Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Mahabharatham
Mahabharatham
Mahabharatham
Ebook462 pages4 hours

Mahabharatham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Indra Soundar Rajan, (b. 13 November 1958) is the pen name of P. Soundar Rajan, a well-known Tamil author of short stories, novels, television serials, and screenplays. He lives in Madurai.

He is something of an expert on South Indian Hindu traditions and mythological lore. His stories typically deal with cases of supernatural occurrence, divine intervention, reincarnation, and ghosts, and are often based on or inspired by true stories reported from various locales around the state ofTamil Nadu.
Two or three of his novels are published every month in publications such as Crime Story and Today Crime News.
Languageதமிழ்
Release dateAug 10, 2020
ISBN6580100705690
Mahabharatham

Read more from Indira Soundarajan

Related to Mahabharatham

Related ebooks

Reviews for Mahabharatham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Mahabharatham - Indira Soundarajan

    http://www.pustaka.co.in

    மஹாபாரதம்

    Mahabharatham

    Author:

    இந்திரா செளந்தர்ராஜன்

    Indira Soundarajan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/indira-soundarajan-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. அத்தியாயம்

    2. பராசரரின் ஞான வேள்வி... வியாசர் பிறந்தார்

    3. கங்கை அளித்த பிதாமகர்...!

    4. சத்தியத்திற்காக வாழ்ந்த பீஷ்மர்!

    5. ஹஸ்தினாபுரத்து வாரிசு சிக்கல்!

    6. கௌரவர்கள் பாண்டவர்கள் தோன்றிய சூழல்!

    7. பாண்டவர்கள் கௌரவர்கள் எப்படி பிறந்தனர்?

    8. தனுர் வேதம்

    9. தனூர் வேதி... துரோணர்!

    10. அர்ஜுனன் ஏகலைவன்!

    11. அரங்கேற்றத்தில் கர்ணன்

    12. துரோணர் கேட்ட குரு காணிக்கை...!

    13. சௌத்ராமணி யாகம்... த்ரௌபதி!

    14. கங்கை ஆற்றில் விபஜனம்... துரோணரின் பிரம்மசிரஸ்

    15. வாரணாவதம்

    16. சாலி ஹோத்ர சரஸிவே திருமணம்!

    17. ஏக சக்ர நகரத்தில் பாண்டவர் வாழ்க்கை! ஏகப்பட்ட திருப்பங்கள்

    18. பிராமணன் வீழ்த்திய கிளி!

    19. பிராமண வேடமே பொய்; அதற்குரிய தர்மங்கள் எப்படி மெய்யாகும்?

    20. காண்டவப் பிரஸ்தம்

    21. அர்ஜுனனின் யாத்திரையில் மூன்று பெண்கள்...!

    22. பிதுர்கள் இந்திரப்பதவி அடைய... ராஜசூய யாகம்!

    23. ஜராசந்த வதம்...!

    24. ராஜசூய யாகம் வெற்றி...

    25. சகுனியின் கட்ட தாயம்!

    26. விதியின் வெற்றி...!

    27. சூதில் தோற்ற பாண்டவர் நிலை...!

    28. பாஞ்சாலி சபதம்

    29. சகாதேவா, நீ சாஸ்திரஞானி! - பீஷ்மர்

    30. திருதிராஷ்டிரரின் கருணை நீதி!

    31. சகுனியின் திட்டம்...!

    32. சூதாட்டத்திற்கு அழைப்பு!

    33. நாரதர் வாக்கு!

    34. துரியோதனனை சபித்த மைத்ரேய மகரிஷி!

    35. யோக மந்த்ர உபதேசம்!

    36. சிவபெருமானிடம் அஸ்திரம் பெற்ற அர்ஜுனன்...!

    37. ஊர்வசியிடம் அர்ஜுனன் பெற்றது சாபமா...? வரமா?

    38. பீரஹதஸ்வர் கூறிய நள-தமயந்தி புராணம்

    39. கலிபுருஷனிடம் சிக்கிய நளன்...!

    40. நளன் - தமயந்தி

    41. குபேரன் தோட்டத்து சௌகந்திக மலர்!

    42. பீமனுக்கு அனுமனின் தரிசனம்!

    43. தருமன்-நகுஷன் விவாதம்

    44. கௌசிக மகரிஷி உணர்ந்த பதிவிரதை சக்தி!

    45. துவைத வனம்

    46. கந்தர்வர்களிடம் தோற்ற கௌரவர்கள்!

    47. காம்யக வனத்தில் துர்வாசர்!

    48. அத்தியாயம்

    49. அத்தியாயம்

    1. அத்தியாயம்

    என் சற்குருநாதராகிய காஞ்சி பரமாச்சார்யாரையும், குல தெய்வமான தான்தோன்றி மலை கல்யாண வேங்கட ரமண ஸ்வாமியையும் வணங்கித் தொடங்குகின்றேன். வியாசர் என்னும் மகா புருஷனால் நமக்கு கிடைத்தது தான் மகாபாரதம்! இந்த பாரதமும் ராமாயணமும் இந்த நாட்டின் பொக்கிஷங்கள்!

    அன்னியர்களின் படையெடுப்புக்கு இந்த பாரத பூமி அவ்வப்போது இலக்காவது உண்டு. அதில் எவ்வளவோ அரிய விஷயங்களையும், பெரும் செல்வங்களையும் நாம் பறிகொடுத்ததும் உண்டு. ஆனால் அன்றும் சரி, இன்றும் சரி கொள்ளையடிக்கப் படமுடியாத ஒரு பெரும் புதையல் எது என்றால் அது ராமாயண, மகாபாரதம் தான்!

    காஞ்சி முனிவரை ஒரு வேத விற்பன்னர் தரிசனம் செய்தார். முனிவருக்கு வேதம் விளங்க வேண்டும் என்பது தான் லட்சியமே... தன் தவ வாழ்க்கையின் நோக்கமே வேத சம்ரட்சணம் தான் என்பார். எனவே வேத விற்பன்னர்கள் என்றால் அவருக்கு அலாதி பிரியம் மட்டுமல்ல அளப்பரிய மரியாதையும் உடையவர்.

    அப்படி ஒரு பிரியத்தோடும் மரியாதையோடும் தான் அவர் அன்று அந்த வேத விற்பன்னரோடு பேசிக்கொண்டிருந்தார். அப்படி பேசிடும் போது பெரியவர் சில கேள்விகளை எழுப்புவார். பண்டிதர்களை ஆழம் பார்ப்பதற்காக மட்டும் அல்ல... அவர்களை அகலப்படுத்துவதற்காகவும்!

    அந்த நோக்கோடு அவர் அன்று அந்த வேத விற்பன்னரிடமும் பல கேள்விகளை எழுப்பினார்.

    அதில் ஒன்று 'நூற்றி எட்டு நாமம் கொண்டதை என்னவென்போம்' என்பதாகும். அந்த விற்பன்னரும் ‘அஷ்டோத்திரம்' என்று உடனேயே பதிலளித்தார். 'சரி, ஆயிரத்தெட்டை என்னவென்போம்?' என்று கேட்டார். சஹஸ்ரநாமம் என்று அதற்கும் பதிலளித்தார் அந்த பண்டிதர்!

    நூறுக்கும், ஆயிரத்துக்கும் சரி, லட்சம் சுலோகங்கள் கொண்ட ஒன்றை என்னவென்போம் என்று கேட்டார். விற்பன்னர் பதில் கூறத் தெரியாமல் முழித்தார்.

    ஒரு லட்சம் சுலோகங்கள் முதலில் எங்கே இருக்கிறது என்பது அவர் கேள்வி.

    'என்ன தெரியலியா?’

    ‘ஆமாம்... பெரியவா தான் தெரிவிக்கணும்’

    ‘நான் தெரிவிக்கணுமா... அதைத்தான் எல்லார்க்கும் தெரியுமே?'

    'எல்லார்க்கும் தெரியுமாவா...?’

    ‘ஆமாம்... உனக்கும் தெரியும். உனக்கு அது ரொம்ப நன்னாவும் தெரியும்!'

    பெரியவர் அப்படி எடுத்துத் தரவும் விற்பன்னருக்கு தெரிந்து விட்டது. 'பெரியவர் மகாபாரதத்தை சொல்றேளா?' என்று கேட்டார்.

    'அதேதான்... இப்பவாவது சொன்னியே' என்று சிரித்தார்.

    அப்படி அன்று சொன்னதன் மூலம் மகாபாரதம் என்பது ஒரு கடந்த கால வரலாறு மட்டுமல்ல. அது ஒரு பெரும் வழிபாட்டுக்குரியது என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டுவிட்டார்.

    அதை அவர் வாழ்நாளில் ஒரு சிலிர்க்க வைக்கும் சம்பவத்தின் வாயிலாக நிரூபிக்கவும் செய்தார்.

    கல்கத்தாவில் ஒரு செல்வந்தர்! ஆன்மீகத்தில் நல்ல நாட்டம் உடையவர். அறப்பணிகளுக்கு அள்ளி அள்ளித் தருபவர். இப்படிப் பட்டவருக்கு ஒரு சிக்கல். இதை சிக்கல் என்று சொல்வதைவிட சாபம் என்று தாராளமாக சொல்லலாம். இவரால் வாய் வழியாக எதையும் உட்கொள்ள முடியாது! தொண்டையிலே இருந்து இரைப்பை வரை கிட்டத்தட்ட செல்லரித்துவிட்டது. இந்த நிலையில் வயிற்றை கிழித்து இரைப்பையோடு ஒரு நேரடி தொடர்பை செயற்கையான ஒரு குழாய் மூலம் உருவாக்கி விட்டனர். அந்த குழாய் வயிற்றுப் பகுதியில் வெளியில் நீட்டியபடி இருக்கும். அவருக்கான உணவுப் பொருட்களை அந்த குழாயில் ஒரு புனலைச் செருகி அதில் கரைத்து ஊற்றி விட்டால் முடிந்தது. அது உள் சென்று இரைப்பையை அடைந்துவிடும். அதன்பின் மேலே வாயை மூடிவிட வேண்டும்.

    அவர் வரையில் வாய்ப்பகுதி என்பதே பேசுவதற்கு மட்டும் தான். அதிலும் ஈரம் இருக்காது. உலர்ந்து உலர்ந்து போவதால் தண்ணீரை ஸ்ப்ரே செய்து கொண்டால் தான் ஓரளவு பேசலாம்.

    எவ்வளவு பெரிய கொடுமை?

    உலகில் எவ்வளவோ வியாதிகளையும் கஷ்ட நஷ்டங்களையும் கேள்விப்பட்டிருக்கிறோம். சோற்றுக்கில்லாத பிச்சைக்காரன்கூட அது கிடைக்கும் சமயம் ருசித்து சாப்பிட முடிந்தவனாக இருப்பதைப் பார்க்கிறோம். ஆனால் பச்சைத் தண்ணீரைத் தன் நாவால் குடிக்க முடியாதபடி ஒரு மனிதன் உயிர் வாழ்ந்தாக வேண்டும் என்பது எத்தனை பெரிய கொடுமை?

    இப்படி வாழ்வதற்கு இறந்து போய்விடலாமே என்று தோன்றும். அந்த செல்வந்தருக்கு மட்டும் தோன்றாமல் இருக்குமா? இருந்தாலும் எந்த பாவம் காரணமாக தனக்கு இப்படி ஒரு வாழ்க்கை அமைந்தது என்று தெரிந்து கொண்டு அதற்கு பரிகாரம் செய்துவிடத் துடித்தார். இதற்காக அவர் பார்க்காத ஜோதிடர்கள் இல்லை. சந்திக்காத சான்றோர்கள் இல்லை! யாராலும் அவருக்கு ஒரு நல்ல வழியை காட்ட முடியவில்லை. கையோ, காலோ இல்லாமலே ஊனமாக பிறந்துவிட்டால் கடைசி வரை அந்த ஊனத்தோடு வாழ்வது தான் ஒரே தீர்வு.

    எந்த பிரார்த்தனையாலும் அல்லது தவத்தினாலும் உறுப்புகள் வளர்ந்து சீரானதாக வரலாறும் இல்லை. வேண்டுமானால் பிறவி ஊமை பேசிய வரலாறு இருக்கிறது. சித்தக் குழப்பம் உள்ளவன் தெளிந்த வரலாறு இருக்கிறது. அவ்வளவு ஏன்...? இறந்து சாம்பலானவர்கள் கூட உயிர்த்து எழுந்திருக்கிறார்கள். மயிலாப்பூர் பூம்பாவை அதற்கொரு நல்ல உதாரணம். ஆனால் உடல் உறுப்பு பழுதுபட்ட நிலையில் அது மட்டும் மாயம் போல சரியானதாக வரலாறு இல்லை.

    இந்த செல்வந்தர் வரையில் அமெரிக்க மருத்துவர்களே கூட இவர் உயிர் வாழ இது ஒன்று தான் வழி என்று கூறிவிட்டனர். அதனால் இந்த செல்வந்தரும் சிவனே என்று தான் உயிர் வாழ்ந்தார். இருப்பினும் நடுநடுவே தன் நிலைக்கு எது காரணம்... யாராவது ஓர் அருளாளர் வந்து தன் குறைக்கு ஒரு நல்ல வழியை காட்டமாட்டாரா என்றெல்லாம் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான், நம் தமிழ்நாட்டு உபன்யாச பண்டிதர் ஒருவர் கல்கத்தா சென்று, அங்கு நடைபெற்ற வேள்வி ஒன்றில் பங்குகொண்டு, அங்கே உபன்யாசமும் செய்தார். இந்த உபன்யாச பண்டிதருக்கும் அந்த செல்வந்தருக்கும் இவ்வேளையில் தொடர்பு ஏற்பட்டு பண்டிதரும் செல்வந்தரின் நிலையை அறிந்து அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

    இந்த பண்டிதர் மகாபெரியவரின் உற்ற சீடர், பெரியவரை தன் சத்குருவாக கொண்டு பெரியவர் காட்டிய வழியில் நடப்பவர். இப்படி ஒரு சிக்கலுக்கு எது காரணம் என்பதை மகாபெரியவரால் நிச்சயமாக கூற முடியும் என்று நம்பினார்.

    அதேபோல பெரியவரை சந்திக்கையில் செல்வந்தர் நிலை பற்றி கூறி காரணம் கேட்டார். ஆனால் பெரியவர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. மௌனமாக தவிர்த்துவிட்டார். இது பண்டிதரை இன்னமும் ஆச்சரியப்பட வைத்தது.

    பெரியவருக்கே வழி தெரியவில்லையா? இல்லை அவருக்கு இதைப்பற்றி பேச விருப்பம் இல்லையா? இப்படி அவருக்குள் பல கேள்விகள்.

    அந்த செல்வந்தரிடம் பேசும் போது, உங்கள் சிக்கலுக்கு பெரியவர் மூலம் விடிவு ஏற்படலாம் என்று கூறியிருந்ததால் அவரும் பெரியவர் என்ன சொன்னார்...? என் பிரச்சினை தீருமா? என்று தினசரி விசாரிக்கத் தொடங்கிவிட்டார்.

    நமது பண்டிதர் அயர்ந்து விடவில்லை. திரும்பவும் பெரியவரிடம் இது பற்றிப் பேசினார். இரண்டாம் முறையும் பெரியவர் மௌனம் சாதித்ததாக தெரிகிறது.

    பண்டிதருக்கோ பிள்ளையார் பிடிக்க குரங்காகி விடுமோ என்று ஒரு பயமும் கவலையும் ஏற்பட்டுவிட்டது. பெரியவர் குறைந்தபட்சம் இந்த குறைபாடு நீங்க வழி இல்லை என்று தன் வாயால் சொன்னால் கூட போதும் என்கிற ஒரு நிலை தோன்றி விட்டது.

    இறுதியாக மூன்றாவது முறை அந்த செல்வந்தரோடு நேரில் சென்று நிற்கவும் தான் பெரியவர் வாய் திறந்தார். பொதுவில் வியாதி என்பதே கோட்சாரங்களால் வருவதுதான். இதில் ஜாதக ரீதியாக அந்தரம், சூட்சுமம் எனும் கால கதிகள் உடல் ரீதியாக கெடும் போது காய்ச்சல், குளிர், தலைவலி, வயிற்று வலி இதெல்லாம் ஏற்படுகிறது. இந்த கால கதிகள் சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் நீடிப்பவை. எனவே இந்த கால கதி மாறும் போது இவையும் நீங்கிவிடும்.

    சில வியாதிகளை தசாபுத்திகள் தரும்... இந்த தசா புத்தி என்பது மாதக்கணக்கில் நீடிப்பவை... அதற்கேற்ப அவையும் நீடிக்கும். சில வியாதிகளை தசைகளே தந்துவிடும்... இந்த தசைகள் வருடக் கணக்கில் நீடிப்பவை. தசைகள் தரும் வியாதிகளை காலமெல்லாம் சுமந்துதான் தீர வேண்டும். இதை கட்டுப்பாட்டில் வேண்டுமானால் வைக்கலாம். ஆனால் பரிபூரணமாக குணப்படுத்த முடியாது. இதையும் கடந்து பிறக்கும்போதே கர்மத்தால் வருவது என்றும் ஒரு ரகம் இருக்கிறது. இதை அனுபவித்துத் தான் தீர்க்க வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    பெரியவருக்கு தெரியாத ஜோதிட சாஸ்திரமா?

    ஆனால் அதை சொல்வது ஆறுதல் ஆகாது... வழிகாட்ட வேண்டும். வலி நீக்க வேண்டும். அதைச் செய்தால்தானே அவர் பெரியவர்? பெரியவரும் அதைத்தான் செய்தார்!

    'இவரோட சிக்கலை தீர்க்க நான் வைத்யனோ, இல்லை மகா தபஸ்வியோ இல்லை. ஒரு முறைக்கு பலமுறை நீ கேட்டதால் என் மனசுக்கு பட்டதை சொல்றேன். இவருக்கு ஒரு பெரிய புண்யபலம் தேவைப்படறது. அது மகா புண்ய பலமாவும் இருக்கணும். அதுக்கு ஒரே வழி நம்ம சாஸ்த்ரத்துல பதினெட்டு புராணங்கள்னு இருக்கு. ரெண்டு இதிகாசம், நாலு வேதம், பதினெட்டு புராணம். இதுதான் இந்த தேசத்தோட அழிக்க முடியாத சொத்து. இதெல்லாமே மனிதன் எப்படி வாழணும்னு சொல்லித் தருபவை. நம்ப ஜென்மா கடைத்தேற உதவுபவை. இதுல இருக்கற பதினெட்டு புராணங்களையும் ஆதியிலயும், மூலத்துலயும் உள்ளது உள்ளபடி தொகுத்து புத்தகமா வெளியிட்டு அதை இலவசமா வேத பண்டிதர்களை கூப்பிட்டு கொடுத்தா இவருக்கு ஒருவேளை நல்லது நடக்கலாமோன்னு தோண்றது என்றார்.

    கட்டாயம் நடந்துவிடும் என்று மட்டும் கூறவில்லை. அவ்வளவு தன்னடக்கம்! அந்த கல்கத்தா செல்வந்தரும் பெரியவர் சொன்னதை கெட்டியாக பிடித்துக் கொண்டார். தன் செல்வத்தை எல்லாம் பதினெட்டு புராணங்களை வெளியிட தாராளமாக செலவழித்தார். இதற்காக பல வேத பண்டிதர்களை நிரந்தரமாக வேலையில் அமர்த்தி அவர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து பதினெட்டு புராணங்களையும் வெளியிடத் தொடங்கினார்.

    இப்படியாக பதினேழு புராணம் வந்து விட்டது. அவரிடம் எந்த குணப்பாடும் தெரியவில்லை. இதை அவர் கூட பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அவருக்காக பெரியவரிடம் மன்றாடிய வேத பண்டிதர் மனது, நல்லது நடக்க வேண்டுமே பெரியவர் வாக்கு பலிக்க வேண்டுமே என்று துடித்தபடியே இருந்தது.

    பதினெட்டாவது புராணமும் அச்சாகி வெளியாகியது.

    அதேசமயம், அந்த செல்வந்தரும் ஒருநாள் தாகம் எடுத்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார்!

    அற்புதம் நடந்துவிட்டது. அதிசயம் நடந்தேவிட்டது. மருத்துவ உலகமே கைவிட்டதை பெரியவர் சாதித்துவிட்டார். செல்வந்தரும், வேத விற்பன்னரும் பெரியவரை சென்று சந்தித்து காலில் விழுந்து நன்றி கூறினர்.

    பெரியவர் அப்போது என்ன சொன்னார் தெரியுமா?

    'இதை ஏன் என்னிடம் கூறுகிறீர்கள்? இது தான் பதினெட்டு புராணங்களின் மகிமை. அதனுள் சப்தரூபமாக வாழ்ந்து வரும் ரிஷிகளின் மகிமை. இதை அவர்கள் தான் செய்தார்கள். நான் ஒன்றுமே செய்யவில்லை' என்றார்.

    நமக்கெல்லாம் சிலிர்க்கிறதல்லவா? அவர்தான் பெரியவர். அவரே தன் வாழ்நாளின் ஒரு சமயத்தில் பாரதம் பற்றி கூறுகிறார்.

    'இதிகாசமாகிய ராமாயண, மகாபாரதம், நால்வகை வேதம், பதினெட்டு புராணம் இதெல்லாம் நம் பொக்கிஷங்கள். இவைகளை நாம் போற்றிப் பாதுகாத்தா இவைகளும் நம்மை பாதுகாக்கும். இவை வெறும் சப்தங்கள் அல்ல... நம் முன்னோர்களின் தபோபலமும் ஆன்ம பலமும் கொண்ட மகா சக்தி! அதனால்தான் இவற்றை கோயில்களில் எல்லோரும் கேட்கும்படியாக சொல்லும் முறை வந்தது.’

    இவைகளை வைத்திருப்பது, வாசிப்பது, பிறர் வாசிப்பதை கேட்பது எல்லாமே பெரும் புண்ணியம். இதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சக்தி.

    இதில் மகாபாரதமும் எல்லாம் கொண்டது.

    அதனால் தான் இதை பாராயணம் செய்தால் வறட்சி நீங்கி மழை பெய்கிறது. எல்லா நன்மைகளும் நாட்டில் ஏற்படுகிறது. எப்போதெல்லாம் அசுர சக்தி தலை எடுத்து வறட்சி, பஞ்சம் ஏற்படுகிறதோ, தர்மம் பலவீனமாக தொடங்குகிறதோ அப்போது உற்ற துணையாக கைகொடுப்பது பாரதம். இதை நமக்காக எழுதிய வியாசர் தான் இந்த உலகில் மகா குரு என்கிறார்.

    அதனால் தான் மூதறிஞர் ராஜாஜியும் இதை தன் கைப்பட வியாசர் விருந்து என்கிற பெயரில் எழுதினார். 'நம்முடைய நாட்டின் தர்ம தேவதை தூண்டித்தான் நான் இதை எழுதினேன். இதைப்படிக்கும் போது, இதை நான் தான் எழுதினேனா என்ற வியப்பும், ஆனந்தமும் உண்டாகிறது. கூடவே கண்ணன் அருளால் அடக்கமும் தோன்றுகிறது' என்கிறார்.

    என்ன ஒரு பணிவான கருத்து! ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்னால் மூதறிஞர் கூறிய கருத்தை நான் எண்ணி சிலிர்க்கிறேன்.

    நமது சான்றோர் உலகம் மகாபாரதத்தை ஐந்தாவது வேதம் என்கிறது. இந்த ஐந்தாவது வேதத்தை ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவரும் சிறப்பாக உள் வாங்கி, அக்கால நிலைகளுக்கும் நடப்புகளுக்கும் ஏற்ப பதிவு செய்துவிட்டு சென்றிருக்கின்றனர். அந்த சான்றோர் பெருமக்கள் வழியில் நானும் நடக்க இருப்பதை எண்ணி மகிழ்கிறேன். அவர்களை எல்லாமும் வணங்குகிறேன்.

    இன்றைய விஞ்ஞான தாக்கங்களுக்கு நடுவில் ஏன்? என்ற கேள்வி கேட்டு, எனக்குப் புரிந்த உணர்வுகளை பதிலாக்கி புதினங்கள் படைத்து வரும் எனக்கு, நான் இதுகாறும் 174 நூல்கள் எழுதியவன் என்பதோ, 600 சிறுகதைகள் எழுதியவன், 350 மாத நாவல்கள் எழுதியவன், 100 பத்திரிகை தொடர்கள் எழுதியவன், பெரிய புராணத்தை தொலைக்காட்சியில் 140 வாரங்கள் சொற்பொழிவால் தந்தவன் என்பதோ எல்லாமும் தகுதிகள் அல்ல.

    இந்த பாரத மண்ணில் பிறந்து ஒரு பெரும் சான்றோர் உலகத் தொடர்பில் உள்ளவன் என்பதே பெரும் தகுதியாகும். என்னை அந்த சான்றோர்களோடு என் சத்குருநாதரும், என் குல தெய்வமுமே வழி நடத்தட்டும்!

    *****

    2. பராசரரின் ஞான வேள்வி... வியாசர் பிறந்தார்

    காரணமில்லாமல் காரியமில்லை!

    நமது இந்து சமய சித்தாந்தத்தின் 'தன்மை-வன்மை-நன்மை' என்னும் மூன்றையும் சொல்லும் இரண்டு சொற்கள் இதுவாகத் தான் இருக்க முடியும். இதற்கும் மகாபாரதத்துக்கும் நிறைய சம்மந்தம் இருப்பதால், நான் பாரதத்தை இந்த சொற்களை கொண்டே துவங்குகின்றேன்.

    இப்படி நான் எழுதக் காரணமுண்டு. இதை பாபாஜி சித்தர் ஆன்மீகம் தொடராக வெளியிட காரணமுண்டு. அதை வாசக உலகம் வாசிக்கவும் காரணமுண்டு.

    காரணமில்லாமல் எதுவுமேயில்லை என்பது தான் ஆதி அந்தமான பேருண்மை. அந்த காரணத்தை தெரிந்து கொள்வதிலும், புரிந்து கொள்வதிலும் அனேக குழப்பங்கள், தடுமாற்றங்கள், தவறுகள் (அ) சதிகள் இருக்கலாம்.

    ஆனால் காரணம் இருக்கிறது. இது ஒரு குப்பை கூளத்துக்கு கூட பொருந்தும். ஒரு இடத்தில் ஒரே குப்பை... அதன் பின்புலத்தில் உள்ள காரணம் பெரும் பயன்பாடுடைய பொருட்கள் பயன்படுத்தி முடிக்கப்பட்ட நிலையில் நிராகரிக்கப்பட்டு, இறுதியாக குப்பை மேட்டுக்கு வந்திருக்கின்றன என்பது தான்...

    அது அடுத்து தீயிடப்பட்டு சாம்பலாகும். சாம்பல் மண்ணோடு மண்ணாக கலந்து போகும். சாம்பலான மண்ணை கையில் எடுத்துக்கொண்டும் சிந்திக்க முற்படலாம்.

    இந்த சாம்பல் குப்பைகளால் ஆனது. குப்பையோ மனிதர்களால் போடப்பட்டது. மனிதர்களோ சுத்தத்தை பேணுபவர்கள். அப்படி சுத்தம் பேணினாலே ஆரோக்கியமாக இருக்க முடியும்... இப்படி காரணம் விரிவடைந்து கொண்டே போகிறது பாருங்கள்.

    பாரதத்திலும் இப்படி காரணங்களைத் தேடி நிறையவே பயணிக்க வேண்டியுள்ளது. காரணம் இல்லை என்று மனம் கருதினாலோ, அல்லது காரணம் தெரியாவிட்டாலோ ஒப்புக்கு சப்பையாக அந்த விஷயத்தை குருட்டுத்தனமாக ஏற்க வேண்டி உள்ளது. அவ்வாறு ஏற்க முடியாதவர்கள், அறிவு ஜீவியாக திகழும் விருப்பம் கொண்டவர்கள் உடனேயே அந்த விஷயத்தை ஓர் அசகாய கற்பனையாகவோ, இல்லை அண்டப் புளுகாகவோ கருதி ஒதுக்கி விடுகிறார்கள்.

    ஆனால் அதற்கு அவசியமே இல்லாதபடி பாரதம், காரண களஞ்சியமாகவே திகழ்வது தான் என்னை முதலில் பாதித்தது. வியப்பில் புருவம் சுளுக்கிக் கொண்டது!

    பாரதத்தைப் பற்றி நினைக்கும் போதே உடன் மனதில் தோன்றி விடுபவர் வியாச முனிவராவார். இவரால் தான் இந்த மண்ணில் இன்று பாரதம் உள்ளது.

    ஒரு லட்சம் ஸ்லோகங்களினால் ஆன இந்த அற்புதத்தை ஒரு மனிதர் முதலில் தன் மனதில் வரித்துக் கொண்டார். அதற்கே சிலருக்கு நெடுங்கால தவமும், தியானமும் தேவைப்பட்டது. பிறகு இவர் அதை இடையறாது கூறிட, ப்ரணவ ஸ்வரூபியான அந்த விநாயகப் பெருமான்படி எடுத்தார் என்றால், வியாசர் என்னும் முனி பிங்கவர் பற்றியும் நிறைய சிந்திக்க வேண்டியுள்ளதே?

    கோடானு கோடி ஜீவன் முக்தர்கள் உலகத்தில் இருக்க, ஏன் வியாசரால் பாரதம் உருவானது? இன்று போல் எழுதுகோல், காகிதம், மேஜை, மசி என்று எதுவுமே தோன்றியிராத ஒரு நாளில் மனத்தாளில் முதலில் இதை எழுதிக்கொண்டு பின் பனை ஏட்டில் இதை வார்த்தெடுக்க எத்தனை ஆர்வமும், முயற்சியும் வேண்டும்? எல்லாவற்றுக்கும் மேலாக எதற்காக பாரதத்தை அவர் படைத்து உலகின் முன் சமர்ப்பிக்க வேண்டும்?

    அடேயப்பா... எத்தனை கேள்விகள்!

    இவை ஒன்றும் விடையில்லாத மில்லியன் டாலர் கேள்விகள் அல்ல. இதற்கான விடைகளை தேடுகையில் தான் வியாசரின் பிறப்பு, அதன் பின்புலம் என்று காட்சிகள் விரியத் தொடங்குகின்றன.

    சேதி நாட்டு அரசன் சரவசு என்பவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அதன் மேல் மீன் வாடை வீசவே அரசன் அதிர்கிறான். வேட்டைக்கு போன சமயம் காட்டுத் தடாகம் ஒன்றில் ஒரு பெண்மீனைப் பார்த்து, அதை அம்பாலே அடித்துக்கொன்று வேட்டையாடிய தன் விளைவு அது! சாபத்தால் மீனாக திகழும் ஒரு தேவகன்னிகை அது. உயிர் பிரியும் தருவாயில் அவள் கொடுத்த சாபம் தான் சரவசுவின் பெண் மீதும் மீன் வாடை வீசக் காரணம்.

    அரச போகமும், அவனுக்கான கீர்த்தியும், அந்த பெண் குழந்தையை வைத்து வளர்க்க இசைவைத் தரவில்லை. குழந்தையை கொன்றுவிடச் சொல்கிறான். ஆனால் ஒரு செம்படவன் வசம் அந்த குழந்தை சென்று சேர்ந்து வளரத் தொடங்குகிறது. மேனி மேல் வீசும் மீன்வாடையே பெயர்க் காரணமாகி மச்சகந்தி என்று அவள் அழைக்கப்படுகிறாள்.

    தான் ஒரு அரசன் மகள் என்பது தெரியாமல் செம்படவன் மகளாகவே வளர்கிறாள் மச்சகந்தி. செம்படவத் தந்தைக்கு உறுதுணையாக இருக்கிறாள். யமுனை ஆற்றங்கரையில் தங்கி இருந்து கொண்டு அதில் படகோட்டவும் செய்கிறாள்.

    ஒருநாள் அவளது படகில் பயணிக்கு முகமாக வந்து சேர்கிறார் பராசரர் என்னும் முனிவர். மிகப்பெரிய தவசியான இவருக்கு சர்வ சாஸ்திரங்களும் தண்ணீர் பட்டபாடு. அன்று விண்வெளியில் நட்சத்திர சஞ்சாரத்தில் ஒரு ஆச்சரிய மூட்டும் நிகழ்வு. குரு என்னும் கோளும், செவ்வாய் என்னும் கோளும், புதன் என்னும் கோளும் ஒரு நேர்வரிசையில் சில மணி நேரம் சந்திக்கப் போகின்றன.

    இப்படி ஒரு காலகட்டத்தில் ஓர் உயிர் கருக்கொண்டு பிறந்தால் அது ஒரு மகத்தான அம்சமாகும். தன் ஞானத்தாலே அதை அறிந்த பராசரர், அப்படி ஒரு கருப்பிள்ளை இந்த பூமிக்கு வர வேண்டும். அதனால் காலாகாலத்திற்கும் மானுட வாழ்வின் நெறிப்பாடுகள் பேசப்படும் என்றும் உணர்கிறார்.

    இதைச் சாதிக்க பெண்ணொருத்தியும் வேண்டுமே? அந்தப் பெண்ணாக படகோட்டிக் கொண்டு மச்சகந்தி இருக்க, அவளிடமே தன் விருப்பத்தையும் கூறுகிறார். அவளது பூர்வமும் அவருக்கு ஞான திருஷ்டியால் விளங்கி விடுகிறது.

    'பெண்ணே நீ ஒரு ராஜ புத்ரி. ஒரு சாபம் காரணமாக மச்சவாடை வீச இங்கே படகோட்டிக் கொண்டிருக்கிறாய். எதற்கும் ஒரு நீள அகலம் உண்டு. முடிவு என்று ஒன்றும் உண்டு. உனக்கும் இப்போது சாப விமோசனம் கிடைக்கப் போகிறது. நான் இந்த யமுனை ஆற்றில் படகில் உன்னோடு சஞ்சரிக்கும் இந்த கால கதி, ஓர் அபூர்வ கால கதியாகும். இவ்வேளை ஜனிக்கும் உயிர்களுக்குள், குறிப்பாக மானுடர்களுக்குள் மனம் என்னும் சப்தப் பாகம் பெரும்பலம் கொண்டதாக இருக்கும். இவ்வேளை ஒருவன் பிறந்தால், மனதை அடக்குவதிலும் சரி, விரிவுபடுத்துவதிலும் சரி, அசகாய சூரனாக இருப்பான். சுபக்கிரக பார்வை இருப்பதால் அந்த அசகாய சூரன் பெரும் நல்லவனாக கருணை மிகுந்தவனாக இருப்பான். அவனால் இந்த உலகம் அழியாச் செல்வம் எனப்படும் ஞானத்தை பெற்றிடும்.

    அப்படி ஒரு பிள்ளையை பெற்றிட உனக்கு விருப்பமா? என்று கேட்கிறார். மச்சகந்தி ஒருபுறம் வியப்பும், மறுபுறம் அதிர்ச்சியும் அடைகிறாள்.

    'முனிவரே நானோ கன்னி... என் மீது வீசும் வாடை காரணமாக, என்னை மணக்க எவரும் தயாராக இல்லை. என்னால் எப்படி உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்?' என்றும் கேட்கிறாள்.

    'நீ சம்மதித்தால் நானே உன்னை இங்கே காந்தருவ மணம் புரிந்து கொள்வேன். என்னாலேயே நீ கருக்கொண்டு அந்த பிள்ளையையும் பெற்றிடலாம்' என்கிறார் பராசரர். மச்ச கந்தியும் சம்மதிக்கிறாள். அடுத்த நொடி தன் தபோ பலத்தால் அவர் மேல் வீசும் துர்வாடையை நீக்குகிறார். பின் படகிலேயே கூடுகிறார். மச்சகந்தியும் வாசம் மிகுந்த கந்தவதி ஆகிறாள்.

    'ரிஷி கர்ப்பம் இராத் தங்காது' என்பது பழமொழி. பூ உலகின் ஓர் ஆண்டுப் பொழுது அவர்களுக்கு ஒருநாள் கணக்கு. இந்த அடிப்படையில் பத்து மாத கர்ப்பத்தை சில மணித் துளிகளில் கடந்து வானில் நிலவும் அபூர்வ கிரக சஞ்சார வேளையிலேயே மச்சகந்தியும், கந்தவதியாகி ஓர் அழகிய ஆண் மகவை பெற்றுத் தருகிறாள்.

    பராசரரும் அந்த மகவை எல்லையில்லா ஆனந்தத்தோடு பெற்றுக் கொண்டார்.

    ‘உலகின் மிகப்பெரிய உயிரினம் மீன் தான்... புல், பூண்டு முதலானவை தொட்டு, புழு, பூச்சி வரை எல்லாமே பிறகுதான் மீனுக்கு மட்டுமே மேல் கீழ் இல்லை. இடது வலது இல்லை. கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று திசைகளில்லை.

    அதன் அழிவும் அதனாலேயே... பிரளயத்தில் உலகே அழியும். ஆனாலும் அதிலும் மீன்கள் ஜீவித்திருக்கும். அளவில் சிறிய உயிரினமாகவும், அளவில் பெரிய உயிரினமாகவும் இது ஒன்றே இன்றும் உள்ளது. இப்படி மீனுக்கு பின்னால் நுட்பமாய் உணர வேண்டியவை நிறையவே உள்ளது. அப்படி ஒரு மீன் அம்சம் கொண்ட ஒரு பெண்ணுடன் தவ சக்தி மிகுந்த ஒரு யோகி, கால நேரம் உவப்பாக இருக்கும் வேளையில் கூடிடப்போய், பிறந்த பிள்ளையே இவன். இவனுக்குள் இனி இந்த உலகம் அடங்கும் உலகில் உள்ள அவ்வளவும் இவனுக்குள் அடங்கும். அவைகளை அடக்கிக் கொள்ளவும் இவனால் மட்டுமே முடியும். இனி இவனுக்குள் சர்வத்தையும் புகுத்துவேன்' என்று அந்த பிள்ளையோடு செல்கிறார் பராசரர். கந்தவதியும் உலகின் நலனுக்காக தன் தாய்ப் பாசத்தை அடக்கிக்கொண்டு மகனுக்கு விடை கொடுக்கிறாள்.

    அந்த மகனும் திட்டமிடுதலோடு வளர்க்கப்படுகிறான். அனைத்தையும் கற்றுத் தெளிகிறான். கற்பதில் அவனிடம் அசதியேயில்லை. வேதம், தர்மசாஸ்திரம், மீமாம்சை என்று சர்வத்திலும் பாண்டித்யம் பெறுகிறார். அந்த ஆற்றலால் வேதத்தை நான்காக பிரிக்கிறான்.

    ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்று அவைகளை பிரிவுப்படுத்தி பெயரும் இடுகிறான். தேவலிபியில் இருந்ததை கசடற உணர்ந்து எளிமைப்படுத்துகிறான்.

    பராசரர் உட்பட பார்ப்பவர், கேட்பவர் எல்லோருக்கும் புரியும் விதம் அவன் வியாசிக்கிறான் அதாவது விளங்குகிறான்.

    ‘ஆஹா... அற்புதம்... இப்படி ஒரு எளிய வியாசத்தை கேட்டதில்லை. வியாச திலகம் நீ...' என்று முதலில் பாராட்டுபவர்கள் அவனது ஆற்றலையே அவனுக்கான பெயராக ஆக்கி வியாசமே நீ ஆனதால் வியாசன் நீ... என்கின்றனர்.

    இப்படித்தான் வியாசர் நமக்குக் கிடைக்கிறார். வியாசருக்குள் ஒரு மனக் குறைபாடு!

    மானுட வாழ்க்கை உய்ய வழி காட்டுவதே வேதம், புராணம் எல்லாம்... அவ்வளவும் தத்துவமாக புரிந்து கொள்ளும் ஆற்றல் உள்ளவர்களுக்கே, குறிப்பாக கல்வி கேள்விகளில் சிறந்தவர்களுக்கே என்று உயரே உள்ள மாடத்து விஷயமாக அல்லவா உள்ளது.

    கல்வி பெற முடியாத ஒரு பாமரன் என்ன பாவம் செய்தான்? அவனை இந்த வேத சாரம் சென்று சேர என்ன வழி

    இதை எளிதாக்கி, அதே சமயம் இதன் வலிமை குன்றி விடாதபடி செய்ய என்ன வழி என்று யோசிக்கிறார். அந்த யோசனையின் வீர்யத்தில் உதித்தது தான் மகாபாரதம்.

    பொதுவில் யோகிகள் த்ரிகால ஞானிகள்! வரும் காலத்தை முன்பே உணரவல்லவர்கள். அப்படி உணர முடிந்த ஆற்றலும் சேர்ந்து கொள்கிறது. பாரதம் என்று ஒன்றை பூ உலகம் காணப் போகிறது. அதனுள் தான் கூற நினைக்கும் வேத வியாசங்களை புகுத்த இடமிருப்பதையும் உணர்கிறார். அடுத்த நொடியில் அவரது மனத்தறி பாரதத்தை பட்டு போல நெய்ய ஆரம்பித்து விடுகிறது. லட்சம் இழை வளர்ந்து ஒரு பட்டு வஸ்திரம் உருவாவது போல லட்சம் சுலோகங்களில் பாரத கதை தயார் ஆகிறது.

    பிறக்கும் போதே பெற்ற ஜாதக பலம் கை கொடுக்கிறது. பராசரர் எனும் ஞானி உலக நன்மை கருதி அன்று மேற்கொண்ட தாம்பத்திய சேர்க்கை இதோ

    Enjoying the preview?
    Page 1 of 1