Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Kanavodu Vanthaal
Kanavodu Vanthaal
Kanavodu Vanthaal
Ebook78 pages26 minutes

Kanavodu Vanthaal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466794
Kanavodu Vanthaal

Read more from N.C.Mohandass

Related to Kanavodu Vanthaal

Related ebooks

Related categories

Reviews for Kanavodu Vanthaal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Kanavodu Vanthaal - N.C.Mohandass

    1

    கிரீன் ஐலண்டில வாண்டுகள் படகு விட்டுக்கொண்டிருந்தன. ஒருபக்கம் டம்பிங்கார்கள்! அவைகள் ஒன்றையொன்று முறைத்துக் கொண்டன. முட்டிக்கொண்டன.

    பசங்கள் சிலர் ‘வாட்டர் ஸ்கேட்டிங்’கில் மும்முரம். சிலர் வாட்டர்பால், பொடிசுகள், மலைபோல உயர்ந்திருந்த பலூனின் மேல் ஏறி ஏறி குதித்தன. சிலதுகள் பெப்ஸியும் சிப்ஸ்மாய் குண்டடித்தன.

    அது குவைத். சால்மியா பகுதியின் கடற்கரையோரம்.

    மாலை ஏழுமணிக்குக்கூட அப்போது அனல் காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கே அப்படிதான் கோடையில் இரவிலும் அனல்! குளிர்நாளில் மதியத்திலும் வெடவெடப்பு.

    ரோடில் மெர்டிஸிலும் சவர்லேயும், டொயோட்டாவும் பாய்ந்துக்கொண்டிருக்க, புல்வெளியில் கூட்டம் கூட்டமாய் ‘பர்தா’ பெண்கள்! கடல்நீரை சுத்தப்படுத்தி அங்கே பெரும் சோலையையே உருவாக்கியிருந்தனர். (நம்மூரிலும்தான் கடல் இருக்கிறது. ஆனாலும் தண்ணீர் பஞ்சம்! ஊழல் ஒழிக!)

    அலையில் அமெரிக்க யுவதிகள் குளித்து மணலில் மூன்பாத் எடுத்துக் கொண்டிருக்க, அதை அஞ்சி அஞ்சி ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டு கொறித்துக் கொண்டிருந்தது. கொழுக் மொழுக்கென உள்ளூர் பசங்கள் மியூசிக்குக்கு ஆடிக்கொண்டிருந்தனர்..

    பீச்சையொட்டி புதிய கட்டிடம் ஒன்று வானை நோக்கி எழும்பிக்கொண்டிருக்க, டினோசர் போன்ற இயந்திரம், கலவையும் செங்கலும் கை உயர்த்தி பத்தாவது மாடியில் கொட்டிற்று.

    நவீன் அதன் நிழலில்தான் அமர்ந்திருந்தான். அவன் முப்பது! அங்கே பாங்க் ஒன்றில் உத்யோகம் - பாச்சிலர் - மோசமில்லா வனப்பு!

    மனது சங்கடப்படும் போதெல்லாம் அவன் அங்கே வந்துவிடுவான். வந்து அலைகளையும், பசுமையையும் தான் ரசிப்பான் என்று சொல்லிவிட முடியாது. புஷ்டியாய் - கட்டைகுட்டையாய் ஸ்ரீலங்காக்களும், வெளுத்தும் - பளீரென்ற கால்களுமாய் பிலிபைனிகளும் உலா வரும்போது அவர்களை பார்க்காமல் கண்களையா மூடிக்கொள்ள முடியும்? அவனது பார்வையெல்லாம் அப்போது அவர்களின் மேலில்லை. கொஞ்சம் தள்ளி புல்வெளியில் சின்ன பசங்களுக்கு பந்து எடுத்துப் போட்டுக்கொண்டு, அவனையே திரும்பித் திரும்பி பார்க்கும் அவளின் மேல்!

    அவள் - சேலைகட்டி, தமிழ்சாயத்தை பூசியிருந்தாள். அருகில் குவைத்தி ஆணும், பெண்ணும், அமர்ந்து சாப்பிட - இவள் - பசங்களுடன் கைகோர்ப்பு! யார் அவள்?

    ஹவுஸ்மெயிடாக இருக்கவேண்டும்! ஒரு பணிப்பெண்ணிற்கு இத்தனை அழகும் ஈர்ப்பும் தேவையா? அவள் யார் - என்னையே ஏன் உற்று உற்று பார்க்கிறாள் என்று அவனும் உற்றுப்பார்க்க -

    அட, இவளை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கிறதே. எங்கே.. எங்கே? அவனுக்கு சட்டென விளங்கவில்லை. ஆனாலும்கூட அந்த முகம் நன்கு நெஞ்சில் பதிந்திருந்தது.

    எண்ணங்கள் அவளைவிட்டு அகல மறுத்தது. பீச்சில் எத்தனையோ இன்பங்கள்! சைஸ்வாரியாய் உலாத்தும்போது ஏன் அவளையே கவனிக்கவேண்டும்?

    சில சமயங்களில் அப்படித்தான்: மனது ஒன்றின்மேல் கவனம் வைத்துவிட்டால், அதை அறியாமல் விடாது. படுத்தி வைத்துவிடும்! சே! நான் இத்தனை மறதிகாரனா? எங்கே... எங்கே பார்த்தேன்?

    ஆங் ஞாபகம் வந்துவிட்டது. ஆறு மாதம் முன்பு ஊருக்குப்போய் திரும்பும்போது! விமானத்தில்! கரெக்டா! அவளேதான்!

    எமிகிரேஷன் கார்டு பூர்த்தி செய்யத்தெரியாமல், ஆங்கிலம் புரியாமல் சார்! இதை கொஞ்சம் எழுதித்தரீங்களா... மூன்றாவது சீட்டிலிருந்து பாஸ்போர்ட்டையும் அந்த அட்டையையும் நீட்டினாள்.

    ஆங்கிலம் வராமல், அதிக அளவு படிப்பும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம்பேர் அரபிநாட்டிற்கு வருகின்றனர். வரவில்லை - அனுப்பப்படுகின்றனர். ஒவ்வொருவருக்கும் என்னென்னவோ பிரச்சினைகள்! நிர்பந்தங்கள்!

    இவளுக்கென்ன பிரச்சனையோ!

    பார்த்தால் அழகும் வனப்பும் தெரிகிறது. அடக்கம்! புரிகிறது. வீட்டுவேலைக்கு எத்தனை ஆயிரம் கொடுத்து வந்தாளோ தெரியவில்லை. அன்று சுப்ரதா என்று பெயர் எழுதினதாய் ஞாபகம்!

    கார்டு எழுதிக்கொடுத்ததோடு சரி, அப்புறம் பேசவில்லை. குவைத் வந்ததும் நவீன் வேறு வழி. அவள் வேறுவழி! மறந்துபோயிற்று. பயணத்தில் எத்தனையோ முகங்களை சந்திக்கிறோம். எல்லோரையும் துரத்திக்கொண்டேவா இருக்கமுடியும்?

    வீட்டு டிரைவர், வீட்டு வேலைக்காரி என்றாலே நவீனுக்குள் ஒரு அனுதாபம். மிஞ்சிமிஞ்சிப்போனால் ஆறேழாயிரம் சம்பளம்! அதற்கு இருபத்து நான்கு பசங்களை பொறுத்துக்கொள்ள வேண்டும்! எஜமானி எங்கேச்

    Enjoying the preview?
    Page 1 of 1