Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Manaivi Oru Home Manager
Manaivi Oru Home Manager
Manaivi Oru Home Manager
Ebook57 pages19 minutes

Manaivi Oru Home Manager

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பெண் சக்தியின் உருவம். பெண்ணைத் தெய்வமாக வழங்கும் நம் நாட்டில் அவளின் சக்தி என்ன என்பது அவளுக்கே தெரியாமல் இருப்பதுதான் வேதனைக்குரியது. அவளின் சக்தியை வீட்டின் நிர்வாகத்திலும், அதை சரிவர செயல்படுத்துவதிலும் சரி காணலாம். பெண்ணிடம்தான் அனைத்தும் உள்ளது என்பதை உணர தவறாது வாசிப்போம்...

Languageதமிழ்
Release dateAug 23, 2022
ISBN6580134008986
Manaivi Oru Home Manager

Read more from Girija Raghavan

Related to Manaivi Oru Home Manager

Related ebooks

Reviews for Manaivi Oru Home Manager

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Manaivi Oru Home Manager - Girija Raghavan

    http://www.pustaka.co.in

    மனைவி ஒரு ஹோம் மேனேஜர்

    Manaivi Oru Home Manager

    Author:

    கிரிஜா ராகவன்

    Girija Raghavan

    For more books

    https://www.pustaka.co.in/home/author/girija-raghavan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    ஜெனரல் மேனேஜர்

    நிர்வாக மேனேஜர்

    கோ ஆர்டினேட்டிங் மேனேஜர்

    கம்யூனிகேஷன் மேனேஜர்

    ஹியூமன் ரிலேஷன்ஸ் மேனேஜர்

    ஸ்டேஷனரி மேனேஜர்

    பைனான்ஸ் மேனேஜர்

    ரிலேஷன்ஷிப் மேனேஜர்

    பிரசண்டேஷன் மேனேஜர்

    ஈவெண்ட் மேனேஜர்

    என்டர்டெயின்மெண்ட் மேனேஜர்

    என்னுரை

    என் இனிய வாழ்க்கைப் பயணத்தில் ஒரு அருமையான மைல்கல் இந்தப் புத்தகம். என்னுடைய முதல் புத்தகம்.

    பலரும் என்னைக் கேட்டிருக்கிறார்கள், ‘நீங்கள் ஏன் இன்னும் புத்தகம் எதுவும் எழுதவில்லை’ என்று. சிலர் சொல்லியிருக்கிறார்கள் ‘நீங்களே செலவழித்து புத்தகம் வெளியிடலாமே’ என்று.

    என் மனதிற்குள் ஒரு எண்ணம். புத்தகமாக வெளியாகும் தகுதியை என் எழுத்துதானே அடைய வேண்டும். ஒரு பதிப்பகத்தார் முன் வந்து என் படைப்பை வெளியிடும் போதுதான் என் எழுத்து அங்கீகாரம் பெறும் என்று காத்திருந்தேன்.

    என்னைப் பெற்றதில் பெருமைப்படும் என் பெற்றோருக்கும், தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் என்னுள் விதைத்து மறைந்த என் கணவருக்கும், நல்ல தாய் என்ற பெருமையை ஈட்டித்தந்த என் அன்பு மகனுக்கும் -

    இந்த நூலை காணிக்கையாக்குகிறேன்.

    கிரிஜா ராகவன்

    ஜெனரல் மேனேஜர்

    ரயிலில், அல்லது விமானத்தில் பயணிக்கும்போதோ சில கூட்டங்களுக்குப் போகும்போதோ, புதிதாகச் சந்திப்பவர்கள் அறிமுகப்படுத்திக் கொள்வதைப் பார்க்க நேர்ந்தால் ஒரு விஷயம் கண்ணில் படும்.

    இரண்டு ஆண்கள் சந்தித்துக்கொண்டால் கை குலுக்கிக் கொள்வார்கள். அறிமுகப்படுத்திக்கொள்வார்கள். இன்ன இடத்தில் வேலையில் இருக்கிறேன் என்பார்கள். விசிட்டிங் கார்ட் கொடுத்துக் கொள்வார்கள்.

    இரண்டு பெண்கள் சந்தித்துக் கொண்டால்...? கல்யாணங்கள், விசேஷங்கள் அல்லது பக்கத்து வீடுகளில் சந்திக்க நேர்ந்தால் பெரும்பாலும் இன்னாருடைய உறவினர் என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். நான் ஆடிட்டர் வைஃப், உங்க சரவணன் கூடப் படிக்கறானே சுரேஷ், அவங்கம்மா, கீதாவோட ஒர்ப்படி, ராதா தங்கச்சி புருஷனோட அண்ணி, இப்படி ஏதாவது ஒன்று இருக்கும்.

    உங்க பேர் என்ன? என்கிற அடுத்தக்கட்ட கேள்விக்கு சிலர் போகக்கூடும்.

    என்ன பண்ணறீங்க? என்ற கேள்வி வந்தால் மட்டும் "நான் இந்தியன் பாங்க்ல

    Enjoying the preview?
    Page 1 of 1