Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Makkal Sol Keleer..!
Makkal Sol Keleer..!
Makkal Sol Keleer..!
Ebook108 pages36 minutes

Makkal Sol Keleer..!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“மக்கள் சொல் கேளீர்” என்ற இந்நூலை,ஒரு சிறந்த புத்தகம் செய்வது என்ன? வாசிக்க வைக்கும்... நேசிக்க வைக்கும்... தொடர்ந்து சுவாசிக்க வைக்கும். அப்படித்தான் இந்நூல்.

Software தொழிலையும் துப்புரவுத் தொழிலையும் ஒப்பீடு செய்துள்ளமை, மாணவர் மட்டுமல்ல பெற்றோருக்கும் பொது சமுதாயத்துக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

“Software இல்லாமல் வாழலாம். துப்புரவு இல்லாமல் வாழமுடியாது” பெற்றோரும் ஆசிரியரும், ஏன், ஒவ்வொருவரும் படிக்கவும் பின்பற்றவும் வேண்டிய நூல்.

Languageதமிழ்
Release dateMay 21, 2022
ISBN6580116508455
Makkal Sol Keleer..!

Read more from Kavi. Muruga Barathi

Related to Makkal Sol Keleer..!

Related ebooks

Reviews for Makkal Sol Keleer..!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Makkal Sol Keleer..! - Kavi. Muruga Barathi

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    மக்கள் சொல் கேளீர்..!

    Makkal Sol Keleer..!

    Author:

    கவி. முருகபாரதி

    Kavi. Muruga Barathi

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kavi-muruga-barathi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    முன்னுரை

    ஆசிரியர் குறிப்பு

    என்னுரை

    விரிந்து பாருங்கள்...! புரிந்து கொள்ளுங்கள்...!

    கை குலுக்குங்கள் கை நீட்டாதீர்கள்

    கையைப் பிடிக்காதீர்கள் கையைக் கொடுங்கள்

    கை போடுங்கள் கை போட அனுமதிக்காதீர்கள்

    பார்வையை மாற்றுங்கள்...! பிள்ளைகளை ஏற்றுங்கள்...!

    முன்னுரை

    Rtn.PHF.PP. வி. மோகன் B.Com., M.A., B.Ed.,

    ஆசிரியர்,

    ஒருங்கிணைப்பாளர்,

    தமிழ் மக்கள் கலை விழா – கபிஸ்தலம்.

    என் மகனால் 9 ஆண்டுகளுக்கு முன் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர், இந்த நூலின் ஆசிரியர் கவி. முருகபாரதி. இன்று வரை அல்ல, என்றுமே என் குடும்ப நண்பர். என் மகன் சிறுவனாக இருந்தபோது, ஒரு பயிற்சிக்கு சென்றபோது ஏற்பட்ட தொடர்பு... அவரது தொடர்பால் அவனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றம்... தொடர்ந்து என் குடும்பத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்பட்ட வாழ்நாள் நட்பு.

    நான் வலங்கைமான் ரோட்டரி சங்கத்தலைவராக இருந்தபோது +2 மாணவர்களுக்கு வச்சா குறி தப்பாது என்ற பொருளில் உற்சாகமூட்டும் பயிற்சிக்கு வந்த நூலாசிரியர் முற்பகல், பிற்பகல் என இருவேளையிலும் மூன்று, மூன்று மணி நேரப் பயிற்சி அளித்தபோதும் மாணவர்கள் சோர்வடையாமல் இருந்தது, இவரது திறமைக்குச் சான்று. நிகழ்வு முடிந்து 7 ஆண்டுகள் ஆகியும், இன்றும் அம்மாணவர்களை சந்திக்கும் போது, இவரது பேச்சை குறிப்பிடுவதும், அதன் பின்பே எமது சங்கத்தை அடையாளப் படுத்துவதும் உண்மை.

    பேச்சாளர், பயிற்சியாளர், பத்திரிக்கையாளர், நகைச்சுவையுணர்வாளர், சிறந்த பொதுநல சேவையாளர், ரோட்டரி தலைவர், அதையும் தாண்டி சமூகப் பொறுப்புணர்வு மிக்க குடிமகன்.

    வள்ளுவர் சொல்படி தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும் ஆற்ற வேண்டியதை, உலகுக்கு காட்டும் அற்புதமானவர்கள் இவரும் இவரது பெற்றோரும்.

    குறைந்த வயதில் நிறைந்த படிப்பும் அனுபவமும் ஆற்றலும் பெற்ற, இவரது மோர்+ரசம் = முன்னேற்றம் என்ற நூல், இவர் இல்லாமலேயே, அனுமதியோடு, கபிஸ்தலம் தமிழ் மக்கள் கலைவிழாவில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருச்சி சிவா அவர்களது முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    விருதுகளைத் தேடி ஓடும் நிலையிலிருக்க, இவரது கவிராசன் அறக்கட்டளை ஆண்டுதோறும் சிறப்பாகப் பணிபுரியும் ஆசிரியர்களைத் தேடிக் கண்டுபிடித்து விருது வழங்கி சிறப்பிக்கிறது.

    கவி. முருகபாரதி அவர்களின் மக்கள் சொல் கேளீர் என்ற இந்நூலை, வெளிவரும் முன்னே படிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மகிழ்கிறேன். ஆசிரியராகவும் பெற்றோராகவும் இருப்பது எனது தகுதியாக இருக்கலாம்.

    ஒரு சிறந்த புத்தகம் செய்வது என்ன? வாசிக்க வைக்கும்... நேசிக்க வைக்கும்... தொடர்ந்து சுவாசிக்க வைக்கும்.

    அப்படித்தான் இந்நூல்.

    எளிய நடை... முக்கிய கருத்துகளுக்கு வலுசேர்த்தமை... உலக நிகழ்வுகள் சுட்டியுள்ளமை... தனது அனுபவங்களையும் அருமையாகப் பகிர்ந்துள்ளமை சிறப்பு.

    Software தொழிலையும் துப்புரவுத் தொழிலையும் ஒப்பீடு செய்துள்ளமை, மாணவர் மட்டுமல்ல பெற்றோருக்கும் பொது சமுதாயத்துக்கும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிதர்சனம்.

    "Software இல்லாமல் வாழலாம். துப்புரவு இல்லாமல் வாழமுடியாது" படித்ததிலிருந்து மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

    செப்டிக் டேங்க் தொழிலாளி மகனுக்கும் இவருக்கும் நிகழ்ந்த செயல்பாடு, நூலாசிரியரின் உயர்ந்த கொள்கையை வெளிப்படுத்துகிறது.

    திரைப்படத்தில் வரும் punch dialogues பயன்படுத்தியிருப்பது, படிப்பவர் மனதில் photo graphic memoryயாக இருக்க உதவுகிறது.

    பெற்றோர்கள் / ஆசிரியர்கள் என்னவாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்.

    தங்களின் செயல்கள் குறித்த சுய ஆய்வு - மறுபரிசீலனை ஒவ்வொருவருக்கும் தேவை.

    பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதில்லை; அவர்கள் கேட்ட வார்த்தைகளைத்தான் பேசுகிறார்கள் என்பனவற்றை வெளிப்படையாகக் கூறுகிறார்.

    உங்களை விட உங்கள் பிள்ளைகள் அறிவாளிகள் என்பதை ஒத்துக்கொள்ளுங்கள். இந்த வரி, என் பணிக்காலத்தில் நான் கூறி, பலரது கோபத்துக்கு ஆளாகினேன்.

    ஆனால் நூலாசிரியர், அதனை எளிய எடுத்துக்காட்டு மூலம் நிரூபிக்கிறார். மகிழ்ச்சி.

    உலகம் ஒன்றாதல் வேண்டும் என்ற தந்தை பெரியாரின் கருத்தினை, கைகுலுக்குங்கள் என்பதில் தெளிவுபடுத்துகிறார்.

    கோபத்தை நாம் எப்போதும் வலியோரிடம் காட்டுவதில்லை; வலிமை குறைந்தோரிடமே காட்டுகிறோம் என்று கூறி, இது பற்றியும் சிந்திக்க வேண்டுகிறார்.

    அன்பை மட்டுமே அளிக்கக் கூறும் ஆசிரியர், எந்த குழந்தைக்கும் அடிப்பதாலோ, திட்டுவதாலோ, நற்பயன் விளையாது என்பதை அழகுற கூறுகிறார்.

    மனதால் கூட வெறுப்பை உமிழாதீர்கள். அவர்கள் உங்கள் குழந்தைகள் என எச்சரிக்கிறார்.

    காந்தியடிகளிடம் ஆங்கிலேயர்கள் ஏன் பணிந்தனர் என்பதைக் கூறுகிறார்.

    நம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் கூறும் ஆசிரியர், தம் மீது நம்பிக்கை கொண்டவர் முன் தவறு செய்ய, குற்றவாளியாக, எவரும் தயங்குவர் என்பதைப் பதிவு செய்கிறார்.

    பிள்ளைகளுக்கு வாழ்க்கையையும் வாழக் கற்றுக்கொடுங்கள் என பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் விதைக்கிறார். விருப்பங்களைக் கேளுங்கள்... வாய்ப்புக் கொடுங்கள்... பொறுப்பை ஏற்படுத்துங்கள் என்கிறார்.

    யாருக்கும் நகலாக இருக்காமல், அவர்கள் அவர்களாகவே இருக்க வழிகாட்டச் சொல்கிறார்.

    தனது அனுபவத்திலிருந்து ஒரு கசப்பான நிகழ்வைக்கூறி, "அவன்

    Enjoying the preview?
    Page 1 of 1