Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

China Pona Pena!
China Pona Pena!
China Pona Pena!
Ebook97 pages36 minutes

China Pona Pena!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணங்கள் உற்சாகமானவை மட்டுமல்ல... நம்மையும் உற்சாகப்படுத்தும். அதிலும் அயல் தேசத்து சுற்றுலா என்றால் அலாதி சுகம். அதை அனுபவித்த எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்தான் ‘சீனா போன பேனா'. இனி அந்த பேனாவே உங்களுடன் பேசும்!

Languageதமிழ்
Release dateNov 2, 2021
ISBN6580100907011
China Pona Pena!

Read more from Pattukottai Prabakar

Related to China Pona Pena!

Related ebooks

Related categories

Reviews for China Pona Pena!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    China Pona Pena! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    சீனா போன பேனா!

    China Pona Pena!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    அடுத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் எங்கே போவது என்று மகள்கள், மருமகன்கள், பேத்திகள் என அனைவருமாக உட்கார்ந்து கலந்துரையாடல் நடத்தியபோது வழக்கம்போல உலக உருண்டையில் இருக்கிற எல்லா நாடுகளையும் எல்லோரும் சொன்னார்கள்.

    சீட்டுக் குலுக்கிப் போட்டுதான் பயணம் செய்யும் நாட்டைத் தேர்வு செய்ய வேண்டும் போன்ற சூழ்நிலை உருவானது. எந்த சினிமா? எந்த ஓட்டலில் ‘டின்னர்?’ எங்கே ‘ஷாப்பிங்?’ என்றால் உடனே முடிவு எடுத்துவிடலாம். இது அப்படி இல்லையே!

    முழு குடும்பமுமாகப் போவதாகத் திட்டம். ஒருவர் ஒரு நாட்டைச் சொன்னால், அந்த நாட்டை இன்னொருவர் பார்த்திருப்பார். வேறு நாட்டைச் சொன்னால், அந்த ‘டூரு’க்கு பதினைந்து நாட்கள் ஒதுக்க வேண்டியிருக்கும். அத்தனை நாட்கள் ஒதுக்க முடியாது என்று பிரச்சினை வரும். அல்லது பெரிய ‘பட்ஜெட்’டாக வந்து நிற்கும்.

    ‘மிஸ்டர் கூகுளை’ துணைக்கு வைத்துக்கொண்டு பேனா - பென்சில் சகிதம் எங்கள் ‘பட்ஜெட்’, கூடவே இத்தனை நாட்கள் என்று நிர்ணயித்துக்கொண்டு திட்டமிடத் தொடங்கினோம்.

    மணிக்கணக்காக அலசியும் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. ஒரு குடும்பத்துக்கு ஒத்து வரும் தேதிகள், இன்னொரு குடும்பத்துக்கு சரியாக ஒத்து வரவில்லை. வேலைக்கு விடுப்புப் போடுவது, பள்ளிக்கூடத்துக்கு விடுப்புப் போடுவது என்று ஏதாவது காரணங்கள் வந்து குறுக்கே நின்றன.

    எந்த முடிவும் எடுக்காமலேயே வீட்டு சபை கலைந்தது. பிறகு, என் மனைவியிடம், நம் குடும்பத்தினர் அத்தனை பேர் சேர்ந்து ஏழெட்டு நாட்கள் போக வேண்டும் என்றால்தானே இத்தனைப் பிரச்சினை வருகின்றன? ‘குரூப் டூரில்’ நாம் இருவர் மட்டும் போனால் என்ன? என்று நான் கேட்டேன்.

    இந்த இடத்தில் என்னுடைய மனைவியின் ஒரு குணாதிசயத்தைச் சொல்ல சந்தர்ப்பம் அமைகிறது. அவருக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணம் என்றால் அத்தனை உற்சாக பரவசமும் ஏற்படும். நகை, புடவை மீது மோகம் இல்லை. ஆனால், பல வெளிநாடுகள் சுற்றிப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் அதிகம்.

    ஆகையால், யாரோடு போனால் என்ன? சரி... திட்டமிடுங்கள் என்று உடனே பச்சைக்கொடி காட்டினார்.

    திருமணமான சில வருடங்களில் நான், மனைவி, என் இரண்டு மகள்கள் (அப்போது அவர்கள் சிறுமிகள்!) வட இந்தியாவுக்கு பத்து நாட்கள் ‘குரூப் டூர்’ போயிருக்கிறோம்.

    அந்த அனுபவம் வித்தியாசமாக இருக்கும். இருபத்தைந்து அல்லது முப்பத்தைந்து பேர் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமே இல்லாமல் புறப்பட்டுச் சென்று... பிறகு அறிமுகமாகி, பழக்கமாகி, ‘டூர்’ முடியும்போது நல்ல நண்பர்களாகவே மாறிவிடுவதுண்டு!

    முன்பெல்லாம் ரெயில் பயணங்களில் நம்முடன் பயணிக்கும் நம் குடும்பத்தினரிடம் பேசுவதைவிடவும் அறிமுகம் இல்லாத சக பயணிகளிடம்தான் அதிகம் பேசுவோம். இப்போது எல்லோரும் தனித் தனி தீவுகளாகி, எந்தப் பயணத்திலும் யாரும் தன் குடும்பத்தினர் தாண்டி சக பயணிகளிடம் எந்தப் பேச்சும் வைத்துக்கொள்வதில்லை என்றாகிவிட்டது.

    இருக்கவே இருக்கிறது புத்தகம் அல்லது ‘செல்போன்’. பேசும் அந்த அனுபவத்தை இவை பிடுங்கிவிட்டன.

    படுக்கணும்! ‘பெர்த்’ போடலாமா?

    இந்த ‘லக்கேஜ்’ யாருது? எங்களோடதை எங்க வைக்கிறது?

    அந்த ‘லைட்’டை ‘ஆஃப்’ பண்ணிடுறீங்களா?

    ‘அப்பர் பெர்த்’ல என் ‘வைஃப்’ ஏற முடியாது! நீங்க மாறிக்க முடியுமா?- இப்போது சக பயணிகளிடம் மேற்கண்ட உரையாடல்களை மட்டுமே பேசுகிறோம். பஸ்சில் அதுவும் கிடையாது!

    நாங்கள் முன்னர் சென்ற வட இந்திய ‘குரூப் டூரின்’ போது அந்தக் காலகட்டத்தில் ‘செல்போன்’ என்பதே இல்லை என்பதால் எல்லோரும் சகஜமாக பேசிப் பழகினோம்.

    வெவ்வேறு நம்பிக்கைகளும், பழக்க வழக்கங்களும் கொண்ட வெவ்வேறு மொழி பேசும் பல வகை மனிதர்களுடன் பத்து நாட்கள் சேர்ந்து பயணிப்பதும், ஊர் சுற்றிப் பார்ப்பதும் சுவாரசியமான விஷயமாகவே எனக்கு இருந்தது.

    ஒரு வகையில் பார்த்தால் இதுகூட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கிடைக்கும் அதே அனுபவம்தான்! அந்த ‘டூர்’ முடியும் வரை அவர்கள் தான் சக பயணிகள் என்பது சர்வ நிச்சயமான விஷயம். நாம் அதை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அவர்களிடம் மட்டும்தான் பழகியாக வேண்டும்.

    என்ன... இரண்டே வித்தியாசம்! அந்தக் கூட்டு அனுபவங்களை ‘கேமிரா’க்கள் வைத்து ஒளிபரப்பி வேறு யாரும் பார்ப்பதில்லை. அவரவர்களே உணர்வதோடு சரி! அடுத்து, அதில் போட்டியோ... பரிசோ கிடையாது.

    இப்போது... தம்பதியரான நாங்கள் இருவர் மட்டுமே எடுக்க வேண்டிய முடிவு என்பதால் எந்த

    Enjoying the preview?
    Page 1 of 1