Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sankarlal Vandhu Vittar!
Sankarlal Vandhu Vittar!
Sankarlal Vandhu Vittar!
Ebook364 pages4 hours

Sankarlal Vandhu Vittar!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

சுவிட்சர்லாந்து சென்று வந்த சங்கர்லாலுக்கும் அவரது மனைவிக்கும் வகாப் ஒரு பிரமாதமான விருந்து கொடுக்கிறார். வகாபின் மகன் அவர்களுக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறான். அப்போது அவனும் அவனது நண்பனும் கடத்தப்படுகிறார்கள். அதே சமயத்தில் கோயிலில் உள்ள நகைகள் காணாமல் போகின்றன. குற்றவாளி பிடிபட்டாலும் அவன் உண்மையை சொல்ல மறுக்கிறான். போலீஸ் துப்பு துலக்க முடியாமல் திணறுகிறது. அப்போது சங்கர்லால் வந்து, எவ்வாறு இந்த வழக்குகளை துப்பறிகிறார் என்பதை விறுவிறுப்பான நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Languageதமிழ்
Release dateNov 6, 2020
ISBN6580136605830
Sankarlal Vandhu Vittar!

Read more from Tamilvanan

Related to Sankarlal Vandhu Vittar!

Related ebooks

Reviews for Sankarlal Vandhu Vittar!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sankarlal Vandhu Vittar! - Tamilvanan

    http://www.pustaka.co.in

    சங்கர்லால் வந்து விட்டார்!

    Sankarlal Vandhu Vittar!

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    1

    உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப் காலையில் எழுந்தவுடன் எல்லையற்ற மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.

    அவருடைய வீட்டில் இங்கும் அங்குமாக ஓடியாடிக் கொண்டிருந்த அவருடைய பிள்ளைகளைக் காலையில் எழுந்ததும் ஓர் அதட்டல் போட்டு அடக்கமுயலுவார். முடியாது அவரால்.

    உதவிப் போலீஸ் கமிஷனர் வகாப், வீட்டிற்கு வெளியே ஓர் அதட்டல் போட்டால் அஞ்சாநெஞ்சம் படைத்த கொலையாளிகளும், கொள்ளையையே தமது தொழிலாகக் கொண்டு திரிபவர்களும் கூடக் கொஞ்சம் நடுங்குவார்கள்! சங்கர்லாலின் அன்பும் நட்பும் உதவியும் என்றும் வகாபுக்கு உண்டு. இதனால் வகாபின் செல்வாக்கு எவ்வளவோ உயர்ந்திருக்கிறது. ஆனால் -

    அவருடைய வீட்டில் அவருக்கு அவ்வளவு செல்வாக்கு இல்லை. அவருடைய அதட்டலுக்கு, அவருடைய பிள்ளைகளில் ஒன்றுகூட அஞ்சியதில்லை! போலீஸ்காரர்களைக் கண்டு சில பிள்ளைகள் அஞ்சுவது நடைமுறை. ஆனால், வகாபின் வீட்டிலோ, அவருடைய பிள்ளைகளைப் போலீஸ்காரர்கள் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்சுவார்கள். இன்னும் கொஞ்சம் மிஞ்சிப் போனால், போலீஸ்காரர்கள் வகாபின் பிள்ளைகளைத் தூக்கிக்கொண்டு போய் கடையில் அவர்கள் கேட்கும் இனிப்புகளை வாங்கிக் கொடுப்பார்கள். அங்கே வரும் போலீஸ்காரர்களின் தொப்பிகளைக் கழற்றுவதும், அவர்களுடைய மடிப்புக் கலையாத உடைகளைப் பிடித்து இழுப்பதும் குழந்தைகளுக்கு விளையாட்டு! வகாபிற்கு நிறையப் பிள்ளைகள்! மொத்தம் எத்தனை என்பதைப் பிள்ளைகளையெல்லாம் எதிரே நிற்க வைத்து எண்ணிப் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்! வகாபிற்கே நினைவு இருக்காது! ஒன்று இரண்டா அவற்றை அடக்கி வழிக்குக் கொண்டு வர?

    சங்கர்லாலுடன் எல்லா வழக்குகளிலுமே வகாப் தொடர்பு கொண்டிருந்த போதிலும்கூட, இன்னும் அவரால் உதவிப் போலீஸ் கமிஷனர் பதவியை விட்டுக் கமிஷனர் பதவிக்கு வர முடியவில்லையே என்று வகாப் துணைவிக்குத் துன்பம்! அதனால் அடிக்கடி அவள் வகாபிடம் சலித்துக் கொண்டாள். இந்த நிலையில், வகாபிற்குத் தனது வீட்டில் செல்வாக்கு இருக்க நியாயமில்லை!

    வகாப் அன்று பிள்ளைகளை அதட்டல் போடாமல், எழுந்ததும் தமது மனைவியைப் பார்த்து மெல்லச் சிரித்தார். இன்று, சங்கர்லால் நம் வீட்டுக்கு வரப்போகிறார் கவனம் இருக்கிறதா! என்று கேட்டார்.

    வகாபின் மனைவி சொன்னாள் : சங்கர்லால் மட்டுமா வருகிறார்? அவருடைய குடும்பமே அல்லவா வருகிறது! கத்தரிக்காயையும் மைனாவையும் பார்க்க வேண்டும் என்று வெகுநாட்களாக எனக்கு ஆசை, அவர்களை வரவேற்க எல்லா ஏற்பாடுகளும் செய்துவிட்டேன். நீங்கள் எதற்கும் இப்போதே போய் எத்தனை மணிக்கு விருந்து என்பதை நினைவுபடுத்திவிட்டு வாருங்கள்.

    வகாப் எழுந்து குளிக்கச் சென்றார். சங்கர்லாலுக்கு, அவர் மீண்டும் நேரத்தைப் பற்றியோ, அவர் ஏற்பாடு செய்திருக்கும் விருந்தைப் பற்றியோ நினைவுப்படுத்த வேண்டிய தேவை இல்லை. ஆனாலும், இரண்டு நாட்களுக்கு முன்னால் தொலைபேசியில் சங்கர்லாலை அழைத்து, அவரையும் இந்திராதேவி, மாணிக்கம், கத்தரிக்காய், மைனா, மாது ஆகியோரையும் இன்று விருந்துக்கு வரவேண்டுமென்று வேண்டிக் கொண்டார். மாலை ஆறு மணிக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாகவும் சொன்னார்.

    சங்கர்லால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். வகாப் எதற்காக விருந்து வைக்கிறார் என்பது சங்கர்லாலுக்குத் தெரியும். ஆனாலும், வகாபைக் கேலி செய்ய வேண்டும் என்று, வகாப், விருந்திற்கு வர எனக்கும், அதைவிட இந்திராவுக்கும், எல்லாரையும் விடக் கத்தரிக்காய்க்கும், மிக்க மகிழ்ச்சி. விருந்து எதற்கு என்று சொல்லவில்லையே! புதிதாக உங்களுக்கு ஏதாவது குழந்தை பிறந்திருக்கிறதா? என்று கேட்டார்.

    சங்கர்லாலின் பக்கத்தில் நின்றிருந்த இந்திரா வாய்விட்டுக் கலகலவென்று சிரித்தாள்! அவளுடைய கள்ளம் சிறிதும் இல்லாத சிரிப்பொலி தொலைபேசியில் பாய்ந்து வகாபின் செவியில் விழுந்தது. வகாப் மெல்லச் சிரித்துக் கொண்டே, சங்கர்லால், இருக்கும் பிள்ளைகளை வைத்து அடக்குவதே முடியாத செயலாக இருக்கிறது, இன்னும் எதற்கு எனக்குப் பிள்ளைகள்! உங்களுக்குத் தான் பிள்ளையே இல்லை, வேண்டுமானால், எங்கள் வீட்டிலிருந்து இரண்டு பிள்ளைகளை அனுப்பி வைக்கிறேன். அப்புறம் பாருங்கள், உங்களால் எந்த வழக்கையுமே கவனிக்க முடியாது! என்றார்.

    தப்புக்கணக்குப் போட்டு விட்டீர்கள்! கத்தரிக்காய் ஒருவனும் சரி, உங்கள் வீட்டிலிருக்கும் அவ்வளவு பிள்ளைகளும் சரி! கத்தரிக்காய் இந்திராவைப் பார்த்தால் எப்படி அஞ்சுகிறான் தெரியுமா? இந்திரா அவனைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்தாலே போதும்! என்று சங்கர்லால் சொன்னதும், இந்திரா படபடவென்று சங்கர்லாலிடம் பேசும் ஓசை கேட்டது. ஊடலில் நாம் ஏன் உயிரைவிட வேண்டும் என்று தொலைபேசியை வைத்து விட்டார் வகாப்!

    வகாப், இவற்றையெல்லாம் எண்ணிக்கொண்டே குளித்துவிட்டு, தமது அறைக்குச் சென்றார். உடைகளை அணிந்து கொண்டு, தொப்பியை மாட்டினார், சன்னல் வழியாகத் தோட்டத்தைப் பார்த்தார்.

    வகாபின் வீடு சிறிய வீடுதான். ஆனாலும் அது அழகாக இருந்தது. வீட்டைச் சுற்றிலும் அழகான தோட்டம். தோட்டத்தில், மா இலைத் தோரணங்களையும் வண்ணக் காகிதங்களையும் தொங்கவிட்டுக் கொண்டிருந்தார்கள் சில போலீஸ்காரர்கள். தோட்டத்தில், புல்வெளியில், நீண்ட மேசையும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன. அந்த இடத்தில்தான் மாலை விருந்து நடக்க ஏற்பாடு ஆகியிருந்தது.

    வகாப், சங்கர்லாலின் பங்களாவுக்குப் போகத் தமது பழைய காரில் புறப்பட்டபோது, அவருடைய மூத்த மகன் அமீது ஓடிவந்தான். அப்பா நானும் வருகிறேன் என்றான்.

    வகாப், ஏதாவது போலீஸ் அலுவல் காரணமாக வெளியே புறப்பட்டிருந்தால், அமீது இரண்டு அறைகள் வாங்கி இருப்பான்! ஆனால், இப்போது, மகிழ்ச்சியின் பெருக்கில் திணறிக் கொண்டிருந்ததால் சங்கர்லலாலின் பங்களாவை நான் ஒரு தடவை கூடப் பார்த்ததில்லையே!

    சரி காரில் ஏறு என்றார் வகாப், இன்னும் சிறிதுநேரம் அவனிடம் பேசிக் கொண்டிருந்தால், மற்றப் பிள்ளைகளும் ஓடிவந்து காரில் ஏறிக் கொள்ளுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்!

    அமீதுக்குப் பன்னிரண்டு வயது ஆகிறது, அவன் ஏழாவது வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும், அப்பாவைப் போலவே உதவி போலீஸ் கமிஷனராகிவிட வேண்டும் என்று அடிக்கடி அவரிடம் சொல்லிக் கொண்டிருந்ததால், அவன் மீது அன்பு மிகுந்துவிட்டது! அவன் வகாபின் காக்கி உடைகளைப் போலவே ஒரு சோடி வேண்டும் என்று ஒரு தடவை பிடிவாதம் பிடித்தபோது, உதவிப் போலீஸ் கமிஷனர் உடை மாதிரியே காக்கித் துணியில் தைத்து, அவனுக்குத் தகுந்த தொப்பியும் வாங்கிக் கொடுத்திருந்தார். அவற்றை அவன் இப்போது அணிந்து கொண்டிருந்தான். அவன் காரில் ஏறி உட்கார்ந்தான். கார் புறப்பட்டது.

    வழியில் அமீது வகாபைப் பார்த்துக் கேட்டான் : அப்பா, விருந்துக்கு இந்திராதேவியும் வருவார்களா?

    ஆமாம் என்றார் வகாப்.

    மாணிக்கம் வருவானா?

    கத்தரிக்காயும் மைனாவும் கூட வருவார்கள்!

    விருந்து எதற்கு அப்பா?

    சங்கர்லாலும் இந்திராவும் சுவிட்சர்லாந்துக்குப் போய்விட்டு, நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். முதல் முதலில் அவர்களுக்கு விருந்து அளிக்கும் பேறு நமக்குத்தான் அமீது, நமக்குத்தான்! என்றார் வகாப்.

    சங்கர்லாலுக்கும் இந்திராதேவிக்கும் ஏதாவது பரிசு கொடுப்பீர்களா? என்று கேட்டான் அமீது.

    போடா முட்டாள்! அவர்களுக்குப் பரிசு கொடுத்து நமக்கு கட்டுமா? வசதியிருந்தால் விலைமதிக்க முடியாத பொருளை அவர்களுக்குப் பரிசு தரலாம். இப்போது நாம் இருக்கும் நிலையில், அன்பு ஒன்றுதான் நாம் அவர்களுக்கு அளிக்கும் பரிசு! என்றார் வகாப்.

    அமீது, அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. அவன் மனம் சிந்தனையுள் இறங்கியது.

    வகாபின் கார், மலைப்பாதையின் மேல் வளைந்து வளைத்து சென்றது. முல்லைவன மலைத் தோட்டத்தை அடைந்து, பங்களாவின் முன் காரை நிறுத்தினார் வகாப்.

    பொன்னன், துப்பாக்கியைத் தோளில் போட்டபடியே ஓடிவந்து காரின் கதவைத் திறந்துவிட்டு, சல்யூட் அடித்து நின்றான்.

    வகாபும், அமீதும் இறங்கிப் பங்களாவிற்குள் நுழைந்தார்கள். கூடத்து நாற்காலியில் சங்கர்லாலும் இந்திராவும் உட்கார்ந்து தேநீர் அருந்தியபடி சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

    வகாபையும், அமீதையும் பார்த்ததும் எங்கேயோ நின்று கொண்டிருந்த மாது இன்னும் இரண்டு கோப்பைகள் தேநீர் கொண்டுவர ஓடினான்.

    சங்கர்லால் தேநீர்க் கோப்பையை வைத்துவிட்டு, வகாபைக் கைகுலுக்கி வரவேற்றார்.

    விருந்தைப்பற்றி மீண்டும் சொல்லிவிட்டுப் போக வந்தீர்களா? அல்லது ஏதாவது வழக்குத் தொடர்பாக வந்தீர்களா? என்று கேட்டாள் இந்திரா.

    உதவி போலீஸ் கமிஷனர் வகாப் பதில் சொல்லுவதற்குள், சங்கர்லால் சொன்னார் : வழக்குப் பற்றி வந்திருந்தால், அவருடைய மகனை அழைத்து வந்திருக்கமாட்டாரே! இது தெரியவில்லையா இந்திரா உனக்கு?

    இதற்குள் இந்திரா எழுந்து, அமீதின் பக்கத்தில் சென்று, உங்கள் மகனா? என்ன பெயர்? என்று அவன் முதுகில், தட்டினாள்.

    அமீது என்றான் பையன்.

    என்னுடன் வா அமீது என்று சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றாள் இந்திரா. கத்தரிக்காயையும் மைனாவையும் அறிமுகப்படுத்தினாள், இதற்குள் மாணிக்கமும் அங்கு வந்து சேர்ந்தான்.

    இந்திரா சுவிட்சர்லாந்திலிருந்து வாங்கி வந்த ஓர் அழகான ஓடும் மோட்டார் பொம்மையை அவனிடம் கொடுத்தபோது, அமீது வியப்பால் இந்திராவின் முகத்தைப் பார்த்தான். மகிழ்ச்சிப் பெருக்கால் 'நன்றி' என்று கூட அவனால் சொல்ல முடியவில்லை! அவனை மீண்டும் கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அப்போதுதான் மாது தேநீர்க் கோப்பைகளுடன் அங்கு தோன்றினான்.

    2

    பிற்பகல், மூன்று மணி.

    சங்கர்லாலும், இந்திராதேவியும், மாணிக்கமும், கத்தரிக்காயும், மைனாவும் சரியாக ஆறு மணிக்குத் தனது இல்லத்திற்கு வருவார்கள் என்று எண்ணினான் அமீது. விருந்தின்போது, இந்திராவுக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று எண்ணினான். அவன் நீண்டநேரம் சிந்தித்தபின், தன்னுடைய மேசை அறையைத் திறந்தான். அதில், அவன் காசு சேர்த்து வைக்க ஓர் உண்டி இருந்தது. அதை உலுக்கி உள்ளேயிருந்த காசுகளைக் கொட்டினான். அதில் இரண்டேகால் ரூபாய் இருந்தது. இரண்டேகால் ரூபாயில் என்ன வாங்குவது?

    அமீது ஒன்றும் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வகுப்பு நண்பன், அடுத்த வீட்டிலேயே குடியிருந்த மணியரசு ஓடிவந்தான், என்னடா அமீது? உங்கள் வீட்டில் அமர்க்களமாக இருக்கிறது? வண்ண விளக்குக்களும், வண்ணக் காகிதங்களும் தோரணங்களும் தொங்குகின்றன! எவராவது விருந்துக்கு வருகிறார்களா என்று கேட்டான்.

    ஆமாம் மணியரசு, சங்கர்லால் தமது குடும்பத்துடன் இங்கே மாலை வருகிறார். நீ சங்கர்லாலையும், இந்திராதேவியையும் நேரில், பக்கத்திலேயே நின்று பார்க்கலாம்! இந்திராதேவிக்கு ஏதாவது பரிசு தர வேண்டும் என்று எண்ணுகிறேன். என்ன கொடுக்கலாம்? நம்முடைய பரிசைப் பார்த்ததும், இந்திராதேவி மட்டுமல்ல, சங்கர்லால் கூட அப்படியே அயர்ந்து விடவேண்டும்! என்ன கொடுக்கலாம் சொல்லு என்று கேட்டான் அமீது.

    மணியரசு சிறிதுநேரம் சிந்தித்துப் பார்த்தான். அவன் கொஞ்சம் வேடிக்கை மனம் படைத்தவன். ஆகையால், உயிருள்ள பொருளாகக் கொடுத்தால் என்ன? என்று கேட்டான்!

    சங்கர்லாலின் பங்களாவில், அழகான பறவைகள் இருக்கின்றன. துள்ளி விளையாடும் மான்குட்டிகள் இருக்கின்றன. என்னிடம் இருப்பது இரண்டேகால் ரூபாய்! இந்தக் காசைக்கொண்டு நான் என்ன வாங்க முடியும்! என்று கேட்டான் அமீது.

    அழகான சீமை முயல்குட்டிகளாக நாம் வாங்கிக் கொடுப்போமே! என்னிடம் ஒரு ரூபாய் இருக்கிறது, அதையும் கொண்டு வருகிறேன். நீ உன் சைக்கிளை எடுத்துக்கொள், நான் என் சைக்கிளை எடுத்துக் கொள்கிறேன். இருவரும் மூர்மார்க்கெட்டுக்குப் போவோம் மூர்மார்க்கெட்டில் கிடைக்காத முயல், அடர்த்தியான காட்டில் கூடக் கிடைக்காது! என்றான் மணியரசு.

    சரியான முடிவு! சங்கர்லால் வீட்டில் சீமை முயல் கிடையாது! ஒரு கூடையில் சீமை முயல் குட்டியைப் போட்டு, விருந்தின்போது நான் இந்திராதேவியிடம் கொடுக்கிறேன். எல்லாரும் ஆவலுடன் கூடையையே பார்ப்பார்கள். இந்திராதேவி கூடையைத் திறந்ததும், முயல்குட்டி குதித்து, எகிறி ஓடும்! எதிர்பாராத இந்தப் பரிசைக் கண்டதும், எல்லாரும் கையொலி செய்வார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் குட்டிக்கரணம் போடும் கத்தரிக்காய், இப்போதெல்லாம் பெருந்தன்மையுடன் குட்டிக்கரணம் போடுவதில்லையாம். அவன் கூடத் தன்னை மறந்து குட்டிக்கரணம் போடுவான் பார்! என்றான் அமீது.

    இருவரும் -

    தங்கள் சைக்கிள்களில் புறப்பட்டு விட்டார்கள். இருவருமே இரண்டு சிறிய சைக்கிள்களை வைத்திருந்தார்கள். பள்ளிக்கூடம் போய்வர, அவை இப்போது அவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தன.

    மூர்மார்க்கெட்டின் எதிரில் சைக்கிள்களை வைத்துப் பூட்டிவிட்டு, இருவரும் உள்ளே சென்றார்கள். வழியில் பல புத்தகக் கடைகளும், விளையாட்டு பொம்மைக் கடைகளும் இருந்தன. வழியில் இருந்த கடைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டே சென்றபோது, புத்தகக் கடைக்காரன் ஒருவன், அஞ்சல் தலை ஆல்பம் ஒன்றை அவர்களுக்கு எடுத்துக் காட்டினான்.

    அமீதுக்கு அஞ்சல் தலைகள் சேர்ப்பது ஒரு பொழுதுபோக்கு. உலகத்திலுள்ள இரண்டொரு நல்ல அஞ்சல் தலைகள் அந்த ஆல்பத்தில் இருந்தன. ஆல்பத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு, என்ன விலை? என்று கேட்டான்.

    இரண்டு ரூபாய் என்றான் கடைக்காரன்.

    கையிலிருக்கும் காசு போதாது என்ற எண்ணத்துடன், ஒரு ரூபாய்க்குக் கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன் என்றான். ஆல்பம் வாங்கிவிட்டால் முயல்குட்டிகள் வாங்க முடியாதே என்ற நோக்கத்துடன், வேண்டாம் என்று சொல்லுவதற்குப் பதில், ஒரு ரூபாய்க்குக் கேட்டு வைத்தான்!

    பிடி ஆல்பத்தை என்று ஆல்பத்தைக் கொடுத்துவிட்டான் கடைக்காரன்! அமீது ஒரு ரூபாயைக் கொடுத்துவிட்டு, ஆல்பத்தைப் பெற்றுக்கொண்டு, முயல் விற்கப்படும் இடத்தை அடைந்தான். அவனுடன் சென்ற மணியரசு இவ்வளவு மலிவாக இந்த ஆல்பத்தைக் கொடுப்பான் என்று நான் நினைக்கவே இல்லை! என்றான்.

    முயல்குட்டி விற்பவன், அழகான சோடி முயல்குட்டிகளை எடுத்துக் காட்டினான். அந்தச் சீமை முயல்குட்டிகளின் கண்களை இன்றெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம்! அவற்றின் உடல்கள் வெல்வெட்டைப் போல் மிருதுவாக இருந்தன. ஆனால், விலையைப் பொறுத்தவரையில், இரண்டே முக்கால் ரூபாய்க்கு ஒரு நயா பைசாகூடக் குறையாது என்று ஒரே முடிவாக அறிவித்துவிட்டான் கடைக்காரன்.

    அமீதிடம் இரண்டேகால் ரூபாய்தான் இருந்தது. வாங்கிய ஆல்பத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாம் என்று எண்ணி, இருவரும் ஆல்பம் விற்ற கடைக்காரனிடம் சென்றார்கள். ஆனால், அவன், விற்ற ஆல்பத்தை வாங்கவே முடியாது என்றும், ஒரு தடவை விற்றது விற்றதுதான் என்றும் சொல்லி விட்டான்!

    அமீது அவனிடம் முடிந்தமட்டும் கேட்டுப் பார்த்தான். பாதி விலைக்கு எடுத்துக் கொண்டாலும் போதும். தனக்கு இப்போது வேண்டியது எட்டணாக் காசுதான் என்று கேட்டுப் பார்த்தான். பயனில்லை!

    கடைக்காரன் கல்மனம் பெற்றவன். முடியவே முடியாது என்று உறுதியாகச் சொல்லிவிட்டான் இறுதியாக!

    மணியரசின் மனம் துடித்தது. எப்படியும் சோடி சீமை முயல்குட்டிகளை வாங்கிக் கொடுத்து விடுவது என்ற எண்ணத்துடன், வாடா போகலாம், வீட்டில் போய் அம்மாவிடம் எப்படியாவது எட்டணா வாங்கி வந்து விடுகிறேன் என்றான்.

    போய்த் திரும்பிவர நேரமிருக்குமா? என்று ஐயத்தைக் கிளப்பினான் அமீது.

    முயன்று பார்ப்போம். சும்மா நின்றுகொண்டு நேரத்தை வீணாக்குவதைவிட, முயன்று பார்த்தாலாவது முயல்களைப் பெறலாம் - இருவரும் புறப்பட்டார்கள். வழியில் -

    பையன்கள் தேவை என்று எழுதப்பட்ட வண்ணப்பலகை ஒன்று ஒரு வீட்டின் முன் மாட்டப்பட்டிருந்தது.

    அமீது, சைக்கிளை நிறுத்தினான். மணியரசும் சைக்கிளை நிறுத்தினான்.

    பையன்கள் தேவையாமே! என்றான் அமீது.

    போய்த்தான் பார்ப்போமே! முன்பணமாக எட்டணாக் காசு கொடுத்தால் போதும் என்று சொல்லலாம் என்றான் மணியரசு.

    இருவரும் உள்ளே சென்றார்கள். எதிரே ஒரு பெரிய அறை தெரிந்தது. அலுவலக அறையைப்போல் இருந்த அதில் மேசையின் பின்னால் தடித்த கொழுத்த மனிதர் ஒருவரும் அவருக்கு எதிரே, ஒல்லியான உயரமான போட்ட பேன்ட் மனிதர் ஒருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

    இரண்டு பையன்களைப் பார்த்ததும், தடித்த மனிதன் தலையைத் தூக்கிப் பார்த்தார்.

    அமீது முதலில் பேசினான் : பையன்கள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறீர்களே, என்ன வேலை!

    தடித்த மனிதர் சொன்னார் : உங்களிடம் சைக்கிள் இருக்கிறதா? அப்போதுதான் வேலை தர முடியும்.

    இருவரிடமும் சைக்கிள் இருக்கிறது என்றான் மணியரசு.

    அப்படியானால் முதலில் ஒரு வேலையைச் செய்யுங்கள். அதற்கப்புறம் உங்கள் மீது நான் நம்பிக்கை வைத்துக் கொள்கிறேன் என்று சொல்லித் தடித்த மனிதர் ஒரு சிறிய பார்சலை அமீதிடம் கொடுத்தார். அது காகிதத்தால் நன்றாகக் கட்டப்பட்டு முத்திரை வைக்கப்பட்டிருந்தது. இதை, இந்த முகவரியில் கொடுக்க வேண்டும். நீங்கள் போவதற்குள் இதோ என் எதிரில் நிற்கிறாரே இவர் காரில் அங்கே வந்துவிடுவார். இவர் வராவிட்டாலும் காத்திருந்து இவரிடம் கொடுங்கள் என்று சொல்லி ஏதோ ஒரு முகவரியை எழுதிக் கொடுத்தார்.

    இதைக்கொண்டு போய்க் கொடுக்க எங்களுக்கு எவ்வளவு? என்று கேட்டான் மணியரசு.

    எவ்வளவு வேண்டும்! என்று கேட்டார் தடித்த மனிதர், தமது கழுத்துப் பட்டையைச் சரி செய்துகொண்டே.

    எட்டணா தருவீர்களா? என்று கேட்டான் அமீது.

    ஒரு ரூபாய் தருகிறேன். விரைவில் கொண்டு போங்கள் என்றார் நின்றவாறு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த ஒல்லியான மனிதர்.

    அமீதும் மணியரசும் வெளியே வந்தபோது, நான்கைந்து வீடுகளுக்கு அப்பால், ஒரு கடையில் சிகரெட் வாங்கிக் கொண்டிருந்தார் ஒரு மனிதர். அவர் கால் சட்டையும், கோட்டும் அணிந்திருந்தார். அவர் சற்று நேரத்திற்கு முன்புதான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்க வேண்டும் என்று அவர் தலை எடுத்துச் சொல்லிற்று.

    அவரைப் பார்த்ததும் அமீது சைக்கிளை வேறுபக்கமாகத் திருப்பிக் கொண்டான். மணியரசு, அதோ அந்த மனிதர் இரகசியப் போலீசைச் சேர்ந்தவர்! அவர் என்னைக் கண்டால் காதைப் பிடித்துத் திருகி, 'எங்கே வந்தாய்? கையில் என்ன?' என்றெல்லாம் குடைந்து கேட்டு அப்பாவிடமும் சொல்லிவிடுவார். அவர் பார்ப்பதற்கு முன்பே வேறுபக்கம் பறந்து விடலாம் என்றான்!

    இருவரும், அந்த வீட்டின் பக்கவாட்டில் பின்புறமாகச் சென்று மறைந்து விட்டார்கள்!

    அமீதும் மணியரசும் மறைந்ததும் ஒல்லியான மனிதர் வெளியே வந்து காரில் ஏறினார். அப்போது -

    கடைமுன் நின்றிருந்த இரகசியப் போலீஸ் அதிகாரி வேகமாக நடந்து வந்து அவருடைய காரிலேயே ஏறிக்கொண்டு, காரைப் போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்கள் என்றார்!

    ஒல்லியான மனிதர் சிரித்தார் : என்னைச் சோதனை போடப் போகிறீர்கள், அவ்வளவுதானே? என்னிடம் ஒன்றும் இல்லாவிட்டால் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார்.

    விட்டு விடுகிறோம், வழக்கம் போல! என்றார் இரகசியப் போலீசைச் சேர்ந்தவர்.

    போலீஸ் ஸ்டேஷனுக்குள் சென்ற ஒல்லியான மனிதர் வெளியே வர ஒரு மணி நேரமாகிவிட்டது! அவர் சலிப்புடன் காரை மயிலாப்பூரை நோக்கி விட்டார். வழியில் -

    சைக்கிள்களில் அமீதும் மணியரசும் திரும்பிக் கொண்டிருந்தார்கள்.

    அவர் காரை நிறுத்தியதும், இருவரும் சைக்கிள்களை நிறுத்தினார்கள்.

    "எங்கே அந்தப் பார்சல்?

    Enjoying the preview?
    Page 1 of 1