Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Simla Beauty
Simla Beauty
Simla Beauty
Ebook241 pages1 hour

Simla Beauty

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நண்பனின் வீட்டில் தங்கி வளரும் கதையின் நாயகன் அறிவாளன். நண்பனின் தங்கை மைவிழி அறிவாளனை காதலிக்கிறாள். இதற்கு இடையில் ஏரழகியும் அறிவாளனும் காதல் வயப்படுகிறார்கள். ஏரழகியோ மாமாவின் ஆதரவில் வளரும் ஒரு பணக்கார பெண். ஏரழகியை மணமுடிக்கும் எண்ணத்தில் ஏரழகியின் மாமாவை சந்திக்கிறான் அறிவாளன். ஏரழகிக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன? அவளின் மாமா அறிவாளனுக்கு விதிக்கும் விதிமுறைகள் என்ன என்ன? அதில் வென்று ஏரழகியை கரம் பிடித்தானா? திடீரென்று அறிவாளன் சிம்லாவிற்கு செல்லும் காரணம் என்ன? கடைசியில் மைவிழியின் காதல் ஆசை என்னவாயிற்று? என்னும் பல சுவாரசியங்கள் நிறைந்த இக்கதையை தமிழ்வாணனுக்கே உரிய நடையில் வாசியுங்கள்.

Languageதமிழ்
Release dateJan 4, 2021
ISBN6580136605900
Simla Beauty

Read more from Tamilvanan

Related to Simla Beauty

Related ebooks

Reviews for Simla Beauty

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Simla Beauty - Tamilvanan

    http://www.pustaka.co.in

    சிம்லாவில் கண்ட அழகி

    Simla Beauty

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    1

    அந்தப் பஸ் நிற்குமிடத்திலே ஏரழகி எழில் குலுங்க நின்றுகொண்டிருந்தாள். அவள் உள்ளம் எதிரே இருந்த கடல் அலைகளுடன் போட்டியிடுவதுபோல் எழும்பியது. அவளது மருண்ட விழிகளில் ஒருவிதப் பரபரப்பு நிறைந்த பார்வை நிறைந்து நின்றது.

    அவள் கைகளில் புத்தகங்கள் சரிவர அடுக்கப்படாமல் ஒழுங்கின்றிக் குலைந்து குவிந்து கிடந்தன. ஏதோ ஒன்றை எதிர்பார்த்து அல்லது எவரையோ ஒருவரைப் பார்க்கத் துடிக்கும் ஆவலுடன் வந்தவள்போல அவள் காணப்பட்டாள்.

    நின்றவள் நின்றாள், அவளது பொன்னுடலும் புழுங்கிய உள்ளமும் எதையோ, எவரிடமோ சொல்லத் துடித்த அவள் உதடுகளும் -

    நின்றவள் இன்னும் நின்றாள். நின்றவளை விழுங்கி விடுவதுபோலக் கடற்கரைச் சாலையில் விரைந்தும் ஊர்ந்தும் சென்ற கார்களில் உள்ளோர் பார்த்தனர்.

    அழகுப் பெண்ணொருத்தி தன்னந்தனியாகப் பஸ் நிலையத்தில், மங்கும் மாலையிலே நின்றால் ஆயிரமாயிரம் விழிகளுக்கு அலுவல் இருக்காதா?

    ஏரழகியின் ஏங்கும் விழிகளிலே சில விநாடிகளுக்குப் பிறகு புது உற்சாகமும் ஊறியது.

    அவளுக்கு அருகே வந்து நின்றது ஒரு லாம்பரட்டா வாகனம். அதிலிருந்து ஓர் இளைஞன் தாவி இறங்கினான்.

    இறங்கியவன், ஏரழகி, என்னிடம் உனக்குத் துன்பமா? உன் முகம் சொல்லுகிறதே, உனக்கு முன்னால் ஆமாம் என்று! நான் சரியான நேரத்தில்தான் புறப்பட்டு வந்தேன். வரும் வழியில் நண்பர் படை ஒன்று என்னைச் சுற்றிக்கொண்டுவிட்டது! அவர்களிடமிருந்து தப்பி வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது! என்று உருக்கமும் துன்பமும் கலந்து பொழிந்து கொண்டே மெல்லத் தன் கைக்குட்டையினால் நெற்றியில் வழிந்து வந்த வியர்வையைத் துடைத்துக்கொண்டான்.

    விரைவாக லாம்பரட்டாவில் வந்ததனால் அவனுடைய அழகிய கிராப்புமயிர் கலைந்து குலைந்து கிடந்ததைச் சரிசெய்து அமுக்கிவிட்டுக் கொண்டான். ஏரழகி -

    விழிகளைத் தாழ்த்தி ஒருவிதச் சிறு சீற்றத்துடன், நண்பர் படை உங்களைச் சுற்றிக்கொண்டால் அவர்களுடனேயே போய்விடுவதுதானே? இவ்வளவு பாடுபட்டு என்னைப் பார்க்க நீங்கள் வருவானேன்! என்றாள். இப்படிச் சொல்லிவிட்டு அவள் அவனைத் தன் அடிக்கண்களினால் மெல்லப் பார்த்தாள்!

    அவன் ஏரழகி என்றான். பிறகு சொன்னான்: ஒருநாள் பதினைந்து நிமிடங்கள் எனக்காக உன்னால் காத்திருக்க முடியவில்லையே. சரித்திரப் புகழ்பெற்ற காதலிகள், தங்களுடைய காதலர்களுக்காக எத்தனை ஆண்டுகள் காத்திருந்து எத்தனை எத்தனை இன்னல்களை அடைந்திருக்கிறார்கள் தெரியுமா? படித்திருப்பாயே பாடப்புத்தகங்களில் நீ! என்றான்.

    அவள் களுக்கொலியோடு சொன்னாள்: ஆமாம். அவர்கள் எல்லாம் காத்துத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்படிக் கால் கடுக்கக் கைகள் நிறையப் பாடப் புத்தகங்களைச் சுமந்துகொண்டு பஸ் நிலையத்துக்கு அருகில் நின்றிருக்க மாட்டார்கள்!

    வந்தவனும் வாய் நிறையச் சிரித்துவிட்டான். பிறகு - சிரிப்புக்குப் பிறகு பொய்ச் சினத்துக்கு ஏது இடம்?

    இருவரும் மெல்ல நடந்து எதிரே இருந்த கடற்கரை மணலை நோக்கி நடந்தார்கள்.

    அந்த இளைஞனுடைய பெயர் அறிவாளன். அறிவோடு அழகும் சேர்ந்திருந்தது அவனுக்கு. சென்னை அரசினர் கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் பயின்று வந்தான்.

    ஏரழகி குவின்ஸ்மேரி மகளிர் கல்லூரியில் அதே வகுப்பில் படித்துவரும் மாணவி. இருவரும் ஓர் ஆண்டுக்கு முன்னால் மாணவர்மன்றப் பேச்சுப்போட்டியில் கண்டுகொண்டார்கள். அந்த முதல் காண்டல் -

    வாழ்க்கையில் மறக்க முடியாததாகி விட்டது. பிறகு ஒரு நாள் அந்தப் பஸ் நிலையத்தில் ஏரழகியும் அறிவாளனும் கண்டு கொண்டபோது அங்கே வியப்புக்குரிய அமைதி பிறந்தது. உணர்வினால் மூடப்பட்ட உள்ளங்கள், உற்சாகத்தினால் பேச்சற்றுப்போயின. உள்ளக் கதவிலே அன்பு என்ற தென்றல் மோதியது. பிறகு, பிறகு, பிறகு -

    கல்லூரிவிட்ட பிறகு இருவரும் கண்டு பேசிக் கொள்ளாத நாள்கள் இல!

    2

    இருவரும் கடற்கரை மணலில் மண்டியிட்டமர்ந்தனர். மாலைக் கதிரவனின் பொன்னொளி கடலில் இறங்கிக் கொண்டிருந்தது. மணலைக் கைகளினால் அளைந்துகொண்டே ஏரழகி தன் மென்னுதடுகளைத் திறந்தாள். நாளைக் காலையில் மாமா ஊரிலிருந்து வருகிறார்! கடிதம் வந்திருக்கிறது.

    மாமாவா? என்று கேட்டான் அறிவாளன்.

    ஆமாம், முன்புகூட அவரைப்பற்றி உங்களிடம் நான் சொல்லியிருக்கிறேன். அவரது ஆதரவில்தான் கல்லூரியில் நான் பயின்று வருகிறேன். பெரும் செல்வர். என்னிடம் அளவற்ற அன்பு கொண்டவர். அடிக்கடி இந்தியா முழுவதும் வர்த்தகத் தொடர்பாகச் சுற்றுப்பயணம் செய்து கொண்டேயிருப்பார். கல்கத்தாவிலிருந்து விமானமேறி நாளைக் காலையில் அவர் வர இருக்கிறார்!

    அப்படியானால் நீ விமான நிலையத்துக்குப் போக வேண்டும் என்கிறாயா? போ. நான் வேண்டாம் என்றா மறுக்கப் போகிறேன். மாலையில் மட்டும் மறக்காமல் இதே இடத்துக்கு வந்துவிடு! என்றான் அறிவாளன் சிறிது சிரித்துக்கொண்டு!

    எங்கள் மாமாவைப்பற்றி உங்களுக்குத் தெரியாது. அவர் ஒருவிதம். கண்டிப்பு மிகுந்தவர். நான் மீனம்பாக்கத்துக்குச் சென்று வரவேற்கப்போனால், இங்கே உன்னை யார் வரச்சொன்னது என்று சீறினாலும் சீறுவார். ஆனால்...

    என்ன ஏரழகி?

    மாமா இங்கு வந்தவுடன் ஒரு சிறந்த ஓட்டலில் அறை எடுத்துத் தங்குவார். நான் இருக்குமிடத்துக்கெல்லாம் வந்து இருக்க அவருக்கு விருப்பம் இராது. ஏனெனில் அவர் எங்கு போனாலும் அவர் பின்னோடு பெரியமனிதத்தனம் வந்து கொண்டேயிருக்கும்! எனவே, அவர் ஓட்டலில் வந்து தங்கிய பிறகு திடீரென்று எனக்குத் தொலைபேசியில் செய்தி வரும். பிறகுதான் அவரைப் பார்க்க நான் போகவேண்டும்!

    ஓகோ! உன் மாமாவின் பழக்க வழக்கங்கள் மிகவும் வேடிக்கையாக இருக்கும்போல இருக்கிறதே!

    வேடிக்கையா? பேச்சு, தோற்றம், உடை, உள்ளம் எல்லாமே அப்படித்தான்! அவரை முதலில் நான் பார்த்துவிட்டு வந்தபிறகு நீங்களும் பார்ப்பது நலம். ஏனெனில், எனக்கு விரைவில் திருமணம் முடிக்கும் கருத்தோடு தான் இந்தத் தடவை அவர் சென்னைக்கு வருகிறார். இதை எப்படியாவது தங்களிடம் இன்று சொல்லிவிட்டுப் போகவேண்டும் என்றுதான் இத்தனை நேரம் தவித்துக் கொண்டிருந்தேன்! என்றாள் ஏரழகி.

    அவளுடைய குரலில் திடீரென்று துன்பக் கொண்டல்கள் குடிகொண்டன. அதைக்கண்ட அறிவாளன் சட்டென்று, உன் மாமாவின் கண்டிப்பு நம்மைப் பிரித்துவிடும் என்று அஞ்சுகிறாயா ஏரழகி? அவரைப் பார்க்கும்படி சொல்லுகிறாயே, திடீரென்று அவருக்கு முன்னால் சென்று, 'என் பெயர் அறிவாளன். உங்களுடைய மருமகள் ஏரழகியை மனமாரக் காதலிக்கும் கல்லூரிக் காளை நான்தான்! என்ன சொல்லுகிறீர்கள்?' என்று கேட்கச் சொல்லுகிறாயா? என்று அவன் கேட்டான்.

    அப்படிச் சொல்லவேண்டாம். அதற்கு முன்னால் நானே அவரிடம் எல்லாவற்றையும் கூறிவிடப்போகிறேன். நீங்கள் அவரை எப்போது எப்படிப் பார்க்கவேண்டும், என்ன பேசவேண்டும் என்றெல்லாம் நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அதற்குப் பிறகு அவரை நீங்கள் பார்த்தால் போதும்! என்றாள் ஏரழகி.

    சற்றுச் சிந்தித்து, சரி என்றான் அறிவாளன்.

    இருட்டு சுருட்டிக்கொண்டு வந்தது. இருவரும் எழுந்தனர். கைமணலைத் தட்டியபடி அறிவாளன் நடந்து கொண்டே சொன்னான்: உன்னுடைய மாமா ஒரு வேளை...

    அவனுக்கு அருகில் முதுகில் சிறிது மோதியபடி நடந்து வந்த ஏரழகி, அவன் சொல்லிமுடிப்பதற்குள், என் மாமா சில கதைகளில் வருகிற இளங்காதலர்களுக்குக் கத்தரி போடுகிற மாமாக்களையோ, அப்பாக்களையோபோல அல்லர். அவர் வியப்புக்குரிய பெரிய மனிதர். என் வாழ்வில் விருப்பம் மிகக் கொண்டவர். என்னுடைய கண்கள் கலங்கச் சிறிதும் விருப்பமற்றவர். அதனால்தான் சொன்னேன், அவரைப் பாருங்கள் என்று! என்றாள் ஏரழகி.

    ஏரழகி, கல்லூரி மாணவிகளைக் காதலிக்கிற மாணவர்களின் சரித்திரத்துக்கு ஒரு புதுத் திருப்பம் ஏற்படும் போல இருக்கிறது! எதற்கும் அவரைப் பார்க்கிறேன்.

    எதற்குமா? அவரைக் கட்டாயம் நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்!

    சரி, உனக்காகச் சரி!

    மணலைக் கடந்து, காதலர் பாதையைத் தாண்டி இருவரும் தார்ச்சாலையை அடைந்தனர். அறிவாளன் லாம்பராட்டாவில் அமர்ந்து அதை வலுவாக உதைத்தபடியே, ஏரழகியைப் பார்த்தான். அவள் -

    அவள், தன் கையை அழகுற அசைத்து விடைபெற்றாள். பிறகு விறுவிறுவென்று நடந்து பழைய பஸ் நிற்குமிடத்திலே வந்து நின்றாள்.

    3

    ஓட்டல் ஓஷியானிக்கில் அன்று மாலை மணி 5.10 ஆயிற்று. அறிவாளன் அடக்க ஒடுக்கமாக ஓர் அறைக்குள் நுழைந்தான். ஏதோ செய்யக்கூடாத குற்றம் ஒன்றைச் செய்து விட்டு, அதற்குரிய தண்டனையை எதிர்பார்த்துத் தலைமையாசிரியரின் அறைக்குள் நுழைந்து செல்லும் பள்ளி மாணவனைப் போல அவன் ஒருவித நடுக்கத்துடன் சென்றான்!

    அறைக்குள் கட்டில் ஒன்றில் இரட்டைநாடி உடலில் ஏரழகியின் மாமா எம்பெருமாள் உட்கார்ந்திருந்தார். அவரது பருத்த உடல், பளபளத்த சட்டை, அதற்குள் தூது சென்ற தங்கக் கடிகாரச் சங்கிலி, விரல்களில் இனி இடமில்லை என்று சொல்லுகிற அளவுக்குப் பல வைர மோதிரங்கள் இப்படியாக அமர்ந்திருந்த எம்பெருமாள் அறைக்கதவைத் திறந்துகொண்டு தம் முன்னால் வந்து நின்ற அறிவாளனை ஊடுருவி நோக்கினார்.

    உன் பெயர்தான் அறிவாளனா? என்று எடுப்பான குரலில் எம்பெருமாள் அவனைக் கேட்டார். அந்தக் குரலில் இருந்த அழுத்தம் அறிவாளனை மிரளச்செய்தது! அவன் -

    'உன் பெயர்தான் அறிவாளனா?' என்று எம்பெருமாள் கேட்டதும் அவன் சற்று நிலைகுலைந்து நின்றான். ஏரழகி ஏற்கெனவே அவரைப்பற்றிச் சொன்னவை அறிவாளனுக்கு நினைவுக்கு வந்தன. அவர் அவனைச் சற்றுகூடப் பொருட்படுத்தவில்லை. அவர் அவன் பெயரைக் கேட்ட முறை

    நீதிமன்றத்திலே தலைவர், குற்றவாளி ஒருவனை விசாரிப்பதைப் போலிருந்தது.

    குனிந்த தலைக்குக் கீழே பதிந்திருந்த வாய் அது அறிவாளனுக்கு உடைமை. சிறிது சிரித்து ஆமாம் என்ற பதிலை விடுத்தது.

    எம்பெருமாள் அவனை அன்போடு நோக்கவில்லை. உட்கார் என்றுகூட உரைக்கவில்லையே! வகையாகப் பணம் சேர்ந்து அத்துடன் பெரிய மனிதத்தனமும் சேர்ந்துவிட்டால் பண்பாடு இப்படித்தானா பறிபோகும்! ஒருகணம் -

    அறிவாளன் நினைத்தான். நினைப்பு வேதனையை நெஞ்சிலே நிரப்ப முயன்றதும் அவன் விருட்டென்று அந்த ஓட்டல் அறையைவிட்டு வெளியேறிவிடுவோமா என்று ஒரு கணம் -

    நினைத்தான்.

    ஆனால் ஏரழகியிடம் அவனுக்கு மண்டிக்கிடந்த அன்பு அவனது கொதிப்பை, படபடப்பைக் குறைத்தது. அவள் தான், தன்னுடைய மாமா ஒரு தனிவிதம் என்று கூறிவிட்டாளே!

    அறிவாளன் சற்று நின்று அடிக்கண்களினால் எம்பெருமாளை ஊடுருவினான். அதற்குள் அவர், மூன்றாவது தலையணையை இழுத்துத் துடைகளுக்குக் குறுக்கே திணித்துக் கொண்டே, அறிவாளன், நீ வந்து ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஆயிற்று. இன்னும் நின்றுகொண்டேயிருக்கிறாயே! கல்லூரிப் பழக்கம் ஓட்டல் வரையிலுமா? என்று சிரிப்பையும் சேர்த்துப் பேசினார். பிறகு, உட்காரு தம்பி, நீ வந்தவுடன் ஒரு நாற்காலியில் உட்கார வேண்டியதுதானே! இங்கே நாற்காலிகளெல்லாம் எதற்காகக் கிடக்கின்றன? என்று தொடர்ந்து பேசினார் எம்பெருமாள்.

    மாமா ஒரு தனி மனிதர் என்பது உண்மைதான் என்ற எண்ணத்தோடு அறிவாளன் நாற்காலியில் மெல்ல உட்கார்ந்தான். மேசை மீது இருந்த அழகிய புதுமுறைக் கடிகாரம் ஒன்று, தன் பெருமையைப் பளபளப்புடன் காட்டிக்கொண்டு டிக்டிக்கென்று ஓடிக்கொண்டேயிருந்தது.

    அதற்குப் பிறகு எம்பெருமாள் மணியைத் தட்டிப் பணியாளை வரவழைத்தது; தனக்கு மட்டும் ஓவல் வரவழைத்துப் பருகியது; பருகிவிட்டுச் சும்மா இராமல், உனக்கு என்ன வேண்டும் என்று நான் கேட்கமாட்டேன். வேண்டியதை வஞ்சனையில்லாமல் வரவழைத்து என் செலவில் நீ சாப்பிட வேண்டியதுதான்! என்று தன்னைப் பார்த்துச் சொன்னது இவை எல்லாம் அறிவாளனுக்கு வேடிக்கையாக இருந்தன!

    'ஏரழகி, உன் மாமாவின் ஒவ்வொரு செயலும் வியப்புக்குரியதாக இருக்கிறது. இப்படிப்பட்டவரிடம் திருமண ஒப்புதலைப் பெற என்னை அனுப்பி வைத்தாயே! எப்படி நான் வாய் திறப்பேன்?' என்று எழும்பாத குரலில் உள்ளுக்குள் குமைந்தான் அறிவாளன்.

    எம்பெருமாள் பேசத்தொடங்கினார். "தம்பி, நான் கல்லூரித் தலைவர் அல்லன். உன்னுடைய ஏரழகிக்கு மாமா. அவள் உன்னைப் பற்றி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருக்கிறாள். எனவே, மிகுதியாக விவரிக்க விரும்பவில்லை நான். ஏரழகியும் நீயும் ஒருவரையொருவர் விரும்புவது எனக்குத்

    Enjoying the preview?
    Page 1 of 1