Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Irunda Iravugal
Irunda Iravugal
Irunda Iravugal
Ebook305 pages2 hours

Irunda Iravugal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஒரு தீவில் உள்ள அரண்மனையில் ஒரு அரச குடும்பத்தார் வாழ்ந்து வருகிறார்கள். அந்த அரண்மனையில் இரவு நேரத்தில் வித்தியாசமான சப்தங்கள் கேட்கின்றன. அது பேய்களின் நடமாட்டமோ என்று அஞ்சுகிறார்கள். அதை பயன்படுத்திக் கொண்டு அவர்களின் எதிரிகள் அவர்களை வீழ்த்தப் பார்க்கிறார்கள். சங்கர்லால் தனது சாகசங்களின் மூலம் அந்த குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பான நாவலை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Languageதமிழ்
Release dateOct 23, 2020
ISBN6580136605831
Irunda Iravugal

Read more from Tamilvanan

Related to Irunda Iravugal

Related ebooks

Reviews for Irunda Iravugal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Irunda Iravugal - Tamilvanan

    http://www.pustaka.co.in

    இருண்ட இறவுகள்

    Irunda Iravugal

    Author:

    தமிழ்வாணன்

    Tamilvanan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/tamilvanan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.
    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    அத்தியாயம் 23

    அத்தியாயம் 24

    அத்தியாயம் 25

    அத்தியாயம் 26

    அத்தியாயம் 27

    அத்தியாயம் 28

    அத்தியாயம் 29

    அத்தியாயம் 30

    அத்தியாயம் 31

    அத்தியாயம் 32

    அத்தியாயம் 33

    அத்தியாயம் 34

    அத்தியாயம் 35

    அத்தியாயம் 36

    அத்தியாயம் 37

    அத்தியாயம் 38

    அத்தியாயம் 39

    அத்தியாயம் 40

    அத்தியாயம் 41

    அத்தியாயம் 42

    அத்தியாயம் 43

    அத்தியாயம் 44

    அத்தியாயம் 45

    அத்தியாயம் 46

    அத்தியாயம் 47

    அத்தியாயம் 48

    அத்தியாயம் 49

    அத்தியாயம் 50

    அத்தியாயம் 51

    அத்தியாயம் 52

    அத்தியாயம் 53

    அத்தியாயம் 1

    கடல் நீரை இரு பக்கங்களிலும் ஒரே மாதிரி வாரி இறைத்துக்கொண்டு, கடலின் மேல் பறந்து சென்றது மோட்டார் படகு! அது -

    தொலைவிலிருந்து பார்ப்பதற்குத் திமிங்கலம் ஒன்று விரைவாக எங்கேயோ நீந்திச் செல்லுவதைப் போல் இருந்தது!

    மோட்டார்ப் படகின் இரு பக்கங்களிலும், முன்னால் இரண்டு விளக்குகள் ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்தன. அந்த இரு மின்சார விளக்குகளும் திமிங்கலத்தின் கண்களைப் போல் காட்சி தந்தன.

    படகை ஓட்டிக் கொண்டிருந்தவர் துப்பறியும் சிங்கம் சங்கர்லால்!

    படகு விரைந்து கொண்டிருந்தது.

    அவருக்குப் பக்கத்தில், அவருடைய மனைவி இந்திரா, சேலைத்தலைப்புக் காற்றில் படபடக்க நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்!

    அவர்கள் இருவரையும் தவிரப் படகில் வேறு எவருமே இலர்!

    அதோ பார் இந்திரா! என்று எதிரே எதையோ சுட்டிக் காட்டினார் சங்கர்லால்.

    இந்திரா, சங்கர்லால் சுட்டிக் காட்டிய பக்கத்தில் பார்த்தாள். தொலைவில் -

    ஒரு சிறிய தீவு ஒன்று தெரிந்தது!

    இந்தத் தீவுக்கா நாம் இப்போது போகிறோம்? என்று கேட்டாள் இந்திரா.

    ஆமாம்.

    இந்தத் தீவில் மனிதர்களே இருக்கமாட்டார்களா?

    சங்கர்லால் இதைக் கேட்டுவிட்டுச் சிரித்தார்!

    ஏன் சிரிக்கிறீர்கள்?

    மனிதர்கள் இல்லாவிட்டால்தான் என்ன? நாம் இருவருமே இந்தத் தீவில் இறங்கிய முதல் மனிதர்களாக இருப்போமே இந்திரா! என்று சொல்லிவிட்டு, இந்திராவின் முகத்தைப் பார்த்தார் சங்கர்லால்.

    அவள் முகத்தில் மெல்ல அச்சம் படரத் தொடங்கியது!

    இதோ பார் இந்திரா, இத்தனை நாட்களாக நீதானே நாம் எங்கேயாவது அடர்த்தியான காட்டுக்குப் போய் வேட்டையாட வேண்டும், இயற்கையின் அழகைக் காண வேண்டும், வன விலங்குகளைக் காட்டில் திரியும்போது நேரில் போய்ப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தாய்! இப்போது ஏன் இப்படி அச்சப்படுகிறாய்? என்றார் சங்கர்லால்.

    இந்திரா பேசாமல் இருந்தாள். அவர் சங்கர்லாலிடம் சொன்னவை உண்மைதான். புத்தகங்களில் படிக்கும் போதும், திரைப் படங்களில் பார்க்கும்போதும், காட்டில் சுற்றித் திரிந்து, மனிதர்களின் காற்றுப்படாத இயற்கையைக் காணவேண்டும் என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறாள்! ஆனால் -

    இந்த அளவுக்கு அச்சம் தரும் தனிமையிலா!

    அத்தான்!

    என்ன இந்திரா?

    நாம் இருவரும் இப்படித் தனியாக வந்திருப்பதைக் கண்டால் மற்றவர்கள் என்ன எண்ணிக் கொள்வார்கள்?

    புதிதாக மணமானவர்களைப் போல் சங்கர்லாலும் இந்திராவும் தனியாக எங்கேயோ ஒரு தீவுக்குக் களிப்புடன் புறப்பட்டுவிட்டார்கள் என்று பேசிக் கொள்வார்கள். பேசிக் கொள்ளட்டுமே! புதிதாக மணமானவர்கள்தாம் களிப்புடன் புறப்பட வேண்டுமா? உன் மனத்தில் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியும்!

    சொல்லுங்கள் அத்தான்!

    நம்முடன், நம் பங்களாவில் இருக்கும் அனைவரையுமே அழைத்து வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறாய் நீ! மாதுவையும், மாணிக்கத்தையும், அவன் மனைவி கயல்விழியையும், கத்தரிக்காயையும், மைனாவையும் அழைத்து வந்திருக்க வேண்டும் என்று நீ எண்ணுகிறாய்! இல்லையா? அது தவறு!

    ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்?

    நான் சொல்வதைக் கேள் இந்திரா! இப்போது நான் உண்மையைச் சொன்னால், இந்தத் தீவுக்குத் தனியாகப் போகவேண்டும்! அங்கே எனக்கு வேலை காத்துக் கிடக்கிறது! வேலையாகப் புறப்பட்ட நான் உன்னிடம் உண்மையைச் சொல்லாமல் களிப்புடன் போகலாம் என்று அழைத்து வந்தேன். எல்லாரையும் அழைத்து வருவது நல்லதா?

    அப்படிச் சொல்லுங்கள்! என்ன வேலை?

    எனக்கு எப்படித் தெரியும்? அங்கே போய்த்தான் என்ன வேலை என்பதை அறியவேண்டும்!

    ஒன்றுமே அறியாதவரைப் போல் பேசாதீர்கள்? நான் என்ன சின்னப் பிள்ளையா? என்னிடம் சொல்லுவதால் நான் ஒன்றும் எதற்கும் அஞ்சமாட்டேன்!

    சங்கர்லால் சிரித்தார். ஆனால் –

    அவர் ஒன்றும் பதில் சொல்லவில்லை!

    படகு, தீவை நெருங்கிவிட்டது.

    சங்கர்லால், படகை மெல்லச் செலுத்தினார். படகு தண்ணீரைக் கடந்து கடற்கரை ஓரமாக மணலில் போய்ச் சற்றுப் புதைந்து நின்றது!

    என்ன இது? படகை மணலுக்கே கொண்டுவந்து விட்டீர்களே! என்று கேட்டாள் இந்திரா.

    எப்படியும் இதை மணலில் இழுத்துத்தானே போடவேண்டும்! நீ முதலில் இறங்கு என்று முதலில் இந்திராவை இறக்கிவிட்டார். அந்த நேரத்தில் -

    பக்கத்தில் ஒரு கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது!

    சங்கர்லாலும் இந்திராவும் திரும்பிப் பார்த்தார்கள்.

    புத்தம் புதிய பெரிய கார் அது! அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட அட்சன் கார் அது! நிலவொளியில் அது பளபளப்புடன் நின்றது. காரிலிருந்து காரோட்டி மட்டும் இறங்கி வந்தான்.

    அவன் வெள்ளைச் சட்டையும், வெள்ளைக் கால் சட்டையும், வெள்ளைக் காலணிகளும், வெள்ளைத் தொப்பியும் அணிந்திருந்தான்.

    அவன் சட்டையிலே தெரிந்த பித்தளைப் பொத்தான்கள் பொன்னால் செய்யப்பட்டவை போல நிலவொளியில் மின்னின. அவன், அருகில் வந்ததும் மரியாதையுடன் நின்றான்.

    சங்கர்லால் சிரித்தபடி அவனைப் பார்த்தார்.

    அவன் சொன்னான்: நீங்கள் வருவதாக இளவரசர் சொன்னார். ஆனால், எங்கே வந்து இறங்குவீர்கள் என்று சொல்லவில்லை! ஆகையால், இந்தத் தீவு முழுவதும் நான் காரில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தேன்!

    அப்படியா என்றார் சங்கர்லால். பிறகு -

    அவர் கீழே இறங்கினார்.

    காரில் வந்த பணியாள் படகிலிருந்த பெட்டிகளை எடுத்துக் காரில் வைத்தான். இரண்டு பெட்டிகளைக் காரில் வைத்துவிட்டான். மூன்றாவது பெட்டி -

    சற்றுப் பளுவாக இருந்தது!

    என்ன இது? இந்தப் பெட்டி இவ்வளவு பளுவாக இருக்கிறதே? என்று கேட்டாள் இந்திரா.

    இதைத்தானே நாம் புறப்படும் போது வழியனுப்ப வந்த போலீஸ் கமிஷனர் வகாப், அவரே இதை நம் படகில் கொண்டு வந்து வைத்தார்! இது என்னவென்று அவரிடம் கேட்டேன். அவர் சொல்லமாட்டேன் என்று சொல்லிவிட்டார்! என்றார் சங்கர்லால்.

    அந்தப் பெட்டியினுள்ளே இருப்பது என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்தது இந்திராவின் மனம். தின்பதற்கு ஏதாவது கொடுத்திருந்தால் இவ்வளவு பளுவாக அது இருக்குமா? ஆனால் -

    அந்தப் பெட்டியில் என்ன இருக்கிறது என்பதைச் சங்கர்லால் அதன் எடையைப் பார்த்தே சொல்லிவிடுவார் என்பது தெரியும்!

    சங்கர்லால், காரோட்டியிடம் பேச்சைக் கொடுத்தார்.

    இந்தத் தீவு எத்தனை மைல் சுற்றளவு இருக்கும்? என்று கேட்டார்.

    பெட்டிகளையெல்லாம் காரில் வைத்துவிட்டு அவன் சொன்னான்: தொலைவிலிருந்து பார்த்தால் சிறிய தீவாகத்தான் இருக்கும். ஆனால், குறைந்தது பத்துக் கல் தொலைவு இருக்கும்!

    சங்கர்லால் வியப்படையவில்லை!

    இளவரசர் எங்கே? பங்களாவில் இருக்கிறாரா? என்று கேட்டார் சங்கர்லால்.

    எங்கேயோ வெளியே சென்றார். நீங்கள் வருவதற்குள் எப்படியும் மாளிகைக்கு வந்துவிடுவதாக அவர் சொன்னார் என்றான் காரோட்டி.

    இங்கே ஓர் இளவரசர் இருக்கிறாரா? இந்தத் தீவின் பெயர் என்ன? என்று கேட்டாள் இந்திரா.

    இந்தத் தீவின் பெயர் மோல் தீவு என்று சொல்லுகிறார்கள். ஆனால், இந்தத் தீவை உலகப் படத்தில் தேடிக் கண்டுபிடிக்க முடியாது! இங்கே இருக்கும் இளவரசருக்கும் இந்தத் தீவுக்கும் ஒன்றும் தொடர்பு கிடையாது! என்றார் சங்கர்லால்.

    நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இந்தத் தீவில் இருக்கும் இளவரசர் இந்தத் தீவைச் சேர்ந்தவர் அல்லர் என்கிறீர்களே?

    ஆமாம் இந்திரா! அவர் இந்தியாவின் ஒரு பகுதியை ஒரு காலத்தில் ஆண்டு வந்தவர்! இப்போதுதான் இளவரசர்களின் நிலை என்னவென்பது உனக்குத் தெரியுமே!

    இந்த இளவரசர் ஏன் இந்தத் தீவுக்கு வந்துவிட்டார்.

    அதைத்தானே அறியப் போகிறோம்! இந்தியாவில் இருந்த இளவரசர்கள் அவ்வளவு பேர்களும் பிரான்சிலும், இத்தாலியிலும், இலண்டனிலும், அமெரிக்காவிலும் போய் இப்போது வாழ்ந்து வருகிறார்கள்! ஆனால், இவர் அந்தக் காலத்திலேயே, தனிப்பட்ட ஒரு மனிதரின் உரிமைத் தீவாக இந்தத் தீவை விலைக்கு வாங்கி வாழ்ந்து வந்தார்! ஆனால், இனியும் அவர் ஏன் இங்கேயே இருக்கிறார் என்பதுதான் புரியவில்லை! இந்தத் தீவிலே நம்மைத் தவிர வேறு மனிதர்களே இருக்கமாட்டார்களோ என்று எண்ணும்படியிருக்கிறது! என்றார் சங்கர்லால்.

    காரோட்டி பேசாமல் நின்றான். ஆனால் –

    அவன் ஒன்றுமே சொல்லவில்லை!

    உன் பெயர் என்ன? என்று கேட்டார் சங்கர்லால்.

    வேலன்

    காரில் ஏறு இந்திரா! நாம் புறப்படலாம்! என்றார் சங்கர்லால் இந்திராவைப் பார்த்து.

    சங்கர்லாலும் இந்திராவும் காரில் ஏறி உட்கார்ந்ததும் கார் புறப்பட்டு, ஒரு குறிப்பிட்ட சாலையின் வழியாகச் சென்றது. வளைந்து வளைந்து சென்ற அந்தச் சாலை சிறிது தொலைவு சென்றதும் ஒரு மலையின் மீது சுற்றி வளைத்துக் கொண்டு சென்றது.

    கார் மலைச் சாரலில் சென்றபோது, நிலவொளியில் மலைமீது போடப்பட்டிருந்த கான்கிரீட் சாலை பளிச்சென்று கண்ணாடியைப் போல் தெரிந்தது, பார்ப்பதற்கு மிகச் சிறப்பாக இருந்தது!

    கண்ணுக்கெட்டியவரை மரங்களும் செடிகளும் கொடிகளுமாகவே இருந்தன. ஒரு வீடு கூடத் தெரியவில்லை! எங்கு பார்த்தாலும் பள்ளத்தாக்குகள்!

    உயரம் போகப்போகச் சுற்றிலுமுள்ள கடல் தெரிந்தது. சுற்றிலும் நீர்; நீர் சுற்றிக் கிடந்தது தீவை! அந்தத் தீவில் ஒரு மலை. அந்த மலையின் உச்சியில் ஒரு மாளிகை! வேறு எதுவும் இல்லை!

    இந்தத் தீவில் எப்படி ஒரு மாளிகையைக் கட்டினார்கள்.

    இந்தத் தீவில் தன்னந்தனியாக எப்படி ஓர் அரசர் வாழ்ந்து வருகிறார்!

    கார் நின்றது.

    காரிலிருந்தபடியே அந்த மாளிகையைச் சங்கர்லாலும் இந்திராவும் பார்த்தார்கள்.

    அந்த மாளிகை இருளினுள் மூழ்கிக் கிடந்தது! நிலாவெளிச்சத்தை, மாளிகையைச் சுற்றிலும் வானளாவி வளர்ந்து நின்ற பெரிய மரங்கள் மறைத்துக்கொண்டு நின்றன!

    கார் நின்றதும், மாளிகையின் ஒரு சில பகுதிகளில் மட்டும் விளக்குகள் எரிந்தன. மாளிகையின் வெளியே இருந்த மிகப்பெரிய கதவுகள் இரண்டும் கோயிற் கதவுகளைப் போலிருந்தன. அவற்றில் ஒன்று திறந்தது.

    இளவரசர் வந்து நின்றார்!

    வாருங்கள்! உங்களுக்காகத்தான் வெளியே போயிருந்த நான் விரைந்து வந்தேன்! இது உங்கள் மாளிகை! என்றார் அவர்!

    இந்திராவும் சங்கர்லாலும் இளவரசரைப் பார்த்தார்கள்.

    நல்ல உடற்கட்டு, நல்ல உயரம்! நீண்ட கோட்டும் கால்சட்டையும் அவர் அணிந்திருந்தார். அவர், கறுப்புக் கண்ணாடி அணிந்து, தாடி வளர்த்திருந்தார். திடீரென்று அவரைப் பார்ப்பவர்கள் அவர் ஒரு புரபசராகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்!

    இளவரசர் இருவரையுமே உள்ளே அழைத்துச் சென்றார்.

    உள்ளே ஏதோ பொருட்காட்சி சாலைக்குள் புகுந்து விட்டதைப் போலிருந்தது சங்கர்லாலுக்கும் இந்திராவுக்கும். பழங்கதைகளில் வரும் இரும்புக் கவசங்களும், போர்க் கருவிகளும், படங்களும், கண்ணாடி விளக்குகளும் காணப்பட்டன. சுவர்கள் பழமையின் கலையைச் சிறப்பாக எடுத்துக் காட்டின.

    சங்கர்லால், நீங்கள் களைப்புடன் வந்திருக்கிறீர்கள். உணவு உண்டபின் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்! விடிந்ததும், என் உறவினர்களையும் பணியாட்களையும் உங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன்! என்றார் இளவரசர்.

    நன்றி என்றார் சங்கர்லால்.

    அத்தியாயம் 2

    இரவு பதினோரு மணிக்கு மேலாகிவிட்டது. எல்லாரும் படுத்துத் தூங்கிப் போனார்கள்!

    சங்கர்லால் திடீரென்று ஏதோ ஓசை கேட்டு விழித்துக் கொண்டார். அவர் விழித்தபோது -

    பக்கத்துக் கட்டிலில் இந்திரா ஒரு சின்ன பிள்ளையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள்.

    அப்போது –

    மீண்டும் ஏதோ ஓசை!

    அந்த அறையின் கதவு சாத்திப் பூட்டப்பட்டிருந்தது!

    சங்கர்லால், மெல்ல எழுந்து நடந்து சென்று சாவித்துளையின் வழியேப் பார்த்தார்.

    எதுவும் தெரியவில்லை!

    இந்த மாதிரி அரச மாளிகைகளில் சரித்திரப் புகழ் பெற்ற பேய்கள் இருந்தாலும் வியப்படைவதற்கில்லை என்று எண்ணியது அவர் மனம்! அதற்கு ஏற்றாற்போல் எவனோ ஓர் இரும்பு மனிதன் நடந்து வருவதைப் போல் இருந்தது ஓசை!

    சங்கர்லால், இந்திராவை எழுப்பி ஒரு பக்கமாகச் சுவர் ஓரமாக இருளில் ஒளிந்து கொள்ளச் சொன்னார். பிறகு -

    கட்டிலில் மீது தலையணைகளைப் போட்டு மூடிவிட்டு அவரும் ஒளிந்துகொண்டார் சுவர் ஓரமாக!

    கதவு திறக்கப்படும் ஓசை கேட்டது! அதைத் தொடர்ந்து -

    இரும்புக் கவசம் உடல் முழுவதும் அணிந்த போர் வீரனைப்போன்ற ஓர் உருவம், கையிலிருந்த கைத்துப்பாக்கியால் நான்கைந்து தடவைகள், சங்கர்லால் படுத்துக் கிடக்கிறார் என்று கருதி, அவர் படுத்துக் கிடந்த படுக்கையின் மீது சுட்டுவிட்டு -

    மின்னல் விரைவில் கதவை மூடிவிட்டு ஓடி மறைந்தது!

    சங்கர்லால் மட்டும் ஓடினார்! அவர் கதவைத் திறந்து பார்த்தபோது -

    இரும்புக் கவசம் அணிந்த அந்தப் பதினைந்தாம் நூற்றாண்டு மனிதன் மறைந்துவிட்டான்!

    இந்திரா அஞ்சியபடி அங்கேயே நின்றிருந்தாள்!

    கதவைத் திறந்து கொண்டு வெளியே பாய்ந்து சென்ற சங்கர்லால், மறைந்துவிட்ட இரும்பு மனிதனைக் காணாமல் அப்படியே நின்றார்! அவர் நின்று கொண்டிருந்த அறையின் வெளியே நீண்ட தாழ்வாரம் இருந்தது, அந்தத் தாழ்வாரத்துக்கு அப்பால் -

    பெரிய கூடம் ஒன்று இருளில் மூழ்கிக் கிடந்தது.

    சங்கர்லால் மெல்ல பின்வாங்கித் தன்னுடைய அறைக்கே வந்தார். இந்திராவைப் பார்த்து, இங்கேயே இரு இந்திரா, இதோ வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே அவர் விரைந்து சென்றார்.

    தாழ்வாரத்தில் இருளில் அவர் நடந்தபோது, அவரது அறைக்குப் பக்கத்தில் ஒரே மாதிரியான பல அறைகள் இருப்பதைக் கண்டார். பக்கத்திலிருந்தே அந்த அறைகளின் கதவுகள் எல்லாம் கூட ஒரே மாதிரியாக இருந்தன. சங்கர்லால் அந்தக் கதவுகளைத் கடந்து தாழ்வாரத்திலேயே நடந்தார். கூடத்தை அவர் அடைந்த நேரத்தில் -

    சிறிதுகூட வெளிச்சம் இல்லை!

    சங்கர்லால் தங்கியிருந்த அறையில் இந்திரா விளக்கைப் போட்டிருந்ததால், அந்த அறையிலிருந்து வெளிப்பட்ட விளக்கின் மங்கிய ஒளி தாழ்வாரத்தில் சிறிது வெளிச்சத்தைப் பரப்பியது. ஆனால் அந்த வெளிச்சம் -

    கூடத்திற்கு எட்டவில்லை!

    சங்கர்லால், கூடத்தின் ஓர் ஓரமாக நின்று, இருளில் நின்று கொண்டு கண்களை மூடித் திறந்தார். கண்களைச் சிறிது நேரம் மூடி மூடித் திறந்ததால், இருளில் பழகிவிட்ட அவர் கண்களுக்குக் கூடத்தில் இருந்த பொருள்கள் அனைத்தும் நிழற்படத்தைப் போலத் தெரிந்தன. இருளில் போய் நின்றுகொண்டு கண்களை மூடி மூடித் திறந்தால் கொஞ்சம் தெரியும்! இது கண்களின் தன்மை.

    சங்கர்லால் கூர்ந்து பார்த்தார்.

    கூடத்தின் இரு பக்கங்களிலும் -

    வரிசையாகப் பல இரும்பு மனிதர்கள் நிற்பதைப் போல் தெரிந்தது!

    சங்கர்லால், சுவரில் இருந்த விளக்குகளின் சுவிட்சைத் தேடி விளக்குப் போட்டார்.

    கூடத்தில் விளக்கு

    Enjoying the preview?
    Page 1 of 1