Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Cairovil Tamilvanan
Cairovil Tamilvanan
Cairovil Tamilvanan
Ebook131 pages1 hour

Cairovil Tamilvanan

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

தமிழ்வாணன் துப்பறியும் பணிக்காக கெய்ரோ வரவழைக்கப்படுகிறார். இவர் தேடி செல்லும் அனைவரும், இவர் செல்வதற்கு முன்பே ஒரே பாணியில் கொலை செய்யப் படுகின்றனர்.

யார் இவர்களை கொலை செய்கின்றனர்? எதற்காக இந்த துப்பறியும் பணியில் யாரால் அமர்த்தப்பட்டார் என்பதையெல்லாம் தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில் படிக்கலாம்.

Languageதமிழ்
Release dateOct 7, 2020
ISBN6580136605906
Cairovil Tamilvanan

Read more from Tamilvanan

Related to Cairovil Tamilvanan

Related ebooks

Reviews for Cairovil Tamilvanan

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Cairovil Tamilvanan - Tamilvanan

    http://www.pustaka.co.in

    கெய்ரோவில் தமிழ்வாணன்

    Cairovil Tamilvanan

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    1

    நியூயார்க் நகரில் ஒரு நாள்.

    ப்ளாஸா ஓட்டலில் தமிழ்வாணன் தங்கியிருந்தார். ப்ளாஸா ஓட்டலின் பன்னிரண்டாவது மாடியில் இருந்தார். தம் அறையில் உட்கார்ந்திருந்தார். குளுக்கோஸ் மாத்திரை ஒன்றை வாயில் போட்டுக்கொண்டார். சன்னல் வழியாகப் பார்த்தார்.

    வானைத் தொட முயன்ற ஸ்கை ஸ்கிரேப்பர்கள் இரவில் விளக்குகளின் ஒளியுடன் திகழ்ந்தன. பார்ப்பதற்கு அழகாய் இருந்தன. உலகத்தில் வேறு எங்கேயும் நியூயார்க்கைப் போன்ற வான் உயர்ந்த நகரம் இல்லை. குறுகிய இடத்திலும் மனிதன் உயர்ந்து வாழ முடியும். இதை நியூயார்கவாழ் மக்கள், உறுதிப்படுத்திக்கொண்டிருந்தார்கள். நியூயார்க் நகரம், வண்ண விளக்குகளின் ஒளியில் பகலைவிட இரவில் பளிச்சிட்டது. அழகாக இருந்தது!

    தமிழ்வாணன், தம் கடிகாரத்தைப் பார்த்தார். மணி எட்டு. இன்னும் அரைமணி நேரத்தில் அவர் வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலுக்குப் போக வேண்டும். அங்கே ஒருவரைக் காண வேண்டும்.

    தமிழ்வாணன் நியூயார்க் நகரின் அழகைச் சுவைத்தார். அவர் வாயில் இருந்த குளுக்கோஸ் மாத்திரை மெல்லக் கரைந்து கொண்டிருந்தது. சிந்தனையுள் ஆழ்ந்தார். அவர் சிந்தனை, பின் நோக்கிச் சென்றது.

    அவர் அன்று பிற்பகல்தான் ஜெட் விமானத்தில் ஹானலூலுவிலிருந்து நியூயார்க் திரும்பி வந்திருந்தார். ஹானலுாலுவில் மிகப் பெரிய பாங்க் கொள்ளையைத் தடுத்து நிறுத்திய பிறகு, அவரைப் பற்றிய செய்திகள் உலகம் முழுவதும் பரவின. துப்பறியும் நிபுணர் தமிழ்வாணனின் திறமையைப் பற்றியும் டெலிவிஷன்காரர்களும் பத்திரிகைக்காரர்களும் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.

    அதன் விளைவாக,

    அவருக்கு மிகுந்த புகழும் பாராட்டுகளும் வந்து குவிந்தன.

    அதே நேரத்தில், உலகத்தின் மாபெரும் ஆற்றல் மிகுந்த கொள்ளைக்காரர்கள், அவரை அச்சுறுத்திச் செய்திகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அப்படி அவரை அச்சுறுத்தியவர்கள், தங்களுடைய உண்மையான பெயரையும் முகவரியையும் தெரிவிக்கவில்லை. மொட்டைக் கடிதங்கள்!

    தமிழ்வாணனுக்குப் புகழ்பெற்ற துப்பறியும் மேதை சங்கர்லாலிடமிருந்தும் அவர் மனைவி இந்திராவிடமிருந்தும் பாராட்டும் வாழ்த்தும் வந்தன. அத்துடன் சங்கர்லால், தமிழ்வாணனுக்கு மறைபொருள் மின்செய்தி ஒன்றையும் கொடுத்திருந்தார். மறைபொருள் மின்செய்தி என்றால், அதில் ஏதோ பொருள் இருக்கிறது, மர்மம் இருக்கிறது!

    தமிழ்வாணன், சங்கர்லால் கொடுத்திருந்த மின்செய்தியைப் பார்த்தார். படித்தார். அந்த மின் செய்தியைப் படித்துப் பார்த்தால் உலகத்தில் எவருக்கும் எதுவும் விளங்காது. தமிழ்வாணனுக்கும் சங்கர்லாலுக்கும் மட்டுமே மின்செய்தியின் பொருள் விளங்கும். ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு வேறுபட்ட மாறுபட்ட பொருள் உண்டு. அந்தப் பொருள் என்ன என்பது இருவருக்கும் மட்டுமே தெரியும். புரியும். தமிழ்வாணன், தனிமையில் உட்கார்ந்து மின்செய்தியில் வந்த செய்தி என்ன என்பதைக் கண்டு பிடித்தார்.

    தமிழ்வாணனை உடனே நியூயார்க் நகருக்குப் போகும் படியும் மின்செய்தி கிடைத்த தினத்தன்றே இரவு எட்டரை மணிக்கு நியூயார்க் நகரிலே, வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலில் பத்தாவது மாடியில் 345 ஆவது அறையில் தங்கும் படியும், அதன் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்கே தெரியும் என்றும், சங்கர்லால் அந்த மின்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

    ஹாவாயில் இன்னும் பல நாள்கள் தங்க வேண்டும், ஓய்வு கொள்ள வேண்டும் என்று முடிவு கொண்டிருந்த தமிழ்வாணன், உடனே முதல் விமானத்தில் புறப்பட்டு விட்டார்.

    நியூயார்க்குக்கு அவர் வந்தார். வந்ததும், கென்னடி விமான நிலையத்திலிருந்து அவர் ஓசையின்றி நழுவ எண்ணினார். ஆனால், அவரை அடையாளம் கண்டு கொண்ட பலர், அவரைச் சூழ்ந்து கொண்டார்கள். ஆண்களும் பெண்களும் சிறுபிள்ளைகளும் கூட ஓடிவந்து அவர் கையைப் பிடித்துக் குலுக்கினார்கள். ஆட்டோகிராஃபில் கையெழுத்து வாங்கிக் கொண்டார்கள்.

    தமிழ்வாணன், சிரித்துக் கொண்டே கூட்டத்தில் இருந்து நழுவினார். நழுவி ஒரு வாடகைக் காரில் தாவினார். தாவி உட்கார்ந்து கொண்டு ப்ளாஸா ஓட்டலுக்குச் செல்லும்படி சொன்னார்.

    அவர், ஹானலூலுவிலிருந்து புறப்பட்ட போதே ப்ளாஸா ஓட்டலுக்கு மின்செய்தி கொடுத்திருந்தார். அதனால் அவருக்கு ஓர் அறை பதிவு செய்யப்பட்டிருந்தது. அங்கே வந்து இறங்கினார். இறங்கியதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டார். வெந்நீரில் குளித்தார். பிறகு சலவை செய்த புதிய உடைகளை அணிந்து கொண்டார். கொஞ்சம் உட்கார்ந்தார். உட்கார்ந்து சன்னல் பக்கம் பார்த்தார். பார்த்தபடி சிந்தனையுள் ஆழ்ந்தார்.

    அவர் தலையிலே டோக்கியோவில் வாங்கிய தொப்பி. கழுத்திலே இலண்டனில் வாங்கிய ஸ்கார்ஃப். உடலிலே பம்பாயில் வாங்கிய டெர்லின் சட்டை டெர்லின் கால் சட்டை கால்களிலே பாட்டா ஷூக்கள். கண்களிலே சிங்கப்பூரில் வாங்கிய கறுப்புக் கண்ணாடி.

    அவர், கடிகாரத்தைப் பார்த்தார். மணி 8.10.

    அவர் எழுந்தார். மெல்ல எழுந்தார். அறைக்கதவைச் சாத்தினார். வெளியில் வந்தார். நடந்தார்.

    லிஃப்டுகள் இறங்கும் இடத்திற்கு வந்தார். நின்றார். விரைந்து செல்லும் லிஃப்டுகள் அந்த ஓட்டலில் இருந்தன. விரைந்து செல்லும் லிஃப்டுகள், வழியில் எங்கேயும் நிற்காமல் நேராகக் கீழே இறங்கும். இதே போல், கீழே உள்ளவர்கள் அதில் ஏறினால் நேராக மேலே எந்த மாடிக்குப் போக வேண்டுமோ, அந்த மாடியில் மட்டும் நிற்கும்.

    சில விநாடிகள். லிஃப்ட் கீழே இறங்கியது.

    ஓட்டலின் வாயிலில் அவர் வந்து நின்றார். ஓட்டல் வாயிலில் நின்ற பணியாள் ஒருவன் வந்து பணிவுடன் வாடகைக் கார் வேண்டுமா? என்று கேட்டான்.

    ஆமாம் என்றார் தமிழ்வாணன்.

    அவன், உடனே சாடை காட்டினான். ஒரு புறத்தில் வரிசையாக நின்று கொண்டிருந்த வாடகைக் கார்களில் ஒன்று வந்தது. நின்றது. கப்பலைப் போன்ற பெரிய கார்!

    பணியாள் கதவைத் திறந்தான். தமிழ்வாணன் ஏறியதும் கதவை மூடினான். தமிழ்வாணன், அவனிடம் இரு டாலர் நோட்டை நீட்டினார். அவன் பற்கள் வெளியே தெரிந்தன!

    வாடகைக் கார், வால்டார்ஃப் அஸ்டோரியா ஓட்டலை அடைந்தது. மணி 8.25.

    வால்டார்ஃப் அஸ்டாரியா ஓட்டல் மிகவும் பெரியது. ஆரவாரமானது. பெரும் பணக்காரர்களும் மன்னர்களும் வந்து தங்கும் ஓட்டல். அரபு நாடுகளில் வாழும் பெரும் பணக்காரர்கள் வந்து தங்கும் ஓட்டல்.

    தமிழ்வாணன், ஓட்டல் கூடத்தை அடைந்தார். மிகுந்த பேர்கள்

    Enjoying the preview?
    Page 1 of 1