Discover millions of ebooks, audiobooks, and so much more with a free trial

Only $11.99/month after trial. Cancel anytime.

Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam
Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam
Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam
Ebook239 pages1 hour

Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam

Rating: 0 out of 5 stars

()

Read preview

About this ebook

நிஜக் கலையாம் நாடகக்கலை, நம் பண்பாட்டின் அடிப்படை ஆதாரமாகவும், பாமரனின் செயல்பாட்டின் வடிவமாகவும் விளங்கி வருகிறது. இக்கலைதான், சினிமா என்னும் ஊடக சக்தியின் அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இலட்சோபலட்சம் மக்கள் கண்டும், கேட்டும், உணர்ந்தும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிப்போன இக்கலை, தேய்ந்துபோனதாக சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இன்னும் இக்கலையை நம்பி பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. அதன் அடிப்படையில் ஆசிரியர் கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள் எழுதிய இந்த நாடக நூலை நாம் படித்து பயன்பெறுவோம்.

Languageதமிழ்
Release dateOct 15, 2022
ISBN6580157708954
Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam

Related to Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam

Related ebooks

Reviews for Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam

Rating: 0 out of 5 stars
0 ratings

0 ratings0 reviews

What did you think?

Tap to rate

Review must be at least 10 words

    Book preview

    Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam - K.P. Arivanantham

    C:\Users\INTEL\Desktop\Logo New\pustaka_logo-blue_3x.png

    https://www.pustaka.co.in

    ஸ்ரீ நரசிம்மர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

    Sree Narasimmar Matrum Sree Kirshna Dharisanam

    Author:

    கே.பி. அறிவானந்தம்

    K.P. Arivanantham

    For more books

    https://www.pustaka.co.in/home/author/kp-arivanantham

    Digital/Electronic Copyright © by Pustaka Digital Media Pvt. Ltd.

    All other copyright © by Author.

    All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the express written permission of the publisher except for the use of brief quotations in a book review.

    பொருளடக்கம்

    அணிந்துரை

    முன்னுரை

    ஸ்ரீ நரசிம்மர்

    காட்சி - 1

    காட்சி - 2

    காட்சி - 3

    காட்சி - 4

    காட்சி – 5

    காட்சி – 6

    காட்சி - 7

    காட்சி - 8

    காட்சி – 9

    காட்சி – 10

    காட்சி - 11

    காட்சி – 12

    காட்சி – 13

    காட்சி - 14

    காட்சி – 15

    காட்சி - 16

    காட்சி – 17

    காட்சி – 18

    காட்சி - 19

    காட்சி - 20

    காட்சி - 21

    காட்சி - 22

    காட்சி - 23

    காட்சி - 24

    காட்சி - 25

    காட்சி - 26

    காட்சி – 27

    காட்சி – 28

    ஸ்ரீ கிருஷ்ண தரிசனம்

    காட்சி – 1

    காட்சி - 2

    காட்சி – 3

    காட்சி – 4

    காட்சி - 5

    காட்சி - 6

    காட்சி – 7

    காட்சி - 8

    காட்சி - 9

    காட்சி - 10

    காட்சி - 11

    காட்சி - 12

    காட்சி - 13

    காட்சி - 14

    காட்சி -15

    காட்சி - 16

    காட்சி - 17

    காட்சி - 18

    காட்சி - 19

    காட்சி - 20

    காட்சி – 21

    காட்சி - 22

    காட்சி - 23

    காட்சி - 24

    காட்சி - 25

    அணிந்துரை

    தமிழரசன் தியேட்டர்ஸ்

    தமிழ் மாமணி துரை பாலசுந்தரம், பி.எஸ்.சி.

    பிளாட் எண்-245B, இலட்சுமணன் தெரு,

    புவனேஸ்வரி நகர், நெற்குன்றம்,

    சென்னை - 600 107

    கைபேசி - 98403 13994

    நிஜக் கலையாம் நாடகக்கலை, நம் பண்பாட்டின் அடிப்படை ஆதாரமாகவும், பாமரனின் செயல்பாட்டின் வடிவமாகவும் விளங்கி வருகிறது. இக்கலைதான், சினிமா என்னும் ஊடக சக்தியின் அடித்தளமாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது. இலட்சோபலட்சம் மக்கள் கண்டும், கேட்டும், உணர்ந்தும் சராசரி மனிதனின் வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிப்போன இக்கலை, தேய்ந்துபோனதாக சொல்லிக் கொண்டிருந்தாலும் கூட இன்னும் இக்கலையை நம்பி பல்லாயிரக்கணக்கான நாடகக்குழுக்களும் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன.

    சமூக நாடகக் குழுக்களாக ஒரு பிரிவும், சரித்திரப் புராண நாடகக் குழுக்களாக மற்றொரு பிரிவும் அதனதன் தன்மையில் நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கின்றன.

    ஆம், அந்தப் போராட்டத்தில் பல உன்னதமான மனிதர்கள் நம்மிடையே போராளிகளாக உலவிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட மனிதர்களில் நான் கண்டு வியந்த, பழகி மகிழ்ந்த கலை வித்தகர், சொற்பொழிவாளர், நடிகர், கவிஞர், இலக்கியவாதி, பாடலாசிரியர், நாடகம், சின்னத்திரை, சினிமா, கதை, வசனகர்த்தா கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள்.

    அவர்களோடு நான் 20 ஆண்டுகளாக நல்ல நட்போடு இருப்பதும், என்னுடைய எல்லா நாடகங்களுக்கும் அவர் கதை, வசனம் எழுதியதும், மறக்க முடியாத நிகழ்வுகள். என் குருநாதர், நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்களின் மறைவுக்குப் பிறகு 2006-ம் ஆண்டு தமிழரசன் தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து, முதல் படைப்பாக திருவள்ளுவர் சரித்திர நாடகத்தை அரங்கேற்றம் செய்தோம். அந்நாடகத்தின் அனைத்து பணிகளையும், ஆசிரியரே மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, திருவள்ளுவர் வேடம் புனைந்து அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பு செய்தார். அதன் பிறகு, எங்கள் குழுவுக்காக அவர் எழுதிய நாடகம்தான் ஸ்ரீநரசிம்மர். இரண்டாம் படைப்பாக வெளிவந்து, வெள்ளி விழா கண்ட நாடகம். 02.08.2009 அன்று கார்த்திக் இராஜகோபால் அவர்களின் ஆதரவில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மூலம் அரங்கேற்றம் செய்யப்பட்டது இந்த நாடகம். கிளைமாக்ஸ் காட்சியில் உன் நாராயணன் எங்கே இருக்கிறான் என்று இரண்யகசிபு கேட்க, தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்கிறார் பிரகலாதன். ஒரு வஜ்ஜிர தூணைக் காட்டி, இதில் உன் நாராயணன் இருக்கிறானா? என்கிறான். மறுகணம் தூணை கதையால் ஓங்கி அடிக்க தூணைப் பிளந்துகொண்டு வந்த நரசிங்கம் இரண்யகசிபை தூக்கி வதம் செய்வதாக காட்டியிருந்தோம். அது பார்வையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது தொடர்ச்சியாக புராண நாடகங்கள் நடத்த வேண்டும் என்ற ஆவலை என் மனதில் விதைத்தது என்றால் அது ஆசிரியரின் வசனம் செய்த அற்புதம் என்றே சொல்லலாம். அதன்பின் ஓம் சிவசக்தி, ராகு - கேது, சூரசம்ஹாரம், சுவாமி விவேகானந்தர் ஆகிய நாடகங்களும் ஆசிரியரின் வசனத்தால் எங்களுக்கு நற்பெயரை வாங்கித் தந்த நாடகங்கள் ஆகும்.

    நலிந்து வரும் நாடகக் கலையை உயிர்ப்பிக்க தமிழக முதல்வரின் சீரிய சிந்தனையில் உதித்ததுதான் நாடகத்திற்கு நிதி உதவி வழங்கும் திட்டம். அதன்மூலம் ஒவ்வொரு நாடகத்திற்கும் மான்ய தொகை வழங்கி புத்துயிர் அளித்தார்கள். முதல் நாடகமாக ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் இடம் பெற்றது. இந்நாடகம் எங்கள் குழு தயாரித்த நாடகங்களில் மாறுபட்ட நாடகமாகவும் திகழ்ந்தது. இதில் ஆசிரியர் பஞ்ச பாண்டவர்களில் சகாதேவனாக நடித்திருந்தார். நான் ஸ்ரீ கிருஷ்ணராக நடித்தேன். மகாபாரத கதையில் வெளிவராத சில பகுதிகளை நாங்கள் நாடகமாக செய்திருந்தோம். அதாவது, ஸ்ரீ கிருஷ்ணர் பதினாறாயிரம் வடிவமாக வியாபித்து நிற்பதும், சகாதேவன் தன்னுடைய பக்தியால் அவரை கட்டுவதும், பார்வையாளர்களை வியக்கச் செய்தது. இந்த ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் ஆகிய இரு நாடகங்களும், அச்சில் ஏறி படிப்பவர்களும் பயனுறப் போகும் நிகழ்வை ஏற்படுத்தி தந்திருக்கும் தமிழக அரசுக்கும், தமிழ் நாடு இயல், இசை, நாடக மன்றத்திற்கும் எங்கள் நாடகக் குழுவின் சார்பில் நன்றிகள்.

    இந்த இரு நாடகங்களை உருவாக்கிய கலைமாமணி கே.பி. அறிவானந்தம் அவர்கள், நாடக உலகில் என்றென்றும் நினைவு கூறத்தக்கவராக இந்த படைப்புகள் மூலம் மக்களின் மனங்களில் வாழ்பவராக இருக்கப் போகிறார் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை .

    துரை பாலசுந்தரம்,

    தமிழரசன் தியேட்டர்ஸ்.

    முன்னுரை

    கே.பி. அறிவானந்தம்.

    மனை எண்-14, நல்லீஸ்வரர் நகர்,

    5-வது குறுக்குத் தெரு,

    குன்றத்தூர், சென்னை - 600 069.

    கைபேசி - 98406 67662

    நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்களுக்கு இந்திரஜித் முதலாக ஏழு நாடகங்கள் எழுதிய நான், அவருக்குப் பின் அதுபோன்ற புராண, இதிகாச நாடகங்களை மேடையேற்றக் கூடியவர்கள் யாரிருக்கிறார்கள் என்று நினைத்தேன். இதோ நானிருக்கிறேன் என்று என் முன் வந்து நின்றார் அருமை நண்பர் திரு. பாலசுந்தரம் அவர்கள்.

    திரு. பாலசுந்தரம், நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் நடத்திய நாடகங்களில் பங்குகொண்டு பிரதானமான பல வேடங்களில் நடித்தவர். அரசுப் பணியில் இருந்தாலும் நாடகமே தன் உயிர் மூச்சாகக் கொண்டு அதில் பங்குகொண்டவர். அதனால், தமிழரசன் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நாடக மன்றத்தைத் தொடங்கிய அவர், அதில் நடத்துவதற்காக ஸ்ரீ நரசிம்மர் என்ற நாடகத்தை எழுதித் தரும்படிக் கேட்டர்.

    நரசிம்மர் வரலாறு பக்த பிரகலாதா என்ற பெயரில் தெருக்கூத்தாக, மேடை நாடகமாக, திரைப்படமாக, தொலைக்காட்சித் தொடராக பல வடிவங்களில் பல்லாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. அதை, மீண்டும் எழுதுவதின் மூலம் ஓர் எழுத்தாளனாக நமது தனித்துவத்தை எப்படி வெளிப்படுத்த முடியும் என்ற தயக்கம் எனக்கு ஏற்பட்டது.

    ஸ்ரீமத் பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை மீண்டும் படித்ததோடு, நாராயண பட்டதிரி பாடிய ஸ்ரீ நாராயணீயம் கவிதைகளைப் படித்தபோதுதான் ஓர் அரிய குறிப்பு கிடைத்தது. திருமாலின் துவார பாலகர்களான ஜய, விஜயர்கள்தானே ஒரு சாபத்தின் காரணமாக இரண்யன், இரண்யாட்சகனாகப் பிறந்தார்கள்? அவர்கள் மீண்டும் பரமபதத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே ஸ்ரீமந் நாராயணரின் திருவுளக் குறிப்பை உணர்ந்து நாரதர் சில கலகங்களை உருவாக்கினார் என்பதுதான் அது. இப்போது சற்று மாறுபட்ட கோணத்தில் இந்த வரலாற்றை அணுக முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது.

    அதன்படி எழுதத் தொடங்கிய நான் இதற்குரிய இலக்கிய நோக்கு பொருத்தமாக அமைய வேண்டும் என்பதற்காக கம்பராமாயணத்திலிருந்து தொடங்கினேன். அதன்பின் பிரதான வரலாற்றைத் தொடங்கி துவாரபாலகர்கள் சனகாதி முனிவர்களிடம் சாபம் பெறுவதை வலுவான காட்சியாக அமைத்தேன். அதன்பின் கதையோட்டம் தெளிவாகிவிட்டது. துவாரபாலகர்கள் எப்படி மீண்டும் திருமாலிடம் வந்து சேருகிறார்கள், அதற்கு பிரகலாதன் பக்தி எப்படிக் காரணமாக அமைகிறது, அதைப் பயன்படுத்தி நாரதர் எப்படி இரணியனை தான் நினைத்த பாதையில் வழி நடத்துகிறார் என்பதெல்லாம் இயல்பாக அமைந்துவிட்டன.

    அதில் இரண்யனாக வேடமேற்ற பாலசுந்தரம் அவர்கள் மேடையைக் கலக்கிவிட்டார் என்று சொல்லுமளவிற்கு அற்புதமாக நடித்து ஆர்.எஸ். மனோகரின் வாரிசு இவர்தான் என்று சொல்லும்படி செய்துவிட்டார். திருமாலாக வேடமேற்ற இரவிகுமார் அவர்கள் பிருகு முனிவர் கண்ட சத்துவமூர்த்தி இவரே எனும்படித் தோன்றி சிறப்பாக நடித்தார். ஏழுவயதுச் சிறுவனாயிருந்த என் பேரன் மாதேஷ் பிரகலாதனாகவே மாறி அற்புதமாக நடித்து ஒவ்வொரு நாடகம் நிறைவடையும்போதும் தாய்மார்கள் தந்த பரிசு மழையில் நனைந்தான்.

    அதையடுத்து சில நாடகங்களுக்குப் பிறகு ஒரு நாள் பாலசுந்தரம் மிகுந்த பரபரப்போடு என்னைக் காண வந்தார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் நாடகக் கலையை வளர்க்க மானியம் வழங்கப்போவது பற்றிக் கூறினார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரை மையாகக் கொண்ட ஒரு நாடகம் வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தெரிவித்தார்.

    அதன்படி, மகாபாரதத்திலிருந்து ஒரு பகுதியை நாடகமாக்கலாம் என்று தீர்மானித்த நான் குருக்ஷேத்திர யுத்தம் தொடங்குவதற்கான ஆயத்தங்களிலிருந்து, யுத்தம் நிறைவடையும் காலம் வரை உள்ள பகுதியை எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தேன். இதிலும், வழக்கமான முறையிலில்லாமல் சற்றுப் புதிய கோணத்தில் அணுக வேண்டும் என்று யோசித்தேன்.

    குருக்ஷேத்திர யுத்தத்தில் இரு பக்கத்திலும் இருந்த அனைவரும் மடிந்த போதும், பஞ்ச பாண்டவர்களுக்கு மட்டும் ஏதும் நேராமல் பாதுகாத்தாரே பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் – அது ஏன்?

    அர்ஜுனனுக்கும், பாண்டிய நாட்டின் இளவரசி சித்ராங்கதைக்கும் பிறந்த பப்பருவாகனன், போரில்

    Enjoying the preview?
    Page 1 of 1