Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thinnai Vaitha Veedu
Thinnai Vaitha Veedu
Thinnai Vaitha Veedu
Ebook94 pages28 minutes

Thinnai Vaitha Veedu

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. At the same time he has penned lot of novels in all other genres like love, social, comedy. He has also worked as screenplay and dialogue writer for more than 25 tamil movies. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan. First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil. Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.
Languageதமிழ்
Release dateApr 8, 2020
ISBN6580100905242
Thinnai Vaitha Veedu

Read more from Pattukottai Prabakar

Related to Thinnai Vaitha Veedu

Related ebooks

Reviews for Thinnai Vaitha Veedu

Rating: 5 out of 5 stars
5/5

1 rating1 review

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

  • Rating: 5 out of 5 stars
    5/5
    Very nice story author has lived the character seldom stories sticks in our mind and heart one such is this he has dragged the readers into the story no words to explain the feelings

Book preview

Thinnai Vaitha Veedu - Pattukottai Prabakar

http://www.pustaka.co.in

திண்ணை வைத்த வீடு

Thinnai Vaitha Veedu

Author:

பட்டுக்கோட்டை பிரபாகர்

Pattukottai Prabakar

For more books

http://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

All other copyright © by Author.

All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

பொருளடக்கம்

அத்தியாயம் 1

அத்தியாயம் 2

அத்தியாயம் 3

அத்தியாயம் 4

அத்தியாயம் 5

அத்தியாயம் 6

அத்தியாயம் 7

அத்தியாயம் 8

அத்தியாயம் 9

அத்தியாயம் 10

1

விழித்துக் கொண்டபோது, ரயில் ஏதோ ஒரு ஸ்டேஷனில் நின்றிருந்தது. விடியலின் மெல்லிய உறுத்தாத வெளிச்சம் கண்களை மிக இடுக்கி நேரம் பார்க்க வைத்தது.

நான் சிரமப்படுவதைப் பார்த்த அந்த இளைஞன், அஞ்சரை ஆகுது என்றான். நான் கையை ஊன்றி மிடில் பெர்த்தில் தலையை இடித்துக் கொள்ளாமல் எழுந்து கொண்டே புடவை நெகிழ்ந்திருந்தது. ஓரங்களில் பூப்போட்ட சால்வையை மடித்து விட்டுக் கீழே தேடினேன்.

இதோ இருக்கும்மா.

சங்கோஜப்படாமல் அந்த இளைஞன் குனிந்து, உள்ளே நகர்ந்து சென்றிருந்த என் ஸ்லிப்பர் செருப்புகளைக் கையால் எடுத்துக் கால்களுக்கு அருகில் வைத்தான். இரவு வெகுநேரம் இலக்கியம் பற்றி உரையாடியதில் ஏற்பட்ட அபிமானமா அல்லது வயதிற்கு அவன் தருகிற இயல்பான மரியாதையா என்று புரியவில்லை.

நான் அணிந்து கொண்டு டாய்லெட் அறைக்குச் சென்று திரும்பியபோது, டிராவலிங் டிக்கெட் எக்ஸாமினர், அடுத்தது தீர்த்தபுரம் ஸ்டேஷன்தான் என்றார், நேற்று நான் எத்தனை மணிக்கு போகும் என்று கேட்டதை நினைவு வைத்துக்கொண்டு. ரயில் கூவிவிட்டு நகர்ந்தது.

என் பகுதியில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அவசியமில்லை என்று பட்டதால் அணைத்துவிட்டு அமர்ந்த போது இளைஞனின் மனைவி ஃபிளாஸ்க் வெந்நீரில் பவுடர் கரைத்து, குழந்தைக்குப் பால் தயாரித்துக் கொண்டிருந்தாள். குழந்தையை அவன் வைத்திருந்தான், எந்த வினாடியும் தன் பேண்ட்டை நனைத்து விடுமோ என்ற நினைப்புடன். அவளுக்கு உதவியாகச் செய்யும் ஒரு சலுகையைப் போல, குழந்தை விட்டுவிட்டு அழுதது.

சீக்கிரம் பத்மா, அழுவுதில்லே?

இளைஞன் காட்டிய அவசரத்தில் குழந்தையின் பசியைவிட தன்னிடமிருந்து விரைவில் குழந்தை கைமாறினால் தேவலை என்பதே பிரதானமாக தொனித்தது.

எனக்கு லேசாகச் சிரிப்பு வந்தது. இவன் என்றில்லை, எல்லா இளைஞர்களுமே குழந்தை பராமரிப்பில் சில எழுதப்படாத சட்டங்களைக் கடைப்பிடிக்கிறார்கள்.

குழந்தையைக் குளிப்பாட்டி, உடுத்தி, பவுடர் போட்டு பொட்டு வைத்து அலங்கரித்ததும் தூக்கிக் கன்னங்களில் மாறி, மாறி முத்தமிடுவார்கள். கையில் தூக்கி வைத்துக் கொண்டு வெளியே உலாவுவார்கள், ஒருவித பெருமிதத்துடன். அதே குழந்தை பசிக்கோ அல்லது உறக்கத்துக்கோ அழும்போது....

ஏய்! அங்கே என்னடி பண்றே? குழந்தை அழுவுது பாரு. குழந்தை டாய்லெட் போய்விட்டால் தீப்பற்றிக் கொண்டது போல அலறல்- சீக்கிரம் வந்து தொலையேன். பாரு, உடம்பெல்லாம் அப்பிக்கிச்சி, கூப்பிட்டா உடனே வந்தாதானே…

கொஞ்சவும், முத்தமிடவும் மட்டும்தானா உரிமை? மற்றவற்றுக்கு மனைவிதான் என்பது யார் இயற்றிய சட்டம்?

நல்லாத் தூங்கினிங்களா மேடம்?

குழந்தையைக் கை மாற்றிவிட்ட இளைஞன் கேட்டான், இரவு உரையாடல்களை மீண்டும் துவக்குபவன் போல. ரயிலுக்குள்ளேயும் கொசுத் தொல்லைங்க. போதாததுக்கு மேல் பர்த்காரர் விட்ட குறட்டைச் சத்தம் ஹாரிபிள் --- பேக்கரில் அடுப்பு ஊதின மாதிரி!

நான் புன்னகைத்தேன். அவனுடைய உவமை மட்டும் பிடித்திருந்தது. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கொஞ்சமாவது கலைஞன் இருக்கிறான். ஒரு சமயம் இசைக் கலைஞன். ஒரு சமயன் நடிப்புக் கலைஞன். ஒரு சமயம் எழுத்தாளனின் கற்பனைக் கலைஞன்.

என் ஏர்-பில்லோவை எடுத்துக் காற்று நீக்கி மடித்து ஜிப் வைத்த பேகில் வைத்துக் கொண்டேன். ஜன்னலின் கண்ணாடிக் கதவையும், இரும்பு ஷட்டரையும் ஏற்றி விட்டதும் ஜிலீர் என்று காற்று முகத்தில் பரவசமாகப் பாய்ந்தது.

மிக தூரத்தில் பனி அலை. ரயிலை ஒட்டி இணையாகத் தார்ச்சாலை. அதில் கடந்த ஒரு பஸ்ஸின் டாப்பில் பலாப் பழங்கள் தெரிந்தன. சட், சட்டென்று கடந்த மின்சாரக் கம்பங்களில் உயர வாக்கில் ஒரு சோப்பு விளம்பரம் ஒட்டியிருந்தார்கள். பச்சை பச்சையாக வயல் சதுரங்களும், வாய்க்காலில் மார்பு வரை பாவாடையை ஏற்றிக் கட்டிக் கொண்டு குளித்த பெண்களும், வைக்கோல் ஏற்றின இரட்டை மாட்டு வண்டிகளும், ரயில் சத்தத்தில் பதறி மேட்டில் தாவும் ஆடுகளும் தங்கள் மௌனங்களில் ஒரு மொழியில்லாத கவிதையை ஒளித்து வைத்திருப்பதாகப் பட்டது.

இன்னும் பத்து நிமிடங்களில் தீர்த்தபுரம் என்பதும் ஊரை படுவேகமாக நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதும் -சாக்லேட்டைப் பார்த்த மாத்திரத்தில் சிறுவர்களின் கண்களில் விரியும், சிரிப்பைப் போல ஒருவித குழந்தைத்தனமான உற்சாகத்தை மனதிற்குள் வீசிக் கொண்டிருந்தது.

கடைசியாக எப்போது வந்தேன்?

ஏழு வருடமிருக்குமா? நிலத்தை விற்றபோது சப்ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் பத்திரப் பதிவுக்காகக் கையெழுத்துப் போட வந்தது.

Enjoying the preview?
Page 1 of 1