Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Pani Vizhum Iravu
Pani Vizhum Iravu
Pani Vizhum Iravu
Ebook134 pages48 minutes

Pani Vizhum Iravu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Family Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Pani Vizhum Iravu

Read more from N.C.Mohandass

Related to Pani Vizhum Iravu

Related ebooks

Related categories

Reviews for Pani Vizhum Iravu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Pani Vizhum Iravu - N.C.Mohandass

    1

    கோவில்களுக்கும் கொசுக்களுக்கும் பெயர் பெற்ற குடந்தையை அப்போது பனி குளிப்பாட்டிக் கொண்டிருந்தது. நட்சத்திரங்கள் குளிருக்குப் பயந்து ஓட்டத்தில்!

    உயர்ந்த கோபுரமும், மிகுந்த பணப் புழக்கமுமுள்ள சாரங்கபாணி சுவாமி கோவிலை ஒட்டின சந்தில் இருந்த வீட்டில்-

    எழிலரசி ஜன்னலோரம் அமர்ந்து வாசலையே வெறித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் ஒரு ஏக்கமிருந்தது... பெருமூச்சு... கணவனின் ‘பைக்’ சத்தத்திற்காக காதுகள் காத்திருந்தன. வெளியே வானத்திற்கும் பூமிக்குமிடையே நிலவொளி கவிதை பாடிக் கொண்டிருந்தது காலை விளக்குகள் படுத்திருந்தன. பூச்சிப்படை அவற்றைச் சுற்றிச் சுற்றி கும்மியடித்தன. அவளுடைய தலையில் மல்லிகை மலர்ந்திருந்தது. மலர்ந்து வீடு முழுக்க மந்தகாசம் பண்ணிக் கொண்டிருந்தது.

    கட்டிலில், நாளைக்கு இரண்டாமாண்டில் அடியெடுத்து வைக்கப் போகிற குழந்தை கன்யா குப்புறக் கிடந்தாள்,

    எழிலரசிக்கு நிரஞ்சன் மேல் கோபம் கோபமாய் வந்தது. இன்னும் என்ன பண்ணுகிறார்?

    வரவர இவரது போக்கு புரியவில்லை. கண்ட நேரத்திலும் வெளியே போகிறார். தூங்கின பின்பு பதுங்கிப் பதுங்கி வந்து படுத்துக் கொள்கிறார்.

    கேட்டால் பிசினஸாம், பிசினஸ்! அப்படி என்ன பிசினஸோ தெரியவில்லை. ஊரில் பிசினஸ் பார்ப்பவர்களெல்லாம் இப்படி தூக்கம் கெட்டுப் பனியில் கரைந்து கொண்டிருக்கிறார்களா என்ன...?

    இல்லை, இவரிடம் என்னவோ கோளாறு இருக்கிறது... குற்றமிருக்கிறது. அல்லது எனக்குத் தெரியாமல் வேறு பெண்ணிடம் சகவாசம்! சேச்சே! அப்படி இருக்காது. இருக்கக் கூடாது!

    பனிக்காற்று ஜில்லென்று தாக்கவே, சேலையை இழுத்துப் போர்த்திக் கொண்டாள். கொசுக்கள் குளிரில் நனைந்து உள்ளே கோரசுடன் பிரவேசிக்கவே, ஜன்னலை இழுத்து மூடினாள்.

    அவளுக்கு கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது. எழுந்து போய், சமையல் கட்டில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீர் பாத்திரத்தை மூடினாள். ஸ்டவ்வை நிறுத்தின போது வாசலில் ஆட்டோ இரைவது கேட்கவே, அவசரமாய் ஓடி கதவைத் திறந்தாள்.

    லைட். பளிச்... பளிச்!

    ஆட்டோவில் வந்தது நிரஞ்சனில்லை. இதற்கு முன்பு பெட்டிக்கடை வைத்திருந்து திடீர் பணக்காரராகி இப்போது டிபார்ட்மெண்டல் ஸ்டோர் ஆரம்பித்திருக்கும் வேதநாதன். இரண்டு மாதம் முன்புவரை அந்தப் பகுதியில் அத்தனை பெரிய கடையே இல்லை என்று சொல்லலாம்.

    கடை ஆரம்பித்தவுடனேயே வேதநாதன் தன்னுடைய இன்முகத்தாலும் கனிவான பேச்சினாலும், குடும்பத் தலைவிகளைப் பெரிதும் கவர்ந்து விட்டிருந்தார்.

    ஸாரி... லேட்டாச்சு... தூக்கத்தைக் கெடுத்துட்டேனா...? என்றபடி அவர் தான் கொண்டு வந்திருந்த பெட்டிகளை வீட்டிற்குள் இறக்கி வைத்தார்.

    பையன் உடம்பு சரியில்லைன்னு போயிட்டான். சரி, போகிற வழிதானேன்னு நானே எடுத்து வந்துட்டேன். சாமானெல்லாம் சரியாய் இருக்கான்னு பார்த்துக்கோம்மா!

    உங்களுக்கு வீண் சிரமம்!

    அதனாலென்னம்மா... பரவாயில்லை. நிரஞ்சன் சார் இன்னும் வரலே...?

    இல்லை. கொஞ்சமிருங்க, பணம்...

    அதெல்லாம் நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம். உங்க பணம் என் பணம் மாதிரி! வரட்டா...?

    வேதநாதன் சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறப்போன போது நிரஞ்சன் பைக்கில் வந்திறங்கினான். பெண்டாட்டி யையும், பார்சல்களையும் அவன் வினோதமாய்ப் பார்க்க, என்ன அப்படிப் பார்க்கறீங்க... எல்லாம் உங்க பெண்ணோட பர்த்டேக்கு வேண்டிய டின்னர் சாமான்கள்! நிரஞ்சன் அவரை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவன் பாட்டிற்கு உள்ளே நுழைய, எழிலரசி, சார்! நாளை மாலை நீங்களும் குடும்பத்தோட அவசியம் வந்திருங்க சொல்லிவிட்டு கதவை மூடினாள்.

    சரிம்மா...

    நிரஞ்சன் டிரஸ் மாற்றிக் கொண்டிருக்க, ஆனாலும் நீங்க மோசம்! என்று அவனது சட்டையை வாங்கி ஹாங்கரில் மாட்டினாள்.

    என்னவாம்?

    அவர் எத்தனை அக்கறையோட சாமான் கொண்டு வந்து தரார். நீங்க அவர்ட்ட முகம் கொடுத்துப் பேசலை. பார்ட்டிக்கு வரச்சொல்லி ஒரு வார்த்தை சொல்லலை.

    அதான் நீ சொல்லி விட்டாயே!

    நாளைக்கு நீங்க வெளியே எங்கும் போகக் கூடாது. வீட்டிலேயே இருக்கணும்.

    பார்ப்போம்...

    பார்ப்போம் என்ன பார்ப்போம்? சொந்த மகளோட முதல் பர்த்டே! கொஞ்சங்கூட அக்கறையேயில்லையே! என்று எழிலரசி அவனது தோளைக் கட்டிக் கொள்ள, நகரு! ஒரே கசகசப்பு! குளிச்சிட்டு வரேன் என்று பாத்ரூமிற்குள் நுழைந்தான்.

    இருங்க... இருங்க! வெந்நீர் கொண்டு வரேன்!. என்று எழிலரசி பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு போய் உள்ளே வைத்தாள்.

    நிரஞ்சன் அவளைக் கட்டிக் கொண்டு, சேர்ந்து குளிப்போமா...? என்று கண்ணடித்தான்.

    வேணாம்... வேணாம்!

    வேணும்...வேணும்!

    ஐயோ... சேலை! ப்ளவுஸும், பூவும் நனைஞ்சு போகுது!.

    எல்லாத்தையும் அவிழ்த்தெறி என்று அவனே அவற்றைச் செய்து முடிக்க, எழிலரசி கூசிக்கொண்டும் குறுகிக்கொண்டும் நின்றிருந்தாள். அவளது முகம் ஜிவ்வென்றாகியிருந்தது.

    வா... இப்படி...

    கதவு... கதவு...

    யார் பார்க்கப் போறா...வாடி

    ஐயோ குழந்தை!

    அவதான் தூங்கறாளே... என்று கட்டிக்கொண்டு வெந்நீரை குவளையில் மொண்டு இரண்டு பேரின் தலைக்கு மேலும் ஊற்றினான்.

    நான் சொன்னதுக்கு நீங்க இன்னும் சரின்னு சொல்லலை!

    என்ன சொன்னாய்?

    நாளைக்கு நாள் முழுக்க முழுக்க எங்களுடனேயே

    அப்போ கன்யாவிற்கு பர்த்டேசெயின் வேணாமா?

    வேணும்.

    அப்புறம் போகலேன்னா எப்படியாம்?

    அதான் தினம் தினம் போறீங்களே!

    நாளைக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு. போயே ஆகணும்!

    விடமாட்டேன்! என்று இறுக்கிக் கொண்டாள்

    விடாமல்...? இப்படியே ஆதாம்-ஏவாள் மாதிரி கட்டிப் பிடிச்சுக்கிட்டே இருக்கலாம்கிறயா...?

    சீ... என்று எழிலரசி விலகினாள். ஆனாலும் கூட அங்கிருந்து - அவள் வெளியேறவில்லை. அப்படியே கணவனை வெறித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

    அது ஒரு சுகம்; சுகந்தம். கணவன் - மனைவிக்கிடையே நடக்கும் கோலாகலம்! ஆசைக்கு அளவில்லை; அலுப்பில்லை; சந்தோஷத்திற்கு எல்லையில்லை. புருஷன் பெண்டாட்டிக்கு விகாரமில்லை.

    எழில்! எனக்குப் பசிக்கறது!

    டிபன் ரெடி! என்று டவல் சுற்றிக் கொண்டு வெளியே வந்தாள்.

    சாப்பாட்டிற்கிடையில் எழிலரசி, ஏங்க...? என்று அவனது முகத்தை ஆராய்ந்தாள்.

    என்ன?

    இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி ஒண்டுக் குடித்தனத்தில் வாடகைக்கு இருப்பதாம்! நமக்குன்னு ஒரு சொந்தவீடு இருந்தால் எவ்ளோ நல்லாயிருக்கும்!

    அவன் அதற்குப் பதில் சொல்லவில்லை. அவளை அர்த்தத்துடன் பார்த்து கண்ணீருடன் சிரிப்பையும் விழுங்கினான்.

    லேனா தியேட்டர் பக்கத்துல புதுசா ஃப்ளாட் ஒண்ணு வருதாம். அதுல அந்த வேதநாதன் கூட ஒண்ணு புக் பண்ணியிருக்காராம். நாமும்...

    எவ்ளோவாம்?

    அஞ்சு லட்சம் வருமாம்! புக் பண்றீங்களா?

    பார்ப்போம்.

    இந்த பதில் தானே வாணான்றது... எப்போவாம்?

    நிரஞ்சன் அவளைப் புன்னகையுடன் ஏறிட்டான். புருஷன் ராத்திரி- பகலாய் பிசினஸ் பார்க்கப் போகக் கூடாது. சதா பெண்டாட்டியை கட்டிக் கொண்டு அடைந்து கிடக்கணும். ஆனாலும் லட்சம் லட்சமாய் பணம் வேணும். ஃப்ளாட்! நெக்லஸ்! கார்!" எழிலரசி அப்போது தான் அவனது - கழுத்தைக் கவனித்த மாதிரி,

    எங்கேங்க தலைத் தீபாவளி செயின்?

    வந்து... ஆபீஸில் கழற்றி வெச்சிருக்கேன்.

    இப்படி கழற்றி வைக்கவா எங்கப்பா வாங்கிக் கொடுத்தார்... அதையும், இந்தக் கல்யாண மோதிரத்தையும் நீங்க கழற்றவே கூடாது, ஆமா... சொல்லிட்டேன்!

    எழிலரசி பால் கலந்து எடுத்து வந்தபோது நிரஞ்சன் நெற்றியைப் பிடித்தபடி படுக்கையில் கிடந்தான்.

    நானும் வந்ததிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், இன்னைக்கு நீங்க நார்மலாவே இல்லை. உங்களுக்கு என்னாச்சு?

    ஒண்ணுமில்லை. வேலை டென்ஷன். தலைவலி!

    இருங்க, மருந்து தடவிவிடறேன் என்று பால் தம்ளரை ஸ்டூலில் வைத்து விட்டு முன்னறைக்குப் போய் அவள் அலமாரியைக் குடைந்த

    Enjoying the preview?
    Page 1 of 1