Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Corporate Saamiyargal
Corporate Saamiyargal
Corporate Saamiyargal
Ebook172 pages1 hour

Corporate Saamiyargal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நம் நாட்டில் “கடவுள் அவதாரம்”, “நடமாடும் தெய்வம்”, “கண் முன் தோன்றும் ஆண்டவன்” போன்ற சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில், ஒவ்வொரு ஊரில் எதோ ஒரு சாமியார் இருக்கிறார். அவர் அருளும் அல்லது சித்துவிளையாட்டாலும் பல பக்தர்களை உருவாக்கியிருக்கிறார்கள். உலகத்தில் பல இடங்களில் தங்களுக்கென்று சீடர்களாக ஆக்கியிருக்கிறார்கள். தங்கள் பெயரை பரப்பிவதற்கு இந்த சீடர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும் பண முதலைகள் என்று சொல்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், அரசுப்பணி உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் கார்பிரேட் சந்நியாசிகளை தேடி வருகிறார்கள். சாமியாரின் ஆசியை பெருகிறார்கள். அவர்கள் மூலம் தங்களுக்கு தொடர்பு கிடைத்து வளரவும் தொடங்கிறார்கள்.

கார்ப்ரேட் சாமியார்களை தேடி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தகுதிகள் ஏதாவது இருக்க வேண்டுமா என்றால் இல்லை என்பது பதில். நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை பற்றி எப்படி ஆராயப்படுவதில்லையோ அதேப் போல் பக்தர் தகுதிகள் பற்றி ஆராயப்படுவதில்லை. சில சமயம் பிறந்த ஜாதி சாமியார்களை சந்திக்க தடையாக இருக்கலாம்.

பக்தர்கள் கொண்டு வரும் பணத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்து ஆராயப்படுகிறதுமில்லை.

ஏதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், லஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக கார்பிரேட் சாமியார்களை சந்திக்கிறார்கள். தங்கள் நன்கொடையும் கொடுக்கிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற கார்ப்ரேட் சாமியார்கள் தேவைப்படுகிறார்கள்.

கார்பிரேட் சாமியார் செய்யும் காமலீலைகள் பற்றி இங்கு நாம் விவாதிக்க போவதில்லை. ஒரு பெண்ணின் சம்மதத்தோடு அவர்கள் உறவில் கொள்வது அவர்களின் அந்தரங்கம். அதை பற்றி எழுதுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. பிரேமான்ந்தா, நித்யானந்தா முதல் ஆசாரம் பாபு வரை பல சாமியார்களை பற்றி பேசியாகிவிட்டது.

ஆனால், கார்பிரேட் சாமியார்கள் கண்ணோட்டத்தில் யாரும் அனுகியதில்லை. இவர்கள் பெரும்பாலும் பெண் விஷயங்களில் சிக்குவதில்லை. சிக்கினாலும் வெளியே தெரியாத அளவுக்கு அரசியல் பலம் இருக்கிறது. அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இந்த கார்பிரேட் சாமியார்களிடம் இருக்கிறது. பிரேமானந்தா, நித்யானந்தா போன்றவர்கள் அரசியல் பின்பலம் இல்லாததால் மாட்டிக் கொண்டார்களோ என்று தோன்று அளவிற்கு கார்பிரேட் சாமியார்கள் தொடர்பை தெரிந்துக் கொள்ளும் பொது தெரியும்.

காமத்தில் மட்டும் ஈடுப்படும் சாமியார்களால் யாரும் எந்த பயனுமில்லை. ஆனால், கார்பிரேட் சாமியார்கள் மூலம் வரும் ஆதாயம் அதிகம். மந்திரியாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி கார்பிரேட் சாமியாரின் தொடர்பு இருந்தால் எந்த காரியத்தை சாதிக்க முடியும். இவர்களிடம் கடவுளின் அருள் இருக்கிறதோ இல்லையோ காரியத்தை சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. எத்தனை சாமியார்கள் கைது செய்தாலும் வெட்ட வளருவது போலவே இவர்கள் வளர்வதற்கு இது தான் காரணம்.

சாமியார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து பாரமர்கள் எதற்காக தேடி போகிறார்கள் என்று வியப்பாக இருக்கலாம். கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்க கேப்டனாக ஹன்ஸ் கிரோனியா, இசையில் மைக்கில் ஜாக்சன் என்று பல பிரபலங்கள் ஊழல், சர்ச்சையில் சிக்கியவர்கள் தான். ஆனால், அவர்களின் சாதனையை இல்லை என்று சொல்ல முடியாது. மறைக்கவும் முடியாது. அது போலத் தான் கார்ப்ரேட் சாமியார்கள். என்ன தான் சாமியார்கள் சர்ச்சையில் சிக்கினாலும், தங்களால் குணமடைந்ததை பக்தர்களால் மறக்க முடியாது. பக்தர்களும் நன்றியுடன் சாமியார் சர்ச்சையில் சிக்கினாலும் அவரைத் தேடி வருகிறார்கள்.

இவர்கள் இந்தியாவில் அங்கிகரிக்கப்படாத தொழில் அதிபர்கள். அம்பானி, ஆசிம் பிரேஜி, விஜய் மாலையா அளவிற்கு வியாபார சிந்தனை உடையவர்கள். எல்லா கட்சியினர்களுடன் நல்ல நட்பு முறையில் பலகுபவர்கள். பாமரனுக்கு பக்தியையும், பணம் படைத்தவனிடம் பதவி ஆசை வைத்து வளர்ந்தவர்கள். பிரபல சுயமுன்னேற்றப் பேச்சாளரான ஷிவ் கேரா செய்வதை போல் தான் பல சாமியார்கள் பேசுகிறார்கள். ஆனால், ஆன்மீகம் கலந்து இவர் பேசுவதால் மக்களுக்கு இவரை பிடித்திருக்கிறது. அதனால், உலகம் முழுக்க இவர்களுக்கு கிளைகள் வளர்வதற்கு இன்னொரு காரணம்.

இவர்களுக்கு எதிராக என்ன பேசினாலும், எதிராக செய்தாலும் அவர்களை ஒரு அடிக்கூட நம்மால் அசைக்க முடியாது. அது தான் ஆன்மீகம், அரசியல் இரண்டும் கலந்து இருக்கும் கார்பிரேட் சாமியார் என்னும் வியாபாரிகள்.

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580107301131
Corporate Saamiyargal

Read more from Guhan

Related to Corporate Saamiyargal

Related ebooks

Reviews for Corporate Saamiyargal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Corporate Saamiyargal - Guhan

    http://www.pustaka.co.in

    கார்பிரேட் சாமியார்கள்

    Corporate Saamiyargal

    Author:

    குகன்

    Guhan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/guhan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ரஜனீஷ் ஓஷோ

    2. சத்யசாய் பாபா

    3. சந்திராசாமி

    4. சத்குரு ஜக்கி வாசுதேவ்

    5. அம்மா அம்ரித்தானந்தமயி தேவி

    6. பங்காரு அடிகள்

    7. ஜெயந்திர சரஸ்வதி

    8. பாபா ராம்தேவ்

    9. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்

    10. கணபதி சச்சிதானந்தா

    11. டி.ஜி.எஸ்.தினக்கரன்

    12. சாகீர் அப்துல் கரிம் நைக்

    கார்பிரேட் சாமியார்

    நம் நாட்டில் கடவுள் அவதாரம், நடமாடும் தெய்வம், கண் முன் தோன்றும் ஆண்டவன் போன்ற சாமியார்களுக்கு பஞ்சமே இல்லை. ஒவ்வொரு மாநிலத்தில், ஒவ்வொரு ஊரில் எதோ ஒரு சாமியார் இருக்கிறார். அவர் அருளும் அல்லது சித்துவிளையாட்டாலும் பல பக்தர்களை உருவாக்கியிருக்கிறார்கள். உலகத்தில் பல இடங்களில் தங்களுக்கென்று சீடர்களாக ஆக்கியிருக்கிறார்கள். தங்கள் பெயரை பரப்பிவதற்கு இந்த சீடர்களை பயன்படுத்தியிருக்கிறார்கள்.

    பெரும் பண முதலைகள் என்று சொல்பவர்கள், அதிகாரத்தில் அமர்ந்தவர்கள், அரசுப்பணி உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்று பாரபட்சமில்லாமல் கார்பிரேட் சந்நியாசிகளை தேடி வருகிறார்கள். சாமியாரின் ஆசியை பெருகிறார்கள். அவர்கள் மூலம் தங்களுக்கு தொடர்பு கிடைத்து வளரவும் தொடங்கிறார்கள்.

    கார்ப்ரேட் சாமியார்களை தேடி வரும் பக்தர்களுக்கு சிறப்பு தகுதிகள் ஏதாவது இருக்க வேண்டுமா என்றால் இல்லை என்பது பதில். நன்கொடை கொடுக்கப்படும் பணத்தின் ரிஷிமூலத்தை பற்றி எப்படி ஆராயப்படுவதில்லையோ அதேப் போல் பக்தர் தகுதிகள் பற்றி ஆராயப்படுவதில்லை. சில சமயம் பிறந்த ஜாதி சாமியார்களை சந்திக்க தடையாக இருக்கலாம்.

    பக்தர்கள் கொண்டு வரும் பணத்தை ஆய்வு செய்து தணிக்கை செய்து ஆராயப்படுகிறதுமில்லை.

    ஏதாவது தொழிலில் மோசடி செய்து அபகரிக்கப்படும் பணம், கருப்புப்பணம், லஞ்சம் பணம், ஊழல் பணம், இன்னபிற கொள்ளைப் பணங்களும், அதன் உரிமையாளர்களான ஃபிராடு பேர்வழிகளும் தாராளமாக கார்பிரேட் சாமியார்களை சந்திக்கிறார்கள். தங்கள் நன்கொடையும் கொடுக்கிறார்கள். தங்கள் கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற கார்ப்ரேட் சாமியார்கள் தேவைப்படுகிறார்கள்.

    கார்பிரேட் சாமியார் செய்யும் காமலீலைகள் பற்றி இங்கு நாம் விவாதிக்க போவதில்லை. ஒரு பெண்ணின் சம்மதத்தோடு அவர்கள் உறவில் கொள்வது அவர்களின் அந்தரங்கம். அதை பற்றி எழுதுவதற்கு புதிதாக ஒன்றுமில்லை. பிரேமான்ந்தா, நித்யானந்தா முதல் ஆசாரம் பாபு வரை பல சாமியார்களை பற்றி பேசியாகிவிட்டது.

    ஆனால், கார்பிரேட் சாமியார்கள் கண்ணோட்டத்தில் யாரும் அனுகியதில்லை. இவர்கள் பெரும்பாலும் பெண் விஷயங்களில் சிக்குவதில்லை. சீக்கினாலும் வெளியே தெரியாத அளவுக்கு அரசியல் பலம் இருக்கிறது. அரசியலில் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் இந்த கார்பிரேட் சாமியார்களிடம் இருக்கிறது. பிரேமானந்தா, நித்யானந்தா போன்றவர்கள் அரசியல் பின்பலம் இல்லாததால் மாட்டிக் கொண்டார்களோ என்று தோன்று அளவிற்கு கார்பிரேட் சாமியார்கள் தொடர்பை தெரிந்துக் கொள்ளும் பொது தெரியும்.

    சொந்தமாக ஆசிரமம் வைத்து, காமலீலையில் மட்டும் ஈடுப்படும் சாமியார்கள் என்றோ ஒரு நாள் பிடிப்பட்டு விடுவார்கள். ஆனால், தங்கள் ஆசிரமத்தில் வரும் நிதியை கல்வி நிறுவனம், மருத்துவத்துறை, தொண்டு நிறுவனம், அரசியல் என்று தொடங்கி பக்கா கார்பிரேட் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமியார்கள் யாரும் மாட்டியதில்லை. அப்படியே மாட்டினாலும் இவர்களுக்கு உதவ பலர் முன் வருவார்கள். காரணம், கார்பிரேட் சாமியார்களின் உதவி ஒவ்வொருத்தனுக்கும் தேவையாக இருக்கிறது.

    அவர்கள் நடத்தும் பள்ளியில், கல்லூரியில் தங்கள் மகன்/மகளுக்கு படிக்க இடம் கேட்கலாம். வெளிநாட்டு தொடர்பு வைத்திருப்பதால் அங்கிருந்து வியாபார வளர்ச்சிக்கு உதவலாம். தொண்டு நிறுவனம் வைத்திருப்பதால் கருப்பு பணத்தை நன்கொடையாக கொடுத்து வேறு வழியில் வெள்ளை பணமாக பெறலாம். மந்திரிகள் தொடர்பு வைத்து அரசு அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வாங்கி தரலாம்.

    காமத்தில் மட்டும் ஈடுப்படும் சாமியார்களால் யாரும் எந்த பயனுமில்லை. ஆனால், கார்பிரேட் சாமியார்கள் மூலம் வரும் ஆதாயம் அதிகம். மந்திரியாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரியாக இருந்தாலும் சரி, பாமரனாக இருந்தாலும் சரி கார்பிரேட் சாமியாரின் தொடர்பு இருந்தால் எந்த காரியத்தை சாதிக்க முடியும். இவர்களிடம் கடவுளின் அருள் இருக்கிறதோ இல்லையோ காரியத்தை சாதிக்கும் தொடர்பு இருக்கிறது. எத்தனை சாமியார்கள் கைது செய்தாலும் வெட்ட வளருவது போலவே இவர்கள் வளர்வதற்கு இது தான் காரணம்.

    சாமியார்கள் இப்படி இருக்கிறார்கள் என்று தெரிந்து பாரமர்கள் எதற்காக தேடி போகிறார்கள் என்று வியப்பாக இருக்கலாம். கிரிக்கெட்டில், தென் ஆப்பிரிக்க கேப்டனாக ஹன்ஸ் கிரோனியா, இசையில் மைக்கில் ஜாக்சன் என்று பல பிரபலங்கள் ஊழல், சர்ச்சையில் சிக்கியவர்கள் தான். ஆனால், அவர்களின் சாதனையை இல்லை என்று சொல்ல முடியாது. மறைக்கவும் முடியாது. அது போலத் தான் கார்ப்ரேட் சாமியார்கள்.

    என்ன தான் சாமியார்கள் சர்ச்சையில் சிக்கினாலும், தங்களால் குணமடைந்ததை பக்தர்களால் மறக்க முடியாது. பக்தர்களும் நன்றியுடன் சாமியார் சர்ச்சையில் சிக்கினாலும் அவரைத் தேடி வருகிறார்கள்.

    இவர்கள் இந்தியாவில் அங்கிகரிக்கப்படாத தொழில் அதிபர்கள். அம்பானி, ஆசிம் பிரேஜி, விஜய் மாலையா அளவிற்கு வியாபார சிந்தனை உடையவர்கள். எல்லா கட்சியினர்களுடன் நல்ல நட்பு முறையில் பலகுபவர்கள். பாமரனுக்கு பக்தியையும், பணம் படைத்தவனிடம் பதவி ஆசை வைத்து வளர்ந்தவர்கள்.

    பிரபல சுயமுன்னேற்றப் பேச்சாளரான ஷிவ் கேரா செய்வதை போல் தான் பல சாமியார்கள் பேசுகிறார்கள். ஆனால், ஆன்மீகம் கலந்து இவர் பேசுவதால் மக்களுக்கு இவரை பிடித்திருக்கிறது. அதனால், உலகம் முழுக்க இவர்களுக்கு கிளைகள் வளர்வதற்கு இன்னொரு காரணம்.

    இவர்களுக்கு எதிராக என்ன பேசினாலும், எதிராக செய்தாலும் அவர்களை ஒரு அடிக்கூட நம்மால் அசைக்க முடியாது. அது தான் ஆன்மீகம், அரசியல் இரண்டும் கலந்து இருக்கும் கார்பிரேட் சாமியார் என்னும் வியாபாரிகள்.

    *****

    1. ரஜனீஷ் ஓஷோ

    எந்த மதம் வாழ்கையை வெறுக்கக் கற்றுக் கொடுக்கிறதோ அது உண்மையான மதம் அல்ல. வாழ்கையை எப்படி அனுபவிப்பது என்று காட்டுவதுதான் மதம். - ஓஷோ

    ‘இந்துக்களும் முகம்மதியர்களும் சமம் என்கிறீர்கள். பகவத்கீதையை உங்கள் தாய் என்கிறீர்கள். அப்படியானால் குரான் என்ன? அது உங்கள் தந்தையா?’

    இப்படி ஒரு கடிதத்தை காந்தி படித்ததும் என்ன பதில் கூறுவது என்று தெரிவியல்லை. இந்து, முஸ்லீம் பாய் பாய் என்பவரிடம் இப்படி ஒரு கேள்வி கடிதமாக வரும் போது, பதில் உடனே காந்தி மனதில் உதித்திருக்க வேண்டும். ஆனால், காந்தி என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பக்கத்தில் அவரது மகன் ராம்தாஸ் காந்தியும் இருந்தார். கொஞ்ச நேரம் மௌனமாக இருந்த காந்தி, அந்த கடிதத்தை ஜன்னல் வழியாக தூக்கி ஏறிந்தார்.

    அந்த நபர் கேட்கும் கேள்வியில் நியாயம் இருக்கிறது. கீதையை அம்மா என்று சொல்லும் போது, சொல்றப்போ, குரானை அப்பாவென்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது? குறைந்த பட்சம் எதாவது ஒரு உறவை நீங்கள் சொல்ல வேண்டாமா? இதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்றால் இஸ்லாமியர்களும், இந்துக்களும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்." என்று கேட்டார்.

    ஆனால், அதற்கு காந்தி எந்த பதிலும் கூறவில்லை. பிறகு, ராமதாஸ், கடிதம் எழுதியவருக்கு பதில் எழுதினார். ’உங்களுக்கு அவர்கிட்டருந்து எப்பவும் பதில் கிடைக்காது.’

    கடிதத்தில்லே காந்தியை திக்குமுக்கு ஆட செய்தவர். தன் வாழ்நாள் முழுக்க மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதில் செல்விட்டவர், கொஞ்சம் காந்தியை காரசாரமாக விமர்சனம் செய்து வந்தார்.

    தனது சுயசரிதையில் காந்தியின் எளிமையை மிகத்தீவிரமாகச் சாடுகிறார். ‘காந்தி வழக்கமாக சாதாரண மக்கள் செல்லும் ‘மூன்றாம் வகுப்பு’ ரயில் பெட்டியில்தான் பயணம் செய்வார். ஆனால், அது எந்த முதல் வகுப்புக்கும் குறைந்ததல்ல. காரணம், அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் அமரக்கூடிய அந்தப் பெட்டியில் காந்தி, அவர் செக்ரட்டரி, மனைவி கஸ்தூரிபா மூன்று பேர்தான் பயணம் செய்வார்கள். அது ஒரு சிறப்பு முதல் வகுப்புப் பெட்டி!’ என்கிறார்.

    மேலும், காந்தியை வியாபாரி என்றே விமர்சித்தார். கார்ப்ரேட் சாமியார் புத்தகத்தில் காந்திக்கு வேலையில்லை தான். ஆனால், இந்தியாவின் கார்ப்ரேட் சாமியார்களுக்கு வெளிநாட்டு பணம் நன்கொடையாக வாங்க கற்றுக் கொடுத்த சாமியாரே இவர் தான். அப்படிப்பட்டவர் காந்தி எதிராக விமர்சித்து எப்படி பல பேரை தன் ஆசிரமத்துக்கு இழுத்தார்? பலர் அவரை வசைப்பாடியிருப்பார்களே? அரசியல் தலைவர்கள் மிரட்டியிருப்பார்களே? எல்லாம் இருந்தது, அதை விட அவரை நம்பி செல்லும் அதிகமாக இருந்தது.

    தன் வாழ்நாள் முழுக்க நிகாரகரிப்பு, நாடு கடித்தல், சர்ச்சை என்று கழித்திருக்கிறார். இருப்பத்தியொரு நாடுகள் இவர் தங்குவதற்கு அனுமதியில்லை. இன்று எத்தனையோ பேர் செக்ஸ்

    Enjoying the preview?
    Page 1 of 1