Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavu Karaiyum Neram
Kanavu Karaiyum Neram
Kanavu Karaiyum Neram
Ebook100 pages39 minutes

Kanavu Karaiyum Neram

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Pattukkottai Prabakar is a prolific writer of Tamil crime and detective fiction. He has also worked as a screenwriter in the Tamil film industry, and also for Paramapadham, the first Tamil-language "mega-serial" shown on Doordarshan.
First published in the 1977 in Anandha Vikatan. He has written more than three hundreds novels, more than two hundred short stories. Lots of his novels are translated in Telugu and Kannada. He has also worked as a Dialogue writer in more than ten movies in Tamil.
Prabakar's novels most commonly feature the adventures of the detective couple Bharat and Susheela, of Moonlight Agencies, and their employees Marikkozhunthu (a.k.a. Madhavi) and Ravi. There is a running gag in the books about the slogans on Susheela's T-shirts.

Pattukkottai Prabakar frequently collaborates with the detective fiction author duo Subha; some novels have appeared featuring both Bharat and Susheela and Subha's detective couple, Narendran and Vaijayanthi.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100903682
Kanavu Karaiyum Neram

Read more from Pattukottai Prabakar

Related to Kanavu Karaiyum Neram

Related ebooks

Reviews for Kanavu Karaiyum Neram

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavu Karaiyum Neram - Pattukottai Prabakar

    http://www.pustaka.co.in

    கனவு கரையும் நேரம்

    Kanavu Karaiyum Neram

    Author:

    பட்டுக்கோட்டை பிரபாகர்

    Pattukottai Prabakar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//pattukottai-prabakar-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    1

    பசித்த சிங்கமாக கர்ஜித்துக் கொண்டிருந்தன அலைகள். ஆயிரம் பொத்தல்களுடன் கூடிய சர்க்கஸ் கூடாரத் துணியாக கறுப்பு வானம். வாழ்க்கையின் பிரச்சனைகளை ஒத்திப் போட்டுக் கொள்வதற்காக ஏராளமான குடும்பஸ்தர்கள் கடற்கரைக்கு வந்து சோளக் கதிரும், சுண்டலும், மிளகாய் பஜ்ஜியும் தின்று கொண்டிருந்தனர்.

    வாழ்க்கையின் பிரச்சினைகளை ஆரம்பித்துக் கொள்வதற்காக ஏராளமான காதல் ஜோடிகள் வந்திருந்தார்கள். இருட்டுவதற்கு முன்பாக அவர்களுக்கு மத்தியில் இருந்த இடைவெளிகள் இப்போது நசுங்கிப் போயிருந்தன. பல ஜோடிகள் கருமமே கண்ணாக கருமம் செய்து கொண்டிருக்க, சில ஜோடிகள் டீஸண்ட்டாக கவர்ன்மெண்ட் ஆபீஸ் கிளார்க்குகள் போல பட்டும் படாமலும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க...

    தேவா என்றாள் பிரதீபா.

    தேவா தன் இரண்டு கைகளையும் பின்புறமாக மணலில் ஊன்றி ஈஸிசேர் போல சில்ஹவுட்டில் அமர்ந்திருக்க, அவன் தலைமுடிகளை ஏர்போர்ட் கஸ்டம்ஸ் ஆபீசரைப் போல கலைத்துக் கொண்டிருந்தது காற்று.

    இன்னும் ஒரு நூறு வருடத்திற்குக்கூட ஃபாஷன் போட்டியில் ஜொலித்துக் கொண்டே இருக்கப் போகிற ஜீன்ஸ் அணிந்து, பதினைந்து ரூபாய் பிளாட்பார பனியனை இன் செய்திருந்தான். இந்த மாதிரி உடைகளில் ஒரு பெருத்த செளகரியம் என்னவென்றால்... பார்த்த மாத்திரத்தில் அவன் பணக்காரனா ஏழையா என்று சொல்லி விட முடியாது. பொறுமையாகக் காத்திருந்து அவன் பிரிமியர் பத்மினியில் ஏறுகிறானா இல்லை பல்லவனில் தொங்குகிறானா என்று பார்க்க வேண்டும்.

    நம் தேவா பல்லவ நண்பன் தான்.

    ஆனால் அவன் ஒன்பது நாட்களாகத் துவைக்காத பாண்ட்டுகள். மடியில் படுத்துக் கொண்டு அவனது ட்ரிம் செய்யப்பட வேண்டிய தாடியைத் தடவிக் கொண்டிருக்கும் பிரதீபா மண்டே மாருதி, ட்யூஸ்டே டொயாட்டோ ரகம். அதென்னமோ இப்படி எக்ஸ்ட்ரீம் முரண்பாடுகளுக்கு நடுவில்தான் மன்மதன் பானம் எய்து விட்டு இனி அவர்கள் பாடு என்று டீ குடிக்கப் போய் விடுகிறான்.

    தேவாவும், பிரதீபாவும் ரெஃப்ரிஜிரேட்டரை விட்டு வெளியில் எடுத்து வைத்த ஐஸ்க்ரீமைப் போல உருகி, உருகி காதலிக்கிறார்கள். ஏழு மாதங்களாக.

    இன்னும் பேச என்ன தான் மிச்சம் இருக்குமோ?

    ஆனால் நிதமும் சந்தித்ததாக வேண்டும். பினாத்திக் கொண்டாக வேண்டும்.

    தேவா

    ம்?

    ஐ லவ் யூ ஸோ மச்

    மீ டூ பிரதீபா

    உன்னை விட்டுப் பிரிஞ்சதுமே ஒவ்வொரு நிமிஷமும் நான் உன்னை மிஸ் பண்றேன் தேவா

    நான் கூட உன்னைப் பார்க்காத ஒவ்வொரு நிமிஷமும் உன்னை மிஸ்டர் பண்றேன் பிரதீபா

    ச்சீ!

    நீ இப்படி ச்சீ சொல்றதுக்காகவே இந்த கடலை பேத்து உன் காலடியில் வைக்கலாம் மாதிரி இருக்கு.

    அபத்தமா உளறாதே!

    இல்லை பிரதீபா, இப்ப நான் சொன்னது புதுக் கவிதை

    அப்படின்னா சரி

    பிரதீபா

    ம்?

    பசிக்காமல், தூங்காம இப்படியே இருக்கலாம் போல இல்லை? யுகம் யுகமா?

    பத்து மணிக்கு மேல போலீஸ்காரங்க வந்து எழுப்பி விட்டுடுவாங்க தேவா, இல்லைன்னாலும் காலையில் சூரியன் வந்ததும் வேர்க்கும்.

    நாட்டி!

    அவளின் ஒரு கை விரல்களைப் பொத்திக் கொண்டு ஒவ்வொன்றாக நீ ஏதோ தொல்பொருள் போல ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தான் தேவா.

    ஒரு நாளைக்கு நீ தூங்கறப்ப உன் விரலை பிளேடு வச்சிக் கீறிப் பார்த்தடணும்னு இருக்கேன்

    அய்யோ! ஏன்?

    உள்ளேர்ந்து ரத்தத்துக்கு பதிலா ரோஜா இதழ்களாதால் உதிரும்ங்கிறது என்னோட யூகம் அவ்வளவு மெத்துன்னு இருக்கு

    இதுவும் புதுக் கவிதையா?

    இல்லை, சும்மா அபத்தமா உளறினேன்.

    தேவா, இன்னும் எத்தனை நாளைக்கு?

    எது?

    இப்படி கடற்கரையிலேயும், பார்க்லயும், ஹோட்டல்லயும் மீட் பண்றது.

    நாளையிலேர்ந்து சென்ட்ரல் ஸ்டேஷன்லியும், எக்மோர் ஸ்டேஷன்லயும் மீட் பண்ணிக்கலாமா? மத்தவங்களோட கம்ப்பேர் பண்ணிப் பார்த்து நீ எவ்வளவு அழகா இருக்கேன்னு சொல்ல வசதியா இருக்கும்.

    விளையாடாதே தேவா

    சேச்சே இன்னும் ஆரம்பிக்கவே இல்லைம்மா

    சின்னச் சின்ன விளையாட்டுக்கள் போதுமா தேவா?

    இதெல்லாம் டெஸ்ட் மேட்ச்சுக்கு முன்னாடி நெட் பிராக்டிஸ் மாதிரிதான். டெஸ்ட் மேட்ச் ஆட வேணாம்னு நானா சொல்றேன். சரின்னு சொல்லு நாளைக்கே ஒரு ரூம் புக் பண்ணிடறேன். சாமி பேர்ல இதுக்குன்னே எத்தனை லாட்ஜ் இருக்கு தெரியுமா? என்ன? சுவரெல்லாம் மூட்டைப் பூச்சி நசுக்கி நசுக்கி ரத்தமா இருக்கும்.

    ஏய்! எப்படி தெரியும் உனக்கு?

    அமெரிக்கால் சுதந்திர தேவி சிலை இருக்கு. உனக்கும் தெரியும். எனக்கும் தெரியும். போய்ப் பார்த்தமா என்ன? நாலெட்ஜ் பிரதீபா நாலெட்ஜ்!

    பேசியே மடக்கிடறேப்பா

    எங்கே? இன்னும் நீ யெஸ் சொல்லலையே.

    நெஜமா சொல்லு. நெஞ்சைத் தொட்டுச் சொல்லு. ஏய்! உன் நெஞ்சை!

    Enjoying the preview?
    Page 1 of 1