Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Ootyvarai Ulavu
Ootyvarai Ulavu
Ootyvarai Ulavu
Ebook93 pages31 minutes

Ootyvarai Ulavu

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

Thriller Based Fiction Written By N.C.Mohandass
Languageதமிழ்
Release dateMay 13, 2019
ISBN9781043466800
Ootyvarai Ulavu

Read more from N.C.Mohandass

Related to Ootyvarai Ulavu

Related ebooks

Related categories

Reviews for Ootyvarai Ulavu

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Ootyvarai Ulavu - N.C.Mohandass

    1

    கொஞ்சம் குளிரைக் குறைத்துக்கொண்டு மரங்களில் பனியை பரப்பி, புகைத்து, நீலவானத்துடன் கொஞ்சிக் கொண்டிருந்தது உதகமண்டலத்தின் காலைப்பொழுது.

    டிராஃபிக் அதிகமாகும் முன்பு ஒரு ரவுண்டு போய் வந்துவிட வேண்டும் என்று சதை பிடித்தவர்களும், சதையைப் பிடிக்காதவர்களும் ரோடில் வியர்த்து, ஊதி ஊதி புகை கிளப்பியபடி ஓடித் தீர்த்துக் கொண்டிருந்தனர்.

    அலுவலகம் செல்பவர்களும், பருத்தி வியாபார ஆசாமிகளும் சரி, நான்ஸி எதற்கு அதிகாலையிலேயே எழுந்து வீட்டின் தோட்டத்தில் ஜாக்கிங் போய் அக்கிரமம் செய்ய வேண்டுமாம்?

    இந்தக் கேள்வி அக்கம்பக்கம் பல் தேய்ப்பவர்களுக்கு மட்டுமல்ல, பேப்பர்காரன், பால்காரன், சம்ந்தமேயில்லாமல் அந்தப் பக்கம் ஒரு நடை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போகும் ஜொள்காரன் எல்லோருக்கும் எழுவதுண்டு.

    ஆனால், எல்லோருக்கும் ஆனந்தம்.

    குறிப்பாய் சோமனுக்கு. அவன் அந்தக் குட்டி பங்களாவில் எடுபிடி என்பதைவிட எல்லாமும் அவனே என்று சொல்லலாம்.

    வாட்ச்மேன், தோட்டக்காரன், சமையல்காரன், டிரைவர், ரேஷன் வாங்க, (விற்க) மளிகை,

    போன்பில், கரன்ட்பில் என்று சகலத்திற்கும் அவன் வேண்டும்.

    இன்னும் நான்ஸிக்கு முதுகு தேய்த்துவிடும் வேலைதான் பாக்கி! அது கிடைத்தால் பாக்யமாக ஏற்றுக்கொள்ள அவன் தயார்தான். ஆனால் நான்ஸியைப் பொறுத்தவரை அவன் மீசை முளைத்துக் கொண்டிருக்கும் பையன்.

    ஆனால் அவனிடம், பல விஷயங்களும் முளைத்து வேர்விடத் தொடங்கி இருந்தன. இப்போதும் காரை கழுவிக் கொண்டிருந்த அவன், நான்ஸி குனிந்து நிமிர்ந்து உடற்பயிற்சி செய்யவே டயரடியில் அமர்ந்து, அழுக்கு தேய்ப்பது போல அவளை கண்களில் துளைத்துக் கொண்டிருந்தான்.

    நான்ஸி இறுக்கமான பனியனின் விடைப்புடனும் இறுக்கமான அரை டிராயருடனும்-ரம்பாவை நினைவுப்படுத்தி - படுத்திக்- கொண்டிருந்தாள்.

    உடலை ட்ரிம்மாய் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் அவள் காட்டும் ஆர்வமும் அக்கறையும் அவனை வியக்க வைக்கும்.

    இத்தனை அழகை வைத்துக்கொண்டு திருமணம் செய்துகொள்ளவில்லை. உறவு என்று எவரும் இருப்பதாய்த் தெரியவில்லை. காதல்-கீதல் மோதல் உண்டா என்றும் புரியவில்லை. அப்புறம் உடல் மேல் எதற்கு இத்தனை கவனம்? யாருக்காக எதற்காக?

    அவள் என்ன செய்கிறாள் எங்கே வேலை எனத் தெரியாது. கையில் இரண்டு செல்போன்கள், வெளிநாடுகளிலிருந்தும் வெளியூர்களிலிருந்தும் போன்கள் வரும். சோமன் இருப்பதையும் மறந்து உள்ளாடை வரை வெளிப்படுத்திக் கால்மேல் கால் போட்டபடி, அமர்ந்து பேசிக் கொண்டிருப்பாள். அவளுக்குப் பல பாஷைகள் அத்துபடி, அவனுக்கு எதுவும் புரியாது.

    உடல் மட்டும் ஊறும்.

    அவன் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். சமையல் செய்து கொண்டிருப்பான். திடீரென கூப்பிட்டு ‘வண்டியை எடு’ என்பாள். உடன் கிளம்பணும். பேங்க், ஊட்டியின் எஸ்டேட்கள், பங்களாக்கள் என்று பயணம் தொடரும்.

    சில சமயம் ஹோட்டல்கள்! சில நேரங்களில் அவளே கார் எடுத்துச் செல்வாள். அந்த சமயங்களில் அவன்தான் வீட்டின் ராஜா!

    அவளைப் போலவே கால் மேல் கால் போட்டுக்கொண்டு யாருக்காவது போன் பண்ணுவான். டிராவல் ஏஜென்ஸி, ஹோட்டல் நம்பர்களை டெலிபோன் டைரியில் பார்த்து, கூப்பிட்டு அதட்டுவான். அவளது உடைகள், மாக்ஸியைப் போட்டுக்கொண்டு உலாத்துவான்! அவளது பாத்ரூம்! அவளது படுக்கை! குதிப்பான். ஜங்... ஜங்!

    அதில் ஒரு ஆனந்தம் அவனுக்கு. நான்காவது வீட்டு பங்களாவில் பணிபுரியும் வேலைக்காரியை அழைத்து, சாப்பாடு தருவான். நான்ஸியின் ஆடைகளைக் கொடுத்து அணியச் சொல்லி அழகு பார்ப்பான்.

    அவள் நான் எடுத்துக்கட்டா என்பாள்.

    ம்கூம். ஆசைக்குப் போட்டு பார்த்துட்டு திருப்பிக் கொடுத்திரு அவள் மறைவு தேடுவாள். இங்கேயே மாத்திக்க!

    சீ…

    என்ன சீ! ஒளிஞ்சு நின்னு மாத்திக்கவா இங்கே அழைத்தேன்...? என்று பின்பகுதியில் தட்டுவான். அவளுக்கு அது சுகமாய் இருக்குமோ என்னவோ தெரியாது. கோபிக்கமாட்டாள். முகம் சிவப்பாள்.

    அவனுக்கு முதுகைக் காட்டியபடி உடை அணிவாள். ரசிப்பான். அப்புறம் நான்ஸியின் நகைகள், அவளது மேக்கப் பெட்டி என்று பார்த்துப் பார்த்து அதிசயிப்பாள்.

    என்ன அப்படிப் பார்க்கறே?

    இந்த மாதிரி அணிஞ்சுக்க கொடுப்பினை வேணும்! வாழ்ந்தா இப்படி சொகுசாய் வாழணும். இல்லேன்னா சாகணும். துணி அலசல்! எச்சில் சோறு! என்று மாலினி பொருமுவாள்.

    கவலைப்படாதே எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும்

    எப்படி வரும்? எப்போ வரும்?

    அவசரப்படறியே... மேடம் வந்திரப் போறாங்க! சீக்கிரம் போய் ஃபிரிட்ஜிலிருந்து வேணுங்கிறதை எடுத்து சாப்பிட்டு கிளம்பு! என்று விரட்டுவான்.

    நான்ஸி குதித்ததெல்லாம் போதும் என்று துண்டு எடுத்து வியர்வையை ஒற்றிக்கொண்டு, சோமன்! அங்கே என்ன பண்றே என்று கத்தியவுடன் சுயநினைவுக்கு வந்து,

    கார்...

    போதும்... வந்து டிபன் ரெடி பண்ணு! நான் வெளியே போகணும்! அவன் சரிங்க என்று

    Enjoying the preview?
    Page 1 of 1