Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Srimad Ramayanam
Srimad Ramayanam
Srimad Ramayanam
Ebook337 pages1 hour

Srimad Ramayanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

அனைவருக்கும் அடியேனுடைய நமஸ்காரங்கள். நான் வங்கிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனக்கு உதித்த எண்ணம் தான் இந்த புத்தக வடிவம். ஸ்ரீராமபிரான் மீது அளவற்ற பக்தியும் ஈடுபாடும் கொண்டுள்ளது நமது பாரத தேசம். ராம ராஜ்ஜியத்தை தனது கனவாகக் கொண்டிருந்தார் நமது தேசப்பிதா காந்தியடிகள்.

இராம கதையை நான் படித்த பொழுது அதில் எண்ணற்ற விஷயங்கள், தத்துவார்த்தங்கள், நீதிநெறி போதனைகள் அடங்கி உள்ளதை அறிந்துகொண்டேன். எத்தனையோ புத்தகங்கள் ராமாயணம் பற்றி உள்ளதே! எனக்கு அதை எழுத தகுதி உள்ளதா? என்று எனக்குள் பலமுறை கேள்வி எழுந்தது. இருப்பினும், நமது வருங்கால சந்ததியினராகிய குழந்தைச் செல்வங்கள் புரிந்து கொள்ளும் வகையில் எளிய முறையில் எழுத வேண்டும் என்ற ஆவலில், உந்துதலில் என் சிற்றறிவிற்ககு எட்டியவரை முயன்றுள்ளேன். இதில் உள்ள குற்றம், குறைகளை மன்னித்து, ஏற்றுக்கொண்டு அடியேனுக்கு ஊக்கம் கொடுத்திட பணிவுடன் வேண்டுகிறேன். இதனை எழுத எனக்கு உதவியாக இருந்த அமரர் ராஜாஜி அவர்களின் சக்கரவர்த்தி திருமகன் காப்பியத்திற்கு எனது நன்றிகள்.

இந்தப் புத்தகத்தை எழுத இரவு பகல் பாராமல் எனக்கு உறுதுணையாக இருந்து ஊக்கம் அளித்த எனது மனைவி கோமளவள்ளி மற்றும் எனது இரு மகன்கள் அனிருத், அக்ஷய் ஆகியோருக்கும் எனது நன்றிகள்.

மேலும் இதனை E- புத்தக வடிவமாக வெளியிட அன்புகூர்ந்து முன்வந்துள்ள புஸ்தகா டிஜிட்டல் மீடியா நிறுவனத்திற்கும், அதன் இயக்குனர் டாக்டர் ராஜேஷ் தேவதாஸ் P.hd. அவர்களுக்கும் எனது நன்றிகள்.

Languageதமிழ்
Release dateOct 25, 2021
ISBN6580148507518
Srimad Ramayanam

Related to Srimad Ramayanam

Related ebooks

Reviews for Srimad Ramayanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Srimad Ramayanam - R. Nandakumar

    https://www.pustaka.co.in

    ஸ்ரீமத் ராமாயணம்

    Srimad Ramayanam

    Author:

    R. நந்தகுமார்

    R. Nandakumar

    For more books

    http://www.pustaka.co.in/home/author//gavudham-karunanidhi

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    1. ஜெய் ஸ்ரீசீதாராம்..!

    2. நாராயண…!! நாராயண..!!

    3. அயோத்யா!

    4. தசரதயாகம்

    5. பிரம்மா -- விஷ்ணுவிடம் முறையிடல்

    6. யாகம் தொடர்கிறது..

    7. ஜனனம்

    8. யார் இந்த விசுவாமித்திரர்?

    9. தனுர்வேதம்

    10. தொடரும் தவம்

    11. கௌசிகர் - திரிசங்கு சந்திப்பு

    12. ப்ரம்மரிஷி

    13. விசுவாமித்திரர் – ஒருபாடம்

    14. ராமனை தருக!!

    15. மூவர் பயணம்

    16. தாடகை வதம்

    17. வாமன அவதாரம்

    18. வேள்வி பூர்த்தி

    19. மிதிலா தேசம்

    20. கங்கா சரித்திரம் (1)

    21.கங்கா சரித்திரம் (2)

    22. பகீரத முயற்சி

    23. அகலிகை மோட்சம்

    24. சீதா கல்யாணம்

    25. பரசுராமர்

    26. இனிய நாட்கள்

    27. பட்டாபிஷேக ஏற்பாடு

    28. மந்தரை-- கைகேயி...

    29. போதனை தொடர்கிறது...

    30. மந்தரை என்ற கூனி

    31. இரண்டு வரம் வேண்டும்

    32. கைகேயி பிடிவாதம்

    33. சொன்னது கைகேயி

    34. பற்றற்ற பற்று

    35. குலப் பெருமை ஓங்கும்

    36. அன்னையிடம்..

    37. அண்ணலுடன் கூடவே..

    38. பிரியா விடை

    39. வனவாசம்.....

    40. பின் தொடர்ந்த மக்கள்

    41. முதல் நாள்

    42. சித்திரகூடம்

    43. அரண்மனையில்..

    44.சாபம் பலித்தது.

    45. தசரதன் மரணம்

    46. கேகேயத்தை நோக்கி...

    47. புறப்பட்டான் பரதன்

    48. அயோத்தியில் பரதன்

    49. ராமனைக் தேடி

    50. கங்கைக்கரை தலைவன்

    51. கோபம் கொண்ட லக்ஷ்மனன்

    52.ராம- பரத நெகிழ்ச்சி

    53. பரதனின் ஏமாற்றம்

    54. பாதுகா பட்டாபிஷேகம்

    55. சித்திரகூடத்தை விட்டு..

    56. ஆரம்பம்—

    57. சீதாதேவி- தீர்க்கதரிசி

    58. அகஸ்தியர் –மகாஞானி

    59. ஜடாயு--முதல் சந்திப்பு

    60. சூர்ப்பனகை

    61. மாரீசன் புத்திமதி

    62. சூர்ப்பனகை சூழ்ச்சி

    63. பெண்மோகம்

    64. மாயமான் மாரீசன்

    65. வேதனையில் லெக்ஷ்மணன்

    66. ராவணன் நினைத்தபடி..

    67.ஜடாயு…

    68. ராமனின் வேதனை

    69. ஜடாயு மோட்சம்

    70. அசோகவனத்தில் சீதை

    71. தேடிக்கொண்டே..

    72. ராம - சுக்ரீவ சந்திப்பு

    73. சுக்ரீவன் ஆறுதல்

    74. சுக்ரீவன்

    75. பரதன் -- சுக்ரீவன்_ ஒப்பீடு

    76. ராமனால் இயலுமோ!

    77.ஒரே தோற்றம்

    78. வாலி வதம்

    79. தகுமோ ராமா!

    80. முடிசூடினான் சுக்ரீவன்

    81. பொறுப்பை மறந்த சுக்ரீவன்

    82. நால்திசை நோக்கி..

    83. சீதாதேவி இலங்கையில் --- சம்பாதி

    84. அனுமன் யார்?

    85. இலங்கையை நோக்கி...

    86. மைநாகபர்வதம்

    87. சுரஸை

    88. மீண்டும் ஓர் அரக்கி

    89. இலங்கை தேவதை

    90. அரண்மனையில் அனுமன்

    91. அசோக (நந்த) வனம்

    92. இறைஞ்சினான் இலங்கை வேந்தன்

    93. திரிஜடை கண்ட கனா

    94. அனுமன் புத்திமான்

    95. அவநம்பிக்கையும், நம்பிக்கையும்

    96. ராமர் வருவார்

    97. அழிக்கப்பட்ட நந்தவனம்

    98. அனுமன் அட்டகாசம்

    99. அக்ஷன் - அனுமன் யுத்தம்

    100. கட்டுண்டோம்..பொறுத்திருப்போம்

    101. ராவண தர்பார்

    102. எரிந்தது இலங்கை

    103. ஆட்டம்..கொண்டாட்டம்..

    104. கண்டேன் அன்னையை!

    105. பீடு நடை போட்ட படை

    106. சபை கூடியது

    107. மீண்டும் கூடியது சபை

    108. பாசக்கயிறு

    109. மாறுபட்ட முடிவுகள்

    110. மனம் திருந்தியவனா?!

    111. விபீஷண சரணாகதி

    112. சேது பாலம்

    113. போர் ஆரம்பம்

    114. மீண்டும் சீதையிடம்..

    115. நாக அஸ்திரங்கள்

    116. மீண்டும் யுத்தம்

    117. நிராயுதபானி ஆனான்.

    118. கும்பகர்ணன்.

    119. மாய்ந்தான் கும்பகர்ணன்

    120. மடிந்தான் இந்திரஜித்

    121. மடிந்தான் ராவணன்

    122. வேறுபாடு – மாறுபாடு

    123. ஸ்ரீராம பட்டாபிஷேகம்

    124. ஜகம் புகழும் புண்ணிய கதை

    1. ஜெய் ஸ்ரீசீதாராம்..!

    நமது பாரத தேசத்தில் எத்தனையோ கதைகளும் காவியங்களும் இருந்தாலும் நாம் புராணம் அல்லது இதிகாசம் என்று சொல்வது இரண்டு நூல்களைத்தான்.

    ஒன்று, இராமாயணம். மற்றொன்று, மகாபாரதம்.

    என்ன காரணம்? இந்த இரண்டு நூல்களும் நமக்கு பக்திசாரம், தெய்வசாரம்;, அவதாரம் இவற்றை மட்டுமல்லாமல் பல நீதி போதனைகளையும், அரசியல் வாழ்க்கை முறையையும், மக்களின் வாழ்க்கைத் தன்மையையும், கடவுள் மனித அவதார மகிமையையும் இப்படி பலப்பல விஷயங்களை நமக்கு உபதேசிக்கிறது.

    போதனை, உபதேசம் இவை நம்மில் பலருக்கு பிடிக்காது.

    ஆனாலும், இந்த இரு காப்பியங்களையும் சுருக்கமாக படிக்க ஆரம்பித்து , பின்னர் விரிவாக நாம் படித்தோமானால், அப்பொழுதுதான் நமக்கு இவற்றின் உண்மைத்தன்மை புரியவரும்.

    அடுத்ததாக, இவை இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை பார்ப்போம். ராமாயணம் என்பது கடவுள், மனித அவதாரம் எடுத்து தன்னை மனிதனாகவே பாவித்து மனிதர்கள் படக்கூடிய சுக துக்கங்களை அனுபவித்து அதன் மூலம் நமக்கு வழிகாட்டும் நூல்.

    ஆனால், மகாபாரதம் என்பது கடவுள் அவதாரமாகவே இருந்து மக்களை துன்பங்களிலிருந்தும்,பலவித மனசஞ்சலங்களில் இருந்தும் விடுபட உபதேசம் செய்த நூல். நாம் இப்பொழுது ராமகாவியத்தைப் பற்றிப் பார்ப்போம்.

    ராமாயணத்தைப் பற்றி குறிப்பிடும்பொழுது, மூன்று மகான்களின் படைப்புகளை குறிப்பிடலாம். ஒன்று, வால்மீகி ராமாயணம் ,இரண்டு கம்பராமாயணம் ,மூன்றாவது துளசிதாஸர் ராமாயணம். இவற்றில் வால்மீகி ராமாயணம் என்பது வால்மீகி மகரிஷி ராமரை வீர புருஷனாகவே பாவித்து எழுதப்பட்ட காப்பியம். கம்பரும், துளசிதாசரும் ராமரை கடவுளாகவே பாவித்து எழுதிவிட்டார்கள். காரணம், வால்மீகி மகரிஷி எழுதிய பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான் இவர்கள் இருவரும் காப்பியத்தைப் படைத்தார்கள். அதற்குள் மக்கள் ராமரை இறைவனாகவே, கடவுளாகவே கோயில் எழுப்பி வழிபட ஆரம்பித்துவிட்டார்கள்.

    நாம் ஸ்ரீசீதாராமரையும், ஆஞ்சனேய ஸ்வாமியையும் வழிபட்டு ராமகாதையை தொடர்வோம்.

    2. நாராயண…!! நாராயண..!!

    நாரத மாமுனியே!! நமஸ்காரம். தங்கள் விஜயம் நல்விஜயம் ஆகட்டும். சுவாமி! எனக்கு ஒரு சந்தேகம். இந்த உலகத்தில் உத்தமாதி குணங்கள் கொண்ட உத்தமமான வீர புருஷன் யார்? என தெரிந்து கொள்ள விரும்புகின்றேன்.

    ரிஷியே! இந்த உலகத்தில் மட்டுமல்ல, பூலோகம், சொர்க்கலோகம்,பாதாளலோகம் என ஈரேழு உலகங்களிலும் மிகச்சிறந்த வீரபுருஷன் ஸ்ரீ ராமபிரானை தவிர வேறு யார் இருக்கிறார்கள். முனிவரே! ஸ்ரீசீதாராம சரிதத்தை மிக சுருக்கமாக கூறுகிறேன். கேளும், என்று நாரதர் கூறினார்.

    நாரதரே ! மிக்க சந்தோஷம். நான் பாக்கியவான் ஆனேன், என்று கூறினார் வால்மீகி ரிஷி. நாரதர் விடைபெற்றுச் சென்றார்.

    பிறகு வால்மீகி முனிவர் குளிப்பதற்காக தமஸா நதிக்கரைக்குச் சென்றார். அங்கே மரத்தடியில் இருந்த மரத்தில் இருந்து ஒரு பறவை அடிபட்டு கீழே விழுந்தது. எங்கிருந்தோ வந்த அம்பு அந்தப் பறவையை அடித்துக் கீழே தள்ளிவிட்டது. கோபம் கொண்ட வால்மீகி ரிஷி தன்னையும் அறியாமல், யார் அந்த வேடன் என்றும் தெரியாமல், அடப்பாவி எவ்வளவு சந்தோஷமாக கிரவுஞ்ச பறவைகள் இருந்தன? இப்படி அடித்து விட்டாயே! இந்த பெண் பறவையை அனாதையாக்கி விட்டாயே! ஆகவே, நீ இருக்க இடம் இருந்தும் அனாதையாகி எல்லா இடமும் திரிந்துதான் ஆகவேண்டும் என்று சாபமிட்டார்.

    ஆசிரமத்திற்குத் திரும்பினார் வால்மீகி ரிஷி. ஆனால், அவர் மனதில் வேதனை குடி கொண்டு இருந்தது. நான் யார் அந்த வேடனை சபிக்க? எனக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டார் . அவர் இட்ட சாபம் பாடலாகவே மாறிவிட்டது.

    மா நிஷாத³ ப்ரதிஷ்டா²ம்ʼ

    த்வமக³ம:ஶாஶ்வதீஸமா:I

    யத்க்ரௌஞ்ச

    மிது²நாதே³கமவதீ: மமோஹிதம்II

    [பொருள்: வேடனே! இணையான கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை நீ கொன்றதால், இனி எக்காலத்திலும் நீ நிலையாக இருக்க மாட்டாய் (மரணம் அடைவாய்!]

    குழப்பமும், வேதனையும் கலந்த மனத்துடனே இருந்தார் வால்மீகி. அப்பொழுது அவர் முன் தோன்றினார் பிரம்மா.

    வால்மீகி ரிஷியே! வேதனைப்பட வேண்டாம். எல்லாம் நன்மைக்கே. வேதனையில் இருந்து வந்த சந்தத்தையே முதல் பாடலாக வைத்து ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியின் இதிகாசத்தை படைக்கவும். மங்களம்!! என்று ஆசீர்வாதித்தார்.

    அதுமுதல், தனது சிஷ்யர்களுக்கு திரும்பத்திரும்ப சொல்லி காப்பியத்தை படைத்தார் விஸ்வாமித்திரர்.

    3. அயோத்யா!

    கோசலை என்று ஒரு அழகான தேசம். இந்திரலோகம், தேவலோகம்,சொர்க்கலோகம் என்றெல்லாம் சொல்கிறோமே, அதையெல்லாம் விஞ்சிய நகரம். நாம் நமது காலத்தில் எவ்வளவு நாகரிகத்தைப் பற்றிப் படித்திருக்கிறோம். அதற்கெல்லாம் முந்தியே பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எல்லா அழகும், வசதியும், செழிப்பும் பெற்ற தேசமாக விளங்கியது கோசல நாடு.

    எங்கே இருக்கிறது இந்த கோசல நாடு? கங்கை நதிக்கு வடக்கே சரயு நதி பாயும் அற்புதமான தேசம் தான் அது. அதன் தலைநகரம் அயோத்தி. அதன் அரசர்தான் தசரதச் சக்கரவர்த்தி.

    மிகச் சிறப்பான ஆட்சி. இன்றைய அரசாங்கங்கள் அவருடைய ஆட்சியின் மகிமையைப் புரிந்து கொண்டால் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

    நீதி, நேர்மை மிக்க ஆட்சி. குடிமக்களுக்கு எந்த குறைவும் கிடையாது. பார் போற்றும் அரசர். தேவாதி தேவனையும் மிஞ்சும் சிறப்பான அரசர்.

    இவருக்கு ஆலோசனை கூற 8 மந்திரிகள். அவர்களின் ஆலோசனைப்படிதான் அரசாட்சி. தவிர, வசிஷ்டர் முதலிய ரிஷிகளின் உபதேசங்கள், வழிகாட்டுதல்கள். சொல்லவும் வேண்டுமோ ஆட்சியின் மகிமையை! மூவுலகும் போற்றும் அரசராக ஜொலித்தார் தசரதர்.

    எதிரிகள் இல்லாத அரசு.எந்த நாட்டு அரசனும் படை எடுக்க முடியாத செங்கோலாட்சி.

    அயோத்தி என்பதன் பொருளே யாராலும் வெல்ல முடியாதது, படை எடுக்க முடியாதது என்பதுதான்.

    இந்த தசரதச் சக்கரவர்த்தியின் வம்சம்தான் நாம் தொடர்ந்து போகும் ராம காதை.

    4. தசரதயாகம்

    அப்படிப் பார்போற்றும் அரசனுக்கு பெரிய மனக்குறை, மனவேதனை இருந்தது. தனக்கு சந்ததி இல்லையே, தனக்குப் புத்திரப் பேறு, அதாவது குழந்தை பாக்கியம் இல்லையே என்று மனம் ஏங்கிக் கிடந்த அரசன் ஒருநாள் அரசவையை கூட்டினார்.

    வசிஷ்ட மாமுனியே! முனிவர்களே! பண்டிதர்களே! அமைச்சர் பெருமக்களே! தங்கள் திருவடிகளுக்கு நமஸ்காரம். (அரசனாக இருந்தாலும் முனிவர்கள், அமைச்சர் பெருமக்களிடம் எப்படி பாங்குடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்).என்னுடைய மனக்குறை தங்கள் அனைவருக்கும் தெரியும். அஸ்வமேதயாகம் (அதாவது, அஸ்வம் என்றால் குதிரை) புத்திரகாமேஷ்டி யாகம், இவற்றை செய்தால் என் மனக்குறை தீரும். அயோத்திக்கு சந்ததி கிடைக்கும் என்று நான் நினைக்கிறேன். தங்களுடைய அபிப்பிராயத்தை தெரிவிக்கவும், என்று வேண்டினான்.

    உடனே அனைவரும் ஒரே குரலில், ‘ தாங்கள் நினைப்பது மிகச் சரியே! ஆனால் இந்த இரண்டு யாகத்தையும் ரிஷ்யஷ்ருங்க முனிவரைக் கொண்டு நடத்தவும்,’ என்று கூறினார்கள்.

    யாகம் செய்யும் முறை, யாக சாலை என்பது பண்டிதர்களை கொண்டு சரியான அளவுகளில் அமைக்கப்படவேண்டும். அவ்வாறே அமைக்கப்பட்டது. (கோயில் கும்பாபிஷேக யாகசாலை அமைக்கிறோமே அதுவும் அதை ஒட்டி அமைப்பதுதான்). அரசர்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அவர்களை வரவேற்று ஓலை அனுப்பப்பட்டது.

    அசுவமேத யாகத்திற்கு ஒரு ராஜகுதிரை, படையுடன் மற்ற நாடுகளுக்குச் சென்று ஓராண்டு கழித்து வெற்றிகரமாக திரும்பி அயோத்தியை அடைந்தது. (இந்த காலத்து ஒலிம்பிக் போட்டி ஜோதி, உலக கோப்பை அனைத்து நாடுகளுக்கும் சென்று விட்டு போட்டி நடைபெறும் நாட்டிற்கே திரும்பி வருகிறதே, அதுவும் அந்த கால முறைப்படி தான்).

    வருகிற அரசர்களையும், வீரர்களையும் வரவேற்கும் முறை, தங்குவதற்கு இடம், விருந்து, உபசாரம் இவையெல்லாம் எந்த குறைவும் இல்லாமல் ஏற்பாடு செய்யப்பட்டது.(நாம் இப்போது அயல்நாட்டு தலைவர்கள் வரவேற்க செய்கிற ஏற்பாடுகளும், ஆசிய விளையாட்டு கிராமம், ஒலிம்பிக் கிராமம் அமைப்பதே அப்போதைய வழக்கத்தை ஒட்டியே).

    ரிஷிகள், முனிவர்கள்

    பண்டிதர்கள் ஆகியோருக்கு செய்யவேண்டிய மரியாதை,மேளதாள முழக்கங்கள் எந்தவித குறையுமில்லாமல் செய்யப்பட்டன.

    5. பிரம்மா -- விஷ்ணுவிடம் முறையிடல்

    இதற்கிடையே, தேவலோகத்தில் தேவாதி தேவர்கள் பிரம்மலோகம் சென்றார்கள். நான்முகனே! ராவண ராட்சசனின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. காரணம் தாங்கள் அவனுக்கு யாராலும் மரணம் இல்லை என்று ராவணன் செய்த தவத்தின் பலனாக வரத்தை அளித்து விட்டீர்கள். அக்னி, வாயு முதலிய பஞ்ச பூதங்களும், நவ கிரகங்களும் அவனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் கொஞ்ச நாளில் தேவாதிராஜனை _ இந்திரனை வென்று தேவலோகத்தையும் அபகரித்துக் கொண்டு விடுவான். எங்கள் நிலை வேதனையாக உள்ளது. தாங்கள் தான் இதற்குப் பிராயச்சித்தம்_ மாற்று வழி செய்ய வேண்டும். .

    தேவர்களே! தாங்கள் கூறுவது உண்மைதான். ஆனால் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு அவர்களால் மரணம் கூடாது என்று வரம் பெற்ற ராவணன் மனிதரால் கூடாது என்று கேட்பதை விட்டு விட்டான். ஆகவே தாங்கள் எல்லோரும் ஸ்ரீமந் நாராயணனிடம் சென்று முறையிடுங்கள்.வழிபிறக்கும். மங்களம்!

    தேவர்கள் நாராயணன்_ திருமாலிடம் சென்று முறையிட்டார்கள். தேவர்களே! கவலைகள் வேண்டாம். தசரதன் செய்யும் யாகத்தின் பலனாக அவனுடைய நான்கு புத்திரர்களாக நான் அவதாரம் செய்வேன். நல்ல முடிவு உண்டாகும். மங்களம் உண்டாகுக!

    6. யாகம் தொடர்கிறது..

    ரிஷ்யசிருங்கர் முனிவரின் தலைமையில் யாகம் தொடங்கி சிறப்பாக நடந்தது. அக்னியில் நெய்யை ஊற்றி ஆஹுதி செய்யச் செய்ய இறுதியில் அதிலிருந்து சூரிய ஒளி போன்ற ஒரு உருவம் கையில் கலசத்துடன் தோன்றி, அரசே! தாங்கள் செய்த யாகத்தின் பலனாக இந்த கலசத்தை பெற்றுக் கொள்வீராக! இதில் உள்ள பாயசத்தை தங்கள் மூன்று மனைவிமார்களுக்கு கொடுத்து பருகச் சொல்லவும். புத்திரபேறு உண்டாகும். ஆசீர்வாதம், என்று கூறி, பாயச கலசத்தை கொடுத்து விட்டு மறைந்தது. அரசன், ரிஷிகள், மக்கள் அனைவரும் அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. அரசன் பாயசத்தை எடுத்துக் கொண்டு அந்தப்புரம் சென்றான்.

    என்னின் தேவியரே! நாம் அருளப்பெற்றோம். இந்த பாயசத்தை நீங்கள் மூவரும் அருந்தவும். நமக்கு சந்ததி உண்டாகும், என்று குதூகலத்தோடு கொடுத்தான் அரசன்.

    அரசியாரும்பெற்றுக்கொண்டார்கள். பட்டமகிஷியான கௌசல்யாதேவி, பாயசத்தில் பாதி அளவை அருந்தினாள். அடுத்ததாக, சுபத்ராதேவி பாக்கி இருந்த பாயசத்தில் பாதியை பருகினார். மூன்றாவதாக கைகேயி மிச்சமிருந்த பாயசத்தில் பாதியை சாப்பிட்டாள். இப்போது மீதி இருந்த பாயசத்தை சுபத்ரா தேவி மறுபடியும் பருகினாள். கணக்கில் பார்த்தால் கௌசல்யாதேவி பாதி, சுபத்ராதேவி இருமுறை, கைகேயி 1/8.

    விஷ்ணுவின் அருளால் மூவரும் கர்ப்பம் தரித்தார்கள்.

    7. ஜனனம்

    தசரத சக்கரவர்த்தியின் ராணிகள் மூவரும் கர்ப்பம் அடைந்தார்கள் என்று பார்த்தோமல்லவா!

    உரிய காலத்தில் அவர்களுக்கு முறையே, கௌசல்யாதேவிக்கு இராமனும், கைகேயிக்கு பரதனும், சுபத்ரைக்கு இலட்சுமணன் ,சத்துருக்னன் என்ற இரட்டையர்கள் பிறந்தார்கள். இங்கே குறிப்பிடப்பட வேண்டிய விஷயம்- சுபத்திரை இரண்டு முறை- முதலில் கால்பாகம், மறுபடியும் அரைக்கால் வீதமும் பாயசம் பருகியதால் இரண்டு குழந்தைகள் பிறந்தன.

    ராமன் மட்டுமல்ல. நால்வருமே விஷ்ணுவின் அம்சம்தான். காரணம், ஸ்ரீமன் நாராயணனே தேவர்களிடம் நான் தசரதனுக்கு வாரிசாக அவதரிப்பேன் என்று சொல்லியபடி. அரசனும், அரசியும், ஏன் நாடே! சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக குழந்தைகள் வளர்ந்தார்கள். அவர்கள் நால்வருக்கும் அனைத்து வேதங்களும், அனைத்து தர்மபரிபாலன முறைகளும் நீதி சாஸ்திரங்களும் கற்பிக்கப்பட்டன.

    அத்துடன் க்ஷத்திரியர்களுக்கு தேவையான வில், அம்பு மற்றும் அனைத்து போர் முறைகளும் கற்பிக்கப்பட்டன. நால்வரும் பார் போற்றும் வகையில் அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார்கள். பருவம் நெருங்க நெருங்க அவர்களுக்கு விவாகம் செய்ய முடிவெடுத்தான் அரசன். தனது குரு மற்றும் அமைச்சர்களை அழைத்து தனது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அப்போது காவலாளிகள் விரைந்து வந்து, அரசே! விசுவாமித்திர மகரிஷி அவர்கள் வந்து கொண்டிருக்கிறார், என்றனர்.

    அரசனும் மற்றவரும் அனைவரும் விரைந்து வந்து அவரை எதிர்கொண்டு அழைத்து உரிய மரியாதையுடன், பிரம்மரிஷியே! தங்கள் வரவு நல்வரவாகுக!! தங்கள் திருவடி என் தேசத்தில் பட்டது யாம் செய்த புண்ணியம். வருக!வருக!! என்று வரவேற்றார்கள். விசுவாமித்திரரிடம் அனைவருக்கும் அளவுகடந்த பயமும்,பயம் கலந்த மரியாதையும் உண்டு. ஏன்?

    8. யார் இந்த விசுவாமித்திரர்?

    விசுவாமித்திரர் பற்றி சொல்ல வேண்டுமானால் சொல்லிக் கொண்டே போகலாம். இதற்கு முடிவோ, எல்லையோ இல்லை.

    இவர் கௌசிகர் என்ற ஒரு க்ஷத்திரிய அரசர். மிகவும் பலம் பொருந்தியவர். பெருத்த சீலர். மேலும் மிகப்பெரும் கோபக்காரர். பிரம்மாவின் கொள்ளுப்பேரனின் புதல்வர்.

    அரசர் கௌசிகர் ஒரு நாள் வேட்டையாடச் சென்றார். அங்கு வசிஷ்ட முனிவரின் ஆசிரமத்தைக் கண்டார். நேராக அங்கே சென்று, "மகரிஷிக்கு என் பணிவான நமஸ்காரங்கள். என்னை

    Enjoying the preview?
    Page 1 of 1