Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ponnai Virumbum Boomiyiley...
Ponnai Virumbum Boomiyiley...
Ponnai Virumbum Boomiyiley...
Ebook114 pages43 minutes

Ponnai Virumbum Boomiyiley...

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ராகவன் ஒரு பிரபலமான வாரப்பத்திரிகையை வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருக்கிறார். அவரிடம் வேலைக்குச் சேர்கிறான் பொன்னமராவதி பாபு.

தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டம், சிறுகதைகளை எடைபோடுவதில் அசாத்திய தேர்ச்சி போன்ற பல திறமைகள் கொண்ட பாபுவிற்கு சீஃப் ராகவனின் நடவடிக்கைகள் சுத்தமாகப் பிடிக்கவில்லை. தூக்கியெறிந்து பேசுவது, எடுத்ததற்கெல்லாம் எரிந்து விழுவது, ஏழை எழுத்தாளர்களுக்கு சன்மானம் கொடுக்காமல் ஏமாற்றுவது - என்றிருக்கும் சீஃப்பை எப்படி பழி வாங்குவது?

சீஃபின் மகளான பேரழகி வித்யாவைக் காதலிப்பது போல் நடிப்பது, எல்லாம் கைகூடிவரும்போது அவளையும் அவள் தந்தையையும் அம்போவென்று விட்டுவிட்டு ஓடுவது என்று சதித்திட்டம் தீட்டுகிறான் பாபு.

காதலில் விழுவது போல் நடிக்கத் தொடங்கி, பின் நிஜமாகவே காதலில் விழுந்து காலை உடைத்துக்கொண்டு ஆஸ்பத்திரியில் கிடக்கிறான் பாபு - அவன் வாழ்க்கையையே புரட்டிப் போடும் நிகழ்வுகள் அப்போதுதான் நடந்தேறுகின்றன.

Languageதமிழ்
Release dateSep 6, 2021
ISBN6580142407455
Ponnai Virumbum Boomiyiley...

Read more from Varalotti Rengasamy

Related to Ponnai Virumbum Boomiyiley...

Related ebooks

Reviews for Ponnai Virumbum Boomiyiley...

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ponnai Virumbum Boomiyiley... - Varalotti Rengasamy

    http://www.pustaka.co.in

    பொன்னை விரும்பும் பூமியிலே...

    Ponnai Virumbum Boomiyiley...

    Author :

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    1

    சென்னை அண்ணா சாலையில் இருந்த அந்தப் பிரம்மாண்டமான பத்திரிகை ஆபீசுக்குள் நான் நுழைந்தபோது அங்கே இருந்த ஒரு அரதப் பழசான கடிகாரம் பத்து மணி அடித்துக் கொண்டிருந்தது.

    ஆணும் பெண்ணுமாக சுமார் நாற்பது பேர் ஒரு பதட்டத்துடன் அமர்ந்திருந்தார்கள். நானும் அந்தப் பதட்டக்கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன். தமிழ்நாட்டில் பிரபலமான அந்தப் பத்திரிகையில் பயிற்சி-நிலை உதவி ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

    நான் சுத்தமான, சுருக்கமில்லாத நல்ல பேண்ட்-சட்டை போட்டிருந்தது உண்மைதான். ஆனால் மற்றவர்கள்…

    ஒருவன் அசத்தலாக கோட்-சூட்டில் வந்திருந்தான். இன்னொருவன் மெடிக்கல் ரெப் மாதிரி டை கட்டிக்கொண்டு பளபளக்கும் கருப்பு ஷூ அணிந்து வந்திருந்தான். ஒரு பெண் முழங்கால் தெரியும் அளவிற்கு ஒரு ஸ்கர்ட்டும் மேலே பந்தாவாக ஒரு கருப்புக்கோட்டும் அணிந்து வந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு அங்கிருந்த ஆண்களையெல்லாம் இம்சித்துக் கொண்டிருந்தாள்.

    இன்னொருத்தி சேலை கட்டிக்கொண்டு வந்திருந்த அழகைப் பார்த்தால் அந்த முழங்கால் கோட்டுக்காரியே தேவலாம் என்று தோன்றியது.

    எல்லோரும் நுனி நாக்கு ஆங்கிலத்தில் அமெரிக்க அணு ஆயுத ஒப்பந்தத்தின் நன்மை தீமைகளைக் கதைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு தமிழ்ப் பத்திரிகையின் உதவி ஆசிரியர் பதவிக்கு அலட்டல் உடை, அரைகுறை ஆங்கிலம், தமிழை ஆங்கிலம் போல் பேசும் பெருந்தனம் எல்லாம் தேவைதானா?

    ஒருவேளை இதை எல்லாம் எதிர்பார்ப்பார்களோ? நான்தான் ஒன்றும் தெரியாமல் வெள்ளந்தியாக இலக்கியத்தைப் படித்துவிட்டு பெப்பரப்பே என்று வந்திருக்கிறேனோ?

    தாங்கள் எதுவரையில் படித்திருக்கிறீர்கள்? - பக்கத்தில் இருந்தவன் கலப்படமில்லாத நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஆதூரத்துடன் விசாரித்தான்.

    தமிழ் படித்தவனுக்கே உரிய திமிருடன் செந்தமிழில் கர்ஜித்தேன். முதுகலை - தமிழ் இலக்கியம் - அதிலும் வெகுஜன இதழியல் என் சிறப்புப் பாடம்.

    சீன மொழியில் பேசுபவனைப் பார்ப்பதுபோல் ஒரு புதிருடன் பார்த்தான். நான் சொன்ன பதில் எனக்காக ஒரு குட்டி அனுதாப அலையை உருவாக்கியது.

    ஆமாம், நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ஐயா?

    வேண்டுமென்றே செந்தமிழில் கேட்டேன்.

    யு.ஜி. இன் விஸ்காம். பி.ஜி இன் ஏஷியன் ஸ்கூல் ஆஃப் ஜர்னலிசம்.

    தட்ஸ் கிரேட் மேன். சற்றுத் தூரத்தில் இருந்த முழங்கால் கோட்டுக்காரி வாய்விட்டு பிரமித்தாள்.

    நான் சொல்றேனேன்னு தப்பா நெனச்சிக்காத மேன்! உன்னால எப்படி தைரியமா இந்த மாதிரி இண்டர்வ்யூக்கெல்லாம் வர முடியுது?

    முழங்கால் கோட் எனக்காக உச்சுக் கொட்டியது.

    ‘அடிப்பாவி! நான் என்ன கொலை செஞ்சேனா, இல்லை கற்பழிச்சேனா? இல்ல ஒருவேளை எம்.ஏ. தமிழ் இலக்கியம் படிக்கறது இதெல்லாம்விடப் பெரிய தப்போ?’

    இது தமிழ்ப் பத்திரிகை. தமிழ் நல்லாத் தெரிஞ்சிருந்தாத்தானே உதவி ஆசிரியர் வேலைய ஒழுங்காப் பாக்கமுடியும்?

    ‘இப்படி வெளியுலகம் தெரியாமல் வளர்ந்துவிட்டானே’ என்று என்னை எல்லோரும் அனுதாபத்துடன் பார்த்தார்கள்.

    உயரமாக ஒல்லியாக இருந்த ஒருவன் என்னருகில் வந்தான்.

    இல்ல பிரதர். இவங்க க்ரூப்புல புதுசா ஒரு இங்கிலீஷ் பத்திரிகை ஆரம்பிக்கப் போறாங்களாம். அதுக்காகத்தான் இப்ப ஆள் எடுக்கறாங்களாம்.

    எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

    அப்படின்னா ஒரு ஆங்கில இதழுக்கு உதவி ஆசிரியர் தேவைன்னு விளம்பரப்படுத்தியிருக்கலாமே? சிந்தாமணிக்குத்தான்னு எதுக்கு விளம்பரத்துல கொட்ட எழுத்துல போடணும்? சிந்தாமணி இன்னும் தமிழ்ப் பத்திரிகையாத்தானே இருக்கு?

    உங்களுக்கு எந்த ஊரு பிரதர்?

    பொன்னமராவதி.

    படிச்சதெல்லாம்…

    திருப்பத்தூர்ல ஆறுமுகம் சீதையம்மா காலேஜ்ல…

    கொஞ்ச நாள் மெட்ராஸ்ல இருந்தீங்கன்னா எல்லாம் சரியாப் போயிரும் பிரதர்…

    அதற்குள் நேர்காணலுக்கு ஒவ்வொருவராக அழைக்க ஆரம்பித்தார்கள். நேர்காணல் முடிந்து வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள். கேள்விகள் அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை.

    பத்திரிகை விற்பனையை எப்படிக் கூட்டுவாய்? சமூக வலைதளங்களில் மூழ்கிக்கிடக்கும் இந்தக்கால இளைஞர் இளைஞிகளை எப்படி நம் பத்திரிகையின் பக்கம் ஈர்ப்பாய்? புதிதாக ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம் என்றால் அது எந்த மாதிரியான பத்திரிகையாக இருக்க வேண்டும்?

    இதே ரீதியில்தான் கேள்விகள் இருந்தன. ஊதித் தள்ளிவிடலாம் என்றிருந்தேன். அந்த வகையில் அவர்கள் கேட்கும் நூறு கேள்விகளுக்கு மனத்தளவில் விடைகளைத் தயாரித்துக்கொண்டு நம்பிக்கையுடன் காத்திருந்தேன். என் முறையும் வந்தது.

    வெறும் தமிழ் இலக்கியப் பட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு வெகுஜன இதழை நிர்வகிக்கலாம் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

    கேள்வி அப்பழுக்கற்ற ஆங்கிலத்தில் இருந்தது. சுத்தமான செந்தமிழில் பதில் சொல்லி கலாய்க்கலாமா என்று யோசித்தேன்.

    வாழ்க்கை விஷயத்தில் விளையாடக்கூடாது என்று நானும் சுத்தமான ஆங்கிலத்தில் பதில் சொல்லத் தொடங்கினேன். தமிழ்மேல் தீராத பற்று இருந்தாலும் எனக்கு ஆங்கிலத்திலும் ஆளுமை உண்டு.

    நீங்கள் நடத்துவது தமிழ்ப் பத்திரிகை. நிரப்ப வேண்டியது உதவி ஆசிரியர் பதவி. இலக்கியத்தில் முதுகலை அதிலும் இதழியல் விருப்பப்பாடம் படித்த என்னைவிடத் தகுதியானவனைப் உங்களால் தேடிப் பிடிக்க முடியுமா என்ன?

    அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். என்னைப் போட்டுப் பார்க்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானித்திருக்க வேண்டும். அடுத்து வந்த கேள்விகள் குதர்க்கமாக இருந்தன.

    "நீ ஒரு புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையைப் பேட்டி காணப் போகிறாய். உன் கூட வேறு யாரும் வரவில்லை. நடிகையின் வீட்டில் ஒரு தனியறையில் பேட்டி நடக்கிறது. உன் புத்திசாலித்தனமான கேள்விகளைப் பார்த்து அந்த நடிகைக்கு உன்மேல் காதல் வந்துவிடுகிறது. உன்

    Enjoying the preview?
    Page 1 of 1