Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Thadaiyethumillai
Thadaiyethumillai
Thadaiyethumillai
Ebook284 pages1 hour

Thadaiyethumillai

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நான்கு வருடங்களில் அவ்வப்போது ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக எழுதிய கட்டுரைகளை எப்படியும் புத்தகமாகக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். மேலோட்டமாகப் பார்த்தபோது அவை பலவிதமான கட்டுரைகளாகத் தெரிந்தன. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்று புரியவில்லை. பின்பு கவனமாகப் பார்த்தபோதுதான், என்னை அறியாமல் நான் அவற்றை மொத்தம் இரண்டு வகைகளாக எழுதியிருப்பதாகத் தோன்றியது. ஒரு சாரார், பிள்ளைகள், இளைஞர்கள், ஊழியர்கள், முன்னேறத் துடிப்பவர்கள்; இன்னொரு சாரார், பெற்றோர், அதிகாரிகள், முதலாளிகள், கொஞ்சம் முன்னேறிவிட்டவர்கள். இந்தப் புத்தகத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப சில கட்டுரைகளை எடுத்து விட்டேன். உதாரணத்திற்கு, ‘தடையேதுமில்லை’ புத்தகத்தில் வந்த ‘விடுமுறை என்ற வாய்ப்பு’ இன்றைக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கணிசமாகவே இருக்கிறது. அதே போல, ‘அதிகாரம் அல்ல, அன்பு’ புத்தகத்தில் இருந்து ‘சபை அறிந்து பேசு’, ‘நல்ல பெற்றோர்’, ‘பதினாறும் பெறு’ மற்றும் ‘உலகையே வெல்வோம்’ ஆகிய நான்கு கட்டுரைகளையும் நீக்கிவிட்டேன். காரணம், அதேதான். அதிகம் தெரிந்ததைச் சொல்லவேண்டாம் என்றுதான். இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் இருக்கும் வேறுபாட்டைக்கண்டு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்தக் காலத்து மக்களிடம் எத்தனையோ முன்னேற்றம்.

Languageதமிழ்
Release dateDec 6, 2021
ISBN6580110107689
Thadaiyethumillai

Read more from Soma Valliappan

Related to Thadaiyethumillai

Related ebooks

Reviews for Thadaiyethumillai

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Thadaiyethumillai - Soma Valliappan

    https://www.pustaka.co.in

    தடையேதுமில்லை

    Thadaiyethumillai

    Author:

    சோம வள்ளியப்பன்

    Soma Valliappan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/soma-valliappan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    உள்ளே

    1 வைரமா? வெறும் கல்லா?

    2 சந்தர்ப்பம்

    3 கேளுங்கள் தரப்படும்!

    4 பயிற்சி தரும் பலம்

    5 மாற்றத்தை உணர்வதே வளர்ச்சி

    6 ‘தொடர் கல்வி’

    7 படிச்சா என்ன தருவீங்க?

    8. கண் போன போக்கிலே...

    9. பராமரிப்பா, மேம்பாடா?

    10 உள்ளார்ந்த திறமைகள்

    11 வெற்றியின் அடித்தளம்

    12 தடையேதுமில்லை

    13 செய்யும் தொழிலே...

    14 ஆரம்ப நாள்கள்

    15 கவனத்தில் கவனம்

    16 சின்னச் செயல் - பெரிய விளைவுகள்

    17 விளையாட்டல்ல, பாடம்!

    18 நம்பகத் தன்மை

    19 எது வெற்றி?

    20 தன்னம்பிக்கையின் வெளிப்பாடு

    21 நட்பு வட்டம்

    22 பழக்கம்

    23 உள்ளிருக்கும் ‘நான்’

    24 நான்.... நான்... நான்!

    25 வெற்றி பெறுவோம்

    26 பார்வைகள் பலவிதம்...

    27 நம்பிக்கை வேண்டும்...

    28 அனுபவங்கள் என்ற ஆசான்

    29 தனித்தனி

    30 நம் பொறுப்பும் கூட...

    31 அதிகாரம் அல்ல, அன்பு!

    32 ஒன்றல்ல, பல!

    33 சரியான விமர்சனம்

    34 பதவியும் பொறுப்பும்

    35 எது வாழ்க்கை?

    36 இரண்டு கேள்விகள்

    37 மனசு சுத்தம்

    38 மன்னிப்போம்; மனிதம் வளர்ப்போம்

    39 அன்புக் கணக்கு

    40 எடுப்பதும், கொடுப்பதும்

    41 கொடுப்பது தேவைக்கா? சேவைக்கா?

    முன்னுரை

    ஒரு காலை நேர நடைப் பயிற்சியின்போது தற்செயலாக ‘சாயாவனம்’ நாவல் எழுதிய சா. கந்தசாமி அவர்களைச் சந்தித்தேன். அவருடைய பேட்டியினை ‘குமுதம் ஜங்ஷன்’ இதழில் படித்தேன் என்பதைச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேச ஆரம்பித்தேன். உடன் அவரும் சகஜமாகப் பேச ஆரம்பித்துவிட்டார்.

    பின்பு, அவர் சொல்லித்தான் என்னுடைய கட்டுரை ஒன்றினை தினமணி நாளிதழுக்கு அனுப்பினேன். எண் கொடுத்து, பேக்ஸ் செய்யச் சொல்லியிருந்தார். அது ‘காலப் போக்கில் மதங்கள் பற்றிய எண்ணம் மக்களுக்கு எப்படிக் குறைந்து போகும்?’ என்பது பற்றிய கட்டுரை. அனுப்பி, சில நாட்கள் ஆகியும் பதில் இல்லை. வெளியிடப்படவும் இல்லை.

    தினமணி நாளிதழைத் தொடர்புகொண்டேன். பின்பு அவர்களின் அண்ணா சாலை அலுவலகத்திற்கு நேராகவே போனேன். திரு. ராயப்பா அவர்களைச் சந்தித்தேன். அது போன்ற கட்டுரைகளைப் போடுவதில்லை என்று சொல்லிவிட்டு, கூடவே, ‘வேறு ஏதாவது எழுதி அனுப்புங்கள்’ என்றார்.

    திரும்பி வந்த வேகத்தில் உடனடியாக, ‘உதவியா தொந்தரவா?’ என்று கடன்கள் பற்றி, 29 டிசம்பர் (2002) ஒரு கட்டுரை எழுதி அனுப்ப, அது ஜனவரி 6 அன்று பிரசுரமானது. அது பிரசுரமானதற்கு, அந்தக் கட்டுரையில் புத்தாண்டு தினத்தின் போது மக்கள் எப்படி மாய்ந்து மாய்ந்து தேவையில்லாத பொருள்களைக்கூட வாங்குகிறார்கள் என்று எழுதியிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். அதுதான் ஆரம்பம். பிறகு மாதம் ஒன்று என்கிற வழக்கம் ஏற்பட்டது. தினமணியில் என் கட்டுரைகள் வெளிவரும் தினங்கள் எனக்குக் கூடுதல் மகிழ்ச்சியைத் தரும் தினங்களாக இருந்தன. ஒவ்வொரு கட்டுரையையும் அவர்கள் தலையங்க பக்கத்தில் என் புகைப்படத்துடன் பிரசுரிப்பது அல்ல காரணம். உடனடியாகக் கிடைக்கும் வாசகர்களின் கருத்துகள், தொலைபேசியில், நேரில், அன்பான விசாரிப்புகளாக, அக்கறைமிக்க ஆலோசனைகளாக, இனிய நட்பாக, வேறெது மகிழ்ச்சி தரும்?

    தினமணி கட்டுரைகள் மிகச் சிறந்தவர்களிடம் என்னைக் கொண்டு சென்றிருந்தது என்பதை பொது இடங்களிலும் பயிலரங்குகளிலும் என்னை அடையாளம் கண்டு பேசுபவர்கள் மூலம் புரிந்து கொண்டேன்.

    தினமணியில் வெளிவந்த சில கட்டுரைகளை, ‘போட்டோ காப்பி எடுத்து வினியோகித்தோம்’, ‘நோட்டீஸ்களாகப் பிரசுரித்து வினியோகித்தோம்’, ‘எங்கள் நிறுவன அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைத்தோம்’ என்றெல்லாம் சிலர் சொல்லுவதைக் கேட்ட பொழுதுகளில் மிகவும் திருப்தியாக உணர்ந்தேன்.

    இவற்றுக்கெல்லாம், நான் அதிகம் சந்தித்திராத தினமணியின் ஆசிரியர் அமரர் திரு. சம்பந்தம் அவர்களுக்கும் நடுப்பக்க கட்டுரைகளுக்குப் பொறுப்பாக இருந்த திரு. ராயப்பா அவர்களுக்கும் நான் நன்றி பாராட்டியே ஆக வேண்டும்.

    நான்கு வருடங்களில் அவ்வப்போது ஏற்பட்ட அனுபவங்களின் காரணமாக எழுதிய கட்டுரைகளை எப்படியும் புத்தகமாகக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். மேலோட்டமாகப் பார்த்தபோது அவை பலவிதமான கட்டுரைகளாகத் தெரிந்தன. இவற்றை எப்படி ஒன்று சேர்ப்பது என்று புரியவில்லை. பின்பு கவனமாகப் பார்த்தபோதுதான், என்னை அறியாமல் நான் அவற்றை மொத்தம் இரண்டு வகைகளாக எழுதியிருப்பதாகத் தோன்றியது. ஒரு சாரார், பிள்ளைகள், இளைஞர்கள், ஊழியர்கள், முன்னேறத் துடிப்பவர்கள்; இன்னொரு சாரார், பெற்றோர், அதிகாரிகள், முதலாளிகள், கொஞ்சம் முன்னேறிவிட்டவர்கள்.

    நான் இரண்டுமாகத் தொடர்ந்து உணர்ந்து வருவதால்தான் அப்படி அமைந்திருக்கின்றனவோ என்னவோ, அதே முறையில் கட்டுரைகளை இரண்டு பகுதிகளாகப் பிரித்து அடுக்கினேன். அடுத்து, கட்டுரைகளைப் பிரசுரித்த கால வரிசை எல்லாம் அவசியமில்லை. புத்தகமாகப் படிப்பவர்களுக்கு, சுவாரசியமாக, கோர்வையாக அமைய வேண்டுமென்பதை மனதில் வைத்து, அந்த வழியிலேயே வரிசைப்படுத்தினேன். அமுதசுரபி இதழுக்கு எழுதிய கட்டுரை (நம்பகத்தன்மை) போன்ற தினமணியில் பிரசுரமாகாத சில கட்டுரைகளைக் கூடுதலாகச் சேர்த்தேன். ஏற்கனவே, ‘மகிழ்ச்சி எங்கே?’ என்கிற புத்தகத்தில் வெளியிட்ட சில கட்டுரைகளை நீக்கினேன்.

    2017ம் ஆண்டில் மீண்டும் ஒரு மாற்றம் செய்ய விரும்பி, ‘தடையேதுமில்லை’ மற்றும் ‘அதிகாரம் அல்ல, அன்பு’ என்ற இரண்டு புத்தகங்களையும் ஒன்றிணைத்து, ஒரே புத்தகமாக வெளிக்கொணர்கிறேன்.

    இந்தப் புத்தகத்தில் கால மாற்றத்திற்கு ஏற்ப சில கட்டுரைகளை எடுத்து விட்டேன். உதாரணத்திற்கு, ‘தடையேதுமில்லை’ புத்தகத்தில் வந்த ‘விடுமுறை என்ற வாய்ப்பு’ இன்றைக்கு இதைப்பற்றிய விழிப்புணர்வு கணிசமாகவே இருக்கிறது. அதே போல, ‘அதிகாரம் அல்ல, அன்பு’ புத்தகத்தில் இருந்து ‘சபை அறிந்து பேசு’, ‘நல்ல பெற்றோர்’, ‘பதினாறும் பெறு’ மற்றும் ‘உலகையே வெல்வோம்’ ஆகிய நான்கு கட்டுரைகளையும் நீக்கிவிட்டேன். காரணம், அதேதான். அதிகம் தெரிந்ததைச் சொல்லவேண்டாம் என்றுதான். இந்தக் கட்டுரைகள் எழுதப்பட்ட காலத்திற்கும் இப்போதைக்கும் இருக்கும் வேறுபாட்டைக்கண்டு வியப்பாகவும் பெருமையாகவும் இருக்கிறது. இந்தக் காலத்து மக்களிடம் எத்தனையோ முன்னேற்றம்.

    12.10.2017

    அன்புடன்

    சோம. வள்ளியப்பன்

    அபிராமபுரம், சென்னை

    1 வைரமா? வெறும் கல்லா?

    அவரை எனக்கு ஒரு வருடமாகத்தான் தெரியும். அவர் பெயர் மஞ்சுநாத் என்று வைத்துக்கொள்வோம். ஒரு பெரிய நிறுவனத்தில் அதிகாரியாகப் பணிக்குச் சேர்ந்திருந்தார். அவரைச் சந்திக்கப் போயிருந்த பொழுது அவர் மற்றவர்களிடம் நடந்துகொண்ட விதம் என்னைக் கொஞ்சம் ஆச்சரியப்பட வைத்தது. உடன் பணி புரிபவர்களை நிறைய சத்தம் போட்டார். கோபித்துக்கொண்டார். அதுவும் வெளிநபரான என்னை வைத்துக்கொண்டே! அவற்றைப் பார்க்காதது போலவும், கவனிக்காதது போலவும், என் கையில் இருந்த புத்தகத்தினைப் புரட்டி, நான் சமாளித்தேன்.

    சமீபத்தில் மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர் சோர்வாகக் காணப்பட்டார். முன்பிருந்த வேலையில் தற்சமயம் இல்லை என்றார். அவருக்குப் பிறகு வேறு எவரையோ அந்த வேலைக்குப் போட்டு விட்டார்களாம். வருத்தத்துடன் சொன்னார். மஞ்சுநாத் வேறு வேலைகளுக்கு முயற்சி செய்துகொண்டுதான் இருக்கிறார். ஆனால், ஏதும் பொருத்தமாக அமைய வில்லையாம்.

    அவரிடம் நான் முன்பு பார்த்த பெருமிதத்தையும் ஆர்வத்தையும் இப்போது பார்க்க முடியவில்லை. அவர் ஏன் அவ்வளவு சோர்வாக இருந்தார் என்று வெகு நேரம் யோசித்தேன். முன்பு அவர் இருந்த நிலைக்கும் இப்போது இருக்கும் நிலைக்கும் என்ன வேறுபாடு?

    முன்பு நல்ல வேலையில் இருந்தார். இப்போது அந்த வேலையில் இல்லை. அவருக்கு வேறு வேலை கிடைக்கும்தான். ஆனால், முன் வேலை செய்த நிறுவனம் போன்றதொரு பெரிய நிறுவனமாகத் தேடுகிறார். அவருக்கு அப்படி ஒரு நிறுவனத்தில் ஏன் வேலை கிடைக்கவில்லை?

    வைரம் ஒரு கல். பார்ப்பதற்கு அதேபோலத் தெரியும், அவ்வளவு விலை அதிகமில்லாத செயற்கைக் கற்களும் உண்டு.

    தங்க நகைகளில் வைரத்தையும் வைக்கிறார்கள். வைரம் பதிக்கப்பட்ட நகைகளின் விலை சாதாரண நகையைவிட அதிகம். காரணம், அதில் உள்ள வைரம். தங்கத்தில் வைக்கப்பட்டதால், வைரத்திற்குப் பெருமையா? வைரம் வைக்கப்பட்டதால் தங்க நகைக்கு மதிப்பு கூடுதலா? இரண்டும்தான்.

    வைரம் இல்லாவிட்டாலும் தங்க நகைக்கு என்று தனி மதிப்பு உண்டு. அதேபோல், நகையில் பதிக்கப்படாமல் தனியாக இருந்தாலும் வைரத்திற்கு மதிப்பு இருக்கிறது. ஆனால், இதே போன்ற நிலை, சாதாரண செயற்கை கற்களுக்குக் கிடையாது. அவை நகையுடன் இருக்கும் பொழுது, அவற்றுக்கும் தங்கத்தின் மதிப்பு கிடைக்கும். ஆனால், கல் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டால், அதற்கு மதிப்பில்லை. அதனை வெறும் கல் என்பார்கள். ‘நகை’ என்பது நாம் படிக்கும் கல்லூரிபோல, நாம் வேலை செய்யும் நிறுவனம்போல, சார்ந்திருக்கும் கட்சி போல, உறுப்பினராக இருக்கும் அமைப்பு போல. நாம் அதில் இருக்கிறோம். நாம் அதில் இருப்பது வைரக் கல் போலவா? அல்லது சாதாரணக் கல் போலவா?

    நம் ‘தனிப்பட்ட மதிப்பு’ என்ன?

    நமக்கு வேலையில், கட்சியில், அமைப்பில், இருக்கும் பொழுது மதிப்பு கிடைக்கும்தான். வருமானம் வரும்தான். அவை வருவது எதனால்? நாமிருக்கும் அமைப்பிற்கு, நிறுவனத்திற்கு, கட்சிக்கு இருக்கும் மதிப்பினாலா? அல்லது நமது சொந்த மதிப்பாலா? நாம் வைரமா? அல்லது சாதாரணக் கல்லா?

    ***

    பெரிய அழகிய கட்டடம். அந்தக் கட்டடம் அதிக எண்ணிக்கையிலான செங்கற்கள் மற்றும் பல பொருள்களாலும் கட்டப்பட்டது. கட்டடத்தினைத் தூரத்தில் இருந்து பார்ப்பவர்கள், கட்டடத்திற்குள் வருபவர்கள், கட்டடத்தினை மதிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். அந்த மதிப்பும் பாராட்டுகளும், கட்டடத்தில் இருக்கும் எல்லாப் பொருள்களுக்கும் சேர்த்துத்தான். அதே கட்டடத்தில் சில ஜன்னல்களும் இன்னும் சில மரத்தாலான நிலைகள், கதவுகள் போன்ற பொருள்களும் இருக்கின்றன. அவற்றுக்கும் மதிப்பு உண்டு.

    இங்கும் அதே கேள்விதான். நாம் கட்டடத்தில் உள்ள செங்கல் போன்றவர்களா? அல்லது கட்டடத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டாலும் தனிப்பட்ட மதிப்பிருக்கும் தேக்கு மர கதவுகள், நிலைகள் போன்றவர்களா?

    நாம் இன்றிருக்கும் நிலை நிச்சயமானதா? இந்த நிலை, இருப்பு, இடம், சூழ்நிலை மாறினாலும், நாம் தனியாகவோ அல்லது வேறு நிலை, இருப்பு, இடம், சூழ்நிலையிலும் பரிமளிக்க, ஜொலிக்கக் கூடியவர்களா?

    நாம், தானே வெப்ப ஒளி உமிழும் சூரியனா? அல்லது பிற கிரகத்தின் ஒளியினை வாங்கி ஒளிரும் நிலவா?

    நாம் வைரமா? அல்லது சாதாரணக் கல்லா?

    தனக்கு ஒரு போதும் மஞ்சுநாத் நிலை வரவே வாராது என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியுமா? மாறி வரும் உலகில் எதுவும் நிச்சயமில்லை. அதனால், எங்கும் எப்போதும் மதிப்பு பெறும் வைரங்களாக நம்மை நாமே தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?

    நான் இன்று இருக்கும் இடத்தால் நமக்குப் பெருமையும் வசதியும் மதிப்பும் கிடைக்கலாம். அதே சமயம் நம்மாலும், நாம் இருக்கும் இடத்திற்கு மதிப்பும் பெருமையும் வரச் செய்ய வேண்டும். அதற்கு நாம் பயன்மிகு, திறன்மிகு மனிதராக ஆவதுதான் வழி.

    2 சந்தர்ப்பம்

    வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தேன். முக்கியமான வேலை. அப்பொழுது தொலைபேசி அழைத்தது. பேசியது என்னுடைய நெருங்கிய நண்பர். நல்ல எழுத்தாளர். ‘ஓர் உதவி’ என்றார்.

    ஈ - மெயிலில் அவர் தம்முடைய தொலைக்காட்சித் தொடரின் முன் கதைச் சுருக்கத்தை அனுப்புவதாகவும், அதை நான் உடனடியாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மின்னஞ்சல் மூலமாகவே திரும்ப அனுப்ப வேண்டுமென்றும் சொன்னார்.

    ‘இப்பொழுது ஓர் அவசர வேலையாக இருக்கிறேன், மாலையில் செய்து தருகிறேனே’ என்றேன்.

    ‘இல்லை, இல்லை. உடனடியாகத் தேவை. பத்திரிக்கைகளுக்குக் கொடுக்க வேண்டும். அவர்கள் வந்து அருகிலேயே நிற்கிறார்கள்’ என்றார்.

    அவருடைய அவசரமும் நிலைமையும் புரிந்தது.

    செய்து கொண்டிருந்த வேலையினை முடித்துவிட்டு, ஐந்து நிமிடங்களில் அவருடையதை எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்து, செய்துகொண்டிருந்த வேலையை வேகமாகச் செய்ய முற்பட்டேன்.

    அதற்குள், நண்பர், ‘என்ன ஆயிற்றா? அனுப்பிவிட்டீர்களா?’ என்று கேட்டு மூன்று முறை கைப்போனில் அழைத்துவிட்டார்.

    இதற்கு மேல் தாங்காது என்று செய்து கொண்டிருந்ததை அப்படியே போட்டுவிட்டு, பத்து நிமிடங்கள் எடுத்துக்கொண்டு, பரபரப்பாக மொழிபெயர்ப்பு வேலையினை எடுத்தேன்.

    மீண்டும் அவரிடம் இருந்து அழைப்பு. ‘முடிந்து விட்டதா?’ என்று கேட்டார்.

    ‘செய்தாயிற்று, மறு பார்வை பார்க்கிறேன்’ என்றேன்.

    ‘அதெல்லாம் தேவையில்லை, மொழிபெயர்த்ததை அப்படியே தொலைபேசியிலேயே படியுங்கள்’ என்று, நான் சொல்லி, நான் சொல்லச் சொல்ல, மறுமுனையில் அவர் எழுதிக்கொண்டார்.

    ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் தொடர்பு கொண்டார். ‘நன்றி’ என்றார். செய்தது நன்றாக இருந்ததாகவும் சொன்னார்.

    ‘என்னங்க நல்லா இருந்ததுங்கறீங்க! நீங்க செய்த பரபரப்பால், அவசரம் அவசரமாகச் செய்தேன். நீங்க மட்டும் இதையே நேத்து இரவு கொடுத்திருந்தீங்கன்னா, இன்னும் எவ்வளவோ நேர்த்தியாகச் செய்து கொடுத்திருப்பேன். நேரமே கொடுக்கல்ல நீங்க. அவசரம் அவசரமாகச் செய்ய வேண்டியதாகப் போய்விட்டது’ என்றேன்.

    இதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் மறக்கவே முடியவில்லை. ‘இல்லை வள்ளியப்பன். சந்தர்ப்பம் வரும்பொழுது இப்படித்தான் வரும். அது அவகாசமெல்லாம் தராது. அது கேட்கிறபொழுது, கேட்கிற விதத்தில், கேட்கிற நேரத்தில் நாம் தரணும். அதற்கு நாம் எப்பொழுதும் ஆயத்தமாக இருக்கணும். எப்பொழுது கேட்டாலும் ‘இந்தா’ என்று நாம் எதைக் கொடுக்கிறோமோ, அதுதான் நாம். அதுதான் நம்ம தரம்.’

    எவ்வளவு பெரிய உண்மை! வரும் சந்தர்ப்பம் எப்பொழுது வேண்டுமானாலும், முன்னறிவிப்பு இல்லாமல் நமக்குச் சௌகரியமா, இல்லையா என்றெல்லாம் பார்க்காமல், அதற்கு எப்பொழுது தேவை என்று தோன்றுகிறதோ, அப்பொழுது வரும். அதுசமயம் நாம் ஆயத்தமாக இல்லாவிட்டால் அடுத்தவர் பக்கம் அதன் போக்கில் போய்க்கொண்டேயிருக்கும்.

    இந்திரா பார்த்தசாரதி அவர்களைத் தெரிந்திருக்கும். பெரிய எழுத்தாளர். அவர் தில்லியில் தமிழ்ச் சங்கப் பள்ளிக் கூடத்தில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம். தில்லி பல்கலைக் கழகம் சம்பந்தப்பட்ட கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியர் பணிக்காக இரண்டு, மூன்று முறை விண்ணப்பித்திருக்கிறார்; கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு அவர் விண்ணப்பிக்கவேயில்லை. ஆனால், அவருக்குத்தான் அந்தப் பேராசிரியர் பதவி கிடைத்தது. அவரைக் கூப்பிட்டுக் கொடுத்தார்கள்.

    எப்படித் தெரியுமா? அந்த ஆண்டு பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைத்திருந்தார்கள். அவர்கள் எல்லாம் தமிழ் நாட்டிலிருந்து வர வேண்டும். என்னவோ தெரியவில்லை. அழைக்கப்பட்டவர்கள் எவருமே நேர்முகத்துக்கு வரவில்லை. ஆனால், அந்தப் பதவிக்கு உடனடியாக ஒருவர் தேவை.

    தேர்வாளர்கள் யோசித்தார்கள். முன் வருடங்களில் விண்ணப்பித்திருந்த இந்திரா பார்த்தசாரதி பற்றி நினைவு வந்திருக்கிறது. அவரைத் தொடர்பு கொண்டு, ‘உடனடியாக உங்களால் நேர்முகத் தேர்வுக்கு வர முடியுமா?’ என்று கேட்டிருக்கிறார்கள். அவரும் போனார்; தேர்வு செய்யப்பட்டார்; சேர்ந்துவிட்டார்.

    ‘இன்றா? இப்போதா? நேர்முகத் தேர்வா?’ என்றெல்லாம் கேட்கவில்லை. கேட்க முடியாது. சந்தர்ப்பம் திடீரென்றுதான் வரும். அது வருகிறபொழுது, அது கேட்பதை நாம் கொடுக்கத் தயாராக இருக்கவேண்டும். அது மிக மிக முக்கியம். சந்தர்ப்பம் வருகிற பொழுது, அதைச் சந்தர்ப்பம் என்றே தெரிந்து கொள்ளாமல் விடுகிறவர்கள் பலர். அது தவிர சந்தர்ப்பத்தினைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள ஆயத்தமாக இல்லாமல் இருப்பவர்கள் சிலர்.

    ‘சந்தர்ப்பம் முதலில் வரட்டும், பார்க்கலாம். வந்த பிறகு நான் தயாராகிக்கொள்வேன்’ என்றிருப்பவர்களால்

    Enjoying the preview?
    Page 1 of 1