Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Dhrogam Puthithu!
Dhrogam Puthithu!
Dhrogam Puthithu!
Ebook86 pages29 minutes

Dhrogam Puthithu!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.

Devibala, real name is Balasubramanian.P.R. born in 1957, Trichy. He has won several prizes in short story competitions, including Diamond Jubilee Prize of Anandha Vikatan. He has also written TV serials like Alaigal and Nambikkai.
Languageதமிழ்
Release dateAug 12, 2019
ISBN6580100603393
Dhrogam Puthithu!

Read more from Devibala

Related to Dhrogam Puthithu!

Related ebooks

Related categories

Reviews for Dhrogam Puthithu!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Dhrogam Puthithu! - Devibala

    http://www.pustaka.co.in

    துரோகம் புதிது!

    Dhrogam Puthithu!

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    http://www.pustaka.co.in/home/author/devibala-novels

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அத்தியாயம் 1

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 15

    அத்தியாயம் 16

    அத்தியாயம் 17

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 19

    1

    ஆளுயரக் கண்ணாடியின் எதிரே இருந்தாள் ஸ்டெல்லா. அப்போதுதான் குளித்து விட்டு வந்திருந்தாள். உள்பாவாடை, ரவிக்கை மட்டும் அணிந்து மேலே ஒரு டவலும் போர்த்திக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

    தன்னை முழுமையாக ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அவளுக்கே மிதமிஞ்சிய கர்வம் உண்டானது. தன்னை அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கினாள். அம்மா உள்ளே நுழைந்தாள்.

    ஸ்டெல்லா!

    ம்!

    உனக்கு இன்னமும் சம்பளம் வரலியா?

    வந்தாச்சு!

    நீ இன்னமும் எங்கிட்டத் தரலை!

    ஸ்டெல்லா பதில் பேசாமல், ட்வீஸர் கொண்டு தன் புருவங்களை சீராக்கத் தொடங்கினாள்.

    நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலை!

    ஏன் பணம்... பணம்னு இப்படி பறக்கறே? எரிச்சலுடன் எழுந்து வந்தாள். கைப்பை திறந்து, அந்தக் கவரை எடுத்து அம்மாவிடம் தந்தாள்.

    அம்மா உள்ளே விரல் நுழைத்து பணத்தை உருவினாள். எண்ணத் தொடங்கினாள். நிமிர்ந்தாள்.

    ஆயிரம்தான் இருக்கு!

    ஆமாம்!

    உனக்கு ரெண்டாயிரத்து முன்னூறு ரூபா சம்பளம்!

    என் செலவு போக மீதியை கவர்ல வச்சிருக்கேன்!

    ஆயிரத்து முன்னூறு ரூபா செலவா? அப்படி என்னடீ உனக்கு செலவு? நடுத்தரக் குடும்பத்துல பொறந்துட்டு இது நல்லாருக்கா ஸ்டெல்லா?

    நிறுத்தும்மா! நான் வயசுப் பொண்ணு. அழகானவ. ஆயிரம் தேவைகள் எனக்கிருக்கும். உங்கிட்ட எல்லாத்துக்கும் எதிர் பார்த்துட்டு நிக்க முடியுமா? நான் அப்பாவை பணம் கேக்கலை. என் சொந்த சம்பாத்தியத்துல செலவு பண்ண யாரைக் கேக்கணும் நான்?

    ஒரு பெண்ணுக்கு இது அழகல்ல!

    அழகான பெண்ணுக்கு எல்லாமே அழகு தான்!

    இங்கே நீ கொட்டம் அடிக்கலாம். நாளைக்கு ஒருத்தனுக்கு சொந்தமாயிட்டா, இதெல்லாம் நடக்காது!

    நடக்கும். நடக்க வைப்பேன்.

    அம்மா கலக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்தாள். அப்பா ராபர்ட் காலை தினசரியில் தன்னை நுழைத்துக் கொண்டிருந்தார்.

    காபி கொண்டு வா மேரி!

    அம்மா காபியுடன் வெளிப்பட்டாள். அதை வாங்கி மெளனமாகக் குடித்தார்.

    நீங்க ஆபீஸ் புறப்படலை?

    இல்லை. லேட்டாப் போனா போதும்!

    நான் போய் டிபன் தயார் பண்றேன்! அம்மா எழுந்து உள்ளே வந்து விட்டாள். அவர் மேலும் அவளுக்குக் கோபம் வந்தது.

    ‘மகளின் ஆணவப் போக்கை இவர் கண்டு கொள்ளவே மாட்டாரா?’

    ‘இவரால் - இவர் தரும் சலுகையால்தான் அவள் இந்த அளவு துணிச்சல் பெற்று விட்டாளா?’

    காலை உணவு தயாரானதும், கணவரை அழைத்தாள்.

    ஸ்டெல்லா டிபன் ரெடி!

    ஸ்டெல்லா கைப்பையோடு வெளிப்பட்டாள்.

    ஸாரி மம்மி! எனக்கு டயமில்லை. நான் வர்றேன். வெளில பார்த்துக்கறேன்!

    ஸ்டெல்லா ஒரு நிமிஷம்!

    என்ன டாடீ?

    இப்படி வந்து உட்காரு!

    எனக்கு நேரமாச்சு டாடீ! சிணுங்கிய படியே வந்து உட்கார்ந்தாள்.

    யாரு விஜய்?

    விஜய்? எந்த விஜய் டாடி?

    நீ ஒருத்தனோட வெளில சுத்தறதா தகவல் வந்திருக்கு எனக்கு. யாரவன்?

    ஓ... அவனா? என் பாய் ஃப்ரண்ட் டாடி!

    அப்பா தடாலென எழுந்து விட்டார்.

    நோ ஸ்டெல்லா. இதெல்லாம் எனக்குப் பிடிக்கலை. நாம கிறிஸ்தவக் குடும்பத்துல பிறந்தாலும், பழமையும் ஒழுக்கமும், பண்பாடும் நிறைஞ்சவங்க. நீ அழகான பொண்ணு. அசம்பாவிதம் எதுவும் நடக்க விடமாட்டேன் நான்!

    "டாடி! விஜய் நல்ல

    Enjoying the preview?
    Page 1 of 1