Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Vaanavil
Vaanavil
Vaanavil
Ebook160 pages2 hours

Vaanavil

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

வானவில்லில் பல வண்ணங்கள் இருப்பது போல இந்த "வானவில்" என்ற சிறுகதையிலும் பல வண்ணங்களில் கதைகள் இருக்கின்றன. இதில் சில உண்மை கதைகளும் இடம் பெற்றுள்ளன. வானவில்லில் இருக்கும் வண்ணங்கள் நம் கண்களை கவரும். அதுபோல, இந்த சிறுகதைகள் நம் உள்ளங்களை கவருமா? என்பதை வாசித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

Languageதமிழ்
Release dateJan 6, 2024
ISBN6580100610520
Vaanavil

Read more from Devibala

Related to Vaanavil

Related ebooks

Reviews for Vaanavil

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Vaanavil - Devibala

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    வானவில்

    (சிறுகதைகள்)

    Vaanavil

    (Sirukadhaigal)

    Author:

    தேவிபாலா

    Devibala

    For more books

    https://www.pustaka.co.in/home/author/devibala-novels

    பொருளடக்கம்

    நிமிர்ந்து நில்!

    நல்ல முடிவு

    பரிவர்த்தனை!

    பலா முள்!

    பதினெட்டாம் படி

    பகல் கொள்ளை

    பேரும் மனசும்!

    பேசுவது சுலபம்!

    ப்ளடி சம்பிரதாயங்கள்

    சிகிச்சை

    விடாது பாசம்

    என் வழி! தனி வழி!

    ரெண்டு!

    காப்பகம்

    அச்சம் தவிர்

    மனசே! மனசே!

    கண்ணாமூச்சி ரே...ரே...

    A...1

    நாயகி

    நிமிர்ந்து நில்!

    முதலில் புஷ்பாவை பற்றி முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டால் தான் இந்த கதை ருசிக்கும்!

    நவீன காலத்து பெண்களுக்குள்ள எந்த ஒரு சாதுர்யமும், அழகும், படிப்பும், புத்தியும் இல்லாதவள் புஷ்பா! ப்ளஸ் டூவை நாலு தடவை எழுதி, இதுவரை பாஸ் செய்யாதவள்! ஆங்கில புலமை அறவே இல்லை! புத்தி என்பது கடுகளவு கூட கிடையாது! அழகு மைனஸ்! அசட்டுத்தனமான பேச்சில் அவளை மிஞ்ச ஒருவர் பிறக்க வேண்டும்!

    இன்றைக்கு கல்யாண மார்க்கெட்டுக்கு பெண்களுக்கு தேவையான எதுவும் புஷ்பாவுக்கு இல்லை! எதெல்லாம் கூடாதோ அத்தனையும் உண்டு! ஒரே ஒரு ப்ளஸ் சுமாராக சமைப்பது! அதுவே அவள் தங்கை மது கூட இருந்து கற்றுக்கொடுத்ததால் வந்தது! புஷ்பாவுக்கு வயசு இருபத்தியெட்டு! அவள் தங்கை மதுவுக்கு இருபத்திரெண்டு! எம்.காம் கடைசி வருஷப்படிப்பு! எல்லாம் நிறைந்த புஷ்பாவுக்கு நேர் எதிரான பெண்! அவளை சுற்றி ஒரு இளைஞர் பட்டாளமே உண்டு! புஷ்பாவை எதையும் கற்பிக்காமல் ஒரு முட்டாளாக வளர்த்தது அவள் அம்மா ருக்மணிதான்! மூத்த மகள் என்பதால் ஓவராக செல்லம் கொடுத்து குட்டிச்சுவராக்கி விட்டாள்! அப்பா கோவிந்தன், தனியாரில் ஓரளவு சமாரான உத்யோகம்! அம்மா ருக்மணி வெறும் குடும்ப தலைவிதான்! அப்பா கோவிந்தனுக்கு எதுவுமே சேமிக்க முடியவில்லை! அதனால் சொந்த வீடு கூட இல்லை! இந்த அழகில் ருக்மணி குடும்பம் நடத்த தெரியாமல் நடத்தி அவரை தெருவில் விட்டதுதான் மிச்சம்! அதோடு நிற்காமல், நாலு வருஷங்களுக்கு முன்பு, ருக்மணி உடம்பு சரியில்லாமல் படுத்து, அடிக்கடி நோய் வந்து, ஆஸ்பத்திரிக்கு அலைந்ததில் அப்பா கோவிந்தன் சில லட்சங்களை இழந்து கடனாளி ஆனதுதான் மிச்சம்! அந்த குடும்பத்தை எந்த நேரமும் பயம், பதட்டத்தில் வைத்திருந்த ருக்மணி, புருஷனை கடனாளியாக்கி, போய் சேரும்போது புஷ்பாவுக்கு இருபத்தி ஆறு! மது பிகாம் முடித்திருந்தாள்! குடும்பமே நொறுங்கி போய் விட்டது! அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டு வர, ஒரு வருஷ காலம் ஆனது! கோவிந்தன் வெறுத்து போனார்! நண்பர்களிடம் புலம்பி தீர்த்தார்!

    என் தலைல ஆணியால எழுதியிருக்கா? என்னால வாழ்க்கைல நிமிரவே முடியாதா? ஒரே ஒரு நாள் நிம்மதியா வாழ்ந்துட்டு செத்தாக்கூட போதும்!

    என்ன கோவிந்தா பேசற? கல்யாண வயசுல ரெண்டு பொண்ணுகளை வச்சிட்டு இந்த மாதிரி நீ பேசலாமா?

    "வேற எப்படி பேசறது? நான் சின்னவ மது பற்றி கவலைப்படலை! அவளுக்கு எல்லா தகுதிகளும் இருக்கு! என் தயவு இல்லாமலே அவளால வாழ முடியும்! ஆனா புஷ்பாவை நான் என்ன செய்யப்போறேன்! அவளை சத்தியமா எவனும் கல்யாணம் செஞ்சுக மாட்டான்! நான் இருக்கற வரைக்கும் அவளுக்கு கஞ்சியோ கூழோ ஊத்திடுவேன்! எனக்கு பிறகு புஷ்பா நிலைமை என்னா?

    கோவிந்தன் அழுது விட்டார்! நண்பர் மூலம் மது காதுக்கு இது வர,

    அப்பா! நான் ஒரு வருஷத்துல எம்.காம் முடிச்சிடுவேன்! எனக்கு நல்ல வேலை கிடைச்சிடும்! உங்களுக்கு பணக்கஷ்டம் இருக்காது! அக்காவுக்கு ஏற்ற வரனா பார்த்து கல்யாணத்தை நடத்திடலாம்பா!

    பணம் கூட கம்பெனில ஃபைனல் வித்ட்ராயல் போட்டு ஏற்பாடு செஞ்சிடலாம்! இவளை யாரு கட்டிப்பாங்க மது? எனக்கு நம்பிக்கை இல்லைம்மா!

    அப்பாவை உற்சாகப்படுத்தி, உறவு, நண்பர்களிடம் பேச வைத்து புஷ்பாவுக்கு வரன் பார்க்க வைத்தாள் மது! அதற்குள் புஷ்பாவையும் ஓரளவு தயார் படுத்த எல்லா முயற்சிகளையும் செய்தாள்! அது நாய் வாலை நிமிர்த்தும் முயற்சிதான்! அதே அசட்டுத்தனமும், சோம்பேறித்தனமும், முட்டாள்தனமும், ஒரு பெண் வாழ முடியாமல் போக என்னல்லாம் வேண்டுமோ அத்தனையும் புஷ்பாவிடம் இருந்தது! இதனால் முதலாவதாக வரன்கள் வரவும் இல்லை! வந்தவர்கள் தலைதெறிக்க ஓடினார்கள்!

    இந்த பொண்ணை கட்டிக்கறதை விட, மொட்டை கிணத்துல தலைகீழா குதிக்கலாம்! இவ கழுத்துல தாலி கட்டறது தற்கொலைக்கு சமம்!

    உடைந்து போன கோவிந்தன், கோபத்தில் சத்தம் போட தொடங்கினார்!

    இவளை எவனும் கட்டிக்க மாட்டான்! முட்டாள்தனமான முயற்சிகளை நிறுத்திடலாம் மது! இவளால உன் வாழ்க்கையும் கெடக்கூடாது!

    இத்தனை சொல்லும் போது, எந்த ஒரு பெண்ணாக இருந்தாலும், மனசு நொந்து தற்கொலைக்கு முயற்சி செய்வாள்! அல்லது வீட்டை விட்டு ஓடுவாள்! எதையும் செய்யாமல் எருமை மாட்டின் மேல் பெய்த மழை போல இருந்தாள் புஷ்பா! சமையல் மட்டும் சுமாராக சமைத்தாள்!

    இந்த நேரம் யாரோ தெரிந்தவர்கள் சொல்லி, ஒரு வரன் தேடி வந்தது!

    ஜாதகம் பிரமாதமா பொருந்தியிருக்கு! பையனுக்கு அப்பா இல்லை! ஒரு விதவை தாயார் மட்டும்! இவன் ஏதோ சுமார் கம்பெனில சேல்ஸ் ரெப்பா இருக்கான்! கோயில் நிலத்துல கட்டின வீடு! இவங்களுக்கு சொந்தமில்லை! ஆனா காலி செய்ய சொல்ல மாட்டாங்க! சுமார் ஜீவனம்!

    என் பொண்ணை பற்றி எல்லாம் சொல்லிடுங்க! அதையும் மீறி அவங்க விரும்பினா வரட்டும்!

    அந்த ஞாயிறு அவர்கள் புஷ்பாவை பெண் பார்க்க வருவதாக தகவல் வர, கோவிந்தனுக்கு எந்த ஒரு நம்பிக்கையும் இல்லை! ஆனாலும் மது நம்பிக்கை இழக்காமல் புஷ்பாவை தயார் செய்ய தொடங்கினாள்!

    ஞாயிறு காலை ஒன்பது மணிக்கு அந்த பையன் குருவும், அவனது விதவை தாயாரும், குருவின் நண்பன் வாசுவும் வந்தார்கள்! கோவிந்தன் வேண்டா வெறுப்பாக உபசரித்தார்! மது அக்காவை ஓரளவு தயார் படுத்தியிருந்தாள்! நண்பன் வாசு, மதுவை நன்றாக சைட் அடித்தான்! வந்தவர்கள் மதுவை கேட்கக்கூடும் என கோவிந்தனே எதிர்பார்த்தார்! அம்மா மகன் இருவரும் புஷ்பாவிடம் பேசினார்கள்! அவளது உச்சகட்ட அசட்டுத்தனத்தில் கண்டிப்பாக அவர்கள் நிராகரிப்பார்கள் என கோவிந்தன் மட்டுமல்ல, மதுவும் எதிர்பார்த்தாள்! ஆனால் அதிசயம் நடந்தது!

    எங்களுக்கு புஷ்பாவை புடிச்சிருக்கு! பூரண சம்மதம்!

    நிஜம்மா சொல்றீங்களா? அவகிட்ட தெளிவா பேசிடுங்க! அவளுக்கு சுமாரா சமைக்கறதை விட எந்த ஒரு சாதுர்யமும் இல்லை! இது நாளைக்கு உங்களை பாதிக்கக்கூடாது! நல்லா யோசனை பண்ணுங்க!

    எங்களுக்கு ஒரு புத்திசாலி வேணும்னு எதிர்பாக்கலை! அழகு நிலையில்லை! குடும்பத்துக்கு தோதா இருந்தா போதும்! ஏற்பாடுகளை செஞ்சுகலாம்!

    புஷ்பா இறக்கை கட்டி பறந்தாள்! அவளே இதை எதிர்பார்க்கவில்லை!

    ஆனா நாங்க ஒண்ணு கேப்போம்! உங்களால முடியுமா? கல்யாணத்துக்கு நீங்க என்ன செலவழிப்பீங்க?

    நியாயமா நகைகள் போட்டு, துணிமணிகள் எடுத்து, மண்டபம் புக் பண்ணி, கண்யமா கல்யாணம் செய்து தருவேன்!

    அதுக்கு என்ன செலவாகும்?

    பதினஞ்சு லட்சம் வரைக்கும்! கையில பணமில்லை! ஆஃபீஸ்ல லோன் போட்டு ஏற்பாடு செய்வேன்!

    "நான் பழைய மகாபலிபுரம் ரோட்ல ஒரு இடம் பார்த்திருக்கேன்! அங்கே ஃபுட் கோர்ட் தொடங்கினா வியாபாரம் பிச்சுக்கும்! அங்கே கடை நடத்தி கோடீஸ்வரனாக ஆனவங்க என் நண்பர்கள் நிறைய உண்டு! எங்க கல்யாணத்தை எளிமையா கோயில்ல நடத்தி, நீங்க செலவழிக்கற பணத்துல கடை ஏற்பாடு செஞ்சா வாழ்நாள் முழுக்க நாங்க செழிச்சு வாழலாம்! நீங்க சம்மதம்னு சொன்னா, உங்க மகளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்துக்கு நான் உத்தரவாதம் தர முடியும்!

    அன்று இரவே தீர்மானித்து அப்பாவும் மதுவும் பேசி அதற்கு ஒப்புதல் தந்து விட்டார்கள்!

    கோவிந்தன் பதினைந்து லட்சங்கள் லோனுக்கு ஏற்பாடு செய்த கையோடு கோயிலில் வைத்து கல்யாணம் நடத்த ஏற்பாடுகளையும் செய்ய, குரு ஓ.எம். ஆரில் கடை பார்த்து எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டான்! நாளை கல்யாணம்! இன்று கடை திறப்பு! கடை திறப்புக்கு குடும்பமே வந்து விட்டது! கடை குரு பேரில் வாங்க, பத்திரம் தயாராக, எல்லாம் தயார்! கோவிந்தன் 15 லட்சம் பணத்தோடு வந்து விட, குரு கையெழுத்து போட தயாராக, புஷ்பா முன்னால் வந்தாள்!

    குரு! கடை என் பேர்ல! கையெழுத்து நான் போடணும்! லைசென்ஸ் என் பேர்லதான் அப்ளை பண்ணியிருக்கு!

    குரு அதிர்ச்சியுடன் பார்க்க,

    நானும் என் தங்கச்சியும் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வந்தப்ப, நீயும் வாசுவும் பேசினதை கேட்டு உன் சுயரூபத்தை தெரிஞ்சுகிட்டோம்! கல்யாணம் முடிச்சு, என்னை ஆசை தீர அனுபவிச்சிட்டு, உன் பேர்ல உள்ள கடையை வித்து, பணத்தோட ஓடிப்போக நீ எடுத்த முடிவு தெரிஞ்சு போச்சு! நாளைக்கு நடக்கப்பேற நம்ம கல்யாணம் கேன்சல்! உன் புண்ணியத்தால எனக்கொரு கடை அமைஞ்சாச்சு! எங்கப்பா பணம்தான்! முட்டாளா குனிஞ்சு வாழ்ந்த என்னை நிமிர்ந்து நிக்க வச்ச உனக்கு நன்றி! அப்பா! கடையை திறங்க! குரு! நீயும் உன் அம்மாவும் ஒரு வாய் சாப்டுட்டு, அடுத்தது யாரை ஏமாத்தலாம்னு தெம்பா யோசிங்க!

    நிமிர்ந்து விட்ட தன் மகளை கோவிந்தன் பெருமிதமாக பார்த்தார்!

    நல்ல முடிவு

    வாழ்த்துகள் பல்லவி! சிறுநீர்ல பாசிட்டிவ் வந்திருக்கு! ப்ளட் டெஸ்ட்டும் பார்த்தாச்சு! நீ கர்ப்பமா இருக்கே! கன்கிராட்ஸ்!

    பல்லவி முகம் மாறியது! அதில் இருந்தது சந்தோஷமா, அல்லது கவலையா என தெரியாத ஒரு இறுகிய முகபாவம்.

    பல்லவி! என்னாச்சு? நான் சொன்னப்ப உன் முகத்துல சிரிப்பே வரலை! முதல் குழந்தை பையன்! இது பொண்ணா பொறக்கட்டுமே! முதல் பிரசவ நேரத்துல எனக்கு பொண்ணு வேணும்னு கேட்டவளாச்சே நீ? இந்த முறை உன் ஆசை பலிக்கட்டும்!

    பல்லவி பேசவில்லை!

    உன் கணவர் வரலியா? நீ மட்டும் வந்திருக்கே!

    Enjoying the preview?
    Page 1 of 1