Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Prathamarudan Iru Payanangal
Prathamarudan Iru Payanangal
Prathamarudan Iru Payanangal
Ebook221 pages1 hour

Prathamarudan Iru Payanangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

1985-ம் ஆண்டு மே மாதம், நான்கு வாரங்கள் அமெரிக்கா, லண்டன், ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குச் சென்று விட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பினவளிடம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு. ஜி. கே. மூப்பனார் கேட்ட முதல் கேள்வி, "எங்கே போய்விட்டீர்கள், சொல்லாமல் கொள்ளாமல்?”

"ஏன் சார்?”

"பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து உங்களோடு தொடர்பு கொள்ளப் பார்த்துவிட்டு, முடியாமல் என்னிடம் கேட்டார்கள். எனக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை..."

அவர் விளையாடுகிறாரா அல்லது நிஜமாகச் சொல்கிறாரா என்று எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை.

பிரதமர் அலுவலகத்திலிருந்து? என்னைத் தேடினார்கள்? எதற்காக?

கேட்டேன்.

"பிரதமர் அமெரிக்கா போன போது உங்களையும் அழைத்துக்கொண்டு போகலாமென்று முடிவு செய்திருந்தார்களாம்... நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீர்களே!”

திரு. மூப்பனார் இப்படிக் கூறியதும், 1982-ல் திருமதி இந்திரா காந்தியை நான் சந்தித்ததும், "மேடம், ஒருமுறை நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்ல முடியுமா?” என்று கேட்டதும், அவர் புன் சிரிப்போடு, “செய்தால் போயிற்று!” என்று கூறியதும், அகாலமாய் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதில், என்னுடைய அந்த ஆசை நிறைவேறாமலேயே போனதும் நினைவுக்குள் எட்டிப் பார்த்தன.

அன்னை கொடுத்த வாக்கை தனயன் நிறைவேற்ற எண்ணுகிறாரா?

அதுதான் இந்த விசேஷ அழைப்பா?

அடுத்த முறை டெல்லி போனபோது, பிரதமரின் செய்தி உதவியாளர் திரு. மணிசங்கர் அய்யரைச் சந்தித்து, அவர்கள் அழைப்பு அனுப்பியமைக்கு நன்றி கூறி, கூடவே, தொடர்பு கொண்டபோது நான் இல்லாமலிருந்து அருமையான வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருந்துவதையும் தெரிவித்தேன். மணிசங்கர் சிரித்தார். பிறகு, "அப்படியென்றால், அக்டோபர் மாதம் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் செல்லும்போது, உடன் வந்துவிடுங்கள்... வருத்தம் மறைந்துவிடும்!" என்றார், சிரிப்பு மாறாமலேயே.

சென்னைக்கு வந்தவுடன் 'விகடன்’ ஆசிரியர் திரு. பாலனோடு தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறினேன்.

"நல்ல முறையில் நீங்கள் எழுதும் எந்த எழுத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு... மஞ்சள் கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல், நடுநிலை, நேர்மை தவறாமல் ஒரு பயணக் கட்டுரை 'ஜூனியர் விகடனில்' எழுதுங்கள்!” என்று கூறியதோடு நிற்காமல், பயணத்துக்குத் தேவையான கேமரா இத்தியாதிகளைக் கொடுத்து உற்சாகமூட்டினார்.

பிரதமரோடு சென்றதையும், பல கோணங்களிலிருந்து அவரைப் பார்க்க நேர்ந்ததையும், இன்னும் சில வித்தியாசமான அனுபவங்களையும், நடந்தது நடந்த விதத்தில், ஆசிரியர் பாலன் குறிப்பிட்டவாறு எதையும் மிகைப்படுத்தாமல், அடுத்து வரும் பக்கங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள முயன்றிருக்கிறேன். நீங்களே பிரதமரோடு பதினான்கு நாள்கள் பயணித்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கொடுக்குமாயின், அது எனக்கு நிறைவைத் தரும்.

இந்தப் பயணம் முழுமை பெற உதவிய நமது பிரதமர், திரு. ஜி.கே. மூப்பனார், திரு. மணிசங்கர் அய்யர், பிரதமரின் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கும், 'ஜூனியர் விகடனில்' தொடர் கட்டுரையாக வெளிவரச் சம்மதித்த ஆசிரியர் திரு. பாலன் அவர்களுக்கும், என் விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பயணக் கதையைத் துவங்குவதற்கு முன், 1983-ம் ஆண்டு ராஜீவ் காந்தியைச் சந்தித்து நான் கண்ட போட்டி இடம் பெறுகிறது.

- சிவசங்கரி

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580101804379
Prathamarudan Iru Payanangal

Read more from Sivasankari

Related to Prathamarudan Iru Payanangal

Related ebooks

Related categories

Reviews for Prathamarudan Iru Payanangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Prathamarudan Iru Payanangal - Sivasankari

    http://www.pustaka.co.in

    பிரதமருடன் இரு பயணங்கள்

    Prathamarudan Iru Payanangal

    Author:

    சிவசங்கரி

    Sivasankari

    For more books

    http://www.pustaka.co.in/home/author/sivasankari-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    முன்னுரை

    1985-ம் ஆண்டு மே மாதம், நான்கு வாரங்கள் அமெரிக்கா, லண்டன், ஸ்விட்சர்லாந்து நாடுகளுக்குச் சென்று விட்டுத் தாய்நாட்டுக்குத் திரும்பினவளிடம், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் திரு. ஜி. கே. மூப்பனார் கேட்ட முதல் கேள்வி, எங்கே போய்விட்டீர்கள், சொல்லாமல் கொள்ளாமல்?

    ஏன் சார்?

    பிரதம மந்திரி அலுவலகத்திலிருந்து உங்களோடு தொடர்பு கொள்ளப் பார்த்துவிட்டு, முடியாமல் என்னிடம் கேட்டார்கள். எனக்கும் ஒரு விவரமும் தெரியவில்லை...

    அவர் விளையாடுகிறாரா அல்லது நிஜமாகச் சொல்கிறாரா என்று எனக்கு ஒரு நிமிடம் புரியவில்லை.

    பிரதமர் அலுவலகத்திலிருந்து? என்னைத் தேடினார்கள்? எதற்காக?

    கேட்டேன்.

    பிரதமர் அமெரிக்கா போன போது உங்களையும் அழைத்துக்கொண்டு போகலாமென்று முடிவு செய்திருந்தார்களாம்... நல்ல சந்தர்ப்பத்தை விட்டுவிட்டீர்களே!

    திரு. மூப்பனார் இப்படிக் கூறியதும், 1982-ல் திருமதி இந்திரா காந்தியை நான் சந்தித்ததும், மேடம், ஒருமுறை நீங்கள் வெளிநாட்டுக்குச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துச் செல்ல முடியுமா? என்று கேட்டதும், அவர் புன் சிரிப்போடு, செய்தால் போயிற்று! என்று கூறியதும், அகாலமாய் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதில், என்னுடைய அந்த ஆசை நிறைவேறாமலேயே போனதும் நினைவுக்குள் எட்டிப் பார்த்தன.

    அன்னை கொடுத்த வாக்கை தனயன் நிறைவேற்ற எண்ணுகிறாரா?

    அதுதான் இந்த விசேஷ அழைப்பா?

    அடுத்த முறை டெல்லி போனபோது, பிரதமரின் செய்தி உதவியாளர் திரு. மணிசங்கர் அய்யரைச் சந்தித்து, அவர்கள் அழைப்பு அனுப்பியமைக்கு நன்றி கூறி, கூடவே, தொடர்பு கொண்டபோது நான் இல்லாமலிருந்து அருமையான வாய்ப்பைத் தவறவிட்டதற்காக வருந்துவதையும் தெரிவித்தேன்.

    மணிசங்கர் சிரித்தார். பிறகு, அப்படியென்றால், அக்டோபர் மாதம் ஐந்து நாடுகளுக்கு பிரதமர் செல்லும்போது, உடன் வந்துவிடுங்கள்... வருத்தம் மறைந்துவிடும்! என்றார், சிரிப்பு மாறாமலேயே.

    சென்னைக்கு வந்தவுடன் 'விகடன்’ ஆசிரியர் திரு. பாலனோடு தொடர்புகொண்டு விஷயத்தைக் கூறினேன்.

    நல்ல முறையில் நீங்கள் எழுதும் எந்த எழுத்துக்கும் எங்கள் ஆதரவு உண்டு... மஞ்சள் கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல், நடுநிலை, நேர்மை தவறாமல் ஒரு பயணக் கட்டுரை 'ஜூனியர் விகடனில்' எழுதுங்கள்! என்று கூறியதோடு நிற்காமல், பயணத்துக்குத் தேவையான கேமரா இத்தியாதிகளைக் கொடுத்து உற்சாகமூட்டினார்.

    பிரதமரோடு சென்றதையும், பல கோணங்களிலிருந்து அவரைப் பார்க்க நேர்ந்ததையும், இன்னும் சில வித்தியாசமான அனுபவங்களையும், நடந்தது நடந்த விதத்தில், ஆசிரியர் பாலன் குறிப்பிட்டவாறு எதையும் மிகைப்படுத்தாமல், அடுத்து வரும் பக்கங்களில் உங்களோடு பகிர்ந்துகொள்ள முயன்றிருக்கிறேன். நீங்களே பிரதமரோடு பதினான்கு நாள்கள் பயணித்த உணர்வை இந்தப் புத்தகம் உங்களுக்குக் கொடுக்குமாயின், அது எனக்கு நிறைவைத் தரும்.

    இந்தப் பயணம் முழுமை பெற உதவிய நமது பிரதமர், திரு. ஜி.கே. மூப்பனார், திரு. மணிசங்கர் அய்யர், பிரதமரின் அலுவலக அதிகாரிகள் ஆகியோருக்கும், 'ஜூனியர் விகடனில்' தொடர் கட்டுரையாக வெளிவரச் சம்மதித்த ஆசிரியர் திரு. பாலன் அவர்களுக்கும், என் விசேஷ நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பயணக் கதையைத் துவங்குவதற்கு முன், 1983-ம் ஆண்டு ராஜீவ் காந்தியைச் சந்தித்து நான் கண்ட போட்டி இடம் பெறுகிறது.

    சிவசங்கரி.

    ராஜீவ் காந்தி அவர்களுடன் - ஒரு பேட்டி

    நவம்பர், 1983

    மாலை மணி ஏழு.

    அக்பர் சாலையிலுள்ள இந்திரா காங்கிரஸின் தலைமை அலுவலகம்...

    கண்ணில் தென்படும் காங்கிரஸ் தலைவர்கள்...

    ராஜீவ் காந்தியின் செயலாளர் ஜார்ஜின் அறைக்குச் சென்று உட்கார்ந்து, ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்து, நிஜமாகவே வயதில் சின்னவராய், ஆனால் துடிப்பு மிகுந்தவராய் செயல்படும் ஜார்ஜையும், அங்கு வந்துபோகும் இதர இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களையும் கண்காணிக்கையில், இளைய தலைமுறையினரின் ஆரோக்கியமான ஊடுருவல் நிறைய இருப்பது சந்தோஷத்தைத் தருகிறது.

    ஏழு ஐந்து...

    அம்பாஸிடர் வண்டியைத் தானே ஓட்டிக்கொண்டு ராஜீவ் காந்தி வந்ததும், திடுமென இடம் அதிகமாய்ப் பரபரக்கிறது.

    குட் ஈவ்னிங்... காக்க வைத்து விட்டேனா? மன்னித்துக் கொள்ளுங்கள்.

    ஐந்து நிமிடங்கள் என்னை உபரியாய் காக்க வைத்துவிட்டதற்காக, இரண்டு மூன்று தரம் வருந்தும் ராஜீவின் பின்னோடு அவருடைய தனியறைக்குச் செல்கிறேன்.

    ராஜீவ், புகைப்படத்தில் பார்ப்பதைவிட நேரில் இன்னும் மெலிந்து காணப்படுகிறார். முதிர்ச்சி கூடித் தெரிகிறது.

    அறிமுகங்கள், புகைப்படங்கள் முடிந்த பிறகு பேட்டியைத் தொடங்குகிறேன்.

    போன வருடம் ஏஷியாட் நடந்தபோது நான் இங்கு வந்திருந்தேன். மிக அழகாகத் திட்டமிட்டு, கச்சிதமாக இயங்கின அதன் பின்னணியில் நீங்கள் இருந்ததைப் பற்றி, எல்லோரும் உயர்வாகப் பேசினார்கள். சின்ன வயதிலிருந்தே நீங்கள் இப்படித் திட்டமிட்டுச் செயல்படுபவர்தானா?

    எதிலும் ஒருவிதக் கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டுச் செயலாற்றுவது என் குணம். 'சிஸ்டமாடிக், ஆர்கனைஸ்ட் பர்ஸன்' என்றுதான் என்னை வகைப்படுத்துவேன்...

    உங்கள் இளமைப் பிராயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன்... நீங்கள் எப்படிப்பட்ட சிறுவனாக இருந்தீர்கள்?

    சிரிக்கிறார். இதற்குப் பதில் சொல்வது சிரமமாக இருக்கிறது. நான் எப்படிப்பட்ட சிறுவனாய் இருந்தேன் என்ற மற்றவர்கள்தானே சரியாகச் சொல்ல இயலும்? சின்ன வயதில் அதிகம் 'ரிசர்வ்ட்' ஆக இருந்தேன்...

    உங்கள் தாத்தா நேருஜியைப் பற்றிப் பேசலாமா? அவரின் பாதிப்பு உங்களிடம் உண்டா?

    ஓ... நிறைய, நிறைய...

    எந்த ரீதியில்?

    எதிர்கால இந்தியா எப்படி இருக்க வேண்டுமென்று அவர் கற்பனை பண்ணியதை, நான் நன்கு அறிவேன்... நேர்மைக்கும் மனிதாபிமானத்துக்கும் மிகவும் மதிப்பு கொடுத்தவர் அவர். நாட்டில் இன்றைக்குக் காணப்படும் பல பிரச்சினைகளுக்குக் காரணம் இந்த மாதிரி உயர்ந்த விஷயங்களை நாமெல்லாம் இழந்து வருவதுதான் என்றே நான் நினைக்கிறேன். தாத்தாவின் நேர்மை, மனிதாபிமானம், கொள்கைகளை நான் தீவிரமாக நம்புவதே, அவரின் பாதிப்பு என்னுள் அதிகமாக இருப்பதால்தான்...

    உங்கள் தாத்தாவோடு நீங்கள் கழித்த அந்த நாள்களைப் பற்றிக் கூறுங்களேன்...

    காலை நேரங்களில் அவர் எங்களுடன் அதிகமாக இருப்பார். அப்போது வீட்டிலேயே பல மிருகங்களை வளர்த்து வந்தோம்... புலி, சிறுத்தை, ஹிமாலயன் பாண்டா போன்றவை. தாத்தா மென்மையான சுபாவம் கொண்டவர். தன்னைச் சுற்றி உள்ள யாரையும், எதையும் நேசிக்கும் மனப்பக்குவம் அவருக்கு உண்டு... அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம்...

    அவருடைய இந்த குணங்களில் உங்களுக்கு ஏதாவது இருக்கிறதென்று நம்புகிறீர்களா?

    இருக்கலாம்... ஆனாலும், அவர் ஓர் உயர்ந்த மனிதர்... அந்தளவுக்கு வேறு யாரும் உயர்வது கஷ்டம்...

    உங்கள் பைலட் நாள்களைப் பற்றி...

    நான் மிகவும் சந்தோஷமாக இருந்த நாள்கள் அவை. வேலை பார்க்கிற உணர்வு இல்லாமல், கை நிறைய சம்பளம், மனதுக்குப் பிடித்த வேலை என்று நிம்மதியாய் இருந்த நாள்கள்.

    எப்போதேனும், நீங்கள் ஓட்டிய விமானத்தில் கோளாறு உண்டாகி, பதட்ட நிலை உருவானது உண்டா?

    ஒருமுறை என்ஜின் ஃபெயிலாகியுள்ளது... ஆனாலும், பதட்டம் என்பது கிடையாது. எதையும் நிதானமாக அணுகும் பயிற்சி, பயத்தைத் தவிர்க்க உதவுகிறது என்றே நினைக்கிறேன்.

    உங்களையும் சஞ்சய் காந்தியையும் ஒப்பிட்டுப் பேசுபவர்களைப் பற்றி உங்கள் கருத்து?

    இப்படி ஒப்பீடு செய்பவர்கள், என்னையோ சஞ்சயையோ நிஜமாக அறிந்தவர்கள் இல்லை.

    சஞ்சய் அளவுக்கு உங்களுக்குத் தீவிரத்தன்மை இல்லை என்கிறார்களே?

    முந்தின கேள்வியின் பதிலையேதான் நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. எங்களை ஆத்மார்த்தமாக அறியாதவர்களெல்லாம், தெரிந்த மாதிரி பேசத் துவங்குகையில், நிஜம் என்பது மறைந்துதான் போகிறது. சஞ்சய் அரசியலில் புகுந்தபோது, நிலைமை வேறு... உணர்ச்சிக் கொந்தளிப்பு அதிகம் இருந்த சமயம் அது. அதனால், தன்னை வேறுவிதமாக சஞ்சய் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். இப்போது அப்படியில்லை. இதைக்கூட நினைவில் வைத்துக் கொள்ளாமல், இப்படிப்பட்ட ஒப்பீடுகளை மற்றவர்கள் செய்ய முற்படுவதை நினைக்கையில், வருத்தமாக இருக்கிறது.

    சஞ்சயுடன் நீங்கள் நெருக்கமாக இருந்தீர்களா?

    பள்ளியில் இருந்த நாள்களில் நாங்கள் நெருக்கமாக இல்லை... இங்கிலாந்தில் இருந்தோம். பின், இங்கு வந்த பிறகு, அந்த நெருக்கம் தொடர்ந்தது. ஆனால், அத்தனையும் சஞ்சயின் அகால மரணத்தால் தொலைந்து போனது... ரொம்பவும் வருத்தமான சம்பவம் அது!

    பேச்சு சஞ்சயைச் சுற்றி இருப்பதால், மேனகாவைப் பற்றிப் பேசுகிறேன்...

    ஒரு கேள்வி கேட்டால் தவறாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்... சென்ற வருடம் திருமதி காந்தி - திருமதி மேனகா சண்டை பிரபல்யப்படுத்தப்பட்டு, நாடு முழுவதும் பேசப்பட்டது. ஒரு குடும்பத்துச் சண்டை, மற்றவர்களுக்கு எதற்கு? அந்தக் குடும்பத்தில் சம்பந்தப்பட்டவர் என்ற ரீதியில், அதைப் பரவவிடாமல் துவக்கத்திலேயே நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?

    ராஜீவ் காந்தி பதில் கூறாமல் அமர்ந்திருக்கிறார்.

    அரை நிமிடத்திற்குப் பின், இந்தக் கேள்வி வேண்டாமென்றால், விட்டுவிடுகிறேன்... என்று நான் கூறியதும்,

    சினேகமாய் புன்னகைத்து, தாங்க்யூ... என்கிறார்.

    குழந்தை வருணிடம் உங்களுக்கு ஒட்டுதல் உண்டா?

    நிறைய... வீ ஆல் லவ் ஹிம்! ஆனால், இப்போதெல்லாம் அவன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை... அதுதான் வேதனையைத் தருகிறது.

    இதற்கு ஏதும் செய்ய முடியாதா?

    நிறைய செய்கிறோம்... போன் பண்ணுகிறோம்... என் குழந்தைகள் அங்கு சென்று பழக முயற்சித்தார்கள்... ஆனால், எதற்கும் பலனில்லை. வலியும் வேதனையும்தான் மிச்சம்...

    ராஜீவ் காந்தி தொடர்ந்து ஏதும் பேசாமல் மெளனித்து, ஏதேனும் சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டு பேச்சை திசைதிருப்பி, ஜார்ஜை அழைத்து இரண்டு 'காம்பா கோலா' கொண்டுவரச் சொல்கிறார்.

    விட்டுக் கொடுப்பது - காம்ப்ரமைஸ் - உங்களுக்கு எளிதில் சாத்தியமாகும் சமாச்சாரமா?

    இல்லை... என்னை ஓரளவுக்குப் பிடிவாதக்காரன் என்றுகூடச் சொல்லலாம்... எனக்குள் நான் வைத்திருக்கும் சரி, தவறு என்கிற வரைமுறைகளை மதிக்கிறேன். நான் செய்வதில் எனக்கே கண்டிப்பாய் நம்பிக்கை வேண்டும் என்றே நினைக்கிறேன்.

    எந்தக் காரியத்தையும் செய்யும் முன்னர் தீவிரமாய் யோசனை பண்ணிவிட்டு இறங்குவதால், தெளிவாக இருக்க முடிகிறது என்கிறீர்களா?

    ஆம்... அதற்காக நான் தவறே செய்யாதவன் என்று கூறுவதாக எண்ணாதீர்கள்... ஐ ஹாவ் மேட் மிஸ்டேக்ஸ் (I have made mistakes). இருப்பினும், என் மனசுக்கு நான் உண்மையாக இருப்பதும், முதலில் என்னை கன்வின்ஸ் (convince) செய்ய முயற்சிப்பதும் எனக்குப் பிடித்திருக்கிறது. என்னையே நான் கன்வின்ஸ் செய்து கொள்ளாவிடில், பிறரை கன்வின்ஸ் செய்வது எப்படி? உள்ளுக்குள் ஒரு சூன்யம் அல்லவா இருக்கும்!

    திருமதி காந்தியிடம் உங்களால் பாதிப்புகள் உண்டாக்க முடியுமென்று நம்புகிறீர்களா? (Can you influence Mrs. Gandhi?)

    ராஜீவ் வாய்விட்டுச் சிரிக்கிறார்.

    குடும்ப சம்பந்தமாகவா, இல்லை...?

    எல்லாவற்றிலும்தான்...

    ம்ம்...

    புருவங்களைச் சுருக்கிக்கொண்டு தீவிரமாய் யோசிக்கிறார்.

    சில விஷயங்களில் அவர் என் கருத்துக்களை ஏற்பார். எல்லாவற்றிலும் அல்ல...

    பிரதமராக இல்லாமல், ஒரு தாயாக திருமதி காந்தியை விமர்சிக்க முடியுமா?

    கஷ்டமான கேள்விகளாகக் கேட்கிறீர்களே! என்றவர், சிரித்துக்கொண்டே வினவுகிறார், இப்போதைய அம்மாவையா, அல்லது என் இளமைக்கால அம்மாவையா?

    அன்றிலிருந்து இன்றுவரை...

    ஒரு தகப்பன் என்கிற ரீதியில், பெற்றோரின் கடமை, பொறுப்பு எனக்கு இப்போது துல்லியமாகப் புரிகிறது. எனினும், இன்றைய அரசியல் நிலை வேறு, அன்று நான் வளர்ந்த சூழ்நிலை வேறு... அத்தனை நெருக்கடிகளிலும் வேலை நடுவிலும், அம்மா எங்களை மிக அக்கறையுடன் கவனித்து வளர்த்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அம்மாவின் கவனிப்பு இல்லையே என்று நாங்கள் ஒரு கணம் கூட ஏங்காமல் வளர்ந்ததுதான் நிஜம். அன்றும் சரி, இன்றும் சரி, அவர் ஒரு ஈடிணையில்லாத தாய்!

    உங்கள் தந்தை ஃபெரோஸ் காந்தி இறந்தபோது, உங்களுக்கு வயது பதினாறுதான்... அவரின் இழப்பு உங்களை வெகுவாகப் பாதித்ததா, இல்லை தாத்தாவின் நெருக்கம் அதை ஈடுகட்டிவிட்டதா?

    யாரும் யாருக்கும் பார்த்தியாக முடியாது என்றே நினைக்கிறேன். அதுவும், அப்பா ஸ்தானத்தை யாரால் இட்டு நிரப்ப முடியும்? தந்தையை சின்ன வயதில் இழந்தது, எங்களுக்குப் பெரிய இழப்புதான்...

    மிகச் சிறந்த பார்லிமென்டேரியன் என்று பேர் வாங்கினவர் ஃபெரோஸ் காந்தி... அவருடைய குணங்களில் ஏதேனும் உங்களுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

    "அப்பாவுக்கு இயந்திரங்களில் நாட்டம்

    Enjoying the preview?
    Page 1 of 1