Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vazhkkai Paadam
Vazhkkai Paadam
Vazhkkai Paadam
Ebook111 pages40 minutes

Vazhkkai Paadam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

கற்று தெரியும் கல்வியை விட, பட்டு தெரியும் அனுபவம்தான் வாழ்க்கைக்கு சிறந்த பாடம். சிலர் அனாவசியமாக தங்கள் குழந்தைகளுக்கு செலவிடுவதை சேகரித்தாலே சமூகத்தில் குழந்தை தொழிலாளியை ஒழிக்கலாம் என்பது முதல், மாமியார் மருமகள் புரிதல் மற்றும் ஒரு சிறந்த பெற்றோரின் கட்டாய கடமை வரை அழகான பல பாடங்களை கற்றுத் தருகிறது இச்சிறுகதை. வாருங்கள் நாமும் வாசிப்பாளர்களாக மாறி, இன்னும் சில சுவாரஸ்யமான வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொள்ளலாம்...

Languageதமிழ்
Release dateApr 2, 2022
ISBN6580137808292
Vazhkkai Paadam

Read more from Parimala Rajendran

Related to Vazhkkai Paadam

Related ebooks

Reviews for Vazhkkai Paadam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vazhkkai Paadam - Parimala Rajendran

    http://www.pustaka.co.in

    வாழ்க்கை பாடம்

    சிறுகதைகள்

    Vazhkkai Paadam

    Sirukadhaigal

    Author:

    பரிமளா ராஜேந்திரன்

    Parimala Rajendran

    For more books

    https://www.pustaka.co.in/home/author/parimala-rajendran

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. மனமே கடவுள்!

    2. வாழு வாழ விடு!

    3. வார்த்தை வசப்படும்!

    4. வழி தேடும் விழிகள்

    5. நினைவுகளின் இனிமைகள்!

    6. தாய் மனம்!

    7. வாழ்க்கை பாடம்!

    8. திருந்தி வாழ்!

    9. உறவின் இனிமை!

    10. மனதின் ஆசைகள்!

    11. வலி இல்லாத வாழ்க்கை!

    12. உன் நிழலாய்...

    13. என்னில் உன்னைக் காண்கிறேன்!

    14. காய்த்து ஓய்ந்த மரங்கள்!

    15. பிரிக்க முடியாத பந்தம்!

    16. கட்டாயம்!

    1. மனமே கடவுள்!

    பத்து வயது பேரன், அந்த பேட்டரி காரை அழகாக, வளைத்து வளைத்து ஓட்டுவதை, சந்தோஷம் மேலிட ரசித்துக் கொண்டிருந்தார் ராம் பிரசாத்.

    என்னப்பா... பேரனுக்கு, காஸ்ட்லி கார் வாங்கிக் கொடுத்துட்டு, அவன் விளையாடுவதை ரசிச்சுட்டு இருக்கிங்களா?

    பக்கத்தில் வந்து நிற்கும் மகன் சிவாவை பார்த்து புன்னகைத்தார்.

    அமெரிக்காவிலிருந்து என் பேரன் வந்திருக்கான். என்னோடு இருக்கிற இந்த ஒரு மாசமும், அவனை சந்தோஷமாக வச்சுக்கணும்ன்னு பார்க்கிறேன்.

    அதுக்காக, இவ்வளவு விலையில் தேவையாப்பா. இதை எடுத்துட்டும் போக முடியாது. எதுக்குப்பா இவ்வளவு செலவு செய்றீங்க?

    ப்ளீஸ்ப்பா... இதிலே தலையிடாதே. என் பேரனுக்காக, எவ்வளவு செலவழிச்சாலும், அது எனக்கு ஒரு பொருட்டாகவே தெரியாது. சரி, உன்னோட சேவிங்சை, இந்தியாவில் இன்வெஸ்ட் பண்ணனும்ன்னு சொன்னியே. இடம் வாங்கி போட்டா, பின்னாடி நல்ல விலை போகும். வளசரவாக்கத்தில் பார்ப்போமா?

    உங்ககிட்டே பொறுப்பை ஒப்படைச்சுட்டேன். எழுபத்தைந்து லட்சம் வரைக்கும் இன்வெஸ்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன். அதுக்குத் தகுந்த மாதிரி பாருங்கப்பா.

    இன்னைக்கு உன் ப்ரெண்ட்ஸை, மீட் பண்ணப் போறேன்னு சொன்னியே!

    ஆமாம்பா. சாப்பிட்டு போகணும். நீங்க இன்னைக்கு பாக்டரிக்கு போறிங்க இல்லையா.

    ஒரு வாரம் லீவு போட்டாச்சு. இன்னைக்கு அவசியம் போகணும். வேலை நிறைய இருக்கு.

    ராம் பிரசாத், ‘ராம் மேட்சிங் ஒர்க்ஸ்’ என்ற பெயரில், தீப்பெட்டி பாக்டரி நடத்திக்கொண்டிருந்தார். பிசினஸ் நல்லபடியா நடந்து, பணம் கை நிறைய புரள, ஒரே மகனான சிவாவும், அமெரிக்காவின் தலைநகரில் பெரிய சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிய, குடும்பத்துடன் ஒரு மாத விடுமுறையில் இந்தியா வந்திருந்தான்.

    ***

    மகன், மருமகள், பேரன், கணவருக்கு சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்தாள் லட்சுமி.

    சிவா, இந்த தடவையாவது, நம்ப குலதெய்வம் கோவிலுக்கு எல்லாருமாக போய் பொங்கல் வச்சு, அபிஷேகம் பண்ணிட்டு வருவோம்பா. என்ன சொல்ற? என்று கேட்டாள் லட்சுமி.

    அம்மா... என்னை பத்திதான் உனக்கு தெரியுமே. எனக்கு இந்த கடவுள் நம்பிக்கையெல்லாம் கிடையாது. நம்ப கடமைகளை ஒழுங்காகச் செய்தால் போதும்ன்னு நினைக்கிறவன். கோவில், பூஜை இதிலெல்லாம் எனக்கு ஈடுபாடு கிடையாது. நான் வரலை. நீங்க தாராளமாக உங்க மருமகள், பேரனை கூட்டிக்கிட்டு போய், திருப்தியா சாமி கும்பிட்டு வாங்க.

    என்ன சொல்றான் பார்த்தீங்களா?

    அத்தை... அவரை விடுங்க. அவர் சாமியே கும்பிடறதில்லை. கேட்டா, மனசாட்சிக்கு பயந்து நடந்தால் போதும். அடுத்தவரை ஏமாற்றாமல் நாலு பேருக்கு நல்லது செய்தாலே, அந்த கடவுளை கும்பிட்ட மாதிரிதான்னு வேதாந்தம் பேசுவாரு. அவர் வரமாட்டாரு. நாம் போய்ட்டு வரலாம், என்று மருமகள் சொல்ல...

    சிவா, நீ என்னதான் சொன்னாலும், நம்மை மீறிய ஒரு சக்தி நம்மை வழிநடத்துதுன்னு நம்பறியா இல்லையா. அதைத்தான் நாம் கடவுள்னு சொல்றோம். கடவுளை கும்பிடறதாலே, அவன் சன்னிதியில் மனமுருகி நிற்கும்போது கிடைக்கிற ஆத்மதிருப்தி இருக்கே, அது வேறு எதிலும் கிடைக்காதுப்பா. எங்களுக்காக வரக் கூடாதா?

    ப்ளீஸ்ப்பா. உங்க உணர்வுகளை மதிக்கிறேன். என்னை கூப்பிடாதீங்க. நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க, என்றான் சிவா.

    ***

    சுவாமிக்கு சார்த்த பட்டுத்துணி, அபிஷேக மற்றும் பூஜை பொருட்கள் என, எல்லாவற்றையும் காரில் டிரைவர் எடுத்து வைக்க...

    லெட்சுமி மறக்காம எல்லாத்தையும் எடுத்துக்க, பிரார்த்தனை பணம் உண்டியலில் வச்சிருந்தியே... அதையும் எடுத்து வச்சுக்க, என்று கூறிய ராம் பிரசாத்...

    நாங்க கிளம்பறோம் சிவா. நீ இன்னைக்கு பாக்டரி போய் சுத்தி பார்த்துட்டு வர்றதாக சொன்னியே. போய்ட்டு வா. மானேஜர்கிட்டே சொல்லியிருக்கேன். சுத்திக் காட்டுவாரு, என்று கூறினார்.

    சரிப்பா... பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. எனக்கும் வீட்டில் தனியா இருந்தா பொழுது போகாது. போனமுறை வந்தப்ப, பாக்டரிக்கு போக நேரமில்லாமல் போச்சு. இன்னைக்கு போய்ட்டு வர்றேன்.

    மதிய சாப்பாடு, நம்ப பாக்டரி கேன்டீனில் ஸ்பெஷலாக உனக்கு தயார் பண்ணி தருவாங்க. சாப்பிட்டு பாரு, நாங்க கிளம்பறோம்.

    எல்லாரும் விடை பெற்றுச் செல்ல, பாக்டரிக்கு கிளம்ப ஆயத்தமானான் சிவா.

    ***

    சார்... வாங்க. நீங்க வரப்போறதாக ஐயா சொன்னாரு. நல்லா இருக்கீங்களா?

    வாசலில் வந்து வரவேற்ற மானேஜரை பார்த்து புன்னகைத்தான்.

    அப்பாவின் அறைக்குள் நுழைந்தவனை, அந்த பெரிய பெருமாள் படம் வரவேற்றது. அப்பாவின் பக்தியை நினைத்து, மனமுருகியவனாக, அவரது நாற்காலியில் அமர்ந்தான்.

    சார்... காபி, கூல்டிரிங்ஸ் என்ன சாப்பிடரீங்க?

    நோ தாங்க்ஸ். பாக்டரியில் வேலை நடக்குதா?

    ஆமாம் சார். பத்து மணிக்கு வேலை ஆரம்பிச்சாச்சு. எல்லா செக்ஷனிலும் வேலை நடக்குது. மொத்தம் முப்பதுபேர் வேலை பார்க்கிறாங்க.

    Enjoying the preview?
    Page 1 of 1