Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Naveena Gnana Mozhigal – Part 1
Naveena Gnana Mozhigal – Part 1
Naveena Gnana Mozhigal – Part 1
Ebook141 pages36 minutes

Naveena Gnana Mozhigal – Part 1

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே. நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு. அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகி விட்டன.

இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும். இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும். பெரிய சொற்பொழிவை ஆற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும். எல்லா சந்தர்ப்பங்களிலும் பயன்படும் ஞான மொழிகள் இவை.

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக் கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள் பத்திரிகைகள் மற்றும் இதர நூல்களிலிருந்து தொகுக்கப்பட்ட சுமார் ஐநூறுக்கு மேற்பட்ட அருமையான நவீன ஞானமொழிகளை இந்த முதல் பாகத்தில் படிக்கலாம். இதைப் படிப்போர் சிரிக்கலாம்; அத்தோடு பல்வேறு விஷயங்களைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்கலாம். இதனால் பயனும் பெறலாம்.

Languageதமிழ்
Release dateSep 2, 2023
ISBN6580168210068
Naveena Gnana Mozhigal – Part 1

Related to Naveena Gnana Mozhigal – Part 1

Related ebooks

Reviews for Naveena Gnana Mozhigal – Part 1

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Naveena Gnana Mozhigal – Part 1 - Santhanam Srinivasan

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    நவீன ஞான மொழிகள் - பாகம் 1

    Naveena Gnana Mozhigal – Part 1

    Author:

    சந்தானம் சீனிவாசன்

    Santhanam Srinivasan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/santhanam-srinivasan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    அணிந்துரை

    1. மதிப்பெண்ணும் மதிக்காத பெண்ணும்!

    2. உலகில் தலைசிறந்த ஜோடி!

    3. ரேஷனும் பேஷனும்!

    4. கடவுளும் மனைவியும்!

    5. நம்ம பொண்ணுங்க! நம்ப பசங்க!

    6. வேதனையும் சாதனையும்

    7. ரேஷன் கார்டும், ஆதார் கார்டும்

    8. வாழ்க்கையும் வழுக்கையும்

    9. பொறுமையும் பொறாமையும்

    10. பேச்சும் மௌனமும்

    11. முடியும் ஆனா முடியாது

    12. ‘அ’க்கு அடுத்து ‘ஆ’

    13. வேண்டியதும் வேண்டாததும்

    14. கல்லும் சொல்லும்

    15. முட்டாளும் புத்திசாலியும்

    16. பாவமும் பாசமும்

    17. நட்பும் காதலும

    18. உண்மையும் பொய்யும்

    19. பாரமும் தூரமும்

    20. அன்பும் அந்தரங்கமும்

    21. போரும் சமாதானமும்

    22. பேனாவும் பென்சிலும்

    23. பொறுமையும் எரிச்சலும்

    24. நடிகையும் நடிகனும்

    முன்னுரை

    santhanam-compressed

    கடந்த 50 ஆண்டு காலமாக சேர்த்து வந்த நூற்றுக்கணக்கான ஜோக்ஸ் புத்தகங்கள், மற்றும் பத்திரிகைகளில் நான் படித்து ரசித்ததில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து வழங்கும் தொகுப்பு இது.

    இப்படி ஒரு தொகுப்பைச் செய்ய ஆரம்பித்ததற்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

    ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பிரசாரகர் திரு. சிவராம்ஜி எனது வீட்டிற்கு வரும் போதெல்லாம் இவற்றில் சிலவற்றைக் காண்பித்த போது அவர் இதை நன்கு பெரிய அளவில் தொகுக்கலாமே என்று அன்புரை கூறினார்.

    அவர் வார்த்தைகள் எப்போதுமே மந்திரச் சொற்களாகவே அமையும். அந்த வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்ட நான் இவற்றை முழு வீச்சில் தொகுக்க ஆரம்பித்தேன். அதன் விளைவு பிரம்மாண்டமான பீரோக்கள் முழுவதும் பெரிய பைல்கள்!

    இவற்றை அவ்வப்பொழுது படித்துப் பார்த்த அனைவரும் இந்தத் தொகுப்பையும் இதற்கான முயற்சியையும் வெகுவாகப் பாராட்டினர்.

    இந்த நூல் வெளிவரும் தருணத்தில் திரு சிவராம்ஜி அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

    2020-ஆம் ஆண்டு எனது சகோதரர் லண்டன் திரு. ச. சுவாமிநாதன் நடத்திவரும் www.tamilandvedas.com-ல் அவர் இந்தக் கட்டுரைகளைப் பிரசுரிக்க ஆரம்பித்தார். அனைவரின் கவனத்தையும் இந்த நவீன ஞான மொழிகள் ஈர்த்தன.

    இதைப் படித்து, தொகுத்து வெளியிட்டால் எல்லோரும் ரசித்து மகிழ்வார்களே என்று தொகுக்க உதவிசெய்த எனது சகோதரன் திரு. நாகராஜனுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இவற்றைத் தொகுக்கும்போது பல்வேறு விதங்களில் எனக்கு உதவிசெய்த எனது மனைவி, மகன்கள், மகள், மருமகள்கள், சகோதரர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக!

    இதைப் படித்து அவ்வப்பொழுது என்னைப் பாராட்டி ஊக்குவித்த அனைவருக்கும் எனது நன்றி.

    இதை டிஜிடல் வடிவிலும், அச்சுப் பதிப்பாகவும் கொண்டுவர முன்வந்துள்ள பெங்களூர் நிறுவனமான PUSTAKA DIGITAL MEDIA-வின் உரிமையாளர் திரு. ராஜேஷ் தேவதாஸ் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    நன்றி.

    சந்தானம் சீனிவாசன்

    சென்னை

    19-7-2023

    அணிந்துரை

    nagarajan-compressed

    காலம் காலமாக எல்லா நாகரிகங்களிலும் நிலைத்து நிற்பவை அருமையான சுருக்கமான பழமொழிகளே.

    இவை அனைத்துமே கேட்பதற்கு அருமையாக இருக்கும். சுவையான கருத்துக்களைத் தரும். அனுபவத்தின் எதிரொலியாக அவை விளங்கும்.

    இந்தப் பழமொழிகளை பெரும் புலவர்களும் மகான்களும் தம்தம் இலக்கியங்களிலும் எடுத்து ஆண்டிருக்கின்றனர்.

    நவீன அறிவியல் யுகத்தில் நமது வாழ்க்கை முறை பல்வேறு மாறுதல்களுக்கு உட்பட்டிருப்பது கண்கூடு.

    அதன் விளைவாக பழமொழிகளைப் போல நவீன ஞான மொழிகள் உருவாகிவிட்டன.

    இவை பல நாடுகளிலும் பல நாகரிகங்களைச் சேர்ந்தோர், நாடு, மொழி, அந்தஸ்து, பால், இனம், ஜாதி, வயது என்ற அனைத்து பேதங்களையும் தாண்டி அவ்வப்பொழுது உதிர்த்த மொழிகளாகும்.

    இவை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.

    பெரிய சொற்பொழிவை ஆற்றவேண்டிய அவசியம் இல்லாமல் சில வார்த்தைகளில் சொல்ல வேண்டியதைச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும்.

    இப்படிப்பட்ட நவீன ஞான மொழிகள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் போது அவற்றின் முழுப் பயனை நம்மால் பெறமுடியவில்லை.

    ஆகவே இவற்றை ஊக்கமும் உத்வேகமும் கொண்டு இதற்காகவே நேரத்தையும் நுண்ணறிவையும் அர்ப்பணித்து ஒருவர் தொகுத்தாலேயே அவற்றை நாம் ஒருசேர ஒரே இடத்தில் பெறமுடியும்.

    இப்படிப்பட்ட அரும்பணியில் தன்னை அர்ப்பணித்து இரவு, பகல் பாராமல் ஆயிரக்கணக்கான இதழ்களைப் படித்து அவற்றில் தகுதியாக உள்ளனவற்றை மட்டும் தேர்ந்தெடுத்து அவற்றை வரிசைப்படி தொகுத்தவர் திரு. சந்தானம் சீனிவாசன்.

    இதற்கான மகத்தான பின்னணியை அவர் கொண்டவர். பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட தேசபக்த, பத்திரிகையாளர் குடும்பத்தில் பிறந்ததால் இயற்கையாகவே இதை வெற்றிகரமாகச் செய்யும் நுட்பமான வழிமுறைகள் அவருக்குக் கைவந்த கலையாக ஆகியிருக்கிறது.

    அத்தோடு தொழில்ரீதியாகவும் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கும் மேற்பட்டோருக்கு சுயமுன்னேற்றம், வாழும் வழிமுறைகள், தொழிலகத்தில் முன்னேற வழிகள் உள்ளிட்ட பல பொருள்களில் அவர் பயிற்சி வகுப்புகளைப் பல ஆண்டுகள் எடுத்து வந்துள்ளார்.

    இந்தப் பயிற்சியில் பன்னாட்டு நிறுவனங்கள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், பல்துறை நிபுணர்களின் சங்கங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்கு கொண்டனர்.

    இந்தப் பயிற்சிகளில் இவரது நகைச்சுவை ததும்பிய பேச்சுக்கு ஒரு காரணமாக

    Enjoying the preview?
    Page 1 of 1