Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Melidangal
Melidangal
Melidangal
Ebook156 pages59 minutes

Melidangal

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நாவல் எழுதுவதை விட, சிறுகதை எழுதுவது கடினம். ஒரு சிறு சம்பவம், அதில் ஒரு சிறிய கருத்து, அதனால் பிறக்கும் உணர்ச்சி இவையெல்லாம் சிறுகதை என்ற சிறிய வடிவத்தில் அடங்கியிருப்பதோடு, சொல்லும் உத்தி, மொழியின் வேகம் இரண்டினாலும் அழகு பெறுகிறது. ஒரு சிறுகதையில் வரும் பாத்திரம் நம்மோடு உறவாட வேண்டும். அந்தப் பாத்திரத்தின் உணர்ச்சிகள், எண்ணங்கள் நம்முடைய உணர்ச்சிகளாகவும், நம்முடைய எண்ணங்களாகவும் தோன்ற வேண்டும்.

கதாநாயகன், கதாநாயகி, வீரம், காதல், புறம், அகம்... இவை எதுவும் இல்லாமல் ஒரு சம்பவம் நம் நெஞ்சைத் தொடுமானால் அதுதான் சிறந்த சிறுகதை. சுப்ர.பாலனின் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நமது நெஞ்சைக் கனியச் செய்கிறார்கள். அல்லது கவலைப்பட வைக்கிறார்கள். மனம் நெகிழச் செய்கிறார்கள். சிரிக்கவும் வைக்கிறார்கள்.

கனகாம்பரத்தின் நிறத்தையும் அழகையும் அனுபவிக்கும் ஆசிரியர், சரயூ பூப்பறிப்பதை நம் கண்முன் நிறுத்துகிறார். கல்யாணப் பருவத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிற மகளின் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற அந்தத் தந்தையின் தாபம், தாயாருடைய யதார்த்தமான நம்பிக்கை, பால்ய நண்பர் தன் மகனுடன் வரும்போது துளிர்விடும் கற்பனைகள் - இவையெல்லாம் தினசரி நாம் பார்த்துப் பழகுகிற மக்களை எதிரே நிறுத்துகின்றன. சரயூவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்றா இல்லையா என்று நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

முன் நெற்றியில் ஒரு காயம், மழை விழும் நேரம் என்ற இரண்டு கதைகளும் முழுவதுமே கற்பனையானாலும் நம்மைத் திடுக்கிடச் செய்கின்றன. தான் வசிக்கும் இந்தச் சிறிய உலக உருண்டைக்கு மனிதன் செய்யும் அபசாரம் எங்கு போய் முடியலாம் என்று ஆசிரியர் கற்பனையில் காண்கிறார். நமது பேரக் குழந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் வாழப் போகும் இந்த உலகத்தை இந்த நூற்றாண்டில் ரொம்பவும் மாசுபடுத்தி விட்டோம் என்பதையும் அதன் விளைவு என்ன ஆகலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். கற்பனை சிறகடித்துக் கொண்டு பறந்தாலும் பயமாக இருக்கிறது.

தன்னுடைய அவல வாழ்க்கை இன்னதென்றே உணராமல் வளையவரும் சிறுவன் ஜிட்டு, நினைவுகளையும் கனவுகளையும் சேர்த்துத் தண்ணீருடன் விழுங்கும் ரங்கராஜன், கடைக்கருகே பழத்தோலைத் தின்று வாழும் ஆட்டிடம் கருணை காட்டும் சின்னையா, ரோஜாச்செடி ரங்கையா, ரதசாரத்தியம் செய்யப் பிறந்திருக்கும் பெண் குழந்தை இவர்கள் நம் நினைவில் தங்கிவிடுகிறார்கள். ஆசிரியர் வாழ்க்கையை ரசிப்பவர். இயற்கையை ரசிப்பவர். வாழ்க்கையின் அவலங்களையும், நிறைகளையும் குறைகளையும் ஊன்றிப் பார்ப்பவர்.

குழந்தை தன் குண்டு விழியை உருட்டிப் பார்ப்பதையும்,. படகு மாதிரி வாகாய் அழகாய் வளைந்திருக்கும் வாகை மரத்தின் காய்ந்த பழ ஓட்டையும், மின்சார அதிர்ச்சியாய்த் தொட்டாச்சுருங்கி இலைகளைச் சுருக்கி இழுத்துக் கொள்வதையும், சிறுவன் ஷூ பாலிஷ் போடும் நேர்த்தியையும், பார்வதியின் மன உளைச்சலையும்கூட ரசனையும் அனுதாபமும் சேர நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

'அர்த்தமற்ற வாழ்க்கை' என்று கருதக்கூடிய சில நிலைகளிலும் ஆழமான பொருளைத் தேடும் முயற்சியில் சுப்ர.பாலன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

- ஆனந்தி

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904468
Melidangal

Read more from Subra Balan

Related to Melidangal

Related ebooks

Reviews for Melidangal

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Melidangal - Subra Balan

    http://www.pustaka.co.in

    மேலிடங்கள்

    Melidangal

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://www.pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    பூந்தொட்டி

    வாசனை

    மேலிடங்கள்

    இயல்புகளும் மீறல்களும்

    பலவீனங்கள்

    கறுப்பாய் ஒரு வைரம்

    'குட்மார்னிங்...'

    சாராய நியாயங்கள்

    அநாமதேயத் தடைகள்!

    ஆடு

    ரதசாரத்யம்

    காவல்

    மழை விழும் நேரம்

    நம்பிக்கைகள்!

    சலங்கை ஒலி

    முன்நெற்றியில் ஒரு காயம்!

    லாலாராயின் கத்தி!

    தோட்ட வீடும் கனகாம்பரமும்

    முன்னுரை

    நாவல் எழுதுவதை விட, சிறுகதை எழுதுவது கடினம். ஒரு சிறு சம்பவம், அதில் ஒரு சிறிய கருத்து, அதனால் பிறக்கும் உணர்ச்சி இவையெல்லாம் சிறுகதை என்ற சிறிய வடிவத்தில் அடங்கியிருப்பதோடு, சொல்லும் உத்தி, மொழியின் வேகம் இரண்டினாலும் அழகு பெறுகிறது. ஒரு சிறுகதையில் வரும் பாத்திரம் நம்மோடு உறவாட வேண்டும். அந்தப் பாத்திரத்தின் உணர்ச்சிகள், எண்ணங்கள் நம்முடைய உணர்ச்சிகளாகவும், நம்முடைய எண்ணங்களாகவும் தோன்ற வேண்டும். கதாநாயகன், கதாநாயகி, வீரம், காதல், புறம், அகம்... இவை எதுவும் இல்லாமல் ஒரு சம்பவம் நம் நெஞ்சைத் தொடுமானால் அதுதான் சிறந்த சிறுகதை.

    சுப்ர.பாலனின் சிறுகதைகளில் வரும் கதாபாத்திரங்கள் நமது நெஞ்சைக் கனியச் செய்கிறார்கள். அல்லது கவலைப்பட வைக்கிறார்கள். மனம் நெகிழச் செய்கிறார்கள். சிரிக்கவும் வைக்கிறார்கள்.

    கனகாம்பரத்தின் நிறத்தையும் அழகையும் அனுபவிக்கும் ஆசிரியர், சரயூ பூப்பறிப்பதை நம் கண்முன் நிறுத்துகிறார். கல்யாணப் பருவத்தைத் தாண்டிக் கொண்டிருக்கிற மகளின் வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொடுக்க முடியவில்லையே என்ற அந்தத் தந்தையின் தாபம், தாயாருடைய யதார்த்தமான நம்பிக்கை, பால்ய நண்பர் தன் மகனுடன் வரும்போது துளிர்விடும் கற்பனைகள் - இவையெல்லாம் தினசரி நாம் பார்த்துப் பழகுகிற மக்களை எதிரே நிறுத்துகின்றன. சரயூவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிற்றா இல்லையா என்று நாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம்.

    முன் நெற்றியில் ஒரு காயம், மழை விழும் நேரம் என்ற இரண்டு கதைகளும் முழுவதுமே கற்பனையானாலும் நம்மைத் திடுக்கிடச் செய்கின்றன. தான் வசிக்கும் இந்தச் சிறிய உலக உருண்டைக்கு மனிதன் செய்யும் அபசாரம் எங்கு போய் முடியலாம் என்று ஆசிரியர் கற்பனையில் காண்கிறார். நமது பேரக் குழந்தைகளும் அவர்களுடைய குழந்தைகளும் வாழப் போகும் இந்த உலகத்தை இந்த நூற்றாண்டில் ரொம்பவும் மாசுபடுத்தி விட்டோம் என்பதையும் அதன் விளைவு என்ன ஆகலாம் என்பதையும் எடுத்துக் காட்டுகிறார். கற்பனை சிறகடித்துக் கொண்டு பறந்தாலும் பயமாக இருக்கிறது.

    தன்னுடைய அவல வாழ்க்கை இன்னதென்றே உணராமல் வளையவரும் சிறுவன் ஜிட்டு, நினைவுகளையும் கனவுகளையும் சேர்த்துத் தண்ணீருடன் விழுங்கும் ரங்கராஜன், கடைக்கருகே பழத்தோலைத் தின்று வாழும் ஆட்டிடம் கருணை காட்டும் சின்னையா, ரோஜாச்செடி ரங்கையா, ரதசாரத்தியம் செய்யப் பிறந்திருக்கும் பெண் குழந்தை இவர்கள் நம் நினைவில் தங்கிவிடுகிறார்கள்.

    ஆசிரியர் வாழ்க்கையை ரசிப்பவர். இயற்கையை ரசிப்பவர். வாழ்க்கையின் அவலங்களையும், நிறைகளையும் குறைகளையும் ஊன்றிப் பார்ப்பவர்.

    குழந்தை தன் குண்டு விழியை உருட்டிப் பார்ப்பதையும்,. படகு மாதிரி வாகாய் அழகாய் வளைந்திருக்கும் வாகை மரத்தின் காய்ந்த பழ ஓட்டையும், மின்சார அதிர்ச்சியாய்த் தொட்டாச்சுருங்கி இலைகளைச் சுருக்கி இழுத்துக் கொள்வதையும், சிறுவன் ஷூ பாலிஷ் போடும் நேர்த்தியையும், பார்வதியின் மன உளைச்சலையும்கூட ரசனையும் அனுதாபமும் சேர நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறார்.

    'அர்த்தமற்ற வாழ்க்கை' என்று கருதக்கூடிய சில நிலைகளிலும் ஆழமான பொருளைத் தேடும் முயற்சியில் சுப்ர.பாலன் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

    - ஆனந்தி

    *****

    பூந்தொட்டி

    பார்த்துக் கொண்டேயிருந்தான் ரெங்கையா. பாவப்பட்ட பிழைப்பாயிற்றே... அவனால் அதுதான் முடியும். ஐயா... செய்யிறது... தப்புங்க. வாணாங்க... என்று அவனால் சொல்லிவிட முடியுமா என்ன?

    என்னவோ, தலைபோகிற அவசரத்தோடு ஆபீஸ் அறையைவிட்டு வெளியே வந்த புதிய அதிகாரி... சொல்லி வைத்த மாதிரி, வாளிப்பாய்ச் செழித்துப் பூத்திருந்த அந்த ரோஜாச் செடியின் அருகில் வந்து நின்று கொண்டார். தடிமனான புகையிலைச் சுருட்டை எடுத்துக் கொஞ்ச நேரம் எச்சிலில் நன்றாய் நனைத்து ஊற வைத்து, அப்புறம் போனால் போகிறது என்கிற மாதிரி தீக்குச்சியை எடுத்துப் பெட்டியில் உரசாமல், உரசிப் பற்ற வைத்து, நிதானமாகப் புகையை உள்ளே இழுத்து வாங்கி வெளியேற்றி ஒரு வழியாய்ச் சுருட்டு முனையில் நெருப்புக் கனிந்தது.

    ரெங்கையாவுக்கு இதைப் பற்றியெல்லாம் ஒன்றும் கவலையில்லை. சாதாரணமாகச் சுருட்டுப் புகைக்கிற சின்ன விஷயத்துக்குப் போய் இவ்வளவு நேரம் சங்கீதம் மாதிரி அனுபவித்து மகிழ்கிற அதிகாரியின் மேல் அவனுக்கு எள்ளளவும் மரியாதை பிறக்கவில்லை. அவனுடைய சிந்தனை முழுவதும் ரோஜாச் செடியை மட்டுமே சுற்றிச் சுழன்று வந்தது. புகைச் சுருட்டிலிருந்து கனிந்து உதிரும் ஒவ்வொரு துளிச் சாம்பலும் அவனுக்கு மரண வேதனையை உண்டாக்கியது.

    ரெங்கையா அந்த அலுவலகத்தில் வாட்சுமேனாகத் தான் வேலைக்கு வந்தான். தோட்டக்காரன்கூட இல்லை. இருந்தாலும் அந்த அலுவலகச் சூழலில் விதம் விதமாய்ப் பூத்துச் சிரிக்கும் மண் தொட்டிச் செடிகளெல்லாம் அவனுக்குச் சினேகமானவை. முந்தைய அதிகாரி ரிடையராகிப் போகிறவரை இந்தப் பூஞ்செடிகளைப் பாதுகாக்க, உரமிட என்று எத்தனையோ காரியங்களுக்கு ரங்கையாவே துணையாக இருந்தான்.

    எசமான்! பூஞ்செடி மேலே பொவையிலைச் சாம்பல் விழக் கூடாதுங்க... வேணும்னா... அந்தச் சாம்பல் குப்பியை இங்கே கொண்டு வரனுங்க... சாம்பல அதுல போடுங்க எசமான்... என்று சொல்லலாமா என்று இந்த முறையும் மனசுக்குள் நினைத்துப் பார்த்ததோடு நிறுத்திக் கொண்டான்.

    புதிய அதிகாரி வந்த பின்னர் முன்னால் இருந்தவரைப் பற்றிப் பேசுவதுகூட ஆபத்தானதுதான். அச்சப்பட்டு அச்சப்பட்டே சாகிற பிழைப்பும் ஒரு பிழைப்பா என்று அலுத்துக் கொண்டான்.

    நேற்றுவரை, பழைய அதிகாரிக்குத் தாசானு தாசனாய்த் துதி பாடிய மானேஜர் அக்கவுண்டெண்ட் எல்லோருமே புதியவரிடம் சுலபமாய் விசுவாச மாற்றம் செய்துகொண்டு விட்டார்கள். சாதாரண வாட்ச்மேனுக்கு மட்டும் அந்த நினைப்பெல்லாம் உதவுமோ? அவையெல்லாம் பெரிய இடத்து விவகாரங்கள். ரோஜாச் செடி ஓர் அற்ப விஷயம் தானே. குழந்தையை வளர்க்கிற மாதிரி ஒரு பூஞ்செடியை வளர்த்து விட்டுத் தினமும் போய் அதன் பக்கத்தில் நின்று கவனித்து புதிதாக முளை விடுகிற அரும்பையோ, இலைக் குருத்தையோ பார்த்து மகிழ்ந்து விட்டுத்தான் அந்தப் பழைய அதிகாரி தினமும் தன்னுடைய அலுவலக அறைக்குள் நுழைவார்.

    இப்போது அவர் இல்லை. ரிடையர்மெண்ட் என்கிற பெயரில், பதினைந்து ஆண்டுகளாய் அந்தக் கட்டிடம், தோட்டம், மனிதர்கள் என்று பழகியதையெல்லாம் விட்டு விட்டு அந்நியமாகிப் போனார்.

    ரெங்கையாவுக்கு நன்றாக நினைவு வந்தது. கொட்டுகிற மழையில், ஒரு நாள் இந்தச் செடியை வாங்கிக் கொண்டு வந்தார் அவர். ரெங்கையா! நல்ல ஜாதிச் செடி பத்திரமாப் பார்த்துக்க... என்று சொன்னாலும், தன்னுடைய கைப்படவே தொட்டியில் மண்ணை நிரப்பி, எருவைக் கலந்து ரோஜாச் செடியை ஊன்றி வைத்தார்.

    அதிகாரி வைத்த செடி பிழைக்க வேண்டுமே என்ற மானேஜர் வரை எல்லோருமே கவலைப்பட்டார்கள். பிரார்த்தனை பண்ணினார்கள், தவியாய்த் தவித்தார்கள்.

    செடி நன்றாகவே துளிர் விட்டது, தழைத்து அரும்பு கட்டியது. முதல் மொட்டு நிறம் காட்டியபோது அதைப் பார்த்துச் சின்னக் குழந்தை மாதிரிக் கைகொட்டி ஆரவாரம் செய்தார் அந்த அதிகாரி. அவர் சந்தோஷப்பட்டால் நாம் மட்டும் சும்மா இருக்கலாமா என்று மற்றவர்களும் கைதட்டி ஆரவாரித்தார்கள்.

    அன்றும் சரி இன்றும் சரி, அமைதியாகவே நின்று எல்லாவற்றையும் கவனிக்கிறவன் ரெங்கையாதான். எல்லாருடைய அன்பையும், பராமரிப்பையும் பெற்று அந்த ரோஜாச் செடி செழித்து வளர்ந்தது, பூத்துக் குலுங்கியது.

    அந்த அதிகாரி இருந்தவரை ஒரு பூவைக்கூட அவர் செடியிலிருந்து பறித்தது கிடையாது. பூவைச் செடியில் வைத்தே அழகு பார்க்க வேண்டும் என்கிற ரஸனை அவருடையது.

    ரெங்கையா கட்டிடத்துக் காவலாள் என்கிற நிலைமை மாறி ரோஜாச் செடிக்கு மட்டுமே பாதுகாவல் என்று ஆகிவிட்டது. பகலெல்லாம் யார் யாரோ வந்து போகிற பரபரப்பான அலுவலகச் சந்தையில் தவறிக்கூட யாரும் செடிப்பக்கம் போவதை ரெங்கையா அனுமதிக்க மாட்டான்.

    இப்போது எல்லாம் பழசாய்ப் போன கதைகள். பதவி விலகிப் போன அன்று, அந்த அதிகாரி, மிகுந்த வாஞ்சையோடு செடியின் பக்கம் வந்து நின்று, வைத்த கண் வாங்காமல் பார்த்து விட்டுத்தான் போனார்.

    Enjoying the preview?
    Page 1 of 1