Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Karugiya Kaditham
Karugiya Kaditham
Karugiya Kaditham
Ebook269 pages2 hours

Karugiya Kaditham

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

இஞ்சினீயர் சோமசுந்தரம்... அவர் மனைவி திருமணமான நான்காவது ஆண்டிலேயே இறந்துவிட்டார். அவருடைய மூத்த சகோதரர் பெயர் வரதராஜன். இளைய சகோரர் பெயர் புண்ணியகோடி. சகோதரியின் பெயர் வேதவல்லி. அவள் பையன் பெயர் சம்பத்... எல்லாரும் ஒரே பங்களாவில் தங்கி இருக்கிறார்கள். அனாதை குழந்தை கைலாசத்தை எடுத்து வளர்க்கிறார் இஞ்சினீயர். கைலாசம் இங்கிலாந்தில் படித்து பட்டம் பெற்று தனது தந்தையை பார்க்க செல்கிறான். கைலாசம் வீட்டிற்கு வந்த உடன் பெரிய விருந்து ஏற்பாடு செய்கிறார் இஞ்சினீயர். அந்த விருந்து முடிந்த உடன் இஞ்சினீயரை கொலை செய்ய காபியில் விஷம் கலந்து கொடுக்கிறார்கள். இஞ்சினீயர் இறந்தாரா? விஷம் கலந்தது யார்? படித்துப் பாருங்கள் தமிழ்வாணனின் நடையில்...
Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136606113
Karugiya Kaditham

Read more from Tamilvanan

Related to Karugiya Kaditham

Related ebooks

Related categories

Reviews for Karugiya Kaditham

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Karugiya Kaditham - Tamilvanan

    http://www.pustaka.co.in

    கருகிய கடிதம்

    Karugiya Kaditham

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    1

    மிதந்து செல்லும் மேகத்தை, மெல்லிய காற்று வருடியது. அந்த மாலை வேளையிலே, மங்கிய வெளிச்சத்திலே நீர் சுமந்த மேகத்தை வருடிவந்த வாடைக் காற்று, குளுகுளுவென்று இன்பமாக இருந்தது. இதமாக இருந்தது.

    பொழுது சென்றது.

    இருள் -

    திரையை விரித்தது.

    பட்டுத்துணியைப் பளிச்சென்று கிழித்ததைப் போல, வானத்திலே வரிகள் பல வரைந்தன மின்னல்கள். வாடிப்போன கொடிகளைப்போல கோடிட்ட மின்னல்கள், மறுபடியும் தோன்றவே இல்லை.

    பரவிவிட்ட இருளைப் பழித்தன பல விளக்குகள். ஒளிக்கதிர்களை ஓடவிட்டு, இரவைப் பகலாக்கும் முயற்சியில், விளக்குகள் வெற்றிபெறவில்லை. இமயத்தின் அடியிலே இறைந்து கிடக்கும் கற்களைப்போல, இரவின் மடியிலே சிந்திக் கிடந்தன சிறிய விளக்குகள்.

    ஆனால் -

    ஊருக்கு ஓவியமாய்த் திகழ்ந்த புகைவண்டிக்கூடம், ஒளி வெள்ளத்திலே மிதந்தது. கருங் கம்பளியிலே படிந்திருக்கும் பஞ்சுபோல, கருவானத்திலே கண்சிமிட்டிக் கருத்துக் கவரும் விண்மீனைப்போல, விளக்கொளி காட்டியது புகைவண்டிக் கூடம்.

    புகைவண்டிக் கூடத்தில் புகைவண்டிகள் பல நின்று கொண்டிருந்தன. இரண்டொரு வண்டிகள் புறப்படத் தயாராக இருந்தன. மக்கள் மடமடவென்று புகைவண்டிக் கூடத்திற்குள் புகுந்து கொண்டிருந்தார்கள். முன் விழிப்புடன் முன்பே வந்திருந்தவர்கள், அவரவர்களிடத்தில், புகைவண்டியிலிருந்து இறங்காமல் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். நல்ல இடத்தைப் பிடித்துவிட்டவர்கள், மன மகிழ்ச்சியுடன் மற்றவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். இடம் கிடைக்காதவர்கள் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்தார்கள். குழந்தைகள் அழுதன. கூலிகள், கூலிக் குறைவுக்காகக் கத்தினார்கள் - பலவிதமான கூச்சல்கள், கூக்குரல்கள் -

    வெளியே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள்கள், வந்து கொண்டிருக்கும் கார்களையெல்லாம் வரிசையாக நிறுத்திக் கொண்டிருந்தார்கள். இந்த வேளையில் -

    வெகு தூரத்தில், ஒரு கார், வேகமாக வந்துகொண்டிருந்தது. அந்தக் காரின் கண்கள் போன்ற விளக்குகள் எரியவில்லை. வெளியே மட்டுந்தான் விளக்கில்லையா? காருக்குள்ளும் விளக்கு இல்லை! காரிலிருக்கும் எந்த விளக்கும் எரியவில்லை! இதற்குக் காரணம் -

    காருக்குள் யார் யார் இருக்கிறார்கள், கார் யாருடைய கார், காரின் எண் என்ன என்பதை எவரும் அறியக்கூடாது என்பதைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

    கார், வேகமாக வந்தது. விளக்கில்லாமல் வேகமாக விரைந்து வந்த அந்தக் கார், புகைவண்டிக் கூடத்திற்கு அருகில் வந்தது. அந்தச் சமயத்திலும் -

    விளக்கு இல்லை!

    அந்தக் கார், விளக்கில்லாமலேயே வேகமாகப் புகைவண்டிக் கூடத்திற்குள் புகுந்தது.

    அப்பொழுது -

    அங்கே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள் கையைக் காண்பித்தான்.

    கார் நின்றது.

    கான்ஸ்டபிள், காருக்கு அருகில் வந்து, காருக்குள் எட்டிப் பார்த்தான். உள்ளே -

    டிரைவர் சீட்டில் ஒருவர் உட்கார்ந்திருந்தார். இருட்டில் அவர் முகம் சரியாகத் தெரியவில்லை. இருள் மறைத்தது.

    கான்ஸ்டபிள், அந்தக் காருக்குள் வேறு யாராவது இருக்கிறார்களா என்று பார்த்தான். காரின் பின் சீட்டில் -

    ஒருவர்!

    அவர் முகமும் தெரியவில்லை.

    இந்த இருவரைத் தவிர வேறு எவரும் இல்லை அந்தக் காருக்குள்.

    கான்ஸ்டபிள் கொஞ்ச நேரம் யோசித்தான். பிறகு, காரின் கதவில் கையை ஊன்றிக்கொண்டு டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த அந்த மனிதரைப் பார்த்து, என்ன ஸார், விளக்கே இல்லாமல் வருகிறீர்கள்? ஏன் ஸார் இப்படி அநியாயம் செய்கிறீர்கள்? என்று கேட்டான்.

    பதில் இல்லை!

    கான்ஸ்டபிள், கோபத்துடன் பேனாவையும் காகிதத்தையும் எடுத்துக்கொண்டு காருக்கு முன்னால் போய்க் காரின் எண்ணைப் பார்த்தான். இருட்டில் காரின் எண் சரியாகத் தெரியவில்லை. கான்ஸ்டபிள் மறுபடியும் வந்து, டிரைவர் சிட்டில் உட்கார்ந்திருந்த அந்த மனிதரைப் பார்த்து, காரின் எண் என்ன சொல்லுங்கள்? என்று கேட்டான்.

    பதில் இல்லை!

    காது செவிடா? காரின் எண் என்ன ஸார்? என்று கத்தி, கோபத்துடன் கேட்டான் கான்ஸ்டபிள்.

    பதில் இல்லை!

    கான்ஸ்டபிள் குழப்பத்தோடு அவர்கள் இருவரையும் மாறி மாறிப் பார்த்தான். இருளில் இருவருடைய அசையாத உருவங்கள் மட்டுந்தான் அவனுக்குத் தெரிந்தன!

    கான்ஸ்டபிள், சட்டென்று தன் கால்சட்டைப் பையில் வைத்திருந்த கை விளக்கை எடுத்து, முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் முகத்தில் அடித்துப் பார்த்தான்.

    விளக்கொளியில் அந்த முகம் நன்றாகத் தெரிந்தது அந்த முகத்திலிருந்த உதடுகள் மெல்ல விரிந்தன. இப்பொழுது -

    கான்ஸ்டபிள், ஓரடி பின்னால் எடுத்துவைத்து சல்யூட் அடித்தான்.

    அவர் சிரித்தார்.

    கார் நகர்ந்தது.

    கார், புகைவண்டிக் கூடத்திற்கு முன்னால் வந்து நின்றதும், முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் கையில் ஒரு தோல் பெட்டியுடன், காரை விட்டுக் கீழே இறங்கினார். அவர், காரை விட்டுக் கீழே இறங்கியதும் பின் சீட்டிலிருந்தவர், முன் சீட்டில் வந்து உட்கார்ந்துகொண்டு விளக்கை போட்டார். கார் நகர்ந்தது.

    கார் போனபிறகு, காரிலிருந்து இறங்கிய அந்தக் குள்ளமான மனிதர், சுற்றும் முற்றும் பார்த்தார். அங்கே நின்றுகொண்டிருந்த கான்ஸ்டபிள்கள் அவரைப் பார்த்தது சல்யூட் போடவில்லை! அவரை யாரும் கவனித்ததாகவே தெரியவில்லை! அந்த மனிதர் -

    குட்டையாக இருந்தார். நீண்ட கால்சட்டையும், சட்டையும் அணிந்திருந்தார். இடையில் பெல்ட் இருந்தது. கழுத்தில் நீண்ட மப்ளரைச் சுற்றிக்கொண்டிருந்தார். அவர் தலையில், அடர்த்தியாகவும் அதிகமாகவும் வளர்ந்திருந்த தலை மயிர், அவர் நெற்றியின் முக்கால் பாகத்தை மறைத்துக் கொண்டிருந்தது. அவர், மறுபடியும் ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு உள்ளே போனார். அப்பொழுது -

    டிக்கெட் வாங்குவதைப்போல் பாசாங்கு செய்துகொண்டு, அதுவரை, அவரையே அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்த ஓர் அரைக்கைச் சட்டைக்காரன், தோல் பெட்டியுடன் போய்க் கொண்டிருப்பவருக்குத் தெரியாமல் அவரைப் பின் தொடர்ந்தான். தன்னை, அவர் கவனித்து விடாமலிருப்பதற்காக, அந்த அரைக்கைச் சட்டைக்காரன் அங்கே போய்க்கொண்டிருந்தவர்களுக்குப் பின்னால் மறைந்து மறைந்து தோல் பெட்டிக்காரரைத் தொடர்ந்தான்.

    தோல்பெட்டிக்காரர், பெங்களூர் செல்லுப் புகை வண்டிக்குப் போய், ஒவ்வோர் இரண்டாம் வகுப்புப் பெட்டியிலும் தொங்கும் அட்டையை வரிசையாகப் பார்த்துக்கொண்டே வந்தார். இஞ்சினுக்கு, ஆறாவது இரண்டாம் வகுப்புப் பெட்டியில் தொங்கிய அட்டையில், 1. கைலாசம் - மாலூர். 2. பாண்டியன் - பெங்களூர் என்று இருந்தது.

    அந்தத் தோல்பெட்டிக்காரர் அந்தப் பெட்டிக்குள் ஏறி உள்ளே போய்ப் பார்த்தார். அந்தப் பெட்டியில் இரண்டு அறைகள் இருந்தன. அவர், ஒரு முறை அந்த இரண்டு அறைகளையும் பார்த்துவிட்டு, எதிரெதிராக இருந்த இரண்டு சீட்டுகளில் ஒரு சீட்டில் வந்து உட்கார்ந்தார்.

    வண்டி புறப்படுவதற்கு இன்னும் சில நிமிடங்கள்தாம் இருந்தன. அப்பொழுது, ஆங்கிலப் பாணியில் தடபுடலாக உடை அணிந்திருந்த இளைஞன் ஒருவன், தோல்பெட்டிக்காரர் ஏறியிருந்த பெட்டிக்கு ஓடிவந்து அந்தப் பெட்டியில் தொங்கிய அட்டையைப் பார்த்துவிட்டு, பின்னால் வந்த கைவண்டிக்காரனிடம், இந்தப் பெட்டிதானப்பா. சீக்கிரம் சாமான்களை ஏற்று... சீக்கிரம்... வண்டி புறப்படப் போகிறது என்றான்.

    கைவண்டிக்காரன், கொஞ்ச நேரத்திற்குள் சாமான்களையெல்லாம் அந்தப் பெட்டிக்குள் ஏற்றிவிட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு போய்விட்டான்.

    ஆங்கிலப் பாணியில் உடையணிந்திருந்த அந்த இளைஞன், வண்டிக்குள் ஏறிச் சாமான்களையெல்லாம் எண்ணிப் பார்க்க ஆரம்பித்தான்.

    இஞ்சின் ஊதியது.

    அப்பொழுது -

    அதுவரை, அந்தப் பெட்டிக்கருகிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்த அந்த அரைக்கைச் சட்டைக்காரன், ஓடிப்போய் வெகு தூரத்திலுள்ள ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டான்.

    புகைவண்டி, புறப்பட்டது.

    மெல்லப் புறப்பட்ட வண்டி, வேகம் எடுத்தது. கொஞ்ச நேரத்திற்குள் புகைவண்டிக்கூடம் மறைந்துவிட்டது.

    வண்டி, இருளைக் கிழித்துக்கொண்டு போயிற்று. போகப்போக அதன் வேகம் அதிகமாயிற்று.

    ஆங்கிலப் பாணியில் உடை அணிந்திருந்த அந்த இளைஞன், சாமான்களையெல்லாம் எண்ணி முடித்துவிட்டு கையில் ஒரு புத்தகத்துடன் தோல் பெட்டிக்காரர் உட்கார்ந்திருந்த சீட்டிற்கு எதிர் சீட்டில் வந்து உட்கார்ந்தான்.

    தோல் பெட்டிக்காரர், அந்த ஆங்கில உடை அணிதிருந்த இளைஞனைப் பார்த்து, வணக்கம். நீங்கள்தான் கைலாசமா? என்று கேட்டார்.

    ஆங்கில உடை அணிந்திருந்த இளைஞன், நான்தான் கைலாசம். உங்கள் பெயர்தான் பாண்டியனா? என்று கேட்டான்.

    ஆமாம், என் பெயர்தான் பாண்டியன் என்றார் தோல் பெட்டிக்காரர்.

    நீங்கள் பெங்களூர் போகிறீர்கள் போலிருக்கிறது என்றான் கைலாசம்.

    ஆமாம், நீங்கள் மாலூர் போகிறீர்கள் போலிருக்கிறது என்றார் பாண்டியன்.

    மாலூரில் இறங்கி, இன்பபுரம் போகவேண்டும் என்று சொல்லிவிட்டுக் கையிலிருந்த புத்தகத்தைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தான் கைலாசம்.

    கைலாசம் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்ததுப் பாண்டியன், சன்னல் பக்கமாகத் திரும்பி உட்கார்ந்துகொண்டு வெளியே தெரியும் இருளைப் பார்க்க ஆரம்பித்தார்.

    வண்டி, ஜோலார்பேட்டைச் சந்திப்பில் வந்து நின்றது. வண்டி நின்றதும், கைலாசமும் பாண்டியனும் இருந்த பெட்டிக்குள் ஓர் ஏழை எறினான். அவனுடைய வேட்டி. கந்தலாக இருந்தது. அவன் சட்டை கிழிந்து தொங்கியது. அவன் முகத்திலும் உடம்பிலும் கரி அப்பியிருந்தது. அவன் அந்தப் பெட்டிக்குள் ஏறுவதைப் பாண்டியன் தடுக்கவில்லை. கைலாசம் பார்க்கவில்லை.

    அந்த ஏழை பெட்டிக்குள் ஏறி, அடுத்த அறைக்குப் போய்விட்டான்.

    கடைசிப் பக்கத்தைப் படித்துக்கொண்டிருந்த கைலாசம், அதை முடித்துவிட்டுப் புத்தகத்தை மூடிவிட்டு, பாண்டியனைப் பார்த்து, நீங்கள் ஏதாவது சாப்பிடுகிறீர்களா? என்று கேட்டான்.

    நன்றி. ஒன்றும் வேண்டாம் என்றார் பாண்டியன்

    புத்தகத்தைப் படித்து முடித்துவிட்டேன். தூக்கமும் வரமாட்டேன் என்கிறது என்றான் கைலாசம்.

    பேசிக்கொண்டிருப்போமே என்றுதான் நான் பேச்சை ஆரம்பித்தேன். நீங்கள் அதற்கு இடம் கொடுக்காமல் புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்துவிட்டீர்கள் என்றார் பாண்டியன் சிரித்துக்கொண்டே.

    மன்னிக்க வேண்டும். இந்த நாவலில் வந்த சம்பவங்கள், என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் போலவே இருந்தன. எவரும் அறியாத ஏழை ஒருவன், ஏகப்பட்ட பணத்திற்குச் சொந்தக்காரனாகிறான். எதிர்பாராத அதிர்ஷ்டத்தால்! பணம் கிடைத்துவிட்டதே என்று அவன் படுத்துக்கிடக்காமல் படிக்கிறான். பரீட்கைகளில் தேறுகிறான். பட்டம் பெற இங்கிலாந்து செல்கிறான். நானும் இதே மாதிரித்தான் அனாதையாகக் கிடந்தேன். ஆதரித்தார் ஒருவர். பணக்காரனானேன். படித்தேன். பரீட்சைகளிலே தேறினேன். இங்கிலாந்து சென்றேன். படித்தேன், பட்டங்கள் பெற்றேன். இதோ திரும்பிக் கொண்டிருக்கிறேன்! இப்படி, என் வாழ்க்கையை நானே எழுதி நானே படிப்பதுபோல் இருந்தது இந்த நாவல். அதனால் அதில் ஆழ்ந்துவிட்டேன். வேறொன்றும் இல்லை. பேசிக்கொண்டே இருப்பது எனக்கு ரொம்பப் பிடித்த பழக்கமாயிற்றே என்றான் கைலாசம்.

    அடே! உங்கள் கதை, கேட்பதற்கு ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும்போலிருக்கிறதே! எங்கே சொல்லுங்கள் கேட்போம் என்று ஆவல் மிகுதியாக நேராக உட்கார்ந்துகொண்டார் பாண்டியன்.

    கதை இல்லை ஸார்... என் வாழ்க்கை... அப்படியே சுருக்கமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள் என்று, தன் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தான் கைலாசம்.

    என் அப்பாவையும் எனக்குத் தெரியாது. என் அம்மாவையும் எனக்குத் தெரியாது. பிறந்ததிலிருந்து என்னைப் பிச்சை எடுக்க விட்டுவிட்டார்கள் என் பெற்றோர்கள். பிச்சை எடுத்தேன். பிழைத்தேன்.

    என்னை ஒருவர் பார்த்தார். நான் சிவப்பாய் அழகாயிருக்கிறேன் என்று என்னை அவர் பாராட்டினார் ‘பாராட்டு’ பசியைத் தணிக்காது பெரியவரே, பணம் கொடுங்கள் என்றேன் நான். ‘பசி தினசரி உணவாகும். தினசரி உன்னை நான் எங்கே போய்த் தேடுவேன்? என் வீட்டுக்கு வா. என் பிள்ளையய் இரு’ என்றார் அவர். அவர் கண் கலங்கியது. அவர் காரில் எறினேன் வாழ்க்கை ஏணியில் ஏறினேன்.

    என்னை எடுத்து வளர்க்கும் என் அப்பா, பெரிய பணக்காரர். அவர் பரம்பரைப் பணக்காரர் அல்லர். அவரிடம் இருக்கும் பணம் அவ்வளவும் அவர் உழைத்துச் சேர்த்த பணம், அவர் ஒரு பெரிய இஞ்சினீயர். அழகான இஷ்டப்படி, திட்டப்படி உறுதியான வீடுகளைக் கட்டுவதில் அவருக்கு இணை எவருமே இல்லை.

    அவர் மனைவி திருமணமான நான்காவது ஆண்டிலேயே இறந்துவிட்டார். அதற்குப் பிறகு அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. என்னை வளர்ப்பதிலேயே அவர், தன் நேரத்தைக் கழித்தார்.

    இப்பொழுது நான் பெரியவனாகிவிட்டேன் படித்துப் பட்டம் பெற்று இங்கிலாந்திலிருந்து திரும்பிச் செல்லுகிறேன். என்னைக் கண்டதும் அவர் என்னைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விடுவார். அவர்தான் எனக்கு எல்லாம் - கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மறுபடியும் சொல்ல ஆரம்பித்தான்:

    என்னை வளர்த்துக் கொண்டிருக்கும் என் அப்பாவுக்கு இரண்டு சகோதரர்கள். ஒரு சகோதரிக்கு ஒரு பையன்.

    என் அப்பா இஞ்சினீயர். பெயர் சோமசுந்தரம். அவருடைய மூத்த சகோதரர் பெயர் வரதராஜன். இளைய சகோரர் பெயர் புண்ணியகோடி. சகோதரியின் பெயர் வேதவல்லி. அவள் பையன் பெயர் சம்பத். இவர்கள் எல்லோரும் என் மேல் உயிரையே வைத்திருக்கிறார்கள்..." - இன்னும் அவன் மேலே சொல்லப்போகும் பொழுது அவன் தோளில் யாரோ கையை வைத்தார்கள். கைலாசம் நிமிர்ந்து பார்த்தான்.

    அடுத்த அறையில் இருந்த ஏழை அவன்! அந்த ஏழை, கைலாசத்தைப் பார்த்து, உங்களிடம் தனியாக ஐந்து நிமிஷம் பேசவேண்டும். அடுத்த அறைக்கு வருகிறீர்களா? என்றான்.

    கைலாசம், ஓ... வருகிறேனே என்று எழுந்தான்.

    இருவரும் அடுத்த அறைக்குள் நுழைந்தார்கள்.

    இருவரும் அடுத்த அறைக்குள் நுழைந்தவுடன் கொஞ்ச நேரம் கழித்து, ‘ஸார்’, ‘ஸார்’ என்று கத்தும் சத்தம் வந்தது.

    பாண்டியன், சடாரென்று பக்கத்துச் சன்னல்கள் வழியாகத் தலையை நீட்டிப் பார்த்தார்.

    அப்பொழுது -

    அடுத்த அறையிலிருந்து திறந்த கதவின் வழியாக அந்த ஏழை, தலை குப்புற வெளியே விழுந்து கொண்டிருந்தது தெரிந்தது!

    பாண்டியன் பளிச்சென்று அடுத்த அறைக்குப் பாய்ந்தார்.

    அடுத்த அறையில் -

    என்ன செய்வதென்று ஒன்றும் தெரியாமல் திகைத்துக் கொண்டிருந்த கைலாசம், பாண்டியனைப் பார்த்ததும் பதறிப் போய் ஸார்... ஸார் அந்த ஏழை வெளியே குதித்து விட்டான்! என்றான்.

    ஏன்? ஏன்? எதற்காகக் குதித்தான்? என்று கேட்டுக் கொண்டே பாய்ந்துபோய் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுக்கப்போனார் பாண்டியன்.

    வேண்டாம் ஸார்... வேண்டாம்... வேண்டாம். என்று கத்திக்கொண்டே, பாண்டியன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டான் கைலாசம்.

    "ஏன்?

    Enjoying the preview?
    Page 1 of 1