Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kaadhal Kathaigal
Kaadhal Kathaigal
Kaadhal Kathaigal
Ebook288 pages1 hour

Kaadhal Kathaigal

Rating: 5 out of 5 stars

5/5

()

Read preview

About this ebook

ரா.கி.ரங்கராஜன் : 5.10.1927-ல் கும்பகோணத்தில் பிறந்தார் தந்தை மகாமகோபாத்தியாய ஆர்.வி. கிருஷ்மாச்சாரியார், மிகப் பெரிய சமஸ்கிருத வித்வான். ரங்கராஜன், தனது 16வது வயதில் எழுத ஆரம்பித்தார். 1946-ல் 'சக்தி' மாத இதழிலும் 'காலச்சக்கரம்' என்ற வார இதழிலும் உதவி ஆசிரியராகத் தொடர்ந்தார். 1950-ல் 'குமுதம்' நிறுவனம் சிறிது காலம் நடத்திய 'ஜிங்லி' என்ற சிறுவர் இதழில் சேர்ந்து, குமுதம் இதழில் 42 ஆண்டு காலம் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். இவர் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவருடைய மூன்று நாவல்கள் திரைப்படமாக வெளிவந்துள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் இடம் பெற்றுள்ளன. ரங்கராஜன் 'சூர்யா', 'ஹம்ஸா ', 'கிருஷ்ணகுமார்', 'மாலதி', 'முள்றி', 'அவிட்டம்' - போன்ற புனைப்பெயர்களில் தரமான சிறுகதைகள், வேடிக்கை நாடகங்கள், துப்பறியும் கதைகள், குறும்புக் கதைகள், மழலைக் கட்டுரைகள், நையாண்டிக் கவிதைகள்-என பலதரப்பட எழுத்துக்களைத் தந்தவர், ஒவ்வொரு புனைப் பெயருக்கும் - நடையிலோ, கருத்திலோ, உருவத்திலோ எதுவம் தொடர்பு இல்லாமல் தனித்தனி மனிதர்போல் எழுதிய மேதாவி. இந்தப் பல்திறமைக்கு ஒரே ஒரு முன்னோடி தான் உள்ளர்.

- கல்கி


'ரங்கராஜன் ஒரு கர்ம யோகி, குமுதம் ஸ்தாபன விசுவாசம், ஆசிரியர் எஸ்.ஏ.பி. மேல் பக்தி, கிடைத்தது போதும் என்கிற திருப்தி, சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பிரிவு, நேசம், வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி, நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு-இவைதான் இவருடைய சிறப்புகள்'.

- சுஜாதா

Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580126704207
Kaadhal Kathaigal

Read more from Ra. Ki. Rangarajan

Related to Kaadhal Kathaigal

Related ebooks

Reviews for Kaadhal Kathaigal

Rating: 5 out of 5 stars
5/5

1 rating0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kaadhal Kathaigal - Ra. Ki. Rangarajan

    http://www.pustaka.co.in

    காதல் கதைகள்

    Kaadhal Kathaigal

    Author:

    ரா. கி. ரங்கராஜன்

    Ra. Ki. Rangarajan

    For more books

    http://pustaka.co.in/home/author/ra-ki-rangarajan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஒரு கட்டிலைச் சுற்றி...

    2. செல்ல ராஜு

    3. விஸ்கி ஒரு பெக்...

    4. ராஜ குடும்பத்து முட்டாள்

    5. கன்னி

    6. புதுச்சேரியில் ஒரு சந்திப்பு

    7. பார்ஸி வைத்தியர்

    8. எங்கே பிறந்திருக்கிறானோ?

    9. யசோதா, வரலஷ்மி, மல்லிகா, சுஜாதா, இவள்...

    10. அவன் தொழில்: காதலிப்பது

    11. பழையபடி...

    12. விரல்கள், விரல்கள், விரல்கள்!

    13. உன்னை...

    14. கோவாச்சி

    15. அக்கௌண்டெண்ட்டின் மனைவி

    16. வடிவேலுவின் வாத்தியம்

    17. ஒரு பெண்ணின் சிரிப்பு

    18. வெங்கடசாமிக்குத் தெரியாது

    19. பலவீனம்

    1. ஒரு கட்டிலைச் சுற்றி...

    ஆபரேஷன் அறையின் கதவுகள் திறந்து கொண்டு வழி கொடுக்க, வழுவழுப்பான பாதை வழியே அந்த ஸ்ட்ரெச்சரைத் தாங்கிய வண்டி வழுக்கிக் கொண்டே வெளியே வந்தது.

    கொடூரமான வெள்ளை நிறத்தில் பெட்ஷீட்டு அந்த உருவத்தின் தொண்ணூறு சதவிகிதப் பகுதியை மறைத்திருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்த இடுக்குகளிலிருந்து அவ்வளவு கட்டுக்களுடன் கிடப்பவன் ஓர் இளைஞன் என்பதை ஊகிக்க முடிந்தது.

    வெராந்தாக் கைப்பிடிச் சுவர் ஓரமாக நின்றிருந்த அவனுடைய அம்மா, அப்பா, சகோதரன், சகோதரி, சகோதரியின் கணவன்... ஐந்து பேரும் தங்கள் துன்ப மயக்கத்திலிருந்து சரேலென விழித்துக் கொண்டார்கள். சற்றுத் தள்ளினாற் போல் அவர்கள் வீட்டு வேலைக்காரன், பெரியம்மா பாவம் நேற்று இரவிலிருந்து பட்டினி என்று பரிதாபப்பட்டு, பிளாஸ்கிலிருந்து காப்பி எடுக்கவிருந்தவன், ஸ்ட்ரெச்சர் வந்ததும் மூடியைத் திரும்ப மூடினான். அப்பாக்காரரின் உதடுகள் 'ஸ்ரீராம் ஜெயராம், ஸ்ரீராம் ஜெயராம்' என்று வெளியே கேட்காதபடி ஜபித்துக் கொண்டிருந்தன.

    டாக்டர், என் குழந்தை... என் ராஜு... பிழைச்சிடுவான் இல்லையா? என்று அம்மாக்காரி பதறினாள், ஸ்ட்ரெச்சரின் பின்னால் வந்த டாக்டரிடம்.

    டாக்டர் சங்கடத்துடன் தன் கைக்கடியாரத்தைப் பார்த்துக் கொண்டார். பன்னிரண்டு மணி நேரம் தாண்டட்டும். பலமான அடியல்லவா?

    ஸ்பெஷல் வார்டில் கட்டிலில் அவனைக் கிடத்தினார்கள்.

    ராஜு...

    அவனுடைய உடம்பிலிருந்தே கிளைத்த மாதிரி, நாசியிலும் புஜத்திலும் பலவிதமான ட்யூப்கள் செருகப்பட்டிருந்தன.

    நர்ஸ் அந்தத் தாயின் தோளை மெல்லத் தொட்டு, பேஷண்டைத் தயவு பண்ணித் தொந்தரவு செய்யாதீர்கள். எல்லாம் சரியாகி விடும். கொஞ்சம் பொறுமையாயிருங்கள் என்றாள்.

    பத்து மாசம் சுமந்து பெற்றவளம்மா நான்... என் தவிப்பு உனக்குத் தெரியுமா? என்ற தாய், வாயில் புடவைத் தலைப்பைப் புதைத்துக் கொண்டாள்.

    அவள் கண்ணீர், ஆணைக்குக் கட்டுப்பட்ட மாதிரி கீழ் இமையின் ஓரங்களிலேயே மெல்ல உலரலாயிற்று. சகோதரன் உதட்டைக் கடித்துக் கொண்டான். தந்தை ஜன்னல் பக்கம் போய் நின்று கொண்டார். சகோதரியும் சகோதரி கணவனும் மார்பின் குறுக்கே கை கட்டிய வண்ணம் அசையாது அவனைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ராஜுவின் உதடுகள் அசைந்தன... அசைவு அல்ல. அசைவின் ஒரு பின்னம். அல்லது அசைகிற மாதிரி ஒரு பிரமையோ? அவன் சகோதரி சட்டெனக் குனிந்து அவன் உதட்டோடு காதை வைத்துக் கொண்டாள். என்ன ராஜு, சொல்லு, சொல்லு என்று கம்மிய குரலில் கேட்டாள்.

    ப்ளீஸ்... நோ எக்ஸைட்மெண்ட் என்று நர்ஸ் அவளை விலக்கி விட்டாள்.

    அதற்குள் அவன் சொன்ன வார்த்தை சகோதரிக்குக் கேட்டுவிட்டது. அம்மா, அதேதான் அம்மா... என்று பரபரப்புடன் தாயை நெருங்கி உட்கார்ந்து கொண்டாள். சோனி சோனி என்கிறான்... அவள் ஞாபகம்தான்...

    சோனியா? தாய் திகைத்தாள். யார்?

    அதுதான் அந்தப் பெண்... நான் சொல்லவில்லை? ராஜுவை டெலிபோனில் ஒரு பெண் கூப்பிட்டாளென்று? இவன் கிட்டே சொன்னதும் ஒரே பாய்ச்சலில் போனைப் பறித்துக் கொண்டு, 'சோனியா? நோ டார்லிங் நேரில் வருகிறேன்!' என்று சொன்னானே... அவளைப் பார்க்க மோட்டார் பைக்கில் வேகமாகப் புறப்பட்டவன்தான் இந்தக் கதியில்... - அவள் விம்மினாள்.

    ராட்சசி... சண்டாளி... பாவி! அவள் நன்றாயிருக்க மாட்டாள். வரட்டும் அவள் வராமலா போகப் போகிறாள்.... அவள் யாராயிருந்தாலும் சரி... அடுக்கடுக்காகத் தாய் புலம்பியதைக் கேட்ட, வெராந்தா வழியே போய்க் கொண்டிருந்த ஒரு டாக்டர் உள்ளே வந்தார். நர்ஸ்! இதென்ன, எமர்ஜன்ஸி கேசைச் சுற்றி இப்படியொரு சந்தைக் கடை? என்று கடிந்து கொண்டார்.

    பார்த்தீர்களா... நான் சொன்னேனே... என்ற நர்ஸ், நாசூக்காக அவர்களை வெளியேற்றினாள்.

    பாண்டேஜ்களையே ஆடையாகக் கொண்டிருந்த அவனுக்கு இது எதுவும் தெரியாது... அவன் நினைவுகள் ஜன்னி பிடித்து எங்கெங்கோ திரிந்து கொண்டிருந்தன. படத்தைச் சுக்கலாய்க் கிழித்த பின்னர் சேர்த்து வைக்க முயலுகிற மாதிரி அந்த நினைப்புகளை ஒன்று சேர்த்துச் சரி செய்து ஒரு பெண்ணின் முகத்தை உருவாக்குவதில் அவன் உயிரை விட்டுக் கொண்டிருந்தான்.

    ரத்த ஓட்டத்தின் வேகம் ஏற ஏற, அதைத் தாவிப் பிடிப்பதில் பயங்கரப் போட்டியிட்டது நாடித் துடிப்பு. பிராண வாயு வற்றி வற்றி, உடம்பு கிட்டத்தட்டக் கறுப்பாகிக் கொண்டிருந்தது. பாதங்களும் விரல் நுனிகளும் செத்துச் சோகையாகிக் கொண்டிருந்தன.

    'சோனி...'

    'சோனி...’

    பல ஃப்ளாட்டுகள் கொண்ட கட்டிடம் அது. காலை எட்டுமணி வேளை. கடற்காற்று ஜிலுஜிலுவென்று வீசிக் கொண்டிருந்தது. அவனும் அவன் சினேகிதர்கள் சிலரும் உற்சாகமாக அரட்டையடித்துக் கொண்டு, போர்ஷன் போர்ஷனாகப் பஸ்ஸரை அழுத்தி, குடித்தனக்காரரை வரவழைத்து, விவரங்களைக் கேட்டு, கையிலுள்ள வாக்காளர் பட்டியலைத் திருத்திக் கொண்டிருக்கிறார்கள். கடனிழவே என்றல்ல; உல்லாசமாய், சந்தோஷமாய், பெருமையாய், வேடிக்கையாய்.

    அவன் மூன்றாம் மாடியில் இடப் பக்கமுள்ள போர்ஷனை அணுகுகிறான். பஸ்ஸரை அழுத்துகிறான். கதவிலுள்ள ‘கண்ணாடிக் கண்' வழியாய் உள்ளே இருப்பவர்கள் பார்ப்பார்கள் என்பது அவனுக்குத் தெரியும். விளையாட்டுக்கு அந்தக் கண்ணாடியை உள்ளங்கையால் பொத்திக் கொள்கிறான்.

    கண்ணாடியின் வழியே எதுவும் தெரியாததால், கோபத்துடன் கதவைத் திறக்கிறார்கள். ஒன்றும் தெரியாதவன் மாதிரி அவன் பணிவுடன், கார்ப்பரேஷன் ஓட்டர்ஸ் லிஸ்ட் செக் பண்ணுகிறோம். சோஷியல் சர்வீஸ். நாங்கள் காலேஜ் ஸ்டூடண்டுகள் என்று மற்றப் போர்ஷன்களின் வாசல்களில் இருப்பவர்களைச் சுட்டிக்காட்டி விட்டு, பிறகுதான் கதவைத் திறந்தவரைத் தலை நிமிர்ந்து பார்க்கிறான். சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஸாரி டு டிஸ்டர்ப் யூ என்கிறான்.

    நெவ மைஷ்ண்ட் என்று அந்தப் பெண் பதிலளித்து விட்டு, மறுபுறம் சென்று வாஷ்பேசினில் கொப்புளித்து விட்டுத் திரும்புகிறாள். அப்படியும் கூட அவள் வாயின் ஓரங்களில் நுரைப் புள்ளிகள் நிற்கின்றன. கையில் ஈர பிரஷ்ஷிலிருந்து நீர் சொட்டுகிறது.

    நீங்க பல் விளக்கிவிட்டு வாங்க. நான் வெயிட் பண்ண முடியும் என்கிறான்.

    நோ. நீங்க நல்ல காரியம் செய்கிறீர்கள். அதற்கு உதவுவதுதான் முக்கியம் என்கிறாள் அவள் புன்னகையுடன்... இடது புறங்கையால் நெற்றிக் கூந்தலை ஒதுக்கிவிட்டுக் கொண்டபடி.

    அந்தப் புன்னகையா... அந்தக் காலை வேளையா... இந்த ஈரம் சொட்டும் பிரஷ்ஷா... எதனால் விளைந்ததென்று அவனுக்குப் புரியவில்லை… திடீரென்று அவனுக்கு உலகமே ஆனந்தமயமாக ஆகிறது. அந்தப் பூப்போன்ற உதட்டின் வழியே வெளிப்படும் ஒவ்வொரு சொல்லையும் ஒரு மாணிக்கக் கட்டிபோல் உள்ளங் கையில் ஏந்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

    வீட்டிலுள்ளவர்களின் பெயர்களைச் செக் பண்ணிக் கொள்கிறான். கடைசியில், சோனி... 21 வயது... நீங்கள்தானா அது? என்றான்.

    சோனி? அவள் ஜாபிதாவை எட்டிப் பார்க்கிறாள். அவளுடைய சில்க் கூந்தல் அவன் தோளில் உரசுகிறது. ஷாம்பூவின் நறுமணத்தை அவன் நுகர்கிறான். குபுக்கென்று அவள் சிரிக்கிறாள். என் பெயர் மோனி. தப்பாய் அச்சிட்டிருக்கிறார்கள். 'எம் ஓ என் ஐ’ - க்குப் பதில் 'எஸ் ஓ என் ஐ' என்று வந்திருக்கிறது என்கிறாள்.

    இருந்தாலும் சோனி என்கிற பெயரில்தான் உங்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன். நான் மட்டும் அப்படியே கூப்பிடுகிறேன். அனுமதி கொடுங்கள் என்கிறான் அவன். அவள் சிரிக்கிறாள்.... அதுதான் அவனுக்கும் அவளுக்கும் முதல் அறிமுகம்...

    அம்மா... அதோ ஒருத்தி வருகிறாள் பார்... அவசரமாய் என்று வெராந்தாவின் கோடியைக் காட்டினாள் ராஜுவின் சகோதரி. லேசான மாறுகண் அவளுக்கு. அவளாய்த்தான் இருக்கும்... ராஜுவைத்தான் பார்க்க வருகிறாள்...

    தாய்க்கு ரத்தம் கொதித்தது. கோபத்தினால் முகம் குங்குமச் சிவப்பாய் மாறியது. கைவிரல்களைப் பிசைந்து நெறித்துக் கொண்டு, வரட்டும், கேட்டு விடுகிறேன் சண்டாளியை! 'ஏண்டி என் ராஜுவுக்கு இந்தக் கதி கொடுக்க எத்தனை நாளாகக் காத்திருந்தாயடி?' என்று கேட்காமல் விடப் போவதில்லை... என்றாள்.

    அப்பா, தனது 'ஸ்ரீ ராம்’ ஜெபத்தைச் சிறிது நிறுத்திக் கொண்டார். நம் வருத்தத்திற்கு நாம் கதறுகிறோம் என்றாலும் ஆஸ்பத்திரியில் பிறருக்கு இடைஞ்சலாக இருக்கலாமா என்று அவருக்குத் தயக்கமாக இருந்தது. வேண்டாம், கோமதி. இது ஆஸ்பத்திரி. நாம் பாட்டுக்கு ரகளை பண்ணக் கூடாது. அவன் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கிறான் அங்கே...

    அதற்குக் காரணமானவளே இந்த நாசகாரிதானே? இவள் வரச் சொன்னதால்தானே அவன் புறப்பட்டுப் போனான்? அதனால்தானே ஆக்ஸிடெண்ட்...

    வந்து கொண்டிருந்த பெண் அவர்களை நோக்கி நெருங்கவில்லை. வார்டுக்குள்ளும் நுழையவில்லை. நேரே இன்னொரு வார்டுக்குச் சென்று திரும்பி விட்டாள்.

    வேறே யாரோ பெண்ணம்மா இவள் என்றான் ராஜுவின் சகோதரன். அந்த ஸோனி சரியான நெஞ்சழுத்தக்காரி. விபத்து நேர்ந்தது தெரியாமலா இருக்கும்? எட்டிப் பார்க்கவில்லை பாரேன்?

    சகோதரி, இனிமேல் ஏன் வரப் போகிறாள்? கறக்கிற வரையிலும் கறந்திருப்பாள்... என்றாள்.

    ராஜுவின் நரம்புகளில் ரத்தம் கெட்டியாகிக் கொண்டே வந்ததால், வினாடிக்கு வினாடி அதன் சப்தம் மெதுவாகிக் கொண்டிருந்தது. அதை நகர வைப்பதற்காக இருதயம் சிரமத்துடன், மேலும் மேலும் சிரமத்துடன் அடித்துக் கொண்டிருந்தது.

    அதற்குப் பிறகு பல சந்திப்புக்கள்.

    முதல் அணைப்பு, முதல் முத்தம், காதோடு முதல் ரகசியம்... ஒவ்வொரு அசைவுக்கு ஓர் அர்த்தம், ஒவ்வொரு பார்வைக்கு ஒரு பொருள், அவனுக்கும் அவளுக்கும் மட்டுமே தெரிந்த அந்தரங்கங்கள்... அந்த அந்தரங்கங்கள் வேறு யாருக்கும் தெரியாது. எவருக்கும் தெரியாத ரகசியம் தங்களிடையே இருப்பதை எண்ணி ஒரு பெருமை...

    கடைசியாக, நேற்றா, சற்று முன்பா, நூறு இருநூறு வருடத்துக்கு முன்பா... அவன் கை அவளுடைய இடையைச் சுற்றிக் கொண்டு விளையாடுகிறது. 'நீ என்னவள்!' என்று சொல்லி அந்தச் சலவைக் கல் முதுகில், கூந்தலை விலக்கிவிட்டு பால் பாயிண்ட் பேனாவினால் அவன் இனிஷியல் செய்கிறான். அந்தக் குறுகுறுப்பில் அவள் நெளிகிறாள். அவளது சிறிய மோவாய் அவனுடைய நெஞ்சுக்குள் அளவெடுத்த மாதிரி பதிந்து கொள்கிறது.

    நாளை மகாபலிபுரம் என்கிறான் அவன்.

    ஊகும்... எனக்கு டியூட்டி எப்படி இருக்குமோ? என்று அவள் மறுக்கிறாள்.

    டயம் இருந்தால் எனக்கு போன் பண்ணுகிறாயா? வீட்டுக்குப் பண்ணு. பரவாயில்லை. பிற்பாடு நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்...

    வாக்களித்தபடி அவள் போன் செய்கிறாள் 'வருவதற்கில்லை' என்று. ஆனால் அவனுக்குத்தான் பொறுக்கவில்லை. எப்படியும் அவளை அழைத்துப் போய்விட வேண்டுமென்று...

    அவன் எண்ணத்தில் ஒரு லாரி குறுக்கிட்டு விட்டது.

    ஸிங்க்கிங் என்று யாரோ சொல்லி விட்டுப் போனார்கள்.

    அப்படின்னா... என்ன.... என்ன... என்ன... தாய் கதறினாள்.

    டாக்டர் சொன்னார், இனி நம்பிக்கை இல்லை. பக்கத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள்.

    ட்யூப்களை அகற்றிக் கொண்டிருந்தாள் நர்ஸ். அப்பாவுக்கு ஸீட் இல்லை. நர்ஸ் தன் முக்காலியை அவருக்குத் தந்துவிட்டு ஒதுங்கிக் கொண்டாள்.

    ஒவ்வொரு குழாயாய் ரத்த ஓட்டம் அடைபட்டுக் கொண்டிருந்தது. சுவாசம், ரத்த அழுத்தம் இரண்டும் வெகு வேகமாக விழுந்து கொண்டிருந்தது. உடம்பு கொஞ்சம் கொஞ்சமாக மரத்துக் கொண்டிருந்தது. உயிர் என்ற பாய் தன்னைத் தானே சுருட்டிச் சுருட்டி மடங்கிக் கொண்டிருந்தது.

    ஒரு டாக்டர் உள்ளே வந்தார். நாடியைப் பார்த்தார். கண் இமைகளை இழுத்துப் பார்த்தார். ஸோ ஸாரி என்று கூறி விட்டு, நெஞ்சு வரை இருந்த வெள்ளைத் துணியை அவன் முகத்தின் மீது இழுத்துப் போர்த்தி விட்டு அகன்றார்.

    அடி பாவி! நீ நன்றாயிருப்பாயா? ராஜாவாட்டம் இருந்தானே என் செல்லம்? அவனை வாரிக் கொண்டு போய் விட்டாயேடி? எங்கேயிருந்தடி வந்தாய்? என்று கதறலானாள் தாயார்.

    ராஜு... ராஜு... என்று மகனின் காலடியில் தலையை மோதிக் கொண்டிருந்தார் தந்தை. ஜெபம் மறந்து விட்டது இப்போது.

    வேலைக்காரன், வீணாகி விட்ட பிளாஸ்க் காப்பியை வெளியே கொட்டினான்.

    நான் சொன்னது சரிதானே அண்ணா? என்று அண்ணனிடம் கதறினாள் தங்கை. இத்தனைக்கும் காரணமான அந்தப் பாவி வரவேயில்லை பார்! பெண்ணா அவள்? மிருகம்! சாக்கடைப் பிறவி! காசு பறிக்கிறதுக்காகச் சினேகிதம் வைத்திருந்த வேசி!

    ஆஸ்பத்திரியின் மற்றொரு பகுதியில், நர்ஸ்களின் ரெஸ்ட் அறை.

    வெள்ளை யூனிபாரத்தை முற்றுமாகக் களைந்தபின், இனி ட்யூட்டியில் இல்லை என்ற சுதந்திரத்தோடு, அந்த நர்ஸ் ஓவென்று அழ ஆரம்பித்தாள்.

    ஆச்சரியத்தோடு மற்ற நர்ஸ்கள் அவளை நெருங்கி வந்து சூழ்ந்து நின்றார்கள். அவள் அதைப் பொருட்படுத்தவில்லை. நெஞ்சு வெடிக்க மேலும் மேலும் வாய்விட்டுக் கதறலானாள்.

    ராஜு... ராஜு...

    2. செல்ல ராஜு

    கறுப்பு கவுன் இருபுறமும் சாமரம் வீசுகிற மாதிரி பறக்க, ஹைகோர்ட் படிகளில் ஒவ்வொன்றாக இறங்கி வந்தாள் லாயர் செண்பகத்தம்மாள்.

    பின்னாலேயே கைகட்டிக் கொண்டு வந்த டெரிலின் ஸ்லாக் நபர், அப்ப சென்ட்ரலுக்கே நேரே வந்துடறீங்களா? எங்க ஐயாவை நர்ஸிங் ஹோமிலிருந்து அங்கேதான் அழைச்சிட்டு வரப்போகிறோம் என்றார்.

    ப்ளூ மவுண்டன்தானே? வந்து விடுகிறேன், போங்கள் என்று அவருக்கு விடைகொடுத்தாள்.

    டிரைவர் பழனி எதிர்கொண்டு விரைந்து வந்து கேஸ் கட்டுக்களை அவளிடமிருந்து பெற்றுக் கொண்டான்.

    தண்ணீர்த் தொட்டியருகே நிறுத்தப்பட்டிருந்த தனது காருக்குள், முன்கதவைத் திறந்து வைத்துக் கொண்டு ஒரு காலைத் தொங்கப் போட்டாற்போல் உட்கார்ந்திருக்கும் குமரனைப் பார்த்தாள். அம்மா வருவதைக் கண்டதும் கையில் புகைந்து கொண்டிருந்த சிகரெட்டை மறுபக்கத்தில் எறிந்து விட்டு நல்ல பிள்ளைபோல் புன்னகை செய்வதையும் கவனித்தாள். அந்தப் போலி மரியாதைகூட அவளைப் புளகாங்கிதம் கொள்ளச் செய்தது.

    வகிடு எடுக்காமல் ஹிப்பி பாணியில் வாரியிருந்த தலையையும், ஆரோக்கியமான வளர்ச்சியைக் குறிக்கும் தோள்களையும் காணுகின்ற மற்றவர்களுக்குத்தான் அவன் வாலிபனாகத் தோற்றமளித்தானே தவிர, செண்பகத்தம்மாளுக்கு அவன் இன்னும் குழந்தையாகவே காட்சியளித்தான்.

    ரொம்ப நேரமாச்சா ராஜு, நீ வந்து? இன்றைக்கு ஆபீசுக்குப் போகவில்லையா? என்றாள் செண்பகத்தம்மாள்.

    சும்மா இருப்பது அகெளரவம் என்பதற்காக, ஹிந்துஸ்தான் டெலிபிரிண்டர்ஸின் நிர்வாகப் பிரிவில் ஒரு வேலை பார்த்து வந்தான் ராஜு. இல்லேம்மா. காலையில் போயிருந்தேன். மத்தியானம் லீவு போட்டுவிட்டேன் அம்மாவை நேரே பாராமலே, பின்கதவைத் திறந்துவிட்டான் ராஜு.

    கறுப்பு அங்கியை உள்ளே போட்டுவிட்டு, செண்பகத்தம்மாள் தானும் ஏறிக்கொண்டாள் காருக்குள். ஏண்டா ராஜா என்னவோ போலிருக்கிறே? என்று மகனின் தலையை வருடிக் கொடுத்தாள்.

    இரண்டொரு வினாடி ராஜு மெளனமாகவே இருந்தான். பிறகு, ஒண்ணுமில்லேம்மா... ஒரு சங்கடத்திலே மாட்டிக் கொண்டிருக்கிறேன்

    Enjoying the preview?
    Page 1 of 1