Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Uyirai Kavarntha Uyire!
Uyirai Kavarntha Uyire!
Uyirai Kavarntha Uyire!
Ebook103 pages48 minutes

Uyirai Kavarntha Uyire!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903553
Uyirai Kavarntha Uyire!

Read more from Pattukottai Prabakar

Related to Uyirai Kavarntha Uyire!

Related ebooks

Reviews for Uyirai Kavarntha Uyire!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Uyirai Kavarntha Uyire! - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    உயிரைக் கவர்ந்த உயிரே

    Uyirai Kavarntha Uyire

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    1

    அரச சபையில் சூரியன் நுழைய...

    அலைகள் எழுந்து நின்று கைதட்டின.

    சேலம் மத்தியச் சிறைச்சாலையில் சங்கு ஊதப் பட்டது.

    அவசர சங்கு! அனைவரையும் அழைக்கும் சங்கு!

    குவார்ட்டர்சில் இருந்த தலைமை அதிகாரி பெல்ட் கூட போட்டுக் கொள்ளாமல் உடனே விரைய... கும்பல் கும்பலாய் இருந்த கைதிகள் மையப் பகுதியின் மைதானத்திற்கு வார்டர்களால் விரட்டப்பட... வாசலில் நின்ற செண்ட்ரிகள் தங்கள் துப்பாக்கிகளை லோட் செய்து கொள்ள...

    என்ன? என்று கேட்ட தலைமை அதிகாரியிடம் பதட்டமாகச் சொன்னார் ஜெயிலர்

    ஒரு கைதி தப்பிச்சிட்டான் சார்.

    யாரது?

    கணபதி

    எப்படி?

    அதான் சார் புரியலை.

    விளையாடறீங்களா? சீட்டு கிழிஞ்சிடும் சார். அவன் இருந்த பிளாக்குல கூட இருக்கிற அத்தனை பசங்களையும் புரட்டி எடுங்க. பதில் கிடைக்கும். நான் போலீசை கூப்பிடறேன்.

    அதிகாரி தன் அலுவலக அறைக்குள் விரைய...

    வரிசை வரிசையாக நின்ற கைதிகளின் ஊடே ஜெயிலர் திடீரென்று ஒருவனின் வயிற்றில், கையில் இருந்த தடியின் முனையால் குத்த.

    அய்யோ என்றான் அவன்.

    சொல்லு கணபதி எப்படி தப்பிச்சான்?

    எனக்குத் தெரியாது சார்.

    உனக்குத் தெரியும்.

    சத்தியமா தெரியாது சார்.

    நேத்து சாயங்காலம் தண்ணித் தொட்டிக்கிட்டே ரெண்டு பேரும் பதினஞ்சு நிமிடம் பேசிக்கிட்டிருந்தீங்களா?

    ஆமாம் சார்.

    தப்பிக்கப் போறதைப்பத்தி அப்ப கணபதி எதுவும் சொல்லலையா?

    "சத்தியமா சொல்லலை.'

    அப்படின்னா உலக அரசியல் பேசினிங்களா ரெண்டு பேரும்? நாயே! சொல்டான்னா...

    முகத்தில் விழுந்த முதல் குத்துக்கு ஒரு பல் நியாயம் கேட்பதற்காக ரத்தத்தையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தது.

    சொல்லுடா.

    அடிக்காதிங்க சார். சொல்றேன்.

    சொல்லு.

    ராத்திரி ஜெயில்லேர்ந்து தப்பப் போறேன்னு என்கிட்டே சொன்னான் சார்.

    சரி.

    வேணாம்டா, மாட்டிக்குவேன்னு சொன்னேன்.

    சரி.

    மாட்டிக்காமல் தப்பிக்கறதுக்கு எனக்கு வழி தெரியும்னு சொன்னான்.

    சரி

    தப்பிச்சுப் போயி என்ன செய்யப் போறேன்னு கேட்டேன். ரெண்டு முக்கியமான காரியம் இருக்குன்னு சொன்னான். அவ்வளவுதான் சார் பேசிக்கிட்டோம்.

    மாட்டிக்காமல் எப்படி தப்பிக்கப் போறேன்னு நீ கேட்கலையா?

    இல்லை சார்.

    நீ கேட்டே!

    சத்தியமா கேட்கலை சார்.

    இன்னும் ரெண்டு பல்லு போனாத்தான் இதுக்கு மேல பேசுவே நீ.

    அந்த கைதி சரமாரியாக குத்துக்கள் வாங்கிக் கொண்டான்.

    ***

    2

    சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.

    கவுஹாத்தி எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

    அவன் இறங்கிக் கொண்டான். கையில் சுருட்டி வைத்திருந்த ஒரு வார இதழைத் தவிர வேறெதுவும் இல்லை. லூசான முழுக்கை சட்டை அணிந்திருந்தான். லூசான பேண்ட் அணிந்திருந்தான். லேசாக தாடியிருந்தது. கண்களில் தூக்கம் இருந்தது.

    வெளியே வந்தான்.

    வரிசையாக நின்ற ஆட்டோக்களைப் புறக்கணித்தான்.

    வால்டாக்ஸ் ரோட்டில் செல்வி சலூனுக்குள் நுழைந்தான், மூன்று நாற்காலிகளிலும் ஆட்கள் இருந்தார்கள்.

    பெஞ்சில் அமர்ந்தான். செய்தித் தாள்களை அள்ளி மடியில் வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் புரட்டினான்.

    வாங்க சார். கட்டிங்கா, ஷேவிங்கா?

    ரெண்டும். தலையில இவ்வளவு முடி வேணாம். ஒட்ட வெட்டிடுங்க. மீசை இவ்வளவு அடர்த்தியா வேணாம். அதையும் குறைச்சிடுங்க.

    முக்கால் மணி நேரம் கழித்து வெளியே வந்தான்.

    தனியாய் நின்ற ஆட்டோவை அணுகினான்.

    சவாரி வர்றியாப்பா?

    குந்து சார். எங்கே போகணும்?

    எங்கே போகலாம், நீயே சொல்லு.

    திரும்பிப் பார்த்தான் டிரைவர்.

    புரியலையா?

    புரியுது. சிந்தாதரிப்பேட்டையில் ஒரு வீடு இருக்கு சார். கட்டில் மெத்தைன்னு சகல வசதி. போட்டுமா?

    வீடு வேணாம்ப்பா.

    அப்ப லாட்ஜுக்குப் போகச் சொல்றீங்களா? வச்சி நடத்தற லாட்ஜூன்னா எனக்குத் தெரிஞ்சி மாம்பலத்தில ஒரு சந்தில் செந்தில்வேலவன் லாட்ஜ்தான் இருக்கு.

    ரூம் வசதியாக இருக்குமா?

    அதெல்லாம் ஷோக்கா இருக்கும். நாலு மாடி சார்.

    சரி. அங்கேயே போ.

    லாட்ஜின் மானேஜர் மூக்கு முழுக்க மூக்குப்

    Enjoying the preview?
    Page 1 of 1