Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ivvalavuthana Nee?
Ivvalavuthana Nee?
Ivvalavuthana Nee?
Ebook197 pages57 minutes

Ivvalavuthana Nee?

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

“நெய்வேலிக் கூட்டம் ஒன்றில் நான் சொல்லியதைக் கூட்டத்தினரைத் திருப்பிச் சொல்லச் சொன்னபோது ஒரே ஒரு மாணவி மட்டும், அவள் எழுதியிருந்த நோட்டுப் புத்தகத்தில் அவள் எழுதி வைத்து இருந்ததை வாசித்துக் காட்டினாள். அதற்காக நான் அவளைப் பாராட்டி விட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிற இந்தக் கூட்டத்தில், நான் சொன்னவற்றை அவளால் அப்படியே திருப்பிச் சொல்ல முடிந்ததற்குக் காரணம், அவள் நான் சொன்னதையெல்லாம் உடனுக்குடன் அப்படியே எழுதிக் கொண்டதுதான்.

எழுதிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் நான் சொல்லவில்லை. அதனால் பலரும் எழுதிக் கொள்ளவில்லை. அதேபோல நான் யாரும் எழுதிக் கொள்ளக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால் அந்த மாணவி ஒருவருக்குத்தான் எழுதிக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய கூட்டத்தில் தனித்து உயரமாகத் தெரிகிறார். பாராட்டும் பெறுகிறார் என்றேன். அந்த மாணவி செய்தது – சொல்லாததை.

அதனால் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில், ஒருவர் முனைந்துதான் முன்னேற வேண்டும். அதற்கு ஒருவர் வெற்றிபெறத் தேவைப்படும் குணங்கள் என்று வெளிப்படையாகத் தெரியும் பலவற்றையும் விடக் கூடுதலாக நிறையச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிக் கூடுதலாகச் செய்யத் தெரிந்து வைத்திருப்பவர்கள், செய்பவர்கள் வாழ்வில் முந்துகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள்.

ஆக, அப்படித் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, உணர்ந்து கொள்ள வேண்டியவற்றை எல்லாம் இனிச் சொல்லாததையும் செய் என்ற பொதுத் தலைப்பிலேயே எழுதலாம் என்று எண்ணினேன். அந்த வரிசையில் முதல் புத்தகம்தான் இவ்வளவுதானா நீ...

பொருளாதார சுணக்கம் போய்விட்டது. வளர்ச்சி தொடங்க இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி தொடரக் கூடும். எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மெய்ப்பட வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற இந்தப் புத்தகம் பலருக்கும் ஊக்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறேன்.

வாழ்த்துகள்.
சோம வள்ளியப்பன்

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580110104669
Ivvalavuthana Nee?

Read more from Soma Valliappan

Related to Ivvalavuthana Nee?

Related ebooks

Reviews for Ivvalavuthana Nee?

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ivvalavuthana Nee? - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    இவ்வளவுதானா நீ?

    Ivvalavuthana Nee?

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. வெளியே வா

    2. நீ செய்வாய்

    3. உன்னால் முடியும்

    4. இயன்றது அனைத்தும் செய்

    5. கவனம் குவி

    6. அச்சம் தவிர்

    7. மோதி முடி

    8. வேறுபாடு காட்டு

    9. வாய்ப்பைக் கவர்

    10. மேன்மை கொள்

    அன்புடன்

    நண்பர் TRR. பிரசாத்துக்கு...

    சோம வள்ளியப்பன்

    45க்கும் மேற்பட்ட மேலாண்மை, மனித வள மேம்பாடு, சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, பணத்தைப் பெருக்குவது, வணிகம் என்ற பல்வேறு துறைகள் சார்ந்த புத்தகங்களைத் தமிழில் எழுதியுள்ள பொருளாதார மேலாண்மை வல்லுனரான இவர் எழுதிய 'பணம் பண்ணலாம். பணம் பணம்' ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்து லட்சக்கணக்கான வாசகர்களைச் சுண்டி இழுத்து வரலாறு படைத்தது!

    அள்ள அள்ளப் பணம் என்ற நூல் வெளிவந்த வேகத்திலேயே 10,000 பிரதிகள் விற்றதோடு, தமிழில் 1,25,000 பிரதிகளுக்கு மேலும் விற்று சரித்திரம் படைத்தது!

    இவருடைய எழுத்துகளின் தலைப்புகள் எல்லாமே இப்படித்தான் வித்தியாசமாகப் புதிய பாணியில் இருக்கும். இட்லியாக இருங்கள், டீன் தரிகிட, உஷார்! உள்ளே பார்! இந்த முறை நீதான், உலகம் உன் வசம், யார் நீ, காலம் உங்கள் காலடியில் சின்ன தூண்டில் பெரிய மீன், சிறுதுளி பெரும் பணம் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்! தலைப்பு மட்டுமன்று; அதன் பொருளடக்கமும், எழுத்தும், கருத்தும் புதிய அணுகுமுறையுடன் அமைந்திருக்கும்.

    பன்முகம் கொண்ட பல்துறை வித்தகர். பெரிய விஷயங்களையும் எளிய முறையில் கற்றுத்தரும் கல்வியாளர்; பளிச்சென்று மனதில் எதையும் பதிய வைக்கும் பயிற்றுநர்; சாதனைகள் பல படைக்க வழிகாட்டும் மனிதவள மேம்பாட்டு ஆலோசகர். உற்சாகத்தோடு உரமும் ஊட்டும் பேச்சாளர், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தச் சொல்லித் தரும் வல்லுனர்; நேர மேலாண்மை வித்தகர்; மேன்மை மைய ஆலோசனை நிறுவனத்தின் இயக்குனர்.

    பெப்சி, வேர்ல் பூல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், பி.எச்.ஈ.எல். போன்ற பொதுத்துறை நிறுவனங்களிலும் பணிபுரிந்து அங்கு மனிதவள மேம்பாட்டை மேம்படுத்தியவர். பல்வேறு கல்லூரிகள், பல்கலைக் கழக மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது, தொழில் நிறுவனங்களுக்கும் நவீன மேலாண்மைத் துறைகளில் பயிற்சி அளிப்பவர். தொலைக்காட்சிகளில் பொருளாதாரம் பற்றிய கருத்துக் கணிப்பாளர்.

    பல பல்கலைக்கழகங்களின் தேர்வு மற்றும் கல்விக் குழுக்களிலும், கல்லூரிகளின் பாடத் திட்டக் குழுவிலும், சென்னை நிதி நிர்வாகப் (ஆராய்ச்சி) பயிற்சி நிறுவனத்திலும் பங்கேற்றிருப்பவர்.

    *****

    முன்னுரை

    "நெய்வேலிக் கூட்டம் ஒன்றில் நான் சொல்லியதைக் கூட்டத்தினரைத் திருப்பிச் சொல்லச் சொன்னபோது ஒரே ஒரு மாணவி மட்டும், அவள் எழுதியிருந்த நோட்டுப் புத்தகத்தில் அவள் எழுதி வைத்து இருந்ததை வாசித்துக் காட்டினாள். அதற்காக நான் அவளைப் பாராட்டி விட்டு, நூற்றுக்கணக்கானவர்கள் இருக்கிற இந்தக் கூட்டத்தில், நான் சொன்னவற்றை அவளால் அப்படியே திருப்பிச் சொல்ல முடிந்ததற்குக் காரணம், அவள் நான் சொன்னதையெல்லாம் உடனுக்குடன் அப்படியே எழுதிக் கொண்டதுதான்.

    எழுதிக் கொள்ளுங்கள் என்று அவர்களிடம் நான் சொல்லவில்லை. அதனால் பலரும் எழுதிக் கொள்ளவில்லை. அதேபோல நான் யாரும் எழுதிக் கொள்ளக்கூடாது என்றும் சொல்லவில்லை. ஆனால் அந்த மாணவி ஒருவருக்குத்தான் எழுதிக் கொள்ளத் தோன்றியிருக்கிறது. அதனால்தான் அவர் இவ்வளவு பெரிய கூட்டத்தில் தனித்து உயரமாகத் தெரிகிறார். பாராட்டும் பெறுகிறார் என்றேன். அந்த மாணவி செய்தது – சொல்லாததை.

    அதனால் இன்றைய போட்டிகள் நிறைந்த உலகில், ஒருவர் முனைந்துதான் முன்னேற வேண்டும். அதற்கு ஒருவர் வெற்றிபெறத் தேவைப்படும் குணங்கள் என்று வெளிப்படையாகத் தெரியும் பலவற்றையும் விடக் கூடுதலாக நிறையச் செய்ய வேண்டியிருக்கும். அப்படிக் கூடுதலாகச் செய்யத் தெரிந்து வைத்திருப்பவர்கள், செய்பவர்கள் வாழ்வில் முந்துகிறார்கள், வெற்றி பெறுகிறார்கள்.

    ஆக, அப்படித் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை, உணர்ந்து கொள்ள வேண்டியவற்றை எல்லாம் இனிச் சொல்லாததையும் செய் என்ற பொதுத் தலைப்பிலேயே எழுதலாம் என்று எண்ணினேன். அந்த வரிசையில் முதல் புத்தகம்தான் இவ்வளவுதானா நீ...

    பொருளாதார சுணக்கம் போய்விட்டது. வளர்ச்சி தொடங்க இருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த வளர்ச்சி தொடரக் கூடும்.

    எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் என்ற கவியரசர் கண்ணதாசனின் பாடல் வரிகள் மெய்ப்பட வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பைப் பெற இந்தப் புத்தகம் பலருக்கும் ஊக்கம் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் எழுதியிருக்கிறேன்.

    வாழ்த்துகள்.

    சோம வள்ளியப்பன்

    *****

    1. வெளியே வா

    "தலைமை இடம் என்பது...

    எடுத்துக் கொண்டதில்...

    அது எதுவாக இருந்தாலும்

    அதில் மேன்மை அடைவது,

    உன்னதம் காண்பது

    உச்சம் தொடுவது"

    *****

    1. வேடிக்கை மனிதராகி விடாதே!

    பாரதி, பராசக்தியைப் பார்த்துக் கேட்டது, தினமும் சாப்பிட்டு விட்டு, எவர் எவரைப் பற்றியோ குறை பேசிக்கொண்டு, மனது வருந்துமாறு செயல்கள் செய்து கொண்டு, ஆண்டுகள் இப்படியே உருண்டோட, வயதாகி...

    தேடிச் சோறு நிதம் தின்று - பல

    சின்னஞ் சிறு கதைகள் பேசி - மனம்

    வாடித் துன்பம் மிக உழன்று - பிறர்

    வாடப் பல செயல்கள் செய்து - நரை

    கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங்

    கூற்றுக்கு இரை எனப் பின் மாயும் - பல

    வேடிக்கை மனிதரை போலே - நான்

    வீழ்வேன் என்று நினைத் தாயோ?

    இப்போது நடப்பது 2015-ஆம் ஆண்டு. 2115 ல் இருக்கப் போவது யார்? நம்முடைய தற்போதைய வயதைப் பொருத்து இன்னும் நாற்பது அம்பது அல்லது இன்னும் அதிகபட்சமாகச் சொல்லுவதென்றால் எண்பது ஆண்டுகள் வாழ்வோம். அதற்குள் என்ன செய்கிறோமோ அதுதான் நாம்.

    மறு பிறவி என்று ஒன்று இருக்கிறதா? தெரியவில்லை. அப்படியே இருந்தாலும்கூட நமக்கு என்ன அடுத்த பிறவியில் நம் முன் ஜென்மம் பற்றிய நினைவா இருக்கப்போகிறது! போன பிறவி பற்றி இப்போது நினைவிருக்கிறதா என்ன?

    ஆனால், இந்தப் பிறவி நிச்சயம். பிறந்தாகிவிட்டது. இந்தப் பெயரில், நம் பெற்றோரின் பிள்ளையாகக் குறிப்பிட்ட ஊரில் குறிப்பிட்ட விதமாக வாழுகிறோம். இதுவும் உறுதி. இந்த வாழ்க்கையில் நாம் என்ன செய்யப் போகிறோம்? அதில்தான் இருக்கிறது விஷயம்.

    பாரதி, பராசக்தியைப் பார்த்துக் கேட்டது, தினமும் சாப்பிட்டு விட்டு, எவர் எவரைப் பற்றியோ குறை பேசிக்கொண்டு, மனது வருந்துமாறு செயல்கள் செய்து கொண்டு, ஆண்டுகள் இப்படியே உருண்டோட, வயதாகி இறந்து போகும் வேடிக்கை மனிதர்களைப் போல் என்னையும் நினைத்து விட்டாயா? என்றுதான்.

    வெந்ததைத் தின்று விதி வந்தால் சாகிறவனாக... பெருங் கூட்டத்தில் ஒருவனாக முகமற்ற, அடையாள அட்டை மட்டுமே வைத்திருப்பவனாகத் தான், வாழ்ந்ததற்கு அடையாளமாக எதையும் இந்தப் பூமியில் விட்டுப் போகாத மனிதன்.

    அப்படிப் போகவேண்டிய நிலை எவருக்கும் தானாக ஏற்படுவதில்லை... அவர்களாக முயற்சிப்பதை விட்டுவிட்டால் தவிர. எவருமே வேடிக்கை மனிதராகி விடக்கூடாது. இயன்றதை செய்ய வேண்டும். எவர் எவராலோ முடிகிறது என்றால் நம்மால் ஏன் முடியாது?

    முடியும்.

    *****

    2. இவ்வளவுதானா நீ?

    திரு. அருணாசலம் CSIRல் 29 ஆண்டுகள் சயின்டிஸ்ட்டாகப் பணியாற்றியவர். காரைக்குடி சிகிரி இன்ஸ்டிடியூட்டில் உதவி இயக்குனராக இருந்து ஓய்வு பெற்றவர். எம். எஸ். சாமிநாதன் பவுண்டேஷனில் 12 ஆண்டுகள் டிஸ்டிங்விஷ்டு பேக்கல்டியாகப் பணியாற்றியவர். அவருடன் பேசிக் கொண்டிருக்கையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் வீ. பாலையா என்பவர், அவரைப் பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட கேள்வி ஒன்று இன்னமும் அவர் நினைவில் இருப்பதாகச் சொன்னார்.

    சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆண்டு 1962. மொத்தம் பதினாறு மாணவர்கள் முதல் ஆண்டு எம்.எஸ்.சி. படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் துறையின் தலைவர்தான் வீ. பாலையா, அந்தக் காலத்திலேயே ஸ்டான்போர்டு பல்கலைக் கழகம் சென்று ஆர்கானிக்ஸ் கெமிஸ்டிரி படித்து வந்தவர். மிகச் சிறந்த பேராசிரியர். சிரத்தையாகச் சொல்லிக் கொடுப்பவர். அதிர்ந்து பேச

    Enjoying the preview?
    Page 1 of 1