Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thaayena Vanthaval
Thaayena Vanthaval
Thaayena Vanthaval
Ebook232 pages1 hour

Thaayena Vanthaval

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அன்பு, ஆண்டவன், ஆன்மீகம், மீனாட்சி, அவள் கருணை - எல்லாம் சரிதான் தாயே! ஆனால் இந்தப் பாழாய்ப் போன காலம் எங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கிக்கொண்டிருக்கிறதே! காலத்தின் அகோரப் பசிக்கு இரையாவதற்கு முன்னால் உங்களை... உங்கள் அருள்... அன்பு... பயமாக இருக்கிறது, தாயே!” கல் தரையில் வெள்ளி மணிகளை உருட்டிவிட்டதைப் போன்ற சத்தத்துடன் பெரிதாகச் சிரித்தாள் பச்சைப்புடவைக்காரி. கனிந்த அன்பைக் காலத்தால் ஒன்றும் செய்ய முடியாது காலம் என்பது என் படைப்பு; இந்தக் காளியின் காலின் நக அழுக்கு அன்பே நான்; அன்பே நீ என்பதை இன்றே உணர்வாய் நீ அந்த அன்பின் நான்கு வெளிப்பாடுகள் இந்த நூலில். “ஐந்தாவது வெளிப்பாடும் இதில் உண்டு, தெரியுமா?” கேட்டவள் இந்த நூலை என்னை எழுத வைத்த மாகாளி. பதிலையும் அவளே சொன்னாள். “இதைப் படிப்பவர்கள் கண்களில் பொங்கிவரும் கண்ணீர். அது துன்பத்தின் வெளிப்பாடு இல்லை; துன்பங்களை எல்லாம் தவிடுபொடியாக்கும் இந்த சக்தியின் வெளிப்பாடு.” அவள் சொன்னதை உங்களிடம் சொல்லிவிட்டேன். இனி அவள் பாடு; உங்கள் பாடு.

Languageதமிழ்
Release dateSep 17, 2022
ISBN6580142409047
Thaayena Vanthaval

Read more from Varalotti Rengasamy

Related to Thaayena Vanthaval

Related ebooks

Reviews for Thaayena Vanthaval

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thaayena Vanthaval - Varalotti Rengasamy

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    தாயென வந்தவள்

    Thaayena Vanthaval

    Author:

    வரலொட்டி ரெங்கசாமி

    Varalotti Rengasamy

    For more books

    https://www.pustaka.co.in/home/author/varalotti-rengasamy

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    ரத்தக் கறை படிந்த காப்பு

    அன்பே சிவம்!

    உண்ணும் சோறு கண்ணன்

    காலமெல்லாம் என்னைத் தன் கொத்தடிமையாய்க் கொண்டிருக்கும் கையில் கிளி தாங்கிய கோலக்கிளியாம் மரகதவல்லி, மதுரையின் அரசி, மீனாட்சி என் பச்சைப்புடவைக்காரியின் திருப்பாதகமலங்களைத் தொட்டு வணங்கி இதைப் படிக்கின்ற நீங்கள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் என்ற பிரார்த்தனையையும் அவள் முன் வைத்து வரலொட்டி ரெங்கசாமியாகிய நான் இன்று இந்த நூலை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

    உங்கள அம்மான்னு கூப்பிடலாமா?

    இதைக் கேட்ட அதிர்ச்சியில் அவளுக்குக் கண்கள் பொங்கிவிட்டன. தன்னுடைய நாற்பது வயது வாழ்க்கையில் இதுவரை யாருமே அவளை அப்படி ஒரு கேள்வி கேட்டதில்லை. அவளை அதுவரை ஒரு அழகியாகப் பார்த்திருக்கிறார்கள். இழுத்த இழுப்புக்கெல்லாம் வரும் ஒரு போகப்பொருளாகப் பார்த்திருக்கிறார்கள். படுக்கையறைப் பங்காளியாகத்தான் அவளுடன் பழகியிருக்கிறார்கள். தங்கள் வக்கிரமான உணர்வுகளுக்கு ஒரு வடிகாலாகத்தான் அவளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதுவரை அவளை யாரும் ஒரு இதயம் உள்ள மனுஷியாகக்கூடப் பார்த்ததில்லை. இவன் என்னைத் தாயாகப் பார்க்கிறானே? ஒரு வேளை பைத்தியமோ?

    உலகின் மிகவும் பழமையான தொழிலில் உழன்றுகொண்டிருந்த ராதாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

    தன் முன்னால் பயத்தில் நடுங்கியபடி அமர்ந்திருந்த அந்த இளைஞனை உற்றுப் பார்த்தாள். அவனுக்கு 16 அல்லது 17 வயது இருந்தால் அதிகம். ப்ளஸ் டூ மாணவனாக இருப்பான். நல்ல உயரம். மாநிறம். ஒடிசலாக இருந்தான். அவன் கண்களில் ஒரு நிரந்தரமான தேடல் இருப்பதாக ராதாவிற்குத் தோன்றியது. பார்க்கும் பெண்களில் எல்லாம் தன்னுடைய தொலைந்து போன தாயைத் தேடுகிறானோ?

    அவர்கள் இருவரும் இருந்தது மதுரை நகரின் ஒதுக்குப்புறத்தில் இருந்த ஒரு மோசமான அடுக்குமாடிக் குடியிருப்பின் நெரிசலான படுக்கையறையில். ராதாவைத் தொழில் முறையில் பார்க்கவரும் ஆண்கள் அறைக்கதவு மூடப்பட்டதும் மிரு,கமாக மாறி அவளைத் தாக்குவார்கள். இவன் ஒன்றும் செய்யாமல் பத்து அடி தள்ளிப் பரிதாபமாக அமர்ந்திருந்தான்.

    அவன் எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள் ராதா. இப்போதுதான் அவன் அவளை நன்றாகப் பார்த்தான்.

    ராதா சராசரி உயரம். அந்தத் தொழிலுக்கேயுரிய சற்றே வாளிப்பான உடல் வாகு. கண்களில் அதிகப்படி மை. உதட்டில் அழுத்தமாகச் சாயம். நாடக நடிகையைப் போல் முகத்தில் அரிதாரம். நல்ல எடுப்பான தோற்றம்.

    இந்த வேஷங்களையெல்லாம் தாண்டி அவள் கண்களில் இருந்த ஏதோ ஒன்று அந்த இளைஞனைத் தொல்லை செய்தது. இறந்து போன அவன் தாயை நினைவூட்டியது.

    தலையிலிருந்து கால்வரை ஒரு இடம் மிச்சமில்லாமல் வெறித்துப் பார்த்த அந்த இரண்டுங்கெட்டான் இளைஞனின் பார்வை ராதாவிற்கு விகல்பமாகப் படவில்லை. பக்திப் பெருக்கோடு அம்மன் விக்கிரகத்தைத் தரிசனம் செய்யும் அடியவனின் அன்புதான் தெரிந்தது. தெய்வத்தின் உருவத்தில்கூடத் தன் தாயைத் தேடும் ஒரு மகனின் தவிப்புதான் தெரிந்தது.

    உன் பேர் என்ன?

    சக்தி. சக்தி சரவணன்.

    என்ன படிக்கற?

    பி. காம். ஃபர்ஸ்ட் இயர்.

    இங்க எப்படிரா வந்த?

    ராகிங். என்னக் குண்டுக்கட்டாத் தூக்கிக் கொண்டு வந்து போட்டுட்டாங்க.

    நான் யாரு, எப்படிப்பட்ட தொழில் செய்யறவன்னு தெரியும்ல?

    தெரியும்.

    அப்பறம் உங்கள அம்மான்னு கூப்பிடலாமான்னு கேக்கற?

    ஏன், இந்தத் தொழில் செய்யறவங்க அம்மாவா இருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கா? சட்டத்தை மீறி இந்தத் தொழில செய்யற நீங்க அம்மாவா இருந்தா போலீஸ்ல பிடிச்சிக்கிட்டுப் போயிருவாங்களா?

    ராதா சிரித்தாள். சிலிர்த்தாள்.

    அதன்பின் இரண்டு மணி நேரம் இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

    சிறு வயதிலேயே இறந்துவிட்ட தாய், தன்னைத் தனியாக வளர்க்கப் பாடுபடும் நோயாளித் தந்தை, வீட்டின் மோசமான பொருளாதார நிலை, வாய்ப்பு கிடைத்தால் பி காம் முடித்துப் பின் சி ஏ படிக்கவேண்டும் என்ற தன் நீண்ட நாள்க் கனவு. என்று அவன் எதையும் மறைக்கவில்லை.

    ராதா மணியைப் பார்த்தாள். இரவு 11. இருக்கையை விட்டு எழுந்து நின்றாள். சக்தியும் எழுந்துகொண்டான்.

    நீ கெளம்பு சக்தி. இனிமே இருந்தா உனக்கும் பிரச்சினை. எனக்கும் பிரச்சினை.

    நீங்க இன்னும் நான் கேட்ட கேள்விக்குப் பதிலே சொல்லலையே!

    ராதா சக்தியை அணைத்துக்கொண்டு உச்சி மோந்தாள்.

    அம்மான்னு கூப்பிட அம்மாகிட்ட அனுமதி வாங்க வேண்டாம்.

    தேங்க்ஸ்மா.

    அம்மாக்கு தேங்க்ஸும் சொல்ல வேண்டாம். சொல்லப்போனா நான்தான் உனக்கு நன்றி சொல்லணும். இருபது வருஷமா இந்தக் கேடுகெட்ட தொழில்ல உழண்டுகிட்டு இருக்கற எனக்குப் பெரிய கௌரவத்தக் கொடுத்துட்டடா. சரி, நீ கெளம்பு. நேரமாச்சு.

    வரேம்மா. என்றவனை மீண்டும் இழுத்து அணைத்துக்கொண்டாள்.

    இனிமே என்னைப் பாக்க வராத கண்ணு. இது மோசமான உலகம்.

    அம்மாவப் பாக்காம எப்படிம்மா இருப்பேன்? இங்க வேண்டா. வேற எங்கயாவது பொது இடத்துல பாக்கலாமே!

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நான் மீனாட்சியம்மன் கோவில்ல பொற்றாமரைக் குளப் படிக்கட்டுல காலையில ஆறுமணியிலருந்து ஏழு மணிவரைக்கும் உக்காந்திருப்பேன். அப்போ வா. பாக்கலாம் பேசலாம்.

    ***

    அதிகாலை மூன்று மணி. மதுரை நகரின் வடபகுதியில் உள்ள ஒரு எளிய குடியிருப்புப் பகுதி. அமைதியரசி தன்னை எதிர்ப்பார் இல்லாமல் கோலோச்சிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் திடீரென்று ஒரு மூன்று வயதுக் குழந்தையின் அழுகை சத்தம் காதைக் கிழித்தது. அமைதியரசியால் அந்த எதிர்ப்பைத் தாக்குப்பிடிக்கமுடியவில்லை. அவளுடைய ஆட்சி கவிழ்ந்தது.

    எதையோ கண்டு பயந்ததுபோல் வீறிட்டு அழத் தொடங்கியிருந்தது அந்தக் குழந்தை.

    அருகில் படுத்திருந்த அந்தக் குழந்தையின் தந்தை அதைச் சமாதானப்படுத்த முயன்றார். பால், பிஸ்கட், சாக்கலேட் என்று அவர் கொடுத்த அனைத்தையும் நிர்தாட்சண்யமாக நிராகரித்தது அந்தக் குழந்தை.

    வேற என்னதான் வேணும், சரவணா?

    தந்தையும் அழுதுவிடுவார் போல்தான் இருந்தது.

    அம்மா.

    அந்த ஒற்றை வார்த்தையில் தன் தந்தையைக் கதற வைத்தது அந்தக் குழந்தை. குழந்தையைக் கட்டிக்கொண்டு பெரிதாக அழத் தொடங்கினார் அந்த நாற்பது வயதுத் தந்தை.

    ஒரு மாதத்திற்கு முன்புதான் தன் மனைவியைப் பறிகொடுத்திருந்தார் அவர். இத்தனைக்கும் பெரிதாக வியாதி ஒன்றும் இல்லை. மஞ்சள் காமாலை வந்தது. டாக்டரிடம் அழைத்துப் போனார். ஏதோ மாத்திரை எழுதிக்கொடுத்தார்.

    இதில் சரியாகாவிட்டால் மேலும் சில பரிசோதனைகள் செய்து பார்ப்போம்.

    அந்த நோய் சரியாகாமலேயே அவள் இறந்துவிட்டாள். அப்போதுதான் உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்துக்குளித்ததுபோல் மஞ்சள் பாரித்துக்கிடந்த தன் மனைவியின் தோற்றத்தை அவரால் மறக்கமுடியவில்லை. இனி எப்படித் தனியாளாக இவனை வளர்த்து ஆளாக்கப் போகிறேன் என்ற நினைப்பு அவரைத் தூங்கவிடவில்லை.

    ஒரு குழந்தையின் அழுகையையே நிறுத்த முடியாத ஒரு கையாலாகாத அப்பனால் எப்படி அவனை வளர்த்து ஆளாக்க முடியும்? இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம்தான். அவர் அரசுத்துறை வங்கியில் குமாஸ்தாவாக இருந்தார். வாழ்க்கைக்குப் போதுமான ஊதியம். சொந்தத்திலேயே பெண்ணும் கிடைக்கலாம். மனைவியின் ஈமச்சடங்கிற்கு வந்த ஓரிரண்டு உறவினர்கள் தங்கள் வீட்டில் பெண் இருப்பதாக அவருக்குக் கோடி காட்டியும் விட்டார்கள்.

    இரண்டாவது திருமணத்திற்குக் குறுக்கே நின்றது அவருடைய உடல் நலம். அது அவர் தன் மனைவியிடம் கூட மறைத்துவிட்ட பரம ரகசியம். அவரை ஒரு அபூர்வமான எலும்புப் புற்று நோய் பாதித்திருந்தது. சரியான சிகிச்சையை எடுத்துக்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் இருபது வருடம்வரைகூட வாழலாம் என்று மருத்துவர் அவரை லேசாகப் பயமுறுத்தியிருந்தார்.

    மறுமணம் செய்துகொள்கிறேன் பேர்வழி என்று இன்னொரு பெண்ணின் வாழ்க்கையைச் சிக்கலாக்க அந்த மனிதருக்கு மனம் இல்லை.

    குழந்தை இன்னும் பெரிதாக அழுதுகொண்டிருந்தான்.

    அவனைத் தூக்கிக்கொண்டு குளியலறைக்கு ஓடினார். தலையில் தண்ணீர் ஊற்றிக்கொண்டு குளித்தார். குழந்தையையும் குளிப்பாட்டினார். பின் துவைத்து மாற்று ஆடை உடுத்திக்கொண்டு வீட்டைப் பூட்டிக்கொண்டு கிளம்பினார்.

    அந்த மீனாட்சியிடமே வழிகேட்டுவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் கோவிலுக்கு நடந்தே போனார்.

    கோவிலை அடைந்தபோது காலை மணி நான்கரை. ஐந்து மணிவாக்கில்தான் நடை திறப்பார்கள். மீனாட்சி கோவில் கிழக்கு வாசலில் செருப்புகள் போடும் இடத்தில் அமர்ந்து கொண்டார். குழந்தை இப்போது அழவில்லை. அவனை அந்தக் காலை வேளையில் பச்சைத் தண்ணீரில் குளிப்பாட்டியது ஒரு அதிர்ச்சி வைத்தியமாக அமைந்துவிட்டது. தந்தையின் முகத்தையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் மூன்று வயது சரவணன்.

    சில நிமிடங்களில் சரவணன் மீண்டும் அழ ஆரம்பித்தான்.

    அழாதடா. அம்மா சாமிகிட்டப் போய்ட்டா. ஏன் எங்கம்மாவ எங்கிட்டருந்து பிடுங்கிக்கிட்டன்னு அந்த சாமிகிட்டயே கேளு. சரியா?

    அழுகையினூடே கேட்டான் சரவணன்.

    நானும் சாமிகிட்ட போனா அம்மாவப் பாக்கலாமா?

    அவனை அணைத்துக்கொண்டு இன்னும் பலமாக அழ ஆரம்பித்தார் அவன் தந்தை.,

    அழுகுரல் கேட்டு யாரோ அவர்களை நோக்கி நடந்து வந்தார்கள்.

    வந்தவருக்கு அறுபது வயதிற்கு மேல் இருக்கும். காஷாயம் அணிந்திருந்தார். உடலெங்கும் திருநீறு பூசியிருந்தார். ஒரு உத்தம சந்நியாசிக்கேயுரிய நன்கு வற்றிய உடல் வாகு. கண்களில் இறையைத் தேடும் உக்கிரத்தையும் தாண்டி மனிதர்கள் மேல் இருக்கும் கருணை பளீரிட்டது.

    சாமி

    என்று கத்தியபடி அந்தத் துறவியின் காலில் விழுந்து வணங்கினார் தந்தை.

    அவர்கள் அருகில் அமர்ந்தார் அந்தத் துறவி. அவர்களைப் பற்றி விசாரித்தார்.

    கோவில் நடை திறந்ததற்காக மணி அடித்தது.

    பையன் பேரு என்ன சொன்னீங்க?

    சரவணன்.

    இவன் எங்கம்மாவோட குழந்தை. இனிமே இவன் பேர சக்தி சரவணன்னு மாத்திருங்க. பள்ளிக்கூடத்துல அதே பேரையே கொடுங்க. இவன் பெரிய ஆளா வருவான். இவனுக்கு எங்காத்தா மீனாட்சியோட பரிபூரணமான அருள் உண்டு.

    அழுகையை நிறுத்திய சரவணன் அந்தத் துறவியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

    டேய் சக்தி, அம்மாவப் பாக்கப் போகலாமா?

    என்றபடி அந்தத் துறவி கைநீட்ட அதை அழுந்தப் பற்றிகொண்டான் சக்தி.

    மூவரும் கோவிலுக்குள் நுழைந்தார்கள். அன்று அவ்வளவாகக் கூட்டம் இல்லை. திருவனந்தல் சேவைக்கு மொத்தம் ஐந்து பேர் மட்டுமே இருந்தார்கள்.

    சக்தியைத் தூக்கிக்கொண்டார் துறவி. முன்னால் கருணைக்கடலாக, மரகதச் சிலையாக, மாசற்ற மாணிக்கமாக, மாபெரும் சக்தியாக, இந்த உலகத்திற்கே அன்னையாக, உமையவளாக, அன்பரசியாகத் தோன்றிய மீனாட்சியைக் காட்டினார்.

    "சக்தி, இனிமே இவதாண்டா உன் அம்மா. உன்னைப் பெத்த அம்மா இவகிட்டதான் போயிருக்கா.. அதனால உனக்கு அம்மாவா இருக்க வேண்டிய பொறுப்ப இவளே எடுத்துக்கிட்டாடா.

    இவ பாக்கத்தாண்டா கல்லு மாதிரி சிலையா இருப்பா. உங்கம்மா மனசுல இருந்த அன்பைவிட இவகிட்ட அன்பு ஜாஸ்தி."

    சக்தி மழலை மொழியில் கேட்டான்.

    இவங்க எங்ககூட வீட்டுக்கு வருவாங்களா?

    சக்தியை இறுகத் தழுவிக்கொண்டார் துறவி.

    வருவாடா. சத்தியமா வருவா. உன்னைக் காப்பாத்த, உன்னை வளர்க்க. உன்னை ஆளாக்க. நிச்சயமா வருவா. ஆனா இதே மாதிரி வரமாட்டா. உங்கம்மா மாதிரி மனுஷ ரூபத்துல வருவா. உனக்கு எதாவது கஷ்டம் வந்தா அம்மான்னு கூப்பிடு. மத்தத இவ பாத்துப்பா.

    தீபாராதனையுடன் திருவனந்தல் சேவை நிறைவு பெறும்வரை சக்தி கையில் கிளிதாங்கிய அந்த மரகதவல்லியையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

    அர்ச்சகர் பிரசாதம் தர வந்தபோதுதான் சக்தியைக் கீழே இறக்கிவிட்டார் அந்தத் துறவி. தன் கண்களைத் தன் கைகளாலேயே அழுந்தத் துடைத்துக்கொண்ட சக்தி அதன்பின் அழவேயில்லை.

    ***

    விடிந்தும் விடியாத காலைப் பொழுது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் பொற்றாமரைக் குளத்தில் இருந்த நீர் சலனமற்றுத் தெளிவாக இருந்தது. குளத்தின் படிகளில் நான்கைந்து பேர்தான் இருந்தார்கள். சூழ்நிலையின் அமைதியை அதன் தெய்வீகத்தன்மை இன்னும் ஆழமாக்கியது. சம்சாரம் என்னும் இந்தக் குளத்திலிருந்து வெளியேறிக் கரைக்கு வா, உனக்காக தெய்வம் காத்துக்கொண்டிருக்கிறது என்று சொல்வதுபோல் இருந்த கம்பீரமான கோபுரங்களின் காட்சி அந்தச் சூழ்நிலைக்குப் பரவசம் என்ற பரிமாணத்தையும் அளித்திருந்தது.

    நல்லா இருக்கீங்களாம்மா?

    குரல் கேட்டு நிமிர்ந்தாள் ராதா.

    வா சக்தி.

    குனிந்து அவள் காலைத் தொட்டு வணங்கிப் பின் அவள் அமர்ந்த படிக்கு அடுத்த படியில் கீழே அமர்ந்துகொண்டான் சக்தி.

    ராகிங்கற பேர்ல உன்னை வற்புறுத்தி என்கிட்ட அனுப்பி வச்ச அந்தப் பாதகர்களை என்ன செய்யலாம் சொல்லு?

    அவங்க ரொம்ப நல்லவங்கம்மா. எனக்கு உங்கள மாதிரி ஒரு அம்மாவக் கொடுத்திருக்காங்களே! என்கிட்ட மட்டும் பணம் இருந்தா அவங்களுக்கு ஏதாவது பெரிய பரிசா வாங்கிக்கொடுத்திருப்பேன்.

    சக்தியின் தலையில் கைவைத்து அளைந்தாள் ராதா.

    செண்டிமெண்ட்டெல்லாம் சரி, சக்தி. உன் விஷயம் ஏதோ நல்லபடியா முடிஞ்சது. ராகிங் பண்றேன் பேர்வழின்னு மாணவர்களை, குடி கஞ்சாவுக்கு அடிமையாக்கிட்டாங்கன்னா ஆபத்தாப் போயிருமே?

    நாம என்னம்மா பண்ண முடியும்? எங்க சீனியர்ஸ் அஞ்சு பேரு இருக்காங்க. ஒருத்தன் எம் எல் ஏவோட பிள்ளை. இன்னொருத்தன் டி எஸ் பியோட பிள்ளை. இப்படி எல்லாருமே பெரிய இடம். அவங்க மேல புகார் கொடுத்தா எங்களை உண்டு இல்லைன்னு பண்ணிருவாங்க.

    "நீ கவலைப்படாத சக்தி. அவங்க பேரை மட்டும் சொல்லு. அவங்கள உன்

    Enjoying the preview?
    Page 1 of 1