Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Yathumagi Ninraal!
Yathumagi Ninraal!
Yathumagi Ninraal!
Ebook215 pages1 hour

Yathumagi Ninraal!

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

பயணங்கள் எப்போதுமே இனிமையானவை. உற்சாகம் தருபவை. அதுவும் ஆன்மிகம் சார்ந்தவையாக இருப்பின் அதன் சிறப்பே அலாதியானது.

இதற்கு முன்பே என்னுடைய திருத்தலப் பயணங்கள் பற்றிய கட்டுரைகளை நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்தாவதாக மலரும் 'யாதுமாகி நின்றாள்!' என்னும் இத்தொகுதி வெளிவருகிறது.

தமிழகம், ஆந்திரம், இன்றைய தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், தவிர மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.

வழக்கம்போல் இந்த நூலையும் வாசக அன்பர்கள் வரவேற்று மகிழ வேண்டும். இந்தக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்ட கல்கி, அமுதசுரபி, தீபம், தினமணி, கோபுர தரிசனம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்களுக்கு என் நன்றி.

அழகுற ஒளியச்சுச் செய்துள்ள நாஞ்சில் பெ. மணிக்கும் மேலட்டையை வடிவமைத்துள்ள ஓவியர் ஹரீஷ்குகனுக்கும் என் நன்றி.

அன்பன்.
சுப்ர. பாலன்

Languageதமிழ்
Release dateSep 13, 2019
ISBN6580127904506
Yathumagi Ninraal!

Read more from Subra Balan

Related to Yathumagi Ninraal!

Related ebooks

Related categories

Reviews for Yathumagi Ninraal!

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Yathumagi Ninraal! - Subra Balan

    http://www.pustaka.co.in

    யாதுமாகி நின்றாள்!

    Yathumagi Ninraal!

    Author:

    சுப்ர. பாலன்

    Subra Balan

    For more books

    http://pustaka.co.in/home/author/subra-balan

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    என்னுரை

    1. அலைகள் தாலாட்டும் ஆத்மலிங்கம்

    2. கரும்பே வருக!

    3. நாரதரின் மேல்துண்டு!

    4. யானைக்காட்டில் ஓர் அழகர்!

    5. வில்லிபுத்தூர் வைத்தியநாதர்!

    6. யாதுமாகி நின்றாள்!

    7. திருவுடையான், சிராப்பள்ளிக் குன்றுடையான்!

    8. கருப்பு வண்டை விரட்டிய அரசகுமாரி!

    9. "எழு! பறவையே எழு!''

    10. ஸ்ரீபுரத்தில் தங்கத் தோட்டம்!

    11. குன்றில் உறையும் சிங்கப்பிரான்!

    12. ஆயிரக்கணக்கில் நாகர் திருமேனிகள்!

    13. பழநியை நோக்கும் குறிஞ்சி ஆண்டவர்!

    14. ஒப்பிலா மாமணிக் கிரிவாசன்

    15. கந்தகோட்டத்து முத்துக் குமாரசுவாமி

    16. சொன்ன சொல் காத்த பசு!

    17. சௌபர்ணிகா நதிக்கரையில் ஒரு சக்தி தேவி

    18. ஏரிகளின் மாநிலத்தில் ஒரு பத்ரகாளி அம்மன்!

    என்னுரை

    பயணங்கள் எப்போதுமே இனிமையானவை. உற்சாகம் தருபவை. அதுவும் ஆன்மிகம் சார்ந்தவையாக இருப்பின் அதன் சிறப்பே அலாதியானது.

    இதற்கு முன்பே என்னுடைய திருத்தலப் பயணங்கள் பற்றிய கட்டுரைகளை நான்கு தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள். ஐந்தாவதாக மலரும் 'யாதுமாகி நின்றாள்!' என்னும் இத்தொகுதி வெளிவருகிறது.

    தமிழகம், ஆந்திரம், இன்றைய தெலுங்கானா, கேரளம், கர்நாடகம், தவிர மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ் பெற்ற உஜ்ஜயினி மகாகாளேஸ்வரர் ஆலயம் பற்றிய கட்டுரையும் இதில் இடம் பெறுகிறது.

    வழக்கம்போல் இந்த நூலையும் வாசக அன்பர்கள் வரவேற்று மகிழ வேண்டும். இந்தக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்ட கல்கி, அமுதசுரபி, தீபம், தினமணி, கோபுர தரிசனம், லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர்களுக்கு என் நன்றி.

    அழகுற ஒளியச்சுச் செய்துள்ள நாஞ்சில் பெ. மணிக்கும் மேலட்டையை வடிவமைத்துள்ள ஓவியர் ஹரீஷ்குகனுக்கும் என் நன்றி.

    அன்பன்.

    சுப்ர. பாலன்

    1. அலைகள் தாலாட்டும் ஆத்மலிங்கம்

    (முருடேஸ்வர்)

    கர்நாடக மாநிலத்தின் மேற்குப் பகுதியில் அரபிக் கடலின் ஆனந்தமயமான அலைகளின் வருடலில் திளைத்திருக்கிறது முருடேஸ்வர் என்று வழங்கப்படுகிற திருத்தலம். வருவாய்த்துறை ஆவணங்களில் இன்றளவும் 'மாவள்ளி' என்றே குறிப்பிடப்படுகிறது முருடேஸ்வர். சிவபெருமான் ஆத்மலிங்கமாக எழுந்தருளியுள்ள தலமாகையால் அவருடைய திருநாமத்தையே இந்தத் திருத்தலமும் பெற்றிருக்கிறது.

    என். எச்.17 என்கிற அடையாளத்தோடு அழகான மலை வனப்பாதையில் வளைந்து நெளிந்தும் செல்கிற நெடுஞ்சாலை என்ன காரணத்தாலோ இப்போது குண்டும் குழியுமாய், பயண சுகத்தையே பறித்துக்கொண்டு விடுகிறது. அண்மையில் அலைக்கழித்த பெருமழையின் விளைவாக இருக்கலாம்.

    மங்களூரிலிருந்து உடுப்பி வழியே வரும்போது சிறிது தூரம் கடற்கரையை அளந்தபடி பயணம் செய்வது சுகமான அனுபவம். 160கி.மீ. தொலைவு பயணம் செய்தால் இடப்புறம் கம்பீரமாக அமைந்திருக்கிறது. ஆர்.என். ஷெட்டி மருத்துவமனை. பக்கத்திலேயே அலங்கார வளைவு 'முருடீஸ்வர் ஆலயம்' என்று தமிழிலும் வரவேற்கும். அங்கிருந்து சிறிது தூரம் சென்றால் வானத்தை அளந்தபடி, அமர்ந்த நிலையில் உள்ள பரமேஸ்வரன் திருமேனியைக் காணலாம்.

    ஒரு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கான்கிரீட் திருமேனியின் உயரம் 123 அடி! உலகிலேயே மிக உயரமான சிவபெருமான் திருமேனி இதுதான் என்கிறார்கள்.

    கடற்கரையின் அபரிமிதமான இயற்கை அழகோடு போட்டியிடுகிற மாதிரி இந்தச் செயற்கை அழகுகளைப் புதிது புதிதாய் உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். கீதோபதேசம், இராவணனிடம் ஆத்மலிங்கத்தைப் பெறுகிற அந்தணச் சிறுவனான மகாகணபதி, கயிலை மலையின் கீழே தவமியற்றும் முனிபுங்கவர்கள் என்று மனம்போனபடியெல்லாம், ஆளுயரத்துக்கும் மேலே சிற்பங்களை வடித்து வைத்திருக்கிறார்கள். நாம் போயிருந்தபோது சூரியக் கடவுளின் சிற்பத்தை இரண்டு ஆள் உயரத்துக்கும் கூடுதலாக மேற்கு பார்த்து உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

    சிவபெருமான் திருமேனியின் இடப்புறச் சுற்றிலிருந்து பார்த்தால் மாலைக் கதிரவன் கடலில் மறையும் அற்புதக் காட்சியைக் கண்டு மனம் இலயிக்கலாம். பனி மூட்டமும், மேகப் பஞ்சுப் பொதிகளும் உங்களுக்கு மனமிரங்க வேண்டும்!

    சிவபெருமானின் பீடத்தின் அடிப்பகுதியில குகை போல் சுற்றிலும் அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைய இப்போதைக்குப் பொது மக்களுக்கு அனுமதி இல்லை. கொட்டிக் கிடக்கும் கொள்ளை அழகாக இருந்தத் திருத்தலப் புராண நிகழ்ச்சிகளைப் பத்தடி உயரச் சிற்பங்களாக, அற்புதமான வண்ண மெருகோடு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் பேசும் சிற்பங்கள்! கல்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள, அந்தக் குகைக்குள் நுழைந்து சமகாலக் கலைத் திறனைக் கண்டு ஆனந்திக்கும் சிறப்பு அனுமதி நமக்குக் கிடைத்தது - பெரியவர் ரகுராம் பட் உதவியால். இவர் திண்டுக்கல்காரர் என்றாலும், வருவாய்த் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்று இங்கே அமைதியாக ஆலய அழகில் திளைத்துக் கொண்டிருக்கிறார். விழி விரிய இந்த ஊரின் பெருமையைப் பேசுவார்.

    தலபுராணம் வழக்கமாகப் பலரும் கேள்விப்பட்டிருக்கக் கூடிய கதைதான். இராவணேஸ்வரன் சிவபெருமானின் அருளுக்காகத் தவமிருந்து பெற்ற ஆத்மலிங்கத்தை, நாரதர் - விநாயகர் கூட்டுச் சதியால் இலங்கைக்குக் கொண்டு போக முடியாமல் செய்த கதை.

    அந்த ஆத்மலிங்கம் இப்போது மண்ணுக்குள் பெருமளவு மறைந்து பசுவின் காதுமடல் மட்டும் தெரிகிற மாதிரி, மஹாபலேசுவரர் என்கிற திருநாமத்தோடு வழங்குகிறது. 'கோகர்ணா' என்ற (பசுவின் காது) தலத்தில் இதைக் காணலாம்.

    இராவணேஸ்வரனின் தாயார் மிக உன்னதமான சிவபக்தை. தினமும் கடற்கரை மணலில் சிவலிங்கத் திருமேனியை உருவாக்கி வழிபட்டு வந்தார். கடல் அலைகள் அந்தத் திருமேனியை உருக்குலைத்து விடுவது கண்டு அந்தத் தாய் வருந்த, உடனே மகன், அம்மா! கலங்காதே. சிவ பிரானைத் தவமிருந்து உனக்கு ஆத்மலிங்கத்தையே பெற்று வந்து தருகிறேன்; அது கலையாது, அழியாது என்று சொல்லி விட்டுக் கயிலாயம் புறப்பட்டான்.

    எப்படியோ கடுந்தவம் இயற்றி அந்த ஆத்மலிங்கத்தைச் சிவபெருமானிடமிருந்து பெற்றுக் கொண்டுவிட்டான் இராவணேஸ்வரன். கோடி சூர்ய சந்திரர்களின் ஒளியைத் தன்னகத்தே கொண்டதாம் அந்த ஆத்மலிங்கம். சும்மாக் கொடுத்து விடுவாரா - சிவபெருமான்? ஒரு நிபந்தனையோடு தந்தார்.

    சிவலிங்கத்தை ஒரு பேழையில் வைத்து மூடி, ஒரு துணியால் போர்த்திக் கட்டி, கைகளில் எடுத்துக் கொண்டு நடந்து போக வேண்டும், வழியில் எக்காரணம் கொண்டும் பூமியில் அதை வைக்கக் கூடாது. அப்படி வைத்து விட்டால் அந்த இடத்திலேயே ஆத்மலிங்கம் வேரூன்றிக் கொண்டுவிடும் என்பது அந்த நிபந்தனை.

    நிபந்தனைகளை மனத்தில் கொண்டவனாய் ஆத்ம லிங்கத்தோடு தெற்கு நோக்கிச் சென்றான் இராவணேசுவரன். நாரதரும் மற்ற தேவதைகளும் கூடி ஆலோசனை செய்து, ஆத்மலிங்கம் இலங்கைக்குப் போய் விடாமல் தடுக்க முயன்றார்கள்.

    சப்த கோடீஸ்வரம் என்னுமிடத்தில் நண்பகல் கடமைகளை முடித்துவிட்டு இப்போதைய கோகர்ண க்ஷேத்திரத்துக்கு இராவணேசுவரன் வந்தபோது, மகாவிஷ்ணு தம்முடைய சுதர்சன சக்கரத்தால் சூரியனை மறைத்து விட்டார். இராவணனும் மாலை நேரம் ஆகிவிட்டது என்றெண்ணி, மாலைக் கடமைகளை நிறைவேற்ற விருப்பம் கொண்டான்.

    ஆத்மலிங்கத்தைக் கீழே வைத்தால் ஆபத்து. என்ன செய்வது என்று யோசித்த போது தேவர்களின் திட்டப்படி ஓர் அந்தணச் சிறுவனாக எதிர்ப்பட்டார் விநாயகர். தம்பி! இதைச் சற்று நேரம் வைத்திரு, சந்தியா வந்தனம் முடித்து வந்து வாங்கிக் கொள்கிறேன். இதைத் தரையில் மட்டும் வைத்து விடாதே என்று சிறுவனைக் கேட்டுக் கொண்டான் இராவணேசுவரன்.

    ஆகா! அப்படியே செய்கிறேன். ஆனால் இது கனமாக இருக்கிறது. நான் மூன்று முறை உங்களை அழைப்பேன். அதற்குள் வந்து வாங்கிக் கொள்ளா விட்டால் கீழே வைத்து விடுவேன் என்றது அந்தச் சாதுப் பிள்ளை.

    ஆனால், இராவணேசுவரன் மாலைக் கடன்களை முடிப்பதற்குள் மூன்று முறை கூவி விட்டுப் பிள்ளையார், ஆத்மலிங்கத்தைப் பூமியில் வைத்து விட்டார். ஆத்திரமாக வந்தது இராவணேசுவரனுக்கு. பூமியிலிருந்த அதை எடுக்க முயன்று தோற்றுப் போனான். மிகுந்த பலசாலியான தன்னாலேயே அதை எடுக்க முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், ஆத்மலிங்கம் இருந்த பேழையின் மூடி, சுற்றியிருந்த துணி, அடிப்பெட்டி, கட்டுக் கயிறு என்று ஒவ்வொன்றாக எடுத்து நாலா திசைகளிலும் வீசி எறிந்தான். சிவலிங்கம் பூமிக்குள் நன்றாக அழுந்திக் கொண்டு விட்டது! இராவணேசுவரனின் பலத்துக்கே சவாலாக அந்த லிங்கம் அமைந்ததால் கோகர்ண க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் திருநாமம் 'மகா பலேஷ்வர்' என்று ஆனது!

    பேழையை எறிந்த இடத்தில் அது ஒரு சிவலிங்கமாக உருமாறி 'ஸஜ்ஜேஸ்வரர்' என்கிற திருநாமம் பெற்றது. பேழையின் மூடி போய் விழுந்த இடத்தில் 'குணவந்தேஸ்வரர்' என்கிற திருநாமத்தோடு ஒரு சிவலிங்கம் உருவானது. சுற்றிக் கட்டியிருந்த கயிறு போய் விழுந்த இடத்தில் உருவான சிவலிங்கம் 'தாமேஸ்வரர்' என்று பெயர் பெற்றது. துணி விழுந்த இடம்தான் முருடேஸ்வரம். இறைவனின் பெயர் இங்கே முருடேஸ்வரர் என்று வழங்கப்பட்ட போதிலும் சரியான சொல் 'ம்ருடேஸ்வரர்' என்பதுதான். 'ம்ருட' என்றால் இராவணேசுவரனால் கிழித்து வீசப்பட்ட துணி என்று பொருள் தருகிறது, தலவரலாற்றுக் குறிப்பேடு. 'மருட’ என்ற சொல்லுக்கு 'மகிழ்ச்சி' என்று கூடப் பொருள் சொல்கிறார்கள்.

    சிவராத்திரி அன்றைக்கு வில்வ தளத்தால் இந்தச் சிவபெருமானை அர்ச்சித்து வழிபட்டால் மரண பயம் அகன்று, சுவர்க்கம் கிட்டும் என்கிற நம்பிக்கை உண்டு.

    அதனால், துணிக் கந்தையாக வந்து விழுந்து சிவலிங்கத் திருமேனியாக உருமாறிய இறைவனை, இத்தலத்தில் கடவுள்களும், முனிவர்களும் தொடர்ந்து ஏழு நாட்கள் பூஜை செய்து வழிபட்டு விண்ணுலகம் சென்றார்களாம். அந்த ஏழு நாட்களும் தேவர்களுக்காக சிவபெருமான் இருந்து அருள்பாலித்த இடம் 'கந்துக கிரி' என்று வழங்கப்படுகிறது.

    இராவணேசுவரனின் ஆத்திரத்தின் விளைவாக வீசி எறியப்பட்ட பொருள்கள் அனைத்துமே சிவலிங்க வடிவம் பெற்றன. கோகர்ண க்ஷேத்திரமும் மற்ற நான்கு இடங்களும் கடற்கரையை ஒட்டி அருகருகேயே உள்ளன. இந்த ஐந்து சிவாலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்வது நிறைந்த நலன்களை வழங்கும் என்கிறார்கள்.

    நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்த முருடேஸ்வரர் ஆலயம், மண்சுவர்கள் கூட இடிந்து போய்ப் பாழ்பட்டுக் கிடந்திருக்கிறது.

    கந்துக கிரிக்குப் போகிற பாதையில் முழங்கால் அளவு கடல் நீரில் இறங்கித்தான் போக வேண்டும். அலைகளின் வேகம் அதிகமாகி விட்டால் கோயிலுக்கு வரமுடியாது என்று தம்முடைய பழைய அனுபவங்களை இங்கே நினைவு கூர்கிறார் டாக்டர் பட்.

    தாம் பிறந்த ஊர் என்கிற அபிமானம் காரணமாக, தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்து, முருடேசுவரத்தை மேம்படுத்தி அழகான சுற்றுலாத் தலமாகவும், அடையாளம் காட்டியுள்ள பெருமைக்குரியவர் பிரபல தொழில் அதிபராக விளங்கும் ஆர்.என். ஷெட்டி. சிறு வயது முதலே முருடேசுவரரிடம் ஈடுபாடு கொண்டவரான ஷெட்டி, பதினைந்து வயது முதல் நாள் தவறாமல் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்வது

    Enjoying the preview?
    Page 1 of 1