Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

'THAI' Manney Vanakkam
'THAI' Manney Vanakkam
'THAI' Manney Vanakkam
Ebook136 pages1 hour

'THAI' Manney Vanakkam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுற்றுலா பயண அனுபவங்களைக்கூட தான் எழுதுகிற த்ரில் நாவல் போல ட்விஸ்ட் வைத்தும், திகைப்பு கலந்தும் எழுதி சுவாரஸ்யப் படுத்தியிருப்பதுதான் பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பெஷல். தாய்லாந்து நாட்டின் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளவும், அங்கே உற்சாகமாக சுற்றுலா செல்லவும் கையோடு வைத்திருக்க வேண்டிய பயணக் கையேடு இது. இனி தாய்லாந்து நாட்டை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் ரசனையான பார்வை வழியே பார்த்து ரசிக்கலாமா? வெல்கம்...

Languageதமிழ்
Release dateNov 17, 2021
ISBN6580100907010
'THAI' Manney Vanakkam

Read more from Pattukottai Prabakar

Related to 'THAI' Manney Vanakkam

Related ebooks

Related categories

Reviews for 'THAI' Manney Vanakkam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    'THAI' Manney Vanakkam - Pattukottai Prabakar

    https://www.pustaka.co.in

    ‘THAI’ மண்ணே வணக்கம்

    ‘THAI’ Manney Vanakkam

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    https://www.pustaka.co.in/home/author/pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    உல்லாச நடையில் தாய்லாந்து சுற்றுலா!

    பயணம் என்பது பரவச தரிசனம். அதை அனுபவித்து அதே சிலிர்ப்பை எழுத்திலும் வடிப்பது ஒருசில எழுத்தாளர்களுக்கே கைவந்த கலை. அந்த பயண இலக்கிய வரிசையில் முகம் காட்டி முத்திரை பதித்திருக்கிறார் பாசமிகு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.

    தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா சென்று வந்த அனுபவங்களை ‘புதிய தலைமுறை’ வார இதழில் ‘தாய் மண்ணே, வணக்கம்’ என்ற தலைப்பில் தனக்கே உரிய உற்சாகக் குறும்பும், உல்லாச நடையும் மிளிர புதுப்புது தகவல்களோடு பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய கட்டுரைகள், வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது. அவற்றின் தொகுப்பே வரும் இந்த நூல்.

    சுற்றுலா பயண அனுபவங்களைக்கூட தான் எழுதுகிற த்ரில் நாவல் போல ட்விஸ்ட் வைத்தும், திகைப்பு கலந்தும் எழுதி சுவாரஸ்யப்படுத்தியிருப்பதுதான் பட்டுக்கோட்டை பிரபாகர் ஸ்பெஷல். தாய்லாந்து நாட்டின் சிறப்பம்சங்களை அறிந்துகொள்ளவும், அங்கே உற்சாகமாக சுற்றுலா செல்லவும் கையோடு வைத்திருக்க வேண்டிய பயணக் கையேடு இது. இனி தாய்லாந்து நாட்டை பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின் ரசனையான பார்வை வழியே பார்த்து ரசிக்கலாமா? வெல்கம்...

    அன்புடன்

    எம்.பி. உதயசூரியன்

    அன்புள்ள உங்களுக்கு... வணக்கம்.

    வெளிநாடு பயணம் என்பது சில பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே விருப்பமாய் இருந்ததால் கல்லூரி முடித்த நேரத்தில் எப்போதோ வாங்கப் போகிற காரை ஓட்ட டிரைவிங் கற்று லைசென்சும் எடுத்தது போலவே முதல் காரியமாக பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன்.

    அப்போது கெட்டியாய் அட்டை போட்டிருப்பார்கள். இப்போது உள்ள பாஸ்போர்ட்டுக்கு அண்ணன் போல எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸில் இருக்கும். அந்த பாஸ்போர்ட்டும் சரி, அதன் பிறகு ரொம்ப சிரத்தையாய் தவறாமல் புதுப்பித்த அடுத்தடுத்தடுத்தடுத்த (அச்சுப்பிழை இல்லை பாஸ்!) பாஸ்போர்ட்டுகளும் சரி... கன்னி கழியாமலேயே முதிர் கன்னிகளாயின.

    சொந்தக் காசில் முதன்முறையாக சிங்கப்பூர் போக 50 வயதைத் தாண்ட வேண்டியதாயிற்று, தமிழ் எழுத்தாளன் சார் / மேடம்!

    ஸ்டார்ட்டிங் ட்ரபிள் கடந்துவிட்டால் ஸ்மூத்தாக ஓடும் சில வாகனங்கள் போல... வெளிநாட்டுப் பயணங்கள் பிறகு வரிசையாக சாத்தியமாகத் துவங்கி தாய்லாந்து, மலேஷியா, ஹாங்காங், மக்காவ், துபாய் (இது தினத்தந்தி வழங்கிய...) என்று தொடர்ந்தது.

    உலக மேப்பை உருண்டை சுழற்றிப் பார்த்தால்... இதெல்லாம் அரைக்கால் சதவிகிதம் என்று உங்களுக்கே தெரியும். எத்தனை டிக் அடிக்கப் போகிறேன் என்று பார்ப்போம்.

    பயணக் கட்டுரைகளுக்கு பிதாமகர்கள் பலர் இங்கு உண்டு. எனக்கு மணியன், சாவி இவர்களின் கட்டுரைகள் பிடிக்கும். நாமே அந்த நாட்டுக்கு, இடத்துக்குப் போன உணர்வைக் கொடுத்துவிடுவார்கள்.

    ‘புதிய தலைமுறை’ இதழில் நான் எழுதிய தாய்லாந்து நாட்டின் பயணக் கட்டுரைத் தொடரான ‘தாய் மண்ணே, வணக்கம்’ இந்தவகை எழுத்தில் என் முதல் முயற்சி.

    ஆசிரியர் எம்.பி. உதயசூரியன் இருக்கிறாரே... ‘ஜோக்’ என்கிற வார்த்தையைச் சொன்னாலே சிரிப்பவர். ‘உற்சாகம்’ என்கிற வார்த்தையை உச்சரிக்கும்போதே உற்சாகமாகி விடுகிறவர். எவரின் சிறந்த படைப்பாய் இருந்தாலும் சூப்பர்லேடிவ் டிகிரியில்தான் பாராட்டுவார்.

    இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் அத்தியாயம் படித்துவிட்டு அவருக்கே உரிய வழுக்கும் வசீகர வெண்ணெய் நடையில் தெரிவித்த பாராட்டு தந்த உற்சாக மூடில் மொத்தமும் எழுதினேன்.

    ஒரு டூரிஸ்ட் கைடு போல எழுதினால் டாக்குமெண்ட்ரித்தனமாக இருக்கும் என்பதால் என் பார்வையில் நிகழ்ந்த, உணர்ந்த அனுபவங்களை மட்டும் வழங்கி வந்தேன். இந்தத் தொடரின் வெற்றியின் விளைவாக ஹாங்காங் பயண அனுபவங்களையும் ‘ஹாய் ஹாங்காங்’ என்னும் தலைப்பில் எழுதினேன். இதுவும் புத்தகமாக வெளியே வர தற்சமயம் ஒப்பனையில் இருக்கிறது.

    பிரியங்களுடன்,

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    1

    "தாய்லாந்து டூர் பிளான் பண்ணிட்டிருக்கேன் என்று நான் யாரிடம் சொன்னாலும், ஃபிரெண்ட்ஸோடதானே?" என்றார்கள்.

    இல்ல... பொண்டாட்டியோட என்றதும்... நான் ஏதோ ஒரு அறமற்ற செயலைச் செய்யப் போவதுபோல ஒரு லுக்.

    ‘இவனுக்கு என்னதான் ஆச்சு’ என்று சினிமாவுக்கு முன்னான புகை மண்டலக் கேள்வி மாதிரியான ஒரு லுக்.

    நேற்றுதான் புட்டி பாட்டிலை ஓரமாக வைத்துவிட்டு நடைவண்டியை உருட்டத் துவங்கிய பாப்பாவைப் பார்ப்பதுபோல ஒரு லுக்.

    எனக்கு கேள்வி புரியவில்லையோ என்று நினைத்து, எதுக்குக் கேக்கறேன்னு தெரியுமில்ல? என்று சிலரிடமிருந்து விளக்கத் துணைக் கேள்வி வேறு.

    ஒரு பஞ்ச்சான பதில் சொல்ல வேண்டுமே என்று மூளைக்குள்தேடி, ஹலோ... எல்லா தெருவுலயும் பத்து கடைக்கு ஒரு கடை மதுக்கடை இருக்கற அதே பாண்டிச்சேரிலதான் அன்னை ஆசிரமமும் இருக்கு. அந்த மாதிரி... பத்து கடைக்கு ஒரு கடை மஸாஜ் பார்லர் இருக்கற அதே பாங்காக்குலதான் கோல்டன் புத்தர் கோவிலும் இருக்கு. தாய்லாந்துக்கு குடும்பத்தோடவும் போகலாம் ப்ரோ என்றேன்.

    மகா உண்மையான பதில் மனதுக்குள் பதுக்கி வைத்தது இப்போது சொல்லப்படுகிறது. அதாகப்பட்டது… இருபது நாட்கள் அமெரிக்கா டூர் என்று பேச ஆரம்பித்து... அது இளைத்து பதினைந்து நாட்கள் யூரோப் டூராக மாறி... அதுவும் வத்தலாகி பத்து நாட்கள் ஆஸ்திரேலியா டூர் என்று வதங்கி... அதுவும் தொத்தலாகி தாய்லாந்து, மலேஷியா ஏழு நாட்கள் என்று ஏக மனதாக (பொய்!) செட்டில் ஆனதற்குப் பின்னணியில் இருந்தது நாலே விஷயம்தான்... காசு... பணம்... துட்டு... மணி... மணி... (ஓ... அஞ்சி விஷயமோ?)

    தமிழனின் தேசிய வியாதிகளில் ஒன்று எனக்கும் உண்டு. அதாவது எ...ப்பவோ வாங்கப் போற காரை ஓட்ட இப்பவே டிரைவிங் லைசென்ஸ் எடுத்து வைப்பது! நான் பட்டுக்கோட்டையில் இருந்தபோது சில பத்தாண்டுகள் முன்பே அம்பாஸிடர் காரை ஓட்டிப் பழகி டிரைவிங் லைசென்ஸ் வாங்கி வைத்தேன். வாங்க நினைத்தது பிரிமியர் பத்மினி என்றழைக்கப்பட்ட பர்சுக்கு அடக்கமான ஃபியட். பின்னொரு காலத்தில் வாங்கிய முதல் காரோ மாருதி 800.

    அந்த மாதிரிதான் பாஸ்போர்ட்டும். கறுப்பு வெள்ளை புகைப்படத்துடன் ரேஷன் கார்டு சைசில் நான் வைத்திருந்த முதல் பாஸ்போர்ட் வாங்குவதற்கு இப்போது மாதிரி பெரிய மெனக்கெடல்களோ கெடுபிடிகளோ இல்லை. நாடி ஜோதிடர்கள் போல கைரேகை, கண் ரேகை எல்லாம் கேட்கப்படவில்லை.

    பிறகு அந்த பாஸ்போர்ட்டை தவறாமல் புதுப்பித்து புதுப்பித்து புதுப்பித்து புதுப்பித்து (யெஸ்... 4 தடவை) முதல் தடவையாக இரண்டு வருடங்கள் முன்பாகத்தான் என் இரண்டாவது மகள் ஸ்வர்ண ப்ரியா மற்றும் மருமகன் ஷியாமின் தட்டலின் பேரில் (இப்ப நீங்க வரப் போறிங்களா இல்லையா?) நான்கே நான்கு நாட்கள் சிங்கப்பூர் சென்று வந்தேன்.

    மற்றபடி பாஸ்போர்ட்டின் அத்தனைப் பக்கங்களும் ஏதாவது கணக்கு எழுதலாம்போல காலியாகவே இருந்தது. இப்போதுதான் மலேஷியா மற்றும்

    Enjoying the preview?
    Page 1 of 1