Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

தெய்வத்தின் குரலமுதம்
தெய்வத்தின் குரலமுதம்
தெய்வத்தின் குரலமுதம்
Ebook334 pages1 hour

தெய்வத்தின் குரலமுதம்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி, ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மாதா, பிதா, குரு, தெய்வம் என எல்லாமாகவே இருந்தவர். ஆதிசங்கரரின் அடியொற்றி பாரத தேசமெங்கும் பாதயாத்திரை செய்த அம் மஹான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பலப்பல அரிய விஷயங்களை, எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக எடுத்துச் சொல்லி இருக்கிறார் ஆன்மீக எழுத்தாளர் ஆர்.பொன்னம்மாள்.

Languageதமிழ்
Release dateJun 17, 2022
ISBN9788179508138
தெய்வத்தின் குரலமுதம்

Read more from R Ponnammal

Related to தெய்வத்தின் குரலமுதம்

Related ebooks

Related categories

Reviews for தெய்வத்தின் குரலமுதம்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    தெய்வத்தின் குரலமுதம் - R Ponnammal

    1. ஓம் கணேசாய நம:

    விநாயக புராணத்துக்கு பார்க்கவ புராணம் என்று ஒரு பேருண்டு. வேதவியாசர் கிட்டேயிருந்து பிருகு மகரிஷி உபதேசம் பெற்று செய்யப் பட்டதால், அது பார்க்கவ புராணமாச்சு.

    ஒரு தடவை, மகாப்பிரளயம் வந்தபோது துவாதசரும், சூரியாளும் ஒண்ணாச் சேர்ந்து பன்னிரண்டு வருஷம் தன் உஷ்ணத்தாலே தகிச்சா. பூமியைத் தாங்கிண்டிருந்த ஆதிசேஷன் வெப்பம் தாங்காமல் நெளிஞ்சான். அவனோட ஆயிரம் முகத்திலேயிருந்தும் விஷ நெருப்பு பெருமூச்சா வெளிப்பட்டது. பூமியிலேயிருக்கிற எல்லா ஜீவராசியும் அழிஞ்சு போச்சு. பன்னிரண்டு ஆதித்யாளும் பஸ்மமாயிட்டா. அந்த உஷ்ணங்களினாலே நூறு வருஷத்துக்கு மேகத்திலேயிருந்து மழை கொட்டிண்டே இருந்தது. சப்த லோகங்களும் தண்ணீரிலே மூழ்கிப் போச்சு. மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாகி விநாயகரின் வாய் வழியே உள்ளே சென்றனர்.

    அப்போ வக்கிர துண்டரா விநாயகர் வெளிப்பட்டு லோகங்களை சிருஷ்டி பண்ணினதா பார்க்கவ புராணம் சொல்கிறது. மும் மூர்த்திகளும் தேவ வருஷத்திலே ஆயிரம் வருஷம் தவம் பண்ணினதாகவும் எழுதி வைச்சிருக்கா. விநாயகரோட உதரத்திலே சகல புவனங்களும் அடங்கி இருந்ததாலே விநாயகர் கிட்டே உத்தரவு வாங்கிண்டு அங்கே உள்ள சத்திய லோகத்தில் போய் சிருஷ்டி பண்ண ஆரம்பிச்சார் பிரம்மன்.

    அதனாலேதான் பிள்ளையார் சுழி போடாமல் எழுதறதில்லே! மஞ்சளோ, சாணியோ எதனாலேயாவது பிள்ளையார் பிடிச்சு வைச்சுட்டுத் தொடங்கற காரியம் விக்னமில்லாம நடக்குங்கற நம்பிக்கை ஜனங்ககிட்ட வேரோடிப் போயிருக்கு. சாதாரணமாக கிருஷ்ண ஜெயந்திக்கு முறுக்கு, சீடை பண்ணினாக் கூட அரிசி மாவாலே பிள்ளையார் பிடிச்சுட்டுத்தான் தொடங்குவா.வாய் வழியாக உள்ளே போன மும்மூர்த்திகளும் எப்படி வெளி வந்தான்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? ரொம்ப நேரம் பிரார்த்தனை பண்ணினதும் தும்பிக்கை வழியாக பிரம்மாவையும், இரண்டு காதுகள் வழியாக விஷ்ணு, ருத்திரனையும் வெளியே அனுப்பினார் கணபதி.

    என்னடா இப்படி பிள்ளையார் கிட்டேயிருந்து புவனங்களெல்லாம் உற்பத்தியாகிறதுன்னு கதையளக்கிறானே, பெருமாள் தானே ஆலிலையில் இருந்தார். அவர் கிட்டேயிருந்து தானே உலகங்கள் உற்பத்தியாச்சுன்னு விஷ்ணு புராணம் சொல்றது. பராசக்தி கிட்டேயிருந்து தானே மும்மூர்த்திகளும், சகல தேவதைகளும் உண்டானதா தேவி பாகவதம் சொல்றது. இதிலே எது நிஜம்னு குழம்ப வேண்டாம்.

    உயிர் என்கிறது எது? பேசும் போதும், சாப்பிடும் போதும்அதுலே உயிர் இருக்கு. பார்க்கும் போது கண்ணிலே, கேட்கும்போது காதிலே, நடக்கும்போது காலிலே, வேலை செய்யற போது கையிலே, வாசனை நுகரும் போது மூக்கிலே, ஜீரணிக்கும் போது குடலிலே, இப்படி உயிர் ‘டக்டக்’குனு அதிகமாக அங்கே போயிருக்கும். இது எப்படி மாறிக்கறதுங்கறதையே நம்மளாலே கண்டுபிடிக்க முடியலே! அது மாதிரிதான் தெய்வங்களும். அப்பப்போ ஒவ்வொருத்தருக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.

    சரி, நாம கணேசர் கதைக்குப் போவோம். வெளியே வந்த பிரம்மா, பிள்ளையாரை நினைக்காமல் சிருஷ்டிக்க ஆரம்பிச்சார். ஒண்ணு கூட அவர் நினைச்சபடி அமையலே. எல்லா உருவமும் பயங்கரமா, அவலட்சணமா இருந்தது. அதோட எல்லாம் பிரம்மாவையே எதிர்க்க ஆரம்பிச்சதுகள். பிரம்மா மனசு உடைஞ்சு போனார். மறுபடியும் ‘மூல முதற் கடவுளேன்னு’ தியானம் பண்ணினார். இப்படி ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லே. தேவ வருஷத்திலே பன்னிரண்டு வருஷம் தாமரைப் பூ மேலே ஒரு காலை மட்டும் ஊன்றித் தவம் செய்தார்.

    விநாயகர் பிரத்யட்சமாகி தன்கிட்டே இருக்கிற ஞானத்தை புத்தியாகவும், கிரியையை சித்தியாகவும் பிரம்மாவுக்குப் புத்திரி களாகக் கொடுத்தார். இரண்டு பேரும் உன் கூட இருக்கிற வரையிலும் உனக்கு ஜெயம்தான்னு ஆசீர்வாதம் பண்ணி கொஞ்ச காலத்திலே இரண்டு பேரையும் என்னிடமே மனைவிகளாகத் திருப்பித் தந்துடணும்னு சொன்னார். அதுக்கப்புறம் பிரம்மா மடமடன்னு படைச்சுத் தள்ளிண்டே இருந்தார்.

    இதே மாதிரி மகாவிஷ்ணு யோக நித்திரையிலிருந்த போது அவரோட இரண்டு காதுகளிலேயிருந்து மது, கைடபன்னு ரெண்டு ராட்சசன் உற்பத்தியாகி அட்டகாசம் பண்ணினா. பிரம்மாவையே அழிக்க முனைஞ்சா. பிரம்மாவோட அபயக் குரலாலே நாராயணரோட நித்திரை கலைஞ்சது. மது, கைடபனோட யுகம் யுகமா யுத்தம் நடக்கறது. ஜெயிக்க முடியலே. கைலாசத்துக்குப் போய் சிவபெருமான் கிட்டே ‘மது, கைடபனை ஏன் ஜெயிக்க முடியலே’ன்னு கேட்டார் மகாவிஷ்ணு. விநாயகரை முதல்லே பூஜை பண்ண மறந்துட்டயேன்னார் சிவன்.

    தேவ வருஷத்திலே நூறு வருஷம் ‘ஓம் விநாயகாய நம:’ ன்னு சொல்லிண்டே தபசிருந்தார் நாராயணன். பிள்ளையார் காட்சிதந்து ‘வெற்றி உனக்குத்தான்’ என்றருளினார். மறுபடி யுத்தம்பண்ணி ஜெயமடைகிறவரை பிரம்மா ஒளிஞ்சிண்டிருந்தார். சிருஷ்டியே நடக்கலே.

    ஹிமவானின் மகளாக அவதரித்த பார்வதி, சதுர்த்தி விரதம் இருந்து பரமசிவனுக்கு மாலையிட்டாள். சுப்ரமண்யர் வள்ளியைத் திருமணம் செய்து கொள்ள பிள்ளையார் யானையாக வந்து ஒத்தாசை செய்த விஷயம், அனேகமாய் எல்லோருக்கும் தெரியும்.

    சிவபெருமானைத் தரிசிக்க வருகிறவர்களையெல்லாம் தன்னையும் சேர்த்து தரிசிக்கிறார்கள் என்று ஆதிசேஷனுக்கு கர்வம் வந்து விட்டது. அவன் லட்சுமணனா அவதாரம் எடுத்த போதும், பலராமனா முன்னாலே பிறந்தப்பவும் ஆஞ்சனேயரோட மோதவிட்டு ரசிச்சவர் எம்பெருமான். ஏன்னா ஆஞ்சநேயனும் நவ வியாகரண பண்டிதன். பதஞ்சலியா வந்தப்போ அவனுக்காக நாட்டியமே ஆடிக்காட்டினார் சோமசுந்தரப் பெருமான். திரையைப் போட்டுண்டு பாடம் சொல்லிக் கொடுத்தவருக்கு கர்வம் வந்துட்டதை பகவான் புரிஞ்சுண்டு எடுத்து வீசிட்டார்.

    தலை, மலைப் பாறையிலே அடிபட்டு ஆயிரம் பிளவாயிடுத்து. அதுதான் ஆயிரம் தலை. அவனும் மறுபடி பதவி கிடைக்கறதுக்காக சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தான். நாரதர்தான் உபதேசம் பண்ணினார்.

    பத்து கைகளோடு சிம்ம வாகனத்திலே சித்தி புத்தி கணபதியாக காட்சி தந்து ஒவ்வொரு பிளவையும் ஒரு தலையாக்கினார். உதரபந்தனமா வயிற்றைச் சுற்றிக் கட்டிண்டு பழைய மரியாதையையும் கிடைக்கும்படி செய்தார்.

    வன்னி பத்ரம், அருகம்புல் இவற்றால் அர்ச்சித்தாலும் அருள் புரியும் விக்னேஸ்வரர் முச்சந்திகளிலும், நதிக்கரைகளிலும் வீற்றிருக்கிறார். இளம் பெண்களும் நீராட வருவார்கள். தெய்வத்தைப் பார்த்தவுடன் மனசு தப்பு செய்ய தயங்கும். அவருக்குள் மும்மூர்த்திகளும், அஷ்டதிக் பாலகர்களும் அடக்கமாயிற்றே! தப்பு செய்ய மனசால் நினைச்சாலும் சும்மா விடமாட்டார்.

    காவேரியைத் தென்னாட்டுக்குத் தர காக்கையாக வந்து அகஸ்தியர் கையாலே குட்டும் வாங்கினார். அதற்கு வட்டியாகத் தான் நாம குட்டிக் கொள்கிறோம். 108 குட்டு குட்டிண்டா ஒரு தேங்காய் வடல் போட்ட மாதிரி. சக்திக்கு தகுந்த மாதிரி வேண்டிக்கலாம். நிச்சயம் பிள்ளையார் நிறைவேத்தித் தருவார். ஏமாத்தாம குட்டிண்டு கணக்கு வைச்சுக்கணும். ஒரு நாளிலே குட்டி முடிக்கணுங்கற அவசியம் இல்லே. இடைவெளி விட்டு குட்டிக்கலாம். இடைவெளி தவிர்க்க முடியாத காரணங்களுக்குத் தான். எனக்கு தெரிஞ்ச ஒரு அம்மாள் 1008 தேங்காய் உடைக்கிறதா வேண்டிப்பா. லட்சத்தி எட்டு குட்டு. எத்தனையோ காரியம் சாதிச்சிண்டிருக்கா. நவ நவமா நான்கு பிள்ளைகள். ஒவ்வொருத்தரும் அமோகமா இருக்கா. முத்து முத்தா மாட்டுப் பெண்கள். ஒரு நோய் நொடி கிடையாது. என்னைப் பார்க்க வரச்ச கடன் தீர்த்துடுத்தா?ம்பேன் எங்கே தீர்றது! அடுத்த ஜென்மாவுக்கும் வரும் போலிருக்கு"ன்னு சிரிச்சுண்டே சொல்லுவா.

    2. யக்ஞமே லோக க்ஷேம ஸாதனம்

    பாரத தேசத்தில் என்றும் காணப்படாத அளவு மழைப்பஞ்சம் ஏற்பட்டு பிரஜைகள் உணவு உடைகளுக்குப் பரிதவிக்கின்றனர். சோரபயம், பரஸ்பரத் வேஷம், படுகொலைகள் அதிகரித்து, தேசத்தில் பயங்கர நிலைமை பரவி வருவது பிரத்யக்ஷமானது. அகால மரணங்களும் வெகு ஸஹஜமாக ஏற்பட்டு வருகின்றன. இவைகளுக்குக் காரணமென்ன? பரிஹார வழி என்ன? சாஸ்த்ர மத நம்பிக்கையற்ற ராஜீய மாயாவாதிகள் தங்கள் மனதில் தோன்றிய ஏதேதோ காரணங்களையும் பரிஹாரங் களையும் கூறுகின்றனர். லௌகிக தோரணையில் திட்டங்கள் போட்டு தேச க்ஷேமம் ஏற்பட முயற்சிக்கின்றனர். ஆயினும் ஒன்று கூடப் பலிக்கவில்லை. பிரஜைகளின் துன்பம் தீரவில்லை. தேசம் பாழாகி வருகிறது.

    புண்யஸ்ய பலம் இச்சந்தி

    புண்யம் தேச்சந்தி மானவா:என்றார் ஒரு பெரியவர். புண்ய காரியத்தில் பலன் மட்டும் வேண்டுமென்பது மனித ஸ்வபாவம். ஆனால் அதுகளுக்கான ஸாதனத்தை (வழிகளை, அதாவது : மரம் நடுவது, இந்திரன், வருணன் ஆகியோரை வணங்குவது, யாகம் செய்வது, நற்காரியங்கள் செய்வது, நல்லவர்களாக நடந்து கொள்வது) செய்வதில்லை. நம்மைப் படைத்த தெய்வமும், அதன் ஆக்ஞையான வேதங்களும் ஸ்மிருதிகளும், புராணங்களும், ஆச்சார்யர்களும் இவ்விஷயமாக நமக்கு உபதேசித்ததென்ன? க்ஷேமஸாதன காரியமென்ன?

    உலக சிருஷ்டி கர்த்தாவாகிய பகவானாலேயே தேச க்ஷேமார்த்த மாக நமக்கு அருளப்பட்ட உயர்ந்த ஸாதனத்தை மறந்து விட்டோம். ஏன்? அதை நிந்தை செய்யக் கூடத் துணிந்து விட்டோம். அதனால் இந்த தர்ம தேசம், தெய்வ சாபம் பெற்றுப் பாழாகி வருகிறது. இதை நிவிருத்திக்க வேண்டுமானால் தெய்வத்தைச் சரணடைந்து அவர் கட்டளையை நிறைவேற்ற வேண்டும். அது என்ன?

    அதுதான் ஸகல சக்தியும் வாய்ந்த உத்தம தர்மமாகிய நமது யக்ஞங்கள்.

    நமது முன்னோர்கள் நம் தேசத்தில் இந்த யாகங்களாகியஉயர்ந்த ஸாதனத்தை எங்கும் அனுஷ்டித்து அதனால் தேசத்தை ஸுபிக்ஷமாகச் செய்தனர். யக்ஞத்தால் காலத்தில் மழை பெய்யச்செய்து ஸஸ்வ்ருத்தியும், அன்ன ஸ்மிருத்தியும் ஏற்படச் செய்தனர். யக்ஞத்தாலல்லவோ பிரஜைகளின் ஆரோக்யத்தையும் அபிவிருத்தி செய்தனர். யக்ஞத்தாலேயே ராஜ்ஜியத்தில் வியாதி துர்பிக்ஷாதி கிலேசங்களைத் தடுத்தார்கள். சத்ருக்களையும் யக்ஞ மஹிமையால் ஜெயித்தனர். சத்துருக்களும் மித்ரர்களாகினர். புத்ராதிகள், ஸந்தானம், ஸம்பத்து, தனதான்யாதிகள், பசுக்கள் மற்றும் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஸகல போக பாக்யங்களையும் யக்ஞத்தாலேயே அடைந்ததென்பது வெறும் அதிசயயுக்தியல்ல. இதற்காக தேசம் முழுவதும் மூலை முடுக்குகளிலும் கூட யக்ஞ தர்மங்கள் அநுஷ்டிக்கப்பட்டன வென்பது நமது ராமாயண பாரதாதி சரித்திரங்களில் கணக்கற்றுக் காணப்படுகின்றன. நவீன சரித்திரக் காரர்கள் பலரும் இதை உறுதி செய்துள்ளனர்.

    தமிழ் தேசமெங்கும் வேத கோஷங்களும், வேள்விப் புகையும் வியாபித்துக் கலியை விரட்டினவென்று நாயன்மார் பாசுரங்களில் பாடினர். ஆழ்வார்களும், வேத வேள்விகளைப் பல பாட்டுக்களில் வர்ணித்துள்ளனர். இவ்வாறு தெய்வசக்தி பாய்ந்து, தெய்வத் தன்மை நிரம்பிய தேசமாகிய பாரத நாட்டில் ஸூபிக்ஷம் தாண்டவமாடியது.

    3. பெரிய வைத்தியன்

    லோகத்துலே எல்லாம் கிடைச்சு சௌகரிய மாயிருக்கிறவனும் கடவுளை துவேஷிக்கிறான். எப்படி?

    நல்ல பத்தினி; குழந்தைகள்; சம்சாரம் பண்றதுக்குப் போதுமான வருமானம். கூடப் பொறந்தவாளுக்கு வாழ்க்கை அமைச்சுத் தந்தாச்சு. பெத்தவா கிராமத்துலே அவா ஜோலியைப் பார்த்துண்டு இருக்கா... வேறென்ன வேணும்?

    வேறே வேலைக்கு விண்ணப்பம் போட்டிருந்தான். தள்ளுபடியா யிடுத்து. இப்படிப் பலமுறை நடந்துருக்கலாம் அதுக்காக, பகவானுக்குக் கண் இல்லே... கருணை இல்லேன்னு திட்டலாமா?

    ஒரு பட்டணத்துலே ஒரு பெரிய ஆஸ்பத்திரி. அங்கே உடம்பெல்லாம் வெந்து சுத்திண்டு இருக்கற ஒரு நோயாளியைக் கொண்டு வரா. இன்னொரு வண்டி வருது. அதிலே மாடி படியிலேயிருந்து தவறி விழுந்து நினைவு தப்பிப் போன ஆள் வரார். அடுத்தபடியா விபத்து நடந்து இரத்தம் சொட்ட ஒருத்தரைக் கொண்டுவரா. இதுல காய்ச்சல், தலைவலி போன்ற சின்ன உபாதைகளோடு வரவா கிட்ட சின்ன டாக்டர் தான் நிப்பா. அதுக்காக வைத்திய சாலையிலே அலட்சியம் பண்றான்னு அர்த்தம் பண்ணிக்கலாமா?

    உன்னைவிட அவசியமானவாளுக்காக பகவான் ஓடிக்கொண்டி ருக்கார். ஒரு ஊரிலே உள்ள ஒரு சின்ன ஆஸ்பத்திரியிலேயே இப்படீன்னா, இந்த உலகம் எத்தனை பெரிசு. இதிலே அவசரமா கவனிக்க வேண்டியவா யாருன்னு பகவானுக்குத் தெரியாதா?

    முன்னேறணும்னு நெனைக்கறது தப்பில்லே... முயற்சி பண்ணணும்; பகவானை நினைக்கனும். ஆனா திட்டறது ரொம்பத் தப்பு.

    இப்படி ஓடிண்டே இருந்தா எப்போ பகவானை நெனைப்பே? யாரைப் பார்த்தாலும் நேரமில்லேங்கறா. குழந்தைகள், சம்சாரம்னு எல்லாரும் வெளியே போயிடறா. கிரஹஸ்தன் தனியா இருக்கான். என்னடா பண்ணலாம்னு யோசிக்கறான். போன் பண்ணி சினேகிதனை வரவழைச்சு சீட்டு வெளையாடலாமா? இல்லே க்ளப்புக்குப் போகலாமான்னு யோஜனை ஓடறதே ஒழிய கையை காலை அலம்பிண்டு சகஸ்ர நாமம் படிக்கலாம்னு தோணறதில்லே! திருவிழாக் காரியங்களை இழுத்துப் போட்டுண்டு செய்யாட்டாலும் முடிஞ்ச வரை ஒத்தாசை செய்யலாமே! நாலு கால் சேர்ந்தா பந்தல். அது போல நாலு நல்லவா ஒண்ணு சேர்ந்தா நல்ல காரியம் நடக்கும்.

    இதே உதாரணத்தை ஒருத்தர் கிட்டே சொன்னேன். அவர் காய்ச்சல், வயித்து வலின்னாலும் பணக்காரன், பெரிய மனுஷாளுக்கு வேண்டியவான்னா, பெரிய டாக்டர் பக்கத்துலேருந்து கவனித்துக் கொள்கிறான்னார்.

    வாஸ்தவம். நாம பகவானுக்கு வேண்டியவனாகணும். எத்தனை பக்தாள் இருந்தா! பகவான் பக்தனுக்காக விறகு கூட சுமந்திருக்கார். பக்தப் பராதீனன் அவன். அவனோட ராஜ்யத்திலே செல்லுபடியாகிற பணம் புண்ணியம். நாம எவ்வளவு பெரிய பக்திமான்னு பகவான் நெனைக்கணும். உதயத்திலே எழுந்திருக்கணும். பூஜை பண்ணனும். கோவிலுக்குப் போகணும். ஏழைகளுக்கு நம்மால் முடிஞ்ச ஒத்தாசைகளைப் பண்ணணும். வேலைக்குத் தகுந்த கூலி கொடுக்கணும். ஏமாத்தப்படாது. சோம்பேறியா இருக்கப்படாது. நேர்மையா நடக்கணும். நீதி நம்மாலே பிசங்கித்துன்னு வரப்படாது. அவாவா கர்மானுஷ்டானங்களை ஒழுங்காப் பண்ணனும். எல்லாத்துக்கும் மனசு தூய்மையாயிருக்கணும். நல்ல குழந்தைகளை என் பிள்ளை என்று தகப்பன் சபையிலே சொல்லி பூரிக்கிறான்.என் பக்தன்னு பகவான் பெருமைப்பட வேண்டாமா? நல்லது செய்ய நாளா பார்க்கணும். இந்த நிமிஷமே தொடங்கலாம் என்கிறார் பரமாச்சாயார். பரமாச்சார்யாளின் உபதேசங்களை இந்த வினாடி முதல் நாமும் பின்பற்றுவோம்.

    நேத்திக்கு ஒரு குடும்பம் கோயமுத்தூரிலிருந்து வந்திருந்தா... "எத்தனைதான் துளசி வைச்சாலும் கொஞ்ச நாளிலே வாடிடற

    தேன்னு வருத்தப்பட்டா..." அதுக்கு பரிகாரம் செய்யலமான்னு கேட்டா. லோகத்துலே நல்லவா கெட்டவான்னு பகவான் படைக்கறதில்லே.... எல்லார் கிட்டயும் நல்லதும் கெட்டதும் கிடக்கு. நல்லது வெளிப்படறச்சே நல்லவாங்கறோம்.

    கெட்டது தெரியறப்போ வேற மாதிரிச் சொல்றோம். நல்லவனோட கெட்ட எண்ணம் வெளிப்படறச்சே மாறிட்டாங்கறோம். மேலேயிருந்து மழை கொட்டறது... அதுலே பகவான் கலக்கற அமிர்தத்தாலேதான் மண் சாகலே... உங்க வீட்டுத் தொட்டியிலே உள்ள மண்ணுக்கு சத்து இல்லே... புதுமண் போட்டா, செடிக்கு அது உரம். பசுஞ்சாணி கலந்து, நெருப்பிலே பஸ்பமாக்கி விபூதின்னு நாம பூசிக்கறாப்பலே... செடிக்கு அது உரம். வைஷ்ணவா திருமண் இட்டுக்கறா. மனுஷ சரீரம் கடைசியா மண்ணுலே போகப்போறது... சாம்பலாயிடும். நல்ல காரியங்களைச் செய்யினு புரியவைக்கத்தான் நம்ம பெரியவா வழிகாட்டின அனுஷ்டானங்கள் இதெல்லாம். மழை பார்க்காத மண்ணுக்கு சத்து கெடையாது... கொஞ்சம் அடி மண்ணோட துளசி எடுத்துண்டு வந்து ‘அம்மா! தாயே.... எங்க வீட்டுலே வந்து அனுக்கிரகம் பண்ணு’ன்னு பயபக்தியா வேண்டிண்டு குளிச்சு, ஆசாரமா நட்டா துளசி தளிர்க்கும்... செடியா நினைச்சா செடி... பூமா தேவியா நெனைச்சா நிலம் உன்னை விட்டுப் போறதில்லே... வெறும் கல்லும், மண்ணும், செங்கல்லுமா நெனைச்சோமானா அதுக்குத் தக்கபடிதான் இருக்கும்.

    எல்லாம் நம்ம நெனைப்புப்படிதான் அமையும். பகவான் கை, கால், கண், காது எல்லாத்தையும் ரெண்டு ரெண்டாத் தந்திருக்கார். வாய் மட்டும் ஒண்ணுதான்! ஏன்? கொறைச்சுப் பேச... சுவாமியைப் பாட... நல்ல சமாசாரம் பேசறதுக்கு வாய் வேணும்.

    வலது கை சாப்படறது... நல்ல சங்கீதத்துக்கு தாளம் போடறது... பிரசாதம் வாங்கறது... இடதுகை தோட்டி வேலை செய்யறது.. பெரியவர்களின் பாதத்திலே விழும்போது இரண்டு கையும்தான் பாதத்தை புடிச்சிக்கிறது. இரண்டு கையும்தான் கற்பூரம் ஒத்திக்கிறது. பளுதூக்கும்போது இடது கை வேண்டியிருக்கு. அதனாலே எந்த வேலை செய்யறதும் கேவலமில்லே.... நல்லவாளுக்கு சம அந்தஸ்து, உரிமை கொடுத்து உதவி செய்யணும் என்கிறதை பகவான் எவ்வளவு எளிமையா சொல்லி இருக்கார்.

    ஒரு காதாலே நல்லதை வாங்கி மனசிலே நிறைச்சுக்கணும். தோல் இல்லாத திராட்சை, ஆப்பிள் மாதிரி சத்விஷயங்கள் அப்படியே போனா பரவாயில்லே. வாழைப்பழம் மாதிரி, பலாப்பழம் மாதிரி, அன்னாசிப்பழம், மாதுளை மாதிரி சத்தும், அசத்தும் கலந்து உள்ளே போயிட்டா என்ன பண்றது? கண்டதைப் போட்டா வயிறு நாத்தமெடுக்கும். மனசும் கெட்டுப் போகுமே! மனசைப் பழக்கிட்டோமானா வேண்டாததை அழகாப் பிரிச்சு இன்னொரு காது வழியா வெளியே அனுப்பிச்சுடும். சுத்தமான மனசுலே நல்ல வாசனைகள்தான் வரும். சில பேரைப் பார்க்கக் கூடாதுன்னு குடையாலே மறைச்சுண்டு போவா... சில தெரு வழியாப் போனா மூக்கைப் பொத்திக்கணும். உங்ககிட்ட நல்ல வாசனை இருந்தா யாரும் மூக்கைப் பொத்திக்க வேண்டாம். யார்கிட்டேயும் எதையும் இனாமா வாங்கறதில்லே.... யார் கிட்டேயும் கடுமையாப் பேசறதில்லேன்னு வைராக்கியம் வைச்சுக்கணும்.

    தேசம் க்ஷேமமாயிருக்க, நாம இன்னிக்கு என்ன செஞ்சோம்னு யோசிக்கணும். வழியிலே கிடக்கிற ஒரு வாழைப்பழத் தோலையாவது பிளேடு, ஊசி, கண்ணாடிச்சில் இதுகளை குப்பைத் தொட்டியிலே சேர்க்கலாம். உத்யோகத்துப் போறபோது குனியறதான்னு யோஜிக்கப்படாது. அதுலே எத்தனை நன்மை அடங்கி இருக்கு தெரியுமா? செருப்பு வாங்க முடியாத ஏழைகள், பக்கத்துக் கோவில் தானே என்று செருப்புப் போடாமல் போகும் வயதானவர், வழியில் கிடக்கும் இந்தப் பொருட்களால் பாதிக்கப்படுவர். ஒருத்தருக் கொருத்தர் உபகாரமாயிருக்கணும்னுதான் பகவான் இத்தனை ஜனங்களைப் படைச்சிருக்கான்!

    4. தெப்பம்

    சதசதன்னு உழுத நிலத்தைப் பார்த்தா ஒரு வாசனை வரும். ரொம்ப மனசுக்கு ரம்யமாய் இருக்கும். அப்புறம் இளம் நாத்துலே வயல் ஒரு அழகு... அறுவடைக்குக் கொஞ்சம் முன்னாலே இன்னொரு அழகு... பார்த்துண்டே இருக்கலாம் போல இருக்கும்.

    மனுஷாளும் அதைப் போலத்தான்... மூணுமாதக் குழந்தை ஒரு அழகு... மழலையிலே ஒரு அழகு... பாடம் படிக்கிற வயசிலே ஒரு கம்பீரம்! கல்யாண வயசுலே அது தனி... பேரன் பேத்திகளோட தாத்தா-பாட்டியாயிட்டா முகத்திலே ஒரு பூரணத்துவம். பௌர்ணமி நிலா மாதிரி. அறுவடையான நெலம், பார்த்தா கட்டை கட்டையா.... ரஸிக்கிறா மாதிரி இருக்காது. மறுபடி உழறவரை இந்த நெலைமை தான். நெல்லு மூட்டையாக் கட்டி களஞ்சியத்துக்குப் போறதேன்னு பூமி அழறதில்லே! மனுஷன் அழறான்.

    ஜீவன் தன் கடமையை முடிச்சுண்டு பரலோகம் போறது! எல்லோரும் ஒரு நாள் போகறவாதான்! தங்கறவா யாரு? கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும்!

    நெல்லு மட்டும் களஞ்சியத்துலேயே இருக்க முடியுமா? மூணுவருஷம் கழிஞ்சா விதைக்குக் கூட ஆகாது. கோவிலுக்கு, நல்ல மனிதர்களுக்கு, உணவாப் போற நெல்லு

    Enjoying the preview?
    Page 1 of 1