Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Hai Hongkong!
Hai Hongkong!
Hai Hongkong!
Ebook122 pages1 hour

Hai Hongkong!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுற்றுலா என்பது அத்தருணத்தில் ஏற்படும் சந்தோஷம் மட்டுமல்ல. அதையும் தாண்டி... நிறைய அறிவுப்பூர்வமான விசயங்களை அறிந்துகொள்ள உதவும் ஓர் உன்னதமான இடம். நம் வட்டார மொழி மற்றும் பழக்கவழக்கங்களை தாண்டி, பிற நாட்டின் மொழி மற்றும் பழக்கவழக்கங்களை கண்டு ரசிப்பதற்காகவாவது நாமும் வருடத்திற்கு ஒருமுறை சுற்றுலா செல்லலாமே... வாருங்கள் இத்தருணத்திலாவது நாமும் இவர்களுடன் ஹாங்காங் வரை பயணிப்போம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100907012
Hai Hongkong!

Read more from Pattukottai Prabakar

Related to Hai Hongkong!

Related ebooks

Related categories

Reviews for Hai Hongkong!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Hai Hongkong! - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ஹாய் ஹாங்காங்!

    Hai Hongkong!

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    1

    hong-kong-attractions-victoria-peak-view-over-harbor

    "துபாய்தான்! எனக்கு ஒட்டகம் பார்க்கணும்"

    அதுக்கு ஜூவுக்குப் போனாப் போதுமே. சைனா! ஓகே?

    மூக்கால பேசற அந்த மொழி புரியாதே!

    பாங்காக்ல மட்டும் மொழி புரிஞ்சதாக்கும்!

    இலங்கை?

    பாதியை இடிச்சித் தள்ளிட்டாங்களே!

    ஸ்விட்சர்லேண்ட்?

    ஓவராக் குளிரும். ஹனிமூன் ஜோடிக்கு ஓகே. மத்தவங்களுக்கு சரிப்படுமா?

    ஃபிலிப்பைன்ஸ் கூட சூப்பரா இருக்குமாம்!

    மொரீஷியஸ் எப்படி?

    நானும் என் குடும்பத்தினரும் நடத்திய வட்ட ஸோபா விவாதத்தில் உலக வரைபடத்தில் இன்னும் கண்டுபிடித்து பெயர் சூட்டப்படாத நாடுகள் தவிர அத்தனைப் பெயர்களும் புரட்டியெடுக்கப்பட்டன.

    இப்ப அங்க வெயில்!

    அய்யோ! அது பயங்கர காஸ்ட்லி!

    டெர்ரரிஸ்ட் பிரச்னை ஏதுவுமில்லையே?

    வெஜிட்டேரியன் கிடைக்காதே!

    ஒரு வாரம் போதாது!

    ரெண்டு நாள்தான் தாங்கும்!

    ஒவ்வொரு காரணத்திற்காக போட்டியில் களத்திலிருந்த பல வேட்பாள நாடுகளும் தோல்வியைத் தழுவின.

    திடீரென்று பெயரே கொடுக்காத, போட்டியிலேயே இல்லாத ஹாங்காங் வந்து மேடையில் நின்றது.

    விட்டலாச்சார்யா படத்தில் பூதத்தின் வருகைக்கு முன்பாக வரும் புகை ஊற்று, இங்கே நடு ஹாலில் உற்பத்தியாகி அடங்கியதும்...

    திடீரென்று விர்ச்சுவல் ரியாலிட்டி பிம்பமாக ‘பகவதி’ படத்தில் வடிவேலு போல சுழன்று நின்றதும் சல்யூட் அடித்தார் ஒரு கிராஃபிக்ஸ் கோட் ஆசாமி.

    என்னப்பா நடக்குது இங்க? என்றேன்.

    வணக்கம். நான் ஹாங்காங் டூரிசம் டெவலெப்மெண்ட் ஆபீசர். யாராச்சும் ஹாங்காங் அப்படின்னு நினைச்சாலே போய் நிக்கற மாதிரி டிசைனிங்!

    டூரிசத்துல அநியாயத்துக்கு வளர்ந்திருக்கீங்கன்றதுக்காக இப்படியா? இதெல்லாம் ரொம்ப ஒவரு! பாஸ்போர்ட், விசால்லாம் வேணாமா உங்களுக்கு? இப்படி ஒரு குறுஞ் செய்திகூட குடுக்காம ஜீபூம்பா மாதிரி வந்து நின்னா எப்படிங்க? சரி... என்ன வேணும்? டொனேஷனா?

    ஆபீசர் இரண்டு ‘இஞ்ச்’ சிரித்தார்.

    உங்களுக்கு ஹாங்காங் பத்தி என்னென்ன தெரிஞ்சிக்கணுமோ, தகவல் வேணுமோ... கேளுங்க... சொல்றேன்.

    ஓ... நடமாடும் இஸ்திரி வண்டி மாதிரி... நடமாடும் கூகுள்! அப்படித்தானே? இன்ட்டர்நெட் செலவு மிச்சம். முதல்ல இந்த ஹாங்காங் எங்க இருக்கு ஆபீசர்?

    உலக உருண்டையில் பூமத்திய ரேகைக்கு...

    நாங்க என்ன பூகோளத்துல பரிட்சையா எழுதப்போறோம்? இவ்ளோ டீட்டெய்லா வேணாம். ஹைலைட்ஸ் போதும்

    கிழக்கு ஆசியாவுல சீன நாடா இருந்த ஹாங்காங்கை கொஞ்ச நாள் பிரிட்டிஷ்காரன் வெச்சிருந்தான். அப்பறம் ஜப்பான்காரன் பிடுங்கிக்கிட்டான். மறுபடி பிரிட்டிஷ்காரன் மீட்டுட்டான். இப்போ, சீன தேசம்னும் சொல்லலாம்.

    வொய் இழுவை?

    இழுக்கறதுக்கு என்ன காரணம்னா பிரிட்டீஷோட சில ஆதிக்கங்கள் அதிகார லெவல்ல இன்னும் கொஞ்சம் இருக்கு. ஒரு நாடு... டபுள் சிஸ்டம்!

    சொப்பன சுந்தரி கதையா இருக்கே! அப்போ? அங்கு என்ன மதம்?

    புத்திசம், தாவோயிசம் அது இதுன்னு நிறைய இருக்கு. ஆனா, அதிசயம் பாருங்க... நோட்டோ ஓட்டு மாதிரி... எந்த மதத்துலயும் சேராத 60 பர்ஸென்ட் பேர் இருக்காங்க!

    அட! மத சார்பில்லாத நாடு, அரசாங்கம் தெரியும். மதசார்பில்லாத மனிதர்களா? பரவால்லையே... அதுவும் 60 பர்ஸென்ட்! புவ்வாவுக்கு என்ன பண்றீங்க?

    எல்லாப் பக்கமும் கடல் வெச்சிக்கிட்டு கடல் உணவு சாப்புடாம அரிசிச் சோத்துல, பருப்பு சாதமா சாப்பிடுவோம்? கடல் சார்ந்த வர்த்தகம்... நிலப் பகுதி கம்மின்றதால நெட்டைக் கொக்கு மாதிரி அம்பது மாடி, நூறு மாடின்னு கட்டிடங்களை நாடு பூரா நட்டு வெச்சிருக்கோம். டூரிஸ்ட் அட்ராக்ஷன் மிக அதிகம்!

    இதான் முக்கியமான பாய்ண்ட். அவை யாவை என்று வரிசைப்படுத்துக!

    ஆபீசர் வரிசைப்படுத்தியபோது, மனதிற்குப் பிடித்துப் போனது.

    ஆபீசருக்குக் கறிவேப்பில்லையும் தாளித்த கடுகும் மிதக்க மோர் கொடுத்துக் கையாட்டியதும் கரைந்து போனார்.

    ஆபீசர் சொன்ன பட்டியலைத்தான் நாங்களும் எங்கள் வழியாக நீங்களும் பார்க்கப் போகிறீர்கள்.

    அடுத்த வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணம் ஹாங்காங் மற்றும் மக்காவ் என்று உறுதியானதும் பட்ஜெட் போட்டுப் பார்த்தோம். திட்டமிட்ட தொகைக்குள் வந்தது.

    அதென்ன மக்காவ்? ஒண்ணு வாங்கினா ஒண்ணு ஃப்ரீ மாதிரி... ஹாங்காங் போகிறவர்கள் மிக அருகில் இருக்கும் இந்தக் குட்டி நாட்டையும் டிக் அடிப்பது தொன்று தொட்டு இருந்துவரும் குல வழக்கமாம்.

    Enjoying the preview?
    Page 1 of 1