Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ ராகவேந்திரர்
ஸ்ரீ ராகவேந்திரர்
Ebook82 pages26 minutes

ஸ்ரீ ராகவேந்திரர்

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

ஸ்ரீ ராகவேந்திரர் வரலாறு பாராயணம் செய்பவர்களுக்கு சகல ரோகத்தையும் போக்குவதோடு சகல வளத்தையும் அளிக்கும். ரு ஜாதகத்தில் நீசமாய் இருந்தாலும் (மகரம்) லக்னத்துக்கு 6, 8, 12ம் இடத்திலிருந்தாலும், கோட்சாரப்படி குருப்பெயர்ச்சி கெடுதலை விளைவிப்பதானாலும், இந்த ஸ்ரீ ராகவேந்திர சரித்திரத்தைப் பாராயணம் செய்வதால் அந்தந்த தீங்குகள் எல்லாம் நிவர்த்தியாகும்.

Languageதமிழ்
Release dateJun 17, 2022
ISBN9788179504741
ஸ்ரீ ராகவேந்திரர்

Read more from R Ponnammal

Related to ஸ்ரீ ராகவேந்திரர்

Related ebooks

Reviews for ஸ்ரீ ராகவேந்திரர்

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    ஸ்ரீ ராகவேந்திரர் - R Ponnammal

    1. குரு தந்த பரிசு

    ஒரு மாணவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வேங்கடநாதனே உதாரணம்! (வேங்கடநாதன் தான் பிற்காலத்தில் நமக்கு ஸ்ரீ ராகவேந்திரராக அறியப்படுகிறார்). இப்படிப்பட்டவனோடு படிக்கும் பாக்கியம் நமக்கு வாய்த்ததே என்று நினைக்காமல் பொறாமை கொள்வது மதியீனம் என்று வேங்கடநாதனோடு படிக்கும் மற்ற மாணவர்களைப் பார்த்துக் கூறினார் குரு சுதீந்திரர்.

    குருதேவா! வேங்கடநாதன் தன் அத்திம்பேர் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாரிடம் தர்க்கம், வியாக்யானம், மீமாம்ஸம் எல்லாம் கற்றுக் கொண்டானல்லவா?

    ஆமாம்

    அது போதாதென்று தானே, திருமணமான பிறகு உங்களிடம் படிக்க வந்திருக்கிறான்?

    படிப்புக்குத் திருமணமோ, வயதோ தடையல்ல! என்று விதண்டாவாதம் செய்யும் அந்த மாணவனுக்கு புரிய வைக்க முயன்றார் குருநாதர்.

    அது சரி. ஆனால் தாங்கள் சொல்லும் அர்த்தங்களை அவன் ஏற்றுக் கொள்ளாமல், குறுக்கே பேசுவது எங்களுக்குப் பிடிக்கவில்லை! அவன் உங்களைவிட மேதாவியா?

    சுதீந்திரர் புன்னகையோடு, குருவாகவே இருந்தாலும் தவறு ஏற்படுவது சகஜம். வேங்கடநாதனின் பேச்சில் அதிகப் பிரசங்கித்தனம் இல்லை. இந்த மாதிரியும் சொல்லலா மில்லையா என்று வினயமாகத்தானே கேட்கிறான்! ஆதாரமில்லாத விளக்கங்களை அவன் இதுவரை சொன்னதே இல்லை! முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதமும் இல்லை என்று விளக்கினார்.

    அதற்குள் ஒருவன் எழுந்து, குருநாதா, நாமெல்லாம் கூடி இருக்கும் இந்த நேரத்தில் வேங்கடநாதன் எங்கே போனான் என்று யோசித்துப் பாருங்கள். அந்த விதண்டாவாதி எங்கேயாவது தூங்கிக் கொண்டிருப்பான் என்றான்.

    குரு மௌனமானார்.

    மாணவர்கள் கலைந்து சென்றனர்.

    நள்ளிரவு. சுதீந்திரர் ஆசிரமத்தைச் சுற்றி வந்தார். எல்லா சிஷ்யர்களும் வசதியாகத் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அங்கே வேங்கடநாதனைக் காணவில்லை! மடத்துக்கு சற்று தூரத்தில் வெளிச்சம் மினுக்கிட்டது. அதை நோக்கி மெதுவாக நடந்து சென்றார்.

    அங்கே சுள்ளிகளால் மூட்டப்பட்ட நெருப்பு கனிந்து கொண்டிருந்தது. வேங்கடநாதன் கையையே தலையணை யாய் கொண்டு, ஒருக்களித்துப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்.

    அவன் அருகில் இருந்த ஓலைச் சுவடிகளை எடுத்துப் படித்தார். ‘ஸ்ரீ நியாய சுதா’ என்ற கடினமான நூலுக்கு புது முறையில் விளக்கங்கள் எழுதப்பட்டிருந்தது கண்டு புளகித்தார். குறிப்பிட்ட இடம் தனக்குப் புரியாமல், தான் பாடத்தை நிறுத்தியிருந்த இடத்திற்கும், தானாகவே அதைப் புரிந்து கொண்டு அதற்கு அழகான அர்த்தம் கொடுத்திருந்தார், வேங்கடநாதன்.

    உரையை கையில் எடுத்துக் கொண்டு, குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த வேங்கடநாதனுக்கு தன் காவி ஆடையைப் போர்த்தி விட்டு, மடத்துக்குப் போய் உரை முழுவதையும் படித்து மகிழ்ந்தார்.

    கதிரவன் உதயமானான்.

    தாமதமாகத் தூங்கச் சென்றதால் வேங்கடநாதனால் எழுந்திருக்க முடியவில்லை. சீக்கிரமே எழுந்து கொண்ட சகமாணவர்கள் இருவரும், வேப்பங்குச்சியைக் கடித்தபடி ஆற்றுக்குப் புறப்பட்டனர்.

    வேங்கடநாதனின் உடலில் போர்த்தப்பட்டிருந்த குருநாதரின் காவி ஆடையைக் கண்டனர்.

    வர வர வேங்கடநாதனுக்குக் குருவிடம் பயபக்தி குறைந்து கொண்டே வருகிறது. குருநாதரின் காவி ஆடையை என்ன தைரியமாகப் போர்த்திக் கொண்டு தூங்குகிறான் பார் என்றான் ஒருவன்.

    எல்லாம் குருதேவர் கொடுக்கிற இடம் என்றான் மற்றவன். குரல்கேட்டு விழித்துக் கொண்ட வேங்கடநாதனை இருவரும் குரோதமாகப்

    Enjoying the preview?
    Page 1 of 1