Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

40+ Maatram
40+ Maatram
40+ Maatram
Ebook250 pages1 hour

40+ Maatram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

40+ மாற்றம் என்னும் இப்புத்தகம் என்னுடைய முதல் படைப்பு. என்னுடைய அனுபவங்களில் கிடைத்த புரிதல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் உருவான படைப்பு இது.

உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கும் நான், குறிப்பாக ஆழ்மனம் பற்றிய தேடுதலிலும், நம் வாழ்க்கையை மாற்றுவதில் எண்ணங்களின் முக்கியப் பங்கு பற்றியும், உறவுகளில் நிபந்தனையற்ற அன்பு (Unconditional Love) எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும், ஒரு மனிதனின் அனுமானம் (Judgement) என்பது எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பற்றிய குறிப்புகளை விளக்கும் நூல்.

Languageதமிழ்
Release dateMar 12, 2022
ISBN6580152908125
40+ Maatram

Related to 40+ Maatram

Related ebooks

Reviews for 40+ Maatram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    40+ Maatram - Valliyammai Arunachalam

    https://www.pustaka.co.in

    40+ மாற்றம்

    (புரிதலே சிறந்த அறிவு)

    40+ Maatram

    Author:

    வள்ளியம்மை அருணாச்சலம்

    Valliyammai Arunachalam

    For more books

    https://www.pustaka.co.in/home/author/valliyammai-arunachalam

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    என்னுரை:

    40+ மாற்றம் என்னும் இப்புத்தகம் என்னுடைய முதல் படைப்பு. என்னுடைய அனுபவங்களில் கிடைத்த புரிதல்களை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் உருவான படைப்பு இது. உடல் மற்றும் மனம் சம்பத்தப்பட்ட கருத்துக்களை ஆராய்ந்து தெரிந்து கொள்வதில் ஆர்வத்துடன் இருக்கும் நான், குறிப்பாக ஆழ்மனம் பற்றிய தேடுதலிலும், நம் வாழ்க்கையை மாற்றுவதில் எண்ணங்களின் முக்கியப் பங்கு பற்றியும், உறவுகளில் நிபந்தனையற்ற அன்பு (Unconditional Love) எவ்வளவு முக்கியம் என்பது பற்றியும், ஒரு மனிதனின் அனுமானம் (Judgement) என்பது எப்படி வாழ்க்கையை மாற்றுகிறது என்பது பற்றியும் ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கிறேன். புத்தகம் வாசிப்பதில் ஆர்வமும், மேலும் எழுத வேண்டும் என்ற தூண்டுதலுடனும் இருக்கிறேன்.

    40+ மாற்றம்

    இப்புத்தகத்தை எழுதத்தூண்டிய அனுபவங்களுக்கும், அந்த அனுபவங்களைத் தந்த மனிதர்களுக்கும், அவற்றைக் கடந்து வந்து மீண்டும் எழ உதவிய டாக்டர். பிரகாஷ் அவர்களுக்கும் என் கணவர் திரு. நாராயணன் அவர்களுக்கும் இப்புத்தகத்தைச் சமர்ப்பிக்கிறேன்.

    அன்பு நண்பர்களே,

    திருமதி. வள்ளியம்மை அருணாச்சலம் அவர்கள் எழுதிய 40+ மாற்றம் புத்தகத்தை நான் முழுவதுமாகப் படித்தேன். மிகவும் அருமையாக, சிறப்பாக இருந்தது. உலகில் உள்ள அனைத்துப் பெண்களும், ஆண்களும் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பெண்கள் மற்றும் ஆண்களின் மனதிலும், புத்தியிலும் பல குழப்ப முடிச்சுகள் அவிழ்க்கப்பட்டு, தெளிவு கிடைக்கும்.

    சிறந்த முயற்சி, வாழ்த்துகள்!

    இப்படிக்கு,

    நன்றியுரை

    எப்போதும் நோய் வாய்ப்பட்டிருந்த என் உடலுக்கும், எந்த விஷயத்தையும் எதிர்மறையாகப் பார்த்த என் மனதுக்கும் முதலில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இவை இரண்டும் எனக்களித்த அனுபவங்கள் மட்டுமே நிறைய விஷயங்களை உணர்த்தின.

    என் உடலும் மனதும் நோய் வாய்ப்பட்டிருக்கும்போது அவற்றை மேலும் தூண்டச் செய்த மருத்துவர்களுக்கும், அவர்களுக்கு உதவிய மருத்துவ ஆய்வுக் கூடங்களுக்கும் இரண்டாவது நன்றி. ஏனெனில், மருத்துவர்களும், மருத்துவ ஆய்வுக்கூடங்களும் தந்த அனுபவங்கள்தான் நிறைய விஷயங்களை எனக்கு உணர்த்தின.

    ‘மருந்துகளின் அடிமை’யாக இருந்த என்னை இயற்கையின் அடிமையாக மாற்றிய டாக்டர். பிரகாஷ் (Naturopathy) அவர்களுக்கு என் மூன்றாவது நன்றி. என்னுடைய ஆழ்ந்த நித்திரையில், யாராவது ‘உன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் யார்?’ என்று கேட்டால் கண்டிப்பாக டாக்டர் பிரகாஷ் என்று பதில் வரும். என்னைப் பொறுத்தவரை என்னுடைய வாழ்க்கை இரண்டு பிரிவுகளைக் கொண்டது. டாக்டர் பிரகாஷை சந்திப்பதற்கு முன் மற்றும் டாக்டர் பிரகாஷை சந்தித்தபின்.

    மேலும், திரு. ஹீலர் பாஸ்கர் (Founder of Anatomic Therapy Foundation, Coimbatore), திரு. பகவத் ஐயா (Founder of Bagavatll Mission, Salem), திரு. கோயங்கா (Founder of Vipassana Meditation Centre), திரு. B.M. ஹெக்டே (Medical Scientist), திரு. உமர் பரூக் (Accu Healer), டாக்டர். சத்யவதி (மகப்பேறு மருத்துவர்), டாக்டர். தென்றல் (மகப்பேறு மருத்துவர்), திரு. ம. செந்தமிழன் (Founder of Semmai), டாக்டர். கிரிஷ் குமார் (Founder of Human Connect), திரு. கணேஷ் குமார் (Founder and CEO of EQ Universe Learning Solutions Pvt.ltd.,), மற்றும் திரு. மித்ரேசிவா (Founder of Ulchemy) அனைவருக்கும் என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். இவர்கள் அனைவரும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும், உடலைப் பற்றியும், மனதைப் பற்றியும், தற்சார்பு வாழ்க்கை பற்றியும், தியான வாழ்க்கை பற்றியுமான என்னுடைய புரிதலை மேம்படுத்தியவர்கள்.

    மேலும், என்னுடைய பங்களிப்பைக் குடும்பத்துக்காக சரிவரத் தர முடியாத நேரத்திலும் என்னைப் புரிந்துகொண்ட என் குடும்பத்திற்கு என் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். என்னுடைய எதிர்மறை உணர்வுகளை நான் அதிகமாக என் குடும்பத்தினரிடம் காட்டியிருக்கிறேன். அதற்காக, என்னை மன்னிக்குமாறு என் குடும்பத்தினரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதால், நான் படித்த அனைத்துப் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும் என் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில், எழுத ஆரம்பித்த பிறகுதான், எனக்கு இவ்வளவு எழுத வரும் எனப் புரிந்து கொண்டேன். கண்டிப்பாக, நான் படித்த புத்தகங்கள் மூலம்தான், அவை எனக்கு வந்திருக்க வேண்டும். நான் படித்த பல புத்தகங்களின் ஆசிரியர்களான பகவத் அய்யா, சுதா மூர்த்தி, ஜான் க்ரே, காரி சாப்மேன், ரோண்டா பைரன், லெஸ் ஜீப்ளின், கிரிஷ் குமார், கணேஷ் குமார், பால குமாரன் போன்ற பலருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.

    இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் அனைவருக்கும் என் நன்றிகளைச் சமர்ப்பிக்கிறேன். இரண்டாவது முறையாக தம்மாவின் தியான முகாமிற்குச் சென்றிருந்த போதுதான், புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் போது, இறைவன் மீது ஒரு விதமான நன்றி உணர்ச்சி ஏற்பட்டது. அதாவது, இவ்வளவு சூழ்நிலைகளையும் தாண்டி, என்னை வெற்றிகரமாக வர வைத்த இறைவனுக்கு நன்றி சொல்ல சரியான வழி பலருக்கும் உதவி செய்வது என்று தோன்றியது. அதைச் செய்வதற்கு என்னுடைய அனுபவங்களைப் புத்தகமாக எழுத வேண்டும் என்று தோன்றியது. அது ஒரு அபரிமிதமான நன்றி உணர்ச்சியின் வெளிப்பாடு என்றும் தோன்றியது.

    புத்தகம் எழுதும் இந்தப் பணியுடன் ஒரு வருடமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் பயணத்தில், நிறைய நண்பர்கள் எனக்கு உதவியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவரின் ஒவ்வொரு சிறு உதவியும் கண்டிப்பாகப் போற்றப்பட வேண்டியது. திரு. ராஜேஷ் (Web Designer), திரு. பச்சையப்பன் (Assistant Executive Engineer/Electrical), திருமதி. சுகன்யா (Software Developer), திருமதி. அபிநயா (Test Analyst), திருமதி. தங்க லட்சுமி (Assistant Professor), திருமதி. மஹாலக்ஷ்மி (Naturopathy Consultant), திரு. நிர்மல் (Digital Marketer), திரு. உகேஷ் (Software Developer), திரு. பிரபாகரன் (Teclinology Analyst), செல்வி. திவ்யா (Recruiter), திரு. வருண் சகாயம் (Senior Graphic Designer), திருமதி. செல்வி (SSG Enterprises, Pondichery), திரு. செந்தில் குமரன் (SoftSkills trainer and NLP Practitioner), திரு. முத்துராஜ் (Teclinology Analyst) மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்.

    குறிப்பாக திரு. பரத் வெங்கடாச்சலம் (Architect) மற்றும் திருமதி. லாவண்யா (Organic enthusiast & Designer) இவர்கள் இருவரின் உதவியும் இல்லாமல் என்னால் இந்தப் புத்தகத்தை முடித்திருக்க முடியுமா என்பது தெரியவில்லை. புத்தகத்தை எழுதியது மட்டுமே நான். அதன் அமைப்பு, தலைப்பு எந்த முறையில் இருக்க வேண்டும், ஒவ்வொரு கதையின் ஆரம்பப் பகுதி எப்படி இருக்க வேண்டும், கேள்விகளின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும், அட்டைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்று எல்லா விஷயங்களிலும் என்னை ஒருபடி மேலே யோசிக்க வைத்தது பரத் அவர்களே. இந்தப் புத்தகத்தை வெற்றிகரமாக வெளியிட எனக்காக இறைவனால் என்னுடன் இணைத்து வைக்கப்பட்டவர்தான் லாவண்யா. எப்படி வெளியிட வேண்டும், எங்கு வெளியிட வேண்டும் (Publishing), அதன் பின் எப்படி சந்தைப்படுத்த வேண்டும் (Marketing), புத்தக வெளியீட்டு விழா எப்படி நடக்க வேண்டும் என்று இவை எல்லாவற்றையும் பற்றி எனக்கு முன்பே யோசித்தவர். அவர்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

    உங்கள் வாசிப்பின் இடையே உங்களின் சிந்தனையைத் தூண்டுவதற்காக ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும் இந்தக் கேள்விகளின் தரத்தை அறிந்து கொள்வதற்காக, இந்தக் கேள்விகளை என்னுடைய நண்பர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு அவர்களின் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் ஆர்வமாகப் பங்கேற்று அவர்களின் பதில்களைத் தந்த திருமதி. கலைவாணி (Home Maker), திரு. பாலமுருகன் (CEO, Qedtek India Private Limited), திரு. எழில் தினேஷ் (Tecnical Lead), திரு. கனகவேல் (Technical Lead), திரு. சதிஷ் குமார் (Technical Lead), திரு. சமீர் (Assistant Project Manager), திருமதி. உமா (Assistant Professor Nursing), திருமதி. பாரதி (Touch Therapist), திரு. சரவணன் (Test Engineer) மற்றும் அனைவருக்கும் என் நன்றிகள்.

    முன்னுரை

    சம்பவங்களும், அவை தந்த அனுபவங்களும், அவற்றால் ஏற்பட்ட புரிதல்களுமே வாழ்க்கை என்பதை உணர்த்துவதே இப்புத்தகத்தின் நோக்கம். அனைத்து சம்பவங்களையும் அவற்றில் இருந்து கிடைக்கும் அனுபவங்களை மட்டும் புரிந்துகொண்டு வாழ்க்கையை நடத்துபவர்கள் தான் உண்மையான ஞானிகள் என்பதை உணர்ந்தேன்.

    அதாவது இயற்கையை நாம் ரசிக்கலாம், பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால், இயற்கையுடன் போராடுவது தவறானது என்பது புரிந்தது. இயற்கை என்று இங்கு நான் குறிப்பிடுவது, நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் நெருப்பு இவற்றை மட்டுமல்ல. இயற்கையாக நம்மைக் கடந்து செல்லும் விஷயங்களையும்தான். அதை மிகச் சிலருக்காவது உணர்த்த வேண்டும் என்பதே என் பிறப்பின் இரகசியம் என்பதையும் உணர்ந்தேன். அதன் விளைவுதான் இப்புத்தகம் உங்கள் கையில்.

    இப்புத்தகத்தை படித்து முடிக்கும் ஒருவராவது ‘தன் உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுதான், தான் இந்த சமூகத்திற்கு செய்யும் மிகச் சிறந்த கடமை’ என்று உணர்ந்தால் அதை என் வெற்றியாகக் கருதுகிறேன். வெற்றியை நோக்கிப் போகும் பயணம்தான் என் வாழ்க்கையின் சரியான பயணம் என்று நினைக்கிறேன்.

    என் கருத்துப்படி மனிதர்களை மூன்று விதமாகப் பார்க்கிறேன். முதல்வகை, பிறந்தது முதல் தம்மைச் சுற்றி நல்ல அனுபவங்கள், நல்ல வாழ்க்கை முறை, நல்ல மனிதர்கள். அதனால் வாழ்க்கையை நல்ல விதமாக வாழ்பவர்கள்.

    இரண்டாவது வகை, பிறந்தது முதல் தம்மைச் சுற்றி எதிர்மறையான அனுபவங்கள், எதிர்மறையான வாழ்க்கை முறை, எதிர்மறையான மனிதர்கள் அதனால் பிரச்சனைகளுடன், தான் செய்யும் தவறுகளை உணராமலே வாழ்பவர்கள்.

    மூன்றாவது வகை, பிறந்தது முதல் தம்மைச் சுற்றி எதிர்மறையான அனுபவங்கள், எதிர்மறையான வாழ்க்கை முறை, எதிர்மறையான மனிதர்கள் ஆனாலும் வாழ்க்கை தந்த பாடத்தினால் தவறுகளை உணர்ந்து திருந்தி வாழ்பவர்கள். இவற்றுள் முதல் இரண்டு வகையினர் அப்படி இருப்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. மூன்றாம் வகையினரை நான் மிகவும் மதிக்கிறேன். நானும் அதில் இருப்பதால் அல்ல, அவர்கள்தான் தங்கள் அனுபவங்களால் வாழ்க்கையை மாற்றிக்கொள்பவர்கள் என்பதால். அவர்கள்தான் மற்றவர்கள் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவர்கள் என்பதால்.

    எப்போதும் கேளிக்கைகளுடன் வாழும் ஒரு மனிதனுக்கு இந்தப் புத்தகம் பயன்படுமா என்பது எனக்குத் தெரியாது. என்னைப்போல பல பிரச்சனைகளுடன் இருப்பவர்களுக்கு அதை எதிர்நோக்கும் பக்குவத்தை இந்தப் புத்தகம் கொடுக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். பெண்களுக்குக் கண்டிப்பாக அவர்கள் வாழ்க்கையின் எந்த நிலையில் இருந்தாலும் இந்தப் புத்தகம் உதவி செய்யும். திருமணத்துக்குத் தயாராக இருப்பவர்கள், திருமண வாழ்க்கையில் நுழைந்து இருப்பவர்கள், படித்துக்கொண்டு இருப்பவர்கள், வேலையில் இருப்பவர்கள், உடலளவிலும், மனதளவிலும் நோய்வாய்ப்பட்டு இருப்பவர்கள், மருந்துகளின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பவர்கள், மருத்துவமுறையையும், மருத்துவர்களையும் தேடிக் கொண்டு இருப்பவர்கள் என்று பலருக்கும் அவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.

    பலதரப்பட்ட உடல் உபாதைகளிலும், மனப்போராட்டங்களிலும் இருந்து போராடி, இறைவன் அருளால் மீண்டு வந்திருப்பதால், வாழ்க்கையில் ஏதோ ஒரு வகையில் போராடிக்கொண்டு இருப்பவர்களுக்கு உதவி செய்வதை விரும்புகிறேன். இறைவனின் அருளால் மன உளைச்சலில் அல்லது உடல் உபாதைகளில் இருப்பவர்களுக்கு ஆதரவாக இருப்பதை என் வாழ்வின் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறேன். அதையே என் பிறப்பின் ரகசியம் என்றும் நினைக்கிறேன்.

    இனி என் எதிர்மறையான வாழ்க்கை முறையும் அதை நேர்மறையாக மாற்றிய சம்பவங்களும், அவை தந்த அனுபவங்களும், அவற்றால் ஏற்பட்ட என் புரிதல்களும், உங்களுக்காக.

    வாசிக்கும் முன்

    இந்தப் புத்தகத்தில் நான் விளக்கி இருக்கும் அத்தனை சம்பவங்களும், நானே நேரடியாக அனுபவித்து உணர்ந்தவை. இந்தச் சம்பவங்களில் இருந்து எனக்கு கிடைத்த புரிதல்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் யாருக்கேனும் நன்மை செய்ய முடியும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்தச் சம்பவங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. எந்த ஒரு தனி நபரையோ, நிர்வாகத்தையோ, ஒரு குறிப்பிட்ட பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத்தில் இந்தப் புத்தகம்

    Enjoying the preview?
    Page 1 of 1