Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Crime
Crime
Crime
Ebook264 pages1 hour

Crime

Rating: 4 out of 5 stars

4/5

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateJul 21, 2019
ISBN6580126704378
Crime

Read more from Ra. Ki. Rangarajan

Related to Crime

Related ebooks

Related categories

Reviews for Crime

Rating: 4 out of 5 stars
4/5

2 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Crime - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    க்ரைம்

    Crime

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    அத்தியாயம் 20

    அத்தியாயம் 21

    அத்தியாயம் 22

    1

    ‘செய்திகள்’ வாசிப்பதற்காகப் பாலா தன் மேஜையடியில் வந்து உட்கார்ந்த போது, இன்னும் பதினைந்து நிமிடத்துக்குள் தனக்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படப் போகிறது என்று அறிந்திருக்கவில்லை. அப்பாவுடன் விளையாட்டும் வேடிக்கையுமாகச் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு பிரளயம் ஏற்படப் போகிறது என்று எதிர்பார்க்கவில்லை. கால் மணி முன்னதாகவே வந்திருந்து, நியூஸ் எடிட்டர் தயாரித்துப் புரொட்யூசர் கொடுத்திருந்த செய்திகள் பிரதியை ஒரு முறை படித்துப் பார்த்துக் கொண்டாள். ஒவ்வொரு செய்திக்கும் ஒவ்வொரு காகிதம் தனித் தனியாக இருந்தது. இரண்டாவது காகிதத்தில் ‘பிரதம மந்திரி’ என்பதற்குப் ‘பிரதம பந்திரி’ என்று டைப்பாகியிருந்ததைக் கண்டுபிடித்து, பேனாவினால் ஒரு ‘ம’ போட்டுக் கொண்டாள்.

    கடியாரம் ஏழு நாற்பத்தேழு காட்டியது. இன்னும் பதின்மூன்று நிமிடங்கள் இருந்தன. மேஜை மீதிருந்த இரண்டு மைக்குகளும் தலை நீட்டி அவள் முகத்தை ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தன. காஷுவல் நியூஸ் ப்ரஸென்ட்ட ராக அவள் டி.வி. நிலையத்தில் சேர்ந்த இந்த ஆறு மாத காலத்தில் அவள் செய்திகள் வாசிப்பது இது பத்தொன்பதாவது முறை. ஆகவே எல்லாம் அத்துபடியாகியிருந்தது அவளுக்கு.

    எதிரேயிருந்த டெலிவிஷன் பெட்டி ஒரு வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்து கொண்டிருப்பதைக் காட்டியது. அது முடிந்ததும் ‘செய்திகள்’ என்ற அட்டையைப் போட்டு, உடனே அவள் மெல்லத் தலைநிமிர்த்தி இளமுறுவலுடன் ஒரு வணக்கம் சொல்லிவிட்டு...

    ஆயிரக்கணக்கான இல்லத்தில் தன் முகத்தையும் தன் குரலையும் பிரியத்துடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணுகையில் அவள் நெஞ்சுக்குள் ஒரு பெருமை எழுந்தது. அதிலும் நிச்சயமாய் அப்பா, நாற்காலியை இன்னும் கொஞ்சம் டி.வி.க்கருகே இழுத்துப் போட்டுக் கொண்டு அவள் முகத்தையே உன்னிப்பாகப் பார்ப்பார். வீட்டுக்குத் திரும்பியதும் ‘உன் கன்னத்தின் மேல் ஒரு கொசு உட்கார்ந்திருப்பதைப் பார்த்தேனே!’ என்று வேண்டுமென்றே கலாட்டா செய்வார். அது கொசு இல்லேப்பா! மேக்கப் வுமன் வேண்டுமென்றே எனக்காக வைத்திருந்த திருஷ்டிப் பொட்டு என்று பாலா திருப்பிச் சொல்லுவாள். இது போலத் தினம் ஏதாவது ஒன்று.

    எப்போதும் போல் அதிக டார்க்காகவும் இல்லாமல் அதிக லைட்டாகவும் இல்லாமல் உடை அணிந்திருந்தாள். சிலுசிலுத்து நெற்றியில் விழுந்த கூந்தலைக் கோதி விட்டுக் கொண்டு நிமிர்ந்தபோது, கூரையில் ஒளவால் மாதிரி மந்தை மந்தையாய்த் தொங்கிக் கொண்டிருந்த விளக்குகளில் இரண்டைப் பளீரென்று எரியவிட்டார் காமராமேன். ஃப்ளோர் மானேஜரும், அஸிஸ்டெண்ட் ஃப்ளோர் மேனேஜரும் ஹெட்போனை மாட்டிக் கொண்டு நாற்காலியில் காலை நீட்டிக்கொண்டு எதிரே உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு இரண்டு புறமும் காமெராமேன்கள் இருந்தார்கள். எல்லோருமே போரடித்துப் போய், அடுத்த நிகழ்ச்சிக்காக அலுப்புடன் காத்திருந்தார்கள்.

    வலது பக்கம் உயரத்தில் கண்ணாடிச் சுவருக்குப் பின்னால் உள்ள அறையை நிமிர்ந்து பார்த்தாள். அந்த அறைக்கு என்ன பெயர் என்ற டெக்னிகல் விஷயங்கள் இன்னும் அவளுக்குப் புரிபடவில்லை. அந்த அறையின் உள்ளே இரண்டு பேர் நிகழ்ச்சியைக் கவனித்துக் கொண்டிருப்பது உண்டு என்று மட்டும் அவளுக்குத் தெரியும். அவர்களுடைய முகம் தெரியாத போதிலும் கண்ணாடிச் சுவர் வழியே, தன்னை வேடிக்கை பார்க்கும் இரண்டு மூன்று பேரின் உருவங்கள் தெரிந்தன. அடிக்கடி யாராவது சில பேர் பர்மிஷன் வாங்கிக் கொண்டு அந்த இடத்தில் வந்து நிற்பார்கள். போன வாரம் ஒரு பெரிய வடக்கத்திப் பட்டாளம் வந்திருந்தது. இன்று வந்திருப்பவர்களைப் பார்த்தால் ஆந்திரக்காரர்கள் மாதிரி தோன்றியது.

    பாலா மறுபடி மணியைப் பார்த்தாள். ஏழு நாற்பத்து எட்டு. அறையெங்கும் நிசப்தம் ஆக்கிரமித்திருந்தது. பேசக் கூடாதென்று இல்லை. ஏனெனில் நிகழ்ச்சி ஆரம்பிக்க நிறைய நேரம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொருவர் ஒவ்வோர் எண்ணத்தில் மூழ்கின மாதிரி இருந்தார்கள்.

    பாலா மறுபடியும் ஒரு முறை செய்திகள் காகிதத்தைப் பார்த்தாள். இரண்டு மூன்று முறை படித்துப் பார்க்கையில் அவளையும் அறியாமல் அவளுடைய மெல்லிய உதட்டில் ஒரு புன்னகை பரவியது.

    ஃப்ளோர் மானேஜர் அதைக் கவனித்திருக்க வேண்டும்.

    இன்று அத்தனை ஹாஸ்யமாக நியூஸில் என்னம்மா இருக்கிறது? என்று கேட்டார்.

    இல்லை, என் அப்பாவை நினைத்துக் கொண்டேன். தமிழ் வாக்கியங்களை அவர் வேண்டுமென்றே சகிக்க முடியாமல் டிரான்ஸ்லேட் பண்ணுவார். அது ஞாபகம் வந்தது. கோரம்! என்று வாய்விட்டுச் சிரித்தாள் பாலா.

    அவள் அப்பா ஜனார்த்தனன் போலீஸ் டிபார்ட்மெண்டில் துணைக் கமிஷனராக இருந்து ஓய்வு பெற்றவர். ஒய்வு பெற்றவர் என்று சொல்லமுடியாது. மூன்று நாலு வருடம் முந்தி ஒரு ஹார்ட் அட்டாக் வந்ததால், சர்விஸ் முடியுமுன்பே ரிடையர்மெண்ட் வாங்கிக் கொண்டார். ஆனால் அவரை ஹார்ட் பேஷண்ட் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் பழம் தின்று கொட்டை போட்ட காலத்தில் எப்படி உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்தாரோ அதே போல்தான் இன்றும் இருப்பார்.

    சினேகிதிகளைப் பற்றிப் பேசுகிறமாதிரி அப்பாவைப் பற்றிப் பிரியமாயும் சகஜமாயும் எல்லோரிடமும் பேசுவது பாலாவின் வழக்கம். இவர்களுக்கும் இது பழக்கம். தாயில்லாப் பெண்ணாகையால் தந்தையிடம் அதிகப்படி பாசம் என்பதைப் புரிந்து கொண்டு, அவள் போரடித்தால்கூட முகம் சுளிக்காமல் கேட்டுக் கொள்வார்கள்.

    இன்று காலை பாருங்கள். சமையல்காரப் பாட்டி புதிதாய் ஒரு அரப்புப் பொடி தயார் பண்ணியிருந்தாள். அதை உபயோகிக்காதே என்று அப்பா எவ்வளவோ சொன்னார். கேட்காமல் தலைக்குத் தேய்த்துக் கொண்டேன் என்றாள் பாலா.

    தலை நரைத்துவிட்டதா?

    அது கூடப் பரவாயில்லை. கண்ணிலேயும் மூக்கிலேயும் ஒரே எரிச்சல். அடுக்கடுக்காய்த் தும்மல். அப்பா என் தலையைத் துவட்டிவிட்டு, ‘ஃபென்ஸ் கோயிங் கெமிலியன் இயர் புட்டிங் அம்ப்ரல்லாயிங் அம்ப்ரல்லாயிங் என்றாளாம் ஒருத்தி. அந்த மாதிரி இருக்கிறது’ என்றார். எனக்கு ஒன்றுமே புரியலை.

    எங்களுக்கும்தான் என்று விழித்தார்கள் அங்கே இருந்தவர்கள்.

    வேலியோட போற ஓணானைக் காதில் விட்டுக் கொண்டு குடையுது குடையுது என்றாளாம் ஒருத்தி! என்று பாலா சொல்ல, அவர்கள் சிரிக்க...

    ப்ளோருக்குள் வேகமாக நுழைந்தார் ஓர் அஸிஸ்டென்ட்.

    பாலா மேடம், உங்களுக்குப் போன்!

    இப்போதா? டயமேயில்லை.

    அவசரமாம். பக்கத்து ரூமில்தான் கூப்பிடுகிறார்கள்.

    ஃப்ளோர் மானேஜர் கடியாரத்தைப் பார்த்தார். ஏழு ஐம்பத்திரண்டு.

    சரி, சட்டுப் புட்டென்று வந்துவிடு என்று அனுமதி தந்தார்.

    எதுவும் புரியாத உள்ளத்துடன் பக்கத்து அறைக்கு விரைந்தாள் அவள். யார் கூப்பிட்டார்கள்? என்று கேட்டதற்கு அங்கே யாரிடமிருந்தும் பதில் கிடைக்க வில்லை. இந்த நேரத்தில் - இந்த இடத்தில் - ஏன் கூப்பிடுகிறார்கள்? அப்பாவுக்கு ஏதாவது திடீரென்று உடம்பு சரியில்லாமல் போயிருக்குமோ? நினைக்கவே பகீரென்றது. இரண்டாவது ஹார்ட் அட்டாக் வந்தால் அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று டாக்டர் கிருஷ்ணன் சொல்லியிருந்தார்.

    ரிஸீவரைப் பதற்றத்துடன் எடுத்து பாலா ஹியர், என்றாள்.

    லிஸன் என்றது முரட்டுத்தனமான ஆண் குரல். அதிலே தென்பட்ட அதட்டல் அவளை ஒருகணம் நிலை குலைய வைத்தது. அதே சமயம், அப்பாவுக்கு ஏதாவதாக இருந்தால் கூப்பிடுகிற குரலின் தன்மையே வேறு மாதிரி இருக்கும் என்று ஞாபகம் ஏற்பட்டு, மனத்தில் சிறிது ஆறுதல் உதித்தது.

    யார்... யார் பேசுவது? என்றாள்.

    லிஸன் என்றது மறுபடியும் அதே குரல். கவனமாய்க் கேள்.

    பாலாவுக்கு முதலில் பயம் ஏற்பட்டது. பிறகு யாரோ கிண்டல் செய்கிறார்களோ என்று எண்ணினாள். புரோக்ராமுக்கு ஐந்து நிமிஷம் கூட இல்லை. யார் நீங்கள்? சீக்கிரம் சொல்லுங்கள் என்றாள் கோபமாக.

    நான் யார் என்பதைப்பற்றி நீ கவலைப்பட வேண்டாம். நீ மாஜி போலீஸ் ஏ.ஸி. ஜனார்த்தனத்தின் மகள் என்பது தெரிந்துதான் பேசுகிறேன். ரிடையரானதிலிருந்து உன் அப்பா என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா?

    அவளுக்கு யோசிக்க நேரமில்லை. போனை வைத்து விடலாமா என்று நினைத்தாள். அந்தக் குரலிலிருந்த மிரட்டல்... அச்சுறுத்தல் - அவளைப் பணிய வைத்தது. என்ன... யார் என்று குழறினாள்.

    எனக்கும் நேரமில்லை. சீக்கிரமே சொல்லி விடுகிறேன். உன் அப்பா மெமாயர்ஸ் எழுதி வருகிறார். நினைவுகள் - அநுபவங்கள் - பிறகு புத்தகமாய்ப் போடப் போகிறார். அதில் எங்கள் குடும்பத்தைப் பற்றி வரக்கூடாது. தெரிகிறதா?

    பாலாவுக்கு மேலும் மேலும் தலை சுற்றியது. அப்பா என்னவோ எழுதுகிறார் - எதுவோ வரக் கூடாதென்று இந்த ஆள் சொல்கிறான். என்ன இதெல்லாம்?

    கேள். என் குடும்பத்தைப் பற்றி வரக்கூடாது. மாயப்பன் குடும்பம். புரிகிறதா? அது சம்பந்தமான குறிப்புகள் மொத்தத்தையும், காகிதம், டயரி எல்லாவற்றையும் அப்புறப்படுத்தி விட வேண்டியது உன் பொறுப்பு. புரிகிறதா? இல்லாவிட்டால் உன் அப்பாவின் உயிருக்கு நான் ஜவாபில்லை. அதையெல்லாம் எடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் பிறகு சொல்கிறேன்...

    இனிமேலும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை என்று அவள் நினைத்த அதே சமயம், ஃப்ளோர் மானேஜர், பாலா! ஒன்லி ஃபைவ் மினிட்ஸ்! கமான்! என்று கதவைத் திறந்து கொண்டு வந்து கூப்பிட்டார்.

    போனைத்திரும்ப வைக்குமுன் கடைசியாக அந்தக் குரல் சொல்வது அவள் காதில் விழுந்தது. பாக்கியும் கேள். என் பேச்சுக்கு நீ சம்மதித்தாய் என்று அடுத்த வாரம் எனக்குத் தெரியவேண்டும். உனக்கு அடுத்த புரோக்ராம் சனிக்கிழமை. இல்லையா? அன்று தலையில் ஒரே ஒரு வெள்ளை ரோஜா செருகிக் கொண்டு வா. டி.வி.யில் அதைப் பார்த்துப் புரிந்து கொள்கிறேன். ஓ.கே?

    ஃப்ளோர் மானேஜருடன் ஒரே தாவலில் தன் அறையை அவள் அடைந்த போது, முகமெல்லாம் வியர்ந்து வழிந்து கொண்டிருந்தது. மேக்கப் வுமன் விசாலம் பத்து நிமிடம் மெனக்கெட்டு செய்திருந்த டச்சப் கெட்டுக் குட்டிச் சுவராகியிருந்தது. முகம் பேயறைந்த மாதிரி வெளிறியிருந்தது. தன்னை அவள் சுதாரித்துக் கொள்ளு முன் டி.வி.யில் ‘செய்திகள்’ என்ற அட்டை போடப்படுவதைக் கண்டாள். ட்யூனின் ஒலியைக் கேட்டாள். பளீரென்று விளக்குகள் பிரகாசித்தன.

    அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே ஃப்ளோர் மானேஜர் அவள் இன்று செய்தி வாசிக்க உபயோகப்பட மாட்டாள் என்று கண்டு கொண்டார். அடுத்த வாரம் எதிரொலியில் நூற்றுக்கணக்கான கடிதங்களுக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும் - ஏன் பாலா அப்படி இருந்தாள், ஏன் அப்படிக் குழறித் தடுமாறினாள் என்றெல்லாம்.

    துணைப் புரொட்யூசரும் அதே நிலைமையை அதே கணம் ஊகித்துக் கொண்டார். பாலாவைக் கையாலேயே சைகை காட்டிக் கதவருகே நிறுத்திவிட்டு, பாலாவின் மேஜை மீதிருந்த செய்திகள் பிரதியைக் கையில் எடுத்துக் கொண்டார். வணக்கம்... என்று படிக்கத் தொடங்கினார்.

    யாரும் பெரு மூச்சுக்கூட விட முடியாத அறை அது. காலியாயிருந்த நாற்காலியொன்றில் ஓசைப் படாமல் உட்கார்ந்தாள் பாலா. கைப்பையிலிருந்து மெல்லக் கைக்குட்டையை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

    ஃப்ளோர் மானேஜர் மெல்ல அவளிடம் வந்து தோளைத் தட்டினார். வயதானவராகையால் அந்த உரிமை இருந்தது. கண்ணால் சாடை காட்டி, உனக்கு உடம்பு சரியில்லை. வீட்டுக்குப் போ என்றார்.

    அத்தனை பதட்டத்துக்கிடையில் ஒரு நிம்மதியுடன் அவள் எழுந்து கொண்டாள். சிறகு முளைத்துப் பறந்து உடனே வீட்டையும் அப்பாவையும் அடைந்துவிட்டால் தேவலை என்றிருந்தது. இரண்டு ஃப்ளோர்களையும் கடந்து ரிஸப்ஷன் ஹாலுக்கு வருவதற்குள் பல பேர் எதிர்ப்பட்டு, ‘ஏன்? என்ன? ஏன் நீ இன்றைக்கு நியூஸ் சொல்லவில்லை? என்ன ஆயிற்று?’ என்று கேட்டுக்

    கொண்டிருந்தார்கள்.

    மெயின் கேட்டைக் கடந்து ஆடம்ஸ் ரோடுக்கு வந்தாள்.

    கடற்கரையிலிருந்து சில்லென்ற குளிர் காற்று வீசியது. சாலையில் மின்சார விளக்குகள் எரியாமலிருந்தாலும், புதிதாகக் கட்டப்பட்ட ஓவர்ஸீஸ் டெலிகம்யூனிகேஷன் சென்ட்டருக்குள்ளிருந்து சிறு சிறு வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. அதைக் கடந்து சென்றதும் எம்.எல்.ஏ. ஹாஸ்டலிலிருந்து இன்னும் அதிக வெளிச்சம் கிடைத்தது. அங்கே நுழைந்து, சிறுவர் அரங்கத்தைக் கடந்து வாலாஜா ரோட்டை அடையலாம் என்று நினைத்தாள்.

    பூம்மா என்று குரல் அவளை நிறுத்தியது. எவளோ ஒரு பூக்காரி. கூடை நிறைய வெள்ளை ரோஜாப்பூக்கள்!

    வெள்ளை ரோஜாம்மா. கிடைக்கவே கிடைக்காது. ரூபாய்க்கு எட்டுப் பூ தர்றேன். வாங்கிக்க. - இருட்டி வெகுநேரமாகி விட்ட இந்த நேரத்தில், மெரினாவுக்கு இவ்வளவு தள்ளிய இடத்தில், ஒரு பூக்காரியை சந்தித்தது கூட அவளுக்கு ஆச்சரியமில்லை. ஆனால் வெள்ளை ரோஜா! சில நிமிடங்களுக்கு முன்னால் டெலிபோன்காரன் சொன்ன வெள்ளை ரோஜா! அது ஏன் இவ்வளவு விரைவாகத் தன் வாழ்க்கையில் குறுக்கிட வேண்டும்? கெடுதலாக ஏதோ நடக்கப் போகிறது என்பதற்கு அடையாளமா?

    விரைந்து நடையைப் போட்டாள்.

    எம்.எல்.ஏ. ஹாஸ்டலைக் கடக்கையில், வெற்றிலை பாக்குக் கடைக்கு எதிரே நிறுத்தியிருந்த ஆட்டோக்காரர் எங்கேம்மா போகணும்? என்று அழைத்தார்.

    ஏறிக்கொண்டு ‘மயிலாப்பூர்’ என்றாள். கிழக்கு மாடவீதி.

    மாயப்பன்... மாயப்பன்... என்று அவள் உதடுகள் வழியெல்லாம் முணு முணுத்துக் கொண்டேயிருந்தன. யாரந்த மாயப்பன்? பேசியவன் பெயரே மாயப்பனா? அல்லது மாயப்பன் என்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனா?

    ரிடையர் ஆனது முதல் அப்பா தினம் ஏதாவது எழுதுவதுண்டு என்று அவளுக்குத் தெரியும். வெறும் டயரி என்று நினைத்திருந்தாள். இருவருக்குமிடையே அந்தரங்கம் எதுவும் கிடையாது என்றாலும், தன் அனுபவங்களை, வாழ்க்கைக் குறிப்புக்களை, படித்ததும் கேட்டதுமான தொழில் நினைவுகளைத் தொகுத்துக் கொண்டிருப்பதாக அவர் சொன்னதில்லை. அவளும் அவருடைய அறையை அத்தனை தீவிரமாகக் குடைந்தது கிடையாது. எவனோ ஓர் அன்னியன் மூலமாக அதைத் தெரிந்து கொண்ட போது அவளுக்குத் தன் மீது வெட்கமும் அப்பா மீது கோபமும் ஏற்பட்டன. ஏன் இவருக்கு இந்த வயதில் இந்த வேலையெல்லாம்? இலக்கிய உலகம் அழுகிறதா இவர் எழுதவில்லையென்று? துப்பறியும் நாவல்களைப் படித்துக் கொண்டு, கேஸட்டுகளைக் கேட்டுக் கொண்டு ஹாய்யாய்ப் பொழுதைப் போக்காமல்...

    ஆனால் அப்பா பெரும் ஆபத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஞாபகம் வந்ததும் அவள் கோபம் மறைந்தது. அவருக்கு எந்தக் கணம் என்ன நேருமோ என்று எண்ணுகையிலேயே அவளுக்குக் கண்ணில் நீர் கரித்தது. வேடிக்கையாகப் பேசும் அப்பா - விளையாட்டுப் பிள்ளையான அப்பா - உலகத்தில் தனக்கு இருக்கும் ஒரே பிடிப்பான அப்பா - அவருக்கு ஏதாவது நேர்ந்தால்...

    Enjoying the preview?
    Page 1 of 1