Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ellorum Vallavare
Ellorum Vallavare
Ellorum Vallavare
Ebook163 pages59 minutes

Ellorum Vallavare

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

2015, சென்னைப் புத்தகக் காட்சியில், 'நீ அசாதாரணமானவன்' என்ற தலைப்பில் பேசினேன். அந்தப் பேச்சின் இறுதியில் நான் சொன்ன தகவலின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அங்கே சொன்ன தகவல் என்ன?

வெளிநாட்டில் வேலை கிடைத்துப்போன ஒருவன், விடுப்பில் திரும்பி வந்தபோது, மொத்தம் மூன்று ஸ்மார்ட் போன்கள் வாங்கி வந்தான். ஒன்றை அம்மாவிடமும் மற்றொன்றை அப்பாவிடமும் கொடுத்தான். மூன்றாவது மொபைல் போனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனது தம்பியிடம் கொடுத்தான். பின்பு விடுப்பு முடிந்து கிளம்பிப் போய்விட்டான்.

விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை மூவரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவனுடைய அம்மாவின் போனில் அழைப்பு வந்தால், அவர் அதை விரலால் 'வழித்து விட்டு’ பேசுவார். எப்போதும் அதை மட்டுமே செய்தார். அவர் மகன் அடுத்த விடுப்பில் திரும்பி வரும்வரை!

அவனுடைய அப்பா கொஞ்சம் மேல். அழைப்பு வந்தால் எடுப்பார். தவிர, தேவைப்பட்டால் அந்த போனின் 'கான்டாக்ட்ஸ்' பகுதிக்குச் சென்று, பேச விரும்பும் நபரின் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பார், பேசுவார். மேலும் புதிய எண்களைப் பதிவு செய்து கொள்வார். ஆக, தன்னுடைய மனைவி பயன்படுத்தியதைக் காட்டிலும், அந்த ஸ்மார்ட் போனை சற்று கூடுதலாகப் பயன்படுத்தினார்.

மூன்றாவதாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுடைய தம்பி. அவன் வேண்டியவர்களை போனில் அழைப்பது, வரும் அழைப்பை ஏற்பது, பாட்டுக் கேட்பது, ஒலிப்பதிவு செய்வது, பதிவுகளைக் கேட்பது, படங்கள் எடுப்பது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தி படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் அனுப்புவது பெறுவது. ஸ்கைப் பயன்படுத்துவது, கூகுள் மேப்ஸ் பார்ப்பது. பேஸ் டைமில் தொடர்பு கொள்வது, மின்னஞ்சல்கள் பரிமாற்றம், அலாரம் பயன்படுத்துவது, அப்பாவின் தேவைகளுக்காக நெட் பேங்கிங் என்று அந்த போனில் சுமார் பதினெட்டுக்கும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தினான். அண்ணன் வரும் போது, அந்த போனுக்கும் அடுத்த மாடல் போன் வாங்கி வரும்படி கேட்கிறான்.

மூவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரே மாதிரியான போன். ஒரே விலை. போன்களில் இருந்த அம்சங்களிலும் வேறுபாடுகள் கிடையாது. மூவருக்குமே அந்த போனை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. ஆனால், பயன்படுத்திய விதங்களிலும் பயனடைந்த அளவுகளிலும் மூவருக்குள்ளும் பெரிய வேறுபாடுகள்.

இது யார் குற்றம். போனின் குற்றமா... கொடுத்தவனின் குற்றமா?

பயன்படுத்துபவரின் குற்றம் தானே தவிர, வேறு யாருடைய தவறும் இல்லை. இது போலத்தான், மனிதர்களின் வேறுபாடுகளும் மனிதர்களிடம் இருக்கும் மூளை என்ற இயந்திரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே உருவாக்கம் (மேக்)தான். ஆனாலும், செயல்பாடுகளிலும் சாதனைகளிலும் வித்தியாசம் உண்டு. காரணம், மொபைல் போனில் பார்த்த அதே விஷயம்தான்.

மூளையைப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறோம். திறன் படைத்திருப்பதில் யாரும் எவருக்கும் குறைந்தவரில்லை. படைத்தவன் ஒரே மாதிரியாகத்தான் படைத்து அனுப்பியிருக்கிறான். ஆக, எல்லோரும் ஒன்றுதான். முயன்றால் எல்லோரும் வல்லவராகிவிட முடியும். ஆனால், அது எப்படி? எங்கே சிலர் தவறவிடுகிறார்கள்? எதனால் சிலர் சாதிக்காதவர்களாகவே போய்விடுகிறார்கள்?

- சோம. வள்ளியப்பன்
21.12.2015
writersomavalliappan@gmail.com

Languageதமிழ்
Release dateNov 10, 2019
ISBN6580110104636
Ellorum Vallavare

Read more from Soma Valliappan

Related to Ellorum Vallavare

Related ebooks

Reviews for Ellorum Vallavare

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ellorum Vallavare - Soma Valliappan

    http://www.pustaka.co.in

    எல்லோரும் வல்லவரே

    Ellorum Vallavare

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. விவரங்கள்

    2. மேலோட்டமாகப் பார்ப்பதும் நுணுக்கமாகப் பார்ப்பதும்

    3. எறும்புத் தோலை உரிக்க முடியுமா?

    4. எது சிறப்பு... அதிகமா குறைவா?

    5. பராக்குப் பார்ப்பது

    6. குத்துப் பாட்டிலிருந்து மெல்லிசைக்கு

    7. நிலக்கரி - மண்ணெண்ணெய் - கேஸ்

    8. டாக்டர்களுக்குள் என்ன வேறுபாடு?

    9. கவனிக்கும் அளவு வெற்றி

    10. தமிழில் முக்கியமான சொல்

    11. அடுத்த வேலை என்ன?

    12. தனித்திரு விழித்திரு பசித்திரு

    13. ஆழ்ந்து யோசி

    14. மனத்துக்குள் லைப்ரரி

    15. கணிப்பதும் கவனிப்பதும்

    16. மூளைக்குள் பயணம்

    17. தொடர்ந்து செய்...

    18. சொல்லத் தெரியாத திறமை

    19. பழகப் பழக வரும் பாண்டித்தியம்

    20. உள்ளே தள்ளு...

    21. எல்லாம் முக்கியமல்ல...

    22. கூர்மைப்படுத்து

    23. எல்லோரும் வல்லவரே

    எல்லோரும் வல்லவரே

    பங்குச்சந்தை வர்த்தகம், சுயமுன்னேற்றம், நிர்வாகவியல், மனித வள மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பல புகழ்பெற்ற நூல்களை எழுதியவர் சோம. வள்ளியப்பன். துறை சார்ந்த செழிப்பான அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டிருக்கும் இவர் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைத்துறை ஊடகங்களில் தொடர்ந்து இயங்கிவருகிறார்.

    பங்குச்சந்தை பற்றிய இவருடைய அள்ள அள்ளப் பணம் நூல்கள் (வரிசை 1-5), வெளிவந்த காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

    *****

    முன்னுரை

    2015, சென்னைப் புத்தகக் காட்சியில், 'நீ அசாதாரணமானவன்' என்ற தலைப்பில் பேசினேன். அந்தப் பேச்சின் இறுதியில் நான் சொன்ன தகவலின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அங்கே சொன்ன தகவல் என்ன?

    வெளிநாட்டில் வேலை கிடைத்துப்போன ஒருவன், விடுப்பில் திரும்பி வந்தபோது, மொத்தம் மூன்று ஸ்மார்ட் போன்கள் வாங்கி வந்தான். ஒன்றை அம்மாவிடமும் மற்றொன்றை அப்பாவிடமும் கொடுத்தான். மூன்றாவது மொபைல் போனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனது தம்பியிடம் கொடுத்தான். பின்பு விடுப்பு முடிந்து கிளம்பிப் போய்விட்டான்.

    விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை மூவரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவனுடைய அம்மாவின் போனில் அழைப்பு வந்தால், அவர் அதை விரலால் 'வழித்து விட்டு’ பேசுவார். எப்போதும் அதை மட்டுமே செய்தார். அவர் மகன் அடுத்த விடுப்பில் திரும்பி வரும்வரை!

    அவனுடைய அப்பா கொஞ்சம் மேல். அழைப்பு வந்தால் எடுப்பார். தவிர, தேவைப்பட்டால் அந்த போனின் 'கான்டாக்ட்ஸ்' பகுதிக்குச் சென்று, பேச விரும்பும் நபரின் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பார், பேசுவார். மேலும் புதிய எண்களைப் பதிவு செய்து கொள்வார். ஆக, தன்னுடைய மனைவி பயன்படுத்தியதைக் காட்டிலும், அந்த ஸ்மார்ட் போனை சற்று கூடுதலாகப் பயன்படுத்தினார்.

    மூன்றாவதாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுடைய தம்பி. அவன் வேண்டியவர்களை போனில் அழைப்பது, வரும் அழைப்பை ஏற்பது, பாட்டுக் கேட்பது, ஒலிப்பதிவு செய்வது, பதிவுகளைக் கேட்பது, படங்கள் எடுப்பது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தி படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் அனுப்புவது பெறுவது. ஸ்கைப் பயன்படுத்துவது, கூகுள் மேப்ஸ் பார்ப்பது. பேஸ் டைமில் தொடர்பு கொள்வது, மின்னஞ்சல்கள் பரிமாற்றம், அலாரம் பயன்படுத்துவது, அப்பாவின் தேவைகளுக்காக நெட் பேங்கிங் என்று அந்த போனில் சுமார் பதினெட்டுக்கும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தினான். அண்ணன் வரும் போது, அந்த போனுக்கும் அடுத்த மாடல் போன் வாங்கி வரும்படி கேட்கிறான்.

    மூவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரே மாதிரியான போன். ஒரே விலை. போன்களில் இருந்த அம்சங்களிலும் வேறுபாடுகள் கிடையாது. மூவருக்குமே அந்த போனை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. ஆனால், பயன்படுத்திய விதங்களிலும் பயனடைந்த அளவுகளிலும் மூவருக்குள்ளும் பெரிய வேறுபாடுகள்.

    இது யார் குற்றம். போனின் குற்றமா... கொடுத்தவனின் குற்றமா?

    பயன்படுத்துபவரின் குற்றம் தானே தவிர, வேறு யாருடைய தவறும் இல்லை. இது போலத்தான், மனிதர்களின் வேறுபாடுகளும் மனிதர்களிடம் இருக்கும் மூளை என்ற இயந்திரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே உருவாக்கம் (மேக்)தான். ஆனாலும், செயல்பாடுகளிலும் சாதனைகளிலும் வித்தியாசம் உண்டு. காரணம், மொபைல் போனில் பார்த்த அதே விஷயம்தான்.

    மூளையைப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறோம். திறன் படைத்திருப்பதில் யாரும் எவருக்கும் குறைந்தவரில்லை. படைத்தவன் ஒரே மாதிரியாகத்தான் படைத்து அனுப்பியிருக்கிறான். ஆக, எல்லோரும் ஒன்றுதான். முயன்றால் எல்லோரும் வல்லவராகிவிட முடியும். ஆனால், அது எப்படி? எங்கே சிலர் தவறவிடுகிறார்கள்? எதனால் சிலர் சாதிக்காதவர்களாகவே போய்விடுகிறார்கள்?

    21.12.2015

    சோம. வள்ளியப்பன்

    *****

    1. விவரங்கள்

    தமிழர்கள் நல்லவர்களாக மட்டும் இருந்தால் போதாது. வல்லவர்களாகவும் இருக்க வேண்டும்.

    - மு. வரதராசன்

    நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனித வளத்துறை மேலாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம் அது. நிறுவனத்துக்குத் தேவையான சரியான நபர்களைத் தேர்வு செய்து பணியில் அமர்த்துவதும் என் வேலைகளில் ஒன்று. எந்தத் துறைக்கு ஆள் எடுக்க வேண்டுமோ அந்தத் துறையின் மேலாளர் தேர்வு செய்யத்தக்க நபர்களை நான் கண்டு பிடித்துக் கொண்டுவர வேண்டும். பின்பு நாங்கள் இருவருமாகச் சேர்ந்து தேர்வு செய்வோம்.

    அப்படியாக நிதித்துறைக்குத் தேவையான அக்கவுண்டென்ட்ஸ் சிலரைத் தேர்வு செய்ய நானும் நிதித்துறை உயரதிகாரி ஒருவரும் நேர்முகத் தேர்வு நடத்திக் கொண்டிருந்தோம். பல மாதங்களாகப் பலரைப் பார்த்தும் சரியான நபரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தகுதியான சுமார் பன்னிரெண்டு நபர்களை 'மேன்பவர் கன்சல்டென்ஸி' மூலம் வரவழைத்து விட்டேன். என்னைப் பொறுத்த வரையில் அதில் ஆறு அல்லது ஏழு நபர்கள் தேர்வு செய்யத் தகுந்தவர்களே. ஆனாலும் என்னுடன் இருந்த நிதித்துறை உயரதிகாரி, அனைவரையும் நிராகரித்து விட்டார்.

    நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன. போதிய நபர்கள் இல்லாததால் அந்தத் துறையில் வேலை பாதிக்கப்பட்டது. ஒருநாள் அவ்வாறு நாங்கள் இருவரும் அதே பதவிக்கான நேர்முகத் தேர்வில் மூன்று புதிய விண்ணப்பதாரர்களைச் சந்தித்தோம்.

    தேர்வு முடிந்தது. யாரை எடுக்கலாம் என்று நான் அவரைக் கேட்டேன். அவர் வழக்கம் போல ‘யாரும் சரியில்லை. வேறு யாரையாவது அழைத்து வாருங்கள்' என்றார். பின்பு, நானும் அவருமாக நேர்முகம் செய்த அறையில் இருந்து வெளியில் வந்தோம்.

    நான் சோர்வாக நடந்து வந்தேன். அப்போது அங்கே வந்த நிறுவனத்தின் தலைவர் எங்கள் இருவரையும் பார்த்துக் கேட்டார்.

    'என்ன முடிந்ததா? யாரைத் தேர்வு செய்தீர்கள்?'

    'ம்ஹும். எவரும் சரியில்லை' என்றார் நிதித்துறை மேலதிகாரி வேகவேகமாக.

    'அப்படியா!' என்ற நிறுவனத் தலைவர், 'அவர்களிடம் என்ன குறைகள் சொல்லுங்கள்' என்றார் அவரைப் பார்த்து.

    'அவர்கள் பொருத்தமானவர்கள் இல்லை.'

    "ஓக்கே. எந்த விதத்தில்?’

    ‘வேலை, அனுபவம்.'

    ‘ஓகோ.’

    'மேலும் கம்யூனிகேஷன் திறமையும் இல்லை.'

    'அப்படியா! என்று ஆச்சரியப்பட்டவர், என்ன நினைத்தாரோ, 'சரி சரி. வாருங்கள் உள்ளே போய் அமர்ந்து பேசுவோம்' என்று சொல்லியபடி எங்களை மீண்டும் அந்த நேர்முகத் தேர்வு அறைக்கு அழைத்துப் போனார்.

    'இன்று எத்தனை பேரைப் பார்த்தீர்கள்? ஒவ்வொருவரைப் பற்றியும் விவரங்கள் சொல்லுங்கள்' என்றார் நிதித்துறை உயரதிகாரியைப் பார்த்து.

    அதுவரை அவர்கள் உரையாடலில் குறுக்கிடாமல் இருந்த நான் இப்போது பதில் சொல்ல முற்பட்டேன். ஆனால் நிறுவனத் தலைவர் என்னை சைகையால் பேசாமல் இருக்கச் சொன்னார்.

    நிதித்துறை உயரதிகாரியால் குறிப்பான விவரங்கள் சொல்ல முடியவில்லை. அவர் சொன்ன காரணங்கள் எல்லாம் பொதுவானதாக இருந்ததாக நிறுவனத் தலைவர் சொல்லிவிட்டு, இறுதியாக, You should have details Mr... என்று சற்று கடுமையாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    'உங்களிடம் நீங்கள் சொல்லுவதற்கான விவரங்கள் இருக்க வேண்டும்' என்பதுதான் நிறுவனத் தலைவர் அழுத்தமாகச் சொன்னது. எத்தனை நபர்களை வேண்டுமானாலும் நிராகரிக்கலாம். ஆனால், ஒருவரை ஏன் நிராகரிக்கிறோம் என்பதற்குச் சரியான காரணங்கள் வேண்டும். நிராகரிப்பவரால் அதைத் தெளிவாகச் சொல்ல முடிய வேண்டும்.

    எதையும் Feel based ஆக, வெறும் உணர்வு அடிப்படையில் மேலோட்டமாகச் சொல்லக்கூடாது. Data based ஆகச் சொல்ல வேண்டும். ஒரு திரைப்படம் நன்றாக இல்லை என்று சொல்லும் உரிமை எவருக்கும் உண்டுதான். ஏன்,

    Enjoying the preview?
    Page 1 of 1