Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaarai En Thozhi
Vaarai En Thozhi
Vaarai En Thozhi
Ebook261 pages1 hour

Vaarai En Thozhi

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தாயே! என்னை எழுதவைப்பது நீங்கள் தான். நீங்கள் தான் எழுத்தாளர். நான் பேனா மட்டுமே!” "இப்போதாவது புரிந்ததே!" "இன்னொரு விஷயம்தான் புரியவில்லை, தாயே!" “என்ன விஷயம்?” "இந்த நூலில் நான்கு கதைகள். நீங்களே தோழியாக வந்து, துவண்டு போயிருந்த செல்விக்கு வாழ்வு கொடுத்த கதை , நாடாளும் அரசியைக் காதலித்த ஒரு ஏழைப் பண்ணையாளின் கதை, அடியார்க்கு அடியானாகப் பரிமளித்த ஆண்டவனின் கதை, அன்பில் உருகிய ஒரு அரக்கனின் கதை. என்னை ஏன் இந்தக் கதைகளை எழுதவைத்தீர்கள்?” "இதுகூடவா புரியவில்லை ?" "எழுத்தாளரின் மனதில் இருப்பது பேனாவிற்கு எப்படித் தெரியும்?” "சொல்கிறேன், கேள். அன்பென்னும் ஆரம்பப் புள்ளியில் தொடங்கி, அன்பின் வழியே நடந்து அன்பென்னும் இலக்கை அடைவதுதான் ஆன்மிகப் பயணம் என்பதைப் புரியவைக்கத்தான்.'' "அப்படியென்றால் ..." "அன்பே ஆன்மிகம்." அவள் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டாள். இனி அந்த அழகிய எழுத்தாளராயிற்று, நீங்களாயிற்று! இடையில் இந்தப் பேனாவிற்கு என்ன வேலை?

Languageதமிழ்
Release dateSep 24, 2022
ISBN6580142409048
Vaarai En Thozhi

Read more from Varalotti Rengasamy

Related to Vaarai En Thozhi

Related ebooks

Reviews for Vaarai En Thozhi

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaarai En Thozhi - Varalotti Rengasamy

    http://www.pustaka.co.in

    வாராய் என் தோழி

    Vaarai En Thozhi

    Author :

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    வாராய் என் தோழி!

    கதை சொல்லி வைத்தியம்!

    அடியார்க்கு அடியான்

    நின்னொடும் எழுவரானோம்

    காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாய்க் கொண்டிருக்கும் கையில் கிளி தாங்கிய கோலக்கிளியாம் மரகதவல்லி, மதுரையின் அரசி, மீனாட்சி என் பச்சைப்புடவைக்காரியின் திருப்பாதகமலங்களைத் தொட்டு வணங்கி இதைப் படிக்கின்ற நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவள் முன் வைத்துவரலொட்டி ரெங்கசாமியாகிய நான் இன்று இந்த நூலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    வாராய் என் தோழி!

    சித்திரைமாதத்திற்கே உரித்தான வெப்பமான மாலைப்பொழுது.மதுரை ஆதி சொக்கநாதர் கோவிலின் படிகளில் மீனாட்சி சன்னிதிக்கு எதிரில் சோகமே உருவாக அமர்ந்திருந்தாள் செல்வி.இந்த வைகாசி வந்தால் செல்விக்கு முப்பது வயது முடிந்துவிடும். கடந்த எட்டு ஆண்டுகளாக வீட்டில் திருமணத்திற்கு பகீரதப் பிரயத்தனம் செய்துகொண்டிருக்கிறார்கள். எந்த இடமும் தகையவில்லை.

    பணக்காரத் தந்தைகள் பெற்ற பெண்கள், சிகப்பாக இருக்கும் பெண்கள், பெரிய படிப்புப் படித்து வேலைக்குப் போய்க் கை நிறையச் சம்பாதிக்கும் பெண்களைக் கட்டிக்கொள்ள ஆண்கள் கூட்டமே வரிசைகட்டிக்கொண்டு நிற்கிறது. ஆனால் செல்வியைப் போல் கருப்பாக, வேலைக்குப் போகாத, கீழ் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த தமிழாசிரியர்களின் பெண்களைச் சீண்டக்கூட ஆள் இல்லை. போதாக்குறைக்குப் பொன்னியாத்தா என்று செல்வியின் கால்களில் சிறு ஊனம் வேறு. விந்தி விந்தி நடக்கும் அளவிற்குப் பெரிய ஊனமில்லை. ஆனால் செல்வியின் நடை இயல்பானது இல்லை என்று பார்த்த உடனே சொல்லும் அளவிற்கு அது பார்ப்பவர்களை உறுத்தியது.

    செல்வியின் கருப்பு நிறமும், கால் ஊனமும், அவள் நிதிநிலைமையும் அவள் தேர்ந்தெடுத்தது இல்லை. அவள்மேல் திணிக்கப்பட்டவை.தானாக விரும்பி ஆபாச உடைகளை அணியும் பெண்களை அவ்வளவாகக் கண்டுகொள்ளாத இந்தச் சமுதாயம் செல்வியின் விருப்பமின்றி அவள் பெற்ற நிறத்தையும், ஊனத்தையும், அவள் தந்தையின் ஏழ்மையையும் சொல்லிச் சொல்லிக் காயப்படுத்தியது.

    பெண் பார்க்கும் வைபவம் என்பதற்கு செல்வியின் அகராதியில் தெள்ளத் தெளிவாக இருந்த அர்த்தம் ‘காயப்படும் நிகழ்வு’.அவளைப் பெண் பார்க்க வரும் நாளன்று மீனாட்சியின் முன் நின்று வேண்டிக்கொள்வாள்.

    இந்தப் பையனுக்காவது என்னைப் பிடிக்கட்டும். என்று ஒருபோதும் அந்தச் சொக்கியிடம் அநியாயமாகக் கேட்டதில்லை செல்வி. அம்மா, அன்பின் திருவுருவே! இன்று என்னைக் காயப்படுத்தவென்றே ஒரு கூட்டம் வருகிறது. அவர்கள் கொடுக்கப்போகும் வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை மட்டும்தான் பராசக்தியாகியஉன்னிடம் யாசிக்கிறேன். என்றுதான் கேட்பாள் செல்வி.

    ***

    மதுரை அரசாளும் மீனாட்சிஇன்று அதையும் அவளுக்குக் கொடுக்கவில்லை. இன்று மாலை பெண்பார்க்க வந்தவர்கள் பெண்களைக் காயப்படுத்தும் கலையில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களாகவே தோன்றினார்கள்

    செல்வியின் தாயின் நச்சரிப்பு தாங்காமல் அவள் தந்தையான ஓய்வு பெற்ற தமிழாசிரியர் முத்துவேல் ஒரு தரகனின் கையைப் பிடித்து, , காலைப் பிடித்துக் கெஞ்சினார்.எப்படியாவது ஒருவரனைக் கொண்டு வாருங்கள்.பெண் பார்க்கும் படலம் வரையிலாவது நடக்கட்டும். இல்லாவிட்டால், ஒன்று என் ஒரே மகள் செத்துவிடுவாள். இல்லாவிட்டால் என் மனைவி என்னைக் கொன்றுவிடுவாள் என்று கதறியதன் விளைவு எல்லாப் பெண்வீட்டார்களும் தட்டிக்கழித்த ஒரு ஆகாத போகாத வரனை அனுப்பிவைத்திருந்தான் தரகன்.

    ‘நான்தான் மாப்பிள்ளைப் பையன்’ என்று சொல்லாத குறையாகப் பட்டு வேட்டி பட்டுச் சட்டை அணிந்து கொண்டு பெண் பார்க்க வந்த குமரேசனுக்கு நாற்பது வயது என்று தரகன் சொன்னதை அவன் ஜாதகம் உறுதி செய்தது.என்றாலும் ஆள் பார்க்க ஐம்பது வயதுக்கு ஒரு நாள்கூடக் குறையாது என்று சொல்லும்படியாக இருந்தான். தலை சுத்தமாக வழுக்கையாக இருந்தது. தொப்பையும் தொந்தியும் பற்களின் நிறம் கூடத் தெரியாத அளவிற்கு வாயில் வெற்றிலையும் கண்களில் தடிமனான கண்ணாடியும் அணிந்தபடி செல்வியைப் பார்த்து விரசமாக வழிந்தவனை பளார் என்று கன்னத்தில் அறைந்தால் என்னவென்று நினைத்தாள் செல்வி.

    வெங்காயக் கமிஷன் மண்டியில் கணக்கெழுதும் வேலை. சம்பளம் அப்படியொன்றும் கணிசமாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு அந்தக் கூட்டம் செய்த ஆகாத்தியம் செல்வியை முகம் சுளிக்க வைத்தது.

    ஒன்றரை லட்சம் ரொக்கம். முப்பது பவுன் தங்கம். வெள்ளிப்பாத்திரம். பையனுக்குஒரு பஜாஜ் பல்சார் பைக். இது போதும். என்று சொன்னாள் குமரேசனின் அக்கா.

    முத்துவேலுக்கு நெஞ்சு வலித்தது.

    தங்கத்தை எப்படியாவது சமாளிச்சிருவோம். இந்தப் பணம் .. பைக் ... எங்க தகுதிக்கும் மீறின விஷயங்கள்.

    பணிவாகத்தான் சொன்னார் முத்துவேல். குமரேசனின் அக்கா கொதித்து எழுந்துவிட்டாள்.

    நாங்ககூடத்தான் உங்க தகுதிக்கு மீறின இடம். பொண்ணு கருப்பு. வேலை பாக்கல. ஏழை வாத்தியார் பொண்ணுன்னு சொன்னவுடனேயே யோசிச்சிருக்கணும். என்று சொல்லிவிட்டுச் செல்வியைப் பார்த்துச் சொன்னாள்.

    ***

    "அம்மா, கொஞ்சம் தண்ணி கொண்டாயேன்.."

    செல்வியின் தாய் துள்ளிக்குதித்து எழுந்திருந்தாள்.

    நான் கேட்டது உங்க பொண்ண. அதுக்குக் காரணம் இருக்கு.

    செல்விக்கு அது என்னவென்று தெரியும். அடுத்து செல்வியின் நடையழகைப் பார்த்துவிட்டு அதற்காக இன்னும்அதிகமாக வார்த்தைத் தீயை அவள்மேல் கொட்டப்போகிறார்கள். செல்வி குமரேசனின் அக்காவை முறைத்தாள்.

    யாருக்கும் தெரியாமல் செல்வியின் தந்தை அவளைப் பார்த்துக் கைகூப்பினார். வேண்டா வெறுப்பாக எழுந்து போனாள் செல்வி. தண்ணீர் எடுத்து வரும் செல்வியின் கால்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தாள் மாப்பிள்ளைப் பையனின் அக்கா.

    செல்வி அவளிடம் தன்ணீர் டம்ளரை நீட்டினாள். அதை உதாசீனப்படுத்திவிட்டு முத்துவேலிடம் கூச்சல் போட்டாள் அவள்.

    பொண்ணுக்குக் கால் ரொம்ப லேசா ஊனம்னு பம்மாத்தாச் சொன்னானே அந்தத் தரகன்? இவ்வளவு பெரிய ஊனமுன்னு சொல்லவேயில்லையே! எல்லாத்தையும் மூடி மறைச்சி நொண்டிப்பொண்ண என் தம்பி தலையில கட்டலாம்னு திட்டமா?

    அவமானத்தால் முத்துவேலின் கண்கள்பொங்கிவிட்டன. செல்வியின் தாய் விம்மலுடன் உள்ளே ஓடினாள்.

    இனியும் பொறுக்கமுடியாது என்று நினைத்த செல்வி குமரேசனின் அக்காவைப் பார்த்துச் சிரித்தாள். முதலில் ஒரு முறுவல். அப்புறம் வெடிச்சிரிப்பு.

    ஐயையோ புத்தி சுவாதீனம் வேற இல்லையா?என்று சீறினாள் அக்கா.

    ரத்த அழுத்தத்தை அளப்பது போல் ஊனத்தை அளக்கும் மீட்டர் எங்கள் வீட்டில் இருந்திருந்தால் நாங்கள் பெண் 63 புள்ளி 4 சதவிகிதம் ஊனம் என்று அளந்தே சொல்லியிருப்போம். உங்கள் வீட்டில் அந்த ஊன மீட்டர் இருக்கிறதோ? இருந்தால் உங்கள் மனதில் உள்ள ஊனத்தை அளந்து பார்த்துச் சொல்லுங்களேன். என் கால் ஊனத்தைவிட அது நூறு மடங்கு அதிகமாகவே இருக்கும்.

    என்ன சொல்ற?

    புரியல? நீங்க எங்ககிட்டக் கேட்டீங்களே முப்பது பவுன், ஒண்ரை லட்சம், வெள்ளிப் பாத்திரம், பல்சார் பைக் இதையெல்லாம் நீங்க எங்களுக்குக் கொடுத்தாக்கூட உங்க தம்பிய நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்.

    அப்படின்னா?

    நீங்க கெளம்பலாம்னு அர்த்தம். இல்லை கெட் அவுட்ன்னு கத்தினதுக்கப்பறம்தான் போவீங்களா?

    அலறியடித்துக்கொண்டு ஓடியது அந்தக் கூட்டம்.

    யாரோ மூன்றாம் மனிதர்கள் காயப்படுத்தியதைக்கூட செல்வி பொருட்படுத்தவில்லை. தன் தாயே தன்னைப் பற்றிப் புரியாமல் பேசியபோதுதான் செல்விக்கு வாழ்க்கையே வெறுத்துவிட்டது.

    "என்னடி உன் மனசுல நீ பெரிய அதிரூப சுந்தரின்னு நெனைப்பா? இல்ல, கோடீஸ்வரனோட செல்லப்பிள்ளைன்னு நெனப்பா?தொட்டா ஒட்டிக்கற கலர்ல இருக்க. இன்னும் ஒரு மாசத்துல முப்பதுமுடிஞ்சிரும். குதிரை மேல வரப்போற ராஜகுமாரனைப் பத்திக் கனவு காண்ற வயசில்லடி உனக்கு. வர மாப்பிள்ளையக் கட்டிக்கிட்டுக் கெடைச்ச வாழ்க்கைய வாழவேண்டிய வயசு.

    என்னங்க நீங்க போய் அந்தப் பையனோட அக்கா கால்ல விழுந்து மன்னிப்புக் கேளுங்க. ஒரு தறுதலைப் பொண்ணைப் பெத்ததுக்கு நீங்கதான் தண்டனை அனுபவிக்கணும். போங்க. போய் இன்னொரு தரம் அவங்களக் கூட்டிக்கிட்டு வாங்க. அவங்க கேட்டதெல்லாம் தரேன்னு சொல்லுங்க. நான் எப்படியாவது எங்க அண்ணன்கிட்டக் கெஞ்சிக்கூத்தாடிப் பணத்துக்கு ஏற்பாடு பண்றேன்.

    அப்பா! எனக்காக அந்தக் கேடுகெட்ட ராட்சசி கால்ல விழுந்தீங்கன்னா திரும்பி வந்ததும் இங்க உங்க மகளோட பொணத்தத்தான் பாப்பீங்க. ஆமா சொல்லிட்டேன்.

    மரகதம் இந்த இடம் அப்படி நல்லதாத் தெரியல. கொஞ்சம் பார்க்கலாமே. நாளைக்கு நான் வேற ஒரு தரகனப் பாத்துட்டு வரேனே!

    என்ன வேணும்னாலும் செய்யுங்க. இதோ இன்னும் கொஞ்ச நாள்ல நாம செத்திருவோம். அதுக்கப்பறம் இவ அனாதையா ஆதரவில்லாம நிக்கப்போறா. அப்பத்தாண்டி நான் சொல்றது உனக்குப் புரியும்.

    இந்த உரையாடல் வளர்ந்து தன் தாய்க்கும் தந்தைக்கும் ஒரு பெரிய சண்டையாக மாறியபோது செல்வி வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள். அப்போது மாலை மணி ஐந்து.

    ***

    செல்வி ஒரு நாளில் இருமுறையாவது சொக்கநாதர் கோவிலுக்கு வந்துவிடுவாள். மீனாட்சி சன்னிதி எதிரில் கோவில் படிகளில் அமர்ந்துகொண்டு மீனாட்சியிடம் பேசிக்கொண்டிருப்பாள். செல்விக்குத் தோழி என்று யாரும் கிடையாது. அக்கம் பக்கத்துப் பெண்களுடன் அவ்வளவாகப் பேசமாட்டாள். எப்போதாவது தன் தந்தையிடம் இலக்கியத்தை விவாதிப்பாள்.

    அதுபோக மீதியுள்ள நேரங்களில் புத்தகம் படித்துக்கொண்டிருப்பாள். இல்லை, தன் அறையில் இருக்கும் மீனாட்சி படத்துடன் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருப்பாள். மனம் சரியில்லையென்றால் உடனே சொக்கநாதர் கோவிலுக்கு ஒடி வந்துவிடுவாள். செல்வியின் வீடு லட்சுமி நாராயணபுரம் அக்ரஹாரத்தில் இருந்தது. கூப்பிடற தூரத்துல சொக்கியிருக்கா. அப்பறம் வேற என்ன வேணும்என்று செல்விக்கு மனம் கொள்ளாத பெருமை.

    திருமணம் என்பதை விட்டுவிட்டுப் பார்த்தால் செல்வியின் வாழ்க்கை இனிமையாகத்தான் இருந்தது. அம்மா சத்தம் போடுவாளேயொழிய வாய்க்கு ருசியாகச் சமைப்பதில் வல்லவள். வீட்டில் ஒரு அறை நிறையப் புத்தகங்கள்.எல்லா வார சஞ்சிகைகளும் வீட்டுக்கு வந்துவிடும்.

    செல்வியின் திருமணப்பேச்சு தொடங்கும்வரை அவளுக்குத் தன்னிடம் இருந்த குறைகள் எதுவும் பெரிதாகப் படவில்லை.

    ஏண்டி இப்படிக் கருப்பாப் பொறந்து தொலைச்ச? என்று எப்போதாவது அவள் தாய் அலுத்துக்கொண்டால் எங்காத்தாகூட கருப்புத்தான். கருப்புத்தாம்மா அழகு, கம்பீரம். தெரியுமா உனக்கு?என்று எதிர்ப்பேச்சு பேசுவாள்.

    இவ்வளவு அறிவுள்ள நீ என்னைப் போல் ஒரு ஏழைக்கு மகளாகப் பிறந்திருக்ககூடாது என்று தந்தை அங்கலாய்த்துக் கொள்ளும்போது, நீங்களா ஏழை? உங்ககிட்ட இருக்கற சொத்து வேற யார்கிட்டயும் இல்லப்பா. நான் தமிழச் சொல்றேன்.வேற யாராலப்பா உங்கள மாதிரி இன்னா நாற்பதுக்கும் இனியவை நாற்பதுக்கும் உரை சொல்லமுடியும்? வேற யாராலப்பா உங்கள மாதிரி அருமையா திருவாசகத்தச் சொல்லித் தரமுடியும்?என்று சொல்லித் தன் தந்தையை நெகிழ வைப்பாள்.

    ***

    அதுவரை தெருவைப் பார்த்து அமர்ந்து கொண்டிருந்த செல்விசன்னிதியில் இருக்கும் சொக்கியை –அந்தப் பச்சைப்புடவைக்காரி மீனாட்சியை அப்படி அழைப்பதுதான் செல்விக்குப் பிடிக்கும் – நோக்கித் திரும்பினாள்.

    "சொக்கி! நீ எனக்கு இப்பவரைக்கும் எந்தக் குறையும் வைக்கலடி. நான் கருப்பிதாண்டி. ஆனா நீயும் கருப்பிதானே! எனக்குக் கால் சரியா இல்ல. அதனால என்ன? என்னால தெனமும் ரெண்டு தரம் உன் கோவிலுக்கு நடந்து வர முடியுதுல்ல? அதுக்கு மேலே வேற என்னடி வேணும்? பணக்காரனுக்கு மகளாப் பிறக்கலையேன்னு நான் என்னிக்குமே கவலைப்பட்டதில்லடி. என்னை ஒரு நல்ல தமிழ் வாத்தியாருக்கு மகளாப் பெறக்கவச்சேன்னு நான் சந்தோஷப்படாத நாளே இல்லை.

    சொக்கி, எனக்குன்னு நீ இருக்கும்போது எனக்குக் கல்யாணமே வேண்டாம்டி. ஒவ்வொரு தரமும் ஒருத்தன் என்னப் பொண்ணு பாக்க வரும்போது அவமானத்துல செத்துப் போயிடறேண்டி. அதப்பத்திக்கூடக் கவலைப்படல. ஆனா எனக்காக எங்கப்பா – அந்தத் தமிழ் மேதை – வாயில் எந்த நேரமும் திருவாசகமும் அபிராமி அந்தாதியும் மணக்கற அந்த நல்ல மனுஷர் – மோசமான மனுஷங்க கால்ல விழறத நெனச்சா எனக்குக் குலை நடுங்குதுடி. நான் உசிரோட இருக்கறவரைக்கும் இந்த சோக நாடகம் நடந்துக்கிட்டுத்தான் இருக்கும்.அதனால நான் உங்கிட்ட வந்துடறேன். இதோ இப்பவே வந்துடறேன். எங்கப்பாவையும் அம்மாவையும் பாத்துக்கவேண்டியது உன் பொறுப்புடி.

    ஒரு தீர்மானத்துடன் படிகளை விட்டு எழுந்தாள் செல்வி. கீழே இறங்கி சாலைக்கு வந்தவுடன் மீண்டும் ஒரு முறை மீனாட்சியைக் கைகூப்பி வணங்கினாள். இரு பக்கமும் பார்த்தாள். அந்தப் பக்கம் வக்கீல் புதுத்தெரு. இந்தப் பக்கம் வடக்கு வெளிவீதி. வடக்கு வெளிவீதியில் போக்குவரத்து அதிகம் இருந்தது. வேகமாக வரும் ஒரு வண்டிக்கு முன் பாய்ந்துவிடுவது என்று முடிவெடுத்தாள். கண்ணில் விழுந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். அதிகபட்சம் இன்னும் அறுபது நொடிகள் எல்லாம் முடிந்துவிடும்.

    வடக்குவெளி சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டு அந்த வழியாகப் படுவேகமாக வந்துகொண்டிருந்த வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள் செல்வி. ஒரு மணல் லாரி கண்மூடித்தனமான வேகத்துடன் வந்துகொண்டிருந்தது. ஏதோ உந்துதலில் அந்த லாரியில் என்ன எழுதியிருக்கிறது என்று பார்த்தாள்.

    மீனாட்சி துணை என்ற வார்த்தைகளைப் பார்த்தவுடன் செல்விக்குச் சாகும் வேளையிலும் சந்தோஷம் பீறிட்டது. ‘உனக்கும் என்னைப் பாக்கணும்னு ஆசை வந்திருச்சோ?’என்றுசத்தமாகச் சொன்னாள். லாரி அருகில் வந்துவிட்டது. செல்வி பாயத் தயாரானாள். சற்று உயரமாக இருந்த நடைமேடையிலிருந்து அவள் குதிக்க முற்பட்டபோது ஒரு வலுவான கை அவள் தோளைப் பிடித்து அவளைத் தடுத்து நிறுத்தியது. செல்வி திமிறினாள். கத்தினாள். அவளால் அரையங்குலம் கூட நகரமுடியவில்லை.

    அந்த லாரி அவளை அசுரவேகத்தில் கடந்து சென்றது. அதைத் தொடர்ந்து ஏராளமான வண்டிகள் அவளைக் கடந்து சென்றன. பச்சை விளக்கு மாறி சிகப்பு வந்து எல்லா வண்டிகளும் நிற்கும்வரை அவளைச் சிறைப்பிடித்து வைத்திருந்தது அந்தக்கை.

    செல்வி திரும்பிப் பார்த்தாள்.

    காவி உடையணிந்த ஒருவர் சிரித்தபடி நின்றுகொண்டிருந்தார். ஆளைப் பார்த்தால் எண்பது வயதுக்கு மேல் இருக்கும் என்று தோன்றியது. வற்றிய உடம்பு. உடம்பெல்லாம் திருநீறு பூசியிருந்தார். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. தலையில் முடியில்லை.வாயில் பற்கள் இல்லை. என்றாலும் அவர் பேச்சு தெளிவாக இருந்தது.

    அவசரப்படக்கூடாது குழந்தை. சாலையைக் கடக்கும்போது கவனம் வேண்டாமா?

    செல்விக்கு ஆத்திரம் வந்தது.

    நான் சாலையக் கடக்க வரல. சாக வந்திருக்கேன்.

    அதுக்கும் அவசரப்படாத குழந்தை. இன்னும் நீ பாக்கவேண்டியது நிறைய இருக்கு. ஒரு பெரிய வாழ்க்கை உனக்காகக் காத்துக்கிட்டு இருக்கு.

    உங்களுக்கு நான் படற கஷ்டம் தெரியுமா?

    சொன்னாத் தெரிஞ்சிக்கறேன். வா ஆத்தா கோவில் வாசல்ல உக்காந்து பேசலாமா?

    சொக்கநாதர் கோவில் படிகளில் இருவரும் அமர்ந்துகொண்டார்கள்.

    ***

    "இந்தாம்மா இது ஆத்தாவோட குங்குமம்." செல்வியின் நெற்றியில் குங்குமத்தை இட்டார் அந்தப் பெரியவர்.

    இந்தா இதச் சாப்பிடு.

    அவர் கையில் பாதி மிளகுவடை இருந்தது.

    Enjoying the preview?
    Page 1 of 1