவள் என்னைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள்.

    கவலைப்படாதீர்கள். இது எலக்ட்ரானிக் டைப்ரைட்டர். என்ன பிழையானாலும் உடனுக்குடன் சேதமே இல்லாமல் திருத்திவிடலாம்! என்றாள்.

    அதுபோலவே ஒவ்வொரு வார்த்தையும் வாக்கியத்தையும் திருத்தி திருத்தி அவள் அதை டைப் அடித்து முடிப்பதற்குள் நாற்பது நிமிஷங்கள் விரயமானது மட்டுமில்லை. என் சக்தியும் பொறுமையும் போய்விட்டன.

    இரண்டு நிமிஷத்தில் டைப் செய்யக்கூடிய கடிதம். எனக்கு நினைக்க நினைக்க தாங்கவில்லை. ஆயிரத்துக்கு மேல் சம்பளம் வாங்குபவள் அவள். பொறுக்கமுடியாமல் ஆபீஸரை கேட்டேன்.

    எப்படி சார் இப்படி ஒரு டைப்பிஸ்டுடன் சமாளிக்கிறீர்கள்? வேலை எப்படி நடக்கும்?

    வேலை நடக்கிறதாவது. எங்கே நடக்கிறது? என்று அவர் சிரித்தார்.

    நடக்கிற மாதிரி பாவ்லா பண்ணுவதுதான் எல்லாருக்கும் வேலை.

    அவர் ஹாஸ்யமாக அதைச் சொன்னாலும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவரது பேச்சு ஹாஸ்யமில்லை உண்மை என்று இன்று நன்றாகப் புரிகிறது. அநேகம் ஸ்தாபனங்கள், அலுவலகங்கள், முக்கியமாக அரசு அலுவலகங்கள், 80% வேலையில் சிரத்தை இல்லாதாரால், திறமை இல்லாதாரால், காரியத்தில் கழிப்பணிகளால் நடத்தப்படுகின்றன. முக்கால்வாசிப்பேருக்கு வேலைக்கு வேண்டிய தகுதி இருக்காது. இருந்தாலும் நமது நிர்வாக அமைப்பில் இருக்கும் சிகப்பு நாடா அவர்களது திறமையை மழுங்கச்செய்ய அதிக நேரம் எடுத்துக்கொள்ளாது. ஒரு ஃபைல் ப்யூனிடமிருந்து மேலிடத்திற்குப்போக, அது இரண்டாவது மாடியிலிருந்து மூன்றாவது மாடியாக இருந்தாலும் பல வருஷங்கள் ஆகும் எத்தனை மேஜைகள் தாண்டவேண்டும்? எத்தனைக் கையெழுத்துக்கள். இடையில் ஆபீஸர்கள் வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் என்று போய்விட அநேகம் கோப்புகள் கரையான் அரித்துக் கரைந்துகூடப்போகும்.

    நேரத்திலும், கடமையிலும் காட்டப்படும் அசிரத்தையும் திறமையின்மையும் நம்மைச்சுற்றி வியாபித்திருக்கிறது. எங்கு சென்றாலும், யாராவது நம்மைக் காக்க வைக்கிறார்கள். நம் நேரத்தை, பணத்தைத் துச்சமாக மதித்து விரயமாக்குகிறார்கள். ஒருநாள் அவசரமாக ஒரு அத்தியாயம் போஸ்ட் செய்யவேண்டியிருந்தது. ஐந்து மணிக்கு போஸ்ட் ஆஃபிஸ் மூடிவிடும். 4 ½ மணி. என் சின்னப் பையனிடம் பத்து ரூபாய் கொடுத்து சைக்கிளில் சென்று தபால்தலை ஒட்டி போஸ்ட் செய்யச்சொன்னேன். ஐந்து மணிக்கு போஸ்ட் செய்யாமலே திரும்பி வந்தான். தபால்தலை கொடுப்பவன் சில்லறை கிடையாது பத்து ரூபாய்க்கு என்று அனுப்பிவிட்டாராம். எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை. போஸ்ட் ஆபீஸில் சில்லறை இருக்காதா? ஒரு சின்னக் கூட்டல் கழித்தல் செய்ய அந்த சிப்பந்திக்கு சோம்பல்! மறுநாள் போஸ்ட் மாஸ்டரிடம் சென்று சண்டைபோட்டேன். அன்றிலிருந்து போஸ்ட் ஆபீஸில் ஏதும் மாற்றம் ஏற்படவில்லை. நான்தான் மாறினேன் அதிக ஜாக்கிரதையாக பிள்ளையை அனுப்பாமல் நானே போக ஆரம்பித்தேன் - அல்லது கடைசி தேதிவரை ஒத்திப்போடாமல் சின்னதாக அத்தியாயங்களை எழுதி அனுப்ப ஆரம்பித்தேன்.

    போஸ்ட் ஆபீஸை விடுங்கள் - சற்று தாமதித்தால் குடி முழுகிப் போய்விடாது என்று வைத்துக் கொள்வோம்.

    ஆஸ்பத்திரிகளில், அவசர கேஸ். விபத்துக்குள்ளான கேஸ் என்று அழைத்துக்கொண்டு வரப்படும் நோயாளிகளை உடனடியாகக் கவனிக்க ஏற்பாடு இருக்கிறதா? எத்தனைக் கேள்விகள்! எத்தனை பூர்த்தி செய்யப்படவேண்டிய தாள்கள் - எல்லாவிதத்திற்கும் பதில்சொல்லி கையொப்பமிடுவதற்குள் யமதர்மராஜன் தன் வேலையை முடித்துக்கொண்டிருப்பான்.

    இத்தனைக்கும் ஆஸ்பத்திரியில் வேலைபார்ப்பவர்கள் எல்லாம் மேலிருந்து கீழ்வரை ஏதாவது ஒருவகை நுழைவுத்தேர்வில் நுழைந்து தேர்வு பெற்று வேலையில் அமர்ந்திருப்பவர்கள். ஆனாலும் ஒவ்வொரு நிலையிலும் அவரவர் நிலைக்குத்தக்கப்படி வேலையில் அசிரத்தை, கவனக்குறைவு, ஏன்?

    கல்வியறிவு என்பது எல்லா குறைகளையும் போக்கவல்லது என்ற கருத்து சிலருக்கு உண்டு. கல்வி என்னும் பெயரில் இப்பொழுது நடக்கும் கேலிக்கூத்து நம்பமுடியாததாக இருக்கிறது.

    சென்ற ஆண்டு என்னால் உட்கார்ந்து எழுதமுடியாத அளவிற்கு சில நாட்கள் உடல்நலம் குன்றியிருந்தது. தமிழ் தெரிந்த இளைஞர் யாராவது கிடைத்தால் எழுதும் வேலை கொடுக்க எண்ணி யாரோ நண்பர் செய்த சிபாரிசின் பேரில் ஒரு இளைஞனை நியமித்தேன். பையன் வக்கிணையாகப் பேசினான். தமிழக அரசியலைப் பிட்டுப்பிட்டு வைத்தான். ப்ளஸ்டூ ஒரு வருஷம் படித்திருந்ததாகச் சொன்னான். வறுமை காரணமாக பன்னிரண்டாம் பரிட்சைக்கு உட்கார முடியவில்லை என்றான். அவன் பேச்சில் மயங்கி நான் ஏற்கனவே எழுதிய ரஃப் காப்பியை ஃபேர் காப்பி செய்துவரச் சொன்னேன்.

    மறுநாள் அவன் காண்பித்ததைப் பார்த்து பெரிய ஏமாற்றம் மட்டுமில்லை. அதிர்ச்சியும் மனச்சோர்வும் எற்பட்டன. ஆங்கிலம் அந்நிய மொழி. ஹிந்தி வடமொழி என்று அதில் பிழைகள் இருக்கலாம். 11-ம் வகுப்பு படித்த ஒரு இளைஞன் அதுவும் ஒண்ணாம் வகுப்பிலிருந்து 10 வருஷங்கள் தன் தாய் மொழியில் படித்தவன் பிழைகள் செய்வானானால் யாரைக் குறை சொல்வது?

    கல்வியின் தரத்தையா? கல்விக் கூடங்களையா? உபாத்தியாயர்களையா? அரசையா?

    தபாலாபீஸில், ரயில் நிலையங்களில், விமான நிலையங்களில், அலுவலகங்களில், குறைகள், தடங்கல்கள், அலட்சியங்கள், கால விரயங்கள் ஏற்படுகின்றனவே, இவற்றிற்கு யார் பொறுப்பு?

    ஆஸ்பத்திரியில் சமயத்தில் செயல்படாத சில ஊழியர்களின் அலட்சியத்தால் பொறுப்பின்மையால் உயிர்கள் பலியாகின்றனவே, அதற்கு யார் பொறுப்பு?

    இந்தப் பொறுப்பின்மை ஓரளவுக்குப் பழகிப்போய்விட்டாலும் என்னை இவை மிக ஆழமாக பாதிக்கின்றன. எவ்வளவோ பேர்களிடம் இதைப்பற்றி விவாதித்தாகிவிட்டது. இந்தப் பொறுப்பின்மைக்குப் பல நிபுணர்கள் பலவித கோணங்களில் பதில்சொல்கிறார்கள்.

    ஒரு நண்பர் கல்வி முறையைக் குறை கூறுகிறார்.

    "திறமைக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டது. பொறுப்பில்லாத பிரஜைகளாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1